வானம் வசப்படும் – அத்தியாயம் 1 வேறு யூசர் ஐடியில் இருந்து எழுதினேன் . அந்த ஐடி லாக் ஆகி விட்டதால் இப்போது இங்கே பதிவு செய்துள்ளேன் வாசகர்களுக்காக . மீண்டும் ….
………………..
காலை சூரியன் மெல்ல மெல்ல தண்ணீர் குடத்தில் இருந்து பிரசவித்தான்.
மெரினா பீச்சில் அவ்வேலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். விவேக் மணல் திட்டில் அமர்ந்த வாறு தியானம் செய்து கொண்டு இருந்தான். சில பெண்கள் நாய்களோடு வாக்கிங் செய்தார்கள். சில பெண்கள் அவன் முக பிரகாசத்தை ரசித்து சென்றார்கள். அவன் முகம் மிக தெளிந்த சிந்தனை எண்ணங்களோடு இருந்தது தன அதற்கு காரணம்.
ஒரு வித தேஜஸ் என்று சொல்லுவார்களே அது அவனிடம் இருந்தது. அவன் ஒரு வேலை இல்லா பட்டதாரி ஆனால் அவனுக்கு வேலை கொடுக்க பல நிறுவங்கள் தயாராக இருந்தன. ஏனென்றால் அவனின் அறிவு பிரகாசம் பளிச்சென வெளிப்படும். எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வே சொல்லி விடுவான். மனிதர்களை எடை போடுவதில் வல்லவன். தீர்க்கமான முடிவு எடுக்க தெரிந்தவன்.
ஏனென்றால் அவனின் அம்மா வளர்ப்பு அப்படி. எதை கண்டும் மிரள மாட்டான். ஐகியூ டெஸ்டில் இந்திய ளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவன். பல பன்னாட்டு நிறுவனங்கள் அவனுக்கு வேலை கொடுக்க காத்து இருக்கின்றன. அதை எல்லாம் உதறி தள்ளி விட்டு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றான். அவன் நண்பர்கள் உறுதுணையோடு. அவன் நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி விட்டது. அவன் மட்டும் இன்னும் கட்டை பிரம்மச்சாரிய இருக்கின்றான். இதோ இந்த தை மாதம் வந்தால் அவனுக்கு இருபத்தைந்து முடிய போகிறது.
கமலியும் அந்த இடத்தில் கடல் அலைகளை வெறித்து பார்த்து கொண்டு நின்றாள். நேற்றைய சம்பவங்கள் அவள் மனதில் தோன்றி மறைந்தன.
ஊரில் அவள் மிக பெரிய ஜமீனின் ஒரே வாரிசு . அதுவே அவளுடைய பாதுகாப்புக்கு எமனாக வரும் என்று கனவிலும் நினைக்க வில்லை.
அவன் முறை மாமன் ஒரு முரடன். அவனுக்கு பயந்து தான் இவள் இதோ சென்னை வந்து இந்த பீச்சில் செய்வது அறியாமல் நிற்கிறாள்.
தான் படித்த செர்டிபிகேட் பைல் மற்றும் சில மாற்று துணி மணிகளுடன் மட்டும் ஊரில் கடைசி ரயில் ஏறி விட்டாள்.
இனி கடவுள் தான் இவளை கரை சேர்க்க வேண்டும். மனதில் ஒரு நம்பிக்கையோடு வந்து விட்டாள். பார்ப்போம் விதி இவள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்று.
இவளும் மிக பெரிய அழகி என்று சொல்லாவிட்டாலும் அழகி தான் . அதுவும் இவள் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்து விட்டது.
ரயில் பயணத்தின் போதே சில வல்லூறு கண்கள் இவள் மேனியை நோட்டம் விட்டன. ஆனாலும் ஒரு கிராமத்து பெண்ணின் அருகில் அமர்ந்து அவளுடன் பயணம் செய்வதை போன்று பேசி கொண்டே சென்னை வந்து விட்டாள். நேரம் ஏழு மணி ஆகி விட்டது.
விவேக்கின் அம்மா அவன் கைபேசிக்கு கால் பண்ணி ஞாபக படுத்தினாள்.
இன்று சில முக்கியமான மனிதர்களை அவன் அவனுடைய கம்பெனியில் சந்திக்க வேண்டி இருந்தது. அது அவனுடைய நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவேண்டியே.
அவன் அம்மாவிடம் பேசினான் ” இதோ கிளம்பி விட்டேன் மா. பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணி விடு . லஞ்ச் வேண்டாம் .”
இன்று மீட்டிங் முடிந்தவுடன் வந்து இருபவர்களோடு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஏற்படாது செய்து இருந்தான். அது தான் எழுத படாத நடைமுறை .
அவன் பேசி முடித்து டிரஸ் சரி பண்ணி கிளம்பும் போது அவன் பர்சில் இருந்து ஒரு புகைபடம் ( அவன் அம்மாவுடையது) மற்றும் சில டெபிட் கார்டு மற்றும் அவன் ஆபீஸ் முகவரி அச்சிட பட்ட விசிட்டிங் கார்டுகள் கீழே விழுந்தன. இவள் சில அடி தூரத்தில் தான் அமர்ந்திருந்தாள். ஒரு வேலை கடவுள் இவளுக்கு ஒரு வழி காண்பித்து விட்டாரோ என்னவோ.
பார்ப்போம் மீண்டும்
👌👌👌👌👌