மாமனே 9
இருளிலும் ஜொலிக்கும் அவள் கண்களை பார்த்தான் மாணிக்கவேல்.
நிலவோ தன் வானெனும் காதலனோடு உலா வர..
அவன் அருகினில் மற்றொரு நிலா..!!
யார் சொன்னது முழுமதி தான் கொள்ளை அழகு என்று… பிறைமதியும் அழகி தான், என்னவளை போல!! என்று எண்ணியவன் ஒற்றை விரலால் அவளது முக வடிவத்தை அளந்தான்.
இந்த ஒரு வாரமும் இருவரும் தனியாகத் தான் இருக்கிறார்கள் இரவை மட்டுமே துணைக்கொண்டு… இளமையை தள்ளி வைத்துக் கொண்டு!!
அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதின் ஓரத்தில் ஒரு ஈர்ப்பு!!
மனதினை மீறி அவளை ஓரப்பார்வை பார்க்கும் விழிகளை
அவனால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை!!
புடவையில் வலம் வருபவளை அவள் அறியாமல் ரசிப்பான்.
ஆனால் இன்று முகத்தைத் தாண்டி ரசிக்கும் எண்ணம் பேர் அலையாய் எழுந்தது!!
மெல்ல மெல்ல அவளது முகத்தைத் தாண்டி பார்வை கீழே செல்ல செல்ல… ஊஃப்… ஒரு பெரு மூச்சுடன் முகத்தை திருப்பிக் கொண்டான் மாயவன்!!
கை அருகே இருக்கும் மனைவி..
ஆனால் ஏதொ ஒரு தடை.. அதௌ உடை என்று அறிவு கூறினாலும் மனதினால் முடியவில்லை!!
அந்த தடையை அவனது பெற்றோர்களும் உணர்ந்தார்களோ என்னவோ… “ஒரு வாரம் கழித்து சொந்த பந்தங்களை அழைத்து நம்ம குலதெய்வ கோயிலில் மீண்டும் ஒரு முறை தாலி கட்டி திருமணம் வைக்கோணும். நாங்க போய் அதற்கான ஏற்பாடு பார்க்கிறோமுங்க தம்பி.. இப்போதைக்கு நீங்க ஊர் வர வேண்டாமுங்க.. மொத நிள் வந்தா போதுமுங்க…” என்று விட்டு சென்றனர் சுந்தரவேலவும் அல்லிமலரும்!! போகும்போது அவர்களது மகள்கள் நால்வரையும் மருமகன்களையும் கூட அள்ளிக் கொண்டுதான் சென்றனர், இந்த ஒரு வாரத்தில் இவர்கள் இன்னும் தங்களுக்குள் நெருங்கட்டும்..
இவர்களால் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று!
கூடவே திருமாறன் மற்றும் வேதாமணியிடமும் பேசி அவர்கள் உறவுகளுக்கும் வாய் வழியாகவே அழைப்பு விடுக்க சொன்னார்கள்.
சில முக்கிய உறவுகளுக்கு மட்டும் இருவரும் அழைத்து சொல்லிக் கொள்ளலாம் என்றார் சுந்தரவேலு. அதனை திருமாறனும் ஒத்துக்கொள்ள… அந்தப் பக்கம் ஜொருராய் நடந்து கொண்டிருந்தது இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடு!!
மாறாதது மாற்றம் ஒன்றுதான்! மற்றவை எல்லாம் மாறக்கூடியதுதான்!!
மாணிக்கத்தின் மனமும் கூட இந்த ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல மனைவியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
அவனில் எழும் மாற்றங்களை தெரியாது.. அவனின் கண்களின்
பாவத்தை புரியாது நின்றிருந்தாள் பாவை!
அவன் கண்களின் மாற்றத்தை இருள் மறைத்திருக்க.. இவளோ தீவிரமாக ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
சுவாசம் முட்டும் தூரத்தில் மனைவி.
அவளின் சுவாசத்தை ருசிக்கும் நிலையில் கணவன்!!
அவனையும் மீறி ஏதோ ஒரு ஈர்ப்பு விசை அவளை நோக்கி காந்தம் என இழுத்துக் கொண்டு செல்ல.. இதோ இதழ் உரசும் நிமிடம்…
நூலளவு இடைவெளி…
இடைவெளி குறைகையில்…
இனித்திடும் இல்லறம்!!
அந்தோ பாவம்… அந்த அரிதான நிமிடத்தில்…
”பிரதர்..!!” மெல்லிய குரலில் அழைத்தாள் மலர்விழி.
“எதே? பிரதரா?” என்று அதிர்ந்தவனின் மொத்த உணர்வுகளும் பொங்கி வந்த பாலில் தண்ணீர் இட்டது போல வடிந்து போக…
“ஹா ஹா.. பயந்துட்டீங்களா? சும்மா!! இப்ப எல்லாம் வீட்டுக்காரர பிரதர்னு செல்லமா கூப்பிடுறது ட்ரெண்டாம்!! நீங்க சினிமா எல்லாம் பார்க்கிறதில்லையா?” என்றவளின் சிரிப்பில் பிரதர் என்று அழைத்த அந்த இதழ்களை வன்மையாக தண்டிக்கும் எண்ணம் மிகுந்தது மாணிக்கவேலுக்கு!
”சொல்லுங்க.. சிஸ்டர்..??” காற்றுடன் கலந்து வந்தது அவனின் ஆண்மை குரல் சற்றே நக்கலுடன்!
மலர்விழி முதலில் அதிர்ந்தாலும் தனக்கு ஏற்றவாறு உடனே பேசும் கணவனின் இந்த வார்த்தையாடலை ரசித்தவள்,
”மேட்ச் பாக்ஸ்.. இருக்கா.. உங்கள்ட்ட..??” தத்தித் தத்தி வந்தன அவளது வார்த்தைகள். சட்டென்று கோபப்பட்டு விடுவானோ இந்த முரடன் என்று எண்ணம் அவளுள்!
“எதே?” மீண்டும் ஒரு அதிர்வு அவனிடம்!!
“அதாம்பா… வத்திப்பெட்டி வத்திப்பெட்டி!!” ராகம் பாடினாள் அவள்.
”வத்திப்பெட்டி எல்லாம் வச்சிக்கிற அளவு நான் பெரிய ஆள் இல்லிங் அம்மிணி!” என்றான் நல்ல பிள்ளையாய்!!
“நோ ஸ்மோக்கிங்!! குட் புருஷ் கீப் இட் அப்!” என்று அவனது தோளில் தட்டி பாராட்டினாள். அவனும் மென்னகையோடு அதனை ரசித்துக் கொண்டிருந்தான்.
”குட் ஹேபிட் தான். ஆனாலும் ரொம்ப குட் பாயா இருக்காதீங்க புருஷ்! எனக்கு தான் அப்புறம் கஷ்டமா போயிடும்!” அவன் கையை பிடித்தவள் அவனைத் திருப்பினாள்.
அவனுக்கு தான் ஊரில் தண்ணி அடித்து ஆட்டம் போட்டது நினைவுக்கு வந்தது. சிகரெட்டை வளையம் வளையமாக ஊதி வாத்தியார் மேலயே விட்டதெல்லாம் ஞாபகத்திற்கு வர.. தலையாட்டி சிரித்துக் கொண்டான்!
“வாங்க.. வாங்க.. அங்கன சாமி ரூம்ல வத்திப்பெட்டி இருக்கும்..!! அப்படிய மெதுவா கீழ நடங்க.. மெல்ல.. மெல்ல..!!” என்று அவனை முன்னே நடத்தினாள்
”இருட்லயா? இப்ப போகனுமாங்க..?? கரெண்ட் வரட்டுமுங்களே?” அவள் தேகத்தோடு தேகம் உரச திரும்பினான்.
”பின்ன.. எவ்வளவு நேரம் இப்படி இருட்டிலேயே இருக்கிறது? உங்களுக்கு பயமா இருந்தா சொல்லுங்க.. நான் கூட்டிட்டு போறேன். என்னை பாலோ பண்ணுங்க. டேக் மை ஹேண்ட் புருஷ்!” அவனை உரசிக் கொண்டு கடந்தாள். காற்றில் அலைந்த அவளது உதிரி முடிகள் எல்லாம் அவன் முகத்தை மென்மையாக வருடிப் போனது! அதில் தன்னை மறந்து கண் மூடி நின்றான் இந்த கடுவன்!!
அவள் அவனுக்கு முன் தட்டு தடுமாறி இருட்டில் மெதுவாக நடக்க, அவன் கொஞ்சம் அதிகமாக நகர்ந்து அவளது பின்புறம் போய் முட்டினான் தடுமாறி…
”ஸாரிங்க.. நீங்க இவ்வளவு மெதுவா நடப்பீங்கன்னு தெரியாதுங்க…” என்றான்.
”பரவாயில்ல.!!” அவனின் கையை இழுத்தவாறு மெதுவாக நடந்தாள்.
சில எட்டுக்கள் எடுத்து வைத்து போவதற்குள்ளாகவே அவள் பின்புறம் பலமுறை இடித்தான். இதில் அவன் தவறு ஒன்றும் இல்லை. அவளோ மெதுவாக தான் நடந்தாள்.
அவளுக்கு இது புது இடம்.. அத்தனை பரிச்சயம் இல்லை மாடியும் அவளுக்கு. அதனால் ஒவ்வொரு எட்டுகளையும் மெதுவாக தான் எடுத்து வைத்தாள். அதற்கு பதில் அவனை முன்னே அனுப்பி இவள் பின்னே சென்று இருக்கலாம். ஆனால் அந்த இருள் பயம் எங்கே விட்டது?
”இடிச்சு தள்ளுறிங்க என்னை.. நான் பறந்து போய் கீழ விழப் போறேன் பாருங்க..”‘ மெல்லச் சொன்னாள்.
”அதுக்கு நான் காரணமில்லிங் அம்மிணி! இப்படி இருட்ல புது எடத்துல உங்களுக்கு நடந்து பழக்கமில்ல. என்னை முன்னால
போகச் சொல்லி இருக்கலாம். போதாததுக்கு என் கைய வேறு பிடிச்சுட்டு போறிங்க.. இப்ப நான் உங்கள இடிக்காம இருக்கோணும்னா.. உங்கள ஒட்டித்தான் வரணுமுங்க அம்மிணி!” என்றவன், “வரவாங்க…?” என்று மென் குரலில் கேட்க…
அவனின் ஆளுமையான காட்டமான குரலை விட இந்த மென் குரல் அவளை ஏதோ செய்ய..
”ம்.. ம்ம்.. ஒட்டியே வாங்க..!!” அதே மென் குரலில் பெண்ணவளும் சொல்ல…
அவளது முதுகுடன் ஒட்டிக் கொண்டவனின் உதடுகளும் திண்ணென்ற நெஞ்சமும் அவளின் முதுகை உருசியப் படியே வந்தன.. அவனின் உரசலை அவள் உணராமல் இருக்க முடியாது. ஆனாலும் மனதில் எழும் உணர்ச்சியை உதடு கடித்து கட்டுப்படுத்தினாள்.
மனம் முழுவதும் மன்னவன் நிறைந்திருக்க… இருட்டில் நடக்கும் போது ஆழ்ந்த கவனத்துடன் செல்ல வேண்டும் அவளுக்கோ அது பிசகி போக… பூஜை அறைக்குள் நுழையப் போன போது, முதலில் போய் சுவற்றில் மோதிக் கொண்டாள்.
”ஆஆ..!!” என்று மெல்ல கத்த…
அவளைத் தொடர்ந்து போன அவனும் அவளை இன்னொரு முறை இடித்து தள்ள.. இன்னும் இடித்துக் கொண்டாள்.
”என்னாச்சுங்க…??” என்றான் தவிப்போடு.
”செவுத்துல முட்டிகிட்டேன். போதாக் குறைக்கு நீங்க ஒரு பக்கம்.. பின்னால வெச்சு ஒரே இடி! சும்மா இடி மாதிரி! இன்னும் நல்லா முடிக்கிட்டேன்” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
”எங்க மோதுனிங்க அம்மிணி? நெத்திலயா.. காட்டுங்க?” இருட்டில் அவளது நெற்றியை குத்து மதிப்பாய் தடவித் தொட்டான். அவனின் தடவல் பெண்ணுள் ஆழி பேரலை!!
அவனுக்கு முன் அவளின் கை அவளின் நெற்றியில் இருந்தது.
”ஆமா..!! ச்ச..!! இந்த கரண்ட் ஏன் இப்படி பண்ணுது..??” என்றவாறு
அவள் முதுகுடன் ஒட்டினான். தன் முகத்தை அவளது கூந்தலில் வழியே கொண்டு செல்ல.. அவளது கூந்தலில் சூடியிருந்த மலல்இகை மணம் மீண்டும் அவனை பித்தாக்கியது.
அவளது கூந்தல் பூவில் அவன் உதடுகள் பட ஜில்லென்ற உணர்வு..!!
”நல்லா தேச்சுக்கோங்க அம்மிணி..!!” அவளை அணைத்து நின்றே அவள் நெற்றியைத் தேய்த்தான்.
அவன் கையை லேசாக நகர்த்தி விட்டவள், “போதும்..!” என்றாள். அவள் தோள் வழியாக கையை இறக்கியவன், முந்தானை மறைக்காத அவளது இடுப்பில் சற்றே உரசி விட்டு தான் வந்தான். அந்த சிறு உரசல் கூட பெண்ணவளுக்கு பல கதைகள் சொல்ல…
”ம்..ம்ம்..!!” அவள் பின்னால் வந்து மெதுவாக நகர, அவனோ கையால் சட்டென அவள் இடுப்பை இறுக்கினான்.
”ஆஆவ்வ்வ்க்க்க்..!!” சிணுங்கினாள்.
”என்ன இது..??”
அவன் இரண்டு கைகளிலும் அவள் இடுப்பை வளைத்து அணைத்து இறுக்க.. அதே வேகத்தில்.. அவள் பிடறியில் தன் உதட்டைப் பதித்து அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தான்.
முதல் முத்தம்.. பித்தம் கொள்ள செய்தது சித்தம் தெளியாத மலரினியை!
அவன் முரட்டு உதடுகளின் ஈரமும்…
கற்றை மீசையின் குறுகுறுப்பும்…
ரோமங்கள் ஓடிய கையின் அரவணைப்பும்…
தேகத்தோடு தேகம் உரசி எழுப்பும் வெம்மையும்…
உச்சி முதல் பாதம் வரை அவளுள் மின்சாரத்தை பாய்ச்சியது!
மெல்ல அவள் திரும்பி கணவன் முகம் பார்க்க நினைக்க…
அந்த நேரம் பார்த்து கரெண்டு கரடியாய் வர… அணைத்து நின்றவர்களின் கவனம் மொத்தமும் தன்னுடைய இணையிடம் போக..
பெரும் வெட்கம் இருவரிடத்திலும்!!
“அச்சோ… சாமி ரூம்!” என்று விலகி அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள் மலர்விழி! கணவன் தன்னை தேடி வருவான் என்று நினைப்பில் சுவற்றில் சாய்ந்து பெரு மூச்சு விட்டபடி காத்திருந்தாள் ஏந்திழை!!
அவன் இதயத்தில் படபடப்பு கூடியது. அதே சமயம் என் மனமா இது? எப்படி இவளை ஏற்றது?
மஞ்சள் கயிறு மேஜிக் பெண்ணவளிடத்தில் மட்டுமல்ல ஆணிடத்திலும் தன்னவள் என்று உரிமையை செய்திருக்க.. அதன் வெளிப்பாடே இந்நெருக்கம்!!
அன்று அத்தனை பேரும் முன்னிலையில் முதலில் கடமை!! அதன்பின் தான் காதல் என்று அத்தனை ஜம்பமாக பேசிவிட்டு இன்று இவளுடன் கலந்து நாளை குழந்தை வந்தால்.. நெற்றியை தேய்த்துக் கொண்டான் மாணிக்கவேல்!!
கடமைக்கும் காதலுக்கும் இடையே அல்லாடினான்!!
ஆனாலும் இதுவும் அவனது கடமைகளில் ஒன்று தானே!! கரம்
பிடித்தவளை காதல் கொள்வதும் இல்லற தர்மத்தில் சேர்ந்தது?
எங்கே ஒருவனின் வீட்டில் காதல் நிறைவாய் இருக்கிறதோ.. அங்கே அவனின் கடமைகள் சரிவர செய்யப்படும்!!
அலைபாய்ந்த மனதை அடக்கி மெல்ல அறை வாசலில் காலை வைத்தான் மாணிக்கவேல், தன் தடைகளை எல்லாம் கொஞ்சம் நேரம் தளர்த்தி வைத்துவிட்டு..
சுவற்றோரமாய் பல்லி என ஒட்டிக் கொண்டிருந்த மனைவியை தான் கண்களில் ஆசையோடு பார்த்தான்.
சுவற்றோடு சுவராக நின்றவளின் இருபுறமும் கையை வைத்து சிறை பிடித்தான்!!
மெல்லிய தேகம் கொண்டவளோ நடுங்க.. அவன் கையை மலரின் இடையை வளைத்தது. அவளின் புடவை மட்டுமல்ல உடலும் அவன் மீது பட்டு படபடத்தது. அவளை மெதுவாக அணைத்து.. அவனின் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் கொண்டு போய்.. அவளை வாசம் பிடித்தான்.
ஒவ்வொரு மலருக்கும் பிரத்தியேகமான ஒரு வாசம் இருக்குமாம்!!
மாணிக்கத்தின் மலருக்கும் அவளின் பிரத்தியேகமான வாசம் இருக்க.. அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அதை ஆழ்ந்து சுவாசித்தான்!!
அவனின் நெருக்கமான நெருக்கத்தில் அவரது உடல் வெடவெடத்தது.
“ஒண்ணும் பயமில்ல.. இல்லிங் அம்மிணி!!” என்று அவளுக்கு தைரியம் கொடுத்தானா அல்லது தனக்கே தைரியம் கொடுத்தானா தெரியவில்லை!!
”ம்க்கும்ம்.. என்ன..என்ன.. பண்ண போறிங்க?” லேசாக நடுங்கும் குரலுடன் அழகிய விழிகளால் அவனை மருண்ட பார்வை பார்த்தாள். அவள் மார்புகள் படபடவென அடித்துக் கொள்வதை அவன் நெஞ்சில் உணர முடிந்தது.
”என்ன பண்ணலாம் இந்த மலரை? இருக்கு என்னோடு சூடிக் கொள்ள ஆசை?
“ம்ம் ” விழி விரித்தாள்!
“சூடிக்கவா??” முணுமுணுத்தான்!
“ம்ம் ” எச்சில் கூட்டி விழுங்கினாள்!
“சொல்லுங் அம்மிணி, இந்த மலர இந்த மாமன் சூடிக்க வா?” எனச் சொல்லி விட்டு பச்சக் என அவளது சிவந்து மெலிந்த உதடுகளில் தன் உதடுகளைப் பதித்து அழுத்தி முத்தம் கொடுத்தான்!
அவள் உதடுகள் ஈரமாக.. அவள் உதட்டில் தன் உதட்டை அழுத்தி.. அப்படியே அவளது கீழுதடைக் கவ்வி உறிஞ்சினான். தன்னை மலங்கப் பார்த்தவளின் கண் இமைகள் உள்ளே சொருகிக் கொள்ள.. அவனோ அப்படியே விடாமல் உறிஞ்சி சுவைத்தான்.
அவளின் வாசம் கூட அவனுக்கு இனிமையாய்..
கிறக்கமாயா…!!
அவள் மெல்லிடையை தன் இரண்டு கைகளிலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவன் அவளை முத்தாட.. அதில் கிறங்கியவளோ அவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.
அவளைப் போலவே அவனுக்கும் நெஞ்சுத் துடிப்பு.. படபடவென அடித்துக் கொள்ள.. அவள் உதடுகளை விட்டு சில நொடிகள் ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
”விழி… ” மிகவும் காதலாக.. அவள் முகத்தில் தன் மூச்சுக் காற்று மோத.. அவளை அழைத்தான்.
”ம்ம்..?” மூடிய இமைகளைப் பிரித்து.. அரைக் கண்ணால் அவனைப் பார்த்தாள். அவளின் ஈர உதடுகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது.
”நீங்க ரொம்ப அழகுங்க அம்மிணி..!! இந்த கருமத்தப்பட்டிக்கார உங்களுக்கு புடிச்சிருக்கா அம்மிணி..?” என அவள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்துக் கொண்டு கேட்டான். அந்த கண்களில் அத்தனை பரிதவிப்பு பிடித்திருக்கிறது என்று கூற வேண்டுமே என்று!!
ஆனாலும் பெண் உள்ளம் பற்றி அவன் அறியவில்லை. பிடிக்காமலா தன்னிடம் குழைந்து நிற்கிறாள் என்று!!
“ம்ம்ம்ம்.. ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க?” அவள் தொண்டையிலிருந்து மெல்லிய குரல் வந்தது.
”அப்போ எப்பங்க அம்மிணி கேட்க.. இரண்டாவது குழந்தை பிறந்தவுடனா? இல்லை மூணாவது குழந்தைக்கு அச்சாரம் போடும்போதா?” என முணகி விட்டு.. அவளின் பிரிந்த கீழுதட்டைக் கவ்விக் கொண்டான்.
அதே நேரம் “மாமா… நான் வந்துட்டேன்!! மாணிக்க மாமா… நான் வந்துட்டேன்!” என்று படார் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஜீவன்!!
அவன் பிரித்தது முடி இருந்த கதவுகளை மட்டுமல்ல.. இங்கே ஒட்டி இருந்த இரு இதழ்களையும் தான்!! அவன் சத்தத்தில் தன்னிலை மறந்திருந்த மலரும்.. அதன் தேனை பருகி கொண்டிருந்த கருவண்டும் சட்டென பிரிந்து தள்ளி நின்று கொள்ள… பிரவாகம் எடுத்த உணர்வுகளை சிகை கோதி அடக்கியவன் கடுப்போடு அறையை விட்டு வெளியே வந்தான்.
“அடேய்.. ஜீவா…” நல்ல மதுரை தமிழில் அழகழகாக திட்டிக்கொண்டே மருமகனை எதிர்கொண்டான் மாமன்.. இந்த ராட்சச மாமன்!!
👌👌👌👌👌👌
Ada paavi Jeeva ena oru karadi Vela 😏😏sis very cute episode 💖
Super sis ❤️