13
தன் முன்னால் வாகாக அமர்ந்து இருந்தவளை காதல் கூறிய அடுத்த கணமே இதழ்களை கவ்விகொண்டான் கதிர்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பத்மா..
கைகால்கள் எல்லாம் உதறல் எடுக்க.. அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களை வம்படியாக பிய்த்துக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தாள்.
கதிரோ அவள் காதலாக பார்ப்பது போல பாவித்து இதழ்களை விரித்தவன், ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தான் காதலாக.. அவளோ அதனை தட்டி விட்டாள் கோபமாக..
“புரியுது!! உனக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இருக்கணும்.. என்ன செய்றது மாமனுக்கு பொறுமை இல்லையே.. பொறுமை இல்லையே.. அவ்வளோ காதல் உன் மேலே” என்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு அவன் கூற..
“என்னது?? காதலா?? என்னையா இது?” என்று தனது உதட்டினை காட்டியவள்,
“காதலிக்குறவன் செய்யுற வேலையா இது?” என்று ஏதோ ரேப் செய்ய வந்தவனை போல அவள் சாட..
“மாமனுக்கு காதல இப்படி தான் காட்ட தெரியும் டி மச்சக்கன்னி.. தள்ளி நின்னு.. விரல் உரசாம.. கண்ணும் கண்ணு பேசுற காதல் எல்லாம் காலாவதியாகிடுச்சு.. இப்போதைக்கு இது தான் ட்ரண்ட்..” என்றான் கூலாக..
“எப்பவுமே அது தான் காதல்” என்றாள் அவள் கடுப்பாக..
“நீ 90’ஸ் கிட் ஆ? இது தெரியாம போச்சே” என்று அவன் கிண்டல் செய்ய..
“நீரு என்னவாம்?”
“மாமன் எல்லாம் விதிவிலக்கு டி.. பாரு எப்படி என் லவ்வ சொல்லுறேன்னு”
“இங்க பாரு உனக்கும் எனக்கும் எல்லாம் செட் ஆகாது.. பழக்க வழக்கம் முதல் பாஷை வரை எல்லாம் எல்லாமே வித்தியாசம் தான். இப்போ காதல் முளைத்த சுவாரசியத்துல இது எல்லாம் கண்ணுக்கு தெரியாது.. அப்புறம் இது தான் பூதாகரமாக தெரியும்.. தவிர உங்க அளவு நாங்க பணக்காரங்க இல்லை.. இந்த பேச்சை இதோட முடிச்சிக்கோங்க..” என்றவள் வேக வேகமாக பக்கம் பக்கமாக கூற..
“ஏன்டி?? ஏன்?? காதல் சொன்ன அன்னைக்கே அதுக்கு எண்ட் கார்ட் போடுற.. ஒரு பேச்சுக்காவது யோசிக்கிறனு சொல்லுறியாடி நீ?? பாவி பாவி.. இவ்வளவு பேசிட்டு ஜம்பமா உட்கார்ந்து இருக்க.. எழுந்திருடி” என்று அவன் உறும..
அவள் பயத்தில் எழ முடியாமல் அவன் மீது கை வைத்து ஊன்றி எழ பார்க்க.. கதிரோ அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவள் கையை தட்டி விட.. அவன் மீதே இன்னும் வாகாக விழுந்தாள்.
கதிரின் அணைப்புக்குள் முழுமையாக வந்தாள். அவனுக்கு தயக்கம் உடைந்தது. மெல்ல அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவள் கண்களை நேராகப் பார்த்து “லவ் இல்ல என் மேல” என்று கேட்க..
பத்மாவோ பதில் அளித்தாள் இல்லை.
அவன் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற.. அதில் அவனுக்கு தைரியம் ஊற்றெடுக்க.. அவள் உதடுகளை தேடிக் கவ்விக் கொண்டான். நீண்ட நெடிய முத்தத்துக்குப் பின், அவளை தன் பக்கம் திரும்பி, தன் மார்பில் அவள் முகம் வைத்து அழுத்தி கொண்டான். அவள் முகம் அவனின் இதயத்தருகில் இருக்க.. “கேளுடி நல்லா கேளு.. என் இதயத்தோட சத்தத்தை.. அது உன் பெயரை மட்டும் தான் சொல்லும்.. இப்பவும் எப்பவும்” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி, “என் காதல் இனக்கவர்ச்சி இல்ல டி.. உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ மச்சக்கன்னி.. ஆனா நீ தான் இதயக்கனி”
மீண்டும் மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்து விட்டே எழுந்தான்.
“உனக்கு காதல் வரும் வரைக்கும் நீ வெயிட் பண்ணு.. ஆனா என்னைய வெயிட் பண்ண சொல்லும் உரிமை உனக்கு இல்லை மச்சக்கன்னி” என்றவாறு செல்லும் அவனையே விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பதுமை என பாவை.
இவன் மெதுவாக தன் காரை நோக்கி செல்ல அங்கே அவனது அல்லக்கைகளோ ஒரு டிராபிக் ஜாமையே நடத்திக் கொண்டிருந்தார்கள். யாரையும் இந்த சாலை வழியே கடந்து செல்ல விடாமல்..
முரட்டு தேகத்துடன்.. முறுக்கு மீசையுடன் அடியாள் போல் இருக்கும் இவர்களை எதிர்த்து பேசாமல், அவர்கள் எல்லாம் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே நின்றனர் அந்த வழி செல்பவர்கள்.
“என்னடா பண்றீய்ங்க?” என்று புரியாமல் அவர்களை பார்த்து கதிர் கேட்க..
நான்கில் ஒருவன் கதிரை ஓரமாக அழைத்து வந்து “எல்லாம் உங்களுக்காகத் தான் அண்ணே!! உங்களுக்காக தான்” என்றான் இப்பொழுதும் சுத்தமாக புரியவில்லை கதிருக்கு.
“என்ன அண்ணே.. இப்படி புரியாத மாதிரி முழிக்கிறிக.. நீ பாட்டுக்கு அண்ணிய கூட்டிட்டு.. ரோடுன்னு கூட பார்க்காம உட்கார்ந்து லவ் பண்றிய்ங்க.. உங்களுக்கு தான் பொறுப்பு இல்லை.. ஆனா எங்களுக்கு பொறுப்பு இருக்கு இல்ல.. அதான் ஒரு பய கூட இந்த ரோட் பக்கம் போக முடியாம நாங்க நாலு பேரும் அப்படியே அடைச்சுக்கிட்டு நின்னுட்டோம்.. எங்கள தாண்டிப் போக முடியுமா என்ன எவனும்?” என்று அவன் கிடா மீசையை முறுக்கிக் கொள்ள..
“அடப் பக்கி பயலுகளா.. அதுக்காக இப்படியா டா செஞ்சு வைப்பிங்க.. ஒரு குரலு கொடுத்திருந்தா நான் உசாரு ஆகியிருப்பேனடா?” என்று அவன் கேட்க..
“எங்க அண்ண காதலுக்காக இதுகூட நாங்க செய்ய மாட்டோமா என்னங்கடா?” என்று மற்றவர்களை பார்த்து கேட்க அவர்களும் தலையாட்ட.. கதிருகுத்தான் தலையை எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை..
“அதான் நான் வந்துட்டேன் தானடா.. அவிய்ங்கள விட்டு தொலைங்கடா அப்ரண்டீஸுகளா!!” என்று கோபமாக கத்த..
கதிரோடு பேசிக் கொண்டிருந்தவன் கையை ஆட்ட அதுவரை மாமிச மலை என ரோட்டை அடைத்து கொண்டிருந்த மூவரும் விலக.. வண்டியில் காத்திருந்தவர்கள் ரயில்வே கேட் திருந்த அவசரத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போல வேக வேகமாக ஓட்டிச் சென்றனர்.
“உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு?!” என்று வெளியில் அவர்களை வசை பாடினாலும் மனதுக்குள் மெச்சிக் கொண்டான். “நல்லவேளை இவனுங்க நிப்பாட்டி வைச்சாய்ங்க.. இல்லேன்னா என் ரொமான்ஸ் எல்லாம் பயலுவோலும் ஓசியில் பார்த்து இருப்பாய்ங்க.. அப்பாடி” என்று நெஞ்சில் கை வைத்து மூச்சை வெளிவிட்டுக் கொண்டு ஜாக்குவாரில் இளையராஜா பாட்டு ஒன்று தட்டிவிட்டு கண்களை மூடி ரசிக்க ஆரம்பித்தான் கதிர் வேந்தன்!!
காலையிலேயே அவர்களுக்குச் சொந்தமான வயலில் அறுவடையை பார்க்க சென்றுவிட்டான் மருது. பிற்பகல் வேளையில் வீட்டுக்கு வந்தவனுக்கு மேகநாதனும் சுவாதியும் வந்திருக்கிற விஷயம் தெரிவிக்கப்பட.. மேகநாதனை ஒரு தலையசைப்பு உடன் கடந்துவிட்டவன் சுவாதியை மட்டும் வாங்க சித்தி என்று அழைத்து தன் அறைக்குச் சென்று விட்டான்.
புனிதா வந்து “என்ன தம்பி இது அவரு உங்க சித்தப்பாரு இல்லையா? இப்படித்தான் தலையாட்டிட்டு வரதா? அப்புறம் என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கான்னு உங்க அப்பத்தா என்னைய தான் சாடு வாங்க” என்று மகனுக்கு நீர் மோரை கரைத்து கொண்டு வந்தவர் அறிவுரை கூற..
மோரை வாங்கி கடகடவென்று உள்ளே இறக்கியவன், “அதான் எனக்கு பதிலா நீங்க எல்லாம் சேர்ந்து தாரை தப்பட்டையோட வரவேற்பு கொடுத்துட்டீங்க தானே? பத்தாதா?” என்றான் நக்கலாக..
“மருது!!” என்று அவர் கண்டிக்க..
“இவரால் நானும் நம்ப குடும்பமும் பட்ட அவமானம் எல்லாம் உங்களுக்கு மறந்துடுச்சா மா? இப்பவும் ஊர்க்காரவிய்ங்க கொடுக்கிற மரியாதை நம் தாத்தாக்காகவும் அப்பாவுக்காக மட்டுந்தேன்.. அப்பவும் முன்னாடி விட்டு பின்னாடி இவிய்ங்க சித்தப்பா… ன்னு சொல்லிக் கேட்கும்போது உடம்புலாம் அப்படியே எரியும் தெரியுமா? பேசுபவனை தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிக்க தோணும்.. ஆனால் அதையெல்லாம் செய்ய முடியாது நம்மால.. அவிய்ங்க ஒன்னை பத்தாகி.. பத்தை நூறாக்கி பேசுறாய்ங்கன்னு எனக்கு புரியுது. ஆனா அந்த ஒன்னை செய்தது யாருமா? அந்த ரணம் எல்லாம் உள்ளுக்குள்ளேயே இருக்கு.. அதுவுமில்லாம இவ்வளோ வருசம் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து இருந்தவர் தானே.. இப்ப மட்டும் என்ன புதுசா பாசம்?” என்று அன்னையை கேட்டவனுக்கு பதில் புரிவதாக இருக்க “ஓஹ்ஹோ.. பாப்பாவ பார்க்க வந்திருக்கிறாராக்கும்.. நாமலே பாப்பாவை அனுப்புறதா தானே பேசிக் கொண்டிருந்தோம். திருவிழா முடிஞ்சதும் அவளையும் கூட்டிட்டு போக சொல்லிடுங்க” என்றவன் “சாப்பாடு எடுத்து வைங்க வரேன்” என்று குளியல் அறையில் நுழைந்து கொண்டான்.
குளித்து முடித்து வந்தவனை நிவேதிதா தான் “அண்ணா வா வா சாப்பிடலாம் உனக்காகத்தான் நானும் வெயிட்டிங்” என்று கூப்பிட.. அவளது இந்த தன்னமில்லா அன்பில் மனம் நெகிழ்ந்தது மருதுவுக்கு. அதிகம் பார்த்து பழகவில்லை என்றாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம் இருக்கத்தான் செய்தது. இருவரும் வந்து அமர சுடச்சுட இட்லியோடு நல்லி எழும்பு குழம்பை புனிதா பரிமாற.. அண்ணன் கூட வளர்த்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நிவேதிதா.
மேகநாதனுக்கு மருதுவின் ஒதுக்கத்திற்கான காரணம் புரிந்துதான் இருந்தது. ஆனால் அவராக கட்டாயமாக அவனிடம் பேசிய முன் வரவில்லை. அவர் மனம் பூரா அவரின் பெண்ணை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே!!
ஏற்கனவே இவர்கள் பேசி வைத்திருந்தது படி இதுவரை நடந்ததை மேகநாதனுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. அதேபோல மேகநாதனும், அவருக்கு வந்த காணொளியை பற்றி சிறிதும் பேசவில்லை. முடிந்ததை பற்றி பேசாமல் இனி நடக்கப் போவதை நல்லவிதமாக நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் அவரிடம்!!
சுவாதியும் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு வர அனைவருக்கும் வேலையாள் கொண்டு வந்து டீயை புனிதா கொடுத்துக் கொண்டிருந்தார். “நம்ம பேச்சியம்மன் கோவில் திருவிழா வருது. நாளைக்கு போய்ட்டு வருவோமா?” என்று சுவாதியிடம் புனிதா கேட்க..
அவருக்கும் இதுவரை தொழில் வீடு பங்கஷன் பார்ட்டி என்று கழித்தவருக்கு இம்மாதிரியான சூழலில் மனதைக் கொஞ்சம் அமைதிப்படுத்த “போகலாம் அக்கா” என்றார்.
“அய்யய்யோ நான் வரல!!” என்று அலறினாள் நிவேதிதா.
“ஏன் மருமகளே நீ வரலைன்னு சொல்ற?” என்ற தனபாக்கியம் கேட்க..
“போன வாரம் ஏதோ ஒரு கோவிலுக்கு திருவிழான்னு அழைச்சிட்டு போனீங்களே?” என்று அவள் கேட்க..
“ஆமாம் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா” என்றார் புனிதா..
“அதே!! அதேதான்!! அப்பப்பா அங்க நடந்ததை இப்ப நினைச்சாலும் எனக்கு அப்படியே உள்ளுக்குள்ளே பயமா இருக்கு* என்றாள்.
கேட்டுக்கொண்டிருந்த மேகநாதனுக்கு மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது. சுவாதியோ புரியாமல் புனிதாவையும் தனபாக்கியத்தையும் பார்க்க.. “நீ பயப்படுற அளவுக்கு அங்கு என்ன நடந்துச்சு?” என்று மருது கேட்டுக்கொண்டே வந்து அமர்ந்தான் அவளருகில்..
“அத ஏன் ணா கேக்குற? கோயில் ஃபுல்லா செம கூட்டம். நாங்க கொஞ்சம் தள்ளிதான் நின்னுகிட்டு இருந்தோம். எல்லாரும் பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்களா..”
“டான்ஸா? என்று சிரித்த மருது “அது கும்மி!!” என்றான்..
“ஏதோ ஒன்னு.. அப்புறம் அந்த பாட்டு பாடுறவரு வேகம் வேகமா பாட ஆரம்பிச்சாரா? திடீர்னு எனக்கு பின்னால இருந்தவங்க ஓன்னு சத்தம் போட்டு கிட்டு கையை முறுக்கி விட்டு டான்ஸ் ஆட போய்ட்டாங்க.. அவங்கள அப்ப பார்க்கணுமே? அந்த கண்ணு.. அவங்க போடுற சத்தம்.. அதை பார்த்தவுடன் எனக்கு அப்படி பயமா இருந்துச்சு” என்று அவள் விவரிக்க விவரிக்க அதை புரிந்து கொண்ட மற்றவர்கள் சிரிக்கத் தொடங்கினர்.
சுவாதிக்கும் அவள் சொன்னது புரியாமல் சிரிப்பவர்களை கேள்வியாக பார்க்க.. “அது ஒன்னும் இல்ல சித்தி.. இந்த மாதிரி கோவில் திருவிழால, பாட்டு நடக்கும் போது சில பேரு சாமி வந்து ஆடுவாங்க இல்லையா? அத பார்த்துட்டு தான் பாப்பா பயந்துட்டா போல” என்று அவன் மேலும் சிரிக்க “போ அண்ணே சிரிக்காத” என்று சிணுங்கினாள் நிவேதிதா.
“நீ பெரியம்மா பக்கத்துலதான் நின்ன.. அப்புறம் ஏன் உனக்கு பயம்?” என்று மருது கேள்வி கேட்க..
“மத்தவங்களுக்கு சாமி வந்தா பயத்துல பெரியம்மா கையை நான் புடிச்சுக்கிட்டலாம். ஆனால் பெரியம்மாவுக்கே சாமி வந்தா யாரு கையை புடிக்கிறது அண்ணா!!” என்று அவள் கண்களை விரித்து கூற அதில் புனிதாவோ “சீ போடி வாயாடி” என்று அவளை செல்லமாக அடித்தார்.
நிவேதிதாவை தன் அன்னை கையை சுரண்டி “கேளுங்க மாம்.. எல்லாரும் சாமியாடிக்கிட்டு இருந்தாங்களா நான் பயந்து பெரியம்மா கைய பிடிச்சா.. அப்போ பெரியம்மா புஸ்ஸூ புஸ்ஸூன்னு மூச்ச விட்டாங்க.. சட்டுன்னு பார்த்தா பெரியம்மா உடம்பெல்லாம் வியர்வை ஓட.. நாக்கை துருத்தி என்ன ஒரு பார்வை பார்த்தாங்களா? அப்படியே எனக்கு நெஞ்சு திக்கு திக்குனு அடிச்சி ஹார்ட் வெளியே விழுந்த மாதிரி ஆயிடுச்சு.. அப்புறம் பெரியம்மாவும் அதே மாதிரி சாமி வந்து ஆட.. அத்தையும் அவங்கள பிடிக்க போய்ட்டாங்க.. நான் அப்படியே பின்னாடி வரும்போது..” என்றவள் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டாள்.
“பின்னாடி வரும் போது?” என்று சுவாதி ஊக்க..
“ஆ..ஆஹான்.. பின்னாடியும் நிறைய பேர் ஆடுனாங்களா? நான் பயந்து ஓரமா போய் ஒளிஞ்சி கிட்டேன்” என்று சமாளித்தாள்.
“உன்னை எல்லாம்!!” என்று தலையில் அடித்த மருது “அந்தக் கூட்டத்திலேயே வலை தேடி பாப்பாவ கண்டுபிடிச்சு கூட்டி வருவே பெரும் பாடா போய்டுச்சி சித்தி” என்று விளக்கம் அளித்த அவன் அறியவில்லை இவர்கள் தேடிக் கொண்டிருந்த சமயம்.. அவள் வெற்றியால் களவாடப்பட்டாள் என்று!!
முதன்முறை திருவிழாவை பார்த்த நிவேதிதா கொஞ்சம் பயம் ஆர்வம் சந்தோசம் என்று கலவையாக நின்றிருக்க.. அதிலும் சண்ட மேளங்கள் டிரம்ஸ் வாசிப்போடு பெண்களின் குலவை சத்தங்களும்.. கூடவே அம்மனைப் பற்றி பாடகர்கள் பாட.. அந்த இடமே அப்படியே அருளில் பக்தியில் திளைத்து இருந்தது. அதில் பல பேருக்கு சாமி வந்து ஆட.. இவள் பயந்து போய் பெரிய அன்னையின் பின்னே ஒளிந்து கொள்ள.. ஆனால் புனிதாவும் ஒருகட்டத்தில் சாமியாட.. அவரை தனபாக்கியம் பிடித்துக் கொள்ள.. அந்தக் கூட்டத்தில் சிக்கி தவித்தவளை சட்டென்று ஒரு கரம் இடுப்போடு அணைத்தவாறு கூட்டத்திற்குள் நுழைத்து எதிர்ப்பக்கம் அழைத்துச் சென்றது.
ஸ்பரிசமே சொன்னது அது வெற்றி வேந்தன் தான் என்று!! வேறு யார் அவனையின்றி அழகுசுந்தரம் வீட்டு பெண்ணை தைரியமாக தொட முடியும்? எப்படியோ இந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து வெளியில் வந்தால் போதும் என்ற நிலைமையில் முதன்முறையாக அவனிடம் எதிர்க்காமல் அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு பின்னே சென்றாள்.
ஆண்களோ நிவேதிதா பெண்களோடு இருக்கிறாள் என்று எண்ணியிருக்க… புனிதாவும் தனபாக்கியம் கூட்டத்தோடு கூட்டமாக இருக்க.. எந்தவித கஷ்டமும் இல்லாமல் யாருமே அறியாமல் அவளை இழுத்துக் கொண்டு சென்றவன் அருகிலிருந்த பாலத்தில் கீழே கொண்டு சென்றான்.
இதுவரை இல்லாத பயம் முதல் முதலாக பிடித்தது அவளுக்கு? கூட்டமும் சத்தமும் மட்டும் தூரம் இல்லை.. கூப்பிடும் குரலுக்கு வரும் சொந்தமும் தூரத்தில்தான்!!
அவளோ அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் வேர்க்க விருவிருக்க நின்றிருக்க.. வெற்றியோ கோயில் என்றால் எப்போதும் அவன் வேஷ்டி தான்!! இன்றும் அதே வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தவன், சட்டை பட்டன்களை மேலே இரண்டை திறந்துவிட்டு உள்ளுக்குள் ஊதி கொண்டான்.
“ஆமாம் நீ என் கும்மி அடிக்க போகல?” என்று சம்பந்தமில்லாமல் அவன் கேட்க..
கும்மி என்றால் அவளுக்கு என்ன தெரியும்..
பேசாமல் வாயை இறுக்க மூடியபடி அருகே இருந்து வைகை ஆற்றை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “கேட்டா பதில் வரணும்!!” என்றான் அவளை நெருங்கி நின்று..
“பதில் சொல்ற மூடு எனக்கு இல்லை” என்றாள் சலிப்பாக..
“கரெக்ட்.. அப்போ அம்மணி வேற மூடுல இருக்கிங்க போல..” என்றவன் இன்னும் நெருக்கமாக நெருங்கிட..
“ஹல்க்!! தள்ளி போடா!!” என்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்டாள்.
“என்ன எதுக்கு தள்ளிவிடுற? நீதான் சொன்ன.. ம்ம்ம்” என்றான்.
அவளோ இன்னும் முறைத்துக் கொண்டு நிற்க.. “வா ஒரு செல்பி எடுக்கலாம்” என்று அவள் இடையோடு அணைத்து, நெருக்கமாக நின்று தன் போனில் ஆங்கிள் பார்த்தான்.
“அங்கிள் வயசுல ஆங்கிள் பார்க்கிறான்!” என்றவள் முணுமுணுக்க..
“அங்கிளா யாருடி அங்கிள்? ஜஸ்ட் தர்ட்டி டி!! அப்போ இந்த அங்கிளோட பர்ஃபாமென்ஸ் பாக்குறியா?” என்று இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்துக் கொண்டே கேட்டான்.
நல்ல நாளிலேயே இவன் தில்லைநாயகம்!!
இப்ப நாம வேற சொரிஞ்சு விட்டுட்டோம்.. என்ன பண்ணப் போறானோ என்று கண்களில் மிரட்சியுடன் அவனை பார்க்க..
ஒற்றை விரல் கொண்டு அவளது கீழ் உதட்டை தனியே பிரித்து.. இழுத்தான். அவள் அவனைத் தள்ளி விட எத்தனித்து திமிற.. வெற்றியோ “என்கிட்டே வா?” என்ற லுக்கோடு.. ஒரு காலைத் தூக்கி அவள் காலோடு போட்டு அவளை இறுக்கி பிணைத்து கொண்டான். அவளை பாலத்தின் சுவற்றோடு அழுத்திக் கொண்டு அவள் உதட்டை உறிஞ்சி, அவளது இதழ்களை சுவைக்க.. கையோ அவளது இடையை அழுத்தமாக பற்றி இருந்தது.
ஒரு நிமிடத்துக்கு மேல் அவனின் ஹாட் பர்ஃபாமென்ஸ் நீடிக்க.. அவன் பர்ஃபாமென்ஸில் அவள் பரிதவிக்க..
மெல்ல மெல்ல அவள் தன் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டவள், வாயை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கி கொண்டாள். இடையைக் கசக்கிய அவனின் கையை கொஞ்சம் பலம் கூட்டி தள்ளி விட்டாள். அவனோ அவளின் கழுத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்க.. சிலிர்த்துக் கொண்டவள். சட்டென அவனைத் தள்ளி விட்டு, முறைத்து பார்த்தாள். பின் வெற்றியை அடிக்க கையை ஓங்கினாள் நிவேதிதா. அவனோ ஓங்கிய கையை பிடித்து ஒரு சுழற்று சுழட்டி, மறுகையால் அவள் இடுப்பை வளைத்து தன் மேல் இழுத்துக் கொண்டான். இப்பொழுது இருவருடைய முகம்.. வெகு அருகில்.. மூச்சு விடும் தூரத்தில்..
கண்களை விரித்து பயத்தையும் அதிர்ச்சியையும் அவள் காட்ட.. “பிடிக்காத பெண்ணை கம்பெல் பண்ணவும் மாட்டேன்.. அதற்காக என்னுடைய உரிமையையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றவன் அவள் இடையை இறுக்கமாக ஒரு அழுத்து அழுத்திவிட்டு இதழ்களை லேசாக உரசிவிட்டு.. “பத்திரமா போ!!” என்றவன், அவ்வழியே சாமி ஊர்வலம் வர அதே கை காட்டினான்.
‘இவன் என்ன டிசைன்டா? நல்லவனா? கெட்டவனா?’ என்று அவள் யோசிக்க.. அதை அவள் முகம் பிரதிபலிக்க..
அவனின் மூக்கை அவள் காதோரம் வைத்தவன், சூடாக மூச்சு விட்டு “ரொம்ப எல்லாம் யோசிக்காதே..நான் நல்லவனா? கெட்டவனான்னு!! நிச்சயமா நான் நல்லவன் மட்டும் கிடையாதுடி!!” என்றவன் சாமி ஊர்வலம் இவர்கள் அருகே நெருங்க.. மீண்டும் அவளை ஒரு சுழட்டு சுழட்ட.. அவள் தடுமாறி நேராக நிற்கும் முன் அவன் அவ்விடத்தில் இல்லை!!
காதலே.. காதலே..