ATM Tamil Romantic Novels

உறவே உயிரே பிரியாதே .. அத்தியாயம் ஒன்று

சிவகிருபை இல்லம்

இது சென்னை நுங்கம்பாக்கம் ..லயோலா காலேஜ் அருகில் சுமார் 10000 சதுர அடியில் மிக பெரிய பங்களா. அந்த காலத்து மாடர்ன் பங்களா . அரண்மனை போல இருக்கும்.

இந்த வீட்டின் சொந்தக்காரர் சிவநேசன் (78). அந்த காலத்தில் தேனி பக்கம் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிக பெரிய சிவ பக்தர். இவருடைய மனைவி மீனாட்சி (70 ) .

தேனியில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டு பிள்ளைகளின் படிப்பிற்க்காக சென்னை வந்து அப்போதே இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டினார். இன்னமும் ஒரு இடத்தில கூட விரிசல் இருக்காது. 1500 சதுர அடிக்கு தோட்டம் கிணறு பூச்செடிகள் தென்னை , மா, கொய்யா , மாதுளை, சப்போட்டா , பலா, நெல்லிக்காய் , வாழை என அனைத்தும் இருக்கும். காய்கறிகள் எதற்கும் கடைக்கு சென்று வாங்கியதே இல்லை. வெற்றிலை கொடி கூட அங்கே உண்டு..

இவர்களுக்கு ஒரு பையன் ,சிவக்கொழுந்து வயது 52.ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியர். இவர் மனைவி பர்வதம் (49 ). வீட்டோடு கணவர் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு ஹவுஸ் வைஃப்.

ஒரு பெண் பார்வதி (44 ) , சிவக்கொழுந்துவுக்கு தங்கை , இவர் ஒரு தேசிய மயமாக்க பட்ட வங்கியில் மேலாளர். இவர் பெங்களூருவில் தன் கணவர் வெங்கடேசனுடன் வாழ்ந்து வருகிறார். வெங்கடேசன்(47 ) ஆடிட்டர் நிறுவனம் ஒன்றை நடத்தி கொண்டுள்ளார். மிக பெரிய ஆட்கள் , நிறுவனங்களின் ஆடிட்டர் இவர். இவர்களுக்கு ஒரே மகள் செல்ல மகள் தீபிகா (22). IIMவில் கொல்கத்தா  MBA முடித்து இருக்கிறார்.  நவநாகரீக பெண்.  

சிவக்கொழுந்து தன் பெற்றோர் மற்றும் பிள்ளைகளோடு அனைவரும் இந்த வீட்டில் உள்ளார்.

நேரம் காலை 3 மணி
சிவக்கொழுந்து தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். சிவ பக்தர். சைவத்தை விடாது கடைபிடிப்பவர். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் சிவ பூஜை செய்வதை இன்று வரை நிறுத்தியது இல்லை.

இந்த பழக்கமும் தன் தந்தையிடம் இருந்து இவருக்கு வந்த பழக்கம்.
வெளியூர் சென்றாலும் இரவு தூங்குவதற்கு வந்து வீட்டுக்கு வந்து விடுவார்.
காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வேஷ்டி கட்டிக்கொண்டு வீட்டில் வைத்துள்ள 8 சென்டி மீட்டர் அளவில் உள்ள அந்த ஸ்பெஷல் மரகத லிங்கத்திற்கு பூஜை செய்து விடுவார். இது வரை தவற விட்டது இல்லை.

மனைவி பர்வதம் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பிள்ளைகள் இரண்டு பேர் ஒருவன் ஸ்ரீராம் (25) மற்றும் தங்கை நிவேதா (18 ), MBBS படித்துக்கொண்டு இருக்கிரார்.

ஸ்ரீராம் கார் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைன் என்ஜினீயர். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து இருக்கிறான். அவனது கனவு தனியாக ஒரு கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதில் நம்பர் ஒன் நிறுவனகமாக மாற்றி காட்டவேண்டும் என்பது தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சிவகாழுந்து இன்று அவர் அவை தூக்கம் வராமல் தவிப்பதற்கு காரணம் உடல் நிலை சரி இல்லை. குளித்து சிவ பூஜை செய்ய முடியுமா ? என்ற வலுவான சந்தேகம் அவர் மனதில் எழுந்தது தான் காரணம்.

பக்கத்தில் உறங்கிக்கொண்டு இருந்த மனைவி பர்வதத்தை எழுப்பினார்.

பர்வதம் “என்னங்க என்ன ஆச்சு” என்றார்

அவர் “என் உடல்நிலை சரியில்லை லேசாக மயக்கமாக இருக்கிறது. ஸ்ரீராமை எழுப்பி சிவ பூஜையை செய்ய சொல்” என்று சொன்னார்.

“என்னங்க அவன் இரவு மிக தாமதமாக தான் வந்து படுத்தான். அவனை இப்போ எழுப்பினால் என்னை திட்டுவான்” என்றாள்.

நிவேதாவை கைபேசியில் அழைத்தார் சிவநேசன். உடனே எடுத்தாள். என்னப்பா என்றாள். எனக்கு உடல்நிலை சரி இல்லை.. ஸ்ரீராமை எப்படியாவது இன்று சிவ பூஜை செய்ய சொல் என்றார் .

ஓகே அப்பா நன் போய் அவனை எழுப்பி விடுகிறேன் நீங்கள் கவலைப்படாமல் தூங்குங்கள் என்றாள்.

அவன் ரூமுக்குபோய் அவனை எழுப்பினாள். டேய் அண்ணா ..எழுதிருடா என்றாள்.

“என்னடி” என்றான்.
“அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லை நீ இன்று சிவ பூஜை செய்ய வேண்டும் இது அப்பாவின் உத்தரவு.. ” என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள் தன் அறைக்குள்.

மணியை பார்த்தான்.. அடப்பாவிகளா “நடு ராத்திரி 4 மணிக்கு!! ” எழுப்புகிறீர்களே .. என மனதில் நிவேதாவை திட்டிக்கொண்டே அப்பா உத்தரவை மீற முடியாமல் எழுந்தான்.

சிறுவயதில் அப்பாவோடு ஆசை ஆசையாய் அவனும் சிவ பூஜை செய்வது உண்டு. வாலிபன் ஆனதும் அந்த பக்கமே எட்டி பார்ப்பது இல்லை. இன்று வேறு வாழி இல்லாமல் சிவ பூஜை செய்தான்.

அப்பா தன் அறையில் இருந்து இவன் சிவஸ்துதி சொல்லவது எல்லாம் கேட்டார். எப்படியோ இன்று அவனை செய்ய வைத்துவிட வேண்டும் என நினைத்து அதை முடித்து விட்டார். சிவ பூஜை அந்த வீட்டில் செய்யமல் போனால் ஏதாவது கஷ்டம் வந்து விடுமோ என பயந்தார்.

இத்தனை நாட்கள் இவனிடம் எத்தனையோ முறை அவர் கேட்டது உண்டு.
சிவக்கொழுந்து தன் 15 வையத்து முதல் செய்து வருகிறார். அந்த பூஜையால் தன் வீடு குடும்பம் நன்றாக இருப்பதாக நம்பினார்.

அதனால் தன் இன்று சியா முடியாவிட்டால் ஏதும் யாருக்கும் கேட்டது நடந்து விடுமோ என அஞ்சினார். நல்லவேளை இன்று ஸ்ரீராம் செய்துவிட்டான். இனி அவனிடமே அந்த பொறுப்பை வழங்கிவிட முடிவு செய்தார்.

ஸ்ரீராமுக்கு பூஜை செய்வது பிடிக்கும் ஆனால் காலையில் 4 மணிக்கு எழுவது தான் கஷ்டமான காரியம் என நினைப்பான்.

அம்மா பர்வதம் அனைவர்க்கும் காபி கொண்டு வந்தாள். ஸ்ரீராமிடம் காபி கொடுத்து விட்டு , டேய் ஸ்ரீராம் இனி நீதாண்டா இந்த சிவ பூஜை செய்ய வேண்டும். அது தான் அப்பாவின் மற்றும் என் அசையும் கூட.

அப்பாவுக்கு வர வர உடம்புக்கு எதுவது வந்து விட்டால் என்ன செய்வது என்று கவலை பட்டுக்கொண்டே ஸ்ரீராமிடம் இந்த கைங்கர்யத்தை கொடுத்து விட எண்ணியிருந்தார்..அது இன்று நடந்து விட்டது அவருக்கு ஆனந்தம்.

ஸ்ரீராம் அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சென்றான்.

அவர் அவனை வாழ்த்தி அவன் கழுத்தில் ஒரு தங்கசங்கலியில் கோர்க்கப்பட்ட ஒரு “ஒன்பது முக ருத்ராட்சம்” அணிவித்து விட்டார். எல்லாம் வல்ல சிவா பெருமான் உனக்கு அனைத்து ஆற்றல்களையும் தரட்டும் என்று வாழ்த்தினார். அவனுக்கு அதை அனைத்துமே ஏதோ ஒரு புதிய சக்தி கிடைத்தது போல இருந்தது.

நன்றி அப்பா என அவர் கால்களில் மீண்டும் விழுந்து வாங்கினார்.
அவன் தாத்தா சிவநேசனும் மீனாட்சியும் அவனை கூப்பிட்டு , “டேய் ஸ்ரீராம் இனி நீதான் இந்த வீட்டின் தலைவன் அனைத்து பொறுப்புகளையும் எடுத்து செயலாற்று.. அதற்குண்டான சக்தி இந்த ருத்ராட்சம் கொடுக்கும்” என்றார்கள்.

அவன் தங்கை இதை அனைத்தையும் பார்த்தவாறு ” அண்ணா வாழ்த்துக்கள்.. ” என்றாள்.

சிவநேசன் சிவக்கொழுந்துவிடம் “இவனுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திவிடு. இந்த வீட்டின் இன்னொரு தலைமுறையை பார்த்து விட்டு செல்கிறேன் ..” என்றார்..

இவனுக்கு எந்த பெண்ணின் ஜாதகமும் சேரவில்லை அப்பா.. ஒரு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.. என்றார்.

சரி இவன் ஜாதகத்தை கொடு நான் இன்று நம் குடும்ப ஜோசியர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கிறார்.. அவரிடம் நேரில் சென்று கேட்டு வருகிறேன் என்றார்..

அதே நேரம் சிவக்கொழுந்துவின் தங்கை பார்வதி பெங்களூருவில் இருந்து வைத்தீஸ்வரன் கோயில் புறப்பட்டார்கள்.

பார்வதிக்கு திருமணமான புதிதில் அவள் கணவருக்கு அந்த அளவு வருமானம் இருக்கவில்லை. CA முடித்து விட்டு ஒரு சீனியர் ஆடிட்டர் இடம் வேலைக்கு சேர்ந்து இருந்தார். அவர் தந்தை பேராசை கொண்டு சொத்தில் சரி பாதி கேட்டார். பெண்ணுக்கும் சொத்தில் பங்கு உண்டு .. கொடுக்காவிடில் கோர்ட் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.

அன்றைய மார்க்கெட் ரேட் படி இந்த சொத்தில் பாதி என்னவோ அதை பணமாகவும் நகையாகவும் பெங்களூரில் புதிதாக வளர்ந்து வந்த நகர்புறத்தில் ஒரு 3000 சதுர அடியில் வீடும் அமைத்து கொடுத்தனர்.

ஆனால் அந்த செய்கைக்கு பிறகு இவர்கள் குடும்பத்தில் ஓட்டுதல் இல்லாமல் போய் விட்டது. சிவக்கொழுந்து குடும்பமும் பார்வதி குடும்பமும் அடியோடு வெட்டிக்கொண்டு போய் விட்டனர். ஒரு தகவல் பரிமாற்றமும் இல்லை.

இப்போது பார்வதியும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து கொண்டு வந்து இருக்கிறாள்.

பார்ப்போம் மீண்டும் அடுத்த அத்தியாயத்தில்.

 

 

1 thought on “உறவே உயிரே பிரியாதே .. அத்தியாயம் ஒன்று”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top