உறவே உயிரே பிரியாதே — அத்தியாயம் நான்கு
ஸ்ரீராம் வீட்டு வாசல் காரை விட்டு இறங்காமல் ..
தீபிகா ” வீடு வாசல் வரை வந்து விட்டு ஏன் அம்மா .. திரும்பி போகச் சொல்லுகிறீர்கள் .” எனக்கோபமாக கேட்டாள்.
பார்வதி தன திருமணத்தின் போது தன் மாமனார் சொத்துக்காக செய்த சண்டையை கூறினாள். அன்றிலிருந்து என் பிறந்த வீடு உறவே இல்லாமல் போய் விட்டதடி .. என கண் கலங்கினாள்.
ஓ இது தான் உன் பிறந்த வீடா… என் ஆச்சர்யமாக அந்த அரண்மனைப் போன்ற பங்களாவை வியந்து பார்த்தாள்.
சரி இப்போ என்ன செய்யலாம் என யோசித்தாள். தீபிகா .. அதற்குள் ஸ்ரீராம் இவளுக்கு கால் செய்து . “எங்கே இருக்கிறீர்கள். இன்னும் வீட்டுக்கு வரவில்லையே .. ” என்று கேட்டான்.
“சரி அம்மா நான் மட்டும் உள்ளே போகிறேன் . அம்மா வரவில்லை நான் மட்டும் தான் வந்தேன் என அவனிடம் சொல்லிகொள்கிறேன்.” என்றாள்.
இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில் அங்கே இருப்பேன். என்று சொல்லி விட்டு காரை விட்டு இறங்கி உள்ளே செல்ல ஸ்ரீராம் வாசலுக்கு வந்து வரவேற்றான்.
அன்று விடுமுறை நாள் என்பதால் அனைவரும் அங்கே வீட்டில் இருந்தனர்.
வெளிர் நீல நிற ஜீனும் . வெள்ளை நிற டாப்சும் அணிந்து இருந்தாள்.
முடியை பிரீயாக விட்டு இருந்தாள். அழகாக ட்ரிம் பண்ணியிருந்தாள்.
வழு வழு என்று நீளமாய் இடுப்பு வரை இருந்தது .பொட்டு வைக்கவில்லை.
ஸ்ரீராம் அம்மா,அப்பாவிடம் அறிமுக படுத்தினான் . சிவக்கொழுந்து இவளை வரவேற்றார்.
தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்கினாள்.பின்னர் ஸ்ரீராம் இவளை தன் அறைக்குள் அழைத்து சென்றான் . இந்த அறையும் சுத்தமாக இருந்தது . ஒரு கட்டில் அதன் மேல் மெத்தை சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது . மேலும் ஒரு மேசை இரண்டு நாற்காலிகள் ஒரு லேப்டாப் இருந்தன அங்கே. சுவற்றில் ஒரு போட்டோ பிரேமில் இரண்டு அடியில் விவேகானந்தர் தலைப்பாகை உடன் கைட்டிக்கொண்டு புன்சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தார்.
உன் அறையும் நல்லாவே இருக்கு ஸ்ரீராம் என்றாள்.
இவன் “அதெல்லாம் சரி.. நேத்து தானே பார்த்தோம் பெங்களுருவில்.. அதற்குள் இங்கே வந்து நிற்கிறாய் .. என்ன ஆயிற்று எதுவும் அவசர காரியமா ” என கேட்டான்.
“எங்கு நீ ஒரு உதவி செய்ய முடியுமா ” என கேட்டாள் .
“என்னால் முடியும் என்றால் செய்வேன் .. கண்டிப்பாக .. ” என்றான்
“என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னால் நீ என்ன சொல்லுவாய் ..” என உடனே கேட்டாள் .
என்ன நீ பைத்தியமா .. என கேட்டான்..
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல் ஸ்ரீராம்.. “என்றாள்.
“நான் ஒரு அமெரிக்கா நிறுவனத்தில் வேலை கிடைத்து இருப்பதாக சொன்னேன் அல்லவா . அவரகள் நேற்று இன்னும் இரு வாரங்களில் பதில் சொன்னால் தான் . இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் செல்லும் என்று சொல்லி விட்டார்கள். நல்ல சம்பளம் ஸ்ரீராம் ஆரம்பமே மாதம் 20000 $ .. யார் கொடுப்பார்கள் நீயே நினைத்து பார்.” என்றாள்.
உண்மையில் அவர்கள் எந்த கெடுவும் வைக்கவில்லை இன்னும். இன்னும் இரண்டு மாதம் அவகாசம் கொடுத்திருந்தார்கள்.
இவனுக்கு அவசரத்தை புரிய வைக்க இவ்வாறு சொன்னாள். மேலும் அவன் மீது காதல் வரவில்லை என்றாலும் வேணாம் என்று மறுக்கவும் தோன்றவில்லை. ஆனால் நல்ல துணையாக இருப்பான் என்று மனம் சொன்னது. அதனால் தான் அம்மா இவளிடம் கேட்ட போது கூட முயற்சித்து பார்க்கலாம் என்று சொன்னாளே தவிர வேண்டாம் என்று அடியோடு மறுப்பு சொல்லவில்லை..
ஸ்ரீராம் யோசித்தான் … நல்ல சம்பளம் தான். தானும் அங்கே அமெரிக்கா சென்றால் தன் படிப்புகு ஏற்ற வேலை வாங்கி விட முடியும் என நம்பினான்.
ஆனால் இவள் மீது இன்னும் காதல் வரவில்லையே .. இவளை கடைமைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா .. என்ன
மேலும் எனக்கு வர வேண்டியவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை இவள் .. ஆனாலும் நல்ல பெண் தான் இவளும். என தனக்குள் யோசித்தவாறே .. ” ஏன் தீபிகா திருமணம் பண்ணாமல் .. நான் உன்னோடு அங்கே வருவதற்கு வாய்ப்பு இல்லையா என கேட்டான் ..
இருக்கிறது அது நீ மேற்படிப்புக்கு அல்லது வேலைக்கு அங்கே நான் இருக்கும் இடத்திற்கே வர வேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் போதுமான காலம் நம்மிடம் இல்லை . அதனால் தான் ஒரே வழி திருமணம் தான் என்றாள்.
“நான் உன்னை ஒரே நாள் தான் பார்த்து இருக்கிறேன் .. நீ நல்ல பெண் என்றாலும் .. என் மனசுக்குள் இன்னும் வரவில்லையே .. ஒரு வேலை திருமணம் செய்து கொண்ட பின் நமக்குள் ஒட்டாமல் போய் விட்டது என்றால் என்ன செய்வது. உனக்கும் பிடிக்காமல் எனக்கும் பிடிக்காமல் போய் விட்டால்…. ” என ஸ்ரீராம் தான் சந்தேகங்களை கேட்க
தீபிகா உடனே ” விவாகரத்து பண்ணிக்கொள்ள வேண்டியது தான் .. “என்றாள்.
திருமணத்தில் நீ உறுதியாக இருக்கிறாயா தீபிகா ?.. என கேட்டான் ..
“ஆமாம் ஸ்ரீராம் …எனக்கு இந்த வேலையை விட மனம் இல்லை .. அப்பா நான் ஒரு நல்ல துணையோடு தான் செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார் . அதனால் எனக்கு திருமணம் தான் ஒரே வழி என தோன்றுகிறது. திருமணம் செய்து கொண்டு நண்பர்களை போல நாம் வாழலாம் ஒரே வீட்டில். நமக்குள் பிடிப்பு ஏற்பட்டால் திருமண பந்தம் உறுதியான பிணைப்பாகி விடும் . மேலும் உனக்கும் என் கம்பனியில் சொல்லி டிபண்டன்ட் விசா ஏற்பாடு செய்து விடுவேன். என்ன சொல்கிறாய். உன் செலவுக்கு நான் மாதம் 5000 $ கொடுத்து விடுகிறேன். “என்றாள்.
மேலும் நீ அங்கே உனக்கான வேலையை தேடிக்கொள்ளலாம் .. பின் இந்தியா வந்து விட்டு உன் எம்பிளாய்மென்ட் விசா வில் மீண்டும் அமெரிக்கா வந்து விடலாம். ” என்றாள் .
“எனக்கு யோசிக்க நேரம் வேண்டும். என்றான். அம்மா அப்பாவிடம் அனுமதி வாங்க வேண்டும்.” என்றான்.
எதற்கு.. என கேட்டாள்..
நம் திருமணத்திற்கு மற்றும் அமெரிக்கா செல்வதற்கு .. எல்லாவற்றிற்கும் தான் .. என்றான்..
“நீ வேலைக்கு அமெரிக்கா செல்கிறேன் என்று கூறி மட்டும் அனுமதி கேள் .. திருமணம் பற்றி இப்போது சொல்லவேண்டாம். காலம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம் .. நானும் என் வீட்டில் திருமணம் பற்றி இப்போது சொல்ல போவது இல்லை “.. என்றாள்.
அப்புறம் எப்படி டிபண்டன்ட் விசா கிடைக்கும் மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல்.. என்றான்
“அதற்கு வழி இருக்கிறது .. யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் ..”
என்றாள்.
அய்யோ .. என அலறினான். பெரிய கில்லாடியாய் இருப்பாள் போல தெரிகிறதே என் மனசுக்குள் நினைத்தான்.
“உனக்கு பயமாய் இருந்தால் பெங்களுருவில் ரெஜிஸ்டர் பண்ணிக்கொள்ளலாம். இன்னும் ஏதாவது சநதேகம் இருந்தால் கேள் ” என்றான்.
“நான் இந்த வேலையை விட்டு விட்டு அங்கு வந்து ஒன்றும் சரியாக வேலை வாய்க்கவில்லை என்றால். ” என சந்தேகமாக வினா எழுப்பினான்.
அதனால் தான் நான் 5000 $ தருகிறேன் அதை வைத்துக்கொள் . போதவில்லை என்றாள். 10000 $ தருகிறேன் போதுமா என்றாள்.
இல்லை இல்லை 5000 $ போதும்.. பிளான் எல்லாம் சரி ஆனால் இது சரிப்பட்டு வருமா .. என்று மீண்டும் இழுத்தான் ..
வேண்டுமானால் ஒரு இருபது ருபாய் பாத்திரத்தில் நம் இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்.அதில் அனைத்தையும் எழுதி கையொப்பம் இடுவோம் சரிதானே.. பரஸ்பரம் நம்பிக்கை வந்த பிறகு இதெல்லாம் தேவையே இருக்காது.கிழித்து போட்டு விடலாம். ” என்றாள்.
இவனை வைத்து இந்த வேலையை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தயாராய் இருந்தாள். நல்ல கம்பெனி நல்ல சம்பளம் வந்த வாய்ப்பை தவற விட கூடாது என நினைத்தாள். அதனால் தான் அவள் அம்மாவிற்கு தெரியாமல் இதெல்லாம் பேசி கொண்டு இருக்கிறாள்.
ஒருவழியாக ஒப்பு கொள்ள வைத்து விட்டாள் அவனை..
அம்மாவுக்கு கால் செய்து ” அம்மா ஸ்ரீராம் என்னுடன் அமெரிக்கா வருகிறான் அவனுக்கு அங்கே வேலை கிடைக்க இருப்பதாக சொன்னான். என்னுடன் வர சம்மதித்து உள்ளான். அவன் அம்மா அப்பாவிடம் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு நாளைக்குள் சொல்வதாக சொன்னான்” என்றாள்.
சரி நாம் வந்த விஷயம் வேறு ஆனால் நடக்கின்ற விஷயம் வேறு. எப்படியிருந்தாலும் என் அண்ணன் பையன் நல்லவனாக தான் இருப்பான் . முழுமையாக நம்பி அவனுடன் மகளை அனுப்பலாம் என் நினைத்தாள்..
பிறகு தீபிகாவிடம் ” நீ அவனிடம் நீ அவன் முறைப்பெண் என்று ஏதும் சொல்லவில்லை அல்லவா” என்று கேட்டாள்.
“இல்லைம்மா.. அதெல்லாம் ஏதும் சொல்லவில்லை . நீயும் ஏதும் உளறிவிடாதே இப்போதைக்கு . காலம் நேரம் கனிந்து வரும் போது உறவை நீ புதுப்பித்து கொள்ளலாம் .. அவசர பட வேண்டாம் ” என கூறினாள்.
திட்டம் சரியான படி உள்ளதா என ஒரு முறை அவனுடன் அமர்ந்து ஒரு பேப்பரில் எழுதி பார்த்து கொண்டாள் . பர்பெக்ட் பிளான் என்று ஸ்ரீராம் அவளை பாராட்டினான் .
அதற்குள் அம்மா ஸ்ரீராமிடம் இவளை சாப்பிட அழைத்து வரச் சொன்னாள்.
பிறகு அவள் ஸ்ரீராமிடமும் அவனது பெற்றோரிடமும் விடை பெற்று கொண்டாள்.
பர்வதம் அம்மாள் கடைசியாக இவளிடம் தனியே வந்து . நெற்றியில் பொட்டு வைத்துக்கொள் என்று குங்குமம் எடுத்து வந்தாள்.
அவளுக்கு இந்த உடைக்கு பொட்டு வைத்து கொள்ள பிடிக்கவில்லை என்றாலும் ஸ்ரீராமின் அம்மாவிற்காக தான் சொந்த அத்தைக்காக அதை வைத்து கொண்டு விடை பெற்றாள்.
நான் ஏர்போர்ட் வரைக்கும் வருகிறேன் என சொன்னான் ஸ்ரீராம். வேண்டாம் ஸ்ரீராம் .. நான் வந்த டாக்ஸி வைட்டிங் போட்டு உள்ளேன். நான் போய்க்கொள்கிறேன். நீ உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் இறங்கு. ” என்று சொல்லிட்டு நிற்காமல் கிளம்பி விட்டாள்.
மீண்டும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்
👌👌👌👌👌