உறவே உயிரே பிரியாதே.- அத்தியாயம் மூன்று
தீபிகா வீடு
“அம்மா எங்கே சென்று இருந்தீர்கள் இன்று ? இப்போது தான் வந்தேன் வீட்டுக்கு என்று சொன்னீர்களே ” எனக்கேட்டாள்.
ஆமாம் தீபு வைத்தீஸ்வரன் கோயில் சென்று நம் ஜோசியரை பார்த்து விட்டு வருகிறேன் ..
அம்மா இது தான் என் புது நண்பர் ஸ்ரீராம் என்றாள்.
இவர் சென்னையில் கார் மேனியூபாக்ச்சரிங் கம்பெனியில் டிசைன் என்ஜினீயர் . காணபிரன்சில் பார்த்தேன்.
அம்மாவுக்கு வணக்கம் சொன்னான் .. அவனை பார்த்தபோது அவளுக்கு அவள் அன்னான் சிவக்கொழுந்து ஞாபகம் வந்தது ஏனோ..
அப்போது தீபிகாவின் அப்பா வர … அவரிடமும் அறிமுகம் செய்து வைத்தாள். பின்னர் தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
அம்மா அதை கவனித்து தீபிகாவின் அப்பாவிடம் சொல்ல .. அவர் “ஹ்ம்ம் கவனித்தேன். யாரையும் தன் அறைக்குள் இன்று வரை கூட்டிப்போகாதவள் .. இப்போது கூட்டி செல்கிறாள் என்றால் அவன் மீது அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்க வேண்டும். என்றார்.
மேலும் “நம் பெண்ணுக்கு எல்லாரையும் எடை போட தெரியும்.. அதுவும் இல்லாமல் அவனை பார்க்கும் போதே நல்ல குடும்பத்து பையன் என்று தெரிகிறது.” என்றார்.
தீபிகாவின் ரூமுக்கு சென்றவன் அவளின் குணத்தை காட்டியது.
பொருட்கள் அனைத்தும் ஒரு தூசி இல்லாமல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
மர அலமாரியில் பிசினஸ் மேனேஜ்மென்ட் புக்ஸ் இருந்தன.
சில ஆங்கில நாவல்களும் இருந்தன. மேல் தட்டில் மெடல்கள் , வெற்றி கோப்பைகள் என அழகாக காட்சி படுத்தி இருந்தாள். ஒரு கட்டில் இரு தலையணை அனைத்தும் வெண்மையை உறுதி செய்தன.
மேசையில் ஒரு லேப்டாப் அதன் மூலையில் ஒரு போன்சாய் செடி அதன் கீழே ஒரு புத்தரின் சிலை.
அந்த அறையில் ஒரு பால்கனி மற்றும் அட்டாச்ட் பாத் ரூம் இருந்தன
பால்கனியில் பீங்கான் தொட்டியில் உயர் ரக அழகான தாவர வகைகள்.
ரொம்ப சுத்தமாக இருந்தது அந்த அறை. ஒரு போட்டோ பிரேமில் இவள் குடும்பம் இருந்தது.
இன்னொன்றில் இவள் மட்டும் அழகாக சிரித்துகொண்டு இருந்தாள்.
தீபிகா உன் அறை மிக அழகாக இருக்கிறது என்றான் …
IIM இல் கேம்பஸ் இன்டெர்வியூவில் ஒரு அமெரிக்கன் MNC இவளை வேலைக்கு அழைத்து இருந்ததை இவனிடம் காண்பித்தாள்.
ஓ சூப்பர் .. என்றான்.
அப்பா என்னை தனியாக அமெரிக்கா செல்ல கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால் அமெரிக்கா மாப்பிளை பார்த்து கொண்டு இருக்கிறார்..
இல்லை என்றால் .. என்னுடன் துணையாக.. அமெரிக்காவில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ இருக்கும் ஒருவர் நம்ம ஊர் காரராகவும் இருக்கலாம் வரலாம்.
அதனால் இன்னும் ரிப்ளை செய்யவில்லை என்றாள்.
அதற்குள் பார்வதி , ” தீபிகா.. சாப்பாடு ரெடி வாருங்கள் என்றார்..
சாப்பிட்டு அவர்களிடம் விடைபெற்று .. ஆண்ட்டி , அங்கிள் , தீபிகா நீங்கள் சென்னை வந்தால் என் வீட்டிற்கு வாருங்கள் என அழைத்தான் .
அவனுக்கு பை சொல்லி தான் ரூமுக்குள் வந்து படுத்தாள்.
அம்மா இவளிடம் .. தீபு உனக்கு ஸ்ரீராமை பிடித்து இருக்கா என கேட்டாள்.
உனக்கு அமெரிக்காவிற்கு துணையாக இவனை அழைத்து செல்கிறாயா.. பார்ப்பதற்கு நல்ல பையனாக இருக்கிறான்.. என்றாள்.
ஓ இவன் நல்லவன் தான் .. ஆனால் இவனை எப்படி என்னுடன் வருவான் .
என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்ல வேண்டும் அல்லவா.
அவன் வீட்டில் சென்று பேசி பார்க்கலாமா என கேட்டாள்.
முயற்சி செய்யுங்கள் .. பார்க்கலாம் என்றாள் ..
தீபிகாவின் அப்பாவிடமும் இதையே அம்மா சொல்ல அவரும் சென்னை சென்று அவன் வீட்டில் அவனை பார்த்து வாருங்கள் . எனக்கு நிறைய வேலை இருக்கு என்றார்.
உடனே இவள் வாட்சப்பில் “நாளை நாங்கள் சென்னை வருகிறோம் உங்கள் வீட்டுக்கு” என்றாள்.
ஸ்ரீராம் “யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என பதில் தந்தான்.
மறுநாள் காலை பதினோரு மணிக்கு ஸ்ரீராமிடம் .கைபேசியில் . நாங்கள் ஏர்போர்ட்டில் இருந்து கால் டாக்ஸியில் வந்து கொண்டு இருக்கிறோம்.
உங்கள் முகவரியை அனுப்பவும் என்று கேட்டாள்.
வாட்சப்பில் அவன் அனுப்பிய முகவரியை டிரைவருக்கு சொன்னாள்.
கரை அந்த சிவகிருபை இல்லத்தின் முன் நிறுத்த .. தீபிகாவின் அம்மாவுக்கு அதிர்ச்சி ..
தீபிகா வேண்டாம் போய் விடலாம் திரும்பி என்றாள் ..
மீண்டும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில் .
👌👌👌👌👌