ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 10

 

10

 

 

 

பத்மா கதிர் கை பிடித்த அடுத்த நொடி “திருடன்.. திருடன்னு” என்று கத்த.. 

 

அதில் பயந்து போன கதிரோ.. “நானில்ல.. நானில்ல” என்று கத்த..

 

அவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த மரத்தை நோக்கி ஓடி வர..

 

 

‘ஏற்கனவே இப்போதுதான் வெற்றியினால ஒரு பஞ்சாயத்து முடிஞ்சது.. இங்கே இந்த பெண்ணோடு நம்மை பார்த்தால் கண்டிப்பாக ஏதேனும் பிரச்சனையாகும்.. பிரச்சனை கூட வேணாம் வாய் வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் கண்டிப்பாக அண்ணா நம்மை பொலி போட்டுடுவான்’ என்று பயந்த கதிர் அருகிலிருந்த பத்மாவை பார்த்து, ‘மற்றவர் யாரும் பார்க்கும் போது இங்கிருந்து சென்று விடலாமா?’ என்று கேட்க வாய் எடுக்க.. 

 

 

அவளோ.. “அய்யையோ!! எல்லோரும் வராய்ங்க.. உங்களோட என்னை பார்த்தா அவ்வளவு தான்!! வாங்க ஓடிடலாம்!!” என்று அந்த மரத்தில் இருந்து சற்று தூரத்தில் தெரிந்த இடிந்த காம்பவுண்டின் பின்னால் அவனை இழுத்துக்கொண்டு ஓடினாள்..

 

 

“என்னடா நடக்குது இங்க?? நான் சொல்ல வேண்டிய டயலாக்ஸ் எல்லாம் அவ சொல்றா? ஆனாலும் நல்லா தான் ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கு..” என்று நினைத்தவனுக்கு அவள் கை பிடித்து இடம் சிலுசிலுவென்று ஜிகிர்தாண்டா குடித்தது போல இருக்க.. அதற்கு ஏற்றாற்போல் அவனது மைண்ட் வாய்ஸ் டூயட் பாட போனது..

 

 

இடிந்த காம்பவுண்டுக்கு பின்னால் வந்து அமர்ந்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தலையை மட்டும் லேசாக திருப்பி அந்த மரத்தின் பக்கம் பார்த்தாள்.

 

 

அங்கே சில பேர் வந்து “என்னடா இங்கன ஏதோ சத்தம் கேட்டுச்சே.. இப்போ யாரையுமே காணமே?” தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்க..

 

“லீவு விட்டதும் போதும் பிள்ளைங்க அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லை.. அவிய்ங்க தான் கத்தி இருப்பாய்ங்க” என்று விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.

 

 

அவர்கள் சென்றதும் ஒரு ஆசுவாச மூச்சை விட்டாள் பத்மா. அப்போதுதான் தான் ஒரு ஆண் மகன் அருகில் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருப்பதை கவனித்தாள். 

 

சட்டென்று அவன் கையை தட்டி விட்டவள், தன் கையிலிருந்த பார்சல் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.

 

 

“ஆமா எதுக்கு நீங்க என் கைய புடிச்சு இழுத்திங்க?” என்று இவள் அவனிடம் சண்டை போக..

 

 

“எதே?? நான் உன் கைய புடிச்சு இழுத்தேனா? நீதான் என் கைய புடிச்சு ஓடி வந்து இங்கன உட்கார வச்சி இருக்க.. ஆமா உன் கிட்ட ஒருத்தன் வந்து பேசினானே யாரு அவன்?? கைல என்ன பார்சல் இது??” என்று அவன் வரிசையாக கேள்விகளை கொட்டிக் கொண்டிருக்க..

 

 

அவளோ சற்றும் அவனை மதித்தாள் இல்லை!! கையில் வைத்திருந்த பார்சலை அவசர அவசரமாக பிரித்து வைத்து “சூடு ஆறிப் போச்சுன்னா நல்லா இருக்காதே..” என்று பிரித்து எடுத்து வேகவேகமாக சுவைக்க ஆரம்பித்தாள் லெக் பீஸை!!

 

 

அவனோ ஆவென்று வாயை திறந்து பார்க்க இரண்டு லெக் பீஸை காலி செய்துவிட்டு தான் நிமிர்ந்து கதிரை பார்த்தாள். அவன் வாயைத் திறந்து கொண்டு இருப்பதை பார்த்து சட்டென்று தன் கையில் வைத்திருந்த கேஎஃப்சி லெக் பீஸ் பாக்ஸ் பார்சலை சட்டென்று ஒளித்துக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள்.

 

 

“அடப் பக்கி.. இந்த லெக் பீஸ தான் இப்படி ஓடி ஓடி ஒளிஞ்சு திங்குறாளா? மாட்டனடி மகளே!! இத வச்சி உனக்கு வளைக்கிறேன் மச்சக்கன்னி” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவன்..

 

 

“ஏ பாப்பா நீ எந்த பரமேஸ்வர் அவரோட பொண்ணு தானே? அன்னைக்கு நெசவு பட்டறையில் உன்னை பார்த்தேனே??” என்று இவன் தெரிந்துகொண்டே தெரியாதது போல கேட்க..

 

 

கதிரையும் அவளுக்கு தெரியும் தான். சிறுவயதிலிருந்தே அவ்வப்போது வரும் போது பார்த்து இருக்கிறாள். ஆனால் தன்னை ஞாபகம் வைத்திருக்க மாட்டான் என்று அவள் நினைத்திருக்க.. அவனோ தெள்ளத்தெளிவாக கூறியவுடன் வாயிலிருந்த லெக் பீஸ் தானாக கீழே விழுந்தது.. 

 

 

“உங்க..உங்களுக்கு எப்படி தெரியும்??” என்று திக்கி திணறி அவள் கேட்க…

 

 

“ஆமா நீங்க எல்லாம் பெருமாள் கும்பிடுறவைய்ங்களாச்சே.. அதுல உங்க அப்பா வந்து சுத்த சைவம் வேற!! நீ என்னன்னா இப்படி பக்கெட் ஃபுல்லா லெக் பீஸ வைச்சு தனியா வந்து கும்மு கும்முன்னு கும்முற.. இரு இரு இப்பவே பரமேஸ்வருக்கு போன போட்டு உன்னை மாட்டி விடுறேன்” என்று அவன் போனை எடுக்க.. இவள் தடுக்க.. லெக் பீஸோ ஆதரவற்று கிடக்க.. 

 

 

“ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லாதீங்க.. எங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” அவன் கைகளைப் பிடித்தபடி கெஞ்சினாள் பத்மா.

 

 

“ஏன் கம்பெடுத்து விளாசிடுவாரா.. உங்க நைனா?” என்று அவன் சிரிப்புடன் கேட்க..

 

“இல்ல இல்ல அட்வைஸ் பண்ணியே அழ வைச்சுடுவாரு… கூடவே எங்க அம்மாவும் சேர்ந்துக்குவாங்கோ.. அப்புறம் ஒரு வாரத்துக்கு எனக்கு வெறும் கீரையா போட்டு தள்ளுவாய்ங்க..” என்று கண்ணை கசக்கிக்கொண்டு சிறுபிள்ளை போல அவள் கூற அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

 

 

“வெறும் கீரை.. அதுக்கு இப்படி அழுது ஊரைக் கூட்ட என்ன இருக்கு?” என்று அவன் புரியாமல் கேட்க..

 

 

“உங்களுக்கு தெரியாது.. கீர தான்.. ஆனால் அத ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது இனிமே சிக்கன் சாப்பிட மாட்டேன் நானு அவிய்ங்களுக்கு சத்தியம் பண்ணி தர சொல்லுவாய்ங்க.. அப்புறம் தான் அந்த சாப்பாடு கூட போடுவாய்ங்க” என்று விசும்பிக் கொண்டே கூறினாள்.

 

 

“அப்படி சத்தியம் பண்ணியும் சிக்கன விடுவதா இல்லையே நீனு? சத்தியம் எல்லாம் உனக்கு சக்கரை பொங்கல்!!” என்று அவன் ஒரு மாதிரி முறைப்புடன் கேட்க..

 

“இல்ல இல்ல நான் வந்து உண்மையான சத்தியம் எல்லாம் அடிக்க மாட்டேன்.. இதோ இந்த கட்டைவிரலை உள்ளுக்குள் இப்படி ஒளிச்சு வைச்சுக்குவேன்.. அதுக்கப்புறம் சத்தியம் பண்ணினா அது உண்மையான சத்தியம் இல்லை.. பொய் சத்தியம்!!” என்று கூறி அழகாக சிரித்தாள் அந்த பொம்மை.

 

அவளின் அந்த சிரிப்பில் மெய் மறந்து அவளை ரசித்தவன் அடுத்த கணம் தன்னை மீட்டுக் கொண்டான்.

 

 

“சரி நான் சொல்லல.. ஆனா இனிமே உனக்கு லெக் பீஸ் வேணும்னா என்கிட்ட தான் போன் பண்ணி கேட்கணும். அந்த ஒட்டடைக்குச்சி மேல விக்கு வச்ச மாதிரி ஒருத்தன் வந்தான் பாரு.. அவனை எல்லாம் கூப்பிட கூடாது சரியா?” என்று அவன்‌ டீல் பேச..

 

“அவரு என்னோட அண்ணன்.. மாமா-பையன். அவர்கிட்ட கேட்கலாம் உங்ககிட்ட எப்படி கேட்க முடியும்? நீங்க ஏன் எனக்கு வாங்கி தரனும்?” என்று கேள்வி கேட்டாள்.

 

“மாமா பையன.. அண்ணனு நீ கூப்பிடும் போது ஒருபக்கம் மனசு வலிச்சாலும்.. இன்னொரு பக்கம் அப்படியே சிலுசிலுன்னு இருக்கு.. இப்படியே மெயிண்டன் பண்ணு..

இனி உனக்கு நான் தான் மாமன்!!” என்று கூற.. அவளை அதிர்ந்து இரண்டு அடி இல்லை பத்தடி அவனிடமிருந்து விலகி போய் நின்றாள்.

 

 

“ஓய் மச்சக்கன்னி.. எங்க ஓடுற இங்கு வந்து இந்த ஸ்டில்லை பாரு நல்லா இருக்கா?” என்று கேட்க..

 

‘எதை எடுத்து வைச்சியிருக்கான்?’ என்று புரியாமல் அவளும் அவன் அருகில் நெருங்கிப் போய் பார்க்க..

 

முதல் போட்டோவில் அவன் கையை இறுக்கமாக பற்றியபடி யாரும் வருகிறார்களா என்று பயத்துடன் திரும்பிப் பார்க்கும் பத்மா!!

 

அடுத்த போட்டோவில் லெக் பீஸ் ஆசை ஆசையாக பார்த்து கையில் வைத்து கட்டிக்க போகும் பத்மா!!

 

அடுத்ததில் கண்கள் பூரா சந்தோஷத்துடன் வாயில் லெக் பீஸோடு உலகையே மறந்து லயித்திருக்கும் பத்மா!!

 

இப்படி விதவிதமாக வெரைட்டி வெரைட்டியாக இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதையும் அவள் சாப்பிடுவதையும் எடுத்து தள்ளியிருந்தான் கதிர்.

 

 

“எப்போ எப்படி எடுத்திங்க?” என்று புரியாமல் அவனை பாவமாக இவள் பார்த்து வைக்க..

 

‘ஆளாக்கு மாதிரி இருந்துட்டு, அன்னைக்கு என்ன பேச்சு பேசுன.. இருடி அதான் உனக்கு ஆப்பு’ என்று மனதுக்குள் நினைத்து மகிழ்ந்தவன்..

 

“இந்த போட்டோ எல்லாம் உங்க அப்பா பரமேஸ்வரர் காமிச்சா என்ன நடக்கும் சொல்லு?” என்றும் மொபைலை அவள் முன்னால் ஆடிக் கொண்டே இவன் கேட்க..

 

அவளோ பயத்தில் அவனை பார்த்து வேண்டாம் வேண்டாம் என்று தலையாட்டினாள்.

 

“அப்படின்னா நீ என்ன பண்ணனும்.. என்னைய மாமானு கூப்பிடனும்.. இனி உனக்கு லெக் பீஸ் வேணும்னா இந்த மாமனுக்கு தான் போன் பண்ணனும்.. எங்க எப்படி கூப்பிடனும் சொல்லு??” என்று அவளை அந்த இடிந்த காமண்ட் சுவற்றிலேயே இரு கைகளாலும் சிறைவைத்து அவன் கேட்க..

 

திகைப்பில் விழி விரிந்திருக்க எச்சில் விழுங்கிக் கொண்டே..

“பவா..!!” என்று அவர்கள் மொழியில் கூற..

 

“யாருடி அந்த சக்காளத்தான்??” என்று இவன்‌ எகிற..

 

“அச்சச்சோ மாமாவ.. நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்” என்று அவள் முகத்தை பயத்தால் மூடிக்கொண்டு அவள் கூற.. “ஓ அப்படியா!!” என்றான் ஒருவித சுவாரஸ்யத்துடன். ஆனாலும் அவளை விட்டு ஒரு இன்ச் கூட அகலாமல் நின்றிருக்க.. அவள் முகத்தை மூடிய கைகளை இறக்காமல் இருக்க.. மூடிய கைகள் மீது மெதுவாக இவன் மீசையினால் குறுகுறுக்க வைக்க.. சட்டென்று கையை விலக்கி அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

 

 

அவளை தான் ஆசை பொங்க பார்த்துக் கொண்டிருந்தவன்.. மெல்ல இதழ்களை குவித்தவன் அவள் முகம் நோக்கி குனிய..

பயத்தில் அவளுக்கு உச்சி முதல் பாதம் வரை வியர்வை ஆறாக ஊற்றெடுக்க..

மூக்கோடு மூக்கு உரசியவனின் கற்றை மீசையோ அவளது மென் இதழில் கவி பாட..

மெல்ல மெல்ல கீழ் நோக்கி இறங்கிய இதழ்களை கண்டு விதிர்விதிர்த்தவள்.. தன் கையிலிருந்த லெக் பீஸை.. அவன் இதழ் நெருங்கும் நேரத்தில் அவன் வாயில் திணித்து விட்டு ஓடியே விட்டாள்!!

 

 

“ஜாரா.. சொட்டா!!” (போடா.. திருட்டு பயலே!!) என்றவாறு..

 

 

“வட போச்சே!!” என்ற லுக்கில் பார்த்தவன் அவள் தின்ற லெக் பீஸை வாயில் மென்றப்படி “அந்த பீஸ் போனா அவ மவுத் பீஸ் சுவைச்ச.. இந்த லெக் பீஸே போதும் இப்போதைக்கு!!” என்றவாறு லெக் பீஸை கடித்தவாறு தன் ஜாக்குவாரை நோக்கி நடந்தான்.

 

 

அன்றிரவு தன் ஜாகையான இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்று உலா வரும் நிலவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி..

 

 

“என்ன அண்ணே.. நிலவ முறைச்சு முறைச்சு பார்க்குற?” என்று கதிர் கேட்டு கொண்டே அவனை நெருங்க..

 

“நிலவில் கூட கலங்கம் இருக்கு தான் இல்ல கதிரு‌” என்றான் சிறு வருத்தத்துடன்..

 

 

வெற்றி எதை சொல்ல வருகிறான் என்று புரிந்த கதிரும்.. “அதற்கு பேர் கலங்கம் இல்ல ணே.. அதனுடைய அமைப்பே அப்படி தான்..

குறை நிறை எல்லார் இடத்திலும் இருக்கும் தான்!! ஆனா.. நாம இப்போ செய்து கிட்டு இருக்கிறது பேரு தப்பு இல்ல ணே.. யுத்தமாதிரிதேன்!! அவன் பாணிலேயே அவனுக்கு புரிய வைக்கிற பாங்கு..” என்று எப்பொழுதும் இலகுவாக இருக்கும் கதிர் இன்று இறுகி போய் பேசிக் கொண்டே செல்ல..

 

 

“போதும்!! போதும்!! நிறுத்து!! உன் மூஞ்சிக்கு இந்த மாதிரி அட்வைஸ் எல்லாம் செட் ஆகல டா” என்று வெற்றிப் புன்னகை சிந்த…

 

“ஸ்ஸ்ஸப்பபா.. உன்னை இத்தனூண்டு சிரிக்க வைக்க மூச்சு விடாம பேச்சு பேச்சுன்னு எவ்வளவு பேச வேண்டி நானு!! எங்க சோடா?? எங்க சோடா??” என்று மீண்டு இருந்தான் கதிர்.

 

பெரு மூச்சை இழுத்து விட்ட வெற்றி தம்பி பார்த்து தலையசைத்துவிட்டு தன் அறையை நோக்கி செல்ல..

 

கதிருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. தலைமகன் என்றாலே பொறுப்புகள் தானாய் வந்து தலையில் அணிவகுத்து கொள்ளும். அதிலும் பிறப்பிலிருந்தே அதீத திறமை ஆளுமை கொண்ட வெற்றிக்கு இந்த பொறுப்புகளெல்லாம் ஒரு சுமையே அல்ல.. ஆனால் இப்ப மனம் கொண்ட சுமை வேறு அல்லவா?? அந்த சுமையை இறக்கி வைக்கும் நாள் என்றோ?? வெற்றியை நினைத்துக்கொண்டே இவனும் கீழே இறங்கி செல்ல.. வாஞ்சி உறங்காமல் ஹாலில் அமர்ந்து இருப்பதை பார்த்ததும் அவர் அருகே சென்று நின்றான்.

 

 

“என்ன பெரிய ஐயா? இன்னும் தூங்கலையாங்க?” என்று கேட்க..

 

“தூக்கம் எல்லாம் தூர போய் வருஷ கணக்கு ஆகுதுடா..” என்று எங்கோ பார்த்து சொன்னவர் திரும்பிக் கதிரை பார்த்து “என்ன உன் அண்ணன்.. தூங்க போய்ட்டானா? மாடியிலேயே உலாத்திக் கிட்டு இருந்தான்” என்றார் நீங்கள் என்ன செய்தாலும் அது என் கண்ணுக்கு கண்டிப்பாக தெரியும் என்று அர்த்தத்தோடு.

 

 

“அதுலெல்லாம் அப்பயே போய்ட்டாரு.. நீங்க போய் தூங்குங்க ஐயா. எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் தைரியம் உங்க பிள்ளைங்களுக்கு உண்டு.. நீங்க வீணா வெசனப்படாம போய் தூங்குங்க” என்று கதிர் விரைப்பாக கூற..

 

 

“அதாண்டா தூக்கம்‌ வரல” என்று அவர் அவனையே வாரி விட்டு செல்ல.. “பெரிய ஐயா..!!” என்று காலை தரையில் உதைத்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றான் கதிர்.

 

 

சித்திரை திருவிழா வேறு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க.. தன் திட்டங்களுக்கு சிப்பாய்களையும் மிக கவனமாக நகர்த்திக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்.. வேந்தனாய்!!

 

நிவேதிதாவின் அப்பாதாவுக்கு தற்போது உடல்நிலை ஓரளவு சரியாகிவிடும் திரும்பவும் ஆரம்பித்தார் தனது பஞ்சாயத்தை.. 

 

“ஏன்டா.. அழகு திருவிழா வருது.. மொத மொத என் பேத்தி நம்ம ஊருக்கு வந்திருக்கா.. அவளுக்கு பட்டெடுத்து கொடுப்போம்!! நகை எடுத்து கொடுப்போம்னு.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இதுல ஏழுருக்கு பஞ்சாயத்து பண்ற உனக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம்?? உன் பொண்டாட்டி எங்கடா? இந்த வீட்டு குல விளக்கு!! அவளுக்காச்சும் தெரிய வேணாம்? என் பேத்திக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுக்கணும்னு” என்று நடு ஹாலில் அமர்ந்து தன் தண்டம் ஆட ஆட தலையை சிலுப்பி சிலுப்பி பேசிக் கொண்டிருந்தார் அவர்.

 

 

“அப்படி சொல்லு மா.. நானும் அப்பத்திலிருந்து பார்க்கிறேன்.. இந்தா எடுப்பாங்க.. அந்தா எடுப்பாகனு நினைச்சிகிட்டே இருக்கேன்.. இதுவரைக்கும் அண்ணனும் கிளம்பல.. மதனியும் அண்ணக்கிட்ட ஒரு வார்த்தை பேசல” என்று அன்னையின் அருகில் அமர்ந்து திரிய நன்றாக தூண்டி விட்டார் தனபாக்கியம்.

 

அன்னை வெகு நாளைக்கு கழித்து இவ்வாறு பேசியது சற்று சந்தோசமாக இருக்க சிரிப்பினோடே வந்து அன்னை அருகில் நின்றார் அழகுசுந்தரம். “என்ன ஆத்தா.. உனக்கு புள்ளைக்கு பட்டு தானே எடுக்கணும்.. ஒரு புடவை என்ன 10 புடவை எடுத்துக்கொடு.. கூடவே நீங்களும் போங்க உங்களுக்கு தேவையானதை எடுத்துட்டு வாங்க” என்றவர் மகனை அழைத்தார்.

 

 

“மருது.. இவிய்ங்க கூட போய் பாப்பாவுக்கு தேவையான புடவை எல்லாத்தையும் எடுத்துட்டு வா..” என்று அவர் கூற புனிதாவுக்கு இந்த ஏற்பாடு சற்றும் பிடிக்கவில்லை. 

 

“ஏங்க நம்ம கைத்தறி நகருக்கு போன போட்டு தேவையானதெல்லாம் நெய்ய சொல்லிடலாம்” என்று ஐடியா கொடுக்க..

 

“அட.. எவடி இவ கூறு கெட்டவ.. இன்னும் திருவிழாவுக்கு எவ்வளவு நாள் இருக்கு? எப்ப அவிய்ங்க கிட்ட நெய்ய கொடுத்து.. எப்ப வாங்கி.. என் பேத்தி எப்ப கட்டுறது அதெல்லாம் வேணாம் வழக்கமா எடுக்கிற கடைக்கு ஒரு எட்டு போய் பட்டு எடுத்துட்டு வந்துருவோம்” என்று அவர் திட்டமிட உற்சாகமானார் தனபாக்கியம்.

 

கூடவே பிள்ளைகளுக்கு வேற புடவை வேணும்னாலும் விதவிதமா எடுத்து கொடுக்கலாம் என்று உரைத்தவர் அடுத்த அரை மணிநேரத்தில் அனைவரையும் கிளப்பிக்கொண்டு அந்த பெரியபட்டு மஹாலின் முன் நின்றார்.

 

 

கடையை ஒரு அலசு அலசி பேத்திக்கு என்று நிறைய பட்டு புடவைகளை வாங்கி குவிக்க.. அதற்கு தோதான பிளவுஸ் மற்றும் உள்ளாடைகள் என்று புனிதா பார்த்து பார்த்து வாங்க.. அதைத் தவிர இன்னும் சில புடவைகள் அவளுக்கு தேவையானவற்றை வாங்கவே அன்று ஒருநாள் போயிருந்தது.

 

“இங்கனவே சாப்பிட்டுட்டு போயிடலாமா இனிமே வீட்டுக்கு போய் எப்ப ஆக்கி எப்ப சாப்பிட?” என்று தனபாக்கியம் கேட்க எல்லோரும் காலையிலிருந்து ஜவுளி எடுத்த களைப்பில் சரி என்று கூறி பிரபல உணவகத்தில் வண்டியை நிறுத்தினர்.

 

 

 

நிவேதிதாவுக்கு காலையில் இருந்து வெளிவந்தது முதல் எங்கே வெற்றியை சந்திக்க நேருமோ? என்று மனதில் ஒரு சின்ன சஞ்சலம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று நினைத்துக்கொண்டவள், பெரிய அன்னையோடு புடவை பார்ப்பதில் நுழைந்து கொண்டாள். ஆனால் அவள் அறியாதது வேங்கையென அவளது ஒவ்வொரு அசைவுகளையும் வெற்றி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது..

 

வசீகரனும் மருதுவும் இவர்களோடு துணைக்கு வந்தாலும் அவர்களை விட்டுவிட்டு தனியே சென்று அமர்ந்து விட்டனர் இருவரும். முக்கியமாக வசீகரன் முகம் வசீகரமற்று பசியால் இருந்ததை பார்த்து தான் தனபாகியம் மகனுக்காக சாப்பிட்டு போகலாம் என்று சொன்னதே!!

 

அனைவரும் அவர்களுக்கு தேவையானதை கூறுவிட்டு அமர்ந்திருக்க.. நிவேதிதாவோ ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள்.

 

முன்னே கை கழுவ வாஷ்பேஷனும் அதற்குப் பின்னே கழிவறையும் இருந்தது.

இவள் நன்றாக முகத்தை தண்ணீர் விட்டு அடித்து கழுவி நிமிர்ந்து கண்ணாடியில் பொட்டை சரிபார்த்து வைக்க.. அதில் தெரிந்த மற்றொரு முகத்தில் பயந்து பின்வாங்க அந்த உருவத்திலேயே முட்டி நின்றாள்.

 

 

“இங்க என்ன பண்ற நீ.. இது.. இது லேடீஸ் ரெஸ்ட் ரூம்?” என்று அவள் திணற..

 

“அப்படியா?” என்று புருவங்களை உயர்த்தி கேட்டவன் அவளை அலட்சிய பாவனையுடன் நெருங்கினான். 

 

அவன் முன் அடி எடுத்து வைக்க..

இவள்‌ பயந்தே பின் அடி வைக்க..

 

கடைசியில் சுவரில் முட்டி அவள் நின்றாள்.

 

“ஒழுங்கா போயிட்டு டா ஹல்க்.. இது லேடிஸோடது.. இன்னும் கொஞ்ச நேரத்துல யாராவது வந்தாங்கன்னா நீதான் நல்ல மாட்டுவா?” என்றாள் பயத்தை வெளியே காட்டாமல்..

 

“கூட சேர்ந்து நீயும் தான் மாட்டுவ” என்றான் அவளை இன்னும் நெருங்கி கொண்டே..

 

“ஏன்டா ஹல்க்?? என்னை இப்படி படுத்தற.. இம்சைக்கிற.. உனக்கு நான் என்னடா பாவம் பண்ணினேன்?” என்று அவள் பயத்தில் நாக்கு வரள கேட்டாள்.

 

“நீ தான் பாவம் பண்ணனும்னு அவசியம் இல்லை.. ஆனால் பாவத்திற்கான சம்பளம் நீ தான் வாங்க வேண்டும்.. இட்ஸ் ஆல் நாட் ஃபேட்.. இட்ஸ் ஆல் மேட் பை வெற்றி.. வெற்றி வேந்தன்!!” என்று குரலை உயர்த்தவில்லை கோபப்படவில்லை ஆனால் அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு பயத்தில் முதுகை சில்லிட வைத்தது.

 

 

இன்னும் அவளை நெருக்கமாக நெருங்கி..

ஒரு விரலால் அவளது முக வடிவை அளந்தான்.. சில நொடிகள் விருப்பமும் எதிர்ப்புமாய் சில அசைவுகள்… தீண்டல்கள்… தொடுகைகள்… 

 

பின் அவனின் விரல் அவளின் மேலுதட்டை பற்றி இழுத்தது. அவன் தொட்ட அந்த இடம் நெருப்பாக சுட்டது அவளை!! அவனோ கட்டை விரலால் வருடினான் அவள் செவ்விதழை!! நிவேதிதா சட்டென்று அவனது விரலைப் பிடித்து நெறித்தாள். அவனோ, ஒற்றைக் கையால் அவளது இருகைகளையும் சிறைப்பிடித்தான்.

 

“வேண்டாம் டா ஹல்க்” என்று அவள் பேச முடியாமல் பேச..

 

“ம்ம்ம்??” என்றான் கேள்வியுடனே..

 

“தப்பு பண்ற.. ரொம்ப ரொம்ப பெரிய தப்பு”

 

“அப்படியா?? ம்ம்ம்.. பட் ஐ லைக் இட் யூ க்நோ?” என்றான்.

 

அவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்களை ஆழ்ந்து ஒரு நொடி பார்த்து விட்டு, அவளின் மேலுதட்டை பார்த்தபடி, அவனின் கற்றை மீசையால் உரச.. உரச.. அவளோ இவனின் இந்த இம்சைகளை தாங்க முடியாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்துவிட்டு நகர்ந்தான். 

அவள் மூடி கண்களை திறக்கும் போது எதிரில் நின்றிருந்தவன், 

 

“இனி இதுதான் தொடர்கதை!!” என்று விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான்

 

அவன் வெளியே செல்லும் நேரம் அதே கழிவறை வாசலில் வந்த வசீகரன் வெற்றியை பார்த்துவி

ட்டு யோசனையோடு கழிவறையை திறக்கப் போக உள்ளிருந்து வெளியே வந்தாள் நிவேதிதா!!

 

 

“இவள் என்ன ஆண்கள் கழிவறையில் இருந்து வருகிறாள்??” என்று திகைத்து செல்லும் வெற்றியையும் இவளையும் மாறி மாறி பார்த்தான் வசீகரன்!!

 

காதலே.. காதலே..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top