ATM Tamil Romantic Novels

இராட்ஷஸ மாமனே… 5

மாமனே 5

 

காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து இதுவரை இல்லாத ஒரு புது பயம் மலர்விழிக்கு. அவளாக ஏற்படுத்திக் கொண்ட இந்த புது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று!! இவனை பற்றிய எந்த ஒரு புரிதலும் அவளிடம் இல்லை.

 

காதலித்து புரிந்து வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்குள்ளேயே அத்தனை போராட்டங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் இருக்க.. இது எதுவுமே இல்லாது சம்சார வாழ்க்கையில் தொபக்கடீர் என்று விழுந்த இருவருக்கும் இனி என்னென்ன பிரளயங்கள் எல்லாம் வரப்போகிறதோ??

 

வாழ்க்கை என்று இருந்தால் சில பொறுமல்களும்.. பல பிரச்சனைகளும் சுனாமிகளாய் தாக்கத்தான் செய்யும்! அதை எல்லாம் சமாளித்து துடுப்பு போடுவதில் தான் இருக்குது சம்சார சாகரம்!!

 

‘இவர் யாரென்று தெரியாம.. ஏதோ நம்பி இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டோமே! இவர் கூட யார் யார் இருக்காங்க? பிறந்தவங்க எத்தனை பேரு? இவங்க அம்மா அப்பா எப்படிப்பட்டவர்களோ? கொஞ்சம் பயமா தான் இருக்கு! ஆளை பார்த்தா ஜம்முனு தான் இருக்கார்.. ஏதோ காசு வட்டின்னு பேசிக்கிட்டாங்க.. என்ன வேலை பார்க்குறாருனு தெரியலையே? ஒரு வேள கட்டப்பஞ்சாயத்து அடி ஆளா இருப்பாரோ? ஆள பார்த்தா அப்படி தான் இருக்கு!! இதெல்லாம் விட நம்மல எப்படி நடத்துவாரு? நம்ம அம்மா அப்பாவுக்கு மரியாதை கொடுப்பாரா?” இப்படி ஏகப்பட்ட கேள்விகள்… அவள் மனதில்  

தோன்றி அவளை வதைத்துக் கொண்டிருக்கும் என்று நீங்கள் நம்பினால்…

 

சாரி!! அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல!!

 

இந்த மாதிரி கவலைகள் எல்லாம் எதுவும் இல்லாமல் நிம்மதியாக அவனின் பரந்து விரிந்த மார்பை இப்போதைக்கு பட்டா போட்டுக் கொள்ளாமல்.. உருண்டு திரண்ட புஜமே போதும் என்று அதிலேயே தலை சாய்த்து தூங்கி விட்டாள் மலர்விழி!!

 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த தொல்லைகள். அதாவது கதிரேசனும் களஞ்சியமும் செய்த அலப்பறைகள் தான்!!

 

அதற்கு முன்னராவது அவள் வீட்டுக்கு வரும்போது மட்டும் பேசி சென்றவர்கள், எப்போது அந்த ஜோசியக்காரன் இவளுக்கு நாள் குறித்தானோ… தப்பா எல்லாம் இல்லிங்க… 21 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னானோ… அப்போ ஆரம்பித்தது இவளுக்கு ஏழரை சனி.. கண்டச்சனி எல்லாம்!!

 

தினசரி இவர்கள் படை எடுத்து படை எடுத்து வீட்டுக்கு வர… இதில் யாருக்கு நன்மையோ இல்லையோ ஊரில் உள்ள பெட்ரோல் பங்க் வைத்தவன் நன்றாக பிழைத்தான்!! பின்னே வந்தவனுங்க சும்மாவா வந்தானுங்க… தன் அல்லக்கை நல்லகையோடு ஒருவன் வந்தால், மற்றொருவனோ தன் உறவு கூட்டங்களை இழுத்துக் கொண்டு வந்தான்!!

 

“என்ன சொல்ல போகிறாய்?” என்று கம்பனின் பேரன் போல கண்களிலேயே கவி எழுதுவான் ஒருத்தன்!

 

காஜிக்கு பிறந்தவன் போல தன் உதட்டை கடித்து காதல் லுக் என்ற பெயரில்… நினைப்பில் காமத்தை பரப்பினான் மற்றொருத்தன்!!

 

இப்படி இருவரும் இரண்டு விதமாக அவளை தொல்லை செய்து கொண்டே இருக்க.. வீட்டில் கூட அவளுக்கு நிம்மதி கிடையாது!!

திருமாறனுக்கும் வேதாவுக்கும் ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை! 

 

இவர்களை பாம்பென்று அடிக்கவும் முடியாது! பழுதென்று ஒதுக்கவும் முடியாது.. தவித்தனர்!!

 

மலரோ தனி அறையில் எப்பொழுதும் பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பாள். எங்கே கதவு திறந்து இருந்தால் பாய்ந்து வந்துவிடுவார்களோ என்று!! காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் களவாணித்தனத்தை காண சகிக்காமல் தான் பூட்டிய அறைக்குள்ளே தஞ்சம் கொண்டாள்.

 

இரவு மட்டுமே விட்டு வைத்திருந்தனர்! அதுவும் “திருமணத்துக்கு முன் இங்கே இராத் தங்க இருக்க கூடாது! ஏன் இராவு இங்கன வரவே கூடாது!” என்று அவர்களின் சொந்தமே சொல்லியிருக்க… அந்த நாலு வாய்காரனுங்களுக்கு பயந்து வராமல் இருந்தார்கள். இல்லையென்றால் இருவரும் இவள் இருக்கும் அறைக்கு பக்கத்து அறையிலேயே இருந்துக் கொண்டு இரவில் கூட இம்சித்திருப்பார்கள்…

 

இப்போதோ மனம் எல்லாம் நிம்மதி பெருக.. மாணிக்க மாமனின் அருகில் பாதுகாப்பும் உணர.. தன்னை அறியாமல் உறங்கி இருந்தாள் மலர்விழி!!

 

தன் புஜத்தை மஞ்சமாய் கொண்டு உறங்கும் வஞ்சியை தான் பார்த்தான் மாணிக்கவேல்!!

 

ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை இவள் யார் என்று அவனுக்கு தெரியாது! இப்பொழுது இவள் அவன் மனைவி!! இவனுக்கு அவள் எல்லாமுமாக… அவளுக்கு இவன் எல்லாமுமாக..!! விசித்திரம் தான். ஆனால் உண்மையாகி விட்டதே!!

 

லேசாக இளச்சிரிப்பில் விரிந்திருந்தது அவனது இதழ்கள்!!

கடுவன் பூனைக்குள்ளும் புன்னகை!!

 

ஒரு பெருமூச்சு இழுத்து விட்டுக் கொண்டவனின் நினைவில் அடுத்தது பெற்றோர்கள்!! ‘அவர்களிடம் என்ன சொல்வது? என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? அதைவிட அக்காக்கள்… இவங்க ரெண்டு பேரும் ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டுவாங்களே… என்ன செய்ய?

எப்படி இதை சமாளிக்க?’

 

50 ஆண்களை வேண்டுமானாலும் ஈசியாக சமாளித்து விடலாம் ஆனால் ஐந்து வீட்டுப் பெண்களை மட்டும் சமாளிக்க எக்ஸ்ட்ரா ஒரு மூளை தேவைப்படுகிறது!! ஏனென்றால் அவனதுஅம்மாவுக்கும் அக்காள்களுக்கும் தொண்டை எல்லாம் சாதாரண தொண்டை கிடையாது. சும்மா விளக்கி வைத்த வெண்கல தொண்டை!!

 

“மொதல்ல வீட்டுக்கு போவோம்! பின் ஃபோனை போட்டு ஐயனுக்கு சொல்லி.. அம்மா கிட்ட பக்குவமா சொல்ல சொல்லலாம். எப்படி இருந்தாலும் அடித்து பிடித்துக் கொண்டு நாளை தான் வருவார்கள்! அதுவரை நமக்கு டைம் இருக்கிறது. ஏதாவது யோசித்துக் கொள்ளலாம்!! இந்த பெண்ணின் வீட்டில் என்ன நிலைமைனு தெரியலையே??” என்று அவள் பக்கமா மனது சாய…

 

“மொதல்ல உன்ற பிரச்சினைய பாருடா! அடுத்தது அவங்க பிரச்சனையை பார்க்கலாம்” என்று மனம் நக்கல் செய்ய.. இவனும் அமைதியாக இருக்கையின் பின் பக்கம் தலை சாய்த்து இருந்தான். தூக்கம் எல்லாம் இல்லை.. வெறும் கண்களை மூடி தான் இருந்தான்!! இந்த நிமிடத்தை கிரகிக்கவே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது. 

 

ஏற்கனவே மனதில் ஒருத்தி இருக்க.. கல்யாணமே வேண்டாம் என்று இவன் இருக்க.. இன்று விதிவசத்தால் விலங்கிடப்பட்டான் கல்யாணத்தில்!!

 

“விதியை சொல்லாதடா? நீ ஒழுங்கா உன்னை பேசின களஞ்சியத்தின் வாயில இரண்டு கொடுத்திருந்தேனா… இப்போது பிரச்சனையே இல்லை! அதை விட்டுட்டு.. பொண்ண தூக்குறேன்.. அவன் கல்யாணத்தை நிறுத்துறேன்.. சொல்லி இப்போ நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கிறது தான் மிச்சம்!!” என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டிருந்தான். இடையில் ஜீவனுக்கு எத்தனை முறை அழைத்தும் ஃபோன் போகவே இல்லை. தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருந்தான் ஜீவன்.

 

“இந்த பைய வேற.. எப்ப தேவையோ அந்த நேரத்துல மட்டும் ஆப்பிடவே மாட்டான்! இவனை எல்லாம் வச்சிக்கிட்டு…” என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அவன் வீடு வந்து இருந்தது.

 

அதுவரை காரில் இருந்த டிரைவரிடம் இவன் ஒன்றுமே விசாரிக்கவில்லை. அப்போதுதான் “அண்ணே எவ்வளவு?” என்று இவன் கேட்க..

 

“தம்பி அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.. கருப்பண்ணன் எதுவும் உங்க கிட்ட வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” என்றார்.

 

“பரவால்லிங்க அண்ணா.. இவ்வளவு தூரம் அண்ணாச்சி எனக்கு உதவி பண்ணதே பெருசுங்க! நீங்க சொல்லுங்க” என்றான் வற்புறுத்தி..

 

“இல்ல தம்பி.. வேணாங்க!” என்றார் அவரும் பெருந்தன்மையோடு!!

 

பாண்டி கோயிலில் இருந்து இவன் வீடு வரை இவனே மனதில் ஒரு கணக்கை போட்டு “சரிங் அண்ணா.. உங்களுக்கு வாங்க வேணாமுங்க. ஆனா பெட்ரோல் போட வைச்சுக்கோங்க..” என்று இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை வற்புறுத்தி அவர் கையில் திணித்து விட்டு.. தன் புஜத்தில் உறங்கும் மலரின் தலையை வாகாக சீட்டில் வைத்துவிட்டு இவன் இறங்கி வீட்டினை திறக்க திரும்ப…

 

“தம்பி வந்துடுச்சு..!” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. அங்கு அவளின் இரண்டாவது அக்கா ஞானமலர் வாயெல்லாம் பல்லாக முகம் நிறைய பாசத்தோடு “வாடா தம்பி..!” என்று அழைத்தார்.

 

என்னமோ காலம் காலமாக தம்பியை பிரிந்து இருந்த மாதிரி! போன வாரம் தான் “குடல் குழம்பு வச்சிருக்கேன் டா சாப்பிட்டு பாரு.. அதுவும் சுட சுட இட்லியோட ஜோரு!” என்று தன் மகள் வள்ளியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க.. இவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை! வேலை என்று சொல்லி தப்பிக்கவும் முடியவில்லை! அவன் சாப்பிட்ட பிறகு தான் சென்றார். அதுவரைக்கும் “மாமனுக்கு அதை எடுத்து வை! மாமனுக்கு இதை எடுத்துக் கொடு!” என்று பெண்ணிடம் ஏகப்பட்ட ஏவல்கள்!! அந்த பிள்ளையும் மாமன் என்று ஆசையாக செய்ய இவனுக்கு தான் அவஸ்தை ஆகி போக.. ஒரு கட்டத்தில் “வெளியில் ஒரு கலெக்ஷன் இருக்கு நான் போகணும்!” என்று விரட்டாத குறையாக அவர்களை விரட்டி விட்டு இவன் வெளியில் வந்தான்.

 

“ஆமா… ஆமா.. தம்பி வந்துடுச்சி!” என்ற எழில்மலரின் குரலில்…

 

“ஐயோ.. இவளுமா??” என்று அதிர்ந்து நின்றான் பேச்சு இல்லாமல்..

 

காரணம் இரண்டு நாளுக்கு முன்னாடி தான் மதியம் பஜாரில் இருக்கும் இவன் கடைக்கு வெள்ளாட்டுக் கறி குழம்பு கோலா உருண்டை என்று மகள் தேனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். 

 

இவனோ “எதுக்குக்குங்க கா பிள்ளை எல்லாம் கடைக்கு கூட்டிட்டு வரீங்க..” என்று கடிந்து கொள்ள..

 

“அட போடா!! நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை? அதுமட்டுமல்ல இப்போவவெல்லாம் புள்ளைங்க எல்லாம் வீட்டு வேலை மட்டும் பாக்குறது இல்ல வெளியில தொழிலையும் கத்துகிறாங்க.. நீயும் தொழில கத்துக் கொடுத்து இன்னொரு இடத்துல நம்ப கடையை போடலாம்ல.. அதுக்குதேன்!! தேனு நல்லா பாத்துப்பா..” என்றதும் இவனால் தாங்கவே முடியவில்லை!! 

 

அதுவும் சாப்பிட்டு முடிக்கும் வரை இவரும் “மாமாவுக்கு கறியை வை.. அந்த கோலா உருண்டையை அப்படியே அள்ளி வை தேனு.. அந்த நல்லி எலும்பு ரசத்தை ஊத்து..” என்று ஏவல் செய்து கொண்டே இருக்க அவளும் புன்னகையோடு பரிமாற இவனுக்குத்தான் வயிற்றுக்குள் உணவு போக மாட்டேன் என்று அடம்பிடித்தது!!

 

இப்படி இரண்டு அக்காமார்களும் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து தரிசனம் காட்டிவிட்டு.. உண்பதற்கு உணவையும் கொடுத்துவிட்டு செல்ல.. இப்பொழுது ஏன் இவ்வளவு பாசமாக அழைக்கிறார்கள் என்று இவன் யோசனையாய் பார்க்க.. அடுத்தது கனிமலரும் ஒளிமலரும் வந்தார்கள்!!

 

“என்ன மாணிக்கம் நல்லா இருக்கியா?” என்றபடி வந்து அவனின் இரு பக்கமும் கையை இருவரும் பிடிக்க..

 

“போச்சுடா!! என்ன நாலு பேரும் சேர்ந்து வந்து இருக்காங்க.. என்ன புது பிரச்சினை கிளப்ப போறாங்களோ?” என்று திகலோடு நாலு அக்காக்களையும் பார்த்து “நல்லா இருக்கேனுங்க கா.. நீங்க எப்படி இருக்கீங்க? என்ன திடீர் விஜயம்?” என்று மெல்ல கேட்டான்.

 

‘ஏன் வந்தீர்கள்?’ என்று முகத்திற்கு நேராக கேட்டால் அவ்வளவுதான்! 

 

உன்னை நாங்க எப்படி வளர்த்தோம் தெரியுமா.. என்று வரிசையாக உட்கார்ந்து அவனுக்கு பிள்ளைபாட்டு எழுதி முடித்து விடுவார்கள் அதுவும் ஒப்பாரி ராகத்தில்.. தேவையா இதெல்லாம் என்று எண்ணியவன் சற்று நேரம் அமைதி காத்தான்.

 

“அக்கா எல்லாம் தனியா வரல ராசா.. நான் தான் பொண்ணுங்களை எல்லாம் வர சொன்னேன்!” என்றபடி அல்லிமலர் தன் பெரிய சரிரத்தை தூக்கிக்கொண்டு அவன் முன் பிரசன்னமாக..

 

“ஐய்யயோ… நீங்களுமா??” என்று அதிர்ந்தவனுக்கு நெஞ்சு வலி வராதது ஒன்றுதான் பாக்கி!!

 

பின்னே… இன்று ஒரு நாள் இருக்கு. அதற்குள் நாம் ஏதாவது யோசித்து பிரச்சனை வராத மாதிரி பார்த்துக்கலாம் என்று நினைத்திரு

க்க.. அதற்கு இடமே கொடுக்காமல் வந்து மொத்த குடும்பமே வந்து இறங்கினால் அவனும் தான் என்ன செய்வான்?

5 thoughts on “இராட்ஷஸ மாமனே… 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top