அத்தியாயம் -4
கமலியும் தன்னை அங்கிருந்த கண்ணாடியில் தன் உடை , தலை முடி எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு உள்ளே செல்ல தயாரானாள்.
வரவேற்பாளினி ” மேடம் உங்களை சார் வர சொல்லி உள்ளார். நீங்கள் உள்ளே போகலாம் ” என சொன்னவுடன்
கமலி அவளுக்கு நன்றி சொல்லி ஒரு சிறு புன்முறுவலை உதிர்த்தாள்.
அவள் சிரிக்கும் போது இன்னும் மிக அழகாக தெரிந்தாள்.
“எந்த கேபின்” என்று கேட்டாள் அவளிடம் ..
“நேரே போய் வலது திரும்பியவுடன் முதல் கேபின் . வெளியில் பெயர்ப்பலகை இருக்கும் பார்த்து கொள்ளுங்கள்”
மீண்டும் ஒருமுறை நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
பெயர்ப்பலகையை வாசித்தாள். விவேக் இராமச்சந்திரன்
சீப் எக்ஸிகியூடிவ் ஆஃபீசர். என இருந்தது .
முதலில் அவள் கதவை தட்டிவிட்டு ” எஸ்க்யூஸ் மீ ” என நின்றாள் .
அவன் ஆபீஸ் போனில் யாருடனோ பேசி கொண்டு இருந்தான் .
இவளை பார்த்தவுடன் உள்ளே வருமாறு கூறினான் . பார்த்தவுடன் அவன் மனதில் ” யார் இவள் , இவளை நன் முன் பின் பார்த்ததே இல்லையே , எப்படி நன் வர சொன்னதாக சொல்கிறாள் ” வேறு யாராவது நம் நண்பர்களின் சிபாரிசில் வந்து இருக்கிறாளோ என யோசித்து கொண்டே
“டேக் யுவர் ஸீட் ப்ளீஸ் ” என்றான் .
“தேங்க் யு ” என்றாள்.
“ஒன் மினிட் ” என்று சொல்லி போனை கட் செய்து விட்டு இவளிடம்
“ஆமாம் உங்களுக்கு என்ன வேணும் என்றான் . யார் உங்களை அனுப்பியது ” என்றான்.
சார் நான் கமலி கோயம்புத்தூர் அருகில், உள்ள ஒரு ஜமீன் , என சொல்ல வாயெடுத்தாள் , ஆனால் சுதாரித்து விட்டு ஒரு கிராமத்தில் இருந்து சென்னை வந்துள்ளேன். நான் இன்று காலை மரினா பீச்சில் உங்களுடைய பேங்க் டெபிட் கார்டு மற்றும் விசிட்டிங் கார்டு கீழே கிடந்தது என் கூறி அவைகளை மேசை மீது எடுத்து வைத்தாள். அத்துடன் இந்த ஒரு புகைப்படமும் இருந்தது என அவன் அம்மாவின் பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படத்தையும் எடுத்து வைத்தாள்.
அவன் ஆச்சர்யத்துடன் ” ஓ எஸ் இட்ஸ் ஐஸ் மைன் தேங்க்ஸ் எ லாட் ” என கூறிவிட்டு , இதை நீங்கள் வரவேற்பளினியிடம் கொடுத்து விட்டே பொய் இருக்கலாமே .. என்றான் .
“எனி வே தேங்க்ஸ் அகைன் ” என்றான் .
வேறு என்ன மிஸ் … என்று அவன் வினவ
என் பெயர் கமலி சார் .. என்றாள்
“ஓகே மிஸ் கமலி . எனி திங் எல்ஸ் .. ஐ ஐம் இன் எ பிஸி ஷெட்யூல் ” என்றான் . நேரத்தை வீணாக்காமல் கிளம்புங்கள் என்ற தொனியில் பேச
“சார் , எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ” என ஆரம்பித்தாள்.
ஓ இவள் ஏதோ உதவியை எதிர் பார்த்து தான் தன்னை நேரில் சந்திக்க வந்து இருக்கிறாள் என புரிந்து கொண்டான்.
அதற்குள் டெலிகேட்ஸ் ஒருவர் வந்து விட்டதாக தகவல் வர ..
இவன் “வெயிட் பண்ணுங்கள்.. இல்லாவிட்டால் கால் மி ஆன் போன் ஆப்ட்டர் சிக்ஸ் பி எம் என்றான் .. ஈவினிங் ஐ வில் கம் பாக் என்று விட்டு போய் விட்டான்.
சரி சார் என்று சொல்லி விட்டு .. நமக்கு இன்று இங்கே உதவி இன்று கிடைக்காது என மனதை தேற்றி கொண்டு வரவேற்பில் உள்ள பெண்ணிடம் வந்தாள்.
” சாரை பார்த்து விட்டேன் ஆனால் அவரிடம் சரியாக பேசுவதற்க்குள் டெலிகேட்ஸ் வந்து விட்டார்கள் போல” என்று கூறினாள்.
“சாரிடம் ஏதும் சொல்லனுமா மாம் . ஏதும் தகவல் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நான் சார் வந்ததும் சொல்லிவிடுகிறேன் ” என்றாள்.
“நானே அவரிடம் பேசி கொள்கிறேன் கால் பண்ண சொல்லி இருக்கிறார் ஈவினிங்” … என்றாள் .
அதற்குள் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் காபி , ஸ்னாக்ஸ் சாப்பிட வெளியில் உள்ள ஒரு கேபினுக்குள் நுழைந்தார்கள் .
வரவேற்பாளினி ” காபி சாப்பிடுகிறீர்களா .. வாருங்கள் என்றாள் ..
இவளுக்கும் அப்போது தான் காலையில் இருந்து ஏதும் எடுத்து கொள்ளாமல் இருந்தது புரிந்தது. அப்போது தன் பசி தெரிய ஆரம்பித்தது.
சரி வருகிறேன் என கூடவே சென்றாள் .
எல்லோரும் சிறிது பேசி கொண்டே காபி மற்றும் பிஸ்கட் எடுத்து கொள்ள
இவளும் எடுத்து கொண்டு வந்தாள்.
வரவேற்பாளினி ” ஆமாம் உங்கள் பெயர் என்ன ..இது வரை உங்கள் பெயரே தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறேன் பாருங்கள் ” என சிரிக்க
என் பெயர் கமலி என சொல்லிவிட்டு …உங்கள் பெயர் . என்றாள்.
நைஸ் நேம் .. என் பெயர் உஷா என்றாள் வரவேற்பாளினி
உங்கள் பேரும் நைஸ் நேம் தான் என் கமலி சிரிக்க .. இருவரும் சிநேகமா
சிறிது நேரம் பேசிவிட்டு
ஓகே கமலி நேரம் ஆகி விட்டது .. டெலிகேட்ஸ் வரும் போது நான் சீட்டில் இல்லாவிட்டால் சார் கோபித்து கொள்ளுவார்.. நான் செல்கிறேன் .. என் நம்பர் என அவளிடம் தன் கம்பெனி விசிட்டிங் கார்டு கொடுத்தாள்.
அதில் அவளுடைய காய் பேசி என்னை பின் பக்கம் பேனாவால் எழுதி கொடுத்தாள். ஏதாவது உதவி தேவை பட்டால் கால் பண்ணுங்க கமலி ..
என கூறி விட்டு தன் சீட்டுக்கு பொய் அமர்ந்து கொண்டாள்.
அதற்குள் டெலிகேட்ஸ் அனைவரும் வந்து விட அலுவலகம் ஒரே பரபரப்பில் ஆழ்ந்தது .
இவன் அனைவரையும் வரவேற்று உள்ள அழைத்து சென்று கம்பெனியை சுற்றி காண்பித்தான் .
அனைவரும் நிறுவனத்தின் கட்டமைப்பை வெகுவாக பாராட்ட ..
எல்லோரையும் மீட்டிங் ஹாலுக்கு அழைத்து சென்றான்.
அங்கே ஒரு ப்ரொஜெக்டர் வெண்திரையில் “வெல்கம் டு வி ஆர் பி கன்சுல்டன்ஸி சர்வீசஸ் ” என்று ஒளி பீய்ச்சி கொண்டு இருந்தது.
அனைவரும் வி ஆர் பி இன் விரிவாக்கம் என்ன என்று கேட்க
வி பார் விவேக்
ஆர் பார் ராமச்சந்திரன் ( பாதர் நேம் )
பி பார் பார்வதி ( மதர் நேம் )
என்றான் ..
அனைவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள் .
பிறகு எல்லோருக்கும் தன் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி விளக்கினான்.
இந்த நிதி ஆண்டின் டர்ன் ஓவர் கோல் .. பிப்டி கிறொர்ஸ்.. என்றான்
ஐந்து வருடத்தின் கோல் 5 பில்லியன் ( ஐனூறு கோடி) என்றான் .
அதற்கான பிளான் அண்ட் எக்சிகியூஷன் ஸ்லைட்ஸ் ப்ரொஜெக்டரில் ஓடவிட்டான்.
அனைவரும் வியந்து பாராட்டினார்கள் . டெலிகேட்ஸ் அனைவரும் ப்ராஜெக்ட் அக்ரீமெண்ட்டில் கையொப்பம் இட்டு விட்டு
வி ஆர் வெரி ஹாப்பி டு சி ஸச் எ வண்டர்புல் மேன். விவேக் யு ஆர் வெரி இன்டெலிஜெண்ட் அண்ட் இன்டலெக்சுவல் . வி ஆல் ஹாப்பி டு சைன் அண்ட் ப்ரோமிஸ் யு டு பி வித் யு அலங் வித் யுவர் கிரௌத்.
விவேக்கிற்கு மிகவும் பெருமையாக இருந்தது . நிறுவனம் மேலும் விரிவடைய போகின்றதை நினைத்து.
மீட்டிங் முடிந்து அனைவரையும் லஞ்ச் கு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு
அழைத்து உபசரித்தான்.
அனைவரையும் வழி அனுப்பிவிட்டு வரவேற்பாளினியிடம் போனில் நான் நேரே வீட்டிற்கு செல்கிறேன் என்னை முக்கியமான கால் தவிர வேறு எதற்கும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு கேட் செய்தான்.
அதற்குள் கமலி லஞ்ச் முடித்து விட்டு அருகில் உள்ள மொபைல் ஷோ ரூமில் நல்ல ஒரு ஆண்ட்ராய்டு கைபேசியை வாங்கினாள். டெபிட் கார்டில் பணம் செலுத்தி விட்டு ஒரு சிம் கார்டு வாங்கி ஆக்டிவேட் செய்து கொண்டாள். பழைய சிம்மை செயலிழக்க செய்து விட்டாள்.
ஊரில் இருந்த வரை பட்டன் போன் தான் உபயோகித்தாள். தோழிகள் அனைவரும் இவளை கிண்டல் அடிப்பார்கள் . பெரிய ஜமீன் வீடு பொண்ணு சாதா பட்டன் போன் பயன் படுத்துகிறாள் என்று . தேவை என்று வரும்போது தான் அதை வாங்க வேண்டும் என்பது அவள் எண்ணமாக இருந்தது.
தேவை இல்லாமல் எந்த பொருளையும் வாங்க மாட்டாள் கமலி ..
அனைவரும் யு டியூப் , வாட்ஸ் ஆப் என நவீன உலகில் வாழ இவள் மட்டும் தன் படிப்பு தவிர எதிலும் புத்தியை செலுத்தாமல் இருந்த காரணத்தால் தான் இவளால் யூனிவெர்சிடியில் இரண்டாம் ரேங்க் வர முடிந்தது.
அப்பாவிற்கு ரொம்ப பெருமை. அம்மா இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பார் என அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார்.
வேலுச்சாமியும் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்து இருந்தான் இவள் பட்டம் வாங்கி வரும் போது.
ஊரே இவள் வீட்டில் அன்று விருந்து சாப்பிட்டது இவளுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
வேலுச்சாமி மாமாவுக்கு நன்றி தெரிவித்தாள்.
ஊர்க்காரர்கள் வேலுச்சாமி அடுத்த விருந்து உனக்கும் கமலிக்கும் நடக்கும் திருமண விருந்தாக தான் இருக்கனும் என்று வழுதி விட்டு போனார்கள்.
இது கமலி மற்றும் அவள் தந்தையின் காது பட சிலரை வேண்டும் என்றே வேலுச்சாமி பேச வைத்தான். அதன் மூலம் கமலியின் சொத்தை அடைய நினைத்தான்.
கமலியின் தந்தையும் கமலியிடம் ” என்னமா எப்போ கல்யாணம் பண்ணிக்க போகிறாய் , உன்னை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுத்து விட்டால் நான் எந்த கவலையும் இல்லாமல் கண்ணை மூடுவேன். ” என்றார் .
நீங்க நூறு வயசு இருப்பீங்க அப்பா .. உங்களுக்கு பிறகு எனக்கு யாரும் இல்லப்பா .. அதனால கடவுள் உங்களை எனக்கு எப்போதும் துணையாக வைத்து இருப்பார் கவலை படாதீங்க ” என்றாள்.
“என்ன இருந்தாலும் உன்னை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால் தான் அம்மா எனக்கு நிம்மதி ” என்றார்.
“அப்பா நான் மேல் படிக்கப்பு படிக்க விண்ணப்பம் கொடுத்து வந்து இருக்கிறேன் “. எனது பேராசிரியர் எனது மதிப்பெண்ணை பார்த்து விட்டு படிப்பை நிறுத்தி விடகே அம்மா , அது தான் உனக்கு எப்போதும் உற்ற துணை” என்று சொன்னார் அப்பா ” என்று தன் தந்தையிடம் கூறி கொண்டு இருந்தாள்.
அப்பா அவளிடம் ” உனது ஆசிரியர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை அம்மா, நமது செல்வங்கள் எல்லாம் போனாலும் கூட கல்வி செல்வம் நம்மை காக்கும் அம்மா .. ஆனாலும் நீ விரைவில் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் ” என்றார்
அப்போது வேலுச்சாமி அங்கே வர , என்ன மாமா கமலிகிட்ட போய் கேட்டு கிட்டு இருக்கீங்க . பெரியவங்க நீங்க தான் செய்து வைக்கணும். என்று சொல்ல கமலி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
வேலுச்சாமி தான் மாமாவிடம் , ” மாமா நான் கமலியை நல்ல முறையில் பார்த்து கொள்வேன் . என் அம்மாவும் என்னிடம் நான் கமலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மாமவின் ஜமீனை பத்திரமாக காவல் செய்து வர வேண்டும் என்றும் சத்தியம் வாங்கி இருக்கிறார்கள் ” என்று பொய் அளந்து விட்டான்.
மேலும் “
அதனால் தான் மாமா நான் என் கெட்டசகவாச நண்பர்களை எல்லாம் கைகழுவிட்டேன் . இனி கமலிக்காக மட்டுமே என் வாழ்க்கையை வாழ தீர்மானித்துள்ளேன். அப்போது தான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் மாமா ” என உணர்ச்சி பொங்க நடித்தான்.
மாமாவும் இவனை பொய் கமலி சந்தேக படுகிறாளே.. மிகவும் நல்லவனாக மாறி விட்டானே. சரி வேலுச்சாமி நாளைக்கு ” குல தெய்வ கோயிலுக்கு சென்று பூ போட்டு பார்த்து விடுவோம்” என்று கூற
வேலுச்சாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். நம்ம நடிப்பு வீண் போக வில்லை என் நம்பினான்.
அன்று இரவே குல தெய்வ கோயில் பூசாரியை பார்த்து அவனை மிரட்டி விட்டு வந்தான். சிகப்பு பூ தான் வந்து இருக்கு .. சாமி உத்தரவு கொடுத்து விட்டது என்று சொல்ல சொன்னான்…
சொல்லாவிட்டால் குடும்பதையே காலி பண்ணி விடுவேன் என மிரட்டி விட்டு வந்தான் .
மறுநாள் காரில் மாமா , கமலி உடன் இவன் குல தெய்வ கோயிலில் பூசைக்கு ஏற்பாடு செய்து இருந்தான்.
பூசை முடித்து பூசாரி பூ போட்டு பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
வந்து கமலியின் தந்தை இடம் , “ஐயா , சிகப்பு பூவே வந்து இருக்கு, கல்யாண ஏற்பாடு பண்ணலாம் நீங்க ” என்று சொல்ல .
ஜோசியரிடம் வேலுச்சாமி மற்றும் கமலியின் ஜாதகத்தை காண்பித்து பொருத்தம் பார்க்க சொன்னார்..
அதே போல் முன்பே இதெல்லாம் வேலுச்சாமிக்கு இப்புடி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து இருந்ததால் பூசாரியை மிரட்டிய கையேடு இவர்கள் குடும்ப ஜோஸ்யரையும் மிரட்டி விட்டு தான் வந்து இருந்தான்.
ஜோசியரும் ” ஆஹா ஆஹா அற்புதமான பொருத்தம் என சொல்லி விட்டார்.
வீட்டிற்கு வந்த சுவாமிநாத பிரபு , கமலியின் தந்தை, கமலியிடம் அனைத்தையும் கூறினார்.
” பொருத்தம் மிகவும் அற்புதமாக உள்ளது என்று ஜோசியர் கூறி விட்டார் . குல தெய்வமும் கல்யாண ஏற்பாடுகளை செய்யலாம் என உத்தரவு கொடுத்து விட்டது. இனிமேல் தாமதிக்காமல்
உனக்கும் வேலுச்சாமிக்கும் திருமண நிச்சயம் செய்து விட வேண்டியதுதான் ” என்றார்.
ஜோசியரும் நாள் குறித்து கொடுத்து விட்டார். நிச்சயம் செய்வதை உற்றார் உறவினர் மற்றும் ஊர்க்காரர்கள் அனைவர்க்கும் சொல்லி விட்டார்.
வேலுச்சாமி மிகவும் தன் சாமர்த்திய குணத்தை எண்ணி பெருமை பட்டு கொண்டான்.
இவனது நண்பர்களை கொஞ்ச நாள் விலகியே இருக்க சொல்லி இருந்தான். கல்யாணம் ஆனதும் அனைவரையும் கவனித்து கொள்வதாக சொல்லி இருந்தான்.
நிச்சயம் தான் அறிவித்து விட்டாயிற்றே .. இனி என்ன நண்பா .. தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடு செய். என சில நண்பர்கள் நச்சரிக்க
சரி இன்று இரவு ஏழு மணிக்கு ஜமீன் கொள்ளை புற பங்களாவுக்கு பின் வாசல் கேட் வழியாக வந்து விடுங்கள் என கூறி விட்டான். அங்கே வைத்து எல்லோருக்கும் மது மாமிச விருந்து என இவனும் கூறி விட்டான்.
கமலியும் தன் மாமா வேலுச்சாமி உண்மையிலே நல்லவனாக மாறி விட்டது நம் நன்மைக்கே என்று நினைத்து மார்கிஸ்ந்து இருந்தாள்.
தன் தோழிகளை சந்தித்து விட்டு வருவதாக சொல்லி விட்டு பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றாள். சந்தித்து விட்டு வர கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. ஆறு மணி பேருந்தை பிடித்து விட்டாள் எப்படியோ. அதை விட்டால் 7 மணிக்கு தான். பின்னர் வீடு வந்து சேர மிகவும் நேரம் ஆகிவிடும். அப்பா கவலையில் ஆழ்ந்து விடுவார். நல்ல வேலை என மனதிற்குள் நினைத்து கொண்டே பேருந்தில் அமர்ந்து இருந்தாள்.
அப்போது ஒருவன் வேகமா ஓடி வந்து நடத்துனரிடம் ” சற்று பொறுங்கள் .. ஜமீன் வீட்டுக்கு சில பார்சல் இருக்கு . அதை ஏற்றி செல்லுங்கள் என கூறி சில நூறு ருபாய் தாள்களை அவன் கைகளில் திணித்தான்.”
அவரும் ஆசையாக வாங்கி கொண்டார் . நிறைய பெட்டிகள் ஏற்றினான்.
பிறகு அவனும் அவனுடைய நண்பனும் ஏறிக்கொண்டனர்.
கமலி பனிபொழிவின் காரணமாக தன் தலையை துப்பட்டாவால் முக்காடிட்டு தன் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
வேலுச்சாமியின் நபர்கள் இருவரும் சரக்குகளை ஏற்றி கொண்டு இவளுக்கு பின் சீட்டில் இருந்தனர். அவர்கள் கமலியை கவனிக்காமல் பேசிக்கொண்டு வந்தனர்.
“டேய் வேலுச்சாமிக்கு மச்சம் டா .. எப்படியோ ஜமீனை மடக்கி விட்டான் ” என்றான்.
மற்றொருவன் ” ஆமாம் டா அதனால தான இன்னைக்கு இந்த மது விருந்தே “
“பாவம் டா கமலியை நினைச்ச கஷ்டமா இருக்கு டா .. இவன் நல்லவனா மாறிவிட்டான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ” என்றான்
அதற்கு முன்னவன் ” டேய் அக்கம் பக்கம் பாத்து பேசு . யார் காதுல யாச்சும் விழுந்து தொலைக்க போவுது..” என்றான்.
இரண்டாமவன் ” ஆமா ஆமா . நமக்கு எதுக்கு இதை பெரிய இடத்து சமாச்சாரம் .. நாம நல்லா இன்னைக்கு மது விருந்தை இன்பமாக கொண்டாடி விட வேண்டும்”
இதை எல்லாம் காதில் வாங்கிய கமலிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அப்பாவிடம் சொல்லி உடனே திருமணத்தை நிறுத்தி விட வேண்டும். ஆனால் எப்படி அப்பா இதை நம்புவர் நான் மாமன் மீது உள்ள சந்தேக புத்தியினால் கதை காட்டுவதாக நினைத்து இதை அலட்சியம் செய்து விட்டால் நம் வாழ்க்கை வீணாகி விடுமே . என கவலை படலானாள்.
கடவுளே எப்படியாவது என்னை இந்த இக்கட்டில் இருந்து மீட்டு விடு என உள்ள உருக தொடங்கினாள்.
அவளது வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ என்னவோ ..
குல தெய்வ கோயில் பூசாரி தன் மனைவியிடம் வேலுச்சாமி வந்து மிரட்டி விட்டு போனது பற்றி சொல்லி கவலை பட்டார்.
பூசாரியின் மனைவி உடனே ” ஐயோ என்ன இப்படி செய்து விடீர்களே .. நமக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளார்கள் . அவர்கள் வாழ்க்கையை நாம் செய்யும் செயல்கள் பாதிக்கும். என்று புலம்பினாள் . கமலி மிகவும் நல்லவளாயிற்றே அவளுக்கு ஏதும் கெடுதல் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டுமே.. என்ன செய்வது இப்போது ” என்று கேட்டாள்.
பூசாரி உடனே ” ஆனது ஆகட்டும் .. நான் ஜமீன் பங்களா போய் . ஐய்யாவிடம் அனைத்தையும் கூறி விட போகிறேன் ” என்று கிளம்பி விட்டார்.
கமலி வந்த பேருந்திலேயே பூசாரியும் கோயில் நிறுத்தத்தில் ஏறி கொள்ள
இங்கே ஜோசியரும் தான் சொன்ன பொய்யினால் மிகவும் மனம் வருந்தினார். அவரும் இதை ஜமீனுக்கு விரைவில் தெரிய படுத்த நினைத்தார்.
தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தார் . நேரே ஜமீன் வீட்டுக்கு வந்தார்.
வந்து சுவாமிநாத பிரபுவிடம் சொல்லலானார் . அதற்குள் பூசாரியும் அங்கு வந்து விட்டார்.
கமலி அவளது பஸ் ஸ்டாப்பில் இறங்காமல் கொஞ்சம் தள்ளி இறங்கினாள். ஏனென்றால் வந்த பார்சல் களுடன் வந்த இருவரும் அங்கே இறங்கியதை பார்த்து விட்டு இவள் இறங்காமல் நின்று விட்டாள்.
ஜோசியரும் பூசாரியும் ஒருசேர விஷயத்தை கூற இவரால் நம்ப முடிய வில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவருக்கு வியர்த்து கொட்டியது. தப்பு பண்ணி விட்டோமே . கமலி என்ன செய்வாளோ ..
என்று பல எண்ணங்கள் மனதில் அலைக்கழிக்க .. அப்படியே மயங்கி சரிந்தார்.
ஐயோ என்னாச்சு யாராச்சும் வாங்களேன் என பூசாரி அலறினார்.
அதற்குள் கமலியும் அங்கு வர .. உடனே என்ன ஆயிற்று என கேட்டு திகைக்க
பூசாரி அனைத்தையும் சொல்ல .. ஓ அப்பாவுக்கு உண்மை தெரிந்து அதிர்ச்சியில் மயங்கி விட்டார் என யூகிக்க முடிந்தது இவளால்.
சரி ஆம்புலன்ஸ் கு கால் பண்ணினாள். கொண்டு போய் கோயம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அட்மிட் செய்து விட்டாள்.
நேராக ஐ சி யு வில் சேர்த்து ஆக்சிஜென் பொறுத்தபட்டது . பல்ஸ் , இதய துடிப்பு கண்காணிக்க பட்டது.
மருத்துவர் வந்து அனைத்தையும் பார்த்து விட்டு சில ஊசிகளை ட்ரிப்ஸ் மூலமாக செலுத்த சொன்னார். செவியிலரிடம் என்ன செய்ய வேண்டும் என செலுத்தி கொடுத்து விட்டு கமலியிடம் வந்தார்.
அம்மா இது அதிர்ச்சியில் ஏற்பட்ட ஸ்ட்ரோக் , அதாவது பக்க வாதம் என்று சொல்லுவார்கள் .
இன்னமும் அவர் கண் திறக்கவில்லை , உடல் அசைவுகள் இல்லை. ஆனால் இதய துடிப்பு நிற்க வில்லை. எப்போது வேண்டுமானாலும் விழிப்பு வரலாம். அருகில் இருந்து பார்த்து கொள்ளுங்கள் . என்று கூறி விட்டு சென்று விட்டார்.
இவள் அப்படியே செய்வது அறியாமல் திகைப்பில் உறைந்தாள்.
மறுநாள் காலை விழிப்பு ஏற்பட்டது . சிறிது பேசினார் .. அப்போது அம்மா உன்னை அனாதை ஆக்கி விட்டு போய் விடுவேனோ என அழுதார் .
செவிலியிர் கமலியிடம் ” உணர்ச்சி பேருக்கு எடுத்து பேசினால் மீண்டும் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருக்கு . ப்ளீஸ் அவரை உணர்ச்சி பேருக்கு எடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள் ” என்றார்
அதற்குள் ஜமீன் வக்கீல் அங்கே வந்தார் .. அம்மா ஐய்யாவின் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி வைத்து உயில் எழுதி பத்திர பதிவு ஏற்கனவே எழுதி வைத்து விட்டார். இதை எனக்கு ஏதாவது ஏற்பட்டால் என மக்களிடம் கொடுத்து விடும்படி கூறி இருக்கிறார். அதன் நகல் இது. இது என கை பேசி நம்பர் . ஒரிஜினல் லாக்கரில் உள்ளது . இது லாக்கர் கீ என கொடுத்து விட்டு அவர் போய் விட்டார்.
ஓ அப்பா முன்னமேயே திட்டம் போட்டு அனைத்தையும் செய்து வைத்து விட்டாரே என்று வியந்தாள்.
அன்று இரவு அவர் கண் திறக்காமலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்.
இது எதுவும் அறியாமல் வேலுச்சாமி ஜமீன் பின் புற பங்களாவில் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தான். அவனுடைய சகாக்களும் அங்கேயே குழுமி இருந்ததால் இரு நாட்களும் அவர்கள் அங்கேயே கொட்டம் அடித்தனர்.
அதற்குள் இவள் அப்பாவின் இறுதி சடங்கை நடத்தி விட்டு ஊரை விட்டு போய் விட எண்ணி இருந்தாள். பூசாரியும் ஜோசியரும் “வேலுச்சாமியின் கண்ணில் படாமல் தப்பித்து போய் விடம்மா. அவன் கையில் சிக்கினால் அவ்ளோ தான் உன் வாழ்வெ மோசமாகி விடும். நீ படித்த பெண் . எங்கு சென்றாலும் பிழைத்து கொள்வாய்.” என கூறி அவளை இரவு சென்னைக்கு ரயில் ஏற்றி விட்டனர்.
நடந்த நிகழ்வை ஆசை போடு கொண்டே மீண்டும் விவேக்கின் அலுவலகத்திற்கு வந்தாள்.
இரவு 7 மணிக்கு மேல் ஆகி விட்டது . அனைவரும் கிளம்பி விட்டனர். வாட்ச் மண் மட்டும் வரவேற்பில் அமர்ந்து இருந்தார் .
அன்று இரவு அவளுக்கு எப்படி கழிந்தது அவள் விவேக்கை மீண்டும் சந்தித்தாளா என்று அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.
👌👌👌👌👌