ATM Tamil Romantic Novels

இராட்ஷஸ மாமனே.. 10

மாமனே 10

 

“மாமா.. வந்துட்டேன்! மாணிக் மாமா நான் வந்துட்டேன்!!” என்றபடி முதுகில் மாட்டி இருந்த பேக்கை கழட்டி சோபாவில் போட்டவன்

அறையில் இருந்து வெளிவந்த மாணிக்கவேல் முன்னாடி நின்று பல்லை காண்பிக்க…

 

“எடுபட்ட பயலே!! இவ்வளவு நாள் எங்கடா போயிருந்த? எங்க போற எங்க வரன்னு ஒரு தகவலும் கொடுக்க மாட்டியா டா? போன் எடுக்கலைன்னா மறுபடி போன் பண்றது! நான் ஃபோன் போட்டா கூட உனக்கு போக மாட்டேங்குது!! என்னடா நெனச்சிட்டு இருக்க நீனு??” என்று சத்தமாக திட்டினான்.

 

மாணிக்கவேல் மதுரை வந்த மூன்று வருடங்களில் பெரும்பாலும் அவனோடு இருந்தது ஜீவன் தான்.

எத்தனை சத்தம் போட்டாலும் மருமகன் மீது தனி வாஞ்சை தான் இந்த மாமனுக்கு!! சொல்லாமல் கொள்ளாமல் போனதனால் அவனுக்கு ஏகப்பட்ட கோபம்!

 

“நான் ஃபோன் போடும்போதெல்லாம் நீங்க எடுக்க மாட்டேங்கறீங்க… நீங்க போன் போடும்போது என்னால் எடுக்க முடியல. ரொம்ப நாள் கழிச்சு காலேஜ் பிரண்ட்ஸ் பார்த்தோம். நான் வரலைன்னு தான் சொன்னேன்.. அப்படியே வண்டியில தூக்கி போட்டு கடத்திட்டு போய்ட்டாய்ங்க… மூணு வருஷமா உங்க கூட தானே குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன்! ஒரே ஒரு வாரம் என்னை என் பிரண்ட்ஸ் கூட தனியா விட மாட்டீங்களா நீங்க?” என்று அவனும் முறுக்கி கொண்டான்.

 

“போனது தான் போன.. அப்படியே 

அம்மாச்சி ஊருக்கு போக வேண்டியது தானடா? இங்க எதுக்குடா வந்த?” என்றவன்,

“வந்து சேர்ந்திருக்கான் பாரு கரெக்டான நேரத்துக்கு! கரடி.. கரடி!!” என்று என்னென்னவோ திட்ட..

 

மாமனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒரு வாரம் பழனி என்று பொய் கூறிவிட்டு ஊர் சுற்ற சென்றதை கண்டுபிடித்து விட்டான் போல மாமன், அதற்குத்தான் இத்தனை திட்டுகிறான் என்று நினைத்தவன் “மாமா.. சரியான ராட்சச மாமா நீ! கரெக்டா கண்டுபிடிச்சிடிங்க!

“பிரண்ட்ஸோட சுத்த போயிட்டேன் தான். நானும் இவ்ளோ நாள் ஒழுங்கா வேலையெல்லாம் செஞ்சேன் தானே… இவ்வளவு கோவப்படலாமா மாமா? ஆனாலும் நீ கோவப்பட்டால் தான் ரொம்ப அழகா இருக்க மாமா!” என்று அவன் கன்னத்தை தொட வர.. சட்டென்று இரண்டு எட்டு பின்னாடி விலகிக் கொண்டான் மாணிக்கவேல் அன்னிச்சையாக..

 

பொதுவாக அவனுக்கு யாரும் தொட்டு பேசினால் பிடிக்காது என்று ஜீவனுக்கும் தெரியும். ஆனால் ஏதோ ஒரு மாற்றம் மாமனிடம் என்று தெரிந்து கொண்டவன், “சரி.. சரி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு!! நான் இன்னைக்கு ரூமுக்குள்ள போய் தூங்குறேன். சாப்பாடு எல்லாம் எனக்கு வேணாம் வரும்போது ஃபுல் கட்டு கட்டிட்டு தான் வந்தேன்” என்றவன் அறையை திறக்க..

 

அங்கே தலை நிறைய மல்லிகையுடன் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்த மலர்விழியை பார்த்தவன், “அய்யய்யோ மாமா… ப்பபேய்… பேய்.. மோகினி பேய் மாமா.. நம்ம வீட்டுக்குள்ள ஒரு பேய் வந்து நிக்குது மாமா!” என்று அலறிக் கொண்டே வெளியில் ஓடி வந்தான்.

 

“எதே பேயோ??” என்று உள்ளே சென்ற மாணிக்கவேல் கண்டதும் நிஜமாக கோபத்தில் கொந்தளித்து உக்கரமாக நின்று கொண்டிருந்த மனைவியை தான்!!

 

“டேய் எரும!! அவ பேய் இல்லடா என் பொண்டாட்டி!” என்றதும், 

 

“பொண்டாட்டினால பேய் தான் மாமா! என் அம்மாவ அப்பா அப்பப்ப அப்படி தான் சொல்லுவாரு!” என்றவன் அதன் பின் தான் மாமன் விட்ட வார்த்தையில் திடுக்கிட்டு “என்னது பொண்டாட்டியா? என்ன சொல்லுற மாமா? நான் இல்லாத இந்த ஒரு வாரத்தில் உனக்கு எப்படி திடீர்னு பொண்டாட்டி முளைக்க முடியும்? அப்புறம் என் நிலைமை என்ன.. மாமா??” என்று அவன் அதிர்வுடன் கேட்க..

 

இதுவரை இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவள் ஜீவனின் வார்த்தையில் திடுக்கிட்டு கணவனை அதிர்ந்து பார்த்தாள் விழிகள் விரிய.. அப்படியே திரும்பி ஜீவனை பார்த்தவனின் கண்களில் “அவனா.. நீ??” என்றது.

 

மனைவியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு மாணிக்கவேலுக்கு சிரிப்பு முட்டியது. ஆனால் சற்றென்று சிரித்து விடும் சுபாவம் தான் அவன் கிடையாதே!!

 

அதனால் லேசாக அவனின் உதடுகள் மட்டும் வளைந்தது. அதிலேயே மாமன் சிரிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட ஜீவன் “எதுக்கு மாமா சிரிக்கிற?” என்று புரியாமல் கேட்க..

 

“இல்லடா.. இப்ப நீ என்ன சொன்ன? அத திரும்ப சொல்லு!” என்றதும் 

 

“என்ன சொன்னேன்.. நீ திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்தா என்னோட நிலைமை என்னன்னு கேட்டேன்?” என்று அப்பவும் புரியாதவனாக அவன் கூற..

 

இப்போது மருமகனை ஆழ்ந்த பார்த்தவனின் கண்கள் சொன்ன செய்தியில் அவன் கருத்தை பிடித்த ஜீவனோ “ஐய.. ச்சீ.. மாமா! நீ வேற.. அதுவும் உன் கூட உவ்வே… உவ்வே” என்று வாந்தி வருவது போல நடித்தான்.

 

அவனின் முதுகில் ஒன்று போட்ட மாணிக்கவேல் ஒற்றை விரல் பத்திரம் காட்டி “பிச்சிருவேன் டா!” என்ற மிரட்ட..

 

“சரி சரி தள்ளிபோ மாமா.. நான் அய்த்தய பாக்குறேன்!” என்றவன் மாமனை தள்ளிக் கொண்டு மலர்விழியின் முன்னால் வந்து நின்றான்.

 

மலர்விழியை பார்த்தவன், “அய்த்த நல்லா அழகா இருக்காங்க மாமா.. ஆனா எனக்கு தெரியாம எப்படி புடிச்ச நீ? நீ தான் ஒரு ருஷ்யசிங்கராச்சே?” என்று சந்தேகத்தோடு மாமனை மேலும் கீழும் பார்த்து கேட்டான்.

 

எது? ருஷ்யசிங்கரா? நீ மட்டும் இப்போ வராமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் மாமன் அவளை ஸ்வாகா பண்ணி இருப்பான்!

 

“என்னது சூப்பர் சிங்கரா? உங்க மாமா பாட்டு எல்லாம் பாடுவாரா? சூப்பர் சிங்கர் எல்லாம் கலந்து இருக்காரா? ஆனா அவரு கட்டக் குரலுக்கும்.. சூப்பர் சிங்கருக்கும் எப்படி யோசிச்சாலும் ஒட்டவே மாட்டேங்குதே!” என்ற அவளின் கேள்வியில் பாவணையில் விழுந்து சிரித்தான் ஜீவன்.

 

“ஐயோ அய்த்த…!!” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவன் “நான் சொன்னது சூப்பர் சிங்கர் இல்ல.. ருஷ்யசிங்கர்!! அப்படின்னா அவர் ஒரு மகரிஷி பெண்களின் பக்கமே தலை வைக்க மாட்டாராம்! அந்த விசுவாமித்திரர் சொல்லுவோம்ல அவரை கூட மேனகை மயக்கிருச்சுன்னு சொல்லுவோமே.. அதேபோலத்தான் அந்த ரிஷியும். ஆனா எந்த பெண்ணாலும் அவரை மயக்க முடியலையாம். அப்படித்தான் இருந்தாரு என் மாமனும்.. இல்ல இல்ல.. இல்ல.. அப்படி இருந்தாருனு நான் நம்பிகிட்டு இருந்தேன்! இப்ப தான் எல்லாமே தெரியுது. ஒரு அழகிய அப்படியே தூக்கிட்டு வந்திருக்காருனு..” என்று சிரித்தவனை பார்த்த மலரோ “கரெக்டா சொல்றீங்க! என்னைய தூக்கிட்டு தான் வந்தாரு உங்க மாமா” என்றதும் இன்னும் சுவாரசியம் கூடியது ஜீவனுக்கு.

 

“அப்படியா? எங்க மாமாவா? உங்களை தூக்கிட்டு வந்தாரா? நிஜமாவா?” என்று கதை கேட்கும் மூடுக்கு அவன் செல்ல..

 

“ஏற்கனவே இந்த நாதாரி வந்து அத கெடுத்துச்சு… இப்ப தூக்கத்தையும் கெடுக்குது” என்று முணுமுணுத்துக் கொண்டான் மாணிக்கவேல்.

 

இவன் இங்கே முணகிக் கொண்டு இருக்க.. அங்கு இரண்டும் நடந்தது என்ன என்பதை பற்றி விவாதிக்க தயாரானார்கள்.

 

தூணுக்கு அருகில் அமர்ந்த ஜீவன் “இப்படி வந்து உட்காருங்க அய்த்த.. சொல்லுங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க.. உங்க கதைய! நீங்க யாரு? யாரு!!! எங்க மாணிக் பாட்ஷாவுக்கும் ச்ச.. மாணிக் மாமாவுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் ஏற்படுச்சு? இவ்வளோ நாளாக நீங்க எப்படி சந்திச்சிங்க… சொல்லுங்க… சொல்லுங்க!” என்று பாட்ஷா படத்தில் வரும் தம்பி நடிகரை போல கேட்க..

 

ஜீவனின் இந்த பேச்சு மலர்விழிக்கு பிடித்து விட்டது. எப்பொழுதும் தனியாக இருந்தவளுக்கு ஒரு துணை என்று அவனையும் நினைத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து அவர்களது கதையை கூறினாள்.

 

“ஒரு வாரம்.. ஒரே ஒரு வாரம் தான் நான் ஊர்ல இல்ல! அதுக்குள்ள என்னென்ன எல்லாம் நடந்திருக்கு? ஒரு மருமகன் இல்லுனு கொஞ்சமாவது உங்களுக்கு கவலை இருந்திருக்கா? வருத்தம் இருந்திருக்கா? நான் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா நடந்ததே வேறையா இருக்கும்…” என்று அவன் தன் காலரை கெத்தாக தூக்கிவிட.. அவனது பொரடியில் ஒன்று போட்ட மாணிக்கவேல் “எல்லாம் உன்னால வந்தது தாண்டா… நீதான் அந்த களஞ்சியம் அப்படி சொன்னான்.. இப்படி சொன்னான்னு என்ன உசுப்பேத்தி விட்ட! சரினு நானும் அவன் கல்யாணத்துக்கு போய் பொண்ணு தூக்கலான்னு போன… கடைசியில்…” என்று அவன் முடிக்கும் முன் “நீங்களே மாட்டிக்கிட்டீங்க! அப்படித்தானே மாமா? இங்க பாருங்க அய்த்த.. உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டது ஏதோ புதை குழியில விழுந்து மாட்டிகிட்ட மாதிரியே மாமா பீல் பண்ணி சொல்றாரு.. என்னென்னு கொஞ்சம் கவனிங்க.. நான் ரெஸ்ட் எடுக்க போறேன்!” என்று நாரதர் வேலையை நன்றாக கொளுத்தி போட்டவன் சென்று விட…

 

“டேய்.. நான் எங்கடா அப்படி சொன்னேன்..” என்று மாணிக்கம் முடிப்பதற்கு முன் அவன் முன்னே நின்றாள் அவனின் மனைவி அழகிய பத்திரகாளியாய்!!

 

“ஐயோ.. நான் இல்லிங் அம்மிணி!” என்று ஓடி போனான் இந்த ஆறடி ஆண்மகன்!!

 

மாடிக்கு சென்றவனை பார்த்து சிரித்துக்கொண்டாள் மங்கை.

 

மறுநாள் காலை மாணிக்கவேல் வழக்கம் போல எழுந்து கடைக்கு சென்று விட.. மற்றொரு கடைக்கு எழுந்து மெதுவாக தான் கிளம்பி கொண்டு இருந்தான் ஜீவன்.

 

இவளோ வீட்டில் தனியாக இருக்க வேண்டுமே என்று அயர்ச்சியோடு சோக பதுமையாக சோபாவில் அமர்ந்திருக்க..

 

“என்ன அய்த்த ஒரு சோக கீதமா வாசிக்கிறீங்க? மாமா இல்லைனா!” என்று அவன் குறும்பாக கேட்க..

 

“அட போங்க! உங்க மாமா இப்ப போனா நைட்டு தான் வருவார். அதுவரைக்கும் இந்த வீட்டையே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கணும். எனக்கும் இந்த சீரியல் பார்க்கிறது எல்லாம் பிடிக்காது! ரொம்ப போரிங்கா இருக்கு” என்றாள்.

 

“அக்கம் பக்கத்துல எல்லாம் பேசலாம் இல்ல பிரண்ட்ஸ் கூட கடலை போட உங்களுக்கெல்லாம் சொல்லியா தர வேண்டும்?” என்று தலைவாரிக் கொண்டே அவன் கேட்க…

 

“திடீர் கல்யாணத்துனால பிரெண்ட்ஸ் கிட்ட நான் பேசவே இல்ல. ஊர்ல பெரிய மாமா கல்யாணம் ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருக்காங்க இல்லையா? அது முடிஞ்சதுக்கு அப்புறம் தான் பிரண்ட்ஸ் கிட்ட பேசணும். எங்க அம்மா கிட்ட பேசினா ஒரே அட்வைஸ் பண்ணியே கொல்றாங்க! வேற என்னதான் பண்றது நானு?” என்றாள் உள்ளங்கையில் கன்னத்தை தாங்கிக் கொண்டு…

 

கிளம்பி முடித்தவன் சோக பதுமையின் முன்னே சற்று குனிந்து நின்று “நான் ஒரு ஐடியா சொல்லுவேன்! ஆனா நான் தான் சொல்லித்தந்தேன் நீங்க என்ன போட்டு கொடுத்திடக் கூடாது! டீலா?” என்று அவன் உள்ளங்கையை மடக்கி அவளிடம் புறங்கையை நீட்ட..

 “டீலு!” என்று அவளும் உற்சாகமாக அவனின் அந்த மடக்கிய கையில் குத்தினாள்.

 

“முன்னெல்லாம் மாமாவுக்கு மதியானத்துக்கு என் ரெண்டு பெரியம்மாவுல ஏதாவது ஒரு பெரியம்மா சாப்பாடு கொடுத்து விடுவாய்ங்க.. இல்லைன்னா என் மாமா மெஸ்ஸ பாக்க கிளம்பிடுவாரு! நீங்க என்ன பண்றீங்கனா சமைச்சு… ஐயையோ உங்களுக்கு சமைக்க தெரியுமா? இல்ல நீங்க எல்லாம் youtube பார்ட்டியா?” என்று கேலியாக கேட்டவனை முறைத்தவள்,

 

“நானெல்லாம் நல்ல சமைப்பேனாக்கும்! அசைவம் சமைக்கிறதுல்ல சோழவந்தான்லே என்னைய அடிச்சிக்க ஆள் கிடையாது! தெரியுமா?” என்று பெருமைப் பீத்தினாள்.

 

“அப்ப சரி! நான் போய் சிக்கன் வாங்கிட்டு வரேன். நீங்க சமைக்க ரெடி ஆகுங்க. போகும் போது உங்களை கொண்டு போய் நான் மாமா கடையில் விட்டுட்டு போறேன்! அதுக்கப்புறம் நீங்களாச்சு.. உங்க வீட்டுக்காரர் ஆச்சு!” என்றவன் சிரித்துக் கண்ணடிக்க..

 

“இந்த டீலு கூட நல்லா இருக்கே சூப்பருங்க!” என்றவள் முந்தானை உதறி இடுப்பில் சொருகி கொண்டு “மாமா.. இதோ வரேன்!” என்று கிச்சனை நோக்கி செல்ல.. இவன் அவளுக்கு தேவையான சாமான்களை வாங்கி வந்து கொடுக்க.. கூடவே சிறு சிறு வேலைகளை அவன் செய்து கொடுக்க.. அவனுக்கும் ஒரு கேரியரில் சாப்பாடு எடுத்து கொடுத்தாள்.

 

“அட பாருங்களேன்!! நெல்லுக்கு பாய்வது கொஞ்சமா இந்த புல்லுக்கும் பாயுது” என்றவன் அதை எடுத்து கொண்டு வண்டியில் வைத்து அவளையும் அழைத்துக்கொண்டு சென்றவன், மாணிக்கவேலின் கடைக்கு இரு கடைகளுக்கு முன்னரே இறக்கிவிட்டு “அய்த்த.. அதோ தெரியுது பாருங்க.. அதுதான் மாமா கடை! ஜருகண்டி ஜருகண்டி!!” என்று விட்டு இவன் பறந்து விட்டான்.

 

“காலையிலிருந்து இந்த ஜீவா பையன் இன்னும் கடைக்கு போல.. ஒரு வாரம் ஊர் சுத்துனது பத்தாதுன்னு இன்னும் படுத்து வீட்ல தூங்கிட்டு இருக்குது எரும! கடைக்கார பையன் போன் பண்ணி சொல்றான். இருக்கு அவனுக்கு வீட்டுக்கு போய்..’ என்று மருமகனை தாளித்துக் கொண்டே தன் வேலையை செய்து கொண்டிருந்தவன் முன்னால் வெண்பாதங்கள் தெரிய..

 

“யாருடா இது?” என்று மெல்ல கண்களை உயர்த்தியவன் முன்னே கையில் சாப்பாட்டோடு ஒயிலாக நின்று இருந்தாள் மலர்விழி!!

 

அவளது மையிட்ட கண்களில் குறும்பு தாண்டவம் ஆட ஒற்றை பக்கம் வலிந்த மல்லிகை பூவோடு அவள் நின்றிருந்த கோலம் அவனுக்கு நெஞ்சை அடைத்தது.

 

“என்..என்னங்க அம்மிணி இந்த பக்கம்?” என்று கேட்க..

 

“உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேங்க மாமா!” என்றாள்.

 

அவளின் இந்த மாமாவில் மனதுக்குள் மெல்லிய சாரல்! உதடு கடித்து முகத்தை வேறு புறம் திருப்பியவன் “ஊஃப்!” ஊதி ஒரு பெருமூச்சு வெளியிட்டான்.

 

சின்ன சாரல் மழையை கூட தாங்க முடியவில்லை! அடித்து ஊற்றும் பெரும் ஊழி மழையை கண்டால் என்ன செய்வானோ?

 

அவனது கடையில் உள்ளே நகைகளுக்கு என்று தனியாக லாக்கர் ஒன்று வைத்திருப்பான்.

அதன் அருகிலேயே இன்னொரு அறை.. இவன் ஓய்வெடுக்கவென்று இருக்கும். பெரும்பாலும் அதை உபயோகப்படுத்தியதில்லை!

 

ஓய்வெடுத்தால் தானே? இந்த கடை முடிந்தவுடன் அடுத்து பஜாரில் இருக்கும் மற்றொரு கடை அப்புறம் மீண்டும் மாலை போல இங்கே வருவான். இப்படி ஓடிக்கொண்டிருந்தவனை முதல் முதலில் ஓர் இடத்தில் அமர வைத்தாள் அவனின் பத்தினி!!

 

ஜீவன் எடுத்துக் கொடுத்திருந்த சிக்கனில் காரசாரமாக குழம்பு மற்றும் வறுவல் கூடவே முட்டை மாஸ் ரசம் மோரு என்று அவள் கடைபரப்ப.. சற்று திகைத்தவன் “எதுக்கு அம்மிணி உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்! நான் தான் மதியத்துக்கு பாத்துக்குறேனுங்கனு சொன்னேன்ல.. உங்களுக்கு மட்டும் செஞ்சுக்கோங்கன்னு சொன்னேன் தானே” என்று வாய் சொன்னாலும் கண்கள் மனைவியை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்து, ஆசையோடு அவள் பரிமாறிய உணவை அள்ளி விழுங்க தான் செய்தது.

 

வயிறு நிறைந்ததோ இல்லையோ மனம் வெகுவாக நிறைந்தது வெகு நாளைக்கு பிறகு மாணிக்கவேலுக்கு!!

 

அவனின் தனிமை என்ற கொடுமையை தன் இனிய வரவினாலும் இளமையாலும் நிரப்பிக் கொண்டிருந்தாள் தோகை!!

 

அவன் உணவு முடித்தவன் “நீங்களும் சாப்பிடுங்க அம்மிணி!” என்றவன் வெளியே சென்று லஞ்ச் டைம் என்று போட்டை மாட்டி விட்டு கதவை மூடி விட்டு வந்தான்.

 

சில சமயம் அவ்வப்போது இப்படி மூடி விட்டு அந்த கடைக்கு செல்பவன் இன்று மனைவியோடு சிறிது நேரம் கழிக்க விரும்பினான்.

 

அதற்குள் அவளும் உண்டு முடித்திருக்க… தனியாக சுத்தம் செய்ததவளோடு இவனும் சேர்ந்து அனைத்தையும் சுத்தம் செய்து எடுத்து வைத்தான்.

 

“அட.!” என்று பார்த்திருந்தாள் மலர்விழி. பொதுவாக எவ்வளவுதான் அன்பாக அணுசரனையாக கணவன் இருந்தாலும்.. இந்த வீட்டு வேலைகளை எல்லாம் பெண்கள் தான் பார்க்க வேண்டும் என்பது அவர்களது எழுதப்படாத விதி!

 

ஒன்று இரண்டு பேர் அந்த விதிக்கு விதிவிலக்காக இருந்தாலும் பெரும்பான்மையோர் அப்படித்தான். தன் வீட்டு ஆண் மக்களை அப்படியே பார்த்து வளர்ந்திருந்த மலர்விழிக்கு இவனின் இந்த அனுசரணையான செயல் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவளை பன்மை விகுதியில் அழைப்பது இன்னுமே பிடித்திருந்தது.

 

கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து மொத்தமாக அவனையே கொள்ளை கொள்ளையாக பிடித்தது அவளுக்கு!!

 

மோகன புன்னகையோடு கூல்டிரிங்க்ஸ் அருந்திக் கொண்டிருந்த மனைவியின் அழகு மாணிக்கவேலை சிதறடிக்க..

 

மெல்ல வெட்கத்தில் சிவந்த கன்னங்களை வருடி.. அவளின் கழுத்துக்கு கீழே ரசித்தான்.  

 

பருவத்திமிரின் அழகிய எழில் வடிவம் அவள்!! 

செதுக்கி வைத்த பொற்சிலை அவள்!!

சிற்றிடை அழகோ அவனை கிறக்கம் கொள்ள செய்தது!!

இளமை செழுமைகளோ பித்தம் கொள்ள செய்தது!!

உன்மத்தம் உன் மேல் ஆனேனடி என்றவன், அவன் பார்வையை

தாங்காது நாணங்கொண்டு

அவளது பற்களுக்குள் சிறை பட்டிருந்த அவள் சிவந்த உதடுகளை, விரல்கள் கொண்டு விடுவித்து, “வலிக்குமுங்க..!” என்றவன் தன் பற்களில் கவ்விக் கொண்டு மெது மெதுவாக வேகம் கூட்டினான்.

 

“இப்போது வலிக்காதமாம்” என்றவளின் பார்வையையும் சேர்த்தே விழுங்கினான்.

 

அவள் கழுத்தில் கைபோட்டு வளைத்து, அவள் முகத்தை அருகில் இழுத்து அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சி சுவைத்தான்.

 

அவளுக்கு திமிறக் கூட தோன்றவில்லை. கண்களை மட்டும் இறுக மூடினாள். கையில் இருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

 

அவ்வளவு சுலபத்தில் அவளது உதடுகளை விட்டு விட அவன் தயாராக இல்லை. அவள் துவண்டு போகுமளவுக்கு அவளின் சின்னஞ் சிறு இதழில் தேன் குடித்தான்.

 

இந்த முறை அவனது காதலோடு அவளது மோகனமும் அன்பும் சேர்ந்துக் கொள்ள.. உச்சத்திற்கேறி விட்டது அவனது தாபம்!! அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்து இறுக்கி.. மூச்சுத் திணறுமளவு அவள் இதழ்களோடு இதழ்களை வைத்து முத்தமிட்டான்.

 

“என்னதிது… கடையில வச்சிக்கிட்டு?” என்று திமிறியவள்,

எதிர்க்கும் நிலையை முற்றிலும் கடந்து விட்டாள்.

 

அவன் விட்டு விலகும் போது..

கண்களில் லேசான அதிர்ச்சி தெரிந்தது. உதடுகளோ உலர்ந்து போயிருந்தன.. நடையில் தெம்பு இல்லை தொய்ந்து போக.. உடம்பு மொத்தமும் தளர்ந்து போயிருந்தது அவனது ஒற்றை முத்தத்தில்!!

 

சுதியேறிப் போய் இத்தனை நேரமும் இம்சையைக் கொடுத்த அவனின் இளமை நரம்புகள் தீண்டப் பட்டதும் அவனால் நம்ப முடியாத அளவுக்கு சுகமான ஒரு இன்ப உணர்ச்சியைக் கொடுத்தது அவனுக்கு அவளிடத்தில்.. இனி அவள் என்னவள் என்ற எண்ணம் ஸ்திரமானது!!

 

அந்த ஸ்திரத்தை உடைக்கவென்று வந்து சேர்ந்தனர் வள்ளியும் தேனும் அன்றிரவே!!

4 thoughts on “இராட்ஷஸ மாமனே.. 10”

  1. 😍😍😍😍😍🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top