சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..
மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன? ஆம்!! பெருவாரியாக மக்கள், மதுரையை ஆளும் சக்கரவர்த்தினி மீனாட்சியை தங்கள் வீட்டு குல மகளாக நினைத்து தங்களால் முடிந்தவற்றை மொய்யா எழுதிக் கொண்டிருந்தனர்.
மதுரைக்காரவிய்ங்க பாசக்காரவிய்ங்க தான் போல!! பாசம் மட்டுமல்ல வீரத்திலும் கூட!!
அந்த இனிய வைபவத்தில் வேந்தன் குடும்பமும் தங்கள் காணிக்கையையான மணமக்களுக்கு பட்டாடைகளை கொடுத்து கூடவே சீர்வரிசைகள் ஆக 51 தட்டை வந்து அடுக்கி வைத்திருந்தனர். காலம் காலமாக அவங்க குடும்பத்தில் கொடுத்து வரும் பழக்கம்.. இன்றும் வழக்கமாய் தொடர்கிறது.
மருது குடும்பமும் அதே திருமண வைபவத்தில் மற்றொரு புறத்தில் நின்று கொண்டிருந்தனர். மேகநாதனுக்கு முதலில் வர விருப்பமே இல்லை தன்னால் வர இயலாது என்று அவர் ஒதுங்க பார்க்க..
தனபாக்கியம் தான் அவரிடம் “என்ன ணே.. இங்க நம்ம பிள்ளைங்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. அதேசமயம் கோவிலில் திருக்கல்யாணம். இதை ஜோடியா அவிய்ங்க பார்த்தா அவிய்ங்களுக்கு எவ்வளவு நல்லது. அதே நேரத்தில் திருக்கல்யாணம் முடிந்து சாமி உடுத்திய பட்டாடைய பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லனும்.. அது கிடைக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா? நான் மருதுவ விட்டு பேச சொல்லி இருக்கேன். அதனால கண்டிப்பா நாம எல்லாரும் போயே ஆகணும்” என்று வம்படியாக அவரை இழுத்து வந்து இருந்தார்.
அவர் இழுத்து வந்தாரா? இல்லை விதி தனபாக்கியம் மூலமாக மேகநாதனை அக்கோவிலுக்கு அழைத்து வந்ததா??
எல்லாம் அவன் திருவிளையாடல்!!
நிவேதிதாவும் முதல் நாள் அண்ணன் எடுத்துக் கொடுத்த பட்டு புடவையில் தேவதை என கிளம்பி வந்து இருந்தாள். அவளைப் பார்த்த அப்பத்தாவுக்கு கண்களெல்லாம் குளம் கட்ட அருகே சென்று திருஷ்டி எடுத்தார். “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. அம்புட்டு அழகா இருக்கே ராசாத்தி.. இவ்வளவு நாளா இந்த அழகை எல்லாம் எங்க வைச்சிருந்த.. இந்த மாதிரி புடவை கட்டி நகை போட்டாதேன் பொண்ணுக்கு அழகு” என்றவர் அவள் நாகரீகமாக போட்டிருந்த நகைகளை எடுத்துவிட்டு அவரின் பாரம்பரிய நகைகளை எடுத்து அணிவித்து விட்டார்.
“ஏன் அப்பத்தா இவ்வளவு நகை?” முதன்முறையாக இவ்வளவு நகைகளை நிவேதிதா போடுகிறாள். சுவாதி அவளுக்கு வாங்கிக் கொடுக்காத நகைகள் கிடையாது. ஆனால் அவை எல்லாம் மெலிதாகவும் பார்ட்டிக்குப் போடுவது போலவும் சிறுசிறு வைரங்களாக இருக்கும். ஆனால் இதுபோல் வேலைப்பாடாக பெரிது பெரிதாக இல்லை.
“என்னை விட நான் போட்டிருக்கிற நகை தான் வெயிட்டா இருக்கும் போலயே!! இவ்வளவு வேணா அப்பத்தா” என்று அவள் சினுங்க.. “அதெல்லாம் முடியாது இன்னைக்கு ஒரு நாள் என் கண்ணுக்கு நேராக நீ போட்டுட்டு வா” என்று வம்படியாக போட்டு அழைத்து வந்தார் அப்பத்தாவும் புனிதாவும்.
தன பாக்கியத்திற்கு மருமகளை பார்க்க பார்க்க கண்கள் எல்லாம் கரன்சி நோட்டுகள் ஆகத்தான் தெரிந்தது. இவ்வளவு நகையும் காலம் காலமாக பாதுகாத்து வைத்திருக்கும் அன்னை தன்னிடம் கூட கொடுக்கவில்லையே என்று உள்ளுக்குள் ஒரு பொறாமை.. இன்று அது தன் மருமகள் மூலம் தனக்கு வரப் போவதை நினைத்து பேரானந்தம்!!
அவரும் நிவேதாவின் அருகே வந்து “அழகா இருக்க மருமவளே.. உன்னை பாக்க கல்யாண பொண்ணு மாதிரியே இருக்க.. விட்டா இப்பவே என் பையனுக்கு கல்யாணம் பண்ணி விடுவேன்” என்று இரவோடு இரவாக வந்திருந்த வசீகரனை உடன் வைத்துக் கூற..
மருதுவோ “தேவதை மாதிரி பொண்ணுக்கு தேவாங்கு மாதிரி மாப்பிள்ளை” என்று முணுமுணுத்தான்.
“என்ன மச்சான் உங்க முணுமுணுப்பு?” என்று கேட்ட வசீகரனை.. “அது ஒன்னும் இல்ல மாப்புள.. இவிய்ங்க இப்படியே பேசிட்டே இருந்தா மாத்தி மாத்தி.. அங்க திருக்கல்யாணம் முடிஞ்சிடும். நம்ம வூட்டு பொம்பளைங்களுக்கு பட்டு நகையை கண்ட மத்ததெல்லாம் மறந்து போகுதே!! அதான் புலம்பிக்கொண்டு இருந்தேன்” என்று கூற..
“கரெக்ட்டு மச்சான்!!” என்று முதல் முறையாக மருதுவுக்கு ஆமோதித்தான் வசீகரன். இப்படியாக மருதுவின் குடும்பமும் பட்டும் நகையுமாக சொக்கர் மீனாட்சி கல்யாணத்தை பார்க்க ஆவலாய் கோவிலுக்கு செல்ல.. ஆனால் பார்த்தது என்னவோ அவர்கள் வீட்டு செல்ல மகள் திருமணத்தை தான்!!
சுலோச்சனா இரு மகன்களுக்கும் முதல் நாள் இரவு உணவு ஊட்டி விட்டு செல்ல.. வெற்றிவேந்தனுக்கோ வயிறு நிறைந்தாலும் மனம் நிறையாத ஒரு தவிப்பு!!
அந்நேரம் அவனுக்கு போன் வந்தது. “இந்த நேரத்தில் ஏன் இவரு போன் பண்றாரு?” என்று யோசித்தவாறு போனை எடுத்து,
“சொல்லுக?” என்றான்.
அந்தப்பக்கம் என்ன சொன்னதோ இவன் முகத்தில் அதிர்ச்சி ஆச்சரியம் அதைவிட எல்லை இல்லா கோபம்.
“எப்போ? என்னைக்கு?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் இவன் கேட்க..
……
“ஓஓ திருவிழா முடிந்த மறுநாள்.. இன்னும் ஒரு வாரம் இருக்கு.. பாத்துக்கலாம்.. அவிய்ங்களா? நானானு?” என்றவன் போனை வைத்துவிட்டு குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டே இருந்தான்.
மறு நாள் காலை எப்பவும் போல பெரியநாச்சி வாஞ்சிவேந்தன் சுலக்சனா மலர்வேந்தன் மரகதம் முன்னே ஒரு காரில் செல்ல.. வேந்தன்களின் வாரிசான வெற்றியும் கதிரும்.. கதிரின் அல்லக்கைகளோடு அடுத்த காரில் சென்றனர்.
வழக்கம்போல இவர்கள் சீர்வரிசையை பயபக்தியோடு செலுத்திவிட்டு.. விவிஐபிகள் அமரம் பகுதியிலேயே இவர்கள் குடும்பம் அமர்ந்திருந்தது. பெரியவர்கள் எல்லாம் அமர்ந்து விட வெற்றியும் கதிரும் மட்டும் அங்கே ஓரமாக நின்று திருக்கல்யாண வைபவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதேபோல இவர்களுக்கு சற்றுத் தள்ளி அழகு சுந்தரம் புனிதா அமர்ந்திருக்க அவருக்கு அருகில் வீல்சேரில் மேகநாதன் இருக்க.. அவருக்கு அருகில் சுவாதி. இவர்களுக்கு முன்னால் தனபாக்கியம் வரதன் அமர்ந்திருந்தனர். மருது நிவேதிதாவை தன் அருகில் இருத்துக் கொண்டு, முதல் முறையாக இந்த திருவிழா நிகழ்ச்சி வருகிறாள் அல்லவா ஒவ்வொன்றையும் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தான். வழக்கம்போல அன்னையின் அருகில் அமர போன வசீகரனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட தனபாக்கியம் கண்களால் ஜாடை காட்டி நிவேதிதா அருகில் இருக்குமாறு கட்டளையிட்டார்.
“சரி.. சரி” என்றவன் மருதுவின் அருகில் நின்று கொண்டான். பட்டு நகையில் அந்த மீனாட்சியாகவே தெரிந்த தங்கைக்கு இவனா மாப்பிள்ளை என்று மனதில் நெருடல் குறையவே இல்லை மருதுவுக்கு!!
“பாப்பா.. இப்பவும் கேட்கிறேன். நிஜமாவே இந்த காவாலி பயலுகள உனக்கு புடிச்சிருக்கா? உங்க அப்பா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்க பேசாம மனச தொட்டு சொல்லு டா.. நம்ம அத்தை பையந்தேன் அதுக்காக ஆதரிக்கலாம்.. ஆனா வாழ்க்கை என்கிறது சகித்துக்கொண்டு வாழ்வதற்கு அல்ல அன்பாக அனுசரணையாக போகணும்.. பாரு உன்னை நெனச்சு நான் கூட பீலாகி பக்கம் பக்கமா டயலாக் எல்லாம் பேசுறேன்.. இந்த அண்ணனுக்காக கொஞ்சம் யோசிக்கக் கூடாதா பாப்பா” என்று வசீகரனுக்கு தெரியாமல் தங்கையின் புறம் குனிந்து குசுகுசுவென்று மருது பேச…
அவன் பேச்சில் குபீரென்று சிரித்து விட்டாள் நிவேதிதா. அதேசமயம் ஆச்சாரியர்கள் ஏதோ கேட்க.. பவ்வியமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த வெற்றியை பார்த்தவளுக்கு வெறியே வந்தது.
“பலபேருக்கு பெண்களோட வாழ்க்கை ஏதோ யூஸ் அண்ட் த்ரோ பொருள் போல இருக்கு. ஆளுமை மட்டும் இருந்தா பத்தாது அண்ணா அன்பும் தேவையில்லையா? அப்படி எல்லாம் பார்க்கும் போது என்னை சூழ நீங்க இருக்கிற எல்லாரும் என்மேல் அன்பு காட்டுபவர்கள் தான்.. அத்தைக்கு என்ன விட என் பணத்தை மேலே கொஞ்சம் அன்பு ஜாஸ்தி.. அதற்காக எல்லாம் கெட்டவங்க இல்லையே.. அதனால இந்த கல்யாணம் எனக்கு பெரிய டிசப்பாயின்ட்மெண்ட் எல்லாம் இல்லை” என்றாள் சிரித்துக்கொண்டே.. ஆனால் கண்கள் கோபத்தில் கனன்றது வெற்றியை பார்த்துக்கொண்டே…
அதைக் கவனித்த மருதுவோ… “அவன் மேல் உள்ள கோபத்தில் உன் வாழ்க்கையை நீ வீண்ணடித்துக்கொள்றது எனக்குப் பிடிக்கல” என்றான்.
ஆனால் அதற்கும் பதில் சொல்லாமல் அண்ணனை பார்த்து சிரித்து அவன் கை சந்தில் தன் கையைச் சுற்றிக் கொண்டாள்.
“இந்த பக்கிய நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல.. நடக்கப்போற ஒரே நன்மை என்ன தெரியுமா? நீ கல்யாணம் பண்ணிவிட்டாலும் நம்ம வீட்டிலேயே எங்க கூட இருக்க போறதுதான். அதனாலதான் போன போது நானும் சம்மதிக்கிறேன்” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டே..
அதன் பின் அங்கே சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று நடக்க அதை சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் தங்கைக்கு விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது தனபாக்கியம் எழுந்து வந்து “மருது இரண்டு பேரையும் அங்கன சாமிகிட்ட அழைச்சிட்டுப் போ” என்ற ஒரு தாம்பாளத்தை கொடுத்தார்.. “இதுல சாமிகளுக்கு பட்டாடை இருக்கு இதை கொடுத்து தான் வேற அவிய்ங்க நமக்கு தருவாய்ங்க.. ஏற்கனவே பேசி வெச்சுட்டு தானே” மறுத்து விட்டானோ என்று அவர் கேட்க..
“அதெல்லாம் சொல்லி வச்சுட்டேன் அத்த அப்பவே.. நாம கொடுக்கிற மாதிரி நிறைய பேர் கொடுப்பாங்க இல்லையா? அதுல யாரோடதாவது நமக்கு வரும். கவலை படாதீய்ங்க” என்று இவன் தாம்பூலத்தை ஏந்திக் கொண்டு முன்னே செல்ல அவனுக்கு பின் ஜோடியாக வசீகரனும் நிவேதிதாவும் சாமிக்கு அருகில் சென்றனர்.
சொக்கநாதன் பிரியாவிடை நடுவில் வைத்திருக்க.. அருகில் மீனாட்சி அம்மன் கொலுவிருக்க… தங்கையின் கல்யாணத்தைக் காண வேண்டி வந்த பெருமாளும் அம்மா-அப்பா கல்யாணத்தை காணவேண்டி வந்த முருகன் வள்ளி தெய்வானை இருபுறங்களிலும் வீற்றிருந்தனர்.
சொக்கநாதன் மீனாட்சியாக இரு சிவாச்சாரியார்கள் வேடம் பூண்டு தங்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டு இருக்க.. மருது தாம்பாளத்தை ஏந்திக் கொண்டு முன்னால் நின்றான். அவர்களுக்குப் பின்னால் வந்த வசீகரனை பார்த்து நக்கலாக சிரித்தான் கதிர்..
அவன் நக்கலில் முதலில் கண்டு கொள்ளாமல் செல்ல பார்த்த வசீகரன் அவன் சொன்ன, அந்தக் குரல்.. அந்த வார்த்தை.. தடை செய்தது அதற்கு மேல் செல்ல விடாமல்..
திரும்பி கதிர் அருகே வந்தவன் “என்னடா சொன்ன? என்ன சொன்ன? திரும்ப சொல்லு? திரும்ப சொல்லு?” என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்க…
“நான் என்ன சொன்னேன் ஒண்ணுமே சொல்லலையே!!” என்று நக்கலாக சிரித்தான் கதிர்.
“நீ ஒழுங்கா சொல்லல இங்கு ஒரு சம்பவமே நடக்கும் தெரியுமா?” என்றான் மீசையை முறுக்கி விட்டப்படி வசீகரன்..
“அதை பார்த்தவனுக்கு இன்னும் சிரிப்பு வர “டேய் இதெல்லாம் மீசை வைச்சியிருக்கிறவய்ங்க செய்ய வேண்டியது.. அம்மா முந்தானைக்குள் ஒளிஞ்சிருக்க பால் குடிக்கிற பாப்பா எல்லாம் செய்யக் கூடாது தம்பி” என்றவன் அவன் ஒதுக்கிவிட்ட மீசையை நீவி விட்டு.. “ஆமா சம்பவம் சம்பவம் சம்பவம்னனு சொன்னியே அப்படி என்ன சம்பவம் நடக்கும்?” என்றான்.
“நீ இப்ப என்ன சொன்னே அத முதல்ல சொல்லு” என்று அவன் ஆத்திரத்தில் கத்த..
“ரொம்ப ஆசைப்படுற.. சரி சொல்றேன்!! எங்க அண்ணன் சாப்பிட்ட எச்ச மிச்சத்தை தான் நீ வாழ்நாள் பூரா சாப்பிட போற” என்றான் கண்களில் வன்மையோடு..
அதில் வசீகரனுக்கு முகம் கன்றிக் கருத்தது. என்னதான் புதுமை புரட்சி என்று சொன்னாலும் நிவேதிதா வேறு ஒருத்தனின் கைபட்டவள் தானே!! என்று உள்ளுக்குள் அவனுக்கு பல நாட்களாக உறுத்திக் கொண்டிருந்தது. எவ்வளவுதான் பணம் வந்தாலும் அதையெல்லாம் இது ஈடு செய்யமுடியுமா இதேபோல் நாளைக்கு ஒருத்தன் பேசினால் என்று உள்ளுக்குள் அவனுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனாலும் வெளியில் நிவேதிதாவையும், தன் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாதவன் “நாய் வாய் வைச்சதுனால சாமியோட புனிதம் கெட்டு விடாது. நிவேதிதா எங்க வீட்டு சாமி டா!!” என்று பெருமையாக தம்பட்டம் அடித்தான்.
“அவ்வளவு நல்லவனா டா நீ??” என்று மேவாயில் ஆச்சரியமாக கைவைத்து கதிர் கேட்க..
“ஆமாண்டா!! அதுக்கு என்ன இப்போ? நிவேதிதாவை நான் தான் கல்யாணம் பண்ணிக்க போகிறேன். திருவிழா முடிந்த மறுநாளே” என்று கெத்தாக அவன் கூற…
அவன் சொன்னதை கேட்டு டக்கென்று வாயை மூடி சிரித்த கதிர் “சம்பவம் சம்பவம் ஒன்னு சொன்னியே.. இப்போ ஒரு சம்பவம் நடக்கப் போகுது பாரு.. அங்க பாரு” என்று மேடை அருகே காட்ட..
அப்போதுதான் சொக்கநாதர் சார்பாக பிரியாவிடைக்கும் மீனாட்சி அம்மன் கழுத்துக்கும் பொன் சரடை மாற்றிக் கொண்டிருந்தார் சிவாச்சாரியார். உலகமே நேரடியாகவும் நேராலையிலும் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்க.. நிவேதிதாவும் தன்னை மறந்து சிலிர்ப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தவளின் கழுத்து வளைவில் வன் ரோமங்கள் ஓடிய முரட்டுக் கை உரச… நெஞ்சில் எதோ உறுத்த.. அவளுக்கு பரிச்சயமான வாசனை மூக்கில் நுகர.. சட்டென்று தன்னருகில் பார்த்ததும் அதிர்ச்சியில் வாய் பிளந்த நின்றாள்.
தேவதையென அலங்காரம் செய்து நின்றிருந்த நிவேதிதாவின் அருகில் பட்டு வேட்டி பட்டு சட்டையில் அவளுக்கு கொஞ்சமும் குறையாத அழகில்.. நின்று அவளது சங்கு கழுத்தில் அம்மையப்பன் பதித்த தாலி சேர்த்து மஞ்சள் கயிறை நிதானமாக கட்டிக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்!!
திருக்கல்யாணத்திற்கென ஆசீர்வாதங்கள் பூக்களாக மாரியாக கொட்டிக் கொண்டிருக்க.. அவை அந்த சொக்கன் மீனாட்சி மட்டுமல்லாமல் இந்த சுந்தரன் சுந்தரியையும் சேர்த்து நனைத்தன ஆசீர்வாதத்தால்!!
கதிர் சொன்ன அந்த கணத்தில் திரும்பிப் பார்த்த வசீகரனுக்கு முதலில் தெரிந்தது என்னவோ தெய்வங்களின் திருமணம். மெல்ல பின்னே அவன் தோளைச் சுரண்டிய கதிர் தன் அண்ணனை காட்ட.. தனக்கு மனைவியாக வரவேண்டியவளை தன் மனைவியாக்கி விட்டிருந்தவனை பார்த்தான் அதிர்ச்சி விலகாமல்!!
அனைவரின் கவனமும் திருக்கல்யாணத்தில் இருக்க.. இங்கே நடந்த திருட்டு கல்யாணத்தை பெரும்பாலானோர் கவனிக்க மறந்தனர். ஆனால் கவனிக்க வேண்டிய அனைத்து கண்களும் மிக நன்றாகவே கவனித்தது வெற்றியின் செயலை!!
வேறு யார் இரு குடும்பங்களும் தான்!!
வாஞ்சிவேந்தனுக்கு மகனின் இந்த செயல் நிம்மதியை அளித்தது. காரணம் இல்லாமல் ஒரு பெண்ணின் பாவத்திற்கு ஆளாகாமல் தன் குடும்பம் தப்பித்தது என்ற நிம்மதி. மலர்வேந்தனுக்கோ சற்றும் இதில் விருப்பமில்லை. அவர்கள் குடும்பத்துப் பெண் நம் வீட்டுக்கா?? என்று பிடித்தமின்மையை முகத்தில் காட்ட பெண்களோ மகனின் இந்த அதிரடியில் வாய் பிளந்து நின்றனர். பெரியநாச்சி அந்த சொக்கரை கையெடுத்துக் கும்பிட்டு என்ன உன் திருவிளையாடல் என்றார்.
அழகுசுந்தரம் குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியில்!! தனபாக்யத்திற்கு “போச்சு போச்சு எல்லாம் போச்சே.. நான் கட்டி வைத்து கட்டம் எல்லாம் போச்சே” என்று கோயிலாக மட்டும் இல்லை என்றால் அழுது புரண்டு ஒப்பாரியே வைத்திருப்பார். வரதன் புனிதா அழகுசுந்தரம் ஒரு புன்னகையோடு அமைதியாக இருந்தனர். மருது இவர்களுக்கு முன்னே நின்றதால் அவன் இவற்றை கவனிக்கவில்லை.
மேகநாதனுக்கு இதயத்தில் சுருக் சுருக்கென்று வலித்தது. சுவாதிக்கோ நடக்கும் எதையும் கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத நிலைமை!!
திருக்கல்யாணம் முடிந்த உடன் தனது கையிலுள்ள பட்டாடைகளை கொடுத்து அந்த தெய்வ மணமக்களுக்கு சாற்றி விட்டு வேறு ஒன்றை அவன் கேட்க.. அதேபோல் சிவாச்சாரியர்களும் கொடுக்க.. மகிழ்வோடு திரும்பி தன் தங்கையின் கையில் வைத்தான்.
“யாருக்கு கிடைக்கும் பாப்பா இந்த அரிய பாக்கியம்!! பாரு உனக்கு கிடைச்சிருக்கு!!” என்ற சந்தோஷத்தோடு சொல்ல.. அப்போது தான் பார்த்தான் தங்கைக்கு அருகில் வசீகரன் இல்லாமல் வெற்றி நிற்பதை!!
‘இவன் ஏன் இங்கன நிக்கிறான்?’ என்று மருது யோசிக்க.. அடுத்த கணம் “ரொம்ப நன்றி மச்சான்” என்று நிவேதிதா கையில் வைத்திருந்த அந்த பட்டாடைகளை தானும் சேர்ந்து வாங்கிக் கொண்டான் இந்த மாப்பிள்ளை அகப்பட்டவன்.. முகம் முழுவதும் அப்பாவித்தனத்தை பூசி..
“என்னது மச்சானா??” என்று இவன் அதிர.. நிவேதிதாவோ சிலையென சமைந்து நிற்க.. அவளது கழுத்தில் ஜம்பமாய் வீற்றிருந்த மஞ்சள் கயிறு சொன்னது அவனது மச்சான் யார் என்று!!
அடுத்த கணம் கோபத்தில் கொந்தளித்தவன் ஒரு கையில் வெற்றியையும்.. மறுகையில் நிவேதிதாவையும் பிடித்து இழுத்துக் கொண்டு வர.. அவள் கையிலிருந்த தாம்பாலம் தவறி விழ போக சட்டென்று அதை பிடித்தான் கதிர்.
இருவரையும் அந்த மேடையை சுற்றி கீழே அவர்கள் குடும்பம் இருக்கும் இடத்திற்கு கோபத்தோடு அவன் அழைத்துக் கொண்டு வர..
“நான் கூட தாலி மட்டும் தானே கட்டியிருக்கும்.. மச்சான் வச்சி அக்னி சத்தி வரலையேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுனேன். அதையும் நிறைவேற்றிட்ட மச்சான்” என்று சொல்லி வசீகரமாக சிரித்தான் வெற்றி வேந்தன்!!
“வாயை மூடுடா!!” என்று மருது கர்ஜிக்க.. அதற்குள் அங்கே மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்க.. இவர்கள் இரு குடும்பமும் அருகிலிருந்த மண்டபத்திற்கு வந்தனர்.
“உங்க பையன் செஞ்சது கொஞ்சமாவது நியாயமா இருக்கா? நாங்க என் தங்கச்சிக்கு கல்யாணம் பேசி வச்சிருக்கோம். இந்த நேரத்துல இப்படி பண்ணிருக்கான். ஏற்கனவே இவன் பஞ்சாயத்தில் வைச்சு செஞ்சது எல்லாம் பத்தாது.. இன்னும்.. இன்னும்.. பாப்பா வாழ்க்கையில அவன் குழப்பத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்திக் கிட்டே இருக்கிறான். இதுக்கு ஒரு பதில சொல்லுங்க?” என்று மருது பொங்கி எழ..
வாஞ்சிவேந்தன் அமைதியாக கூர்மையாக அவனைப் பார்த்தார். அதில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தது. ஆனால் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த மருதுவுக்கு அதில் ஒரு அர்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியவில்லை.
மலர் தான் தன் பையனை நோக்கி “என்ன வேந்தரே இது?” என்று அலுப்புடன் கேட்க..
“வீட்டில வந்து விளக்கம் சொல்கிறேன் சித்தப்பா” என்று அமைதியாகி விட்டான்.
மருது தனபாக்கியம் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்க.. அவர்களுக்கு எதிர்த்து எதிர்வாதம் செய்து கொண்டிருந்தார் மலர் வேந்தன்..
“இப்படியே ஆளாளுக்கு பேசிகிட்டு இருக்காதிய்ங்க.. நிப்பாட்டுங்க” என்று வாஞ்சி வேந்தன் உரக்க குரலில் பேச.. அங்கே அமைதியோ அமைதி.
மெல்ல அழகுசுந்தரத்தை நோக்கி சென்ற வாஞ்சிவேந்தன், மேகநாதன் ஒரு பொருட்டு கூட மதிக்காமல்.. “உங்களுக்கு இது தப்பா தெரிஞ்சா? இல்ல பிடிக்காமல் இருந்தா? உங்க பொண்ண நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. இல்லைன்னா எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க?” என்றார்.
வெற்றிவேந்தனை தெரியாதவர்களா அவர்கள்? ஏற்கனவே அவனால் பஞ்சாயத்தில் வாங்காத பெயரை வாங்கி வைத்திருந்தாள் நிவேதிதா. அதனோடு எப்படி வசீகரனுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்று மனதில் ஒரு உறுத்தல் இருக்கதான் செய்தது இத்தம்பதியினருக்கு. இன்று அதையும் அவனை நிவர்த்தி செய்துவிட சந்தோசத்துடன் தலையாட்டினார்.
பின் சுவாதியை அவர் பார்க்க.. அதிசயத்திலும் அதிசயமாக வசீகரன் வேண்டாம் வேண்டாம் என்றவர் இன்று இவர்களின் திருமணத்தை ஆதரித்தார்.
யார் ஆதரித்தால் என்ன? ஆதரிக்க போனாமல் என்ன? ஆதரிக்க வேண்டியவள் ஆதரிக்க வேண்டும் அல்லவா?
ஆதரித்தாளா? ஆதரிப்பாளா காரிகை?
காதலே… காதலே…
Super sister next ud sekrama podunga waiting 🌷🌷🌷🌷🌷
Nice ud
Veryyyyy niceeeeeeeee nd intresting epiiiii sissss vera level 💕💕💕💕💕💕💕
செம செம செம🤩🤩😎🥳
Very super story .enthalpy book pdf pot unga plese