ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 02

அத்தியாயம் 2

 

“அய்யோ யாராவது கதவை திறங்கள். எனக்கு மூச்சு முற்றுகிறது.” 

 

“என்னடா அதிசயம் இது? ஆருஷா உள்ளப் போன பெட்டி அங்க மூடிகிடக்குது. ஆனா சத்தம் அதுக்கு பக்கத்துப் பெட்டில இருந்து வருதே?!” என்று புலம்பியவாறே அந்த பெட்டியின் திருகு கோலை திறந்தார் வேலுநாச்சியார். அதிலிருந்து வந்த பூராணகாலப் பெண்ணவளைப் பார்த்ததும், வேலுநாச்சியாருக்கு மயக்கமே வந்துவிட்டது. 

 

“அடியேய் ஆரு! இது என்னடி கோலம்? நாடகத்துல ஏதாவது நடிக்கப் போறியா?”

 

“மூதாட்டியே! யார் நீங்கள்? உங்கள் வாய் மொழி எதுவும் எனக்கு புரியவில்லையே?!”

 

“என்னது வாய்மொழியா?” என்று வேலுநாச்சியார் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

 

“மூதாட்டியே! அது என்ன சத்தம்? அது எங்கிருந்து வருகிறது?”

 

“அதானே?! என்ன சத்தமாயிருக்கும்? இரு நான் பார்க்குறேன்.” என்றவர் தனதறையின் கதவை சிறிது திறந்து பார்த்தவர், தங்கள் வீட்டிற்குள் திருடுவதற்காக யாரோ புகுந்துவிட்டனர் என்பதை அறிந்து கொண்டார். அவரது அதிர்ந்து முகத்தை பார்த்த மங்கையவள்,

 

“மூதாட்டியே! என்னவாயிற்று? ஏன் பதற்றம் கொள்கிறீர்கள்?” என்று வினவ,

 

“அய்யோ! இவ தமிழை கேட்குறதுக்கு அந்த கொள்ளைக்காரங்ககிட்டயே சிக்கி சின்னாபின்னமாகலாம் போலயே!”

 

“தாங்கள் என்னக் கூறுகிறீர்கள் என்று சத்தியமாக எனக்கு விளங்கவில்லை தாயே!” என்றதும்,

 

“போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. நீ பார்க்க ஆரு மாதிரியே இருக்க. ஆனா என்னோட ஆருயில்ல.. நீ இங்க வந்துருக்கன்னா, அப்ப என்னோட ஆரு எங்கப்போனா?”

 

“நான் பூவிழியாள். பாண்டிய நாட்டு சிற்றரசர் மதிவாணனின் ஐந்தாவது மகள் நான். மாவீரர் ரணதீரனுடன் நடக்கும் திருமணம் பிடிக்காது, கிணற்றில் குதித்தேன். பின்னர் எவ்வாறு இங்கு வந்தேன் என அடியேன் அறியேன் தாயே! உங்கள் உலகமும் உங்கள் மொழிவழக்கும் எனக்கு முற்றிலும் புதியதாக உணர்கிறேன் தாயே! தயைக்கூர்ந்து நான் மீண்டும் எனது உலகம் செல்ல வழி காட்டுங்கள் தாயே!” என்று கண்கலங்க கூறியவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. 

 

“கவலைப்படாத நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.”

 

“அப்படி என்றால்?”

 

“உதவுறேன்னு அர்த்தம்.”

 

“ஓஓஓஓஓ..” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வெளியே சிலர் பேசும் குரல்கள் கேட்டன. 

 

“வீட்டையே சல்லடையா சலிச்சாச்சு. ராக்கி பாய் சொன்ன பெட்டியை மட்டும் காணலையே!” என்று ஒருவன் கூற,

 

“அந்த பெட்டிக்கு பல மில்லியன் கோடி டாலர் ரேட்டு பேரம் பேசிருக்காரு. இதுயில்லாம போன தோலை உறிச்சுடுவாரு.” என்று ஒருவன் கூற,

 

“சும்மா புலம்பிட்டு நிக்குறதுல பிரயோஜனம் இல்ல. கதவை உடைச்சு உள்ளப்போங்க.” என்றவர்கள் வேலுநாச்சியாரின் அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல, அங்கிருந்த பெட்டிகளை கண்டனர். 

 

“இங்கேருடா இங்க இருக்கு. தூக்குங்கடா..” என்றவன் பெட்டியை தூக்க முயல,

 

“என்னடா இது? பெட்டி இந்த கணம் கணக்குது. உள்ளே பூதம் ஏதாவது தூங்குதோ?” என்று புலம்பியவாறே அப்பெட்டிகளோடு சேர்த்து சில விலைமதிப்பற்ற ‌பொருட்களையும்‌ வேனில்‌ ஏற்றிக் கொண்டு கிளம்பினர். 

 

“சின்னா பையா! பொருள் கொண்டு வந்துருக்கோம்.”

 

“ராக்கி பாய் மாடில தான் இருக்காரு. அங்க கொண்டு போய் வைங்க.” 

 

 “ஓகே பையா!” என்றவர்கள் அரண்மணை போல் இருந்த வீட்டின் மேல் மாடியில், அந்த பெட்டிகளை தூக்கிக் கொண்டு போய் வைத்தனர். அவர்கள் வைத்து விட்டு திரும்பும் போது, அங்கு வந்து சேர்ந்தான் சென்னையையே கலங்கடிக்கும் ராக்கி பாய். சென்னையில் இருக்கும் தொழிலதிபர்களில் முதன்மையானவன். இவனை கேட்காமல் காற்றும் மழையும் கூட வராது. இவனுக்கு தெரியாது யாரும் யாருடைய உயிரை எடுத்திட முடியாது. காலனுக்கு காலனிவன். தன் அறையில் கண்ணாடி முன் நின்று தன் அலையலையான கேசத்தை கோதியவாறே திரும்பிவனை பெட்டிக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழியாழ். தனது கண்களை நாலாபுறமும் சுழற்றினாள். அவ்வறையில் அவனைத் தவிர வேற யாருமில்லை. 

 

“எவ்வளவு நேரம் அப்படியே கண்ணை உருட்டி உருட்டி பார்த்ததுட்டு இருப்ப? வெளிய வா.” என்றதும் பெட்டியைத் திறந்து வெளியே வந்தவளைப் பார்த்தவன்,

 

“யார் நீ?” என்றவளிடம் சீறியவன், 

 

“சின்னா! ஹேய் சின்னா!” என்று கத்த, 

 

“மாப்ள!” என்று உள்ளே பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த சின்னா, அங்கே கோவிற்சிற்பமாய் நின்றிருந்த பூவிழியாழைப் பார்த்ததும் திகைத்து நின்றவன்,

 

“யார் டா இது? இவ்வளோ அழகா இருக்கா?” என்று கூற,

 

“மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டு மாமா வேலை பார்க்குறியாடா? உனக்கு தெரியாம எப்படி இவ உள்ள வந்தா? இந்த லட்சணத்துல தான் நீங்க வேலை பார்க்குறீங்களா? எங்கடா போனாங்க எல்லோரும்? முதல்ல இவளை வெளிய அனுப்பு.” என்று கர்ஜித்தவனின் தேகம் கோபத்தில் செந்தணலாய் கொதித்ததை இமைக்காமல் பார்த்திருந்தாள் பூவிழியாழ்.

 

‘என்ன ஒரு தேகம்? கட்டுக்கடங்காத காளையின் திமிலைப் போன்ற தோள்கள், மதயானையின் நெஞ்சுரம் போன்ற மார்பு, பறந்து திரியும் ராஜாளியின் சிறகைப் போன்ற கைகள், வேட்டையாடும் புலியைப் போன்ற கண்கள், எதிரில் நிற்போரை வாயடைக்கச் செய்யும் பார்வை, எப்படிப்பட்ட பேரழகனிவன்? எந்த ஊர் அரசனாக இருக்கிறான்? தந்தையிடம் அந்த ரணவீரனை அல்ல, இந்த கட்டழகனைத் தான் மணமுடித்து வைக்கச் சொல்ல வேண்டும்.’ என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்,

 

“ஏய்! இதுக்கு முன்னாடி ஆம்பளைய பார்த்ததே இல்லயா? இப்படி பார்க்குற?”

 

“மன்னிக்க வேண்டும் அய்யனே! நானாக பார்க்கவில்லை; எனது கண்கள் தானாக பார்க்கின்றன. என்ன சொல்லி தடுக்கவென்று தெரியவில்லை நாதனே!” 

 

“நாதாங்குற? அய்யனேங்குற? யார் நீ? என் பாட்டி ஒரு வேலையா வெளிய போயிருக்கு. கிழவி மட்டும் இந்த கோலத்துல உன்னையும் என்னையும் பார்த்துச்சு, அப்புறம் உனக்கே என்னைய கட்டி வைச்சுடும்.” என்றவன், அவள் அணிந்திருந்த ஆடைகளையும் அணிகலன்களையும் மேலிருந்து கீழாக அளந்தவன்,

 

“ஹேய் என்னடி ட்ரெஸ் இது? போ.. போயி ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிட்டு வா. இல்ல எனக்கிருக்கும் கோபத்துக்கு நீ தான் முத டெட் பாடி..”

 

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் எனப் புரியவில்லையே! தெளிவாக கூறுங்கள் அய்யனே!.” என்றவளை ஏற இறங்க பார்த்தவன், தனக்கு கீழ் கிடந்ததை தனது காலால் விலக்கியவன், 

 

“ஹேய் சின்னா! காரியம் முடிஞ்சா பீஸை அப்புறப்படுத்த மாட்டியா? பாவம்! என் கைல தான் பீஸாகணும்னு இவன் தலைல எழுதிருக்கு போல. சீக்கிரம் க்ளீன் பண்ணு.” என்று சின்னாவிடம் கூற, அப்பொருளை தூக்கிச் சென்றான் சின்னா. சின்னா அவ்விடத்தை விட்டு அகன்றதும், பூவிழியாழின் அருகே வந்த ராக்கி,

 

“இங்கப்பாரு! நான் ஒன்னும் நல்லவன் கிடையாது. இப்படி தங்கச்சிலை மாதிரி பொண்ணை பக்கத்துல வைச்சுக்கிட்டு எட்டி எட்டி பார்க்குறதுல்லாம் எனக்கு சுத்தமா வராது. அதுனால இந்த மாதிரி எல்லாந்தெரியுற மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தன்னு வைச்சுக்கோ கல்யாணம் வரைக்கும் கூட வெயிட் பண்ண மாட்டேன்.. அப்புறம் உனக்கு தான் கஷ்டம்..”

 

“அப்படியென்றால்?”

 

“அப்படின்னா, இப்போ இந்த நிமிஷத்துல இருந்து நான் உங்கூட கமிட்டட் ஆகிட்டேன். நாம லிவிங் டுகேதர் பண்ணலாமா?”

 

“அப்படியென்றால் என்ன? எனக்கு புரியவில்லை நாதா!”

 

“அய்யய்யய்ய! இந்த மாதிரி தமிழ்ல புரியாம பேசுறதுக்கே உன் வாயை அடைக்கணும்.” என்றவன்  அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, 

 

“ஹேய் சின்னா!” என்றழைக்க

 

“மாப்ள?” என்று வெளியே இருந்தவாறே குரல் கொடுத்தான் சின்னா

 

“இன்னைக்கு யாரும் இந்த பக்கம் வரக்கூடாது. அந்த கதவை வெளில பூட்டிட்டு போ. பாட்டி வந்தா உள்ள ஒரு ப்யூட்டியோட இருக்கேன்னு சொல்லு.” என்றவனை புரியாது பார்த்திருந்தாள் பூவிழியாழ்.

 

“இப்படி ட்ரெஸ் பண்ணா என்னாகும்னு உனக்கு தெரிய வேணாம். வா சொல்லித் தர்றேன்.” என்றவன், அவளை துண்டென தூக்கி தோளில் போட்டவன் கட்டிலை நோக்கி நடந்தான். 

 

‘இவன் பெண்களை எட்டி நிற்க வைக்கும் ராமனா? இல்லை துகில் உறியும் துச்சாதனனா? யாரென்று தெரியாமல் கதிகலங்க அவனை பார்த்திருந்தாள் பூவிழியாழ். நான் முதன் முதலில் பார்த்து ரசித்த தனது ராமனே ராவணனாகி போவானோ என்றெண்ணியவாறே அவனிடம் போராடினாள் மங்கையவள். 

 

மலரை சுற்றி வரும் வண்டை ஈர்ப்பது அம்மலரா? இல்லை அதில் இருக்கும் தேன்துளிகளா?

2 thoughts on “இரகசிய மோக கனாவில் 02”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top