நர்மதா வீடு
சதிஷ் நர்மதாவிடம் , ” இதோ பார் , நீ நினைப்பது போல் அவன் இல்லை.. அவன் யாரையும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை. அவன் முழு மூச்சும் நிறுவனத்தின் முன்னேற்ற்றத்திலேயே இருக்கிறது. இந்த காதல், திருமணம் என்பது பற்றில் எல்லாம் அவன் நினைப்பதற்கு நேரமே இல்லை அவனுக்கு. அவன் அம்மாவே அவனை முதலில் திருமணத்திற்கு நான்கு வரன் மிகப்பெரிய கோட்டீஸ்வர பெண்களின் வரங்களை என்ன என்று பார்க்காமலேயே அவன் மறுத்து இருக்கிறான். மேலும் நீ அவனை முதலில் திருமணத்திற்கு சம்மதிக்க வை அப்புறம் நான் நர்மதாவையே கட்டி வைக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். ” என்றான்.
நான் நேரே அவனிடமும் கேட்டுவிட்டேன் .. நீ அவனை விரும்புவதையும் சொன்னேன். அதற்கு அவன் , ” நானே அவளிடம் அலுவலகத்தில் நேரிலேயே பேசிக்கொள்கிறேன், நீ கவலை பட வேண்டாம் சதிஷ் ” என கூறி என்னை அனுப்பி வைத்தான். அதனால் நீ இன்று அவனிடம் வெளிப்படையாக பேசி விடு என்றான்.
சரி அண்ணா .. என்றாள்.
விவேக் அலுவலகம்
காலை 10 மணி , வரவேற்பாளினி உஷா விடுமுறை முடிந்து அன்று தான் ஆபீஸ் வந்திருந்தாள்.
விவேக்கும் , கமலியும் ஒன்றாக வருவதை பார்த்த அவள் கொஞ்சம் திகைத்தாள். என்னடா இது ஒரு மூன்று நாட்கள் லீவு எடுத்து திரும்ப வருவதற்குள் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன. என நினைத்து கொண்டாள்.
பிறகு கமலி அவளிடம் வந்து ” உஷா நான் இப்போது சாருக்கு பி.ஏ வாக அப்பொய்ண்ட் ஆகி விட்டேன். ” சார் வீட்டில் தான் அன்று தங்கினேன். இப்போதும் அங்கே தான் உள்ளேன். சாரின் அம்மா என்னை அங்கேயே தங்கிகொள்ள அனுமதி கொடுத்து விட்டார்கள்”. என்றாள்
இவள் காங்க்ரத்ஸ் கமலி .. என்றாள்.
கமலியும் உஷாவும் காபி குடிக்க சென்றார்கள்
அப்போது நர்மதாவும் அங்கே இருந்தாள். நர்மதாவுக்கு கமலி குட் மோர்னிங் மாம் என்று விஷ் பண்ண .. நர்மதாவும்” குட் மோர்னிங் கமலி .. ஆமாம் நீ விவேக் வீட்டில் தங்கி இருப்பதாக என அன்னான் சதிஷ் சொன்னான் அப்படியா” என்றாள் .
ஆமாம் மாம் சார் அம்மா என்னை வெளியில் தங்க வேண்டாம் நீ எனக்கு துணையாக இங்கேயே இருந்து கொள் என்று சொல்லி விட்டார்கள். என்றாள்.
ஆமாம் விவேக்கை எப்படி நீ அறிவாய்.. முன்பே விவேக்கை தெரியுமா ? எப்படி பழக்கம் என்று கேட்க இவள் தனக்கு மூன்று நாட்கள் முன்பு நடந்தவைகளை கூற .. “ஓஹ் கடவுளே .. நல்ல வேலை எதுவும் ஆகவில்லை..” என அவள் பரிதாப பட்டாள்.
விவேக் கேபினுள் நர்மதாவும் கமலியும் நுழைய .. விவேக் கமலியிடம் “கொஞ்சம் வெளியில் வெயிட் பன்னு.. நான் நர்மதாவிடம் கொஞ்சம் பெர்சோனாலாக பேச வேண்டும்” என்றான்
என்ன நர்மதா சதிஷ் என்னிடம் சொன்னான் நீ என்னை விரும்புவதாகவும் திருமணம் பற்றியும் பேசினான்..
“லுக் நர்மதா ! நான் இது வரை திருமணம் என்று நினைத்து கூட பார்க்க வில்லை. என முழு மூச்சும் இப்போது நிறுவனத்தை நிலை நிறுத்தி நன்றாக வேரூன்ற செய்ய வேண்டும். ” அது வரை என்னால் திருமணத்தை பற்றி யோசிக்க முடியாது.. என்றான்.
அதற்கு அவள் “சரி எங்கேஜ்மென்ட் மட்டும் பண்ணிக்கொள்ளலாமே இப்போது ” என்றாள்
அது சரிப்பட்டு வராது நர்மதா என்றன் .. மேலும் இது பற்றி நான் யாசிக்க வேண்டாம். இன்று இப்படி யோசிப்போம் நாளை வேறு முடிவு எடுக்கும் படி ஆகக்கூடும். “
அதனால் நீ பிரீயாக இரு .. வேலையில் கவனம் செலுத்து என்றான்.
மேலும் நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டாலும் எனக்கு ஒரு ப்ரோப்ளேமும் இல்லை. நான் இப்போதைக்கு திருமணம் என்ற முடிவிற்கு வரவில்லை. அது தானாய் அமையும் பொது அமையட்டும் என்றான்.
அவனது தெளிவான பேச்சு நர்மதாவிற்கு பிடித்து இருந்தது..
சாரி விவேக் உன்னை மிகவும் டிஸ்டர்ப் செய்து விட்டேன் என்றாள்.
இட்ஸ் ஓகே! மனதில் உள்ளதை பேசி விட்டால் பிரச்சனையே இல்லை என்றான்
“நர்மதா, நீ எதுவும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாதே , திருமணம் என்பது தானாய் அமையும் . உன் அழகுக்கு என்னை விட பெரிய கோட்டீஸ்வர வரன்கள் அமையும். காட் பிளஸ் யு” என்றான்.
ஹ்ம்ம்.. என சிரித்தாள்.
விவேக் நான் இப்போது தெளிவாகி விட்டேன் .. மேனி தேங்க்ஸ் என்றாள்
சதீஷுக்கு போன் பண்ணினாள் .. விவேக் பேசினான் .. நான் இப்போது மிக தெளிவாக இருக்கிறேன். நீ கவலை கொள்ளாதே அண்ணா ..
“உன்னையும் கஷ்ட படுத்தி விட்டேன் ” என்றாள்.
இட்ஸ் ஓகே நர்மதா உன் சந்தோஷம் தான் முக்கியம் .. மனதை லேசாக விடு..
நர்மதா வெளியில் வந்ததும் கமலி உள்ளே போனாள்.
கமலி நான் கொஞ்சம் வெளியில் சில முக்கிய வேலையாக போகிறேன் .
வருவதற்கு தாமதமானால் நீ ஆட்டோ எடுத்து கொள். வீட்டிற்கு போய் லஞ்ச் சாப்பிடு. எனக்கு வெயிட் பண்ண வேணாம். அம்மாவிடமும் சொல் நான் வர இரவு வெகு நேரம் ஆகலாம். என்றான்.
சார் புதிய கிளைக்காக DLF ஆபீஸ் போகணும். DLF மேனேஜ்மென்ட் அக்ரீமெண்ட் கோப்பி அனுப்பி உள்ளார்கள் என்றாள்.
ஓகே குட் நாளை போகலாம் என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.
இவள் டெண்டர் விஷயமாக அனைத்தும் தயார் செய்ய ஆர்மபித்தாள்.
அனைத்து போர்ம்ஸ்களும் டௌன்லோட் செய்து ரெடி செய்து இவன் சைனுக்காக அவன் டேபிளில் வைத்துவிட்டாள். வாட்சப்பில் அதன் சாப்ட் கோப்பி அனுப்பி வைத்தாள். இதை முடிக்கவே அவளுக்கு மலை 5 மணி ஆகிவிட்டது. லுஞ்சுக்கு கூட வீட்டுக்கு செல்லவில்லை. அம்மாவிடம் போன் செய்து இங்கேயே ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டேன் என்றாள்.
இவள் ஆட்டோ பிடித்து 6 மணிக்கு மேல் வீட்டிற்கு போனாள்.
அம்மா சூடாக காஃபீ கொடுத்தாள். தலை வலியாக இருந்தததால் குடித்து விட்டு படுத்து விட்டாள்.
அம்மாவிடம் விவேக் வெளி வேலையா போய் இருக்கிறார் வர தாமதமாகும் என சொல்ல சொன்னாரம்மா என்றார் சுறதே இல்லாமல் .
என்ன ஆயிற்று இவளுக்கு .. ஒரு சுறுசுறுப்பா இல்லையே இவளிடம்..
அவன் இல்லாமல் இன்று ஆபீஸ் இவளுக்கு போர் அடித்தது.
“கமலி உன் முகம் ஏனம்மா வாடி கிடக்கு” என கேட்டாள். “என்ன கவலை உனக்கு . ஏதும் ஜமீன் ப்ரோப்ளேமா” என கேட்டாள்.
“ஓஹ் அப்படியா அம்மா ஒன்றுமில்லையே .. நான் நல்லாத்தானே இருக்கிறேன்” என்றாள்.
விவேக் வந்தால் சரி ஆகிவிடுமா.. என சிரித்தாள் அம்மா.
பொங்கல் அம்மா .. என வெட்கப்பட்டாள்.
“சும்மா சொன்னேன் மா.. சரி உனக்கு விவேக்கை பிடித்து இருக்கிறதா ..
அதை மட்டும் என்னிடம் சொல்” என்றாள்.
“எனக்கு உன்னை இந்த வீடு மருமகளாய் பார்க்க ஆசையாக உள்ளது .ஆனால் அது கடவுள் கையில் தான் உள்ளது.” என தான் ஆசையை வெளிப்படுத்தினாள்.
உங்கள் பயனிடம் கேளுங்கள்… என்றாள்
அவன் தான் இப்போது திருமணமே வேண்டாம் என்று இருக்கிறரானே ” என்றாள் அம்மா
ஓ அப்படியா ..
நர்மதாவும் அவனை விரும்புவதாக அம்மா சொல்ல .. ஓ அது தான் இன்று இருவரும் தனியே பேசி கொண்டார்களோ என நினைத்தாள்.
அம்மா கமலியிடம் ” நான் தூங்க செல்கிறேன் .. நீ அவன் வரும்போது விழித்து இருந்தால் அவனுக்கு தோசை வார்த்து போடம்மா..” என்றாள்.
மணி பத்து அடித்தது .. இவனை இன்னும் காணவில்லையே .. என நினைத்து கவலைப்பட்டாள்.
10 :30 க்கு வந்தான் . கமலி அவனிடம் வந்து தோசை வார்த்து தரட்டுமா .. அம்மா தூங்க போய் விட்டார்கள்.. என்றாள்
“வேண்டாம் நான் சாப்பிட்டு விட்டேன் .. எனக்கு பால் மட்டும் ஒரு கிளாஸ் எடுத்து வா ” என்றான். தான் அறைக்கு சென்று தாளிட்டு கொண்டான். இவள் பல் எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு அவன் கதவை தட்டினாள்.
வெளியில் வந்தவன் சரி நீ போய் தூங்கு .. நான் எடுத்து கொள்கிறேன் என போய் விட்டான்.
அவன் பல் குடித்து விட்டு அவள் அனுப்பியிருந்த டெண்டர் பார்ம்ஸ்களை
பார்வையிட்டான். நன்றாய் பண்ணி இருந்தாள் . அவளை எழுப்பலாமா என நினைத்து .. வேணாம் நாளைக்கு ஆஃபிஸில் போய் கேட்கலாம் என விட்டு விட்டான்.
வாட்சப்பில் இட் லூஸ் குட். ட்டுமாரோ வி வில் டிஸ்கஸ் என ரிப்ளை பண்ணினான்..
அவள் உடனே தேங்க்ஸ் என்று ரிப்ளை பண்ணினாள் . இவன் ” தூங்க வில்லையா இன்னும் ” என கேட்க
உறக்கம் வரவில்லை சார் என்றாள்
இவன் சார் எல்லாம் போடு கூப்பிட வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லுவது..
சரி மாற்றிக்கொள்ள முயல்கிறேன் என்று ரிப்ளை போட்டாள்
நர்மதாவிடம் என்ன பேசினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா நான்
என கேட்டாள் ..
“ஓ அதுவா .. அவள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொன்னாள்.. அதற்கு நான் இன்னும் திருமணம் பற்றி யோசனை செய்யவில்லை என்று கூறினேன்” என்றான்
இன்று ஆபீஸ் எப்படி போயிற்று என கேட்டான்
இவள் நீங்கள் இல்லாம ஒரே போர் அடித்து விட்டது ஆனாலும் டெண்டர் ஒர்க் முழு நேரத்தையும் எடுத்து விட்டது. அதனால் சமாளித்து விட்டேன் என்றாள்.
ஓ நான் இல்லாவிட்டால் போர் அடிக்குமா உனக்கு அப்படியா என கேட்க
இல்லை இல்லை … அப்படி இல்லை பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் நான் ஒருத்தி தானே உங்கள் கேபினில் இருக்கிறேன்.. அதனால் அப்படி சொன்னேன் என்றாள்.
சரி உன்னை ஒன்று கேட்கவேனும் என நினைத்தேன் . “இரண்டு நாட்கள் முன்பு மாலை 9 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தாயே .. எங்கே சென்றாய் “
என கேட்க .. ஓ எல்லாமே நீங்கள் என்னை பற்றி நோட்டம் விடுகிறீர்களா .. என்றாள்.
உன் பாதுகாப்புக்காக தான் கேட்டேன். வேறு ஒன்றுமில்லை என்றான் ..
இப்படி 12 மணி வரை வாட்சப்பில் பேசி கொண்டு இருந்தனர். அப்புறம் குட் நைட் சொல்லிவிட்டு தூங்கி விட்டனர்.
இவன் இது வரை வாட்சப்பில் இப்படி யாரிடமும் இவளவு நேரம் பேசியதே இல்லை.
..
விவேக் வீடு மறுநாள் காலை 4 மணி
கமலி எப்போதும் போல குளித்து முடித்து பூஜை விளக்குகளை தயார் படுத்தி ஏற்றி வைத்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி வைத்திருந்தாள். சுவாமி படங்களுக்கு மலை இட்டு இருந்தாள். இவள் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடினாள். அன்று மேகமூட்டமாய் இருந்ததால் மிக பெரிய மழை வரும் போல இருந்தது. அதனால் வீட்டிலேயே அவன் ரூமில் மூச்சு பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அதனால் அவன் செவிகளில் இவள் பாடியது தெளிவாக விழுந்தது. நல்ல குரல் வளம் இவளுக்கு! நன்றாக பாடுகிறாள்! பாடல் முழுதும் கேட்டான். மெய்மறந்து. பிறகு கந்த ஷஷ்டி கவசம் படித்தாள். அம்மா அப்போது குளித்து விட்டு பூஜை அறையினுள் நுழைந்தாள்.
இவள் அம்மாவிடம் ” வாருங்கள் அம்மா.. நீங்கள் பூஜையை தொடருங்கள்.. நான் சமையல் பார்த்து கொள்கிறேன் “என்றாள்.
“கமலி, நீ நன்றக படுகிறாய் சாஸ்திரிய சங்கீதம் கற்று கொண்டாயா? ” என அம்மா கேட்டாள். 5 வருடங்கள் ஒரு மாஸ்டர் வந்து வீட்டில் சொல்லி கொடுத்தார். அப்புறம் அவர் வேறு ஊருக்கு சென்று விட்டதால் , தொடர முடியாமல் பொய் விட்டது” என்றாள்.
“இந்த பூஜை அறைக்கே ஒரு தெய்வாம்சம் வந்து இருக்கிறது அம்மா நீ இந்த வீட்டிற்கு வந்தது முதல். இனி நீ தினமும் பாடல்கள் பாடம்மா.. ” என்றாள்.
“சரி அம்மா” என்று ஏற்று கொண்டாள்.
அதற்குள் விவேக் வெளியில் வந்து ” ஆமாம் கமலி நீ பாடியது மனசுக்கு நிறைவை தருகிறது. இனி தினமும் பாடு கமலி என்றான்.
ஓகே சார் என்றாள்.
அப்போது அம்மா குறுக்கிட்டு “கமலி , இது வீடு, இங்கும் நீ சார் போட்டு பேச வேண்டுமா என்ன .”
“வேறு எப்படி நான் அவரை கூப்பிட முடியும்” என்றாள் உடனே
“விவேக் என்றே நீ கூப்பிடலாம்” என்று விவேக் சொன்னான். “அலுவலகத்திலும் நிறைய பேர் என்னை பேர் சொல்லி தான் அழைக்கிறார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.” என்றான் .
சரி ஓகே இனிமேல் விவேக் அண்ணா என்றே அழைக்கிறேன் ஓகே வா..
என சிரிக்க
“விவேக் மட்டும் போதும்.. அண்ணா வேண்டாம் “என்றான் வேகமாக
அம்மா சிரித்து விட்டாள்.
சரி விவேக் இனி உன்னை ஒருமையில் அழைக்கிறேன் ஓகே வா ..
தட்ஸ் குட் .. என்றான்
அம்மாவுக்கு ஆனந்தமாய் இருந்தது இவர்களின் பேச்சு. விவேக்கின் மனதில் கண்டிப்பாய் இவள் குடி வந்து விட்டாள் என நிம்மதியாக இருந்தது அம்மாவுக்கு.
விவேக்கும் கமலியும் ஒன்றாக கிளம்பி அலுவலகம் செல்ல .. அம்மா விவேக்கிடம் நான் இன்று அடையாறில் உள்ள அனந்த பத்மநாபா கோயிலுக்கு சென்று வருகிறேன் .. என்று கூறினாள். சரி ஆட்டோ புக் செய்து அனுப்பி வைக்கிறேன் என்றான்.
கமலி , விவேக் நாம் அம்மாவை கோயிலில் இறக்கி விட்டு , நேரே DLF போக வேணும் இன்னைக்கு அக்ரீமெண்ட் சைன் பண்ணுவதாக சொல்லி உள்ளீர்கள் என்றாள்..
ஓ அதுவும் சரி தான் .. நான் மறந்தே விட்டேன் .. நர்மதாவையும் எச் ஆர் மனஜரையும் அழைத்து DLF வர சொல்லிவிட்டான் .
நால்வரும் சென்று DLF அக்ரீமெண்ட் பேப்பரை படித்து இவன் சைன் பண்ணினான். அடுத்த 10 வருடங்களுக்கு .. இரண்டு தளங்கள்.
ஆபீஸ் செட் அப் வேலைகள் அமைத்து கொடுக்க ஒரு டீம் வந்து இருந்தது..
நர்மதாவையம் ,கமலியையும் அழைத்து ஒரு வாரத்திற்கு வாக்கின் இன்டெர்வியூ ஏற்பாடு செய்ய சொன்னான் . 250 பேர் வேணும். அதில் 20 பேர் சீனியர் பொசிஷன் மனேஜரியல் லெவல் .. என்றான் .. ஹர் மனஜரிடமும் .. சொல்லி பார்த்து கொள்ள சொன்னான். இம்மீடியதே அப்பொய்ண்ட் மென்ட் பிரம் நெஸ்ட் டூ வீக்ஸ்.
அனைவரும் அலுவலகம் வந்தார்கள். அந்த டெண்டர் நான் சைன் பண்ணிவிட்டேன் . போஸ்ட் பண்ணிவிடு. அலுவலக டெஸ்பாட்ச் சேக்ஷன் கு அனுப்பி விட்டாள்.
விவேக் , அமெரிக்கன் டெலிகேட் ஒருவர் நாளை வருவதாக ஈமெயில் செய்துள்ளார். அது நீங்கள் எழுதிய பழைய மைலுக்கு நேற்று இரவு ரிப்ளை பண்ணி உள்ளார். அவருக்கு என்ன சொல்ல என கேட்க
நர்மதாவும் எச் ஆர் மனஜரும் இவள் விவேக் என்று சொல்வதை கவனித்தார்கள்.
மிகவும் நெருங்கி விட்டனர் போல இருக்கு என்றாள் நர்மதா ..
ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள் .. அது அப்படி பழகி விடும் …
விவேக் இவர்கள் முணுமுணுப்பதை அறிந்து .. நர்மதா நான் தான் கமலியை என் பெயர் சொல்லி அழைக்க சொன்னேன். நாம் ஒர்க் பண்ணுவது ஐடி நிறுவனம். இங்கே அப்படித்தானே பழக வேணும் என்றான்.
இவளை நான் முதல் நாளில் இருந்தே இப்படி கூப்பிட சொன்னேன்.
இன்று தான் மாறி இருக்கிறாள் என சிரித்தான்.
“ஓ அப்படியா” என்றனர் நர்மதவும் எச் ஆர் மேனேஜரும் ஒரு சேர
கமலி நீ அவருக்கு ” ஓகே ப்ளீஸ் கம் அண்ட் விசிட் ட்டுமாரோ 11 am ” என ரிப்ளை பண்ணிவிடு ..
இப்படி நாட்கள் ஓடியது . DLF பிரென்ச் இயங்க ஆரம்பித்தது . நர்மதாவை DLF பிரென்ச் ஹெட்டாக நியமித்தான். அவளுக்கு salary 3 lakh per month குடுத்தான்.
நர்மதாவுக்கு ரொம்ப சந்தோசம் . திருமணம் பற்றி மறந்தே போனாள் .
கமலி மேற்படிப்புக்காக அப்ளை செய்து பிட்ஸ் பிலானிஇல் எண்ட்ரன்ஸ் பாஸ் செய்து விட்டாள்.
இரண்டு ஆண்டு படிப்பு ..
விவேக்கிடம் சொல்ல விவேக் .. குட் கமலி … வென் யு ஹவ் டு ஜாயின் ? என்றான்.
நெஸ்ட் வீக் கிளாஸ் ஸ்டார்ட்ஸ் என்றாள்
இருவரும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்ல அம்மா அழுதாள் ..
இதெல்லாம் தேவையா கமலி .. என்றாள் ..
நீ இவனை திருமணம் செய்து கொண்டு இங்கேயே இவனுடன் இருப்பாய்
என நினைத்தேன்.. என்றவள் பல்லை கடித்து கொண்டாள்..
விவேக் அம்மாவின் எண்ண ஓட்டத்தை அறிந்தான் . அவனும் அவளை மிஸ் பண்ண தான் போகிறான். அவனுக்கும் அது தெரியும். இருந்தாலும் இன்னொருத்தர் பியூச்சர் நாம் நம் சுயநலத்துக்காக அழிக்க முடியாது அல்லவா… என நினைத்தான்
கமலி அம்மாவின் வார்த்தைகளால் மிகவும் கஷ்டப்பட்டால், சரி அம்மா நீங்கள் சொன்னதை நான் யோசிக்கிறேன் என்றாள்..
மீண்டும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்
👌👌👌👌👌