ATM Tamil Romantic Novels

இராட்ஷஸ மாமனே… 13

மாமனே 13

 

 

“மாமா… நாங்க வந்துட்டோம்!” என்று கோரசாக குதித்தப்படி தேனுவும் வள்ளியும் வர.. அவர்களுக்கு பின்னர் அவர்களுடைய லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான் ஜீவன், ஜீவனே இல்லாமல்… கொண்டு வந்தவற்றை போட்டவன், அப்படியே தரையில் மல்லாக படுத்து “அய்த்த… சீக்கிரமாக தண்ணீ கொண்டு வாங்க.. என்னைய காப்பாத்துங்க!” என்ற மூச்சு வாங்க..

 

அதுவரை கணவனின் கைப்பிடியில் இருந்தவள், இவர்கள் திடீரென வந்த அதிரச்சியில், கணவன் இதழ்கள் கொடுத்த உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவித்தவள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவசரமாக சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்

 

“முதல்ல நாம குடிச்சு நம்மள ஆசுவாச படுத்தினும் போல.. எப்படி எல்லாம் அதிர்ச்சி கொடுக்குறாய்ங்க! என்‌ புருஷ் கூட கொஞ்சம் நேரம் குஜாலா இருந்தது தப்பா ஆஃபிஸர்?” என்று இவள தனக்கு தானே பேசிக் கொண்டே தண்ணீர் குடித்துக் குடித்துவிட்டு ஜீவனுக்கு கொண்டு சென்றாள். 

 

அங்கு மாணிக்கவேலோ “இதெல்லாம் குடும்பமா டா?!!” என்று நொந்து போயிருந்தான். ஒவ்வொரு முறையும் அவர்களாக இயல்பாக சேரும் நேரம், ஏதாவது ஒரு கரடி இப்படி வந்து விடுகிறதே என்ற எரிச்சல் வேறு!!

 

திருமணமானவர்களை ஒரு அறைக்குள் அடைத்து “இன்று தான் உங்களுக்கு.. இந்த நேரத்தில் தான்.. இப்படித்தான்…” என்று சொன்னால் அங்கே எங்கே காதல் மலரும்? நேசம் மலரும்? அன்பு பெருகும்? 

 

இத்தருணங்கள் எல்லாம் பூக்கள் பூப்பது போல.. வானவில் வருவது போல.. இயல்பாக அதே நேரம் இரு மனங்களால் சேர வேண்டிய தருணம், இரு உடல்களால் அல்ல!!

 

முன்னே இருந்ததை விட இப்பொழுது கொஞ்சம் நெருங்கித்தான் இருக்கிறார்கள். அந்த நெருக்கத்தின் முடிவு தாம்பத்தியமாக இல்லாமல் கரடிகளாய் இருப்பது தான் பெரும் கடுப்பாகி போனது மாணிக்கவேலுக்கு!!

 

“கடுப்புகளை கிளப்புகிறார் மை லார்ட்டு!” என்ற மொமண்டில் அமைதியாக அமர்ந்திருந்தான் மாணிக்கவேல்.

 

வள்ளியும் தேனும் மாணிக்கவேல் அருகில் அமர்ந்து “நாங்க வந்துட்டோம்னு எவ்வளவு சந்தோசமா சொல்றோம்! நீங்க ஏன் மாமா இப்படி மூஞ்ச வச்சிருக்கீங்க? அப்ப நாங்க வந்ததுல உங்களுக்கு சந்தோசமே இல்லையா?” இருவரும் உதட்டை பிதுக்கி சோகமாக கேட்க..

 

“இப்ப என்ன? நீங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு நான் ஆரத்தி எடுத்து செண்டி மேளம் முழங்க வரவேற்கணுமா?” என்று அவன் கடுப்புடன் கேட்டான்.

 

“வந்தது ராங் வேளைல.. இதுல சோகத்தை பிழியுறாளுங்க!” என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

 

வேற வழி!! சொந்தங்கள்.. அதுவும் சொந்த அக்கா மகள்கள் எங்கிருந்து கோபத்தை காட்ட என்று நினைத்தவன், மலர்களை கொண்டு வந்து தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடித்துக் கொண்டிருந்த ஜீவனை தான் பார்த்தான் “சதிகார பாவி!!” என்ற பார்வையோடு!!

 

தண்ணீரை குடித்து முடித்தவன் “என்ன மாமா.. என்னைய பாசமா பாக்குறது போல இருக்கு! இருக்கும்.. இருக்கும்.. உங்க அக்கா பொண்ணுங்க ரெண்டு பேரையும் பத்திரமா கூட்டிட்டு வந்து இருக்கேனுல.. அப்ப நீ என்னைய பாசமா தான் பாக்கணும்!” என்றான்.

 

“ஏன்டா.. எல்லாரும் கிளம்பி ஊருக்கு போனதா அன்னைக்கு சொன்னாங்க. இவங்க ரெண்டு பேரும் என்னடா நீ கூட்டிட்டு வந்து இருக்க?” என்று கேட்டான் மாணிக்கம்.

 

“பெரியம்மா பெரியப்பா சித்தி சித்தப்பா எங்க அம்மா எல்லோரும் ஒட்டுமொத்தாக அங்கேயே இருந்தா.. இங்குள்ள வேலையெல்லாம் யார் பார்க்கிறது? அதனால அவங்களே டைம் டேபிள் போட்டு கிட்டு ஒவ்வொருத்தரா ஷிப்ட் போட்டு அங்கேயும் இங்கேயும் வேலை பார்த்துட்டு இருங்காங்க.. இன்னைக்கு தான் எல்லாருமே ஒட்டு மொத்தமா கிளம்பி ஆச்சு வூட்டுக்கு லேண்ட் ஆகி இருக்காங்க.. நாம மறுநாள் தானே கிளம்புறோம்! இதுங்க ரெண்டும் நம்ம கூட வரேன்னு சொல்லிட்டு அவங்க கூட போகல…” என்று என்று கூறியவன் “நல்லவேளை மாமா.. இது ரெண்டுத்துல ஒன்னு நீ கட்டல! க்ரேட் எஸ்கேப்!” என்று பெருமூச்சு விட்டான்.

 

“டேய்..!!!” இருவரும் ஒரே நேரத்தில் கத்த…

 

“சும்மா இருங்கடி!! நீங்களெல்லாம் பொண்ணுங்களா டி?” என்றவன், “என்னென்னு கேளு மாமா.. இவளுங்கள கூட்டிட்டு வந்துத்திலிருந்து வரிசையா தீனி வாங்கி தின்னுகிட்டே இருக்காளுங்க ரெண்டு பேரும்.. அங்க போய் ஒரு நாலு நாள் தங்கறதுக்கு எவ்வளவு பெரிய லக்கேஜ் கட்டிக்கிட்டு வந்து இருக்காளுங்க பாரு மாமா? எல்லாத்தையும் என்னைய தூக்க விட்டுடாளுக மாமா…” 

என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான் ஜீவன்.

 

வள்ளியும் தேனும் அவனை அலட்சியமாக பார்த்து “போடா.. டேய்!” என்று உதட்டை சுழிக்க..

 

“மாமா.. போன ஜென்மத்துல நீ என்ன புண்ணியம் பண்ணியோ.. இந்த ஜென்மத்தில் கிரேட் எஸ்கேப் இவளுங்க கிட்ட இருந்து மாமா உனக்கு” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் மீது பாய்ந்திருந்தார்கள் இருவரும்.

 

ஒரு குட்டி கலாட்டாவே அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

மலர்விழி புன்னகையோடு பார்த்து இருந்தவள், “சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று கேட்டதும் “நாங்கள் சாப்பிட்டோம்!” என்றார்கள் அலட்சிய வள்ளியும் தேனும். 

 

அவர்களுக்கு இன்னும் மலர்விழியின் மீது இருந்த கோபம் போகவில்லை. நாங்கள் இருவரில் யாரோ ஒருத்தரோ.. இல்லை இருவருமே இருக்க வேண்டியது இடம் இது! இவள் எப்படி இருக்கலாம்? என்று சிறுப்பிள்ளைத்தனமான கோபம்.

 

“அவளுக கிடக்குறாளுங்க அர்த்த.. நீங்க எனக்கு எடுத்து வைங்க!” என்றான் ஜீவன்.

 

“ஏன்டா எங்க கூட தான டா சாப்பிட்ட…” என்று வள்ளி திகைக்க..

 

“இவ்வளவு பெரிய இலக்கேஜை தூக்கிட்டு வந்திருக்கேன். அதுலயே நீங்க போட்ட சாப்பாடு எல்லாம் சரி போச்சு.. போங்கடி.. நான் சாப்பிட போறேன்!” என்றவனுக்கு உணவை எடுத்து வைத்தாள் மலர்விழி.

 

ஜீவன் சொன்னதுக்கு அப்புறம் தான் நாளை மறுநாள் கிளம்ப வேண்டும் என்று நினைவு வந்தது மாணிக்கவேலுக்கு.

 

 “இதை எப்படி மறந்தேன்?” என்று அவன் விரலால் நடு நெற்றியை தேய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று எங்கிருந்து யாரையும் அவன் திருமணத்திற்கு அழைக்கவில்லை. “கருப்பண்ணன் அண்ணாச்சியும் அவர் குடும்பத்தையும் அழைக்க வேண்டும்! அன்று கோவிலில் இருந்தவர்களுக்கு இங்கே மதுரையில் தனியாக விருந்து வைக்கும்போது அழைக்க வேண்டும்” என்றெல்லாம் நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தது.

 

இரவு வழக்கம் போல பெண்கள் மூவரும் கூடத்தில் படுத்துக்கொள்ள அவர்களுக்கு சற்று தள்ளி ஜீவன் படுத்துக்கொண்டவன் “என்னால மாடி எல்லாம் ஏற முடியாது மாமா.. நீ தனியாவே படுத்துக்கோ!” என்று கவிழ்ந்து விட்டான் படுக்கையில்…

 

“பாவிகளா…!! இந்நேரம் நான் என் பொண்டாட்டி கூட.. எப்படி இருந்திருக்க வேண்டியவன்??? இப்படி என்னை தனியா மொட்ட மாடிக்கு அனுப்பிட்டீங்களேடா.. நல்லா இருப்பீங்களா டா நீங்க எல்லாம்! பாருங்க… உங்க ஃபர்ஸ்ட் நைட் பத்து நாள் தள்ளி தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் பாதியில கரெண்ட் போய்டும்!” என்று அவர்களைப் பார்த்து காதில் மூக்கில் புகை வர மனைவி எடுத்துக் கொடுத்த பாய் தலையணையோடு அவளை முறைத்துக் கொண்டே மாடிக்கு சென்றான்.

 

“என்னைய ஏன் இப்படி இவரு மொறச்சிகிட்டே போறாரு? நான் என்ன பண்ணுனேன்!! வந்தது இவங்க அக்கா பிள்ளைங்க… என்னமோ நான் என் சொந்தத்தை வர வச்ச மாதிரி தான்! போயா கருப்பா!!” என்று திட்டிக்கொண்டு இவளும் வள்ளி தேனுவிற்கு அருகில் படுத்துக்கொண்டாள்.

 

திடீரென்று விழிப்பு வந்தது மலர்விழிக்கு. மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் அருகில் பார்க்க வள்ளியும் தேனும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து உட்கார்ந்து விடி வெளிச்சத்தில் கூடத்தை ஆராய.. ஜீவனும் இழுத்து போர்த்தி இந்த போர்வையை தூர போட்டுவிட்டு பப்பரக்கா என்று படுத்திருந்தான்.

 

அனைவரும் இருந்தும் ஏனோ தனித்திருக்கும் உணர்வு!! அருகில் இருந்து தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் படுக்க தூக்கம் வருவேனா என்றது!! திரும்பி திரும்பி படுத்து புரண்டும் பிரயோஜனம் இல்லை!! ஆனால் கிஞ்சித்தும் அந்த நித்ராதேவி இவள் அருகில் வரவே இல்லை!!

 

“என்ன இது?? புதுசா இருக்கு!! இவ்வளவு நாள் படுத்த உடனே நம்ம தூங்கிடுவோமே?? இன்னைக்கு ஏன் இந்த இம்சை??” என்ற புலம்பியவள் அறியவில்லை அது மன்னவன் இல்லாமல் பசலை நோய் பிடித்த காரணம் என்று!!

 

“இது ஆகுறதுக்கு இல்ல!” என்று மெல்ல எழுந்தவள், மூவரையும் கொலுசொலி அவர்களை எழுப்பி விடாதவாறு பூனை போல மெல்ல அடி எடுத்து மாடி ஏறினாள்.

 

அங்கே மாணிக்கவேல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். தூங்கும் போது கூட முகத்தில் இருக்கும் இறுக்கமும்.. நெறித்த புருவங்களும்.. அழுத்தமான தடித்த உதடுகளும்.. அதற்கு மேல் கற்றை மீசை என்று அத்தனையுமே ஆண்மைக்கு இலக்கணமாய் அம்சமாய் இருக்க.. 

 

“கருப்பா.. அழகா டா நீ!” என்று தூர இருந்து கொஞ்சிக் கொண்டாள்.

 

சிலுசிலுவென்ற காற்றும் மனதிற்கு இதம் கொடுக்க.. மலருக்கு கீழே இருந்த புழுக்கம் கொஞ்சம் கூட இல்லை! அது காற்றால் என்று நினைக்க.. மன்னவன் அருகாமை என்று புரியும் காலம் வரும்!!

 

“இதுக்கு தான் இவர் இங்கு வந்து தூங்குறாரு போல! பாரு எப்படி நிம்மதியா தூங்குறத!” என்றவள் மெல்ல அடி எடுத்து வைத்து அவன் அருகில் அமர்ந்தாள். 

 

அவன் ஒருவனுக்குத்தான் பாய் விரித்து இருக்க.. அதில் முக்காவாசி இடம் அவனே ஆக்கிரமித்து இருக்க.. ஏனோ அவன் அருகில் படுத்துக்கொள்ள உணர்வு ஆழி பேரலையாய் அவளை தாக்க.. அவன் விழித்து விடக்கூடாது என்று அவனை பட்டும் படாமலும்.. தொட்டும் தொடாமலும் அருகே படுத்தாள்.

 

அவன் தலையணையில் தனது கையை மடக்கி வைத்து படுத்திருக்க உருண்டு திரண்ட புஜத்தில் படுக்க இவளுக்கு ஆசை கிளர்ந்தது. கைவளையல்கள் சத்தம் வராமல் மெதுவாக அவனின் புஜத்தின் திண்மையை தொட்டுப் பார்த்தவள் “ஆத்தி!! கருளாக்கட்ட மாதிரி வச்சிருக்காரு…!!” என்று அதில் தலை வைக்க முயன்றவள், எங்கே அவன் விழித்து விடுவானோ என்று சற்று தள்ளியே படுத்துக்கொண்டாள். ஆனாலும் இளவம் பஞ்சு தலையணையை விட அந்த உருண்ட திரண்ட புஜமே அவளை வெகுவாக பிடித்திருந்தது சில நேரங்களில் கடுமையிலும் இன்பம் உண்டு போல… இல்லையில்லை நாம் பார்க்கும் பார்வையில் அன்பு இருந்தால்.. நேசம் இருந்தால்.. அது கடுமையில் என்ன கடும் வெயிலிலும் கூட இன்பச் சாரலாய் தென்றலாய் நம்மை குளிர்வித்து இன்பம் கொடுக்கும்!!

 

ஆக… அனைத்துக்கும் ஆதி அன்பு தான்!!

 

பெண்ணின் உள்ளுணர்வுக்கு மட்டுமல்ல ஆணின் உள்ளுணர்வுக்கும் தெரியும் நம்மை யாராவது குறுகுறுவென்று பார்த்தால்.. குறுகுறு பார்வைக்கே நம் கவனம் சிதறும் என்றால்.. மான் விழியாளின் ஊடுருவி நெஞ்சை துளைக்கும் நேசப் பார்வைக்கோ… உடலே சிலிர்த்தது சிங்களாய் வலம் வந்த முரடனுக்கு!!

 

மலர்விழி அவன் அருகில் வந்து படுக்கும் பொழுது புடவையின் சராசரப்பு.. கால் கொலுசின் கட்டுப்படுத்திய மெல்லிய ஒலி.. கண்ணாடி வளையல்ளின் சிணுங்கும் சத்தங்கள் அனைத்தையும் தாண்டி அவளின் பிரத்தியோக வாசனை அவனுக்கு உணர்த்திவிட்டது அருகில் மணையாளின் வாசத்தை!!

 

என்ன செய்கிறாள் என்று தான் இந்த கள்வனும் கண் மூடி தூங்குவது போலவே படுத்திருந்தான், தக்க சமயம் பார்த்து கள்ளியை கபளீகரம் செய்ய…

 

காதலின் படிகளில் முதன்மையானது பார்வை.. தேடல்.. மன பரிமாற்றம்.. ஸ்பரிசம்.. அதன்பின் தான் மயங்குதல்.. கிறங்குதல்.. ஏன் பைத்தியம் பிடித்தல் கூட உண்டு!! 

 

ஆனால் அது இருவரின் காதல்களில் மட்டுமே சாத்தியம்!! மாணிக்கவேலு ஒரு தலையாய் ஒருத்தியை காதலித்து பித்துபிடிக்கும் நிலை வரை சென்று மீண்டு வந்து மனதினை வெறுமையாய் வைத்திருக்க… அதில் மெல்லிய சாரலாய் மலர்விழியின் வருகை! அது அப்போது நேசம் என்னும் வித்தாய் அவன் மனதில் ஆழ புதைந்து வேர் விட தொடங்கியிருந்தது!! 

 

சற்றென்று மலர்ந்து வாடி விடுவதெல்லாம் காதல் இல்லை!! அதே போல் ஒரு கிளையில் பல மலர்களும் காதல் இல்லை!! எத்தனை தூரம் உயர உயர மேலே வளர்கிறதோ அத்தனை ஆழத்திற்கு அதன் வேரும் அடி ஆழம் வரை செல்லும் மூங்கிலை போன்றது!! 

அன்புக்கு மட்டுமே வளையும் பண்பு கொண்டது!!

 

இவர்களின் நேசமும் இதுபோல தான்.. ஆழம் வரை வேர் பிடித்து தழைத்து ஓங்கும் மூங்கிலை போன்றது!!

 

“கருப்பா…” என்று தன் தளிர் விரலால் உறங்கும் கணவனின் தாடி மீசை என்று மெல்ல வருடினாள் அவன் விழித்து விடக் கூடாது என்று.

 

முகம் கண்கள் மூடி படுத்திருந்தாலும் அகம் என்னவோ அத்தனை விழிப்பாய் இருக்க.. இவளின் ஒவ்வொரு செயலிலும் மனதில் அச்சாய் பதிய.. கூடவே இளம் மனைவியின் அருகாமை அவனுக்கு பல உணர்வுகளை ஒவ்வொரு அணுவிலும் கடத்திச் செல்ல.. முன்னிரவில் முடியாமல் விட்டதை முடித்து வேகம் கொண்டவன், அவள் என்ன என்று சுதாரிக்கு முன் ஒரு கையால் ஆக்டோபஸ் போல அவளது இடுப்பை வளைத்து, மறு கையால் அவளது பின் முடியை பற்றி இவனை நோக்கி இழுத்தவன், இந்நேரம் வரை அவனை கொஞ்சிக் கொண்டிருந்த அந்த கோவை

இதழ்களை கொன்று தின்று தீர்த்தான்!!

 

முணங்கல்களும்.. மூச்சிரைப்பும் முத்தங்களும்‌… அவ்விரவை நிறைத்தன!!

4 thoughts on “இராட்ஷஸ மாமனே… 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top