மாமனே 8
அதேநேரம் சோழவந்தானில்… நெஞ்சை பிடித்துக் கொண்டு திருமாறன் படுத்திருக்க அவருக்கு அருகில் அழுது கொண்டே கணவனின் நெஞ்சை நீவிக் கொண்டிருந்தார் வேதாமணி.
சுற்றி இருந்த சொந்தங்கள் எல்லாம் இப்பொழுது திருமாறனை தான் அத்தனை பேசியது.
“பாரு பொண்ண வளர்த்து வச்சிருக்க லட்சணத்த… கல்யாணம் ஏற்பாடு பண்ணும்போது அது பாட்டுக்கு வீட்டை விட்டு ஓடி போயிருக்கு! இப்படி தெரிஞ்சா எவன் கட்டிக்குவியான் அவளை! திரும்பவும் இவனுங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தனுக்கு தான் கட்டி வைக்கணும்!” என்றார் ஒரு புதிய உறவு பெண்மணி!!
“அட!! நீ என்ன மதினி இப்படி பேசுற.. இவிய்ங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுகிட்டே இருந்தா அந்த பொண்ணு என்னதான் பண்ணும்? யாருக்காவது ஒருத்தன காட்டி கட்டிக்க சொன்னா அந்த பொண்ணு கட்டியிருக்கும். இவனுங்க இப்படி மாறி மாறி ஏலம் விட்டுட்டு இருந்தானுங்க.. அதான் பார்த்தாச்சு அதுக்கு புடிக்கல.. போயிட்டு! இதுக்கு போய் இவிய்ங்கள குத்தம் சொல்ல முடியுமா?” என்றார் மற்றொரு உறவினர்.
இப்படி கூட்டமாக பிரிந்து நின்று சிலர் திருமாறனையும்… சிலர் திருமாறன் வளர்ப்பையும்… சிலர் கதிரேசன் களஞ்சியத்தையும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்.
“பிள்ளையை தேடி போன இவங்கள என்ன இன்னும் காணோம்?” என்று ஒருபுறம் கதிரேசன் பெற்றோரும் மறுபுறம் களஞ்சியம் பெற்றோரும் வாசலை வாசலை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு மணி நேரம் கழித்து கதிரேசன் தான் முதலில் வந்தான். வந்தவன் தொப்பென்று தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்து விட…
உறவு கூட்டம் முழுக்க இவனை தான் சூழ்ந்தது. திருமாறன் தன் உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொள்ளாது மருமகனை நெருங்கி “கதிரேசு.. என்னடா ஆச்சு? எங்கடா என் பொண்ணு? என் பொண்ணு என்னடா பண்ணுனீங்க?” என்று பரிதவிப்போடு கேட்டார்? அதே பரிதவிப்போடு அருகில் வேதாமணி நின்று இருந்தார்.
“உங்க பொண்ணுக்கு தான.. ஆச்சு ஆச்சு கல்யாணம் ஆச்சு!” என்று விட்டேறியாக அவன் செல்ல..
இவன் இங்கே இருக்கிறான் என்றால் அப்போ கல்யாணம் செய்து கொண்டது களஞ்சியமோ? எப்படியோ யாராவது ஒருத்தர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் சரி என்று நிம்மதி பெருமூச்சு விட்ட திருமாறனை சோதிக்க என்றே.. தடதடவென்று உள்ளே நுழைந்தான் களஞ்சியம்!!
கதிரேசன் சொன்னதும் திருமாறன் மட்டுமல்ல ஒட்டுமொத்த உறவு கூட்டமே களஞ்சியத்தோடுதான் மலர்விழி திருமணம் முடிந்தது என்று நினைத்திருக்க.. இப்படி மொட்டையாக ஒத்தையாக வந்தவனை பார்த்து உறவுகள் விழி விரிக்க…
“டேய் களஞ்சியம்.. என்னடா நீ மட்டும் வந்திருக்க? எங்கடா என் மருமக?” என்று களஞ்சியத்தின் அம்மா அமுதா கேட்க…
“ஏன் எனக்கு முன்ன ஒருத்தன் வந்தானே அவன் சொல்லலையா?” என்று இவனும் பொத்தென்று அமர..
உறவுகள் கூட்டம் இப்பொழுது இரண்டாக பிரிந்து நின்று இருவரையும் ஏதோ டென்னிஸ் விளையாட்டு போல மாறி மாறி பார்த்தது.
திருமாறன் களஞ்சியத்திடம் ஓடி வந்து “என்ன களஞ்சியம் பாப்பாவுக்கு கல்யாணம் ஆச்சுன்னு கதிரேசு சொன்னியான். நீ என்ன சும்மா வந்திருக்கே? எங்கடா என் பொண்ணு? எங்கடா என் பொண்ணு?” என்று அத்தனை தவிப்பு அவரிடம்.
“அவேன் தான் சொன்னான்ல மாமா ஏற்கனவே.. உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு! அதான் கல்யாணம் பண்ணினவன் கூட போயிட்டா” என்றதும் உறவுகளுக்கு பல குழப்பம்!!
“எது கல்யாணம் பண்ணி மாப்பிள்ளையோட போய்ட்டாளா? நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கீங்க?” களஞ்சியத்தின் அப்பா கேட்க…
“ஆமா நாங்க ரெண்டு பேரும் இங்கன இருக்கோம்!! ஆனா அவ கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ விரும்பினவன்” என்றான் கதிரேசன் அத்தனை வருத்தத்தோடு!!
கதிரேசனுக்கு மாமன் மகளை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி சிறுவயதில் இருந்து அத்தனை பிடிக்கும் மலர்விழியை!! அத்தனை பாசம் வைத்திருந்தவன், ‘இப்படி தான் ஒருத்தனை காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட நானே எப்படியாவது வீட்டில் பேசி ஒத்துக்க வைத்திருப்பேனே இப்படி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாளே!’ என்று அத்தனை வருத்தம்.
இப்போ உறவுக்குள்ளே பெரும் குழப்பம்! குசுகுசுப்பு பேச்சு!
“அப்போ அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தன விரும்பி இருக்கு. அதை சொல்ல கூட விடாம ரெண்டு பேரும் அந்த பொண்ண பாடா படுத்தி வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ற அளவுக்கு வச்சிருக்கீங்க…” என்று ஒரு பெரியவர் சத்தம் போட..
திருமாறனோ திருவிழாவில் தொலைந்த குழந்தை போலவே திருதிருவென விழித்துக் கொண்டு நின்றார், மனைவியின் கையை இறுக பற்றி கொண்டு…
“பொண்டு மனசுல வேறொருவன் இருந்திருக்கிறான், அதை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே! அந்த அளவா நமக்குள்ளே புரிதல் இல்லாமல் இருந்திருக்கு? அத்தனை முறை கேட்டேனே நானும்.. ஆனா பாப்பா வாய் திறந்து ஒன்னுமே சொல்லலையே!!” என்று மனைவியிடம் வருத்தமான மெல்லிய குரலில் அவர் கூற…
“இல்லைங்க நம்ம பாப்பா முதலில் வெளியில் தான் பார்க்க சொன்னுச்சு. அப்படியே அவ மனசுல யாரும் இருந்தா நம்ம கிட்ட சொல்லியிருப்பாளே.. இதுல வேற என்னமோ குழப்பம் இருக்கு” என்று வேதாமணிக்கும் அத்தனை குழப்பம்!! ஆனால் கணவன் மனைவி மற்றவர் அறியாமல் இதை தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்!!
“அது சரிடா!! அந்த பொண்ணு கல்யாணம் கட்டிகிச்சு சரி.. அவன் யாரு என்னன்னு கேட்டு விசாரிச்சிட்டு வந்தீங்களா?” என்று கதிரேசன் அப்பா கேட்க… கதிரேசன் மட்டுமல்ல அவன் கூட சென்ற மொத்த கூட்டமும் இப்பொழுது திருத்திரு என்று விழிக்க.. அத்தனை கோபம் வந்தது கதிரேசன் அம்மாவுக்கு… களஞ்சியத்துக்கு தெரிந்தாலும் அவன் இப்போது வாய் விடவில்லை. ஏனென்றால் அவன் குட்டு வெளிவந்து விடுமே!! உறவுக்காரர்கள் முன்னிலையில் தான் ஒரு கடன்காரன் என்று சொல்ல விரும்பவில்லை அவன்.
“ரெண்டு பேரும் தடிமாடு கணக்கா வளர்ந்துட்டு.. நான் தான் கட்டிப்பேன் நான்தான் கட்டிப்பேன்.. இவ்வளவு நாளா சொல்லிட்டு இருந்தீங்க.. இப்ப இந்த பொண்ணு யாரையோ கட்டிட்டு போய் இருக்கு.. அவன் யாரு என்ன விசாரிக்காம ரெண்டு பேரும் எருமை மாடு கணக்கா வீடு வந்து சேர்ந்து இருக்கீங்க?? உங்களை எல்லாம் என்ன பண்றது!!” என்று திட்டினார் அவர்.
அவரின் பேச்சில் வேதாமணி “ஐயையோ மதினி… இப்ப நான் என்ன பண்றது? என் பொண்ணு எங்க எப்படி இருக்கானு நான் எப்படி தெரிஞ்சிக்க?” என்று அவர் கண்ணீர் விட.. அதற்குள் கதிரேசன் “நம்ம பாண்டி கோயில்ல தான் கல்யாணம் நடந்தது. கண்டிப்பா அங்க ரிஜிஸ்டர் பண்ணி இருப்பாய்ங்க.. அதுல பார்த்தால் அட்ரஸ் கிடைச்சிடும். நான் இப்பவே பாண்டி கோயிலுக்கு போயிட்டு வரேன்” என்று அவன் கிளம்ப…
“நீ இருடா நான் போய் கேட்டு வரேன்” என்று களஞ்சியம் எழும்ப…
“ஆமா கிழிச்ச..” என்று இவன் முன்னால் நடக்க..
அவன் கையை பிடித்து தடுத்தவன் “அது எப்படி நீ முன்னால போலாம். நான் தான் போய் மலர பர்ஸ்ட் கண்டுபிடிப்பேன்” என்று இருவருக்குள் மீண்டும் ஒரு தர்க்கம்!!
அதற்குள் சுந்தரவேலுவிடமிருந்து திருமாறனுகு ஃபோன் வர… முதலில் அவர் கண்டுகொள்ளவே இல்லை!!
அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை அதே நம்பரிலிருந்து வரும்போது “எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க ஏதோ தெரியாத நம்பரிலிருந்து போன் வருது?. ஒருவேள என் பொண்ணா கூட இருக்கலாம்”‘என்று அவசரமாக போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க…
“வணக்கமுங்க! நான் சுந்தரவேலு! உங்க பொண்ணு மலர்விழி சௌக்கியமா எங்க வீட்டு மருமகளா இருக்குங்க” என்றதும் தான் திருமாறனுக்கு பெருமூச்சு வர, தொய்ந்து போய் அமர்ந்தார்.
அதன் பிறகு சுந்தரவேலு அங்கு நடந்த விஷயத்தை அனைத்தையும் கூற, அதை ஸ்பீக்கரில் போட்டு கேட்டது மொத்த உறவு கூட்டமும்!!
“நீங்க கொஞ்சம் முக்கியமான உறவுகள் மட்டும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க..” என்று சுந்தரவேல் அழைக்க..
நான் நான் என்ற கை தூக்கிய உறவுகளை கழட்டி விட்டு, திருமாறன் வேதமணி மற்றும் களஞ்சியம் கதிரேசத்தின் பெற்றோர்கள் மட்டும் கூடவே இன்னொரு வண்டியில் அவன் அல்லக்கைகள் சேர மாணிக்கவேல் வீட்டை நோக்கி சென்றது அவர்கள் சென்ற வண்டி!!
“வாங்க..!” என்று அழைத்த சுந்தரவேலுவின் கண்ணியமான தோற்றத்திலும்.. அதிராத மரியாதையான பேச்சிலும் கவரப்பட்டார் திருமாறன்.
அவருக்கு எங்கே தெரியும் சுந்தரவேலுவின் அதிரடியை!! அன்று மகன் மணிமேகலை விரும்புகிறான் என்றதும் பரிசம் போடவே சென்றவர் தான். ஆனால் மகனின் இந்த மூன்று ஆண்டுகால தனிமை தவம் அவரையும் மாற்றி இருந்தது.
அதேநேரம் தன் வெண்கலத் தொண்டையை திறந்து கொண்டு வாங்க வாங்க என்று அழைத்த அல்லிமலரை கண்டதுடன் அல்லுவிட்டது வேதாமணிக்கு. இப்படி ஒரு மாமியாரிடம் எப்படி என் பொண்ணு ஒத்திருக்க போகிறாளோ என்று பெரும் கலக்கம்!! அதிலும் நாத்தனார் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு பேரையும் பார்த்ததும் “போச்சு போச்சு இந்த பொண்ணு இவங்களை எல்லாம் சமாளித்து வந்திடுமா?” என்று தாயாக பரிதவித்தார்.
சுந்தரவேலு முதலில் தங்களைப் பற்றி எல்லாம் அறிமுகப்படுத்தி மகள்கள் மருமகன்களை அறிமுகப்படுத்தி விட்டு தான் பேச்சை ஆரம்பித்தார்.
“இந்த புள்ளைங்க எப்படி ஒன்னுக்கொன்னு விரும்புச்சின்னு தெரியலிங்.. இங்கேயும் என்ற மகன கல்யாணம் கட்ட சொல்லி நாங்களும் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தோமுங்க.. வீட்டிலேயே சொந்தத்தில் ஒன்னுக்கு ரெண்டா பேத்திங்க வேற.. ஆனா இவரோ இப்படி பண்ணிட்டு வந்துட்டாருங்” என்றார்.
“இங்கவும் இதே விஷயம் தான். ஒன்னுக்கு ரெண்டு முறை மாமானுங்க கேட்டதுனால தானே பெரும் பிரச்சனை!! இதுல இந்த பொண்ணு பாட்டுக்கு வெளியில வந்துருச்சு. எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா…” என்று சற்று தள்ளி ஜோடியாக நின்றிருந்த மகளை கண்கள் கலங்கியவாறு பார்த்தார் திருமாறன்.
அதற்கு மேல் அங்கே மலர்விழியால் இருக்க முடியாமல் ஓடி வந்து அப்பாவின் மடியில் தலை சாய்த்து கொண்டாள். “மன்னிச்சிருங்கப்பா செஞ்சது தப்புதேன்! உங்களட்ட சொல்லி இருக்கணும்” என்று அத்தனை அழுகை! இதில் அருகில் இருக்கும் அம்மாவையும் சேர்த்துக் கொண்டாள்.
திருமாறன் குடும்பம் வரும் முன்னே அத்தனை தடவை சொல்லி இருந்தான் மாணிக்கவேலு “எக்காரணத்தை முன்னிட்டும் நான் சொன்னதை மாற்றி சொல்லாதிங்க அம்மிணி!” என்று, அதற்கு தக்கவாறு அவளும் பேச.. பெற்றோர் மகளை அரவணைத்துக் கொண்டனர்.
என்னதான் மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் அங்கே சபையில் காட்டிக் கொள்ள முடியாமல் களஞ்சியத்தின் பெற்றோரும் கதிரேசனின் பெற்றோரும் மணமக்களை வாழ்த்தியே சென்றனர்.
அடுத்து தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று முறையாக அனைவரிடமும் அழைத்துவிட்டு நிம்மதியோடு சென்றனர் மலர்விழி பெற்றோர்.
அன்றைய இரவு தனித்தனியாகத் தான் படுக்கை!
மாணிக்கவேல் வாடகை எடுத்திருந்த வீடு கீழே இரண்டு அறை கூடம் சமையலறை என்று மட்டும்!!
அதில் ஒன்று பூஜை அறையாக இருக்க.. மற்ற ஒன்றைத்தான் ஜீவனும் மாணிக்கவேலும் பயன்படுத்தினர். பொதுவாக இருவருக்கும் படுக்கை கூடத்தில் தான். இன்று ஒட்டுமொத்த குடும்பமே இருக்க… பெண்கள் எல்லாம் கூடத்தில் படுத்திருக்க சுந்தரவேலு அறையிலும் மற்றும் மாப்பிள்ளைகள் மாணிக்கவேல் அனைவருக்கும் மொட்டை மாடியில் தான் படுக்கை!!
“ஆமா இவ்வளவு விஷயம் நடந்துகிட்டு இருக்கு இந்த ஜீவன் பையன எங்க காணோம்?” என்று அப்போதுதான் மூன்றாவது மாமனிடம் மாணிக்கவேல் கேட்க…
“காலையில திடீரென்னு அவன் சோட்டு பசங்க எல்லாம் சேர்ந்து பழனிக்கு போகணும்னு கூப்பிட்டதுனால கிளம்பிட்டியான். உங்களுக்கு போன் பண்ணுனானாம். நீங்க எடுக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு தான் போனான் மச்சான்” என்றார் அவர்.
“ஓஹ்.. சரி சரி!” என்று கண்களை மூடினாலும் தூக்கமில்லை அவனுக்கு.
‘புது இடம் புது மனிதர்கள் எப்படி இருப்பாள் அவள்?’ என்று அவன் நினைவு முழுக்க அவளே நிறைந்திருக்க.. அவளோ கண்களை மூடி அடுத்த ஜாம தூக்கத்திற்கு சென்று விட்டாள்.
மறுநாள் ஒவ்வொரு அக்காவாக சென்றுவிட.. மீதி இருந்தது இவர்கள் நான்கு பேரும் மட்டும் தான்!!
“ஊரிலும் போட்டது போட்டபடி வந்தாச்சு கண்ணு.. நீங்க பார்த்துக்கோங்க..” மறுநாள் காலை சுந்தரவேலு தம்பதியும் கிளம்பி விட போகும்போது அத்தனை அறிவுரைகள் வழங்கி விட்டே சென்றார்.
வீட்டிக்கு தேவையான பொருட்கள் என்று அவளை அழைத்துக் கொண்டு வாங்கி வந்து கொடுத்தான். அன்று வந்த வேதாமணி அவளுடைய துணிமணிகளை கொடுத்து விடுவதாக சொல்லி சென்றார்.
மாணிக்கவேல் ஒன்றும் சொல்லவில்லை. இப்போதைக்கு இருக்கட்டும் என்று அமைதியாக இருந்து கொள்ள.. மறுநாள் காலையிலேயே கதிரேசன் வந்து கொடுத்தான்.
அதுவும் அத்தனை நல்ல விசாரிப்பு அவளிடம் “மலருபுள்ள ஏதாவது பிரச்சனை இருந்தா அய்த்தான் கிட்ட மறக்காம சொல்லணும். இத்தனை பேர் இருக்காய்ங்க.. யாராவது உன்ன நாக்கு மேல பல்லை போட்டு பேசினா.. இந்த அய்த்தான் கிட்ட சொல்லு! பல்ல தட்டி கைல கொடுத்துடறேன்! சரியா?” என்று அனைவரையும் ஒருமுறை முறைத்துக் கொண்டு கூறி விட்டு சென்றான்.
மாணிக்கவேலால் கதிரேசனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அவனின் காதலை தாண்டிய பாசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் அதே பாசம் தானே இன்றும் இருக்கிறது அவள் மீது!!
இரண்டாம் நாள் மாலை வீடு வெறிச்சோடி இருந்தது மலர்விழிக்கு. இரண்டு நாட்களாக கலகலன்னு இருந்த வீடு இன்று யாரும் இல்லாமல் கணவனும் வேலைக்கு சென்று விட.. தனியே இருந்தது ஒரு வித தவிப்பாய் இருந்தது. ஆனால் இதனால் பழகி தானே ஆக வேண்டும்.
இப்படியாக ஒரு வாரம் சென்றது. எப்பொழுதும் இரவு படுக்கை இவள் அறைக்குள் என்றால்.. அவனுக்கு கூடத்தில் தான்!
அன்று சபையில் அனைவருக்கும் முன்னால் சொல்லிவிட்டான் தான்.
ஆனாலும் அவளின் மனது அவனின் அன்புக்காக ஏங்கியது!! சாதாரண ஒரு பார்வை.. சினேகமான புன்னகையை தாண்டி எதுவும் அவன் முகத்தில் இல்லை.
இதுவரை காதல் கல்யாணம் என்றெல்லாம் எண்ணியே பார்த்திராதவளுக்கு இவனின் அருகாமையில் அதெல்லாம் துளிர்விட…
மற்றவர்களைப் போல காதல் சொட்ட சொட்ட பார்க்கும் கணவனின் பார்வையும்..
மோகம் கொப்பளிக்க கணவனின் சரசங்களும்…
தாபம் தீர தீர அணைத்து கொள்ளும் அரவணைப்புகளும்..
வேண்டுமென்று மனம் பிராண்ட தொடங்கியது மலர்விழிக்கு!!
இன்று எப்படியும் அவனிடம் பேசி விடும் மனநிலையில் இருந்தாள்.
இரவு வந்தவன் வழக்கம் போல அவளுக்கு உணவை கொடுத்துவிட்டு இவன் மாடிக்கு சென்று விட்டான். அந்த வீட்டில் உள்ளிருந்தே மாடிக்கு செல்லும் வசதி உண்டு.
உணவை தனியாக உணவே அவளால் முடியவில்லை. பேருக்கு உண்டு விட்டு கூடத்திலேயே அமர்ந்திருந்தாள். சில நாட்களாக இந்த தனிமை இருவருக்கிடையே.. ஆனால் அந்த தனிமையை இருவரும் தனித்தனியாகவே அனுபவித்துக் கொண்டிருந்தனர்!!
அந்த இனிய தனிமையை வெறுத்தவள் கணவனை அழைக்க மாடிக்கு சென்றாள்.
“தூங்க வரலையா நீங்க.. எனக்கு கீழே தனியா படுக்க பயமாயிருக்கு” என்றாள்.
அந்தகார இருளில் தன் மன்னவன் மீது உலா போகும் அழகிய நிலவை வெறித்துக் கொண்டிருந்தவனோ அவள் புறம் திரும்பாமலேயே ம்ம்ம் என்றான்.
அவள் அப்படியே நின்று கொண்டிருக்க “நீங்க போங்க அம்மிணி.. நான் வரேனுங்க” என்றான்.
”ம்ம்…” என்றவள் திரும்பி நடக்க… சட்டென பவர் கட் ஆனது. அப்போதுதான் அவள் படியில் கால் வைப்பதற்காக காலை மேலே தூக்கியிருந்தாள். சட்டென பவர் கட்டாகி இருட்டானதால், அவளால் படியில் சரியாக காலை வைக்காமல் கொஞ்சம் தடுமாறி படியின் விளிம்பில் காலை வைத்து விட்டாள் போலிருக்கிறது!!
”ஆ..ஆ.!!” என அலறினாள்.
பவர் கட் ஆனதுமே அவளை தேடி வந்தவன் உத்தேசமாக சட்டென கை நீட்டி.. அவளைப் பற்றினான். அவளும் அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவனின் ஒரு கை அவள் கையைப் பற்றியிருக்க, இன்னொரு கையோ அவள் இடுப்பைப் பற்றியிருந்தது அழுத்தமாக… ஆதூரமாக!!
”நல்ல வேள விழல..! தேங்க்.. காட்..!!” இருட்டில் மெல்ல முணகினாள்.
”பாத்து.. பாத்து.. உங்கள பிடிச்சது நானுங்க அம்மிணி. தேங்க்ஸ் கடவுளுக்கா..?? நான் விட்டுயிருந்தேன்னா?” அவள் கையையும் இடுப்பையும் பிடித்து மேலே இழுத்தான்.
”ஆமாமில்ல.. அப்போ தேங்க்ஸ் உங்களுக்கு..!!” அழகாக சிரித்தாள்.
நிதானமில்லாமல் இருட்டில் அவன் கையைப் பிடித்தபடி மேலே வந்தவளது மென்மை மெத்தென வந்து அவன் நெஞ்சில் பட்டு அழுந்திப் பின் விலகியது!!
இருட்டில் சில நிமிடங்களுக்கு அப்படியே நின்று விட்டனர்.
அவளிடமிருந்து வந்த பூ வாசணை.. அதுவும் மதுர மல்லிகை அவனின் கட்டுப்பாட்டை தகர்த்துக் கொண்டிருந்தது.
“ஏங்க..”
“ம்ம்ம்?”
“இருக்கீங்களா?”
“இருக்கேன்.. இருக்கேன்.. நான் இல்லாம யாரு உங்கள பிடிச்சியிருக்காங்க அம்மிணி?”
“இல்ல.. ரொம்ப சைலண்டாகிட்டிங்க.. ஏற்கனவே இருட்டா இருக்கு. அதான்!” என்றவள் மெல்ல கண்களை உருட்டி அந்த இடத்தை பழகினாள்.
”ஆமா.. எதுக்கு இப்படி ராத்திரில மோகினிப் பேய் மாதிரி தலைல பூ வெச்சிட்டு இருக்கிங்க? ”
”எந்த மோகினி பேய் பூ வெச்சத பார்த்துருக்கீரு..??” கிண்டல் தொணிக்கும் குரலில் கேட்டாள்.
”என் பக்கத்துல ஒரு பேய் நிக்குதுங்களே…” என்று இலகுவாக அவளிடம் பேச முற்பட்டான்.
அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை அவள் குறைக்க முயன்று.. அவனுடன் கொஞ்சம் நெருங்கி நின்றாள். அவன் உடல் அவளை உரசிக் கொண்டு!!
”என்னைய பார்த்தா மோகினி பேய் மாதிரியா தெரியுதா??” அவள் அவன் கையை இறுகப் பற்றி தன்னுடன் அணைந்த நிலையில் நின்றாள். அவளது மென்மைகள் இப்போது நன்றாக அவன் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தது!!
”பார்க்க முடியலிங் அம்மிணி… ஒரே இருட்டா இருக்குங்க. பவர் வந்ததும் பார்த்துட்டு சொல்றேனுங்க!” என்று சிரிப்போடு சொன்னவன், அவள் இடுப்பில் இருந்து மெல்ல கையை உருவினான்.
”பார்க்கலனா என்ன? அதான் கைல புடிச்சிருக்கிங்கள்ள..??”
”எதே.!!” திடுக்கிட்டான்.
“இடுப்ப சொன்னேங்க. மோகினிப் பேய் இடுப்ப இப்படி புடிக்க முடியுமா?” என்று நழுவிய அவனை கரத்தால் இடையை தழுவிக் கொண்டாள்.
“தெரியலிங்க..” பெரு மூச்சு ஒன்று அவனிடம்!
”மொபைல் இருக்காங்க” என்று கேட்டாள் கையை விடாமல்!!
”கீழ ரூம்ல தான் சார்ஜ் போட்டு இருக்கேனுங்க..”
”சுத்தம்… போங்க! இப்ப எப்படி இருட்டுல போறது?”
ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தனர். அவர்களின் சுவாசக் காற்று ஒருவர் முகத்தில் மற்றவர் மோத விட்டுக் கொண்டிருக்க..
அந்த அமைதியான நிமிடங்களே அவன் மனப் பிசாசை உசுப்பி விட்டது!
அவளின் அருகாமை…
அந்தக்கார இருள்…
இளமையின் தனிமை…
சில்லென்ற காற்று…
சலசலக்கும் மரங்கள்…
மணக்கும் அவள் பின்னல் மல்லிகை..
என்று அவனின் இளமை நரம்புகளை உசுப்பி தாம்பத்திய இன்னிசையை இனிமையாய் இணையோடு பாட வைக்கும் ஏகாந்த இரவு!!
ஆனாலும் மனதில் ஏதோ நெருடல் அவனுக்கு!
என்னவென்று புரியவில்லை!
அவள் இன்னும் என் மனதினை விட்டு நீங்கவில்லையா? இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை! உன் அக்கா பெண்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் கடமை இருக்கிறது! அது தான் உன்னை தடுக்கிறது! என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான்.
ஆனாலும் அவளின் அருகாமை அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது. அந்த உருவம் இல்லா புது உணர்வு அவன் ரத்த நாளங்களில் கலந்து உடம்பில் விரவி படர… அவனின் ஆண்மை விறைத்து முறுக்கிக் கொள்ள.. இவள் என் மனைவி என்று எண்ணம் மிக.. தன் நிலையை இழந்து விடும் நிலைக்கு அவன் தள்ளப்பட்ட போது..
அவளின் அந்த வார்த்தையில் அத்தனையும் வடிந்தது!!
Veryyyy niceeeeeeeee epii ❤️❤️❤️❤️❤️❤️💐
Acho apadi ena sonna malaru … waiting for your next episode
👌👌👌👌👌👌