வாசகர்களே கடந்த அத்தியாயம் 6 என்று தவறாக உள்ளது .. அதை 7 என திருத்தி படிக்கவும்.
இது அத்தியாயம் 8
ஜாமீன் வீடு..
வேலுச்சாமி நம்பிக்கை இழந்தான் ஒரு மாதம் ஆகியும் அவளை கண்டு பிடிக்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டான். ஜோஸ்யரையும் பூசாரியையும் கேட்டான் சென்னைக்கு தானே ரயில் ஏற்றி விடீர்கள் என்று..
அவர்கள் ஆமாம் என்றனர் .. எதுவும் போன் பண்ணினால் என்னிடம் சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான்.
அவன் நண்பர்களிடம் கேட்டான். ஒரு விவரமும் இல்லை என சொன்னார்கள். “அவள் போட்டோ வை காண்பித்து நீங்கள் லேடீஸ் ஹோஸ்டேலில் உள்ள பெண்களிடம் கேட்டு பாருங்கள். ஒரு வேலை தெரிய வரலாம்” என கூறினான்.
அதன்படி தேட துவங்கினர். ஒரு பெண் இவள் போட்டோ வை பார்த்து விட்டு எனக்கு தெரியும் என்றாள். அவள் வேறு யாரும் அல்ல உஷா வரவேற்பாளினி. அவள் ஒரு ஹோஸ்டேலில் இருந்து தான் அலுவலகம் சென்று கொண்டு இருக்கிறாள். தன் நிறுவனத்தில் தான் அவளும் வேலை பார்ப்பதாக சொன்னாள். ஆமாம் நீங்கள் யார் ஏன் அவளை பற்றி கேட்கிறீர்கள் என்று கேட்க
அதற்குள் அவர்கள் எங்களிடம் சொல்லமால் ஊரை விட்டு வந்து விட்டாள்.
அவளின் அம்மா அவளை நினைத்து படுத்த படுக்கையாய் இருக்கிறார்கள். என்று கதை அளந்து விட்டார்கள்..
ஓ அப்படியா இன்று என்னுடன் எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள் . அவளை பார்க்கலாம் என்றார்கள்.
சரி அம்மா நல்லது என கூறினார்கள்.
வேலுச்சாமிக்கு விஷயத்தை தெரியப்படுத்தினர். அவளை எந்த சந்தேகமும் இல்லமால் பிடித்து வாருங்கள் என்றான்.
உஷாவிடம் அவள் அலுவலக முகவரியை வாங்கி கொண்டார்கள். நீங்கள் போங்கள் அம்மா . நாங்கள் பிறகு வருகிறோம் என சொல்ல..
இவள் சரி ஐய்யா .. என்று விட்டு அலுவலகம் செல்ல தயாரானாள்.
உஷா கமலிக்கு போன் செய்து ” கமலி உன் ஊரில் உங்கள் அம்மா மிகவும் படுத்த படுக்கையாய் உள்ளார்களாம். நீ ஊரில் சொல்லாமல் சென்னை வந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அதனால் உன்னை தேடி கூடி வர ஊரில் இருந்து அம்மா அனுப்பியதாக சொன்னார்கள். ஒரு மாதமாக தேடி இன்றுதான் எங்கள் ஹோஸ்டேலில் உள்ள எல்லா பெண்களிடம் கேட்டு கொண்டு இருந்தார்கள் உன் புகைப்படத்தை காண்பித்து என்றாள்.” மேலும் அவர்கள் இன்று நம் அலுவலகம் வருவார்கள் . நான் நமது அலுவலக முகவரியை அவர்களிடம் கொடுத்து உள்ளேன்.” என கூறினாள்.
அய்யோ .. என அலறினாள்.
ஏன் என்ன ஆயிற்று.. என கேட்டாள். அவர்களிடம் இருந்து தானே நான் தப்பித்து ஊரில் இருந்து வந்து உள்ளேன். அவர்களிடம் நான் சிக்கினால் அவ்வளவு தான். என்னை கொன்று விடுவார்கள் என்றாள்.
உஷா ” ஓ நான் தவறு இளைத்து விட்டேனே .. என கலங்கினாள்.
அதற்குள் அம்மா கமலியிடம் என்ன என்று விசாரிக்க இவள் நடந்த அனைத்தயும் கூற .. அம்மா கலங்காதே கமலி.. விவேக்கிடம் கூறலாம் அவன் தேவையான உதவி செய்வான்.
விவேக்கிற்கு அவன் அம்மா கமலி பற்றி அணைத்து உண்மையும் கூற..
விவேக் உடனே உஷாவிற்கு போன் செய்து ” கமலியை அவர்கள் வந்தால் அவள் வேலைக்கு ஒரு வாரமாக வரவில்லை என்று கூறிவிட்டு .. என்னை வந்து பார்க்கும் படி சொல்.. ” நான் பார்த்து கொள்கிறேன் என கூறினான்.
பிறகு கமலியிடம் , ” அம்மாவும் நீயும் இன்றே உங்கள் துணி மணிகள் எடுத்துக்கொண்டு உன் சர்டிபிகேட் மற்றும் பிட்ஸ் பிலானி ஆர்டர் எடுத்து கொண்டு டெல்லி சென்று விடுங்கள். நான் பிலைட் டிக்கட் ஏற்பாடு செய்து உன் வாட்சப்பிற்கு அனுப்பிவிடுகிறேன் என்றான்.
“நீயம் அம்மாவும் டெல்லியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.
நீ உன் படிப்பை இரண்டு ஆண்டுகள் அங்கே முடித்து விடு. ” என்று பிளான் போட்டு கொடுத்தான்.
சரி என இவர்கள் டெல்லி கிளம்ப .. இவன் அலுவலகம் சென்றான்.
அலுவலகத்தில் அவர்கள் இன்னும் வரவில்லை என்று உஷா சொல்ல ..
சரி அவர்கள் வந்தால் நான் சொன்னது போல சொல்லிவிடு என கூறி உள்ளே சென்றான்.
தன்னுடன் படித்த நண்பன் சுரேஷ் காவல் துறையில் SP ஆக உள்ளன. அவனிடம் உதவி கேட்டான். சுரேஷும் மப்டியில் அலுவலகம் வந்து விட்டான்.
இவன் கேபினில் இவனுடன் அமர்ந்து இருந்தான். அவர்கள் கமலியை தேடி வர , உஷா விவேக் சொன்னவாறே செய்தாள். ஒரு வாரமாக அவள் லீவு எடுத்துள்ளாள் என சொல்ல .. நீங்கள் யார் எந்த ஊரில் இருக்கிறீர்கள் உங்கள் முகவரி சொல்லி விட்டு செல்லுங்கள் என கேட்க..
இவர்கள் ஜமீன் முகவரியை சொல்ல.. அனைத்தையும் குறித்துக்கொண்டான்.. அவள் வந்தால் என்ன சொல்லவேண்டும் என கேட்க .. இவர்கள் கமலியின் வீட்டில் தேடுகிறார்கள் .. கோவம் வேண்டாம் .. உன் மாமா உன்னை மன்னித்து விட்டார் .. உடனே வீட்டுக்கு வர சொல்லுங்கள் ஐய்யா என்றார்கள்..
சரி .. என்று சொல்லிவிட்டு அவர்களை போக சொல்லிவிட்டான்..
வேலுச்சாமியிடமும் அனைத்தையும் சொன்னார்கள்..
வேலுச்சாமி சபாஷ் என்று கூச்சலிட்டான்.. மேலும் அலுவலக வாசலிலேயே நீங்கள் தினமும் காத்து இருந்து அவளை ஒல்லொவ்
விவேக் அவன் நண்பனிடம் நீ இடத்தில் ஏதாவது கமலிக்கு உதவ முடியுமா ? என கேட்டான்.
சுரேஷ் விவேக்கிடம் , ” கமலி ஏதாவது காம்பிளைன்ட் கொடுத்தால் அங்கு சென்று விசாரிக்கலாம்..” என சொல்ல..
ஓகே இது பற்றி நான் கமலியிடம் பேசிவிட்டு உன்னை தொடர்பு கொள்கிறேன் என அவனுக்கு நன்றி கூறி அனுப்பினான்.
இவன் சென்னை ஏர்போர்ட்டில் கமலியை சந்தித்து அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு மேலும் கமலியிடம் , ” என் தோழி சுப்ரியா டெல்லியில் இருக்கிறாள். அவள் உங்களை டெல்லி ஏர் போர்ட்டில் அழைத்துசெல்ல வருவாள். இது அவள் கைப்பேசி எண்.” என அவளிடம் கொடுத்து அவர்களை டெல்லிக்கு வழி அனுப்பி வைத்தான்.
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் வாசகர்களே ..
👌👌👌👌👌