11
நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!!
அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர..
வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்? எதுக்கு இப்படி வாசல்ல வந்து நின்னுட்டு இருக்கீங்க?” என்று வெற்றி மேல் காட்ட முடியாத கடுப்பை கோபத்தை இவன் மீது காட்ட..
“நான் ஒன்னும் உனக்காக இங்கே வரல.. ரெஸ்ட் ரூம் போகலாம்னுதான் வந்தேன்.. ஆமா நீ ஏன் ஜென்ஸ் டாய்லெட்டிலிருந்து வர?” என்று கேட்டவுடன் அதுவரை சாவதானமாக இருந்தவள் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள்.
சற்று நேரம் கை காலெல்லாம் உதறவே ஆரம்பித்து விட்டது அவளுக்கு. “நான் போகும்போது லேடிஸின் தானே இருந்தது..” என்று அங்கிருக்கும் அறிவிப்பு பலகையை பார்க்க.. அதில் ஆண்கள் என்று தெளிவாக கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது. பற்றாக்குறைக்கு படம் வேறு வரைந்து வைத்து இருக்க..
வசீகரனும் நம்பமாட்டாமல் அவளைத்தான் மேலும் கீழும் பார்த்தவன் அடுத்த நொடி அந்த கழிவறைக்குள் நுழைந்து விட்டான். “எப்படி? எப்படி இது மாறுச்சு? நான் போகும்போது லேடிஸ்னு தானே போட்டு இருந்தது” என்று குழப்பத்துடனே இவள் அதை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியில் வர.. அந்த ஹோட்டலின் மாடியில் இருந்து இவளைத்தான் பார்த்து ஏளனமாக சிரித்து கொண்டிருந்தான் வெற்றி..
இன்னும் நிவேதிதா புரிந்திருக்கவில்லை வெற்றியைப் பற்றி.. தனக்கு வேண்டுமென்றால் எதையும் எப்படியும் சாதித்துக் கொள்ளும் சாணக்கியன் இவன் என்று!!
சாப்பிடும் போதும் அதே சிந்தனையில் சரியாக சாப்பிடாமல் நிவேதிதா இருக்க.. மருதுவோ, “பாப்பா சாப்பிடும்போது என்ன யோசனை ஒழுங்கா சாப்பிடு” என்று அக்கறையுடன் அதட்டி கூற.. வசீகரனின் சந்தேகப் பார்வை அவளை துளைத்தது.
அன்று ஒரு அருகில் உள்ள கோயிலுக்கு திருவிழா எடுக்கிறார்கள் என அழைத்திருக்க.. இவர்கள் குடும்பம் அங்கே சென்றது.
எடுத்துட்டு வந்து இந்த பட்டில் ஒரு பட்டை கட்ட வைத்து பெண்ணை அலங்கரித்து அழைத்து சென்றார் புனிதா.
செண்ட மேள தாளங்களுமாக.. வேட்டும் வெடியுமாக.. பாட்டும் கச்சேரியுமாக.. பெண்களின் குலவைகளுமாக.. சின்ன கோவிலாக இருந்தாலும் விழா பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது.
அருகிலிருந்த அப்பத்தாவிடம் “இப்போ என்ன திருவிழா அப்பத்தா?” என்று கேட்க..
“பங்குனி திருவிழா டாமா!!” என்றார்..
“எங்க நா வந்ததிலிருந்து திருவிழாவாத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்.. கேப்பே விடாம எப்படி இப்படி கொண்டாடுறாங்க நீங்க எல்லாம்.. ஊரு சுத்தி கோவில்.. கோவில் முழுக்க முழுக்க திருவிழாக்கள்!!” என்று அவள் அதிசியத்து கேட்க அவரோ ரசித்து சிரித்தார்.
நீ மாசி மாசம் வந்தல்ல ராசாத்தி.. அப்பத்திலிருந்து திருவிழாக்க களை கட்டும்.. அப்புறம் மதுரைன்னா என்ன நினைச்ச? இதெல்லாம் வெறும் சின்ன சின்ன கோவிலுக.. அப்பப்போ இது போல திருவிழா நடக்கும்.. சித்திரை திருவிழா ஆரம்பிக்கட்டும் அப்புறம் பாரு கண்ணு.. களை கட்டும் மதுரயே.. கொடியேற்றம் முதல் அழகர் மலை திரும்புற வர, சித்திரை திருவிழா சும்மா ஒரு மாச காலம் நடக்கும். பாட்டு.. ஆட்டம்.. கலை நிகழ்ச்சின்னு அந்த நாட்கள் முழுவதும் மதுர முழுவதும் விழாக் கோலமாம்தேன்.. காண கண்ணு ரெண்டும் பத்தாது” என்றார். தாய் மண்ணின் சிறப்புகளை சொல்லி தரவா வேண்டும் பேசுவதற்கு..
அதுவும் மதுரை என்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் அல்லவா? “இன்றும் டேய் நா மதுர காரன் டா!!” என்று கெத்தாக செல்லும் ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!
இப்படியாக நேரம் சென்று கொண்டிருக்க அடுத்து சில நேரத்தில் அங்கே வேந்தனின் குடும்பமும் வந்து இறங்கியது..
“என்ன அவங்க குடும்பமா இங்க வந்திருக்காங்க?” என்று வேந்தன் குடும்பத்தை இவள் கண்களால் காட்டி கேட்க..
“இது நம்ம வகையறாக்களை பாத்தியப்பட்ட கோவிலு கண்ணு.. அவிய்ங்களும் நம்ம வகையறா தானே!!” என்றார் அப்பத்தா அதற்கு மேல் எதுவும் பேசாமல்..
நிவேதிதாவும் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் மரியாதையையும் வரவேற்பையும்.. அதற்காக அழகு சுந்தரம் குடும்பம் மட்டும் சாதாரணமானது இல்லை.. ஆனாலும் இவர்களை விட ஒரு படி மேலே அவர்கள் குடும்பம் வரவேற்கப்பட்டது.
அழகுசுந்தரம் குடும்பத்தை எதிர்ப்பட்டவர்கள் வணக்கம் சொல்லி வரவேற்க.. வேந்தன் குடும்பத்தையோ தேடி சென்று வணக்கம் வைத்து வரவேற்று வந்தார்கள். ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. இரு குடும்பமும் இந்த பகுதியில் நல்ல பெயர் பெற்ற குடும்பம். ஆனால் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இவ்விரண்டு குடும்பத்திற்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அது மற்றவர்களும் தெரிந்து தான் இருக்கிறார்கள். இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே தீர்மானித்துவிட்டாள் நிவேதிதா!!
சாமிக்கு அலங்காரங்கள் முடித்து படையலிட்டு பூஜைகள் எல்லாம் முடிந்து சாவதானமாக ஆங்காங்கே அமர்ந்து எல்லாரும் பேசிக் கொண்டிருந்த தருணம்!!
திருவிழாக்கள் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து மகிழ்ச்சியாக அந்த தருணத்தை அனுபவிக்க.. வேந்தன் குடும்பம் முழுக்க முழுக்க பெண் எடுத்தது கொடுத்தது என்று தலைமுறை தலைமுறையாக எல்லாமே அந்த ஊருக்குள்ளே.. அதனால் அங்காளி பங்காளி மாமன் மச்சான் என்று பெரிய கூட்டமே உண்டு!!
பெண்கள் எல்லாம் தனியா அமர்ந்துவிட பெரியவர்கள் சற்று அவர்களுக்குள் இன்றைய அரசியல் பொருளாதாரம் என்று வகைவகையாக பேசி தள்ளிக் கொண்டு இருக்க.. இளைஞர் பட்டாளம் தமக்குள் சிரித்துக் கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் தனியாக ரகளை செய்து கொண்டிருந்தது. பொதுவாக கதிர் இம்மாதிரி இடங்களில் சீக்கிரமாக ஐக்கியமாகி விடுவான். ஆனால் வெற்றியோ எப்பொழுதும் இருவரிடமும் ஒட்டாமல் கொஞ்சம் தனித்தே இருப்பான்.
இன்றும் அதுபோல் அமர்ந்திருந்தவனை தாண்டிச் சென்ற பெண்கள் கூட்டம்.. அவனை வம்பு இழுத்தது..
“என்ன மச்சான் பஞ்சாயத்துனு கேள்விப்பட்டோமே??” என்று ஒருத்தி ஆரம்பிக்க..
“மாமாவுக்கு இந்த பஞ்சாயத்தெல்லாம் பெரிய பஞ்சாயத்தா? அவரே எல்லோருக்கும் பஞ்சாயத்து பார்ப்பாரு!!” என்று அடுத்தவள் கூற..
“அது என்ன மாமா?? ஒன்னு விட்ட ரெண்டு விட்ட மாமா அய்த்த பொண்ணுங்கன்னு நாங்க இத்தனைச் சிறுக்கீங்க இருக்கோம்.. எங்களையெல்லாம் விட்டுபுட்டு அந்த வெள்ளைக்காரியை பார்த்து அவ கூட போயிட்டீங்களே” என்று குத்தமாக கூறாமல் வருத்தமாக கூறியது அந்தப் பெண்கள் கூட்டம்..
கொஞ்சம் பின்னாடி தள்ளி அமர்ந்திருந்த நிவேதா காதிலும் இவை விழத்தான் செய்தது. அதிலும் வேண்டும் என்று அந்த பெண்கள் சற்று உரக்க அவளுக்கு கேட்கும்படி தான் பேசினார்கள். “என்ன இப்படி டைரக்டரா பேசுறாங்களே??” என்று அவள் அவர்களை பார்த்ததும் விழிக்க..
இது என்ன இதுக்கு மேலயும் பேசுவோம் என்று அவளுக்கு காட்டியது அக்கூட்டம்!!
“இங்க பாரு மாமா.. இந்தா மாநிறமா தேன் கலரா இருக்குறது நம்ம கலரு.. வெள்ளையா இருக்குறதெல்லாம் நோயாம் மாமா.. நீங்க படிச்சது இல்ல? நீங்கதான் மெத்த படித்தவர் ஆச்சே!!” என்று ஒன்றுவிட்ட மாமன் மகள் கேட்க..
“ஆத்தா!! இத்தோட போதும்னு என்னைய விட்டுடுங்க என்ன??” என்று அவன் கை கூப்ப..
“அத எப்படி நாங்க உங்கள விட முடியும்.. இங்க பாருங்க அய்த்தான்.. கருப்பா இருக்கிற பொண்ண தான் கருவறையில வைச்சு கும்பிடுவாய்ங்க நம்ம ஊரு ஆளுங்க.. வெள்ளையா உள்ளவ எல்லாம் ஜவுளி கடை பொம்மையை வெளியில தான் தொங்கும்!!” என்று இரண்டு வீட்டு அத்தை மகள் அவனை வம்புக்கு இழுக்க..
அவனோ சிரிப்புடன் “இப்ப என்ன தான் ஆத்தா சொல்ல வரீய்ங்க நீங்க எல்லாம்??” என்றான்.
“அதாகப்பட்டது.. சிம்மகல்லு.. பழங்காநத்தம்.. அவனியாபுரம்.. செல்லூர்.. பசுமலை இப்படி ஊர் பூரா சொந்தங்களையும் சொந்தத்துக்கு இரண்டு மூனு முறை பொண்ணுங்களையும் வைச்சுகிட்டு.. அதுல என்ன இருக்குன்னு அங்க போய்டீய்ங்க? சீக்கிரமே பரிசம் போட வாங்க அய்த்தான்!!” என்று சிரிப்புடனே கூறிவிட்டு அந்த பெண்கள் கூட்டம் நகர எத்தனிக்கும் போது கதிர் வந்தான் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே..
“என்னங்கடி ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கு.. அதிலும் எங்க அண்ணன வச்சு என்னடி பண்றீங்க?” கேள்வியுடன் அவர்களை பார்த்தான் கதிர்.
“ஆமா உங்க அண்ணன் இப்ப தான் குத்தவச்ச சின்ன பொண்ணு.. அதன் கூடி நின்று கும்மி அடிக்கிறோம்.. போய்யா அங்கிட்டு” என்று வாயாடி விட்டு போக..
“ஆனாலும் வாய் இருக்கு பாரடி உங்களுக்கு எல்லாம்!! எவன் மாட்ட போறானோ??” என்று அவன் கேட்க.. மற்றொருத்தியோ கண்களால் கதிருக்கு தூண்டில் போட..
“மாட்ட மாட்டேன்டி!! இந்த சிங்கம் உங்க கிட்ட எல்லாம் அசிங்க படாது.. எங்க அம்மாவுக்கு உங்கள மாதிரி பஜாரி வாயாடி எல்லாம் மருமகளாக கூட்டிட்டு வர மாட்டேன் போங்கடி அங்கிட்டு!! எங்க அண்ணனை விடுங்க” என்று அண்ணன் அறையில் காவலாக அமர்ந்துகொண்டான்.
“உங்களைய யாரு கட்டிக்க ஆசைப்பட்டா?” என்று ஒருத்தி கேட்க..
“வாடி ஆத்தா.. பின்ன எங்க அண்ணனையா? இரண்டாம் தாரமாக கூட உன்னைய கட்ட மாட்டான் எங்க அண்ண?” என்றான் கெத்தாக!!
“இரண்டாவதா என்ன? அஞ்சாவது வந்தா கூட எங்க அய்த்தான கட்டிக்க நான் ரெடி!!”
என்று ஒருத்தி கூற..
“எவளாவது கிட்ட வாங்க..??” என்று அண்ணனை மறைத்தவாறு அவன் நிற்க.. வெற்றியோ சிரிப்புடன் அவனை இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்டான்.
“ஆமாமா போற இடத்துல எல்லாம் உங்க அண்ணன அக்கத்துல வைச்சு கூட்டிட்டு போங்க.. அப்பத்தான் பத்திரமா இருப்பார்” என்று அதற்கும் கதிரை வாரி ஊற்றி விட்டு சென்றது அப்பெண்கள் கூட்டம்.
“என்னா வாயி.. என்னா வாயி.. இவளுங்களை கட்டிக்கிட்டு எப்படி தான் அவளுங்க புருஷன் சமாளிக்க போறாய்ங்களோ?? பாவம் நம்ம அங்காளி பங்காளி எல்லாம்!!” என்று வருத்தப்பட்டவனின் தலையில் அடித்து சிரித்தான் வெற்றி.
இவர்களெல்லாம் பேசப்பேச ஓரக்கண்ணால் நிவேதிதாவை பார்த்துக் கொண்டேதான் இருந்தான். அவள் முகம் பாவனைகளையும் உணர்வுகளையும் அவதானித்துக் கொண்டு..
சில பேச்சுக்கள் அவளுக்குப் புரியாமல் புருவங்களை சுழித்தாலும்.. பலவற்றை புரிந்துகொண்டு கோபத்தில் புசுபுசுவென மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.
அதற்கு பின் வந்தவர்களுக்கு கோயில் சார்பாக மரியாதை அளிக்கப்பட ஒவ்வொரு குடும்பமும் தங்கள் அங்காளி பங்காளி உடன் வந்து மரியாதை பெற்றுக் கொண்டிருந்தனர்.
ஆண்கள் எல்லாம் இங்கே நின்று கொண்டிருக்க.. அவர்கள் வீட்டுப் பெண்களோ சற்றுத்தள்ளி அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
இது எதுவும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை நிவேதிதாவுக்கு. அப்படியே பின்னுக்கு நடந்து வந்தவள் ஐஸ் பெட்டிக்காரனை பார்த்ததும்.. அதுவும் பிள்ளைகள் பலர் கலர் கலராக விதம் விதமாக சேமியா ஐஸ் பால் ஐஸ் என்று சுவைத்து கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு தானாக எச்சில் ஊற ஆரம்பித்தது.
வேகமாக ஓடி சென்று அப்பத்தாவின் சுருக்கு பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தவள், நூறு ரூபாய் கொடுத்து ஐஸ் கேட்க.. அவனோ சில்லறை இல்லை என்க.. “மீதம் நீயே வச்சுக்கோ!!” என்றவாறு 2 ஐஸ் வாங்கி இரண்டு கைகளை பிடித்துக் கொண்டு சுவைத்துக் கொண்டிருந்தாள்.
“நூறு ரூபாய்க்கு இரண்டு ஐஸ்.. பலே!! பலே!! நீ சம்பாதிச்சா காசோட அருமை தெரிஞ்சிருக்கும்!!” என்ற குரலில் திடுக்கிட்டாலும் முன்னை போல பயப்படவில்லை அவள். இரண்டு குடும்பங்களும் இங்கேயே இருக்க.. அப்படி என்ன செய்து விடுவான் என்று தைரியம் தலைதூக்க அவனை கண்டுகொள்ளாமல் ஐஸை சுவைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
நடந்து கொண்டே சென்றவள் ஒரு சந்துக்குள் நுழைய அங்கே வழியில்லாமல் முட்டி நிற்க..
திரும்ப வந்த வழி வந்தவளுக்கு, இடம் கொடுக்காமல் மறைத்தபடி நின்றிருந்தான் வெற்றி.
பெண்ணவளோ போக முயன்றும் ம்ஹூம் அசைந்து கொடுக்கவில்லை அவன். கையை குறுக்காக அவள் முதுகை அணைத்த நிலையில் இருக்க.. அவளது புஜத்தை இறுக்கிப் பிடித்தது அவனது இடது கை. அவனோ அவள் உடம்பின் மேல் பட்டும் படாமல் நின்றுக் கொண்டிருந்தான்.
அவன் முகம் தன்னருகே நெருங்குவதை பார்த்து, சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள் நிவேதிதா. பச்சை நரம்புகளோடும் அவளின் வெண்ணிற அழகான கழுத்தில் அவனின் உதட்டைப் பதித்து அழுத்தி உரசினான்.
அவள் கழுத்தில் பட்ட அவனது மூச்சுக் காற்றின் வெப்பம்.. அவள் பெண்மையை நடுங்க வைத்தது. நடுங்கும் தன் உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்வியபடி.. பயத்தில் கண்களை மூடினாள் நிவி.
“ஹெலோ.. ஹல்க்.. என்ன பண்ற? ஒரு சத்தம் போட்டா போதும் மொத்த குடும்பமும் வந்து விடும். ஜாக்கிரதை!!” அவன் முகத்தை ஐஸ் வைத்திருந்த கையால் தள்ளியபடி அவள் கோபமாக சொல்ல..
”ஆஹான்.. கூப்புட்டு தானே பாரேன்.. எங்க வராய்ங்களா பார்ப்போம்?” என்றான்.
”இது நல்லால்ல.. இட்ஸ் நாட் ஃபேர்!!” என்றாள் எழுப்பாத குரலில்..
”எது?? கழுத்துல கிஸ் பண்றதா?? அதான் உன் லிப்புல கிஸ் பண்ண வந்தேன். நீதான் சட்டுன்னு.. முகத்த திருப்பிட்ட.. நெக்ஸ்ட் டைம் திருப்பாத.. ஓகே?” என்றவன் அவள் வயிற்றின் மேலே சென்று இடுப்பில் கையைப் படர விட்டான். அவளோ வயிற்றை எக்கி சந்து சுவற்றில் பல்லி போல ஒட்டி நிற்க..
அவளைப் பார்த்துக் கொண்டே, நாக்கை நீட்டி வாயில் கவ்வி ஐஸை சூப்பினான் வெற்றி. இரண்டு முறை சுவைத்து விட்டு மீதமிருந்ததை திருப்பி அவள் வாயில் திணித்தவன், “நீ சாப்பிடல?? சாப்பிடு!!” என்றான்.
அவன் உள்ளே திணித்த ஐஸை சுவைக்காமல் அவள் நின்றிருக்க..
ஐஸ் மொத்தமும் அவள் வாயில் கரைந்து தீர்ந்து வழிந்தது.. ஐஸ் குச்சியை மட்டும் வெளியே எடுத்தவன், “உனக்கு காசோட அருமை தெரியல.. கொஞ்சம் கூட உன்னை கண்டிச்சு வளர்க்கல உங்க அப்பன்.. பாரு ஐஸ் கரைஞ்சு வேஸ்ட் ஆகுது.. காசு எல்லாம் ஐஸா வீணா போகுது.. ம்ப்ச்” என்று வருத்தப்பட்டவன், அவள் வாயில் இருந்த ஐஸை விழுங்கும் முன் அவள் வாயைக் கவ்வினான். ஐஸ் மணத்தையும், சுவையையும் அவள் வாயில் இருந்து ருசித்தவன், முழுவதுமாக உண்டுவிட்டு நாக்கினால் சுத்தமும் செய்து விட்டு “சேமியா ஐஸ் செம” என்றுவிட்டு அவ்விடத்தில் இருந்து நொடியில் மறைந்தவன், அங்கே மரியாதை செய்யும் இடத்துக்கு யாரும் அறியாமல் சென்று நல்ல பிள்ளை போல நின்று கொண்டான்.
அன்று இரவு மேகநாதன் தூங்கும் நேரத்திற்கு சற்று முன்னே அவரது வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வர.. அதை நர்ஸின் உதவியால் பார்த்தவர் பார்த்தப்படி
அதிர்ந்து போனார்.
அடுத்த நிமிடம் அந்த அறையே அதிரும் வண்ணம் “நோ.. நோ.. இட் வோண்ட் ஹேப்பண்ட்.. சுவாதி!! சுவாதி!!” என்று குளறலாக வந்தாலும் வார்த்தைகள் கோபமாக.. ஆத்திரமாக.. வந்தது.
அன்றிரவு சீக்கிரமே வந்து விட்ட சுவாதி கணவனின் அலறல் கேட்டு வேகமாக ஓடிவந்து அறையில் பார்த்தார். ஏதேனும் உடம்பு சரியில்லையோ பழையப்படி என்று பயந்து ஓடி வந்தவர் தன் கணவனின் ஆரோக்கியத்தைத் கண்களால் முழுதாக அறிந்து கொண்ட பின்னரே அவரிடம் நெருங்கினார்.
“என்னாச்சு நாதன்? ஏன் இப்படி கத்துறிங்க.. எதும் ப்ராப்ளமா? உடம்புக்கு ஏதும் செய்யுமா?” என்று கேட்டார். ஆயிரம் வேலைகள் அவரை சூழ்ந்து நின்றாலும் கணவன் அலறியதும் அவரின் உடல் ஆரோக்கியமே மனதில் முன்னால் வந்தது.
இதுவரை மேகநாதன் இவ்வாறெல்லாம் கோபப்பட்டு கத்தியது கிடையாது.
“எனக்கு இப்பவே இந்தியா போகணும்!! உடனடியாக போகணும்!! நீ என்ன செய்வ.. ஏது செய்வேன்னு எனக்கு தெரியாது!! நான் இந்தியா போயாகணும்.. ஏற்பாடு பண்ணு!!” என்றார் எங்கோ வெறித்து பார்த்தபடி.. ஆனால் அவரின் வார்த்தைகளில் அவ்வளவு ஒரு அழுத்தம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டளை!!
இத்தனை வருடங்களாக கணவனாக பார்த்த மேகநாதனுக்கும் இப்பொழுது கட்டளையிடும் இந்த மேகநாதனுக்கு எவ்வளவு வித்தியாசங்கள்!! மறுத்து பேச முடியாதபடி அவ்வளவு ஒரு இறுக்கம் அவரது முகத்தில்..
செய் அல்லது செத்துமடி என்பது போல சொன்னதை செய் என்றவாறு அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் கூர் ஈட்டியாய் குத்தி நின்றது சுவாதியை. இதுவரை நம்மிடம் அன்பும் காதலும் குழைவுமாய் பேசிய மேகநாதன் உண்மையா? அல்லது எவ்வளவு இறுக்கமாக கோபத்தோடு கட்டளையிடும் எந்த மேகநாதன் உண்மையா? என்று புரியாமல் சிறிது நேரம் கணவனையே பார்த்திருந்தார் சுவாதி.
“டூ வாட் ஐ சே சுவாதி!!” என்று மறுபடியும் அவர் வார்த்தைகளை கடித்துத் துப்ப அதற்குமேல் மறுக்க முடியாமல் இருவருக்கும் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற மாதிரியான வேலையில்லை அவர்களது. பரந்து விரிந்த அவரது தொழிலையும் அதற்கேற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கூடவே அவ்வப்போது தன்னிடம் அது பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். இதுவரை கட்டிக் காப்பாற்றி கொண்டிருந்த அந்த வலைத்தலை அமைப்பை, கொஞ்சமும் மாற்றாமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்கவே அவர்களுக்கு இரண்டு நாள் ஓடி இருந்தது.
அந்த இரண்டு நாட்களும் யாரையும் தன்னிடம் அண்ட விடாமல் ஒரு நெருப்பு வளையம் ஆகவே மாறி அனைவரையும் வார்த்தைகளால் சுட்டுக் கொண்டிருந்தார் மேகநாதன்.
இருப்பதைந்து வருட வாழ்க்கையில்.. இப்படிப்பட்ட மேகநாதன் அவருக்கு புதிது!!
இந்தா அந்தா என்று இவர்கள் இந்தியாவிற்கு வந்து மதுரைக்கு வந்து சேரும்பொழுது சித்திரைத் திருவிழா ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்து இருந்தது.
இந்தியா வந்த அடுத்த நிமிடமே அவருக்கு அன்று காணொளி அனுப்பிய அதே நம்பரில் இருந்து காலும் வந்தது.
“வா..வா.. மேகநாதா!! உன் வரவுக்காக தான் மதுரையும் நானும் வெயிட்டிங்!!” என்று கர்ஜித்த குரல் அடுத்த நொடி இடிஇடியென்று சிரித்து விட்டு போனை வைக்க.. வழியும் வேர்வையை கூட துடைக்க மறந்து அமர்ந்திருந்தார் மேகநாதன்!!
கூடவே தன் அருகே காரில் தூங்கும் மனைவிக்கு தெரியாமல் அந்த காணொளியை மீண்டுமொரு முறை ஓட்டிப் பார்த்தார்!!
காதலே.. காதலே..