கமலி முதலில் ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் உள்ளே சென்றாள்.
பெருமாளே எனக்கு ஒரு வழி காண்பிப்பாயா இன்று என்று மனதுக்குள் உருகி வேண்டினாள். பர்ஸை திறந்து பார்த்தாள். இரண்டாயிரம் ருபாய் இருந்தது. முதலில் பல் விளக்குவோம். எங்கே விளக்குவது எப்படி என்று பார்த்தாள்.
வெளியில் வந்து ஒரு லிட்டர் மினெரல் வாட்டரும் ஒரு டூத் ப்ரஷ் மற்றும் பேஸ்டும் வாங்கி கொண்டாள். விசிட்டிங் கார்டு உள்ள முகவரிக்கு, அது அடையாறு அருகில் உள்ள ஒரு மிக பெரிய ஐடி பார்க், ஆட்டோவை முன்னூறு ருபாய்கு பேரம் பேசி விட சொன்னாள்.
அங்கு இருந்த காவலாளியிடம் விசிட்டிங் கார்டை காண்பித்து வழி கேட்டாள். அவர் ” ஓ இது நம்ம விவேக் அய்யா ஆபீஸ் . சி பிளாக் நான்காவது மாடிக்கு போங்க ” . இன்னும் யாரும் வந்து இருக்க மாட்டாங்க மா” என்று சொன்னார்.
“சரி நன்றி அய்யா நான் பொய் அங்கு காத்து இருக்கிறேன்.” என்றாள்.
“பத்து மணி ஆகிடும்மா சார் வர ” என்றார்
அவள் தேடி பிடித்து அலுவலகம் சென்ற போது மணி ஒன்பது ஆகி இருத்ததை அங்கு இருந்த டிஜிட்டல் சுவர்ஹு வழி கேட்டல் கடிகாரம் காண்பித்தது.
இது ஒரு IT கம்பெனி போலும் ” பெயர் பலகையில் “VRP consultancy Services” என்று சில்வர் பிளேட்டில் எழுதி இருந்தது .
இவள் படித்தது என்னவோ BSC இயற்பியல் . யூனிவெர்சிடியில் இரண்டாம் ரேங்க் எடுத்து இருந்தாள்.
சுத்தம் செய்யும் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள்.
ஒரு சிறிய பிள்ளையார் சிலை மரத்தில் செய்தது ஒரு மார்பிள் கல்லின் மேல் வைத்து இருந்தார்கள்.
அதற்க்கு கீழே ஒரு பித்தளை பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தாமரை மலர் வைத்து இருந்தார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது.
மனசுக்குள் வணங்கினாள். கணபதியே வருவாய் அருள்வாய் என்று காற்றில் ஒரு பணியாளரின் கை பேசியின் ரிங் டோன் ஒலித்தது.
நல்ல சகுனமாக பட்டது அவளுக்கு. பிறகு ஒரு பணியாளரிடம் ரெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்டு உள்ளே சென்று பல் துலக்கி முகம் கழுவி தலை முடியை திருத்தி கொண்டு வேறு உடை மாற்றி கொண்டாள். நல்ல சுடிதார் காட்டன் துணியில் அணிந்து இருந்தாள். முகம் பொலிவாக இருந்தது. துப்பட்டாவை இடது கை ஓரத்தில் பின் செய்து இருந்தாள்.
ஷூ அணிந்து இருந்தாள். பார்த்தால் நிறைவாக இருந்தது அவளுக்கே.
மீண்டும் வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டாள். அதற்குள் வரவேற்பு பிரிவில் உள்ள பணிப்பெண் வந்து தனது இருக்கையில் அமர்ந்து இருந்தாள். இவளை நோக்கி ” உங்களுக்கு என்ன வேணும் , யாரை பாக்கணும் ” ஏதும் அழைப்பாணை இருக்கிறதா ” என வினவினாள்.
இவள் விசிட்டிங் கார்டு எடுத்து நீட்டினாள் . ஓ சார் வர சொல்லி இருக்காங்களா என கேட்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் ” ஆமாம் என தலையை ஆட்டி விட்டாள்.
“இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இன்னைக்கு வர சொல்லி இருக்க மாட்டாரே ” என்று வரவேற்பில் இருந்த பெண் கூறினாள்.
“அப்படி வர சொல்லி இருந்த எனக்கு தகவல் சொல்லி இருப்பார்”, என்று சொன்னாள்.
“ஒரு வேலை மறந்து இருப்பார் என்று நினைக்கிறன்” என்று பொய் சொன்னாள் கமலி .
“அதற்கு வாய்ப்பே இல்லை . அவர் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு செயல் செய்பவர் . கண்டிப்பாக வர சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை ” என்று திட்டவட்டமாக கூறினாள்.
உண்மையை சொன்னால் அவரை பார்க்க முடியாமல் பொய் விடும். அவரை பார்த்தால் ஏதாவது வேலை கேட்கலாம் என்று தான் பொய் பேசி கொண்டே சென்றாள்
“ரொம்ப நாள் முன்னாடி சொன்னது, இன்றைக்கு என்றில்லை என்றாவது வாருங்கள் என்று தான் சொல்லி இருந்தார்” என இவள் மேலும் அளந்து விட்டாள்.
சரி உட்காருங்கள் வாய்ப்பு இருந்தால் பாருங்கள் என்று சொல்லி விட்டு அந்த பெண் தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.
மணி சரியாக பத்து காண்பித்தது இப்போது.
எல்லோரும் அவர் அவர் இருக்கையில் உள்ள கணினியின் முன்னால் அமர்ந்து வேலையை பார்க்க துவங்கி விட்டனர்.
விவேக் தன் ஹோண்டா சிட்டி காரை பார்க் செய்து விட்டு லிப்ட் இல் ஏறினான். 4 ஐ அழுத்தி விட்டு வாட்சப்பில் ஏதும் தகவல் இருக்கிறதா என்று பார்த்தான்.
Client delegates 11 மணிக்கு வருவதாக தகவல் சொல்லி இருந்தார்கள் . இவன் அதனால் கோட் சூட் அணிந்து வந்து இருந்தான். எப்போதெல்லாம் கிளையண்ட் வருவார்களோ அன்று கோட் சூட்டில் வந்து விடுவான்.
பார்க்க மிக பெரிய நிறுவனத்தின் CEO போல இருப்பான். ஆனால் இது ஒரு ஸ்டார்ட்டப் கம்பெனி தான். இரண்டு பெரிய கிளையண்ட் தான் உள்ளனர் தற்போது வரை.
இரண்டு கிளையின்ட்டிடமும் நல்ல பெயர் இருக்கின்றது. முதல் ப்ராஜெக்ட் முடிவில் தான் கார் வாங்கினான். அது வரை கால் டாக்ஸி இல் தான் வருவான். யாராவது டெலிகேட்ஸ் வந்தால் சொகுசு கார் வாடகைக்கு எடுத்து கொள்வான் .
மிகவும் கண்ணியமாக நடத்துவான் யாராயிருந்தாலும் . பியூன் என்றாலும் அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பான். சில நேரம் அலுவலக பணியாளருக்கு உடம்பு சரி இல்லை என்றாலும் அதிக அக்கறை எடுத்து மருத்தவம் பார்த்து கொடுப்பான்.
அதனால் இந்த அலுவலத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் அவனுக்காக உழைக்க அனைவரும் எந்நேரமும் தயாராய் இருந்தார்கள்.
இரவு பகல் பாராமல் உழைக்க காத்து இருந்தனர். இருக்கின்றனர். அதுவே அவனது வெற்றிகாண காரணம் ஆகும்.
சரியாக அவன் அலுவலகத்தில் நுழையும் போது மணி பத்து பத்து.
அவன் அந்த பிள்ளையாரை வணங்கி விட்டு ஒரு ரோஜாவை அவர் காலடியில் வைத்து விட்டு செல்வது அவனது வழக்கம்.
அவனை பார்த்ததும் இவள் மனதில் அவன் மீது மிக பெரிய மரியாதை ஏற்பட்டது. அவனது முகம் மிக பிரகாசமாக இருந்தது. ஒரு கம்பீரம் தெளிவு இருந்தது அந்த முகத்தில் .
உள்ளே போனவுடன் இண்டர்காமில் வரவேற்பாளினிஇடம் ” யார் அது ஷோபா வில் காத்து இருப்பது எனக்காகவா இல்லை வேற யாருக்காகவாவதா ” என கேட்டான்.
“குட் மார்னிங் சார் , நீங்கள் தான் வர சொல்லி இருக்கீங்க ,அந்த பெண் உங்கள் விசிட்டிங் கார்டை காண்பித்தாள் “. என பதில் சொன்னாள்.
நானா , என்று மனதில் குழம்பியவனாய் , சரி வர சொல்லுங்கள் . டெலிகேட்ஸ் வரும் முன் இவளை பார்த்து என்ன என்று கேட்டு அனுப்பி விடுவோம் என்று நினைத்து உள்ளே கேபினுக்கு அனுப்பும் படி கூறி விட்டு போனை கட் பண்ணினான்.
அவர்கள் சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
👌👌👌👌👌