அவள் இன்று எப்படி எங்கே செல்லலாம். இன்றைய வேலைகள் என்ன என்று யோசித்து கொண்டு இருந்தாள். முதலில் தங்குவதற்காக ஒரு சிறிய இடம் பார்க்கணும். பிறகு ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். ஏதாவது லேடீஸ் ஹாஸ்டலில் இடம் பார்க்கவேணும். கிளம்புவோம் என்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அருகில் வந்த ஒரு பெரியவர் அம்மா அங்கே சில பேங்க் டெபிட் கார்டு கீழே கிடக்கின்றது அது உன்னோடதா பார்த்துக்கோமா என்று சொல்லிவிட்டு தனது நடைப்பயிற்சியை தொடர்ந்தார்.
இவள் “நம்ம கார்டு தான் பர்ஸ் குள்ளேயே இருக்கே கீழே விழ வாய்ப்பே இல்லையே ” என்று தனக்குள் நினைத்த வாறே அந்த புகைப்படம்,டெபிட் கார்டு மற்றும் விசிட்டிங் கார்டுகளை பார்த்தாள்.
அதில் இரண்டிலும் விவேக் ராமச்சந்திரன் என்ற பெயரே இருந்தது.
சரி இது இரண்டுமே ஒரே ஆள் உடையது தான் என்ற முடிவுக்கு வந்து எடுத்து வைத்து கொண்டாள். அதில் உள்ள அலுவலக எண்ணிற்கு தொடபு கொண்டு பேசி கொடுத்து விட நினைத்தாள்.
அதற்குள் பீச் ரோடு பிரதான சாலைக்கு வந்து விட்டிருந்தாள். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் என பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் கூட ஆரம்பித்து இருந்தது.
சென்னையில் ஏழு மணி வாக்கிலேயே கூட்டம் வந்து விடும். பரபரப்பு ஏறிவிடும். அது இரவு பத்து மணிக்கு ஓரளவுக்கு அடங்கி விடும். மனிதர்கள் அந்த பரப்புக்கு தங்களை உட்படுத்தி பழக்கமாக்கி கொண்டு விட்டார்கள். இவள் இப்போது தான் இவ்வளவு பரபப்பான காலை நேரத்தை பார்க்கிறாள்.
மனிதர்கள் ஆடி ஓடி வேலை செய்து சம்பாத்தியம் செய்தால் தான் இங்கே சென்னையில் என்றல்ல எங்குமே காலத்தை நல்ல முறையில் கழிக்க முடியும் . இல்லாவிட்டால் கூட்டிற்குள் முடங்கி விட வேண்டியது தான்.இயக்கமே வாழ்க்கை.
அப்துல் கலாம் சொன்னது அவள் மனதிற்குள் ஓடியது . ” கனவு காணுங்கள் . அந்த கனவு உங்களை தூங்க விடாமல் செய்ய வேண்டும் . அப்படி ஒரு கனவு காண வேண்டும்.. அவர் கனவு என்று சொன்னது தூக்கத்தில் உள்ள கனவு அல்ல . மனிதனை உயர்ந்த இடத்தில கொண்டு செல்வதற்கான எண்ணம் . அந்த எண்ணத்தை காட்சியை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டால் அது நம்மை தூங்க விடாது முயற்சி செய்ய வைத்து விடும்.
இவளுக்குள்ளும் ஒரு கனவு உள்ளது . அது அவளது ஜமீனை தன் தந்தையின் கனவு படி கயவர்களின் பிடியில் இருந்து மீட்டு அதை ஒரு நல்ல கருணை இல்லமாக உருவாகிட வேண்டும் என்ற கனவு தான் அது.
தந்தை மரண படுக்கையில் இவளிடம் சொன்ன கடைசி அசையும் அதுவே ஆனதால் அது மனதிற்குள் பசுமரத்தில் அடித்த அணி போல் பதிந்து விட்டது. அது இப்போது இவள் பெயரில் இருந்தாலும் இவள் அதைஅனுபவிக்க இயலாமல் உள்ளது. அவளை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு விட்டால் அந்த ஜமீனின் சொத்துக்கள் அனைத்தையும் வசப்படுத்தி விட நினைத்தான் அவன் முறை மாமன் வேலுச்சாமி .
முதலில் நல்லவனாக தான் இருந்தான். சேர்க்கை சரியில்லாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு புத்தி வந்து விட்டது.
அவனுடைய தாயார் இவன் நிலைமையை கொண்டு பொறுக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சீர் குலைந்தாள் . கடைசியில் மாண்டு போனாள்.
தந்தை சீட்டு விளையாடி தன் சொத்துக்களை இழந்து விட்டார். அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கி விட்டார்.
இவன் ஒரே பையன் அக்காவுக்கு என்பதால் இவளுடைய தந்தை சொந்தம் விட்டு போக கூடாது என்பதால் பொறுத்து கொண்டு இவனை வீட்டில் சேர்த்து கொண்டார். பிறகு அவன் கீழ்த்தரமான செயல்களை கண்டு பொறுமை இழந்து அவனை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
இவள் தாய் மங்களம் பெயருக்கு ஏற்றார் போல் மங்கள கரமாக எப்போதும் பெரிய குங்கும பொட்டு வைத்துஇருப்பாள். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.
பசு மாடுகள் இவளை கண்டால் அம்மா என்று பாசமான பார்வையை காண்பிக்கும். இவள் அவைகளை மாடு என்று நினைக்க மாட்டாள். வீட்டின் தெய்வம் என்றே நினைப்பாள். எப்போதும் பசு தொழுவம் சாம்பிராணி வாசனையில் மணக்கும்.
வீட்டிற்கு வருவோர் அங்கே சென்று அனைத்து பசுக்களையும் வணங்கி விட்டு செல்வார்கள். அந்த இடம் ஏதோ பிருந்தாவன நந்தவனதிற்குள் நாம் நுழைந்தது போல் இருக்கும்.
சொந்தம் பந்தம் மற்றும் பண்ணையில் வேலை செய்வோர் அனைவரும் அங்கே வயிறார உணவு அருந்தி விட்டு தான் செல்வர். அப்படி அன்னபூரணி குடி கொண்ட கோயிலாக இருந்தது அந்த ஜமீன் வீடு.
செல்வம் மென்மேலும் வளர்ந்ததே தவிர குறைய வில்லை. அவர்கள் குடும்பத்தின் மீது அந்த ஊரே ஒரு தனி மரியாதையை கொடுத்து வாழ்த்துவார்கள். அப்படி இருந்த ஜமீன் அவள் தாயார் மங்களம் இறந்து போனவுடன் பொலிவிழந்து போனது போல் ஆயிற்று .
கமலி கல்லூரி படிப்பை முடிக்கும் முன் அவள் தன் தாய் மங்களம் கண் மூடுவாள் என்று நினைத்து பார்க்க கூட இல்லை. அவள் இறுதி காரியத்துக்கு வந்த வேலுச்சாமி நல்லவனாக மாறி விட்டது போல் வேடமிட்டான். மிகவும் பய பக்தியை கொண்டவனாக வலம் வந்தான். அனைத்தையும் பொறுப்புடன் பார்த்து கொண்டான்.
ஒரு நாள் வாங்கி கணக்கில் இருந்து பத்து லட்ச ருபாய் எடுத்து வர வேண்டி இருந்தது. இவள் கல்லூரி செலவுகளுக்காகவும் மற்றும் புதிய தோட்டம் வாங்குவதற்கான ஏற்பாடுகளுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் தான் அது.
வேலுச்சாமியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று அவள் தந்தை இவளிடம் கேட்டார்.வேலுச்சாமி மாமா ரொம்ப மாறி விட்டார் அப்பா. அவரை நீங்கள் நம்பலாம் ஆனாலும் ஒரு கண் வைத்து பார்த்து கொள்ளுங்கள் என்று கூறினாள்.
ஆனால் இவர்கள் நினைத்து போல் இல்லாமல் அனைத்து வேலைகளையும் கனகச்சிதமாக முடித்து விட்டு வந்தான் வேலுச்சாமி.
வேலுச்சாமியின் கணக்கு வேறு . அவன் மொத்தமாக அடைய நினைத்தான். அனைத்து ஜமீனும் இவன் கைக்குள் வர வேண்டும் அது தான் இவன் திட்டம். அதற்கு இவளை திருமணம் செய்து கொண்டால் தான் அது நிறைவேறும். வேறு வழியே இல்லை. அதனால் மிக கவனமாக செயல் பட்டான்.
கமலியின் தந்தை சுவாமிநாதபிரபு கூட கமலியை இவனுக்கு மனம் முடிக்கும் எண்ணத்திற்கு வந்து விட்டு இருந்தார்.
கமலிக்கு சென்னையில் என்ன ஆயிற்று , வேலுச்சாமி கமலின் மனதை வென்றானா என்று அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் சந்திப்போம் வாசகர்களே.
உங்கள் கருத்துக்களை பதி விடுங்கள். எனது எழுத்து நடை எப்படி உள்ளது என்று மறவாமல் சொல்லுங்கள்.
சரியான கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஓவியங்கள் அல்லது புகைப்படம் கிடைக்கும் வரை சற்று பொறுத்து கொள்ளுங்கள் வாசகர்களே .
Sema 👌👌👌👌👌