ATM Tamil Romantic Novels

உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஏழு

உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஏழு

தீபிகா வீடு

அம்மா ” நான் சென்னை சென்று ஸ்ரீராமின் வீட்டில் பேசி பார்க்கலாம் என நினைக்கிறேன். வீட்டை விட்டு வந்துவிட்டேன் ஸ்ரீராம் என்று அவனிடம் என் மூட்டை முடிச்சுகளோடு பொய் அவன் வீட்டில் நிற்கப்போகிறேன். அம்மா அப்பாவு சண்டை போடு வந்து விட்டேன் இனி நீ தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்கப்போகிறேன். அவன் வீட்டிலும் என்ன எதிர்வினை என்பதை அறிந்து உனக்கு சொல்கிறேன்.”

“சரி நடத்து.. ” என அம்மா பச்சை கொடி காட்ட கிளம்பிவிட்டாள் ஸ்ரீராம் வீட்டுக்கு.

ஸ்ரீராம் வீடு..

“என்னடா இது எந்த பெண்ணும் பிடிக்கவில்லை என்கிறாய். எல்லா வரன்களுமே நல்ல பெண்கள் அழகாக தான் இருக்கிறார்கள். எப்படி பட்ட பெண் தான் நீ தேடுகிறாய்” என அம்மா சலித்து கொண்டாள்.

தங்கை நிவேதா ” இவன் டிசைன் என்ஜினீராச்சே .. அதனால் ஏதாவது புது மாடெலாக ஏதும் கற்பனை யில் வைத்து இருக்கிறானோ என்னவோ.. ” என்றால் கிண்டலாக .

“அண்ணா நீ யாரையாவது மனசில் வைத்து இருந்தால் என்னிடம் சொல்லிவிடு. நான் உனக்கு உதவுகிறேன்” என்றாள்.

அப்போது வீட்டு வாசலில் டாக்ஸியில் தான் பெட்டிகளோடு வந்து இறங்கினாள் தீபிகா.

தங்கை வந்து பார்த்துவிட்டு … அண்ணா உன் நண்பி ஒருவள் வந்து இருக்கிறாள் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தீபிகா வீட்டுக்குள் வந்து விட்டாள்.

ஸ்ரீராம் ஒன்றும் புரியாமல் விழித்தான். சொல்லாமல் கொள்ளாமல் இப்படி வந்து நிற்கிறாளே .. என மனஸுக்குள் யோசித்தவாறே அவளிடம் கண்களாலேயே “என்ன? ” என்பது போல் கேட்க.

நிவேதா குடிக்க தண்ணி கொஞ்சம் கொடு என்றாள்.
அப்புறம் என் ரூம் எங்கே நான் தங்க வேண்டும் என கேட்டாள்.

“ஏன் என்னாச்சு ? . முதலில் நீ விவரத்தை சொல்.” என்று கேட்டான்
அதற்குள் அம்மா ஹாலுக்கு வந்து விட்டாள்.

இவள் அங்கே ஸ்ரீராமின் அம்மா, தங்கை, ஸ்ரீராம் மூவரையும் பார்த்து “நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். இனி இங்கு தான் தங்க போகிறேன்.

பர்வதம் அம்மா “அம்மா அப்பாவிடம் கோபமா சன்டை போடு வந்து விட்டாயா ” என்றாள்.

இல்லை இல்லை நான் ஸ்ரீராமை லவ் பண்றேன். அவனை கல்யாணம் செய்துகொள்ள போகிறேன் என்று ஒரு அணுகுண்டை ஸ்ரீராம் அம்மாவிடம் தஷாகி போட்டாள்.

எங்கள் வீட்டில் நான் ஸ்ரீராமை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வில்லை . அதனால் ஒரேயடியாக வந்து விட்டேன் என சொல்ல…

ஸ்ரீராம் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்..

“சரி நீ இப்போ ரெஸ்ட் எடும்மா .. ஸ்ரீராம் அப்பா வந்ததும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” என்றாள் பர்வதம் அம்மா.

சரி அத்தை .. என்று தீபிகா சொல்ல .. பர்வதம் திகைத்து ஸ்ரீராமை பார்த்து “என்னடா இது ?” என கேட்க.

ஸ்ரீராம் ” ஒன்றும் புரியவில்லை அம்மா.. ஏதோ திட்டம் போட்டு இவள் வந்து இருக்கிறாள் என்ன என்று விளங்கவில்லைம்மா ” என்றான் .

ஸ்ரீராமின் அப்பா வந்தார் மாலை 7 மணிக்கு..
பர்வதம் தான் கணவனிடம் அனைத்தையும் கூற .. இவர் அனைவரையும் ஹாலில் கூடும்படி அறிவித்தார்.

அனைவரும் வந்தவுடன்..

தீபிகாவிடம் ” இதோ பார் அம்மா .. இந்த வீட்டுக்கு என்று சில பாரம்பரியம் இருக்கு. அதனால் நீ யார் உன் பெற்றோர் யார் என அறியாமல் நாங்கள் ஸ்ரீராமை எப்படி திருமணம் செய்து கொடுக்க முடியும். திருமணம் என்பது நன்கு யோசித்து இரு வீட்டு பெற்றோர் வீட்டு உறவுகளும் பேசி நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டிய ஒரு உன்னதமான விஷயம். இப்போது நீ உன் வீட்டுக்கு போ. நாங்கள் உன் பெற்றோரிடம் இது குறித்து பேசுகிறோம்” என்றார்.

மேலும் “ஜாதகம் பொருத்தினால் நாங்களே நல்ல முகூர்த்தத்தில் உங்கள் இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறோம்.” என்றும் கூறினார்.

இவள் ஸ்ரீராமின் அப்பாவிடம் ” நாங்களும் உங்கள் குடும்போல் பாரம்பரிய குடும்பத்தில் வந்தவர்கள் தான். ஜாதகம் பொருத்தம் பார்த்து விட்டோம். நன்றாய் இருப்பதாக உங்க வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியர் கணித்து சொல்லிவிட்டார். ஆனாலும் ஏன் பெற்றோர் சம்மதிக்க வில்லை. அதனால் நான் இங்கே மொத்தமாக வந்து விட்டேன் மாமா ” என்றாள் உரிமையோடு ..

மேலும் “வேண்டும் என்றாள் உங்க ஜோசியரிடம் விசாரித்துக்கொள்ளலாம் ” என்றாள்.

தாத்தா உடனே ஜோசியரை கைபேசியில் அழைத்து விசாரிக்க அவர் “ஆமாம் அவர்களும் உங்களை போல் நல்ல பெரிய இடம் தான் என்று கூறியதுடன் ஜாதக பொருத்தமும் பார்த்து விட்டேன். பத்து பொருத்தமும் உள்ளது” என்றார்.

அதற்கு தாத்தா ” அப்புறம் ஏன் நீங்கள் எங்களுக்கு தீபிகாவின் ஜாதகத்தை காண்பிக்க வில்லை நேற்று வந்த போது” என்று கேட்க

ஜோசியர் “அதை பெண்ணின் பெற்றோர் காண்பிக்க சொல்லவில்லை. காரணம் எனக்கு தெரியாது ” என்று கூறினார்.

அனைத்தையும் அனைவர் முன் ஸ்பீக்கர் போனில் பேச ..
சிவகொழுந்து ஸ்ரீராமை அழைத்து உனக்கு இவளை பிடியது இருக்க என விசாரிக்க ..

ஸ்ரீராம் ” நீங்கள் சொல்லும் எந்த பெண்ணின் கழுத்திலும் தாலி காட்ட நான் தயார். அது இவளாக இருந்தாலும் சரிதான் ” என்றான்.

தீபிகாவின் பெற்றோர் நம்பர் இருந்தால் கொடு. நான் ஒரு முறை அவர்களிடம் பேசி பார்க்கிறேன். பின் அவர்கள் ஒத்து கொள்ளவில்லை என்றாலும் நானே முன் இருந்து உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்” என்றார்.

தீபிகா ஏற்கனேவே இங்கு நடப்பவற்றை அம்மாவும் அறிந்து கொல்வதற்காக அம்மாவுக்கு கால் செய்து அப்படியே போனில் வைத்து இருந்தாள்.

பிறகு கொஞ்சம் தள்ளி பொய் ” என்னம்மா காதில் விழுந்ததா?” என கேட்டாள்.

ஹ்ம்ம் விழுந்தது .. அவர்கள் எனக்கு போன் பண்ணினால்.. எங்கள் பேச்சை கேட்காமல் போனவளைபற்றி நங்கள் ஏன் இனி கவலை பட வேண்டும் என்று கேட்டு சமாளித்து விடுகிறேன். நீ கவலை படாதே தீபு. ” என சொல்ல..

இவள் நல்லது அம்மா .. நான் இப்போது போனை கட் செய்கிறேன் என்றாள்.

அதற்குள் ஸ்ரீராம் தீபிகாவின் அம்மாவுடைய கைபேசி என்னை தன் தந்தையிடம் கொடுக்க சிவக்கொழுந்து பார்வதி எண்ணிற்கு அழைத்து
விஷயத்தை சொல்ல

பார்வதி ” ஐய்யா என்று எங்கள் மகள் எங்கள் பேச்சை மீறி வீட்டை விட்டு சென்றாளோ அந்த நிமிடமே நாங்கள் எங்கள் பெண்ணை மறந்து விட்டோம். இனி நீங்களாச்சு அவளாச்சு. அவளை ஏற்று கொள்ளவீர்களோ மாட்டிர்களோ அது எங்களுக்கு தேவை இல்லாத விஷயம். இனி போன் செய்து அவள் குறித்து எங்களிடம் பேச வேண்டாம். ” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

சரி அப்படியென்றால் .. ” நீங்களும் உங்கள் கணவரும் ஒரு பத்திரத்தில்
இதை எழுதி கைஒப்பம் இட்டு எனக்கு அனுப்பி வையுங்கள். பிறகு நாங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கிறோம்” என்று போனை வைத்து விட்டார்.

அதன் பின் வீட்டில் உள்ள அனைவரிடமும் நடந்த விஷயத்தை சொல்லி அனைவரும் போகலாம் என்று உத்தரவிட்டு .. நிவேதவிடம் , ” தீபிகாவை உன் அறையில் உன்னுடன் தங்க வைத்து கொள்.” என்று கூறினார்.

தீபிகா தான் அம்மாவிடம் என்ன செய்ய போகிறீர்கள் ? அப்பாவிடம் எப்படி கை எழுத்து வாங்க போகிறீர்கள்? என்று கேட்டாள்.

“அதை நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டு மேலும் “அப்பாவிடம் கை எழுத்து வாங்கிவிட்டு உன்னிடம் பேசுகிறேன்” என்றாள்.

மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் ..

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top