ATM Tamil Romantic Novels

வானம் வசப்படும் – அத்தியாயம் 6

கமலி ஹெச் ஆர் மேனேஜர் உடன் சென்றாள். போர்மாலிட்டீஸ் படி அவள் செர்டிபிகேட்ஸ் அனைத்தையும் ஸ்கேன் செய்து கம்பனி  எம்பிளாய் டீடெயில்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்தாள். முகவரி கேட்ட இடத்தில இவன் வீடு முகவரியை கொடுத்தாள்.  நிரந்தர முகவரி இடத்தில் கோயம்பத்தூர்  அருகில் ஒரு கிராமம் என்று மட்டும் போட்டு இருந்தாள்.

எல்லாம் போட்டஉடன்  நிரந்தர முகவரி பற்றி  கேட்டு  எச் ஆர் மேனேஜர் முழு முகவரி போடச் சொன்னார்.   தயங்கிய படி  , “அது அவசியமா” என கேட்டாள்.
“கண்டிப்பாக மாம்.  இது பாக் கிரௌண்ட்  செக்கிங்  காக கண்டிப்பாக கேட்டார்கள். எவ்ளோ வருடங்கள் அங்கு வாழ்ந்தீர்கள் என்பதையும் போட வேண்டும்”  என சொல்ல..  “அங்கு யாரும் இல்லை இப்போது. நான்  ஒருவள் தான் அதுவும் இப்போது இங்கே இருக்கிறேனே.  இது தேவையா” என்றாள்.

சரி என்று வெளியில் காட்டிகொள்ளாமல்  ஜோஸ்யரின் வீடு முகவரியை கொடுத்தாள்.  பிறகு ஜோசியரிடம் மொபைல் போனில் இது பற்றி சொல்லி வைத்தாள்.  அவரும் செக்கிங் வரும்போது நீ இங்கு என் வீட்டில் தான் இருந்தாய் என சொல்லி விடுகிறேன் அம்மா என்று சொல்லி விட்டார்.

அவரிடம் தான் சென்னையில் இருப்பதாய் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டாள்..

சரி அம்மா பத்திரமாக இரு.. வேலுச்சாமி உன்னை தேடி கண்டு பிடிக்க சில ஆட்களை  சென்னைக்கு அனுப்பி உள்ளான். கவனமாக இரு.
முழு ஜமீனும் இப்போது அவன் கட்டுப்பாட்டில் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கவில்லை அதனால் நிறைய பேர் வேறு வேலை தேடி செல்ல ஆர்மபித்து விட்டார்கள் அம்மா.

ஏதாவது செய்து இவன் ஆட்டத்தை அடக்கினால் தான் இனி இந்த ஜமீன் நல்லா இருக்கும்.  சரி அம்மா நீங்கள் பத்திரமா இருங்கள் என சொல்லி  போன் உரையாடலை முடித்து கொண்டார்.

ஹச் ஆர் மேனஜரிடம் போனில்  விவேக் கேட்டான் . “எல்லா பார்மாலிட்டியும் முடித்து விட்டாயிற்றா.  எனக்கு அவளுடைய விவரங்கள் எல்லாம் PDF ஆக மெயில்இல் அனுப்புங்கள் “

முடிந்தது சார் … என்று சொல்லிவிட்டு அவள் விவரங்களை அவன் ஈமெயிலுக்கு அனுப்பினான்,

விவேக் எல்லாம் பார்த்தான்..  21  வயது தான்  ஆகிறது அவளுக்கு . போட்டோவை பார்த்தான்.  நல்ல தெய்வீகமான முகம் என நினைத்தான்.

சே இதெல்லாம் ஏன் நினைக்கிறேன்.  அவள் முகம் எப்படி இருந்தாள் எனக்கென்ன .. என தனக்குள் சொல்லிக்கொண்டான்.  அப்போது அவள் அங்கே வந்து விட்டு இருந்தாள்.

“கமலி உனக்கு  மேற்கொண்டு படிக்கும் எண்ணம் உள்ளதா . படிக்க விரும்பினால் நிறுவனம் அதற்கு உதவும். நீ இங்கே வேலை பார்த்து கொண்டே படிக்கவும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்,  என்ன சொல்கிறாய்”  என கேட்டான்.

“நீங்கள் சொன்னால் படிக்கிறேன் சார் ”  , என்றாள்

Appointment  letter   அவளுக்கு கொடுத்தான். அதில்பணியின் பெயர் : பர்சனல் அசிஸ்டன்ட் டு சி இ ஓ என்று இருந்தது .   சம்பளம் :  25000 கன்சாலிடேட்டட் பே என இருந்தது.

“ஹாப்பியா ”  என கேட்டான்.  ரொம்ப நன்றி என கூறினாள்.
அம்மாவிடம் சொல் என அருகிலேயே என ரூமிலேயே உனக்கு வேலை கொடுத்து இருக்கிறேன் என்று என சிரித்தான்.

என் வேலை என்ன சார் என கேட்டாள்.    என் டெய்லி ஆபீஸ் வேலைகள் என்ன என்ன எந்த நேரம் நான் யாருடன் மீட் பண்ணனும்   எனக்கு வரும் அனைத்து லெட்டர், ஈமைல்ஸ் எல்லாம் பார்த்து என் பார்வைக்கு வைக்க வேண்டும்.  எந்த மைலுக்கு என்ன ரிப்ளை பண்ணவேண்டும் என்று நான் சொல்ல சொல்ல நீ டைப் செய்து என்னிடம் காண்பித்த பிறகு அனுப்ப வேண்டும்.

எனது அனைத்து ஸ்கெட்யூல் என் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் .
நீ ஒரு டைரி மைண்டைன் பண்ணிக்கோ . என்று அவள் வேலைகளை சொன்னான்.

ஓகே சார் என்றாள் ..

என்று ஒரு லேப்டாப் கொடுக்கப்பட்டது. ஒரு சேர் மற்றும் டேபிள் கொடுக்கப்பட்டது.  அவளுக்கு ரொம்ப சந்தோஷம்.  ஏனென்றால் அவன் கூடவே இருக்கலாம் மேலும் அவன் செயல்கள் அனைத்தும் அவளுக்கு தெரிந்து விடும்.

அதுவும் இல்லாமல் எந்நேரமும் அவன் கூடவே இருக்கும் படியான வேலையும் ஆகும். பின் அவன் வீட்டிலும் அவன் கூடவே வேறு இருக்கபோகிறாள் . இதை விட பாதுகாப்பான ஒரு இடம் , வேலை நானே தேடி இருந்தாலும் கிடைத்து இருக்காது என நினைத்தாள். நான் வணங்கும் முருக கடவுள் என்னை கைவிடவில்லை என மகிழ்ச்சி அடைந்தாள். இன்று முடிந்தால் முருகன் கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து வர வேண்டும் என் எண்ணிக்கொண்டாள் .

அதற்குள் நர்மதா அங்கே வந்தாள்.  விவேக் யார் இது எங்களுக்கு எல்லாம் இன்ட்ரோ கொடுக்க மாட்டாயா என உரிமையாக அவனை ஒருமையில் அழைத்தாள்.

“இவள் கமலி .. எனது பர்சனல் அசிஸ்டன்ட். இனிமேல்  என்னை பார்க்க வேண்டுமானால் இவள் மூலம் என் அப்பொய்ன்ட்மென்ட் வாங்கவேண்டும்”  என்றதும் இவளுக்கு உள்ளே  எரிந்தது.

ஓ இவ்ளோ பவரா இவளுக்கு என வியந்தாள். “சதீஷ் அண்ணா உங்களை பார்க்க இங்கே வரலாமா   இல்லை அதற்கும் இவளிடம் கேட்கணுமா “என் கேட்டாள்.

“ஓ அவன் என்னுடைய நண்பன் மேலும் கம்பனியின் பார்ட்னர். எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்.  அனாலும் நான் பிரீயாக இருக்கிறேனா என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என இவளுக்கு தெரியும் என்பதால் இவள் மூலம் அப்பொய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணி வந்தால்  அந்த நேரத்திற்கு வந்தால் போதும். ” என்றான்

,கமலி , இது நர்மதா .. என் நண்பன் சதீஷின் தங்கை மற்றும் இந்த கம்பனியில் ப்ராஜெக்ட் மேனேஜர் என்றான்.

“நைஸ் டு மீட் யு” என்று கமலி கை கொடுத்தாள் . இவள் கை கொடுக்காமல் .. நான் வரேன் விவேக் லஞ்ச் டைம் ஆகி விட்டது என கூறிவிட்டு சென்று விட்டாள்.

ஓகே கமலி வா.. அம்மா இன்றைக்கு லஞ்ச் கு வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார்கள் என்றான்.

நானுமா வீட்டுக்கு .. என தயங்கினாள்

“வேறு எங்கு சாப்பிடுவாய்  .. வீட்டில் அம்மா உனக்காக இன்று விசேஷமா சமைத்து உள்ளதாக கூறினார்கள்” என்றான்

நர்மதா ,இவளும் அவனும் ஒன்றாக செல்வதை பார்க்க பிடிக்கமால் உள்ளுக்குள் வெறுப்பு உணர்வில் வெந்து போனாள்.  

நர்மதாவுக்கு விவேக்கின் மேல் ஒரு கண். அவனை திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் கிட்டே போனால் கூட விவேக் இவளை ஏரெடுத்து பார்த்து பேச மாட்டான்.

நர்மதாவின் தோழி சங்கரி நர்மதாவின் எண்ண ஓட்டத்தை அறிந்தவள் . அவள் மேலும் தூபம் போட்டாள். “அடியே என்னடி இது அவள் அவனோடு ஒன்றாக ஒரே ரூமில் இருக்க போகிறாள். மதிய உணவுக்கு வேறு அவன் வீட்டுக்கே அவனுடனேயே செல்கிறாள். அவள் வேறு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறாள். யாரையும் ஏறெடுத்து பார்க்காத இவன் இவளிடம் மட்டும் தானே வலிய சென்று பேசுகிகிறான். நீ உஷாராக இருக்க வேண்டுமடி நர்மதா இல்லை என்றால் அவள் உன்னை முந்தி கொண்டு அவனை திருமணம் செய்து கொண்டு போய் விட போகிறாள். ஜாக்கிரதை ” என்று ஏற்றி விட்டாள்.

“இன்றே அண்ணாவிடம் சொல்லி விவேக்கின் அம்மாவிடம் பேச சொல்லுகிறேன். விவேக்கின் அம்மாவிற்கு சதீஷை மிகவும் பிடிக்கும். நல்ல குணம் கொண்ட பையன் என வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார்கள். விவேக்கின் ஜாதகத்தை கேட்டு வாங்க சொல்ல போகிறேன். பொருத்தம் பார்த்து விட்டு திருமணம் பற்றி பேச சொல்ல போகிறேன்” என்றாள்.

“சரி பொருத்தம் இல்லாமல் போய் விட்டால் என்ன செய்வது ” எனக் கேட்டாள் சங்கரி

“விவேக்கின் ஜாதகத்திற்குப் பொருத்தமாக என் ஜாதகத்தை திருத்தி பொருந்தும் படி மாற்ற சொல்லி கொடுக்க வேண்டியது தான். ” என்றாள்

முதலில் விவேக் அம்மாவின் எண்ணப்போக்கு அறிய வேண்டும். தாமதிக்காமல் சதீஷிடம் உடனே நர்மதா இது பற்றி பேசிவிட்டாள்.

“சதீஷும் நான் இன்றே விவேக் வீட்டுக்கு செல்கிறேன் அவன் அம்மாவிடம் பேசுகிறேன். கவலையை விடு. நான் இதை முடித்து விடுகிறேன் ” என்றான்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. இதை மட்டும் நீ முடித்து கொடுத்து விடு அதுவே நீ என் வாழ்க்கைக்கு செய்யும் அதிக பட்ச உதவி. உன்னிடம் இருந்து இது ஒன்றை தான் நான் எதிர்பார்க்கிறேன்.”என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டாள்.

“சரி நர்மதா என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா. இது முடிந்தது போல தான்.” என்றான்.

ஒரு வேளை இரண்டு நாட்களுக்கு முன்னால் முயற்சித்து இருந்தால் இது முடிந்து இருக்கலாம். ஆனால் இப்போது சதீஷுக்கு தெரியாது அதற்கு வாய்ப்பே இல்லை என்பது .ஏனென்றல் விவேக்கின் அம்மாவின் மனதில் கமலி சிம்மாசனம் போட்டு அல்லவா அமர்ந்து இருக்கிறாள் .
விவேக்கும் இவளை பற்றி லேசாக நல்ல எண்ணம் அவன் மனதில் குடி கொண்டு விட்டது.இனி யார் எந்த முயற்சி செய்தாலும் அதை மாற்ற முடியாது என்பது தெரியாமல் சதிஷும் நர்மதாவும் திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

பார்ப்போம் இவர்கள் திட்டம் நிறைவேறியதா என்று .

==

விவேக்கின் வீடு மதிய உணவு நேரம்.
விவேக் , கமலி டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தனர்.

அம்மா கமலியிடம் உணவு பரிமாறிக்கொண்டு ” என்னம்மா வேலை கிடைத்ததா? என்ன சொல்லுகிறான் இவன் ..” என்று கேட்டாள்.

கமலி அதற்கு ” அம்மா எனக்கு சார் வேலை கொடுத்து இருக்கிறார் .. அவருக்கு பெர்சனல் அசிஸ்டென்ட் . அவர் ரூமிலேயே எனக்கு டேபிள் போட்டு உள்ளார்களாம்மா. எப்போதும் சாருடனே இருக்கும் படியான வேலை. சம்பளம் 25000 ருபாய் அம்மா ” என்று சொன்னாள் இவனை பார்த்த படியே .

அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாள், இவனுடனேயே இருக்கும் படியான வேலை என்பதால். ஏனென்றால் இருவரும் நெருங்கி இருந்தால் இவன் மனதில் இவளை பற்றி புரிதல் வரும். கண்டிப்பாக இவளின் குணம் தெரிய வரும். இவள் மேல் அவனுக்கு நம்பிக்கை பிறக்கும்.

விவேக்கிடம் ” ரொம்ப தேங்க்ஸ் டா விவேக் . எனக்கு இது போதும். மனம் நிறைந்து இருக்கிறதடா.. ” என கண்ணீருடன் சொன்னாள்.

அம்மாவின் அழுகையை பார்த்த விவேக் ..” என்னமா இது நீங்கள் கட்டளை இட்ட பிறகு நான் இவளுக்கு வேலை கொடுக்காமல் இருக்க முடியுமா .. ” இதற்கு போய் அழுகிறீர்கள் என அம்மாவை தேற்றினான்.

இவனின் அம்மா பாசத்தை பார்த்ததும் இவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் சாப்பிட்டு அலுவலகம் கிளம்பி விட்டனர். காரில் போகும் போது இவள் முன் சீட்டில் அவன் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.

அப்போது கேட்டான் .. அம்மாவிடம் என்ன சொக்குபொடி போட்டாய் . அம்மா உன்னிடம் மயங்கி கிடக்கிறார்கள் இப்படி.

இவள் அவனை பார்த்து நாணத்துடன் சிரித்தாள் . இவள் அவனிடம் அம்மாவிடம் ரொம்ப பாசமாக இருக்கிறீர்கள். அப்பா எங்கே இருக்கிறார்கள் என்றார்.

அப்பா பற்றி கேட்டதும் இவன் முகம் இருண்டது , சமாளித்து அது ஒரு பெரிய கதை .. இப்போது சொல்ல முடியாது. சுருக்கமா சொல்ல வெண்டுமானால் அவர் வேறு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவ்வளவு தான்.” என்றான்.

“ஓ! ஐ ஆம் சாரி சார் ” என்றாள் .

“இட்ஸ் ஓகே .. சரி நீ உன்னை பற்றி ஒன்றுமே சொல்லவில்லயே .. ” என்றான்.

இவள் தன் அப்பா இறந்து போனவுடன் ஊரை விட்டு தப்பி வந்ததையும் , வேலுச்சாமி தன்னை வலை வீசித் தேடி கொண்டு இருப்பதையும் சொன்னாள். தான் அவனிடம் மாட்டினால் என்னை கொன்று விட்டு தன் ஜமீன் சொத்துக்களை அபகரிப்பதே அவன் எண்ணம் என்றாள்.

ஓ அது தான் நீ முதல் நாள் என்னிடம் ஒரு உதவி என்று கேட்க வந்தாயோ .. இப்போது தான் விளங்குகிறது எனக்கு எல்லாமும் என்றான்..

“ஆமாம் சார்.. ” என்றாள். அதற்குள் அலுவலகம் வந்து விட , இருவரும் ஒன்றாகவே பேசி கொண்டே உள்ளே அவனுடைய கேபினுக்குள் வந்தனர்.

இதை நர்மதா உள்ளக்குமுறலுடன் பார்த்தாள். கண்களாலேயே அவர்களை எரித்து விடுமாறு பார்த்தாள்.

—- 

ஹச் ஆர் மேனேஜர் இளங்கோவை தொலைபேசியில் அழைத்தான். அவன் வந்ததும் .. “இன்று மாலை 4 :30 க்கு நம் அலுவகத்தில் மீட்டிங் ஹாலில் அனைவரையும் கூட்டுங்கள். ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட வேண்டும்.” என்றான் . அந்த கம்பெனியில் 120 பேர் வேலை பார்த்தனர்.

கமலி ” நான் சொல்ல சொல்ல நீ அதை குறிப்பு எடுத்து அதை ஒரு நல்ல ப்ரசென்டேஷனாக மாற்றி தர முடியுமா உன்னால்..” என்று கேட்டான் .

ஓ. எஸ் சார் என்றாள் .

இவன் சொல்லுவதை எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பெடுத்தாள். இவள் ஷார்ட் ஹாண்டில் தமிழக அளவில் முதல் இடத்தில பாஸ் செய்து சர்டிபிகேட் வைத்துள்ளாள். அது இப்போது உதவிகரமாக இருந்தது.

சொல்லியதை எழுதிக்கொண்டு வந்ததை ஒரு பவர் பாய்ன்ட் ப்ரசெண்டேஷனாக மாற்றி கொண்டு போய் கொடுத்தாள்.

இன்னும் ஒரு புதிய கிளை தொடங்க இருப்பதாலும் அங்கே 200 பேர் தேவை படுவதையும் கம்பெனி வளர்த்து வருவதையும் மிக அழகாக பிக்ச்சரைசேஷன் பண்ணி கொண்டு வந்தாள்.

கம்பெனி கிரௌத் பற்றி முதல் ஸ்லைடில் சொல்லி இருந்தாள். இயர் வைஸ் டர்ன் ஓவர் , ப்ரோபிட்.

மார்க்கெட்டில் கரண்ட் ஸ்டாண்ட் அபௌட் தி கம்பெனி ..

எக்கனாமிக்ஸ் டைம்ஸில் கம்பெனி பற்றி வந்த செய்திகள் மற்றும் இவனுடைய லாஸ்ட் ஸ்பீச் ஆன் தி கிளைண்ட் மீட்டிங். எல்லாமும் இவன் சொல்லாமலே இணைத்து இருந்தாள்.

அவன் ஈமைலுக்கு அனுப்பி விட்டாள். எல்லாம் ஒரு ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டாள்.

இவள் அனுப்பிய ப்ரெசன்டேஷனை பார்த்தவன் , இவளை கூப்பிட்டு பாராட்டினான். “ஒண்டர்புல் ஜாப் . வெல் டன் கமலி . கீப் இட் அப் ” என்றான்

ஒரு சிறு கரெக்ஷனுடன் அதை ஹச் ஆர் மேனேஜருக்கு அனுப்பி ப்ரொஜெக்டரில் போட சொன்னான்..

சரியாக 4 :30 மணிக்கு அனைவரும் வந்த உடன் அனைத்தையும் அறிவித்து விட்டு ப்ராஜெக்ட் டீம்ஸ் கு பாராட்டுதல்களை தெரிவித்து விட்டு சாலரி இன்க்ரிமெண்ட் பற்றி சொன்னான்.

அனைவரும் ஓ என்று கூச்சலிட்டார்கள் மகிழ்ச்சியில் ..
மற்றொரு கிளை கூடிய விரைவில் DLF போரூர் வளாகத்தில் அமைய விருப்பத்தையும் அறிவித்தான்.

எல்லாம் முடித்து கமலிக்கு நன்றி சொன்னான். குறுகிய இடைவெளியில் இந்த ப்ரசென்டேஷனை தயாரித்து கொடுத்ததற்கு ..
எல்லோரும் கமலிக்கு கை தட்டினார்கள். நர்மதாவிற்கு பொறுக்கவில்லை .. நகத்தை கடித்தாள்.

மீட்டிங் முடித்து விட்டு அனைவர்க்கும் ஸ்வீட் , காரம் காபி கொடுத்தார்கள்.

6 மணிக்கு அவன் கிளம்பி கொண்டு இருந்தான். “என்னுடன் வருகிறாயா நேரமாகுமா” என்றான்.

இல்லை எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடித்து விட்டு வருகிறேன் சார் என்றாள்

இவனுக்கு அவளுடன் செல்ல வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் கட்டு படுத்திகொண்டு , ஓகே இட்ஸ் ஆல்ரைட் என்றான்.

“எங்கே என்ன வேலை வெளியில் ” என கேட்க வந்ததை கட்டு படுத்தி கொண்டான்.

அவன் ஒரு பெரு மூச்சோடு சென்றதை பார்த்தவள் .. சே அவனை ஏமாற்றி விட்டோமோ .. என்னுடன் வருகிறாயா .. என்றவனிடன் ” நோ ” என்று சொன்னது தப்போ என சிந்தித்தாள். பிறகு நமக்கு எதற்கு எப்போதும் அவனுடன் சென்று கொண்டு இருக்க முடியுமா .. நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்து கொண்டால் தான் நல்லது என்றும் நினைத்தாள்.

அவன் காரை எடுத்து கொண்டு சென்றதை பார்த்தாள். பிறகு இவள் ஆட்டோ எடுத்து கொண்டு பெசன்ட் நகரில் உள்ளே அறுபடை முருகன் ஆலயத்திற்கு சென்று திருச்செந்தூர் முருகனுக்கு அர்ச்சனை செய்தாள்.

சிறிது நேரம் எலியட்ஸ் பீச்சில் அமர்ந்து இருந்தாள். பின் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றாள்.

வீட்டில் சதிஷ் , விவேக் , அம்மா மூவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.

இவள் வந்ததும் அம்மா இவளை சதீஷிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

சதிஷ் இவள் யார் உங்கள் உறவா என்று அம்மாவிடம் கேட்டாள். உறவு இல்லை .. தெரிந்தவள் என்று சொன்னார்கள்.

விவேக் இவள் எங்கே சென்று விட்டு இவ்வளவு தாமதமாக
இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வருகிறாள். என தனக்குள் குழம்பி கொண்டு இருந்தான்.

சாப்பிட வாம்மா நீயும்.. ” என்றாள் அம்மா .

சதிஷ் சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் போய் ” நர்மதாவிற்கு வரன் தேடுகிறோம். விவேக் ஜாதகத்தை கொடுங்கள் அம்மா பொருத்தம் பார்த்து பொருந்தி இருந்தால் மேற்கொண்டு பேசலாம் ” என கூறினான்.

“விவேக்கிடம் பேசி விட்டாயா” என்று அம்மா கேட்டாள். மேலும் இப்போது திருமணமே வேண்டாம் என்று சொல்லுகிறான் இதோ பார் நன்கு பொருந்திய நான்கு ஜாதகங்கள் .. எல்லாமே நல்ல கோட்டீஸ்வர பெண்கள் . அழகான பெண்கள் . எதையுமே அவன் பார்க்காமலேயே இப்போது திருமணமே வேண்டாம் என்கிறான் டா சதிஷ்.. நீ அவனிடம் பேசி விட்டு என்னிடம் வாடா .. நானே பொருத்தம் பார்த்து கட்டி வைக்கிறேன்.” என்றாள்.

சதீஷுக்கு சரி அம்மாவிடம் பேசி பலன் ஒன்னும் இல்லை என்று புரிந்து விட்டது. நேரே விவேக்கிடம் சென்றான்.

விவேக் ரூமில் தன லேப்டாப்பில் ஈமைல்ஸ் பார்த்து கொண்டு இருந்தான். மேலும் புதிய ஆட்களை தன நிறுவனத்திற்கு தேர்ந்து எடுப்பதற்காக வந்த விண்ணப்பங்களை ஷார்ட் லிஸ்ட் பண்ணி கொண்டு இருந்தான்.

“டேய் விவேக் நீ எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய். அம்மா ரொம்ப வறுத்த பட்டு பேசுகிறார்களடா ..”என்றான்.

“டேய் உனக்கு தான் தெரியுமே நான் நம் நிறுவனத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த பிறகு தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்று .. உன்னிடம் ஏற்கெனெவே சொல்லி இருக்கிறேனே டா.. “

சரி நான் இப்போது ஓப்பனாக நான் கேட்கிறேன் . நர்மதா உன்னை விரும்புகிறாள் . உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசை படுகிறாள் . நீ என்ன சொல்லுகிறாய் .. என கேட்க

ஓ இது வேற யா .. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் .. நர்மதா நல்ல பெண் தான் என்ன கொஞ்சம் முரட்டு பிடிவாதம் உள்ளவள். உன் மேல் அவளுக்கு கொள்ளை ஆசையடா.. நீ கிடைக்க விட்டால் … நினைத்து பார்க்கவே கஷ்டமா இருக்கு டா என்றாள்.

இது என்ன புது வித மிரட்டல் போல இருக்கிறதே என மனசுக்குள் நினைத்தான்.

அவளிடம் சொல் “அவனுக்கு திருமணத்தை பற்றி யோசிக்க இப்போது நேரம் இல்லை என்று . வேண்டாம் வேண்டாம் நானே அவளை நாளை அலுவலகத்தில் பார்த்து பேசி கொள்கிறேன். நீ கவலை படாதே” சதிஷ் என்றான் .

“சாரி டா உன்னிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு பேசி விட்டேன் ” என்றான் சதிஷ் ..

நோ பிரோப்ளேம் டா சதிஷ் . மனதில் உள்ளதை பேசி விட்டால் தான் நல்லது என்றான்.

கமலி யாரடா அவள் ஏன் இங்கே தங்கி இருக்கிறாள் என்று கேட்டான் .

“அது அம்மாவிடம் கேட்க வேண்டிய கேள்வியடா .. அம்மா தான் அவளுக்கு நம் அலுவலத்தில் ஒரு வேலை கொடுக்க சொன்னாள். அதன் படி வேலை கொடுத்தேன். இங்கே தான் அவள் தங்கி கொள்ளுவாள் என்று ஏற்கனேவே என்னிடம் உறுதியாக சொல்லிவிட்டாள். அதனால் உன் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும் ” என்று சொல்ல .

உனக்கு கமலி மேல் ஏதும் விருப்பம் இருக்கா.. என்று கேட்க

டேய் சுத்தமாக இல்லை அவளை பற்றி நான் யோசிப்பதே இல்லைடா .. நான் முழு நேரமும் நம் நிறுவன வளர்ச்சி பற்றியே யோசித்து கொண்டு இருக்கிறேன். அதனால் இந்த காதல் , திருமணம் இதெற்கெல்லாம் என்னால் நேரம் ஒதுக்க முடியாது டா .. என்றான் வெளிப்படையாக..

ஹ்ம்ம்ம் .. என பெருமூச்சு விட்டான் . இவனை அந்த கடவுளே வந்தாலும் மற்ற முடியாது போல என நினைத்து கொண்டு ..

ஓகே டா நான் கிளம்புகிறேன் . பை என்று வெளியில் சென்று விட்டான்.

நேரம் பத்து மணி .. அம்மா படுத்து விட்டாள்.
கமலியின் ரூமில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது .

என்ன செய்கிறாள் இவளவு நேரம் தூங்காமல் என பார்த்தான் . நான் ஏன் இவளை பற்றி நினைக்கிறன். இவள் என்ன செய்தால் எனக்கென்ன .. ஒரு வேளை சதிஷ் சொல்லுற மாதிரி கமலியின் மீது எனக்கு ஏதும் விருப்பம் ஏற்பட்டு விட்டதா … என்ன .. என தன்னையே கேட்டுக்கொண்டான். சே சே அதெல்லாம் இல்லை .. என்று தலையை ஆட்டினான். அவன் மனம் அவனிடம் கேள்வி கேட்டது அப்புறம் ஏன் இன்று மாலை அவள் உன்னுடன் வருவதற்கு நோ சொன்னவுடன் மனம் வருந்தி வீட்டுக்கு வந்தாய் .. என கேட்டது.. அவள் நம் வீட்டில் நம்முடன் தங்கி இருக்கும் ஒரு பெண் அதுவும் பாதுகாப்புக்காக .. அதனால் ஏற்பட்ட பரிதாபத்தில் தானே ஒழிய .. வேறு ஒன்றும் இல்லை என்று தன்னை தானே சமாளித்து கொண்டான்.

வந்து படுத்து விட்டான் தான் அறையில் …

காலை 4 மணிக்கு எழுந்து விட்டு இருந்தாள் கமலி ..
இன்று விவேக்கிடம் தான் மேற்கொண்டு படிப்பை தொடர விரும்புவதை சொல்லி நிறுவனத்தின் அனுமதி கேட்க நினைத்தாள்.. அதற்காக தன் விண்ணப்பத்தை எழுதினாள். நிறுவனத்தின் இணையத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தன் நிறுவன ஈமைலுக்கு அனுப்பிக்கொண்டாள்.

பிறகு குளித்து விட்டு பூஜை அறையையை சுத்தம் செய்தாள். பூஜைக்கு தேவையான விளக்குகளை கழுவி காய வைத்து பொட்டு வைத்தாள். என்னை ஊற்றி விளக்கு ஏற்றினாள். அம்மாவும் அப்போது குளித்து விட்டு வந்தாள்.

கமலி பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து இருந்ததை பார்த்தாள். மங்களகரமாக இருந்தது.

பூக்களை சுவாமி படத்துக்கு வைத்து விட்டு .. கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றி புகைய விட்டாள். வீடே நறுமணம் கமழ்ந்தது.

அம்மாவை பார்த்ததும் வாருங்கள் அம்மா .. நீங்கள் பூஜை செய்யுங்கள் நான் சமையலை பார்த்து கொள்கிறேன் என்றாள்.

கமலி அம்மாவின் மனதில் எங்கோ சென்று விட்டு இருந்தாள். இவளை நமக்கு கடவுள் தான் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறான் என்று நம்பினாள். இவளை தவிர வேறு யாரையும் மருமகளை நினைத்து கூட இப்போது முடிவது இல்லை.

அவள் இஷ்ட தெய்வமான பெருமாளிடம் , பெருமாளே இவளே எனக்கு மருமகளாக அமைய வேண்டும் என பிரார்த்தித்தாள் .

விவேக் வழக்கம் போல 4 மணிக்கு பீச்சுக்கு கிளம்பி ஏழு மணிக்கு திரும்பி விட்டான்.
அதற்குள் கமலி சமையலை முடித்து விட்டாள்.
அம்மா பூஜை முடித்து வர இவள் காபி கொடுத்தாள். மிகவும் சுவையாக டிகாஷன் ஸ்ட்ராங்காக இருந்தது.

சுகர் அளவோடு பொட்டு இருந்தாள். நாவிற்கு இதமாக இருந்தது அம்மாவுக்கு.

இவளும் காபி எடுத்து கொண்டு வந்து அன்றைய நியூஸ் பேப்பர்களை படித்து கொண்டு இருந்தாள்.

அதற்குள் விவேக் குளித்து ரெடி ஆகி வர .. அவனுக்கும் காபி கொண்டு பொய் கொடுத்தாள் . அவனும் வாங்கி கொண்டு டைனிங் டேபிளில் பேப்பர் பார்த்தான்.

இருவரும் டைனிங் டேபிளில் பேப்பர் படிப்பதை அம்மா பார்த்தாள். அவளுக்கு சந்தோசம் தாங்கவில்லை . கடவுளே இந்த காட்சி இந்த வீட்டில் நிலைத்து இருக்க வேண்டும் என கருதினாள்.

பேப்பரில் இவன் நிறுவனதில் வேலைக்கான விளம்பரம் வந்து இருந்தது. மேலும் சிறு செய்தியில் நிறுவன விரிவாக்கம் செய்வதாகவும் புதிய ப்ராஜெக்ட் ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆனது பற்றியும் எழுதி இருந்தார்கள்.

இவள் அதை பார்த்தாள் . இவனிடம் காண்பித்தாள். மேலும் மத்திய அரசாங்கத்தின் டெண்டர் ஒன்று வெளி ஆகி இருந்தது. அது ஒரு நியூ ப்ராஜெக்ட் டெண்டர். கொட்டேஷன் அனுப்ப வேண்டிய தேதி இன்னும் 5 நாட்கள் நீட்டித்து இருப்பதாக .. அது பழைய டெண்டர் .. கடைசி தேதி நீட்டித்து இருப்பதற்கான அறிவிப்பு தான் அந்த விளம்பரம்.

அதை இவனிடம் காண்பித்தாள். இதற்கு அப்ளை செய்யலாம் நீங்கள் என்றாள்.

அதை பற்றி இருவரும் டிஸ்கஸ் செய்தார்கள். நம்மை விட பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் போட்டியில் என்றான்.

பரவாயில்லை நாமும் முயற்சி செய்வோமே என்றாள்..

சரி நீ ஆசை படுகிறாய் .. அதற்கான அனைத்தும் நீ தயார் செய் . இன்று அலுவலத்தில் உன் வேலை அது தான் என்றான்.

ஓகே சார் என்றாள் குதூகலமாக .

ஜாமீன் வீடு .

வேலுச்சாமி கடுப்பில் இருந்தான் .. இன்னமும் ஒரு தகவலும் இல்லையே இவளை பற்றி .. என்று கவலை பட்டான்.

தன் நண்பர்கள் குழு உள்ள வாட்ஸ் அப்பில் .. என்ன ஆச்சு ஒரு தகவலும் இல்லையே என கேட்டான்

விரைவில் தேடி விடுவோம் . சென்னையில் ஒரு ஆளை முகவரி இல்லாமல் தேடுவது என்பது மிக பெரிய காரியம் .
அவ்வளவு எளிதான காரியம் இல்லை நண்பா .. என நண்பர்கள் பதில் சொன்னார்கள்..

சரி சரி புரிகிறது .. லேடீஸ் ஹாஸ்டல் லிஸ்ட் எடுத்து கொண்டு அந்த இடங்களுக்கு அருகில் சென்று பாருங்கள். காலை 7 இலிருந்து 9 மணி வரை தேடுங்கள் நண்பர்களே

கண்டிப்பாக சிக்கி விடுவாள் என்று சொன்னான் வேலுச்சாமி.

.டெண்டர் கிடைத்ததா, நர்மதாவின் புதிய திட்டம் என்ன .. அம்மாவின் ஆசை நிறைவேறுமா .. வேலுச்சாமியின் நபர்களிடம் கமலி சிக்குவாளா ..  போன்ற கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ..

 

 

 

1 thought on “வானம் வசப்படும் – அத்தியாயம் 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top