தன்னிலையில்லை மேகநாதன். மனம் வலிக்க.. கனக்க.. இருந்தார்.
தன்னிலை மறந்து மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்ததார் அவர்.
எவ்வளவு சீக்கிரம் இந்தியா செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றாக வேண்டும் என்று இதுவரை காதல் மொழி தவிர வேறு எதுவும் பேசாத மனைவியிடம் கட்டளையிட்டார்.
அவருக்கே தெரியும்!! கண்டிப்பாக குடும்பத்தில்.. அவரின் காதல் வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்த போகிறது என்று.. அதுக்காக.. அதுக்காக எல்லாம் அவர் இங்கு இருந்து விடக்கூடாது. அது அவர் பாசமிகு பெண்ணின் வாழ்க்கையின் பலமாகப் பாதிக்கும்!!
ஆம்!! பெண் வாழ்க்கையை..
அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில்..
அன்று ஹோட்டல் கழிவறையில் வெற்றி நிவேதிதாவிடம் காட்டிய நெருக்கம்.. அவனின் தீண்டல்.. எல்லைமீறல்.. அவளின் பயம்.. இப்படி அனைத்தையும் பலவித கோணங்களில் துல்லியமாக ஒளிப்பதிவு செய்து.. ஒளியும் ஒலியும்.. ஆங்காங்கே எடிட்டிங் செய்து பக்காவாக அனுப்பி வைக்கப்பட்டது மேகநாதனுக்கு.
பார்த்தவருக்கோ மனம் பதறிப் போனது. பதற தானே செய்யும் பெற்றவர் ஆயிற்றே!!
ஆயிரம்தான் வெளியிடங்களில் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் ஆண்கள்.. தன் வீட்டுப் பெண்களை மிகவும் பொத்தி பொத்தி வளர்ப்பர். தான் செய்த செயலின் வீரியத்தை.. நமக்கு யாராவது ஒருத்தர் தலையில் சுத்தியால் அடித்த மாதிரி புரிய வைத்தால்.. உணர வைத்தால்.. மட்டுமே நமக்குப் புரியும்..
சும்மாவா சொன்னார்கள் கர்மா பூமராங் என்று!!
இதோ வந்து விட்டதல்லவா மேகநாதனை திருப்பித் தாக்க.. வெற்றியின் வடிவில்!!
அரசன் அன்று கொல்லுவான்!!
தெய்வம் நின்று கொல்லும்!! என்பது போல..
வேந்தனாய் நியாயம் செய்ய வந்த விட்டான்!!
அதுவும் சித்திரைத் திருநாளில்.. அந்தக் கடவுளே மனிதனை காண வீதி உலா வரும் நாட்களில்!!
மேகநாதனுக்கு காணொளியை அனுப்பியதும்.. அவருக்கு போன் செய்து பேசியதுமே நம் வெற்றி வேந்தனே!!
மதுரை ஏர்போர்ட்டில் இறங்கி சிம்மக்கல்லை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மேகநாதனின் வாகனம்!!
வருடத்துக்கு ஒருமுறை வந்து போதும் கூட அவ்வளவாக வெளியிடம் எல்லாம் கூர்ந்து கவனிக்க மாட்டார். பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் இருந்து விட்டு வீடு திரும்புபவர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை விஜயம் மேகநாதன்!!
இன்றோ மனது தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்க.. மக்கள் மட்டுமல்ல ஊரும் நிறைய மாற்றம் கண்டு இருந்தது.
இதுவரை அந்த காணொளியை நூறு தடவைக்கு மேலாக பார்த்திருப்பார் அவர்.
முதல் தடவை பார்க்கும் போது எப்படி வலித்ததோ.. அதே போல தான் இப்பவும் வலித்தது அவருக்கு!!
இமைகள் மூடினாலும் கண்களில் தூக்கம் வரவில்லை.. யார் இது? எதற்காக என் பெண்ணை இப்படி செய்கிறான்? இது அண்ணனுக்கு தெரியுமா? எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ளும் என் பெண் இதை ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? இப்படி ஒரு அத்துமீறலை அவள் எங்கனம் தாங்கினாள்? மனதெல்லாம் ஒரே குழப்பமாகவும்.. வருத்தமாகவும்.. கோபமாகவும் இருந்தது மேகநாதனுக்கு.
முதலில் தன் பெண்ணின் பத்திரத்தை கண்களால் காண வேண்டும்.. என்று ஒரே எண்ணத்தோடு தான் பயணித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் எண்ணமெல்லாம் மதுரை நுழையும் வரை மட்டுமே.. இனி அவனின் செயல்!! அந்த அவன் வெற்றி வேந்தன்!!
சுவாதிக்கோ கடந்த நான்கு நாட்களாக ஓய்வின்றி வேலை செய்தது கணவனின் இந்த திடீர் முகம்.. இது எல்லாம் சேர்ந்து அவரை மிகவும் சோர்வாக வைத்திருந்தது. காரில் ஏறி சிறுது நேரம் கணவனை பார்த்தார் ஏதாவது பேசுவார் என்று? ஆனால் மேகநாதன் தானும் வழக்கத்திற்கு மாறாக இறுக்கமாக அமர்ந்திருக்க.. பெருமூச்சு ஒன்று விட்டு விட்டு கண்களை மூடி தூங்க ஆரம்பித்து விட்டார்.
சற்று நேரத்தில் அவர்கள் வண்டிக்கு பின்னே ஹாரன் சத்தம் கேட்டது விடாமல்.. அது தொந்தரவாக இருக்க.. டிரைவரிடம் “அவனுக்கு வழியைவிடு போகட்டும்.. ஹாரன் அடித்து காது செவிடாக்குறான் யூஸ்லெஸ்ஸ் பெலோ”!! என்று மேகநாதன் திட்ட..
டிரைவரோ சரி என்று ஒதுங்க.. ஒதுங்க விட்டால் அல்லவா? அவர்கள் காருக்கு இடது பக்கமும்.. சட்டென்று வலது பக்கமும்.. இரு கார்கள் முறையாக வர.. ஏற்கனவே பின் பக்கம் ஒன்று.. “வர வர டிராபிக் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணவே மாட்டேங்குறாய்ங்க.. அவிய்ங்க எப்படி அடிச்சிக்கிட்டு போறாய்ங்க பாருங்க” என்று டிரைவர் சத்தம் போட்டுக்கொண்டே வேகமெடுக்க.. ஆனால் அவரின் வேகத்தைத் தடை செய்வது போல வலது பக்கத்தில் இருந்த கார் சட்டென்று முன்னால் செல்ல.. பின் பக்கம் வந்த கார் வலது பக்கத்தை ஆக்கிரமித்தது.
“சார்.. ஒரே டிராபிக்.. கொஞ்ச தூரம் போனதும் சரியாகிவிடும்” என்று திரும்பி மேகநாதனுக்கு பதில் அளித்துவிட்டு டிரைவர் தன் வேலையை பார்த்தான்.
மேகநாதனுக்கு மனது திரும்பவும் தனது மகள் நிவேதாவிடம் சென்று விட்டது. இப்படி சிறிது நேரம் செல்ல.. இன்னுமா வரவில்லை என்று சுற்றுமுற்றும் பார்க்க.. வண்டி சிம்மக்கல்லை நோக்கி செல்லவில்லை. அதைத் தாண்டி மலைகள் சூழ்ந்த இடத்தில் சென்று கொண்டிருந்தது.
“இது எந்த இடம் பாக்குறதுக்கு குவாரி மாதிரி இருக்கே?” என்று டிரைவரிடம் மேகநாதன் கேட்டவாறே சுற்றி முற்றி பார்க்க.. இவர் காரை சுற்றியும் கார்கள் சென்று கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் வண்டியை விட்டு விட்டு டிரைவர் இறங்கி சென்றுவிட்டான். அடுத்த கணம் இவர் பக்கம் கதவு திறக்கப்பட.. கட்டுமஸ்தாக வந்த ஒருத்தன் மேகநாதனை அப்படியே அலேக்காக தூக்கி அவரது வீல் சேரில் வைத்தான். ஒன்றும் புரியாமல்.. ஆனால் ஏதோ புரிந்த மாதிரி.. சென்றுக்கொண்டிருந்த மேகநாதனுக்கு முன் ஜீப்பில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு நின்ற வெற்றி வேந்தனின் பின்பக்கம் மட்டுமே தெரிந்தது.
“வா மேகநாதா!!” என்றவாறு திரும்பியவன் ஒரு ஜம்ப் ஆக ஜீப்பில் மேல் ஏறி உட்கார்ந்தான். அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரமும்.. வார்த்தைகளில் தெறித்த கோபமும்.. மேகநாதனின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.
அவன் கையை அசைக்க அவர்களை சுற்றி நின்று கொண்டிருந்த அடியாட்கள் விலகிப் போனார்கள். “அப்புறம் மதுரைக்கு வந்தாச்சு போல? அதுவும் சித்திரை திருவிழா நடக்கும்போது..” என்று அவன் அவரை கூர்மையாக பார்த்துக்கொண்டு கூற..
இப்போது வெளிப்படையாகவே மேகநாதன் உடல் நடுங்க தொடங்கியது. எச்சில் கூட விழுங்க முடியாமல் அப்பட்டமான அதிர்ச்சி அவரது கண்களில்!!
“வீடியோ பாத்தியா? எப்படி இருக்கு? செம இல்ல.. ஆனால் இது வெறும் டீசர் மட்டும்தான்.. முழு படமும் அப்பப்போ பிட்டு பிட்டா அனுப்பி வைக்கிறேன். பார்த்து என்ஜாயி எஞ்சாமீ” என்றான் நக்கலாக..
அவன் வார்த்தைகளில் தெறித்த அந்த நக்கல் கண்களில் இல்லை.. அது கோபத்தில் சிவந்து ரௌத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்தது.
வெற்றிவேந்தன் பேசப்பேச மேகநாதனுக்கு தலையை சுற்ற ஆரம்பித்தது. “பொண்ண பார்க்க அவ்வளவு ஆவலா?? வீடியோ அனுப்புன இரண்டாவது நாளே கிளம்பிட்ட.. அது எப்படி வந்த உடனே போய் பொண்ண பார்த்தா உனக்கு ஸ்கெட்ச் போட்டு இங்கே வர வெச்ச எனக்கு என்ன மரியாதை?? அதான் ஏர்போர்ட்டில் இறங்குன உடனே உன்னை இங்கே அள்ளிக்கிட்டு வர ஆட்களை அனுப்பினேன். ஆனாலும் உனக்கு நாலு காரு எல்லாம் அதிகம் இல்லை.. நீ எப்பவும் போல உங்க அண்ணனுக்கு விவரம் தெரிவித்துவிட்டு வருவேன் நான் நினைச்சேன்.. நீ விவரமில்லாமல் முன்னாடியே விவரம் தெரிவிக்கல போல.. அதான் உன்னோட பாடிகார்ட்ஸ் எல்லாம் காணோம்.. இதே அஞ்சு வருஷம் முன்னாடினா.. என் முன்னாடி பேசிட்டு இருக்க நீ இருந்திருக்க மாட்ட.. ஆனா இப்போ.. என்னுடைய டார்கெட் நீ இல்லை.. உன் பொண்ணு!! அதெல்லாம் கட்டம் கட்டியாச்சு.. தூக்கம் வேண்டியதுதான் பாக்கி.. உனக்கு மொத்தத்தையும் வீடியோ அனுப்பலாம்னு நினைச்சேன்.. என் உடன்பிறப்பு தான்.. நீ லைவா பாக்கணும்னு ஆசைப்பட்டான். அதுதான் சின்ன பிட்டு வீடியோவ உனக்கு தூண்டிலா போட்டு… ஆஸ்திரேலியா இருந்து உன்னை அலேக்கா மதுரைக்கு தூக்கியாச்சு.. சரி சரி வீட்டுக்கு போய்.. சொந்த கதை சோக கதை எல்லாம் பேசி ரெடியாகிக் அடுத்த கதைக்கு!!”
என்றான் கையை மேலே தூக்கி சோம்பல் முறித்தவாறு..
“வெற்றி.. என் பொண்ணு..” என்று ஏதோ பேச வந்த மேகநாதனுக்கு முன் சட்டென்று ஜீப்பில் இருந்து குதித்தவன் ஒற்றை விரலை வாய் மீது வைத்து “உஷ்!!!” என்று சொன்னான்.
“இங்கே நான் தான் பேசணும்.. நான் மட்டும் தான் பேசணும்.. அதுக்குதான் உன்னை தூக்கிட்டு வர சொன்னேன் நீ பேசுறது கேக்குறதுக்கு இல்லை.. காட் இட்!!” என்றவன், “டேய் இந்த பீஸ கொண்டுபோய் கார்ல போட்டு அவிய்ங்க வீட்டுல கொட்டிட்டு வாங்க..” என்றான் மேகநாதனை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டே..
அதற்குள் எங்கிருந்தோ வந்த அடியாள் திரும்பவும் அவரை காரில் அமர்த்தி வைக்க.. இறங்கி சென்று டிரைவர் வந்து வண்டியை எடுக்க.. வண்டி அடுத்த பத்தாவது நிமிடம் சிம்மக்கல்லில் அவர்கள் வீட்டு வாயிலில் நின்றது.
நல்ல ஆழ்ந்த தூக்கம் சுவாதிக்கு.. வீடு வந்தவுடன் அவர் சுவாதி என்று எழுப்ப..
கண் விழித்து பார்த்தார். ரொம்ப வருடங்களுக்கு பிறகு திரும்ப கணவனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். முன்னைவிட இப்போது வீட்டு கொஞ்சம் பிரமாண்டமாக இவர் கண்களுக்கு தெரிந்தது. அதேசமயம் நவீன வசதிகளையும் கொண்டு..
மெல்ல இவர் வண்டியை விட்டு இறங்க.. எதார்த்தமாக வாசலுக்கு வந்த புனிதா சுவாதியை கண்டுகொண்டு ஆச்சரியத்துடன் ஓடி வந்தார்.
“வா வா சுவாதி.. என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து இருக்கீக.. சௌக்கியமா?” என்று சந்தோசத்தோடு அவர் கையைப் பிடித்துக் கொண்டவர் அருகில் காரில் இருக்கும் தன் கொழுந்தனை பார்த்து வாங்க என்று தலையாட்டினார்.
அதன்பின் மொத்த குடும்பமும் அங்கே ஆஜராக.. உணர்ச்சியின் குவியலாய் ஆனது அந்த குடும்பம் சற்று நேரம்.
“அக்கா நிவே எங்க?” என்ற புனிதா விடம் சுவாதி கேட்க..
“பாப்பா.. இன்னும் தூங்கி எழுந்துக்கல சுவாதி.. இப்பவும் நான் எழுப்பிட்டு வர்றேன்” என்று சாதாரணமாக புனிதா கூற..
“என்னது?? மணி என்ன ஆச்சு?? இன்னுமா எழலலை?” என்று பழைய லேடி ஹிட்லராக அவர் உருவெடுத்து மகளின் அறையை நோக்கி அவர் போக எத்தனிக்க.. சட்டென்று அவரைக் கையைப்பிடித்து தடுத்தார் புனிதா.
“விடு சுவாதி.. பொண்ணுங்க நம்ம வீட்டுல இருக்கும்போது மட்டும்தான் அவிய்ங்க இஷ்டப்படி தூங்க முடியும். நாளைக்கு கட்டிக்கொடுத்திட்டா அதெல்லாம் முடியாது.. தூங்கட்டுமே” என்று கண்ணில் கெஞ்சலுடன் கேட்கும் அவரை மறுத்து பேச முடியாமல் அவர் அமைதியா இருக்க.. “கீழே உங்க ரூம்ல போய் நீங்க ரெஸ்ட் எடுங்க” அவர்கள் ரூமுக்கு அழைத்து சென்றார்.
அறையில் உறங்கிக் கொண்டிருந்தாலும் நிவேதாவின் எண்ணங்கள் முழுவதும் வெற்றியை சுற்றியே!! திருவிழாவில் அவனை சுற்றி நின்றுகொண்டு பெண்கள் கேலியும் கிண்டலுமாக பேசினாலும்.. அவன் கண்களில் சிரிப்பு மட்டுமே இருந்தது. அப்பெண்களின் மீதான சுவாரசியம் இல்லை.. அதைப்போல கண்கள் அலைபாயும் இல்லை.. பெண்களை ரசிக்கவும் இல்லை.. தன் வீட்டுப் பெண்கள் பேசும் போது நம் கண்களில் வெளிப்படும் ரசிப்புத்தன்மை மட்டுமே..
ஆனால் என்னிடம் மட்டும் காட்டும் இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? கண்களை மூடினாலே அவள் நினைவுகள் தட்டியெழுப்பப்பட்டன. அவனின் அருகாமை.. அவனின் வாசம்.. அவனின் அந்த திமிர்த்தனம்.. அவ்வப்போது கண்களில் கூர்மை. கோபப்பட்டால் கூட அவளால் அவனின் பார்வை எதிர்கொள்ள முடியும். ஆனால் சில சமயம் நிதானமாக அவளை நெருங்கும் போது அப்பப்பா அந்த கண்களில் இருந்தது தான் என்ன?? மீண்டும் கண் மூடினால் எண்ணச் சிதறல்கள்தான் விரிந்தன முற்றும் முழுவதுமாக வெற்றி!! வெற்றியே!! மனதின் அலைபாய்ச்சலில் தூக்கம் வர மறுத்தது. பெருமூச்சு விட்டு புரண்டு புரண்டு படுத்தாள். அவனை பிடிக்குமா என்று கேட்டால், சூடம் ஏற்றி சத்தியம் செய்வாள்.. பிடிக்கவே பிடிக்காது என்று!! பெண்ணிடம் அத்துமீறும் அவனை யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால் ஏதோ ஒன்று.. அவனுடைய நினைவுகளாகவே வந்து தாக்கியது பெண்ணவளை!!
அதற்குப் பின் தூக்கம் வராமல் தன்னை தூய்மை செய்து விட்டு.. “பெரியம்மா காபி” என்றவாறு சோபாவில் வந்து அவள் அமர.. அருகில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த பெரியப்பாவின் தோள்களில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அதுவரை யாரும் அவளிடம் மேகநாதன் சுவாதி வரவைப் பற்றி கூறவே இல்லை.. புனிதாவும் காபி கொடுத்துவிட்டு சிரிப்புடன் நகர்ந்து விட்டார்.
பெரியப்பாவின் தோள் வளைவிலேயே தலையை சாய்த்து காபியை உரிந்து கொண்டிருந்தவளுக்கு சற்று பக்கவாட்டு சோபாவில் அமர்ந்திருந்த மேகநாதனின் உருவம் கண்ணில் பட.. சட்டென்று கண்களை அவள் தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் பார்க்க.. சிரிப்புடன் நன்றாக இருக்கும் ஒரு கையை விரித்தார் பெண்ணை நோக்கி.. அவ்வளவு தான் காபி எங்கோ மாயமாக போக.. பாய்ந்து சென்று அந்த கைக்குள் அடைக்கலமானாள் நிவேதிதா.
அதன்பின் அங்கே அன்பு மொத்தமும் பரிமாறப்பட.. அப்பாவும் மகளும் வேறொரு உலகத்தில் சஞ்சரித்தார்கள். சட்டென்று அவள் தலையில் வேகமாக கொட்டு ஒன்று விட.. அப்போதுதான் இந்த பூலோகமே அவளுக்கு உணர்ந்தது. கொட்டியதும் யார் என்று புரிந்தது!!
“ஏன் டாட்.. வரும்போது நீங்க தனியா வர வேண்டியதுதானே? கூட எதுக்கு இந்த சுவாதியும் கூட்டிகிட்டு வந்தீங்க?” என்று தந்தையிடம் மெதுவாக முனுமுனுத்தவள் அன்னையை பார்த்து..
“ஐ மிஸ் யூ மாம்.. மிஸ் யூ பேட்லி” என்று கட்டி அணைத்துக் கொண்டாள். என்னதான் மகள் மீது கோபம் இருந்தாலும் அவருக்கும் மகளின் பிரிவு மனதை நெகிழ்த்தி இருந்தது.
“மீ டூ.. நிவே” என்று அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தார்.
காலையில் திருப்பரங்குன்றத்திற்கு வேலையாக சென்ற கதிர் அருகிலிருக்கும் மாமனார் ஊரை பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா? என்று தன் அடியாட்களிடன் கேட்டுவிட்டு கைத்தறி நகரை நோக்கி ஜாகுவாரை திருப்பினான்.
“அண்ணே.. நீங்க நடத்துங்க நடத்துங்க” என்று அவன் மேலும் ஊக்கப்படுத்த..
“இங்க பாருங்கடா நான் என்ன நடத்தினாலும் உங்களுக்கு எல்லாம் ஓசியில சீன் கிடையாது.. அம்புட்டு பயலுகளும் வண்டியை விட்டு இறங்க கூடாது.. மீறி இறங்குனிங்க?” என்று தன் விரல் நீட்டி எச்சரிக்க, நான்கில் ஒன்று.. “ஏன் ணே.. என்ன பண்ணுவீக?” என்று இளித்துக் கொண்டே கேட்டான்.
“உங்க வாழ்க்கையில இனிமேல் கல்யாணம் என்பதே கிடையாதுடா.. ஞாபகம் வச்சுக்கோங்க..” என்றுவிட்டு வண்டியை சற்று ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.
இவனுக்கு எதிர்க்க.. சட்டை பாவாடையில் ஒரு பெண் வந்து கொண்டிருக்க.. “யாருடா இந்த சின்ன பொண்ணு? ஆனா பாக்க மச்சகன்னி மாதிரியே இருக்காளே?” என்றவாறு இவனும் உத்து உத்துப் பார்த்துக் கொண்டே வந்தான்.
அவளோ அருகில் இருந்த நாயை ச்சூ என்று விரட்டி விட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள்.
‘இந்த நாய ஏன் கொஞ்சிக்கிட்டு வாரா?’ என்று இவன் யோசனையாக பார்க்க.. அந்த நாயோ பத்மாவின் காலையை சுற்றி சுற்றி வர.. அவள் அதை விரட்ட.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அந்த நாயோ அவள் கையில் இருந்த பையை பிடுங்க பார்க்க.. ஒரே ஓட்டமாக ஓடியவள் எதிரே வந்த கதிரின் மீது மோதி இருவரும் உருண்டு அருகிலிருந்த மரத்தின் வேரிடையில் அமர்ந்தார்கள்.
“அடியே.. மச்சக்கன்னி.. இப்படி ஒரு தரிசனத்தை எதிர்பார்க்கவே இல்லடி” என்றான் கதிர் தன் கால்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கும் பத்மப்ரியலோசனியை பார்த்து..
“ஆமா எதுக்கு அந்த நாயை போய் சீண்டின?” என்று கேட்க..
“நான் எங்க சீண்டினேன்.. அதுதான் என் பின்னாடியே சுத்திகிட்டு வந்துச்சு” என்றாள்..
“அப்படி என்ன நீ உன் கையில வச்சிருந்த, அது உன் பின்னாடியே படையெடுத்து வர்றதுக்கு?”
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்!!” என்று அவள் திரும்பி கொள்ள..
“இப்ப நீ சொல்ல போறிய பரமேஸ்வரனுக்கு போன போட வா?” என்று மிரட்டினான்..
“உங்க அப்பா கால் நடையாக வந்தாலும் சரி.. வண்டில வந்தாலும் சரி நான் சொல்லப்போறது சொல்ல போறது தான்” என்று அவன் மீண்டும் போனை தூக்க..
“சொல்றேன்!!” என்றவள் தன் பையிலிருந்த பார்சலை காண்பிக்க.. அங்கே சிக்கன் லாலிபாப்ஸ் அவனைப் பார்த்து சிரித்தது.
“இவள கட்டுனா நான் ஒரு கோழி பண்ணையை வைக்கனும் போலையே?’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன்.. “உனக்கு சிக்கன் வேணும்னா என்ன கேட்கணும் சொல்லி இருக்கா இல்லையா.. நீ ஏன் கேட்கல?” என்று அவன் மீண்டும் அவளிடம் கோபமாக கேட்பது போல் கேட்க..
“அதுக்கு உங்க போன் நம்பர் கொடுக்கணும் இல்லையா? பெருசா ஃபோன் போட சொல்லிட்டு நம்பர் கொடுக்காமல் போனால்.. நான் என்ன 100க்கு போடறதா 101 போடுறதா?” அவனுக்கு மேல் அவன் நக்கல் அடிக்க..
“ஆமா மச்சக்கன்னி.. மாமா மறந்துட்டேன்!!” என்று அசடு வழியச் சிரித்தான்.
இருவரும் ஒருவருக்கு அருகில் ஒருவர் நெருங்கி அமர்ந்து இருப்பதை மறந்து தங்களுக்குள் வழக்கடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த நாயோ இவள் அருகில் வந்து ஊர்ர்ரர் என்று சத்தமிட..
“எதுக்கு எந்த நாய் கிட்ட ஓரண்டை இழுக்குற.. பயபுள்ள கடிச்சி கிடுச்சி வைச்சுதுனா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவன் கையில் இருந்த பார்சலை தூக்கி வீச அதை நோக்கி ஓடியது அந்த நாய்.
‘இவ்வளவுதானா உங்க வீரம்?’ என்றவள் லுக்கு விட..
அவன் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் அவள் பின்னந்தலையை வைத்துக் கொண்டாள். அப்படியே அவன் கைகளை எடுத்து அவளுக்கு முன்னால் கொண்டு வந்து.. கிசுகிசுப்பாகச் சொன்னான்.
“மாமனோட வீரத்தை பார்க்கணும்னா அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வந்து பாரு.. அதை விட்டுவிட்டு நாய் கூட எல்லாம் கோர்த்து விடாத.. மாமன் கிட்ட நிறைய பெர்ஃபாமன்ஸ் இருக்கு” என்று ஒரு மாதிரியாக கூறிக் கொண்டே அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தான்.
“ம்க்கும் பொல்லாத பெர்பாமன்ஸ்.. சொட்டா!!” என்று அவள் முகம் திருப்ப..
அவ்வளவுதான் அவள் அந்த மாதிரி சொல்லி முடித்ததும் கதிர் அவளை சட்டென இறுக்கிக் கொண்டான். அவனின் கைகளை அவள் வயிற்றில் தான் வைத்திருந்தான். அவனோ அவள் கைகளோடு வயிற்றை இறுக்கி.. அவள் காதோரம் தன் உதட்டை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்தான்.
“இந்த பர்மான்ஸ் போதுமா மச்சக்கன்னி?” என்று அவள் காது மடலைக் கவ்விச் சப்பிக் கொண்டே கேட்டான்.
அவள் மெதுவாக நெளிந்து, சிலிர்த்தபடி அவள் காது மடலை.. அவனின் வாயில் இருந்து பிடுங்கிக் கொண்டு முறைத்தாள்.
”நீ செமையா இருக்க டி.. மாமன் இப்போவே உன்னை கட்டிக்கிட்டா? உன்னை பாத்ததுல இருந்து நான் எத்தனை அவஸ்தைல தவிச்சிட்டிருக்கேன் தெரியுமா?” என்று அவன் கேட்க..
“இப்பவும் கட்டிக்கிட்டு தானே இருக்கிங்க.. நகறுங்க.. மூச்சு முட்டுது” என்றாள் சலிப்பாக..
“அந்த கட்டு வேற டி” என்றான் ஹஸ்கி வாய்ஸில்..
”ம்ம்ம்.. தெரிஞ்சுது.. நீங்க உத்து உத்து பாக்கறப்பயே.. எவ்ளோ நாளா என் மேல இந்த ஆசை உங்களுக்கு?” விவரம் அறியும் தோரணையில்..
“என் அம்மா மேல சத்தியம்.. ஐ லவ் யூ டி.. இந்த மாமன கட்டிக்கிட்டு வாழ்க்கை தர்றியா?” என்று கேட்க.. அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவளை பேசவிடாமல் தடுத்தது.
அவள் கழுத்தை வளைத்து முகத்தை கதிரின் பக்கம் பார்த்தாள். அவனின் உதடுகள் பாய்ந்து சென்று அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டன. அவள் உதடுகள் உடனே விரிந்து கொண்டன. அந்த விரிந்த உதடுகளுக்குள் தன் உதடுகளைப் பொருத்திக் கொண்டான் கதிர்!!