ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 5

5

 

 

மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு..

வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய..

அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை.

 

கண்கள் என்னவோ அவளை பார்த்து இருந்தாலும் கருத்தில் வேறுவேறு கணக்குகள் மட்டுமே!!

 

அவளை நெருங்கவோ.. தொடவோ.. தீண்டவோ.. உள்ளுக்குள் இருந்த மனம் அருவருப்பும் கோபமும் கொண்டது. 

அருகில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து அவளது உடலை போர்த்தியவன், இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டே இருந்தான்.

 

சரியா? தவறா? நியாயமா? அநியாயமா?

என்றெல்லாம் அவனது மனம் பட்டி மன்றம் நடத்தவில்லை..

 

 

அவனைப் பொறுத்தவரையில் அவன் செய்ய நினைத்தது சரியாகவே நியாயமானதாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது பிரச்சனையே எப்படி ஆரம்பிப்பது என்றுதான்!! மனது கண்டதையும் போட்டு குழம்ப.. அதையெல்லாம் பார்த்தால் முடியாது என்று மனதை அடக்கியவன், அணிந்திருந்த டீ-சர்ட்டை கழட்டி எறிந்த விட்டு அவளை நெருங்கி, போர்வைக்குள் அவளுக்கு போர்வையாகினான்.

 

இருள் முழுவதுமாக பிரியாத இளங்காலை வேளை.. 

ஆதவன் மெல்லத் தன் ஆயிர கரங்களை விரித்து பூமி பெண்ணவளை தழுவ போதுமா போதாதா என்று சிந்தித்திருக்க.. 

புள்ளினங்களின் மெல்லிய ஒலிகள் சங்கீத இன்னிசையாய் கேட்க.. 

தூரத்தே தெரியும் மலைகளையும் அவைகளோடு கொஞ்சிக் குலாவும் வெண் பஞ்சு மேகங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்!!

 

 

சட்டையில்லா வெற்றுடம்பு.. அவனது பரந்து விரிந்த மார்பிலிருந்து துள்ளி விளையாடிப்படி வியர்வை துளிகள் வழிந்தோட.. உருண்டு திரண்ட புஜங்களின் திண்மையும்‌ வலிமையும் அவனின் முறையான உடற்பயிற்சியை கட்டியம் கூறியது. பரந்த நெற்றி.. எதிராளியை கூறுபோடும் கண்கள்.. கூர் நாசி அதன் கீழ் கருத்த கற்றை மீசை.. கீழுதட்டை அழுத்தமாக உதட்டுக்குள் கடித்தபடி கதிரவனை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

வழக்கம்போல உடற் பயிற்சியை முடித்து வெயிலோனை பார்த்து சூரிய நமஸ்காரத்தை 108 முறை முடித்தவன், வியர்வை துளிகள் நதியென ஓட நிவேதிதா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

 

மயங்கி மெத்தையில் படுத்திருக்கும் நிவேதிதாவை தான் உற்றுப்பார்த்தான். விழிகளில் ஆராய்ச்சி மட்டுமே.. அவளோ இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில்!! 

 

 

சதைப் பிடிப்பற்ற சிவந்த கன்னங்கள். நீண்டு அகன்ற கயல் கண்கள். செதுக்கி வைத்த மாதிரி நீண்ட மூக்கு, கலைந்த தலையும், சிறகுகளென இமைகள் மூடிய கண்களுமாய்… மெல்லிய சிப்பி உதடுகள் பிளந்திருக்க வெண்பற்கள் அழகாய் தெரிய சோபையாக துயில் கொண்டிருந்தாள் மங்கையவள். மூக்கின் நுனியில் வியர்வைத்துளி ஒன்று சிறு முத்தாய் தேங்கியிருக்க.. சூரிய ஒளி பட்டு ஒளிர்ந்தது.

காதலனாகவோ ரசிகனாகவோ இருந்திருந்தால் நிச்சயம் கண்களால் இந்த காட்சியை கைது செய்து இருப்பான். இவனோ கையில் வைத்திருந்த கப்போடு அவளை அலட்சியமாக பார்த்தான்.

 

 

அவனது ஒரு கையில் பிளாக் டீ அவன் உள்ளத்தைப் போலவே கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சிப்பாக அந்த சூட்டினையும், பாலில்லா டீயின் கசப்பு சுவையையும் மெல்ல மெல்ல பருகினான் அவளை கண்களால் பருகிக் கொண்டே..

 

 

அவன் நெஞ்சின் ரணங்களை அவர்களிடம் காட்டிட வேண்டும்… அவன் துடிப்பது போல ஒவ்வொரு நாளும் அவர்களும் துடிக்க வேண்டும்.. மனதின் அடி ஆழம் வரை பரவி ஒவ்வொரு இரவும் கண் மூடாமல் தன்னை பாடாய்படுத்தும் அந்த நினைவுகளை அவர்களும் பட வேண்டும்..

 

 

அதற்காக நடத்தும் மனசாட்சியற்ற போர் இது. ஆம்!! மனசாட்சியற்ற போரே தான்!!

என்னதான் அன்பு மொழியில் தேனொழுக பேசி நாம் புரிய வைக்க நினைத்தாலும், சில ஜென்மங்களுக்கு அவையெல்லாம் புரிவதே இல்லை!! அடித்து உதைத்து மண்டையில் சுத்தியால் ஓங்கி ஒன்று கொடுத்து சொன்னால் மட்டுமே புரியும்!!

அப்படி தான் அவர்களும்!! என்று நினைத்தவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

 

மறுநாள் காலை மருதுவுக்கு இவனே போன் செய்தான்.

 

“ஹலோ” என்று கரகர குரலில் ஒலித்தது மருதுவின் குரல்.‌

 

“என்ன மருது.. உன் வீட்டு குல விளக்கு எங்க இருக்கா? எப்படி இருக்கான்னு தெரிய வேண்டாமா? அப்போ கிளம்பி வா இந்த அட்ரசுக்கு” என்று முகவரி கூறிவிட்டு அவன் வைத்துவிட திக்கென்று ஆனது மருதுவுக்கு.

 

அவன் சொன்ன விலாசம் வேந்தன் குடும்பத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இவர்கள் எல்லாம் இங்கே இருக்க அவள் எப்படி அங்கே இருக்க முடியும்? நேற்று முழுவதும் கதிரின் பின்னே வேவு பார்க்க ஆளை அனுப்பித்தான். கதிர் எங்கும் சென்றதாக தகவல் கிடைக்கவில்லை பின் யாராக இருக்கும் ஒரு வேளை.. ஒருவேளை.. வெற்றியா?

 

 

நினைக்கவே அப்படி ஒரு அதிர்ச்சியாக இருந்தது மருதுவுக்கு. அனாவசியமாக கதிரைப் போல பேசிக்கொண்டு எல்லாம் இருக்க மாட்டான் வெற்றி. உலகின் ஆகச் சிறந்த சொல் செயல் என்று.. செயல் மூலமே அனைத்தையும் நடத்திக் காட்டுபவன் வெற்றி!!

 

 

இப்போதும் அதையே செய்து விட்டானே என் குடும்பத்திற்கு!! அதுவும் இவ்வளவு நாட்கள் கழித்து வந்த என் தங்கைக்கு!! என்று மனம் பதற வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல..

புனிதாவோ அழவே ஆரம்பித்துவிட்டார். அழகுசுந்தரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவர், “கிளம்பு மருது.. போய் புள்ளய கூட்டிட்டு வரலாம்யா.. அதோட அது இனிமே இங்கன இருக்க வேண்டாம்யா ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பிடலாம்” என்று முடிவெடுத்தார்.

 

யார் முடிவை யார் எடுப்பது?? இதுவரை அவளின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் விதியின் செயல்!! இனி எல்லாம் இந்த வேந்தனின் செயல்!! என்று மனதில் நினைத்தவனின் இதழ்கள் வன்மமாக வளைந்தது.

 

அவன் நினைத்தது போலவே அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து நின்றார்கள் நிவேதாவின் சொந்தங்கள்!!

 

 

வீட்டை சுற்றிலும் இருக்கும் காம்பவுண்ட் கேட் அந்த வீட்டின் கதவு அனைத்தும் எல்லாமே ரிமோட் வடிவில் இவன் கன்ட்ரோலில்.. உள்ளே வரவழைத்தவன், வெற்று உடம்போடு ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து தூணில் சாய்ந்தபடி வெற்றி!!

 

 

பாய்ந்து சென்று அவன் கழுத்தை பிடிக்க போனான் மருது “என் தங்கச்சி எங்க டா?” என்று கேட்டவாறு.. ஒரு கையால் அவன் மார்பில் கை வைத்து தள்ளியவன் “உள்ள தூங்குறா கூட்டிட்டு போ” என்றான்.

 

 

அவசரமாக உள்ளே நுழைந்தவனை, “அறிவு கெட்டவனே..‌ அண்ணனா இருந்தாலும் நீ அடுத்தவன். உங்க அம்மாவ போக சொல்லு” என்றவாறு அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கையை தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டான்.

 

அந்த வார்த்தையில் சுடுதண்ணீரை நெஞ்சில் வார்த்தது போல துடித்தது அழகு சுந்தரத்திற்கு. குற்றம் சாட்டும் பார்வையோடு அவர் பார்க்க.. அவனோ அதற்கெல்லாம் உன் குடும்பத்திற்கு தகுதி இல்லை என்பது போல் திரும்ப பார்த்தான்.

 

அவசரமாக உள்ளே நுழைந்த புனிதா மகளைப் பார்க்க.. அவளோ ஆண்கள் அணியும் சட்டையை அணிந்திருப்பதைப் பார்த்தவருக்கு நடந்தது புரிய மகளை வேக வேகமாக எழுப்பினார்.

 

“பெரியம்மா ப்ளீஸ்.. ஒரு பத்து நிமிஷம் தூங்க விடுங்க.. நீங்களும் அந்த லேடி ஹிட்லர் போல என்னை எழுப்பாதீங்க.. மீ பாவம்” என்று மீண்டும் தலையணைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டவளை பார்த்தவருக்கு நெஞ்சு வலித்தது.

 

அழுக துடித்த இதழ்களை அடக்கிக் கொண்டு “எழுந்துரு பாப்பா.. வீட்டுக்கு போலாம் முதல்ல எழுந்திரு” என்று அவளை உலுக்கி எழுப்பியவுடன் கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தவளை, “முதலில் போய் உன் உடுப்ப போடு பாப்பா” என்று வேறு எங்கோ பார்த்துக்கொண்டு கூறினார்.

 

 

‘என்ன சொல்கிறார் இவர்?’ என்று புரியாமல் அப்போதுதான் நேற்று நடந்தது ஒவ்வொன்றாக அவளது ஞாபகத்தில் வர, சுற்றுமுற்றும் பார்த்தவள் அருகில் இருந்த தனது உடையை எடுத்துக்கொண்டு “நீங்க வெளியில இருங்க.. டிரஸ் மாத்திட்டு வரேன்” என்றாள் மரத்த குரலில்..

 

அந்த அறையிலிருந்த குளியலறையை தேடி தன்னை சுத்தப்படுத்தி வந்தவளுக்கு அழுகை வரவில்லை கோபம் தான் வந்தது. ஒரு பெண் ‘நோ என்று சொன்னால் நோ தான்’ அதற்கு மேலும் அவளை கட்டாயப்படுத்த கணவனுக்கே உரிமை இல்லாத போது, கட்டி தூக்கிட்டு வந்தவனுக்கு எப்படி இப்படி ஒரு துணிவு வரலாம்? என்று கோபம் கொண்டாள்.

அவன் தூக்கிட்டு வந்த காரணமே அதுக்கு தான்‌ எனும் போது அவளிடம் அனுமதி கேட்கவா போகிறான்!!

 

 

அவசரமாக உடையை உடுத்தி வெளிய வர அங்கே மருது சண்டை போட்டுக் கொண்டிருந்தான் வெற்றியிடம்.

ஆனால் அவனோ ஏதோ கேலிக் கூத்தை பார்ப்பது போல உதட்டை வளைத்து சிரித்தான். பார்த்துக்கொண்டிருந்த நிவேதாவுக்கு பற்றிக் கொண்டு வர, வேகமாக வந்தவள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள்.

 

 

தனக்கு இல்லாத தைரியம் தங்கைக்கு வந்ததை எண்ணி மருதுவுக்கு உற்சாகம் பொங்க, “இன்னும் நாலு அடி அடிச்சாலும் பத்தாது பாப்பா இவனையெல்லாம்” என்றான். “போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் ணா.. வாங்க போலாம்” என்றவாறு அவள் நிமிர்வாகவே நடக்க..

 

 

“இங்கன போலீஸ் எல்லாம் வேஸ்ட் பாப்பா.. பஞ்சாயத்து தான் சரி” என்றான் மருது.

 

“அப்போ அவங்களையே கூட்டுங்க.. இந்த மாதிரி ஒரு தப்பு நடந்தா எந்த பொண்ணுங்களும் தைரியமாக வெளியில் சொல்லமாட்டாங்க என்ற தெனாவட்டு திமிரும் தான் இவனுங்க அடுத்தடுத்த தப்பை செய்யறானுங்க.. அதனால பஞ்சாயத்தோ போலீஸ் ஏதோ ஒண்ணுல புகார் கொடுங்க.. நான் இவனை பத்தி கம்ப்ளைன்ட் பண்றேன்” என்றாள்.

 

 

அழகுசுந்தரம் ஒன்றும் கூறாமல் அமைதியாக நிற்க.. புனிதாவோ “இங்கன இருந்து முதல்ல போலாம் பாப்பா” என்று அவளை காருக்குள் அழைத்து வந்தவரின் கண்கள் வெற்றியை எரித்தது. மற்றவர்களை துச்சமாக பார்த்தவனது பார்வை புனிதாவின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வேறபுறம் திரும்பியது.

 

 

வீட்டுக்குள் வந்த அடுத்த நொடியே.. தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள் நிவேதிதா. அவளால் தனக்கு நேர்ந்ததை கொஞ்சமும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இயல்பாக ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரோடும் வளர்ந்து ஆடிப்பாடி மகிழ்ந்தவள் தான். நாகரீகம் வளர்ந்த நாட்டில் கூட பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் “ஓகே.. சாரி” என்று விலகும் ஆண்கள் மத்தியில்.. இங்கே பெண்களை தாயாக குல தெய்வமாக போற்றும் மக்கள் இருந்தும், பெண்மையை கசக்கி பிழிந்து நுகர்ந்து சாக்கடையில் எறிகிறார்கள். மனம் அழுத்தமாகிப் போனது வெற்றியின் செயலால் நிவேதாவுக்கு. ஆனால் அதற்காகவெல்லாம் அழுது கரையவும் இல்லை கோழை மாதிரி தன்னை மாய்த்துக் கொள்ளவும் மாட்டாள். 

 

 

“அவனுக்கு இந்த நிவேதிதாவை சரியாக தெரியவில்லை.. உனக்கு பாடம் கற்பிக்கிறேன் டா” என்று கூறியவள் முழுதாக ஒரு குளியலை போட்டுவிட்டு தான் போட்டிருந்த உடைகளை கழற்றி குப்பையில் எறிந்து விட்டு புத்தம் புது மலராக கீழே இறங்கி வந்தாள்.

 

 

அதற்குள் விஷயம் அப்பத்தாவைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து போக தனபாக்கியம் உரத்த குரலில் கூவி கூவி அழ ஆரம்பித்தார்.

 

 

“அய்த்த.. முதல்ல உங்க கூக்குரல நிப்பாடுங்க.. நீங்களே கூவி கூவி எல்லாருக்கும் விஷயத்தை கூறிடுவிக போலவே” என்று மருது அதட்ட..

 

சட்டென்று தனது வாயை மூடிக்கொண்ட தனபாக்கியம் “ஆனாலும் அந்த நாசமா போறவன.. கட்டைல போறவன.. சும்மா விடவே கூடாது. பஞ்சாயத்துல நிக்க வச்சு அந்தக் குடும்பத்தையே ஒன்னும் இல்லாம பண்ணனும். நம்ம புள்ளைய பண்ணதுக்கு அவிங்களை சும்மா விட கூடாது மருது சொல்லிட்டேன்” என்று தன் ஆதங்கத்தை கோபத்தை எல்லாம் வார்த்தைகளாக அவர் கொட்டிக் கொண்டே இருக்க…

 

 

அங்கே வந்த நிவேதிதா “பெரியம்மா சாப்பாட்டை எடுத்து வைங்க பசிக்குது” என்றாள்.

 

தனபாக்கியம் ஒரு நிமிடம் அவளின் செயலில் அதிர்ந்து தான் போனார். “எவ்ளோ பெரிய பிரச்சினை நடக்குது இங்கன.. இந்த புள்ள என்ன சாப்பாடு எடுத்துவைக்க சொல்லுது?’ என்று தாடையில் கைவைத்து அதிசயத்து பார்க்க..

 

 

“சாப்பிடாம கொள்ளாமல் இருந்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா? இப்பதான் சொன்னீங்க அவனை பஞ்சாயத்தில் ஒரு கை பார்க்க வேண்டுமென அதுக்கு தெம்பு வேண்டும் அதுதான்.. வாங்க பெரியம்மா” என்று அவள் செல்ல.. அவளின் தைரியத்தில் நிமிர்வில் சிரித்துக் கொண்டார் அழகு சுந்தரம்.

 

 

இந்த விஷயத்தை பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு செல்ல புனிதாவுக்கு சுந்தரத்துக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

 

 

“இங்க பாரு மருது.. புள்ள ஏதோ காணாம போய் திரும்பி வந்தததா தான் சொந்தக்காரவியங்க நினைச்சு இருப்பாய்ங்க.. நீ பாட்டுக்கு பிரச்சினையை கிளப்பி விட்டுடாதய்யா.. நம்ம பொண்ணு கல்யாணம் ஆகி போகவேண்டிய புள்ள.. முள்ளு மேல சீலை விழுந்தாலும் சீலை வேலை முள்ளு வந்தாலும் சேதாரம் என்னமோ சீலைக்கு தான்” என்று புடவை தலைப்பில் மூக்கை உறிஞ்சி கொண்டே புனிதா கூற..

 

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதையே எல்லோரும் சொல்லி கிட்டி இருப்பீக.. உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. என்ன ஆனாலும் என் வழியில் அவிங்களுக்கு தண்டனை கொடுக்காமல் இருக்க மாட்டேன்” என்று அவன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் அங்கிருந்த சுவற்றில் தன் முட்டியால் குத்தி வெளிப்படுத்த..

 

“பெரியம்மா சொல்றதெல்லாம் கேட்காதீங்க ணா.. பஞ்சாயத்தை கூட்டுங்க இந்த மாதிரி ஆளெல்லாம் வெளியில் ஒயிட் கலர் பெர்சனா இருந்துகிட்டு.. நிறைய அநியாயம் பண்றாங்க” என்று கொதித்து எழுந்தாள் நிவேதிதா.

 

 

அழகு சுந்தரமோ பெருமூச்சு ஒன்றை விட்டவர் “மருது ஆனது ஆகட்டும் பஞ்சாயத்துக்கு சொல்லி விடு” என்றார்.

 

 

மருதுவோ வாடா மகனே என்று சந்தோசமாக பஞ்சாயத்தை தாக்கல் செய்ய போனாவன், கூடவே தனக்கு ஆதரவாகப் பேச வேண்டுமென அங்காளி பங்காளி மாமன் மச்சான் என்று எல்லாரையும் கூட்ட ஆரம்பித்தான்.

 

 

அன்று இரவு அழகு சுந்தரத்திற்கு கொஞ்சம் கூட தூக்கம் வரவே இல்லை.. “என்னங்க மாமா” என்று மெதுவாக அவர் தோளைத் தொட்ட புனிதாவை பார்த்தவர், “நம்ம கைய மீறி எல்லாம் போயிட்டு இருக்கு.. எல்லாம் அந்த சொக்கன் செயல்” என்று பெரு மூச்சோடு படுத்தார்.

 

அன்று முழுக்க விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர் முழுக்க கசிய ஆரம்பித்தது. அது வேந்தன் குடும்பத்துக்கும் தெரியவர கொதித்து விட்டார் வாஞ்சி வேந்தன். 

 

 

“சொந்தமா தொழிலை நல்ல முறையில் நடத்தறாரே.. ஐயா மாதிரி இருக்காரே.. நாம மருவாத கொடுத்து நடந்தா, அவர் இஷ்டத்திற்கு காரியமெல்லாம் பண்றாரு.. இதெல்லாம் நல்ல குடும்பத்தில் பொறந்தவன் பண்ற காரியமா?” என்று அவர் தாட்பூட் தஞ்சாவூர் என குதிக்க.. ஆனால் வீட்டிலிருந்த மற்றவர்களோ அவருக்கு முன்னே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் மகனின் செயலில் அவர்கள் வருந்தவே இல்லை.

 

 

ஒரு பெண் கற்பை மானத்தை தன் மகன் அழித்து விட்டான் என்ற செய்தி வந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் முதலில் மனதில் சிறு வருத்தம் எழத்தான் செய்யும். அதன்பின் தான் மகன் முக்கியம் என்று அவனுக்காக பாடுபடுவார்கள்.. ஆனால் ஊருக்கே பஞ்சாயத்து பண்ணுகின்ற பெரிய குடும்பம் அவர்கள் குடும்பம்.. இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களின் வலி இதை விட பெரியதோ????

 

 

அன்று இரவு போல தான் வெற்றி வீட்டிற்கு வந்தான். கண்டிப்பாக தெரியும் தந்தை தன்னைத் தண்டிக்க நிந்திக்க காத்திருப்பார் என்று!! 

 

 

நேராக உள்ளே நுழைந்தவன் அவர் முன்னே பின்னால் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக நிற்க.. கோபமாக தொடங்கிய வாஞ்சியோ வருத்தமாக முடிக்க.. அவரின் அத்தனை பேச்சுக்கும் ஒரு வார்த்தை பதில் பேசாமல் நின்று அவரை முடிஞ்சுதா என்ற பார்வை பார்க்க.. இவனையெல்லாம் என்று அவர்தான் அலுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

 

 

அன்று இரவு அண்ணன் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் வீட்டிற்கு விரைவாக வந்த கதிர் நேராக வந்து அண்ணனை இறுக்க அணைத்து கொண்டவன், “அண்ணே அவிங்க பஞ்சாயத்துக்கு சொல்லிட்டானுவோ.. நானும் நமக்குத் தெரிஞ்சவைய்ங்க அங்காளி பங்காளி எல்லார்கிட்டயும் சொல்லிபுட்டேன். நாளைக்கு கலக்குது பாருங்க பஞ்சாயத்து” என்றான்.

 

 

மறுநாள் முக்கிய தலைகள் பஞ்சாயத்தில் நடுநாயகமாக அமர, மருது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபுறமும் நிற்க.. புனிதாவோடு நின்று கொண்டிருந்த நிவேதிதாவோ சுற்றுப்புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

 

இவ்வளவு தைரியமாக பஞ்சாயத்துக்கு வந்த பெண்ணைத் தான் அவர்களும் வாய் பிளந்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் வேந்தன் குடும்பம் வந்து இறங்க.. 

 

இன்று அவர்கள் மேலேயே குற்றம் சாட்டப்பட்ட இருக்க.. அமைதியாக நின்றனர் வேந்தன் அண்ட் கோ’ஸ்.

 

பஞ்சாயத்தில் ஒரு பெரியவர் வழக்கம்போல தொண்டையைக் கணைத்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் “தம்பி அவிங்க உங்க மேல புகார் கொடுத்து இருக்காக.. அந்த புள்ள கிட்ட நீங்க முறைதவறி நடந்துகிட்டீகனு.. அதுக்கு நீங்க என்ன சொல்ல போறீக?” என்றார்.

 

கண்டிப்பாக இவன் மறப்பான் அதற்கு சாட்சி எல்லாம் வைத்து, இவனை ஒரு வழி ஆக்கிவிடலாம் தென்று மருது காத்திருக்க..

 

வழக்கம்போல அவர்களின் நினைப்பை எல்லாம் தகர்த்தவன் “ஆமாம்?!” என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு..

 

 

அடுத்தடுத்து வெற்றி சொன்னதைக் கேட்டு சுற்றியிருந்த மக்கள் மட்டுமல்ல நிவேதிதாவுக்குமே நெஞ்சை அடைத்தது.

 

 

விழிகள் விரிய அதிர்ந்து.. 

நரம்பெல்லாம் வெடித்து..

நாளங்களில் இரத்தம் ஓட்டம் நின்றிட..

உடம்பே தொய்வது போல இருந்தது அவளுக்கு.

 

 

அப்படி என்ன சொல்லி இருப்பான் வேந்தன்.. வெற்றி வேந்தன்!!

 

 காதலே.. காதலே

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top