“எல்லோரும் போய் விட்டார்கள் அம்மா , நீங்கள் நாளைக்கு வாருங்கள் ” என்றார் செக்யூரிட்டி
வரவேற்பாளினி உஷா கொடுத்த கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள்.
உஷா போனை எடுத்து ” யார் பேசுவது என் கேட்டாள்.
“உஷா , நான்தான் கமலி பேசுகிறேன் , எனக்கு ஒரு உதவி தேவை ” என்றாள்.
அதற்கு உஷா ” என்ன உதவி வேண்டும் ” என கேட்டாள்
“நான் தங்குவதற்கு ஒரு இடம் வேணும் , இங்கே ஆபிஸில் இன்று தூங்கலாமா? ” என கேட்டாள்.
“ஐயோ! என்ன கமலி என்ன ஆச்சு ஏன் இப்படி கேட்குறீர்கள் ” என்றாள்.
“நான் தேடி வந்த நபர் வீட்டில் இல்லை .. நான் வந்த வேலையும் முடியவில்லை . அதனால் தான்…” என நீட்டி முழக்கினாள் உண்மை நிலையை சொல்லாமல்.
“நான் இப்போது எனது தோழிகளுடன் ஊரில் உள்ள என உறவினர்களின் திருமணதிற்கு பிரயாணம் செய்து கொண்டு இருக்கிறேன். “
“நீங்கள் வேண்டுமானால் விவேக் சாருக்கு அடித்து பேசுங்கள் . கண்டிப்பாக ஹெல்ப் செய்வார். மிகவும் நல்ல மனிதர் அவர் “. என கூற
கமலி விவேக்கு போன் செய்தாள். விவேக் அப்போது அவன் அம்மாவுடன் இரவு உணவு சாப்பிட அப்போது தான் அமர்ந்தான்.
விவேக்கின் அம்மா பார்வதி , “டேய் நீ இப்போ போன் எடுக்க வேண்டாம் . நிம்மதியாக சாப்பிடு முதலில்.. ” என்று கூற
“இருங்கள் அம்மா முக்கியமான அழைப்பாக இருக்க போகின்றது பேசி விட்டு வந்து விடுகிறேன்” என போனை எடுத்தான்
“அவ்ளோ தான் இன்னைக்கு நீ சாப்பிட்ட மாரி தான் போடா … ” என அங்கலாய்த்தாள்.
அதற்குள் மிஸ்ட்டு கால் ஆகிவிட்டது. யாரோ தெரியாத நபரிடமிருந்து தான் அழைப்பு வந்துள்ளது. அப்புறம் பேசி கொள்கிறேன் என சாப்பிட அமர்ந்தான்..
இவள் மீண்டும் அழைக்கலாமா என யோசித்தாள். தொந்தரவாக இருக்குமோ என தயங்கினாள். சரி வேண்டாம் , இனி அவராக அழைத்தாள் பேசி கொள்ளலாம் என முடிவிக்கு வந்தாள்.
சாப்பிட்டு அவனது ரூமுக்கு சென்று விட்டான்.. கைப்பேசியை டைனிங் டேபிளில் வைத்துவிட்டான்.
அவன் அம்மா சாப்பிட்டு விட்டு வந்தாள் அவனிடம் …
“டேய் , விவேக் இங்க பாரு எனக்கு வயசாகிகிட்டே வருது.. முன்ன மாதிரி வேலை செய்ய முடியல .. நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கொண்டு
இந்த வீட்டு வேலைகளில் இருந்து விடுதலை கொடு டா .. என்னால் முடியல .. நீ தினமும் இரவு வரும் வரை பொறுத்து இருந்து உனக்கு உணவு பரிமாற என்னால் முடியவில்லையடா .. ” என அவன் கல்யாண பேசிச்சை ஆரம்பித்தாள்.
“உன் நண்பர்கள் எல்லோரும் குழந்தை குட்டி என்று குண்டுமப சகிதமாக இங்கே வரும்போது மனசுக்கு மிகவும் ஏக்கமாக இருக்கு உன்னை எப்போது நான் அந்த கோலத்தில் பார்ப்பேன் என்று.
இன்று கல்யாண தரகர் ஒருவர் வந்து நான்கு பெண் ஜாதகங்களை கொடுத்து விட்டு போய் இருக்கிறார். பொருத்தமும் ஜோசியரிடம் கேட்டு விட்டேன்.நீ பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சொல்லிவிட்டு போனால் எனக்கு மேற்கொண்டு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் டா .. என சொல்ல
“என்னுடைய கனவு எனது நிறுவனம் .. அதை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் வரை இதை பற்றி பேசாதே அம்மா … ப்ளீஸ் நான் சொல்லும் வரை இனி கல்யாண பேச்சை எடுக்காதே .. ” என அன்பு கட்டளை இட்டான்.
” யாரையாவது லவ் பண்ணினாயால் என்றாலும் என்னிடம் சொல்லிவிடு டா .. நான் மறுப்பேதும் சொல்லமாட்டேன் டா .. ” என்றார் பார்வதி அம்மா.
“அதெல்லாம் ஏதும் இல்லை அம்மா.. இப்போது திருமணம் செய்து கொண்டால் எனக்கு வருகிறவளிடம் நேரம் ஒதுக்க முடியாமல் போய் விடும். அப்புறம் அவளும் உன்னை போல் தினமும் என்னை ஏதாவது கேட்டு .. கஷ்டமாகிடும் ” என்றான்.
“நான் இனிமேல் பேச மாட்டேன் டா .. எனக்கு இப்போதைக்கு பேரன் பேத்திகளை கொஞ்சும் பாக்யம் இல்லை ..ஹூம் … ” என்று மனம் கலங்கியவரே கண்ணீருடன் சொன்னாள்.
“அம்மா … ஒரு பொண்ணு என மனசுக்கு பிடித்தால்.. உனக்கு சொல்லி விடுகிறேன் ஓகே வா… இப்போதைக்கு நீ போய் தூங்கு .. வேண்டுமானால் வீட்டு வேலைக்கு யாரையாவது ஆள் போட்டு கொள்ளலாமா” என கேட்டான்.
அதற்கு ஒன்னும் சொல்லாமல் கோபமாக முறைத்து விட்டு போய் விட்டாள்.
டேய் உன் போன் டைனிங் டேபிளில் இருக்கு தேடாதே .. என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
மணி இரவு ஒன்பது ஆகிவிட்டது. சரி கொஞ்ச நேரம் மைல்ஸ் பார்த்து விட்டு தூங்குவோம் என கணினியை ஓபன் பண்ணினான். நாளைக்கு என்ன என்ன வேலை என்று லிஸ்ட் போட்டு விட்டு .. வாட்சப்பில் நாளைக்கு ஹச் ஆர் மானேஜரை கூப்பிட்டு எம்பிளாய் மீட்டிங் இங்கே பண்ண சொல்லி விடுவோம் என போனை தேடினான்.
ஓ அம்மா டைனிங் டேபிளில் இருக்கு என்று சொன்னது நினைவுக்கு வர
அப்போது யாரோ ஒருவர் கால் பண்ணியிருந்தார்களே என யோசித்துக்கொண்டே சென்று போனை எடுத்து பார்த்தான்.
அங்கே ஆஃபிஸில் கமலி செக்கூரிட்டியிடம் “ஐய்யா , நன் இன்று இங்கே தங்கி கொள்ளலாமா ..ஏதும் பிரச்னை இருக்க இங்கே நான் தங்கிக்கொள்ள” என பணிவுடன் கேட்டாள்.
“இல்லையம்மா நான் இதில் முடிவெடுக்க முடியாது .. நீங்கள் விவேக் சாரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது அவருக்கு இணையாக உள்ள மேல் அதிகாரி இங்கே வேலை செய்பவர்களிடம் கேட்டு பாருங்கள். ” என முடியாது என்பதை நாசுக்காக கூறி விட்டார்.
சரி என தயங்கியபடியே வெளியில் வந்து விட்டாள். அடையாறு பஸ் ஸ்டாண்டில் என்ன செய்வது என புரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.
சே .. காலையிலேயே நாம் முதல் வேலையாக தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிவிட்டு பிறகு இங்கே வந்து இருக்கலாம். மடத்தனம் பண்ணிவிட்டேன் என தன்னையே நொந்து கொண்டாள்.
மணி வேறு பத்து ஆகி விட்டிருந்தது. சாலையில் மக்கள் கூட்டம் குறைய தொடங்கியது.
அப்போது இரு இளைஞர்கள் இவள் அருகில் வந்து ” என்ன மேடம் எங்கே போகணும் .. எந்த பஸ்சிலும் ஏறுகின்றது போல தெரியலையே ” ஏதும் பிரச்சனையா . ஆட்டோ இருக்கு வாரீங்களா .. நாகா சபியா கொண்டு போய் இறக்கி விட்டுடுறோம். … ” என கேட்க
இவள் ” அதெல்லாம் வேண்டாம் .. நான் வேறு நபருக்காக காத்திருக்கிறேன் . இப்போது அவர் வந்து விடுவார் ” .. நீங்கள் செல்லலாம் உங்கள் உதவி தேவையில்லை. என கூறினாள்.
அவர்கள் சரி என்று விலகி செல்வது போல சென்று எதிரில் கொஞ்சம் தூரத்தில் நின்று இவளை நோட்டம் விட்டனர். இவள் அதை பார்த்து
பயந்து போய் வேறு திசையில் நடக்க தொடங்க .. அவர்களும் இவளை பின் தொடர ..
என்ன செய்வது என தெரியாமல். கொஞ்சம் தூரம் அடையாறு டெப்போ பஸ் ஸ்டாப் வரை நடந்து கொண்டு இருந்தாள்.
அங்கே காவல் நிலையம் ஒன்று இருந்தது அங்கே சென்று உதவி கோரலாமா என யோசித்தவள் அந்த பொரிக்கி பசங்கள் எங்கே என்று பார்த்தாள். ஒரு பத்து அடி தூரத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
என்னடா இது வம்பில் மாட்டிகொண்டோமோ .. ஒரு பெண்ணுக்கு எங்குமே பாதுகாப்பு என்பதே நாட்டில் இல்லாமல் போய் விட்டதே. பெண்ணை தெய்வம் என்று கொண்டாடும் நாம் நாட்டில் அந்த பெண்ணையே கேவலமான பொருளாகவும் பார்கின்றவர்களும் நிறைய பேர் இருக்கிறார்களே.
இந்த நிலை எப்போதும் மாறாதோ நாம் நாட்டில் என பெண்களின் நிலையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.
அதற்குள் இவள் அருகில் ஒரு ஆட்டோ வந்து ” வாரீங்களா என கேட்க .. உள்ளே இந்த இருவர்களும்… இருந்தனர்.
உடனே இனியும் நாம் தாமதிக்க கூடாது என்று எதற்கும் ஒரு முறை விவேக் சாருக்கு போன் செய்து உதவி கேட்போம் என கால் பண்ணினாள்.
அவன் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்ததால் உடனே எடுத்தான். மணியை பார்த்தான் இரவு 11 காண்பித்தது.
“ஹலோ உங்களுக்கு யார் வேணும்.. நான் விவேக் பேசுகிறேன் ” என்றான்.
“விவேக் சார் , நான் கமலி பேசுறேன் இன்றைக்கு காலையில் உங்களை சந்தித்தேன் உங்கள் அலுவலகத்தில் உங்கள் டெபிட் கார்டு உடன் ” ” என கூற
ஞாபகம் இருக்கிறது , ஏதோ உதவி என்று கேட்டிர்களே .. இந்த நேரத்தில் கால் செய்து இருக்கிறீர்களே , ஏதும் அவசரமா என கேட்க
ஆமாம் மிக அவசரமா உங்கள் உதவி தேவை என இவள் கூற
எழுந்து உட்கார்ந்தான் ..” என்ன சொல்லுகிறீர்கள் எனி திங் சீரியஸ்” என கேட்க
“சரி எங்க இருக்கிறீர்கள்” என கேட்டான்
சார் உடனே நீங்கள் அடையார் டெப்போ பஸ் ஸ்டாப் வாருங்கள் .. எனக்கு மிக பயமாக உள்ளது. இரண்டு பேர் என்னை நோட்டம் விட்டு கொண்டே பின் தொடர்கின்றனர் .. என்று கூறினாள்.
சரி இனிமேலும் இவளை கேள்விகேட்டால் நல்லது இல்லை என்று நினைத்து “சரி கவலை வேண்டாம் நான் அடையாறில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தான் இருக்கிறேன். 2 அல்லது 3 நிமிடங்களில் அங்கே இருப்பேன் என கூறினான்.”
அம்மாவிடம் சென்று ” அம்மா நான் கொஞ்சல் வெளியில் போய் வருகிறேன் என்று கூறி விட்டு டோர் லாக் செய்து விட்டு காரை எடுத்தான்.
.
சொன்னபடியே மூன்று நிமிடங்களில் வந்து விட்டான். பஸ் ஸ்டாப்பில் இவள் தனியே கைப்பையுடன் நின்று கொண்டு இருந்தாள்..
காரில் இருந்து கீழே இறங்கி அவளை நோக்கி நடக்க ..
இவன் வருவதை பார்த்து இவளும் அவனை நோக்கி நடக்க
இவன் வருவதை பார்த்ததும் அந்த பொறுக்கிகள் ஆட்டோவை கிளப்பி கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
அப்பாடா என பெரு மூச்செறிந்தாள்.
ரொம்பவும் பயந்து நடுங்கியவளின் அருகே சென்று ..
ஆறுதலுடன் அவளை கைகளை பிடித்து .. பயப்படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன்.வாருங்கள் என காரில் பின் டோரை திறந்து விட்டு அவளை ஏறி அமர செய்தான்.
காரில் ஒன்றும் பேசவில்லை. நேரே வீட்டிற்கு வந்து உள்ளே சென்று அம்மாவிடம் என கெஸ்ட் ஒருவர வந்துள்ளார் . அவருக்கு தேவையான உதவி செய்யுமாறு கூறினான். அது ஒரு 3 BHK ஹவுஸ் .ஒரு ரூமில் AC ஆன் செய்து விட்டு வந்தான்.
அம்மா வெளியில் வந்து பார்த்தாள் . இந்த நேரத்தில் யாரடா கெஸ்ட் என்று.
தங்கச்சிலை போல அழகான பெண்ணை கண்டதும் அசந்து விட்டாள்.
ஒருவேளை இவளை நினைத்து தான் கல்யாணம் வேண்டாம் என்றானோ
என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
“அம்மா இவள் பெயர் கமலி. இவளை கவனித்து இவளுக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுங்கள் “. என கூறி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.
அம்மா கமலியிடம் ” சாப்பிட்டாயாமா .. என கேட்டாள்.
“எதுவும் வேண்டாம் அம்மா” என கூறினாலும் இரண்டு தோசை சுட்டு எடுத்து வந்தார்கள் அம்மா.
மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டாள். அவ்வளவு பசி .
பிறகு பால் ஒரு டம்ளர் கொடுத்து அவளை அறையில் பதித்து உறங்க சொல்லிவிட்டு வந்தார்கள்.
“காலையில் பேசிக்கொள்ளலாம் நீ நன்கு தூங்கி ஓய்வு எடு” என்றார்கள்.
அவளை கண்களை பார்த்தாலே அவளை எவ்வளவு தூக்கம் இல்லாமல் இருக்கிறாள் என்பது அம்மாவுக்கு விளங்கியது.
அவளுக்கு இப்போது ஓரளவு தெம்பு கிடைத்து இருந்தது.
மிகவும் நல்லவர்களாக தெரிகிறார்கள் . அம்மாவும் பையனும் மிகவும் மென்மையாக உள்ளார்கள். இவனும் சரி அம்மாவும் சரி என்ன ஏது என விசாரிக்காமல் என்னை வீட்டிற்குள் அனுமதித்து விட்டார்களே.
உண்மையிலே இவன் ஜென்டில் மேன் தான். அதற்குள் உறக்கம் அவளை விழுங்கியது.
காலை 6 மணிக்கு இவள் குளித்து விட்டு வெளியில் வந்தாள். அம்மா அதற்குள் குளித்து விட்டு பூஜை செய்து கொண்டு இருந்தார்கள்.
இவளும் அங்கே வந்து சுவாமியை நமஸ்கரித்தாள்.
அம்மா இவளை கண்டதும் . இங்க வாம்மா என்று கூப்பிட்டு அருகில் அமர்த்தி கொண்டார்கள்.
இவள் திருப்புகழ் பாடல்கள் சில வற்றை சொல்லி பிரார்த்தனை பண்ணினாள்.
அம்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏதோ நவ நாகரீகமாக இருக்கும் ஒரு பெண்ணை தான் இவன் விரும்புவான் என நினைத்துக்கொண்டு இருந்தாள். பரவாயில்லை அருமையான அழகான அதே சமயம் தெய்வீகம் நிறைந்த ஒரு பெண்ணை தான் கூடி வந்து இருக்கிறான் என அறிந்ததும் உள்ளுக்குள் மனம் மகிழ்ந்து போனாள்.
“ஆமாம் கமலி உனக்கு விவேக்கை எவ்வளவு நாட்களாக தெரியும். உன்னை பற்றி என்னிடம் இதுவரை சொன்னதே இல்லையே ” என கேட்டாள்.
நேற்று தான் அம்மா எனக்கு சாரை தெரியும் என இவள் கூற ..
அம்மா அதிர்ச்சியில் உறைந்தார். அப்புறம் எப்படி என அம்மா குழப்பம் அடைந்தாள்.
கமலியிடம் அவளை பற்றி விசாரிக்க தொடங்கினாள். கமலி தன் உண்மையான விவரங்களை கூற .. அம்மா கமலியை ஆறுதலாய் அணைத்து கொண்டு ,
” நீ இனிமேல் எங்கும் செல்லவேண்டாம். என கூடவே இருந்து விடம்மா. உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டதம்மா. நீ உன் பிரச்சனை எல்லாம் ஓய்ந்த பின் இந்த வீட்டை விட்டு போகலாம். நன் அவனிடம் பேசிக் கொள்கிறேன்” என அன்பு கட்டளை இட்டாள்.
அதற்குள் கமலி விவேக் எங்கே என கேட்க , அதற்கு அவன் அம்மா
“அவன் 4 மணிக்கே எழுந்து காரை எடுத்து கொண்டு மரீனா பீச் சென்று விட்டான். நடை பயிற்சி , யோகா மற்றும் தியானம் செய்து விட்டு வீட்டிற்கு வர குறைந்தது 7 அல்லது 8 மணி ஆக்கி விடுவான்.
பின்னர் முப்பது நிமிடம் பிசினெஸ் நியூஸ் படித்து விட்டு பின்னர் ஆபீஸ் மெய்ல்ஸ் பார்த்துவிட்டு உடனடியாக என்ன ரிப்ளை செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டு குளிக்க போவான்.” என்று அவனைபற்றி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் உள்ளே வந்து கொண்டு இருந்தான்.
அவளை பார்த்ததும் சிறிது நொடி அசந்து விட்டான். அவன் மனதை என்னோவோ செய்தது. எந்த பெண்ணையும் இப்படி மெய் மறந்து பார்த்தவன் இல்லை விவேக். அம்மாவும் இவன் பார்ப்பதை கபைது விட்டாள். உள்ளுக்குள் அம்மாவுக்கும் சந்தோஷம்.
தன் மகனுக்கு இவளை பிடித்து விட்டதை உணர்ந்தாள்.
அழகான வெளி நீல சீலையில் பிரீ ஹேர் விட்டு இரண்டு தலையின் இருபக்கமும் சில முடிகள் எடுத்து நடுவில் கட்டி இருந்தாள். வானத்து தேவதை தன் வீட்டில் இறங்கி விட்டாளோ என ஒரு நிமிடம் நினைத்தான் பின் சுதாரித்து விட்டு
“கமலி , உங்களை பற்றி நேற்று நீங்கள் இருந்த பதற்றத்தில் ஒன்றும் கேட்காமல் இருந்து விட்டேன். சரி நீங்கள் எங்கு செல்லவேண்டும் என சொல்லுங்கள் நான் உங்களை பத்திரமாக வழி அனுப்பி விட்டு வருகிறேன்” என கூற
இவள் அம்மாவை பார்த்தாள்.
அம்மா விவேக்கிடம் ” டேய் நீ ஒன்றும் கேட்க வேண்டாம். இவள் என பொறுப்பு , இவளை நான் பார்துகொகிறேன் நீ போகலாம். நான் எல்லாம் விசாரித்து விட்டேன். நீ உன் வேலையை பார்க்கலாம் .. ” என கூறிவிட்டு நிற்காமல் கமலியை உள்ளே அடுக்களைக்குள் அழைத்து சென்றுவிட்டாள்.
இவன் முகத்தில் ஈயாடவில்லை. அம்மாவை இது இப்படி பேசி விட்டு செல்வது என ஒன்றும் விளங்காமல் குழப்பமாக தன் அறைக்குள் சென்றான்.
இவன் குளித்து விட்டு வந்து சாப்பிட உட்கார ..
கமலி தட்டில் கேழ்வரகு பிட்டும் , இரண்டு இட்லியும் கொஞ்சம் சாம்பாரும் கிண்ணத்தில் எடுத்து வந்து வைத்து விட்டு போனாள்.
அம்மா .. இங்கே வாருங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என தெரிய வேண்டும் .. கொஞ்சம் சொல்லுங்கள் என கேட்டான்.
ஒரே ஒரு நாள் இரவுக்குள் இவள் உங்களை என்ன மாயம் செய்து கவர்ந்து விட்டாள் பாருங்கள் . யார் இவள் என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி நம் வீட்டில் வைத்து கொள்வது என குழம்பினான்.
கமலி நீ இன்று என்னுடன் ஆபீஸ் வா . நான் உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என கூறினான்.
சரி வருகிறேன் சார் ” என கூறி கிளம்பினாள்.
அம்மா விவேக்கிடம் ” டேய் வேலை தேடி ஊரை விட்டு சில கஷ்டங்களோடு சென்னை வந்து இருக்கிறாள் டா .. முடிந்தால் உன் நிறுவனத்தில் ஏதாவது வேலை கொடு .. இல்ல விட்டால் நான் வீட்டில் எனக்குவீடு வேலைக்கு துணையாக வைத்து கொள்கிறேன் .. இவள் இனிமேல் நம் வீட்டில் தான் என்னுடன் தான் இருப்பாள்.. நீ இதை மனதில் வைத்து கொள். ” என வேகமாவும் உறுதியாகவும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அம்மாவிற்கு ஏன் இந்த திடீர் பாசம் இந்த பெண் மீது என திகைத்தான் .
சரி இவளிடம் பேச வேண்டும் அதற்கு பின் இவளை பற்றி பாக் கிரௌண்ட் செக் பண்ண சொல்லுவோம் நம் அலுவலக நடைமுறை படி என நினைத்து கொண்டே இவளிடம் உன் பயோ டேட்டா மற்றும் செர்டிபிகேட்டுகளை எடுத்து கொள் என கூறினான்.
அவளையும் அழைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்றான்.
அலுவலகமே அவளையும் அவனையும் ஒரு சேர பார்த்ததில் அதுவும் நேராக அவன் கேபினுக்குள் அழைத்து சென்று விட்டதால்.. ஏதோ பெரிய இடத்து பெண் போல .. அதனால் தான் சாரே அழைத்து செல்கிறார் என நினைத்து விட்டனர்.
இவன் ஹெச் ஆர் மானேஜரை கூப்பிட்டு இவளை இன்றில் இருந்து என பர்சனல் அசிஸ்டண்டாக அப்பொய்ண்ட் பண்ணி இருக்கேன். பார்மாலிட்டி எல்லாம் முடித்து இவளுக்கு என ரூமிலேயே ஒரு சிஸ்டம் கொடுத்து உட்கார வையுங்கள் என கட்டளை பிறப்பித்தான். பின்னர் கம்லியிடம் “அவருடன் சென்று போர்மாலிட்டீஸ் முடித்து விட்டு வா ..லஞ்ச் கு வீட்டிற்கு செல்வோம் ” என சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்து போனான்.
இவை அனைத்தையும் வெறும் கனவு போல பார்த்துக்கொண்டு நின்றாள்.
இதை இரு கண்கள் வெறுப்போடு கவனித்து .. அது ஒரு பெண்.. அந்த அலுவலகத்தில் வேலை செய்ய கூடிய இவனுடைய பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் நெருங்கிய நண்பன் சதீஷின் தங்கையானா நர்மதா ..
—-
ஜமீன் வீடு .
வேலுச்சாமி இங்கே குதியாட்டம் ஆடினான் . எல்லாவற்றையும் எனக்கு தெரியாமல் எனதி செய்தீர்கள் என கேட்டான். ஏன் மாமாவின் முகத்தை கூட எனக்கு காட்டாமல் இறுதி சடங்கை நடத்த வேண்டியதின் அவசரம் என்ன வந்தது .. என அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபத்தில் கத்தினான் . கமலி எங்கே போனாள் என்றே தெரியவில்லை .. அவளுக்கு என்ன ஆனது என்றும் புரிய வில்லை. இரு நாட்கள் கொள்ளை புற பங்களாவில் இருந்தது இப்படி எல்லாம் தலை கீழ் ஆகும் என அவன் கனவிலும் நினைக்க வில்லை.
ஜோசியரும் பூசாரியும் ரயில் ஏற்றி விட்டதை யாரோ சொல்ல இவன் புரிந்து கொண்டு அவர்களை அழைத்து வர சொன்னான்.
அவர்கள் இவனிடம் , நங்கள் எதையும் சொல்லவில்லை. நீ நம்ப விட்டாலும் அது தன உண்மை . நங்கள் அவளுடன் ஆறுதலுக்காக மட்டுமே சென்றோம் . மற்றபடி ஒன்றுமில்லை. என்று பட்டும் படாமலும் சொன்னார்கள் .
ஆனாலும் இவன் உள்ளுணர்வு இவர்கள் எல்லா உண்மையையும் சொல்லி அவளை நம்மிடம் இருந்து பிரித்து விட்டார்கள் என்பதை முழுமையாக நம்ப தூங்கிவிட்டான்.
சென்னைக்கு சில ஆட்களை எனுப்பி வைத்தான். எவ்வளவு நாட்கள் ஆனாலும் தங்கி இருந்து அவளை தேடி கொண்டு வந்து இவன் வசம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான முன் பணமாக ஒரு லட்சம் கொடுத்தான்.
அவளை உயிருடன் கொண்டு வரவேணும் இல்ல விட்டாள் அனைத்தும் வீணாகி போய்விடும் என அவர்களை எச்சரித்தான்.
வக்கீலுக்கு போன் பண்ணினான் . அவர் உயில் மற்றும் சொத்து எல்லாம் ஏற்கெனெவே கமலி வசம் உள்ளதை சொல்லி விட்டார்.
மண்டை சூடு ஏறியது அவனுக்கு. மனம் கொந்தளிப்பில் இருந்தது. சொத்து வந்தவுடன் இவளை கொன்று விட எண்ணினான். ஆனால் இப்போ அவளையே காணவில்லை . நண்பர்கள் சிலர் பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொன்னார்கள். இவன் அவசரமாக வேண்டாம் என சொன்னான். ஏனென்றால் எல்லோருக்கும் தெரிந்தே இவள் ரயிலில் போய் இருக்கிறாள். அதனால் மக்கள் நம்மை வித்தியாசமாக பார்க்க துவங்கினால் ஆபத்து என்று விளம்பரம் செய்வது வேண்டாம் என சொன்னான்.
சென்னையில் கமலியை வேலுச்சாமியின் ஆட்கள் பிடித்தார்களா ?
விவேக்கிடம் கமலி நெருங்கினாளா ? நர்மதா கமலியை என்ன செய்தாள் ?
என வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
👌👌👌👌👌