அத்தியாயம் 12
“அசோக் மாமாவும் அத்தையும் வந்துட்டாங்க போல.. போயி கதவை திறப்போமா?” என்று தன் வயிற்றில் இருக்கும் சிசுவிடம் பேசியவாறே கதவை திறந்தவளின் முன்னே கத்தியுடன் முகத்தை முகமூடியால் மறைத்தபடி சிலர் நின்றிருக்க, பதறி பின்னால் நகர முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்தேன் தூரமாகப் போய் விழுந்தான். அங்கிருந்த அத்தனை பேரும் மின்னல் வேகத்தில் அடித்து நொறுக்கப்பட்டனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென தெரிந்து கொள்ளவே அதிதிக்கு சிறிது காலம் பிடித்தது. கருப்பு உடை அணிந்த மனிதர்கள் அதிதியை பாதுகாப்பு வளையமாக சுற்றி நிற்க, தனது வீரநடையுடன் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் அக்னி சாஹித்யா. அவனைப் பார்த்ததும் தாவிக் கொண்டு ஓடும் மனதை அடக்க வழி தெரியாது, கண் கலங்கி நின்றிருந்தாள் அதிதி. புயல் போல் உள்ளே நுழைந்தவன், அங்கிருந்தவர்களை சிங்கமென வேட்டையாட, அவனை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் அதிதி.
“பாஸ்.. இவங்களை..”
“நான் சொல்லும் வரை எதுவும் பண்ணிடாதீங்க.. இவங்களால நமக்கு காரியமாகணும்.. நம்ம சவுத் குடோன்ல மறைச்சு வைங்க..” என்றவன் அதிதியை தன் கையணைப்பிலேயே வைத்திருக்க, அவளோ எங்கே கண்ணை மூடினால் அவன் மறைந்துவிடுவனோ என்று நினைத்தாளோ என்னவோ, அவனை இமைக்காது கண்களுக்குள் சிறையெடுக்க முயன்று கொண்டிருந்தாள். காட்டு மலர் வாசம் போன்றது நேசம் கொண்ட காதல் மனம். எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும், தனது வாசனையால் வெளிப்படுத்திவிடும். ஆல்பர்ட் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, அடுத்த நொடி தன்னவளின் எலும்புகள் நொறுங்கிடும் அளவிற்கு இறுக்கி அணைத்தான் அக்னி சாஹித்யா. தன் அன்னையின் மூச்சு முட்டிவிடுமோ என்று வயிற்றில் இருக்கும் சிசு நினைத்ததோ? நானும் உள்ளுக்குள் இருக்கின்றேன் என அவனுக்கு உணர்த்த, தனது பிஞ்சு கால்களால் தன் தாயின் வயிற்றில் எட்டி உதைக்க, அதனை உணர்ந்த அக்னி சாஹித்யா,
“ஹேய்.. பேபி.. பேபி.. அசையுறா.. ஓ.. மை.. ஸ்வீட் ஏஞ்சல்..” என்றவாறே அதிதியின் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, அவளது மணிவயிற்றில் முத்தமிட, உயிர் சிலிர்த்தாள் அதிதி. இருப்பினும், அவன் மீது கொண்ட ஊடல் கண் முன் வந்து நிற்க, அவனிடமிருந்து விலகி தனதறைக்கு சென்றவள், அங்கிருந்த கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து, காதில் ஹெட்செட்டை அணிந்து கானம் கேட்க ஆரம்பிக்க, அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் அக்னி சாஹித்யா.
“ப்ச்.. ” என்றவாறு தன் காலை மடக்க முயன்றவளின் கையைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,
“கொஞ்ச நேரம் டி.. ப்ளீஸ்.. ” என்றவாறே அவளது கைகளை தன் தலைமுடிக்குள் நுழைத்து கோதிவிடச் சொல்ல, அவளது கைவிரல்களும் அவளது அனுமதியின்றியே, அவனது கோரிக்கையை நிறைவேற்றின.
“உனக்கு என் மேல நிறைய கோபம் இருக்கும்.. திட்டணும்.. ஏன்? அடிக்கணும்னு கூட தோணும்.. எல்லாமே நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், உன் இஷ்டப்படி தண்டனை கொடு.. ஆனா, என் கூட பேசாம, பார்க்காம மட்டும் இருக்காத.. உன்னைய எப்ப பார்ப்போம்னு இருந்துச்சுடி.. எனக்காக இருக்குற ஒரே சொந்தம் நீயும் நம்ம பொண்ணும் மட்டும் தான்.. நீங்களும் என்னைய விலக்கி வைச்சா.. நான் எங்கடி போவேன்?”
“…”
“பேசுடி.. நான் உன்னைய கொஞ்ச நாள் என்னைய விட்டு விலகி இருக்க சொன்னதுக்கு காரணம் நீதான்..”
“நானா? நானா?”
“அதுக்கு ஏன்டி சந்திரமுகி ஜோதிகா மாதிரி மாறுற?” என்றவன் அவளது இடையோடு கையிட்டு சுற்றி வளைத்துக் கொண்டு,
“அன்னைக்கு அந்த டெல்லி ஆளுங்க, சுத்தி வளைச்சப்போ, என் உயிரே போயிடுச்சு.. அதான் அவனோட கதையை முடிக்க எனக்கு கொஞ்சம் டைம் தேவைபட்டுச்சு.. நீ என் பக்கத்துல இருந்தா.. என்னால முழுசா, அந்த வேலைல இறங்க முடியாது.. அதான் உன்னைய ஷாலினியோட ரிலேட்டிவ் வீட்டுக்கு அவகூட அனுப்பி வைக்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள நீ அவசரப்பட்டு அசோக் வீட்டுக்கு வந்துட்ட..” என்றவனை குறுகுறுவென பார்த்தாள் அதிதி.
“என்னடி அப்படி பார்க்குற?”
“நிஜமாவே என்னைய புடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”
“ஏன் அப்படி கேட்கிற? நான் உன்னைய எவ்வளவு விரும்புறேன்னு இன்னுமா உனக்கு புரியலை?”
“அதில்ல.. ராகினி.. நீங்க உங்க அப்பாவோட கடைசி ஆசையா.. நம்ம கல்யாணத்தை சொன்னா..”
“நீ உடனே நான் கடமைக்காக உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சிட்ட?” என்றவனை பாராது வேறு எங்கோ பார்த்தவாறு தலையசைத்தவளின் தாடையை பிடித்து தன்புறம் திருப்பியவன்,
“ஏன்டி கடமைக்காக கல்யாணம் பண்ணறவனை போலவா இருக்கேன்? நானே நீ எங்க அசோக்கை கல்யாணம் பண்ணிடுவியோன்னு.. உங்க ரெண்டு பேருக்கும் என்னோட கம்பெனிலேயே வேலை போட்டுக் கொடுத்து, என் கண்ணுக்குள்ள வைச்சு கவனிச்சுக்கிட்டேன்.. நீ என்னடான்னா..” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் அதிதி. அவளது மூக்கோடு மூக்கு உரசியவன்,
“இன்னும் நம்பலையா? இரு..” என்றவாறு தனது கைப்பேசியை எடுத்தவன்,
“இதை பாரு உனக்கு புரியும்..” என்று அதனை அவளது கொடுத்தான். அதில், அவளது புகைப்படங்களே நிறைந்திருந்தது. அவளது சிறு வயது புகைப்படம் முதல் இன்று காலை எடுத்த புகைப்படங்கள் வரை இருக்க, அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அதிதி.
“எங்க நீ எனக்கு கிடைக்கமாட்டியோன்னு.. எவ்வளவு பயந்தேன்.. தெரியுமா? ராகினி அசோக்கை கல்யாணம் பண்ணதுல நான் தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்..”
“இருந்தாலும் நீங்க என்கிட்ட உண்மையை சொல்லிருக்கலாம்..”
“உன் மனசாட்சியை தொட்டு சொல்லு.. அன்னைக்கு பார்ல வைச்சு, இந்த உண்மையெல்லாம் சொல்லிருந்தா, நீ பொறுமையா கேட்டு இருப்பியா?”
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாவது சொல்லிருக்கலாம்ல?”
“அப்போ தான் மேடம்.. என்னைய விட்டு ஓடுறதுலயே குறியா இருந்தீங்களே?! கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு தான் சொல்லாம.. கொஞ்சம் தள்ளிப்போட்டேன்..”
“இவ்வளோ லவ் பண்றவரு.. எதுக்கு என்னைய பார்க்க பிடிக்காதவர் மாதிரி வீட்டுக்கு வராம ஆஃபிஸ்லேயே இருந்துட்டீங்க?”
“நான் உன்னைய பார்க்கலேன்னு யார் சொன்னா? உன்னோட போட்டோஸ்.. வீடியோஸ் எனக்கு வந்துட்டே இருக்கும்.. இந்த நிமிஷம் நீ என்ன பண்ற? எங்க இருக்க? எல்லாமே எனக்கு தெரிஞ்சுடும்.. உன்னோட மூச்சுக் காத்துக்கூட எனக்கு மட்டும் தான் கேட்கணும்.. அப்படி உன்னைய பார்த்துக்குறவனோட கண்ணு முன்னாடியே உன்னை கொல்லப் பார்த்தாங்கன்னா.. அவங்களை சும்மா விட்ச் சொல்றியா?”
“ஆனா, டெல்லி ஜெயில்ல இருந்து வெளியே வந்துட்டானே?”
“வரட்டும்.. அவன் கையை வைச்சே.. அவன் கண்ணை குத்த வைக்குறேன்..”
“புரியல?”
“உனக்கு எதுக்கு இந்த டென்ஷன் எல்லாம்? நீ என்னையும் நம்ம குழந்தையையும் பார்த்துக்கிட்டா போதும்.. மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..”
“ம்ஹும்.. நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு தெரியணும்..”
“அந்த டெல்லியோட தங்கச்சிக்கு எதிரான சாட்சி நம்மக்கிட்ட இருக்கு.. ஆனா, அதெல்லாம் அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்ல.. ஆனா, இப்போ எனக்கு கிடைச்சுருக்கு.. இனிமே அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட இருந்து தப்பமுடியாது..”
“என்ன சொல்றீங்க?”
“ம்ஹும்.. இவ்வளவு நீ தெரிஞ்சுக்கிட்டதே போதும்.. நீ ரெஸ்ட் எடு.. நான் நைட் வந்து உன்னைய பார்க்குறேன்.. நாளைக்கு காலைல நம்ம வீட்டுக்கு போயிடலாம்..” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். பின்னர், ஆல்பர்ட் மற்றும் ராபர்ட்டை அழைத்து, அதிதிக்கு காவலாக வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் செல்லும் திசையை பார்த்திருந்தவளுக்கு தன் மனம் நிறைந்தது போன்ற அமைதி கிடைத்தது. அசோக் வீட்டில் இருந்து கிளம்பியவன், தன்னை பின் தொடர்ந்து வரும் லாரியை பார்த்து சிறு புன்னகை புரிந்தவாறே தன் காரை ஒடித்து வலது பக்கமாக சட்டென திருப்ப, அவனுக்கு பின்னே வந்த லாரியோ நிலை தடுமாறி, தனக்கு எதிரே இருந்த ட்ராண்ஸ்ஃபார்மில் மோதி, கவிழ்ந்து விழுந்தது. தன் காரில் இருந்து கீழே இறங்கியவனை நோக்கி பாய்ந்து வந்தன துப்பாக்கி தோட்டாக்கள். காரின் மேலே தாவி மறுபக்கம் வந்தவன், தன் முதுகில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மறைந்திருந்து தாக்கியவர்களை தானும் தாக்கத் தொடங்கினான். ஒருகட்டத்தில் தன்னை தாக்க வந்த அனைவரையும் சுட்டு வீழ்த்தியவனின் வலது கையில் துப்பாக்கி தோட்டா ஒன்று துளைக்க, திரும்பிப் பார்த்தவனின் முன்னால் வந்து நின்றான் டெல்லி.
“இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டியே.. தெரு நாய் போல் உன்னைய இங்கேயே சுட்டு கொன்னாத்தான் என் ஆத்திரம் தீரும்..” என்று அக்னியின் நெஞ்சை குறித்த வைத்த டெல்லியின் முன் சிறு பயமும் இன்றி நின்றிருந்தான் அக்னி சாஹித்யா.
“உன் முன்னாடி சாவு வந்து நிக்குற இந்த நிலைமையிலும் உனக்கு சிரிப்பு வருதா? அப்படியே சிரிச்சுக்கிட்டே செத்துப் போ..” என்று துப்பாக்கியை அழுத்தியவனின் கையை பதம் பார்த்தது திருப்பாச்சி அருவாள் ஒன்று.
“ஆஆஆஆஆ..” என வெட்டுப்பட்டு கத்தியவனின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்த அக்னி சாஹித்யா,
“என்ன வீச்சு எப்படி இருந்துச்சு? மேட் இன் திருப்பாச்சி.. எங்க ஸ்டேட்ல இருந்து உனக்காக ஸ்பெஷலா வரவழைச்சேன்.. ம்ம்.. காயம் ஒன்னும் ஆழமா தெரியலையே..” என்றவன், சரமாரியாக டெல்லியை தாக்க, வலி தாங்காது அலறினான் டெல்லி.
“இதே மாதிரி தானே.. மத்தவங்களும் கதறியிருப்பாங்க.. நீ இறக்கம் பார்த்தியா? என்ன.. என்ன பார்க்குற? நான் செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுக்குறவன்.. அடுத்தவங்க உயிரை பறிக்குறவன் இல்ல.. நீ தான் நான் முதலும் கடைசியுமா செய்யும் சம்பவம்..” என்றவாறே உயிர் இருந்தும் உயிரற்ற சடலமாக டெல்லியை மாற்றினான். ஆயிஷாவை பற்றி போலீஸிடம் கூறியவன், தன்னிடம் இருக்கும் ஆதாரங்களையும் சமர்பித்தான். தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவள் வாழ்நாளில் வெளியே வரமுடியாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்தான். சுயநினைவின்றி கிழிந்த நாறாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான் டெல்லி. அவன் செய்த பல கொடூரமான சம்பங்களுக்கு கிடைத்த தண்டனை. உயிர் மட்டுமே உடலில்.. மற்றபடி அவனால் எந்த பயனுமில்லை.. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.
எபிலாக் (அத்தியாயம் 13)
“இன்னும் கொஞ்சம் தான்.. வலியை பொறுத்துக்கடா.. புஷ் பேபி.. புஷ்..” என்றவனின் குரல் காதில் விழ, தனது ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி மூச்சை உள்ளிழுத்து, வெளியிட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டான் அக்னி சாஹித்யா. அவனது கை கொடுத்த தைரியத்தில் தனது பூமகளை உலகத்திற்கு கொண்டு வந்தாள் அதிதி. தன் கையில் மிதந்த, அழகு குவியலை கண் கலங்க பார்த்த அக்னி சாஹித்யா,
“தாங்க் யூ பேபி.. தாங்க் யூ சோ மச்..” என்றவாறே அவளது நெற்றியில் முத்தமிட, எதையோ சாதித்த உணர்வில் கண்கள் மின்ன, தூக்கத்தை தழுவினாள் அதிதி. குழந்தையை விரும்பாத உயிர்களே இல்லை. அதுவும் தன் உதிரத்தில் ஜனித்த சிசுவை வெறுப்பாரில்லை.. தன் கையில் சொர்க்கமே வந்துவிட்டதை போல் உணர்ந்தான் அக்னி சாஹித்யா. அதிதிக்காக தனது நிழல் உலக வேலைகளை நிறுத்திக் கொண்டவன், தனது குடும்பத்திற்காக மட்டுமே தொழில்களை நடத்தி வந்தான். பிள்ளை தாங்கி நின்றவளை தன் நெஞ்சில் தாங்கி நின்றான்.
மூன்று வருடங்களுக்கு பிறகு..
“டேய்.. நீ வந்து குனி..”
“பேபிமா.. வேணாம் பேபிமா.. அம்மா வந்து பார்த்தா என்னையத் தான் திட்டுவாங்க..”
“அம்மா வந்தா.. நான் பார்த்துக்குறேன்.. நீ சீக்கிரம் குனி..”என்ற சின்னச்சிட்டு, தன் முன்னே யானை போல் மண்டிட்டிருந்த ஆல்பர்டின் முதுகில், தன் பிஞ்சு காலை வைத்து ஏறியது. தன் உயரத்திற்கு எட்டாதிருந்த பென்சில் டப்பாவை எடுத்தவள், சட்டென கீழே குதித்து இறங்கினாள்.
“அம்மா இதை உனக்கு எடுத்து கொடுக்கக்கூடாதுன்னு சொன்னங்க பேபிமா..”
“நீயா எடுத்த.. நான் தானே எடுத்தேன்.. அப்படி திட்டுறதா இருந்தா.. என்னைய தான் திட்டுவாங்க.. நீ காட்டி கொடுக்காம இரு போதும்..” என்ற சின்ன சிட்டு, அந்த பெரிய ஹாலில் இருந்த சுவற்றில் தன் கலை வண்ணத்தை காட்ட ஆரம்பித்தது. அப்பொழுது தான் சமையலறையில் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த அதிதியின் கண்ணில், சின்னவள் வரைந்து கொண்டிருப்பது படவே, வேக வேகமாக அவளருகே வந்தாள்.
“கயல்.. இப்படி சுவத்துல கிறுக்காதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்? ஆமா, இந்த பாக்ஸ் உன் கைக்கு எட்டக்கூடாதுன்னு மேல் செல்ஃப்ல தானே வைச்சுருந்தேன்.. யார் எடுத்து கொடுத்தா?”
“நான் தான் எடுத்தேன்..”
“பொய் சொல்லாத யார் எடுத்து கொடுத்தா.. உண்மைய சொல்லு.. கயல்..”
“நான் அக்னி சாஹித்யாவோட பொண்ணாக்கும்.. பொய் சொல்ல மாட்டேன்..” என்று கணீரென்று பேசியவளை பின்னால் இருந்து தூக்கி சுற்றினான் அவளது அருமை தந்தை.
“அப்படி சொல்லுடா செல்லம்.. ” என்று தன் தேவதைக்கு பல முத்தங்களை வாரி வழங்கினான் அக்னி சாஹித்யா. அதனைப் பார்த்த அதிதியின் கண்ணில் பொறாமை அப்பட்டமாக தென்பட, தன் அருகில் நின்றிருந்தவளின் தோளில் கையிட்டு அணைத்தவன்,
“பச்சை குழந்தைக்கிட்ட போய் என்ன பொறாமை?” என்றவன் அவளது நெற்றி, கன்னம் என்று முத்தமிட,
“இவளா பச்சை குழந்தை? சரியான அருந்த வாலு.. பாருங்க வீட்டை எப்படி ஆக்கி வைச்சுருக்கான்னு..” என்று மழலையாய் தன் கண்ணை உருட்டி கூறியவளை ஆசையாக பார்த்தவன்,
“குழந்தைனா அப்படித் தான் இருக்கும்.. இது நம்ம வீடு.. மியூசியம் இல்ல.. எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இருக்க..” என்றவன் தன் புதல்வியைப் பார்த்து பெருமையாக,
“இன்னைக்கு என்னடா வரைஞ்ச?” என்று கேட்க,
“இங்க வாங்களேன்.. நான் காட்டுறேன்..” என்றவள் ஹாலில் தான் கிறுக்கி வைத்த பொம்மைகளை காண்பித்து,
“இது அப்பா.. இது அம்மா.. இது அத்தை.. இது மாமா.. இது ஆல்பர்ட்.. இது சஷ்மி.. இது புஷ்பா பாட்டி.. இது ராபர்ட்.. இது அந்தோணி.. அப்புறம் இது நானு..” என்று ஒவ்வொரு உருவத்தையும் சுட்டிக்காட்டி கூறியவளிடம்,
“இது யாருடா? ரொம்ப குட்டியா இருக்குறது?” என்ற அக்னி சாஹித்யா, கயல்விழியின் அருகில் சிறு உருவமாக வரையப்பட்ட குழந்தையை பார்த்துக் கேட்க,
“அது கயலோட தம்பிபாப்பா..” என்று கூற, தன் மனைவியை ஆசையாக பார்த்தவாறே,
“அப்படியா?” என்று கேட்க, தன் மூச்சை உள்ளிழுத்து, கன்னங்கள் சிவப்பை தடுக்க முயற்சித்தாள் அதிதி.
“ஆமாப்பா.. எங்க ஸ்கூல்ல இருக்கான்ல.. ராகுல்.. அவனுக்கு தப்பிபாப்பா பிறக்க போகுதாம்.. ரொம்ப பீத்திக்குறான்.. அதான் நான் சொல்லிட்டேன்.. அடுத்த தீபாவளிக்கு எங்க வீட்டுலயும் தம்பிபாப்பா இருப்பான்னு..” என்ற கயல்விழி, தன் தந்தையின் தோளில் கிளியாக தொற்றிக் கொண்டு,
“அப்பா.. அப்பா.. எப்படியாவது தம்பிபாப்பா வாங்கி கொடுங்கப்பா.. நான் பத்திரமா பார்த்துக்குவேன்..” என்று கூற, மகளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன்,
“அதை நீ உன் அம்மாக்கிட்ட தான் கேட்கணும்..” என்றவாறே தன் மனைவியை பார்த்து கண்ணடிக்க,
“அப்பா புள்ள ரெண்டு பேருக்கும் வேற வேலை கிடையாது.. பேசாம சாப்பிட்டு தூங்க வா..” என்றவாறே கயல்விழியை அக்னியிடம் இருந்து வாங்கிக் கொண்டாள் அதிதி. இரவில் தங்கள் இருவருக்கும் நடுவில் படுத்திருந்த கயல்விழியை இடதுபுறமாக மாற்றி, தன் மனைவின் அருகில் படுத்துக் கொண்டவன், அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து,
“நாம இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா பேபி?” என்று கேட்க, வெட்கத்தில் தன் முகத்தை வேறுபடும் திருப்பியவளின் தாடையை பிடித்து தன்னை நோக்கி பார்க்க செய்தவன், அந்த அரை இருளிலும் அவளது கன்னம் சிவப்பை உணர்ந்தான். மலரில் தேனை உண்ணும் வண்டாக, சிறிது சிறிதாக அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன், பெண்ணவளின் உடல் நோகாது, தனக்கானதை எடுத்துக் கொண்டான். குடும்பம் ஒரு கோயிலாக மாற வேண்டுமானால் கணவன், மனைவி பிணைப்பு மட்டுமின்றி,
நாம் பெறுகின்ற செல்வங்களிலேயே சிறந்த செல்வம் குழந்தைச் செல்வமாகும். கணவன் மனைவி ஒரு தராசை போல, ஒன்று ஏறினால் மற்றொன்று இறங்கி வந்து விட்டு கொடுத்து பழக வேண்டும்.மனைவியை தனது தாயாக, தோழியாக நினைத்து கொண்டும், கணவனை தனது நண்பனாக காதலனாக நினைத்து கொண்டும் வாழும் தம்பதியின் வாழ்வில் பிரிவென்பதே கிடையாது. விட்டுக் கொடுப்போர், கெட்டுப் போவதில்லை.. தனது ஊண் உயிராகிவிட்ட மனைவியை கொண்டாடும் ஒவ்வொரு ஆண்மகனும் அக்னி சாஹித்யா தான். தன் கணவனை தன் குழந்தையென நேசித்து, அவன் கைபாவையாக மாறும் ஒவ்வொரு பெண்ணும் அதிதி தான்.. கணவன் மனைவியென இருமாடுகள் இணைந்து இழுக்கும் வண்டி தான் தாம்பத்தியம்.. அதில் ஒன்று முரண்டு பிடித்தாலும் வாழ்வு நரகமாகிவிடும்.. நாம் வாழும் வாழ்வு நம் கையில்.. சரியான நேரத்தில் அதிதியை கைப்பிடித்து, பொக்கிஷமென தன்னுள் நிறைத்துக் கொண்ட அக்னி சாஹித்யா மற்றும் அதிதியை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்..
********சுபம்*************
Super Sis
தாங்க் யூ சிஸ் 😍😍😍😍
Happy ending super story sister all the best wishes 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷