உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் எட்டு
தீபிகா வீடு
பார்வதி தான் கணவனிடம் “என்னங்க நம்ம பெண் அந்த ஸ்ரீராமை லவ் பண்றத சொல்லுறா? ” உங்களிடம் சொல்ல சொல்லி என்னிடம் தூது விட்டு இருக்கிறாள். நான் அவளிடம் எனக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்காது நாங்கள் பார்த்து வைக்கும் பயனை தான் நீ திருமணம் செவிடு கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறேன். நம் குடும்பத்தில் லவ் எல்லாம் வேண்டாம் என கூறினேன். அவள் பிடிவாதம் பிடிக்கிறாள். உங்கள் கருது என்ன என்று சொல்லுங்கள் ” என கேட்டாள்.
பார்வதி நீ எந்த காலத்தில் இருக்கிறாய் ? இந்த காலத்து பெண்கள் ரொம்பவும் கெட்டிக்கார பெண்கள். ஆண்களை விட அனைத்திலும் எல்லா துறையிலும் கை தேர்ந்து விளங்குகிறார்கள். அதிலும் நம் மகள் IIM வரை சென்று ஒரு அமெரிக்கன் நிறுவனத்தில் வேலையும் வாங்கி நம் அனுமதிக்கு காத்து இருக்கின்றாள். அதனால் நீ அவள் லவ் பண்ணுகிறாள் என்று சொன்னால் அது சரியான ஆணை தான் தேர்ந்து எடுத்து இருப்பாள். எனவே எனக்கு எந்த தயக்கமும் இல்லை அவள் லவ் பண்ணுவதற்கு. ஸ்ரீராமும் பார்ப்பதற்கு பேசுவதற்கு நல்ல மனிதனாகவே தென்படுகிறான். எனவே இ ஹவ் நோ ஆப்ஜெக்ஷன் பார் ஹெர் லவ். ” என்று தெளிவாக கூறியதை கேட்டதும் பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை.
இவர் எதிர்ப்பார் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
அப்படி என்றாள் அவள் ஓடிப்போனாலும் உங்களுக்கு கவலை இல்லையா ? என கேட்டாள்.
“நான் தான் அவள் காதலுக்கு மறுப்பே தெரிவிக்கவே இல்லயே ? பின் ஏன் அவள் ஓடி போக போகிறாள்.” என்றார் .
இவருக்கு ஸ்ரீராம் என் அண்ணனின் மகன் என்று தெரிந்தால் என்ன செய்வாரோ ? என நினைத்தாள். சரி இடை இவரிடம் வேறு மாதிரி கேட்டு பார்ப்போம் என நினைத்தாள்.
“என்னங்க நான் ஒன்று கேட்டால் கோபித்து கொள்ள மாட்டிர்களே ?” என்றாள்.
“என்ன பீடிகை பலமா இருக்கு ? என்னவென்று சொல் ..” என்றார்.
“நமக்கு என்று உறவு யாரும் இல்லாமல் போய் விட்டது. உங்கள் வகையிலும் யாரும் இல்லை. நம் தனியாக விடப்பட்டபோல இல்லையா உங்களுக்கு ?. ” என்றாள் .
சரி அதற்கு என்ன இப்போ ? என்றார்.
“எனக்கு ஒரு யோசனை. நம் உறவில் உள்ள பயனாக யாராவது பார்த்து பண்ணி வைக்கலாம் என யோசிக்கிறேன். அப்படி செய்தல் நம் உறவுகளுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பற்றி உங்கள் கருது சொல்லுங்கள்” என்றாள்
“சரி அப்படி யாராவது இருந்தால் சொல்லு பார்க்கலாம்” என்று கேட்டார்
“என் அண்ணன் வீட்டில் சென்னையில் அவருக்கு யாராவது கல்யாணமாகாத மகன் இருக்கிறார்களா என கேட்டு பார்க்கலாமா? ” என கேட்டாள்.
மனைவியை உற்று பார்த்தார். அதுதான் என் அப்பா சொத்து கேட்டு உறவை நாசம் பண்ணி விட்டாரே மீண்டும் எந்த முகத்த வைத்துக்கொண்டு போய் அவர்கள் வீட்டிற்கு போவது?
அதெல்லாம் சரியா வராது பார்வதி.. என்றார்.
அதற்குள் இவள் ஸ்ரீராம் என்று ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாளே ? அதனால் தான் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். நீங்கள் சரி என்று சொல்லுகிறீர்கள்.
“எனக்கு மிக கோபமாக உள்ளது ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என்று சொன்னதால் உங்கள் மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்ரீராம் வீட்டுக்கு போய் விட்டாள். ” என்றாள்.
“ஓ அந்த அளவு போய் விட்டாளா ? அவள் . எல்லாம் நாம் கொடுத்த தைரியம் மற்றும் செல்லம். இனி வர மாட்டாள் உன் பெண். அப்படியே விட்டு விடு”. என்றார்.
நான் பேசி பார்க்கிறேன் அவளிடம் என்று கைபேசியை எடுத்து அவளை அழைத்தார். அவள் எடுக்கவில்லை.
கோபமாக இருக்கின்றாள் போல எடுக்க மாட்டேன் என்கிறாள்.
“வாட்சப்பில் நீ வீட்டுக்கு வா பேசி கொள்ளலாம் உன் மீது கோபம் இல்லை ” என்று தாவல் அனுப்பினார்.
பார்வதி என்னடா இது நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறது.
என்னங்க அவள் ஸ்ரீராமை திருமணம் செய்ய உங்களுக்கு சரி என்று பட்டால் இந்த பத்திரத்தில் கையொப்பம் இடுங்கள் என்று நீட்டினாள்.
இது என்ன பாத்திரம் என்று கேட்டார்.
அதற்கு பார்வதி தான் ஸ்ரீராம் அப்பாவிடம் பேசியதை சொன்னாள்.
“அவள் நம் பேச்சை கேட்காமல் போனதால் வந்த கோபத்தில் அவளை நாங்கள் மறந்து விட்டோம் என்றும் நீங்கள் அவளை சேர்த்து கொள்ளவீர்களோ மாடீர்களாளோ அது உங்கள் இஷ்டம். இனி அவளுடன் நாங்கள் பேச தயாராய் இல்லை என்பது போல பேசி விட்டேன். அதனால் அவர் இதை பத்திரத்தில் எழுதி நம்மை கையொப்பம் போட்டு கொடுக்க சொல்லி விட்டார் ” என்றாள்.
“ஸ்ரீராம் அப்பாவின் கைபேசி எண் உன்னிடம் உள்ளது அல்லவா? அதை கொடு நான் பேசுகிறேன்” என்றார்.
மீண்டும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில் ..