ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை

அத்தியாயம் 7

 

“இப்ப எதுக்கு என்னைய பட்டுவேட்டி சட்டைல வரச்சொல்லிருக்க? திரும்பவும் எனக்கு பொண்ணு ஏதாவது பார்த்து வைச்சுருக்கியா?”

 

“ஆமாண்டா! ஒருத்திக் கூடவே இன்னும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கல. இதுல இன்னோன்னு வேறயா உனக்கு?”

 

“அய்யா கெப்பாசிட்டி அப்படி. எத்தனை வேணாலும் மெயிண்டெயின் பண்ணிக்கலாம்.” என்று ராக்கி பேசிக் கொண்டிருக்க, அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கோவிலில் குழுவிருக்கும் அம்மனைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்த ஆருஷாவைப் பார்த்த ராக்கி, இமைக்க மறந்தான். 

 

‘எப்பா என்ன அழகு? வெண்ணெயில் குழைத்து செய்த உடலோ? சும்மா வழுவழுன்னு இருக்கு.’ என்றெண்ணியவனை விட்டு சற்று தூரத்தில் தள்ளி நின்று கொண்டாள் ஆருஷா. 

 

“அங்கேயே ஏன்மா நிக்குற? இங்க வா! இப்படி வந்து கிருஷ்ணா பக்கத்துல நில்லு.” என்று மரகதவல்லி கூற, அவளோ வேலுநாச்சியாரை பார்த்தாள். அவளது முகபாவங்களை வைத்து கண்டிபிடித்து விட்டான்.

 

‘ஓஹோ! இந்த கிழவி தான் என்னைய பத்தி ஏதோ சொல்லிருக்கு. அதான் தூரமா நிக்குறாளா? க்கும் இவ பெரிய உலக அழகி?! இவ வந்து பக்கத்துல நிக்கலன்னு தான் நாங்க இங்க உருண்டு உருண்டு அழுகுறோம் பாரு?!’ என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டவன், சட்டைக்கு கஞ்சி போட்டது போல் விரைப்பாக நின்று கொண்டான். 

 

“எப்பா ஃபோட்டோகிராஃபர் இங்க வாப்பா. இவங்க தான் பொண்ணு மாப்ள. இப்போ ஏதோ சூட் சொல்லுவாங்களே?! ஹஹ அவுட்டோர் சூட். அதை கொஞ்சம் நல்லா எடுத்துக் கொடுப்பா. நாளைக்கு காலம் பூரா வைச்சுப் பார்க்கப் போறது. நல்லா நெருக்கமா வைச்சு எடுத்துக் கொடு.” என்று புகைப்படக்கலைஞரிடம் கூறிய மரகதவல்லியை கொலைவெறியோடு பார்த்தான் ராக்கி.

 

“இதோ ஆரம்பிச்சுட்டான்ல. இன்னைக்கு கிழவி டெட்பாடி கன்ஃபார்ம்” என்று வாயிற்குள் முணுமுணுத்து கொண்டார் வேலுநாச்சியார். 

 

“அப்படியே ரெண்டு பேரும் பக்கத்துல வாங்க. உங்க வொய்ஃப்பை அணைச்சு நில்லுங்க சார்.” என்று புகைப்படகலைஞர் கூறியதும், தன்னை விட்டு பத்தடி தள்ளி நிற்பவளின் கையைப் பிடித்து இழுத்து, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன், அவளது இடையோடு கையிட்டு இறுக்கியதும், அவனது கையணைப்பில் இருந்த ஆருஷாவிற்கு மூச்சு நின்று போனது போல் இருந்தது. ராக்கி இறுக்கி அணைத்ததும் நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தவளின், விழிகளின் கண்ணிமையில் கரைந்து போனான் ராக்கி. இன்னும் இன்னுமென ஆளை உள்ளே இழுக்கும் புதைகுழியென அவளது விழிமொழியில் தொலைந்து போனான் ராக்கி.

 

“பர்ஃபெக்ட்” என்ற புகைப்படகலைஞரின் குரலில் இருவரும் விலகி நின்றனர். 

 

“சார் அடுத்ததா நீங்க உங்க வொய்ஃபை அப்படியே கைல ஏந்திட்டு நிக்குற மாதிரி போஸ் வேணும் சார்.” என்று கூறியதும், ஆருஷாவை திரும்பிப் பார்த்தவன் பார்வைக்கு பத்தடி தள்ளி நின்று தரிசனம் கொடுத்தாள் ஆருஷா. 

 

“இவளை?” என்றவன், அவளருகில் சென்று தனது இரு கைகளில் அவளை அல்வா துண்டாக தூக்கியவனைப் பார்த்த வேலுநாச்சியார்,

 

“பொண்டாட்டிய அழகா பூமாதிரி தூக்குன்னா, டபுள்யூ டபுள்யூல ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்கு தூக்குற மாதிரி தூக்குறான்.” என்றவரை முறைத்துப் பார்த்தான் ராக்கி. 

 

“அய்யய்யோ பயபுள்ள காதுல விழுந்துடுச்சு போலவே, நாச்சி அவன் உன்னைய பிச்சி போடுறதுக்குள்ள இங்கிருந்து ஓடிடு..” என்று முணங்கிக் கொண்டே அங்கிருந்து சென்றார் வேலுநாச்சியார். 

 

“சார் அப்புறம் இப்படி சுத்தி, இப்படி இழுத்து அணைக்குற மாதிரி போஸ்.” என்று புகைப்படகலைஞர் கூறியதும் போல் செய்ய முனைந்தவனின் போக்கிற்கு வரமறுத்தாள் ஆருஷா. இதனைப் பார்த்த புகைப்படகலைஞர்,

 

“அப்படியில்லை சார்; இது பாருங்க இப்படி.” என்று ஆருஷாவின் கைபிடிக்க போக, மேல் மாடியிலிருந்து தோட்டத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலுநாச்சியார்,

 

“போச்சு போச்சு! கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல. எலி ஏன் வாண்டட்டா போயி பொறில சிக்குதுன்னு தெரியலையே?! பாவம். யார் பெத்த பிள்ளையோ? அநியாயமா சாகப் போகுது.” என்று அவர் கூறி முடிக்கும் முன் அந்த புகைப்படகலைஞர் அடி வாங்கிக் கீழே கிடந்தான். 

 

“யார் பொண்டாட்டி மேல கை வைக்கப் போற? ஷி இஸ் மைன்.” என்றவன் தன்னருகில் இழுந்தவளின் கைப் பிடித்து இழுத்து சுத்தி விட்டவன், சுத்தியவளின் இடையை வளைத்து பிடித்து இறுக்கிக் கொண்டான். 

 

“வலிக்கின்றது அய்யனே!”

 

“வலிச்சா பொறுத்துக்கோ. அப்புறம் இந்த அய்யனே! அன்பரே! சொல்லிட்டுத் திரிஞ்ச” என்றவன் அவளது இதழ்களை சிறைப்பிடிக்க வர, அவனிடமிருந்து சட்டென விலகினாள். அவளது நினைவில் வேலுநாச்சியார் கூறிய மாயஜாலக்காரன் என்ற வார்த்தை அச்சமயம் ஞாபகத்தில் வந்து போனது. ராக்கியை தன்னால் இயன்ற மட்டும் தள்ளியவள், அங்கிருந்து ஓட முயற்சித்தவளின் கையைப் பிடித்து வன்மையாக பின்புறமாக மடக்கினான். 

 

“யார்கிட்ட முகம் திருப்புற? நான் ராக்கி டி. ஊரே என்னைப் பார்த்து நடுங்குது. நீ முகம் திருப்புற. ரெடியா இருந்துக்கோ. இன்னைக்கு நைட் நீ எப்படி முகம் திருப்புறேன்னு பார்க்குறேன்.” என்றவனை மிரளப் பார்த்தாள் ஆருஷா.

 

இவையனைத்தையும் மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்த வேலுநாச்சியார், “ஊருக்கே பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்ட தான்டா” என்ற பஞ்சடித்துவிட்டு சென்றார். திடீரென ராக்கிக்கு கைபேசியில் அழைப்பு வரவே, அங்கிருந்து உடனே கிளம்பி சென்று விட்டான். சென்னையின் எல்லையை தாண்டி ஏதேனும் உள்ளே வர வேண்டும் என்றாலோ வெளியே செல்ல வேண்டும் என்றாலோ அது ராக்கிக்கு தெரியாமல் நடக்காது. ஆதலால் தான் அவனைத் தேடி வந்திருந்தான் விராட் மல்கோத்ரா. தொடக்கத்தில் இவனிடம் இருந்து வேலை செய்த ராக்கி, பிறகு தனக்கென சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டான். ஊருக்கு அவன் செய்யும் தொழில் தோல் பதனிடுதல் மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்வதாகும். உண்மையில் அவன் செய்யும் தொழிலை கண்டுபிடிக்கவோ, அதனை நிரூபிக்கவோ இன்னும் எவரும் பிறக்கவில்லை. 

 

துறைமுகத்திற்குள் நுழைந்ததும் வழக்கமாக தான் எடுக்கும் படகை எடுத்துக் கொண்டு நடுக்கடலில் தனக்கிருந்த கப்பலை நோக்கிச் சென்றான் ராக்கி அலைஸ் ராதாகிருஷ்ணன். 

 

“வணக்கம்! வணக்கம்! ராக்கி பாய்! எப்படி இருக்கீங்க?”

 

“எனக்கென்ன ரொம்ப நல்லாருக்கேன். வந்த விஷயத்தை சொன்னா நல்லாருக்கும்.”

 

“அது அது வந்து ராக்கி பாய்.. நீங்க எடுத்துட்டு வந்துருக்கீங்களே ஒரு பொக்கிஷப் பெட்டி. அது நம்மளுக்கு வேணும். அதுக்கு எவ்ளோ வேணாலும் டீல் பேசிக்கலாம்.”

 

“எந்த பெட்டியப் பத்தி பேசுறீங்க? ம்ம்.. எனக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குதே. ஹேய் சின்னா!”

 

“மாப்ள!”

 

“உனக்கு அந்த பெட்டியப் பத்தி எதுவும் தெரியுமா?”

 

“எனக்கும் தெரியலையே மாப்ள. விராட்ஜி அந்த மாதிரி கனவு கினவு கண்டுருப்பாரோ?!

 

“யாருக்குத் தெரியும்? பார்த்தீங்களா விராட் ஜி! கடல்லயே இல்லையாம்; இல்லாத ஒன்னை கேட்டா நான் எங்க போறது? அடுத்த தடவை நல்லா விசாரிச்சுட்டு வாங்க.”

 

“ராக்கி! என்னைய பத்தி உனக்கு எதுவும் தெரியாது. உன்னோட எல்லை இந்த தமிழ்நாடு வரைக்கும் மட்டும் தான். ஆனா எனக்கு ஆல் ஓவர் இந்தியாவுல தெரியாத ஆளே இல்ல.”

 

“விட்டா, பிரதமருக்கு பக்கத்து வீட்டுக்காரர்னு சொல்வீங்க போல?! ஹேய் சின்னா! நாம யாருன்னு சாருக்கு கொஞ்சம் டெமோ காண்பி.” என்று ராக்கி கூறிய மறுநிமிடம் விராட் மல்கோத்ராவின் ஆட்களை சுட்டு, அவர்களை கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, மல்கோத்ராவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் ராக்கி.

 

“யார்கிட்ட வந்து யாரு சீனைப் போடுறது? என்னமோ ஆல் ஓவர் இந்தியால ஆள் இருக்குன்னு சொன்ன?! உனக்கு ஒரு நிமிஷம் டைம் தர்றேன். இந்தா என்னோட ஃபோன், யாரை வேணாலும் கூப்பிடு. நான் இங்க தான் இருப்பேன். முடிஞ்சா என்னையத் தாண்டி போய் பாரு.” என்றவனின் கண்ணில் அனல் தெறித்தது. அவன் கையில் இருந்த கைப்பேசியை எடுத்து மல்கோத்ரா அழைத்த அத்தனை இடங்களிலும் ஒரே பதில் வந்தது, “சாரி ராங் நம்பர்.” என்று. பயத்தில் முகம் வெளிற அந்த கைப்பேசியை ராக்கியிடம் நீட்டிய விராட் மல்கோத்ராவை பார்த்த ராக்கி,

 

“அச்சச்சோ! யாருமே போனை எடுக்கலையா? இப்ப என்னப் பண்ணப் போறீங்க? உங்களைப் பார்த்தாலும் பாவமாத் தான் இருக்கு.” என்றவன் ஆக்ரோஷமாக மல்கோத்ராவின் அருகே வந்து,

 

“ஆனா இது என்னோட கோட்டை. இங்க எது பேசுறதுனாலும் என்னோட பர்மிஷனோட தான் பேசணும். இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சுவிடுறேன். இதே மாதிரி ஏதாவது பெட்டி வேணும், ஆட்டுக்குட்டி வேணும்னு வந்த?” என்று சீறியவன், சட்டென சிரித்துக் கொண்டே அவரின் உடையை சரிசெய்தபடியே,

 

“உன்னோட விதிய நான் எழுதுற மாதிரி பண்ணிடாத. உயிர் முக்கியம். போனா வராது.” என்றவரை அனுப்பி வைத்தான். 

 

“மாப்ள, இவனை அப்படியே அனுப்பிட்டியே?! அடிபட்ட பாம்பை கொல்லாம விடக்கூடாது; அப்படி விட்டா நம்மள திரும்பி வந்து கொத்தத்தான் பார்க்கும்.”

 

“பயப்படுறியா சின்னா?!”

 

“அதுக்கில்ல முன்னாடியாவது நீ தனியா இருந்த. இப்போ உன்னை நம்பி என் தங்கச்சி இருக்கா. எது செய்றதா இருந்தாலும் பார்த்து செய்யி மாப்ள.”

 

“டேய் மச்சி! வீரனுக்கு சாவுங்குறது ஒருநாள் தான் வரும். பயந்தவனுக்கு தினம் தினம் சாவு தான். நான் வீரன் டா. இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாளுற எனக்கு, உன் தங்கச்சி; அதான் என் பொண்டாட்டிய பார்த்துக்க தெரியாதா? பார்த்துக்கலாம்.” என்றவனை உள்ளே கவலையிருந்தாலும் வெளியே சிரித்த முகத்துடன் நின்றிருந்தான் சின்னா. அங்கிருந்து தன் இடத்திற்கு வந்த விராட் மல்கோத்ரா, அடிபட்ட புலியைப் போல அங்கும் இங்கும் நடந்தான்.  

 

“எனக்கே உயிர் பயம் காட்டுறானா? டேய்!” என்று தன் அடியாளை அழைக்க, 

 

“ஹா பேம் சாப்!” என்றவன் வந்து நிற்க,

 

“அவனோட வீக்னெஸ் என்னடா? எங்க அடிச்சா அவனுக்கு வலிக்கும்? அவன் என்னோட உயிரை எடுத்துருக்கலாம்; ஆனா அவன் தொட்டது என்னோட ஈகோவை. இந்த விராட் மல்கோத்ரா பேரைக் கேட்ட கருவுல இருக்குற குழந்தை கூட அசையாது. அப்படிப்பட்ட என்னைய ஒரு பொடிப்பையன் இங்க.. இங்க.. நெத்தில கன்னை வைச்சு மிரட்டிட்டான். என் மேல மத்தவங்களுக்கு இருந்த பயம் போச்சு. என்னைய பார்த்தா பயந்து கையக்கட்டி நிக்குறவனெல்லாம் இப்போ எகத்தாளமா சிரிக்குறானுங்க. அதுக்கு காரணமான ராக்கியை ஏதாவது செய்யணும். அவன் உயிரோட இருக்கணும், ஆனா அவனுக்கு உயிர்வலின்னா என்னன்னு காட்டணும்.”

 

“பேம் சாப்! அவனுக்கு இப்ப தான் புதுசா கல்யாணம் ஆகிருக்குங்க. அதுவும் காதல் கல்யாணமாம். அவன் பொண்டாட்டிய அவன் கண்ணு முன்னாடியே கொன்னுட்டோம்னா, ஜென்மத்துக்கும் அதுல இருந்து அவனால எந்திரிக்க முடியாதுங்க. உசுரு இருந்தும் நடைப்பிணமுங்க.”

 

“சூப்பர் டா. இது எனக்கு புடிச்சுருக்கு. ஆனாப் பாரு, பொண்டாட்டியை மட்டும் கொன்னா, நல்லாருக்காதே; கூடவே புள்ளயையும் சேர்த்து பரலோகம் அனுப்பி வைச்சா? எப்படி இருக்கும்? சோகத்திலேயே பெரிய சோகம், புத்திர சோகம் காற்று சொல்லுவாங்க. ஒரு அடி அடிச்சாலும் மரண அடியா அடிக்கணும்; திரும்பி எந்திரிச்சு வரமுடியாத அளவுக்கு அடிக்கணும். ஓங்கி அடிச்சு சாய்க்க அவன் யானையில்லடா; பொறி வைச்சு காத்திருந்து பிடிக்க வேண்டிய சிங்கம். பொறி வையி; என்னைக்காவது நம்மக்கிட்ட மாட்டுவான்.” என்ற விராட் மல்கோத்ராவின் முகம் பயங்கரமாக மாறியிருந்தது. 

 

“காலன் காலமேறி வருவதற்குள், தன் கன்னிகையின் மனம் களவாடுவானா கரிகாலன்?”

 

அத்தியாயம் 8

 

“ஆருமா!”

 

“ம்ம்ம் சொல்லுங்கள் ராஜமாதா!”

 

“ஹேய் என்னதிது என்னைய ராஜமாதான்னு கூப்பிட்டு கிட்டு, கிருஷ்ணா என்னைய எப்படி பாட்டிற்கு கூப்பிடுறானோ, நீயும் அதே மாதிரி என்னைய பாட்டின்னே கூப்பிடு. சரியா?”

 

“ம்ம்ம் அப்படியே அழைக்கின்றேன் பாட்டி.”

 

“ஒரே தலைவலியா இருக்கு. கொஞ்சம் டீ போட்டு எடுத்துட்டு வர்றியா? வேலைக்காரிய ஒரு வேலையா கடைவீதிக்கு அனுப்பியிருக்கேன்.”

 

“இதோ கொண்டு வருகிறேன்.” என்று சமையலறைக்குள் ஓடியவளை பார்த்த வேலுநாச்சியாருக்கு தன் பேத்தி தான் ஞாபகம் வந்தது. 

 

‘ராஜமாதா, ராஜமாதான்னு என் முந்தானைய பிடிச்சுட்டே சுத்துவா? இப்ப எங்க என்ன கஷ்டப்படுறாளோ? இங்க இந்த மரகதவல்லி என்னன்னா டீதான் போட்டுட்டு வரச்சொன்னா, அதுக்குள்ள என்னவோ அனுமார் மாதிரி சஞ்சீவ் மலைய பெயர்த்து எடுத்துட்டு வரப்போற மாதிரி, சீன் போட்டுட்டு போறா. என் பேத்தி வாழ வேண்டிய வாழ்க்கை. அவளை நானே அநியாயமா தொலைச்சிட்டேனே! அந்த பெட்டிய மட்டும் என் ரூமுக்கு இழுத்துட்டு வராம இருந்திருந்தா,  இன்னைக்கு என் பேத்தி இங்க வாழ்ந்துருப்பா.’ என்று புலம்பியவாறே ஆருஷாவின் பின்னால் சென்றார். 

 

“இது என்ன பெட்டகம் போல் உள்ளதே?! இதில் எவ்வாறு தேநீர் கலப்பது?” என்று யோசித்தபடி நின்றிருந்தவள், விளையாட்டு போல் கேஸ்ஸ்டவ்வை திறந்துவிட்டு, லைட்டரை வைத்து அழுத்தப்போகும் முன் அவளை தடுத்திருந்தார் வேலுநாச்சியார். அடுப்பையும் அணைத்துவிட்டு, ஜன்னல்களை திறந்து விட்டு கேஸ் லீக்கானதை சரிசெய்தவர், 

 

“ஏய் உனக்கு தெரியலைன்னா, எங்கக்கிட்ட கேட்டு செய்ய வேண்டியது தானே? பெரிய இவளாட்டம் வந்து சாகப் போறியா? உனக்கு ஆண்டவன் கொஞ்சமாவது அறிவை கொடுத்திருந்தா தேவலை.” என்று திட்டியவரை பரிதாபமாக பார்த்தாள் ஆருஷா.

 

“மன்னிக்க வேண்டும் ராஜமாதா! நான் ஏதேனும் தவறிழைத்து விட்டேனா?” என்றவளைப் பார்க்க பார்க்க அவரது பேத்தியின் ஞாபகம் தான் வந்தது. இறையடியாருக்கு செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்வதைப் போலாகும். அது போல் இங்கு இருக்கும் ஆருஷாவிற்கு உதவினால் எங்கோ இருக்கும் தன் பேத்திக்கு யார் மூலமாகவோ உதவிகள் கிடைக்கலாம் என்று நினைத்த வேலுநாச்சியார்,

 

“அது அப்படியில்ல. இரு நான் வந்து சொல்லித் தர்றேன்.” என்றவர் அவளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 

 

“முதல்ல இந்த தூய தமிழ்ல பேசுவதை நிறுத்து.”

 

“வேறெப்படி பேசவது ராஜமாதா?”

 

“முதல்ல இந்த டீயை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்துட்டு வா. அப்புறம் சொல்லித் தர்றேன்.” என்றவர் டீ காப்பை ஆருஷாவின் கொடுத்தனுப்பினார். ஆருஷாவைப் பார்த்த மரகதவல்லி,

 

“இன்னைக்கு நைட் ரிசப்ஷன் இருக்குமா. இன்னும் கொஞ்ச நேரத்துல ப்யூட்டி பார்லர்ல இருந்து வந்துடுவாங்க. நீ ரெடியா இருந்துக்கோ.” என்று கூற, அவர் கூறிய எதுவும் தனக்கு புரியவில்லை என்றாலும் தலையாட்டி வைத்தாள் ஆருஷா. அவளின் அமைதியான முகத்தை பார்த்த மரகதவல்லி, “ரொம்ப நல்ல பொண்ணு.” என்று அவளது தலையை நீவி விட்டு சென்றார். இங்கிருக்கும் ஆருஷாவிற்கே உதவி செய்ய எண்ணினார் வேலுநாச்சியார்.  

 

‘கடவுளே! ஏதோ வேலை தெரிஞ்ச இந்த பொண்ணே இங்க இவ்வளோ கஷ்டப்படுதுனா, ஒன்னுமே தெரியாத என் பேத்தி அங்க என்ன கஷ்டப்படுறாளோ?’ என்று நினைத்தவர், ஆருஷாவிற்கு அங்கிருக்கும் நாகரீக பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தார். 

 

‘அய்யோ இப்பவே நாக்கு தள்ளுதே. இவளுக்கு சொல்லி கொடுக்குறதுக்குள்ள. என் மூச்சு நின்னுடும் போலவே!’ என்று சோர்ந்து போயிருந்தவர் முன்னே வந்து நின்றாள் ஆருஷா. 

 

“ராஜமாதா! நெக்ஸ்ட்?” என்று வந்து நிற்க, “எனக்கு ரெஸ்ட். இன்னைக்கு இவ்ளோ தெரிஞ்சுகிட்ட போதும். போ உன்னைய ரெடி பண்ண கீழ அவுங்க வந்துருக்காங்க. நீ போய் ரெடியாகிக்கோ.” என்று கூறிய வேலுநாச்சியார், தனது அறைக்கு எழுந்து சென்றார். 

 

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாலில் உலகின் மிக பெரிய பணக்காரர்களுக்கு மத்தியில் அமைதியாக நடந்தது ராக்கி மற்றும் ஆருஷாவின் வரவேற்பு விருந்து. பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக, ஆளை அசத்தும் அழகுடன் நின்றிருந்த ராக்கியின் அருகில் பூனைக்குட்டி போல் நின்றிருந்தாள் ஆருஷா. அழகிய சிவப்பு நிற சோலியில் மகாராணியின் கம்பீர அழகுடன் கொழுத்த மரக்கிளையை சுற்றும் கொடியை போல் ராக்கியை ஒட்டியே நின்றிருந்தாள் ஆருஷா. 

 

“ஹலோ ராக்கிபாய்!” என்று ஆர்பாட்டத்துடன் மேடையேறிய விராட் மல்கோத்ராவினைப் பார்த்து சிரித்தமுகமாக வரவேற்றான் ராக்கி. 

 

“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் மல்கோத்ரா ஜி.” என்று கூறியவனை அணைத்தவர், ராக்கியின் காதருகே மெல்லிய குரலில்,

 

“என்ன ராக்கிபாய் ரொம்ப அழகான பச்சைகிளியா பார்த்து பிடிச்சுருக்கீங்க. பாதிலயே பறந்து போயிடாம?” என்று கூற, அவரிடம் சிரித்துக் கொண்டே,

 

“மல்கோத்ராஜி உங்க வீட்டுல நீங்க ஆசையா வளர்த்தீங்களே, உங்க பச்சைக்கிளி, அது இன்னும் வீட்டுல இருக்கா? இல்ல பறந்து போயிடுச்சான்னு ஒருதடவை கேட்டுட்டு பேசுங்க.” என்று கூற, விராட் மல்கோத்ராவின் முகம் முழுவதும் வேர்வை வழிந்தது. 

 

“அய்யய்யோ! என்ன ஜி? இப்படி வேர்க்குது? ஹேய் சின்னா!”

 

“மாப்ள!”

 

“மல்கோத்ரா சாருக்கு வேர்க்குது பாரு. கூலா குடிக்க ஏதாவது கொடு. பாவம் எதையோ நினைச்சு பயந்துட்டாரு போல.” என்றவனை மிரண்டு போய் பார்த்தவர், தன் மனைவிக்கு அழைத்து தன் மகள் பத்திரமாய் வீடு வந்து சேர்ந்துவிட்டாளா? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மகள் பத்திரமாய் இருப்பதாய் கேள்விப்பட்டதும் தான் அவரால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. 

 

“ராக்கி பாய்! திரும்ப திரும்ப நீ என்னைய சீண்டி விட்டுட்டே இருக்க. இது உனக்கு நல்லதில்ல.” என்று முணுமுணுத்தவர் கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார். ராக்கியிடம் குலுக்குபவர்கள், ஆருஷாவிடமும் கைகுலுக்குவதற்காக கையை நீட்ட, அவர்களைப் பார்த்து பயந்து போனவள் ராக்கியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். தன்னை கேடயமாக பயன்படுத்துவளிடம் கோபத்திற்கு பதிலாக அவளை பாதுகாக்க வேண்டும் என்ற உரிமை உணர்வு மேலோங்குவதை உணர்ந்தான் ராக்கி. வரவேற்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டார் மரகதவல்லி. 

 

“பாட்டி அவ்வளவு தானா? இன்னும் ஏதாவது இருக்கா?” என்று கேட்டவனிடம்,

 

“இன்னைக்கு நாள் நல்லாருக்காம். உங்க ரெண்டு பேரோட பெயர் பொருத்தத்துக்கு ஏத்த நாளாம். அதுனால இன்னைக்கே சாந்தி முகூர்த்தத்தை வைச்சுக்கலாம்னு ஐயர் சொன்னாரு கிருஷ்ணா. நீ போய் ரெடியாகிட்டு வா.” என்று  வெட்கப்பட்டுக் கொண்டே கூறிய மரகதவல்லியை பார்த்த ராக்கி,

 

“பாட்டி, எனக்கு தானே ஃபர்ஸ்ட் நைட்? அதுக்கு நீ ஏன் புதுப்பொண்ணு மாதிரி இப்படி நெளியுற?” என்று கேட்க,

 

“போடா! என்னைய கேலி பண்ணலேன்னா உனக்கு தூக்கம் வராதே. நைட் ஒரு மணிக்கு தான் நல்ல நேரமாம். அப்போ ஆருவை உன் ரூம்க்கு அனுப்பி வைக்குறேன். இப்போ நீ உன் ரூம்க்கு போ.” என்றவரைப் பார்த்து இருபுறமும் தலையாட்டியவன்,

 

“டே அண்ட் டைம் சொல்லிட்டேல. மீதியை நான் பார்த்துக்குறேன். இன்னும் ஒரு வாரத்துக்கு எங்களை தேடாத.” என்று ராக்கி, தன்னருகே இருந்தவளை தூக்கி தன் தோளில் துண்டு போல் போட்டவனிடம் இருந்து திமிறியவளை அடக்கியவன், அவளை தன் காரில் தள்ளி, தனது துறைமுகத்தில் இருக்கும் கப்பலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கப்பலின் மேல் தளத்தில் பாதுகாப்பிற்கென்று இருவரும், கப்பலை இயக்குவதற்கென்று ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை. கீழ் தளத்தில் இருக்கும் அலங்கரிக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் பொத்தென ஆருஷாவை தூக்கிப் போட்டான் ராக்கி. பட்டு போல் மென்மையாக இருந்த பெட், அரையடிக்கு அவளை உள்ளே வாங்கி மேலே தூக்கிப் போட, சேலை மறைவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி முன்னால் வந்து விழுந்தது. அதனை கண்டவனுக்கு இவள் என்றவள்; எனக்கு மட்டுமே உடைமையானவள் என்ற எண்ணம் தோன்ற, அவள் மீது அப்படியே கவிழ்ந்தான் ராக்கி. 

 

“நாதா! நாதா! ஒரு நிமிடம். நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.” என்றவளின் சேலையை பிடித்திழுத்தான்.

 

“நீ சொல்லு. நான் கேட்டுகிட்டே இருக்கேன்.” என்றவன் அவளது மெல்லிய கொடியிடையை அழுத்தியவன், அவளது கழுத்தில் முகத்தை புதைத்து, அவள் தலையில் வைத்திருக்கும் மல்லிகைப் பூவை வாசம் பிடித்தான். அவனை விலக்கிய ஆருஷா, பேச வாயெடுப்பதற்குள் அவளின் இதழ்களை கவ்வி கொண்டான் ராக்கி. நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விடுவித்தவன், அவளது மேனியை தன் கை கொண்டு மயிலிறகை போல் வருடினான்.

 

“என்ன போட்டுடி குளிப்ப? இப்படி மெது மெதுன்னு இருக்குது. தொட்டா அப்படியே வலுக்கிட்டுப் போகுது.” என்றவன், அவளது கூந்தலுக்குள் முகத்தை நுழைத்து அதில் வரும் வாசத்தை நுகர்ந்தான்.

 

“ஆமா நீ என்ன ஷாம்பு போட்டு குளிப்ப? சும்மா ஆளை தூக்குது.” என்றவனின் கைகள் மெல்ல மேலேற, அவனுக்கு அடியில் கிடப்பவளுக்கு மூச்சு திணறியது. அவளுக்கு அவனிடம் சில விஷயங்களை பற்றி பேச வேண்டும். அதற்காக அவள் அவனை விலக்கி விட முயற்சிக்க, அவனோ அவளின் கழுத்தின் பின் புறம் முத்தமிட்டு கொண்டே, அவளின் தேகத்தை தன் விரலால் தீண்டி வருடியவனின் ஸ்பரிசம் பட்டதும், கூச்சம் கொண்ட மங்கையவளின் கைகள் படுக்கையை சுருட்ட, அவளின் செவ்வரியோடும் இதழ்களை தன் கை விரல்களால் பிடித்துப் பார்த்தவன்,

 

“உன்னோட உதடு இருக்கே, அப்படியே மென்னு சாப்பிடணும்னு போல் இருக்குடி.” என்றவனின் இதழ்கள், அவளது கீழிதழை மெல்ல கடித்திழுத்து அதில் இருந்த தேனை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சின. 

 

“ரத்தம் பித்தமாகி உச்சியில் ஏற வைக்கும் வித்தையை மன்மதனிடம் இருந்து கற்று வந்தீரோ?!” என்று நினைத்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டே, தன் மடியில் தூக்கி அமர வைத்தவன், கண்முன்னால் கூர்மையான கத்தியை போன்றிருந்த இரட்டை கோபுரத்தில் தன் முகத்தை வைத்து தேய்க்க, மங்கையவள் உதடுகளும் கூச்சத்தில் நடுங்கின, மன்னவனின் பெயரைச் சொல்லி. பாலாடை மேலிருக்கும் மேலாடைகள் அனைத்தையும் விலக்கியவனை கண் கொண்டு பார்க்க முடியாது, வெட்கத்தால் தன் முகம் மூடிக் கொண்டவளின் மடியோடு கையிட்டு அமுதகலசத்தில் இருந்து அமுதுன்ன வருமா? என்று தன் அதரங்கள் கொண்டு சோதித்தான். 

 

அவளின் மெல்லிய தேகத்தை தன் கருங்கல்லைப் போன்ற தேகத்தோடு மோதச் செய்தான். தங்களின் பற்தடங்களை இனிய இல்லறத்தின் அடையாளமாக இருவரும் பதித்தனர். அலையோசைக் கேட்டவாறே, நிலையில்லாமல் மோகத்தில் தத்தளித்த மங்கையவளின் தேக கப்பலில் தனது இயக்கத்தை எங்கு தொடங்கி எங்கு முடிக்க என்று ஏதும் அறியாது தயங்கி நின்ற மன்னவனின் கையோடு தன் கையை கோர்த்து கொண்டவள், சிறந்த மாலுமியாக அவனது இயக்கத்திற்கு வழிகாட்டினாள் பெண்ணரசி. தன் கணவனிடம் பேச பல விஷயங்கள் இருந்தாலும், அவனது தேவையே அவளது நினைவில் இருந்தது. தன் கணவன் தனக்காகக்கூட ஏங்கி நிற்கக்கூடாதென நினைத்தாள். 

 

‘இவன் என் தலைவன்! என்ன ஆனாலும் என் விதி என் மன்னவனோடு தான். இவ்வுயிர் இருக்கும் வரைக்கும் என் மன்னவனின் தோளில் மாலையாவேன்!’ என்றெண்ணியவள் மோகப்புயல் காற்றாய்‌ மாறி அவனை சுழற்றி அடித்தாள். மன்னவனின் மேல் படரும் வஞ்சிக் கொடியாய் ஆனாள். அவனின் வயிற்றினின்றும் கீழ் அமர்ந்து, அவன் மீது சவாரி செய்தவள், தன் மன்னவனின் முகத்தை ஆசை தீர தொட்டுப் பார்த்தாள். அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். ஒரு பெண்ணால் ஆளப்படும் போது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு வேறெதுவும் இல்லை என்று அவனை எண்ணி வைத்தாள். கட்டிய மனைவி தாசியைப் போல் மாறி தன் கணவனை ராஜனைப் போல் உணர வைத்தாள். அவனின் பரந்து விரிந்த மார்பினை தன் முத்தங்களால் நிறைத்தவள், அவனை மொத்தம் தொடாமல் உச்சம் தொட வைத்தாள்.  

 

கடவுள் ஒரு ஆணின் முதுகெலும்பில் இருந்து தான் அவனுக்கு இணையாகும் பெண்ணை உருவாக்குவாராம். அவளிடம் தான் அவனது ஆசைகள் அடங்கி, அமைதி பெறுமாம். ராக்கியின் உயிர், உடல் அனைத்திலும் கலந்தாள் ஆருஷா. அவளது அழகில் ஈர்க்கப்பட்டிருந்தாலும், ஒரு மனைவியென தன் முன்னால் அனைத்தையும் தன்னிடம் ஒப்புக் கொடுத்து நிராயுதபாணியாக நின்று, தனக்கு சேவை செய்பவளை ஒரு நிமிடம் கூட விட்டு பிரிந்திருக்க ராக்கியால் முடியவில்லை. 

 

தன் அதிரடியை தாங்க முடியாத, அவளின் வலியை தன் வலியாக ஏற்று ஒரு கண்ணாடி பொருளைப் போன்று அவளை கையாண்டான் ராக்கி. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட வலியை தன் முத்தங்களால் துடைத்தான். அவளது மேனியெங்கும் இதழால் வருடியவனுக்கு தன்னாலான அத்தனை சுகங்களையும் வாரி கொடுத்தாள் ஆருஷா. அவளது மேனியில் இருக்கும் பொக்கிஷங்கள் அனைத்தும் கணவன் என்னும் கள்வனால் களவாடப்பட்டது. 

 

உலகத்தில் உள்ள உறவுகளில் கணவன் மனைவி எனும் உறவு புனிதமான உறவாகும். திருமணம் எனும் பந்தத்தில் தான் கணவன் மனைவி உறவு வலுப்படுகிறது. எமனின் பாசக்கயிற்றால் கூட தன் இணையை தொட முடியாத பாதுகாப்பை அளிக்கும் பந்தம் திருமண பந்தம். உனக்கென நான்; எனக்கென நீ என்று காலங்ககாலமாய் தொட்டு தொடரும் சொந்தம்- கணவன் மனைவியின் உயிர்நேசம். 

 

அத்தியாயம் 9

 

கடல் காற்று இதமாய் வீச, நிலவொளி உத்தரவின்றி உள்ளே வந்து அவர்கள் இருவரும் இருக்கும் நிலையை உளவு பார்த்து சென்றது. பொம்மையென தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மன்னவனின் முகம் பார்த்தபடியே அவனது அணைப்பிற்குள் படுத்திருந்தாள் ஆருஷா. 

 

‘இங்கு என்ன நடக்கின்றது? தன்னுடைய ஜனன நேரக்குறிப்பேட்டை பார்த்து சித்தர் கூறியது இன்னும் அவளது காதில் ஒலிக்கின்றதே! கன்னியவளை மஞ்சத்தில் வென்றதும் மன்னவனைத் தேடி காலன் வருவான் என்றாரே! எவ்வாறு இவர் உயிரை மீட்பேன்?’ என்று நினைத்தவளை வருடிச் சென்றது கடல்காற்று. ‘ 

 

இந்த வாக்கிற்காக தானே அவள் பயந்தது. தன்னை அணைத்தப்படி உறங்கும் ராக்கியின் தூக்கம் கலையாது மெல்ல எழுந்தவளை விடாது ராக்கி அணைக்க, புழுவாய் நெளிந்து அவனிடமிருந்து விலகியவள், அங்கிருக்கும் போர்வையை தன் நெஞ்சு வரை கட்டிக் கொண்டு படுக்கைக்கு அருகே இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே தெரிந்த நிலவினை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. நள்ளிரவில் தன் அருகில் இருந்தவளை தேடிய ராக்கி, அவள் கைக்கு சிக்காததினால் எழுந்தமர்ந்தான். தன் கண்களை தேய்த்தவன், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். அதில் அவனது கைகள் இரண்டிலும் குட்டி குட்டி மலைகள் போன்ற சதைகோளங்கள் தோன்ற, தன் கணவனின் ஆணழகை ரசித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஆருஷா. திரும்பி அவளைப் பார்த்தவன்,

 

“ஏய் அங்க ஏன் டி பேய் மாதிரி போய் உட்கார்ந்துருக்க? நடுராத்திரியில் இப்படி கொட்ட கொட்ட முழிச்சுட்டு உட்கார்ந்துருக்க! என்னாச்சு? உடம்பு சரியில்லயா?” என்று தன்னவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான் ராக்கி.

 

“இல்லயே! உடம்புல காய்ச்சல் வந்த மாதிரி தெரியலையே?! ஏன் இப்படி உட்கார்ந்துக்குற? ஒரு வேலை உனக்கு தூக்கம் வரலையோ? என் செல்லாக்குட்டி! தூக்கம் வரலைன்னா, இந்த மாமனை தேடி வர வேண்டியது தானே?!” என்றவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு சென்றவனின் நெஞ்சில் தலைசாய்த்தவள்,

 

“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றவளின் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான். அவன் கண்களில் தெரிந்த தவிப்பை புரிந்து கொண்டான். 

 

“உனக்கு என்னடி பிரச்சனை? நீயும் கஷ்டபட்டுட்டு என்னையும் இப்படி படுத்துற? எதுவுவா இருந்தாலும் சொல்லு டி.”

 

“நாதா! நான் இவ்வுலகில் பிறந்து வளர்ந்தவள் அல்ல.”

 

“அப்புறம் வானத்துல இருந்து குதிச்சு வந்தியா? ஏன்டி உலர்ற?”

 

“நான் உண்மையைத் தான் கூறுகின்றேன் நாதா. நான் பல நூறு வருடங்களுக்கு முன்னால் இருந்து இங்கு வந்திருக்கின்றேன்.”

 

“ம்ம்ம்.. இந்த கதையும் நல்லாத்தான் இருக்கு. மேல சொல்லு.”

 

“இது கதையல்ல நிஜம்.”

 

“அட நீயும் அந்த ப்ரோக்ராமெல்லாம் பார்ப்பியா?” என்றவனை புரியாது பார்த்தாள் ஆருஷா. 

 

“சரி மேல சொல்லு. அப்போ உன்னோட ஊர் எது? உன்னோட அப்பா அம்மா யாரு?”

 

“நான் தென்குமரி முனையில் இருக்கும் சிற்றரசர் மதிவாணனின் ஐந்தாவது புதல்வி. எனக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக ஆஸ்தான ஜோதிடர் கூறினார். அதனை கேட்ட எனது தந்தை, அந்த உண்மையை மறைத்து எனது மாமன் கருணாகர பாண்டியனுக்கு மணமுடித்து வைக்க நினைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை. தந்தையிடம் எவ்வளவோ கூறினேன். அவர் துளியும் என் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அதன்பிறகு தான் பாதாள பைரவி கோவிலில் இருக்கும் கிணற்றில் குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தேன். அதில் குதித்தது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருந்தது. அதன் பிறகு நடந்த எதுவும் எனக்கு ஞாபகமில்லை. கண்ணை திறந்து பார்த்தால் எதற்குள்ளோ அடைபட்டு இருந்தேன். ராஜமாதா தான் திறந்து விட்டாங்க. அப்போ தான் உங்க ஆளுங்க வந்து எங்களை தூக்கிட்டு வந்துட்டாங்க.”

 

“வாவ்! சூப்பர் கதையா இருக்கு. நான் வேணா ப்ரடியூசராகி இதை படமா எடுக்குறேன். இதுக்காகவா தூங்காம உட்கார்ந்துட்டுருக்க? வா வந்து தூங்கு. ரெஸ்ட் எடுக்கலேனா, உடம்புக்கு முடியாம போயிடும்.” என்றவளை தன் நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்தவனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்த ஆருஷா,

 

“நான் சத்தியமா உண்மையை தான் சொல்கிறேன்.” என்று கூற,

 

“இப்போ உனக்கு நான் நம்பணும். அவ்வளவு தானே?! நம்பிட்டேன். போதுமா? அமைதியா தூங்கு.” என்றவன் அவளின் நெற்றில் முத்தமிட்டு மென்மையாக அணைத்துக் கொண்டான். நள்ளிரவைத் தாண்டி விடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, கப்பலில் யாரோ நடமாடும் சலசலப்பு சத்தம் கேட்க தூங்கிக் கொண்டிருந்த ராக்கி, மெல்ல எழுந்தவன், தன் அருகில் படுத்திருந்த ஆருஷாவின் இதழில் மென்மையான இதழொற்றலை வழங்கினான். பின்னர் அறையைப் பூட்டியவன், தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மேல் தளத்திற்கு சென்றான். அங்கிருந்த பலகையின் மேல் அமர்ந்து கொண்டவன்,

 

“டேய் கோழை மாதிரி ஒளிஞ்சுட்டு இருக்குறவனெல்லாம் இப்பவே முன்னாடி வந்துட்டேனா, ஒரு அடில பரலோகத்துக்கு போயிடலாம். இல்லன்னா என்னை சாவடிச்சுடுங்கன்னு நீ கெஞ்சுற வரைக்கும் அடிப்பேன்.” என்றவனின் பின்னால் இருந்து ஒருவன் ஓடி வந்து தாக்க நினைக்க, தன் ஒரு கையை பின்னால் நீட்டி, அவனின் கழுத்தைப் பிடித்து தூக்கி நச்சென்று தரையில் அடிக்க, அதே இடத்திலேயே தாக்க வந்தவனின் உயிர் பிரிந்தது. ராக்கியின் இரு பக்கங்களிலும் இருந்து அருவாளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை கூர்மையாக பார்த்தவன், சரியாக அவர்கள் தன்னை நெருங்கும் நேரத்தில், தன் கைகளைக் கொண்டு அருவாளை தட்டிவிட்டவன், அவர்களின் தலைகளை பிடித்து ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் மோதச் செய்தான்.  

 

“ஏன்டா ஒருத்தர் ஒருத்தராத்தான் வருவீங்களாடா? ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச டயர்ட்ல இருக்கேன் டா. சீக்கிரம் வந்தீங்கன்னா, மொத்தமா முடிச்சுட்டு திரும்பவும் தூங்க போயிடுவேன்.” என்றவனை நோக்கி தோட்டாக்கள் பாய்ந்து வர, அதிலிருந்து லாவகமாக விலகியவன், தோட்டாக்கள் வந்த திசைகளை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டான். அவன் வைத்த குறி தவறாது இலக்கை எய்திட மறைந்திருந்து தாக்கியவர்கள் அனைவரும் மாய்ந்து போயினர். தன் அறையில் இருந்து ஆருஷா கதவை தட்டும் ஓசை கேட்டு, அங்கு சென்ற ராக்கி, கதவை திறந்ததும், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல் ராக்கியின் நெஞ்சில் மோதினாள் ஆருஷா. 

 

“என்ன சத்தம் கேட்டது? எதிரிகள் தாக்கினரா? உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே!” என்று தவிப்புடன் அவனது மேனியை ஆராய்ந்த ஆருஷாவை பிடித்து தன்னை நோக்கி நிறுத்தியவன்,

 

“ஆரு! பேபி! இங்கப்பாரு. எனக்கு ஒன்னும் இல்லடி. எதுக்கு வீணா கவலைப்படுற?” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென தோட்டா ஒன்று அவர்களை தாக்க வர, தனக்கு எதிரே இருந்த கண்ணாடியில் அதை பார்த்தவன், ஆருஷாவை நெஞ்சோடு அணைத்தபடியே சட்டென விலகினான் ராக்கி. தனது துப்பாக்கியை எடுத்து சரியாக தோட்டாவை, சுட்டவனின் தலைக்கு குறி வைத்து சுட்டான். அதுவும் தனது இலக்கை தவறாது சென்றடையவே, மீதிருந்த ஒருவனும் அழிந்து போனான். 

 

“ஆரு! உனக்கொன்னும் ஆகல தானே?” என்று தன் உயிரானவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தான். அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்று உணர்ந்த பிறகு தான் நிம்மதியடைந்தான். 

 

“நாதா! இது என்ன ஊதும் குழலா?” என்று துப்பாக்கியைப் பார்த்து கூறுபவளை வித்தியாசமாக பார்த்தான் ராக்கி. 

 

“ஏன்டி இது உனக்கு ஊதும் குழலா? முதல்ல ஊதும் குழல்னா என்னன்னு சொல்லு.”

 

“அது எரியும் அடுப்பில் இப்படி வைத்து ஊதுவார்களே?! அதுவா?!” என்று தன் இதழ்களை குவித்து குழந்தை போல் கேட்டவளைப் பார்த்து சிரிக்க தோன்றியது. 

 

“ஹேய் பேபி! இது அடுப்பு ஊதுற குழல் இல்ல. ஆளையே தூக்குற குழல். இதை இப்படி வைச்சு ஒரு அழுத்து அழுத்துனா, எதிர்ல இருக்குறவன் செத்தான்.” என்று கூறியவன், அவள் தலையில் கை வைத்து, அவளது முடியை குலைத்தவாறே சிரித்துக் கொண்டிருக்கும் போது அவனது கைபேசி சிணுங்கியது. அதனை காதில் வைத்தவன் அதிர்ந்து போனான்.

 

“வாட்?! எப்போ? எங்க?!” என்று கேட்டவனின் பதற்றம் அவளையும் தொற்றிக் கொண்டது.

 

‘அய்யோ யாருக்கு என்னாச்சோ? இறைவா! நீங்க தான் யாருக்கும் எதுவும் ஆகாம பார்த்துக்கணும்.” என்று வேண்டிக் கொண்டிருந்தவளை திரும்பி பார்த்தவன்,

 

“சரி கிளம்பு! நாம் இப்போ வீட்டுக்கு போகணும்.”

 

“ஏன் என்னாச்சு? ராஜமாதாக்கு ஏதாவது ஆகிடுச்சா?”

 

“உன்னோட ராஜமாதாக்கு ஒன்னும் ஆகல. போற உயிரு எண்பதுல போனா தப்பில்ல. ஆனா என்னோட முக்கியமான பொருள் ஒன்னு காணாம போச்சு. அதை நினைச்சா தான் டென்ஷனா இருக்கு.”

 

“என்னது அது?”

 

“ஹூம் நீ எதுக்குள்ள இருந்து வந்தேன்னு சொன்னியோ, அந்த பெட்டியைத் தான் தூக்கிட்டுப் போயிருக்காணுங்க.” என்றவன் கூறிய அடுத்த நொடி, ராக்கியின் முன் அதிர்ந்து போய் நின்றிருந்தவள்,

 

“அந்த பெட்டிகள் வேணும் நாதா! அவைகள் இல்லையெனில் நான்.. எனது உலகத்திற்கு திரும்பிச் செல்ல இயலாது. தயவுசெய்து அதனை மீட்டு வாருங்கள்.” என்று கூற,

 

“ஏய்! நாடகபாணில பேசாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லிருக்கேன்? என்னோட பொருளை யார் தொட்டாலும் எனக்கு பிடிக்காது. என்னோட பொருளை வைச்சுருக்கணுமா? இல்லை தூக்கிப் போடணுமா? அதை விற்கணுமான்னு நான் தான் முடிவு பண்ணணும். இவன் யாரு முடிவு பண்றதுக்கு? வர்றேன் டா மல்கோத்ரா.” என்றவன் ஆருஷாவை மீண்டும் அங்கிருந்து இழுத்து வந்து மரகதவல்லியிடம் தள்ளிவிட்டு தன் பொருளை மீட்க சென்றான். 

 

“ஆரு!” என்று வேலுநாச்சியார் அழைக்க,

 

“ராஜமாதா..” என்று அழுதவாறே வேலுநாச்சியாரை கட்டிக் கொண்டான் ஆருஷா. நடந்தவற்றை தங்களது ஆட்கள் மூலம் அறிந்து வைத்திருந்தார் மரகதவல்லி. ஆதலால், நடந்த சம்பங்களால் தான் ஆருஷா பாதிக்கப்பட்டு அழுகின்றாளோ? என நினைத்தவர்,

 

“ஆரு! நீ இதையெல்லாம் பார்த்து ரொம்ப பயந்துருப்ப. என் பேரன் கொஞ்சம் முரடன் தான். அவன் ரொம்ப நல்லவனும் இல்ல; ரொம்ப கெட்டவனும் இல்ல. அவனுடைய கொள்கைகளுக்கு அவன் நியாயமானவன். ஒன்னு மட்டும் சொல்றேன். என் பேரனுக்கு எந்த பொண்ணுகூடயும் பழக்கம் கிடையாது. கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோம்மா.” என்றவர் வேலுநாச்சியாரைப் பார்த்து,

 

“நீங்க வாழ்ந்து முடிச்சவங்க. வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு நிறைய இருக்கும். கொஞ்சம் சொல்லி புரிய வைங்க.” என்று கூறி அங்கிருந்து சென்றார். அவர் செல்லும் வரை பொறுத்திருந்த வேலுநாச்சியார், மரகதவல்லி அந்தப்பக்கம் சென்றதும், 

 

“ஏய் என்னடி ஆச்சு? எதுக்கு இப்படி அழுகுற? எல்லாம் முடிஞ்சுடுச்சா?” என்று கேட்டவரின் முகத்தை பார்க்காது தலை குனிந்த ஆருஷா, ஆமென்று தலையாட்டினாள். 

 

“அப்போ உன் உலகத்திற்கு பழைய பூவிழியாழா நீ போக முடியாதா? ராக்கி பொண்டாட்டியா தான் போகப் போறியா?”

 

“அதுவும் இப்போது இயலாது போல் தோன்றுகிறது.”

 

“ஏன்டி இப்படி அபசகுணமா பேசுற? அப்போ என்னோட பேத்தி கதி?” என்றவர் கேட்க, நடந்த அத்தனையையும் அவரிடம் ஒன்றுவிடாமல் கூறினாள் ஆருஷா.

 

“அய்யோ போச்சே! போச்சே! இனிமே என் பேத்தியை நான் பார்க்கவே முடியாதா?” என்று அழுதவர்,

 

“ஹேய் ஆரு! நீ வந்த பெட்டியில் எழுதியிருந்ததை நான் படிக்கவேயில்லயே! அதில் என்ன எழுதியிருந்துச்சுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, யோசித்துப் பார்த்த ஆருஷா, அதில் எழுதியிருந்ததை நினைவு கூர்ந்து கூற ஆரம்பித்தாள். 

 

“காலத்தின் நேர்கோட்டில் காலபைரவி இணையும் போது பேதையவர்களின் இடமாற்றமும் கைகூடும்.”

 

அத்தியாயம் 10

 

பூவிழியாழையும் மல்லியையும் தனியே விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தான் ரணவீரனின் ஆஸ்தான வாயிற் காப்பாளன் அங்கதன். 

 

“தாங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் இளவரசியாரே!” என்றவன் அவர்களை அங்கே வைத்து வெளியே பூட்டிவிட்டுச் சென்றான். அவன் பூட்டிச் செல்வதை பார்த்த பூவிழியாழ்,

 

“அடேய்! தீவெட்டி தடியா! எதுக்குடா வெளிய பூட்டுற? திறந்து விடுடா. நானே உள்ள பூட்டிக்குவேன்.” என்று கத்துபவளின் குரலை கேட்கத்தான் அங்கு ஆளில்லை. 

 

“போடா குண்டா! தீவெட்டி தடியா! தடியாஆஆஆஆஆஆ..” என்றவள் கத்த, பூவிழியாழின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள் மல்லி. 

 

“இளவரசியாரே! இங்கு இப்படி எல்லாம் சத்தம் போடக்கூடாது. சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.”

 

“ஹ அப்படின்னா? என்ன தலையையா சீவிடுவாங்க?” என்று கேட்க, ஆமென்று தலையாட்டினாள் மல்லி.

 

“அப்போ இந்த ராணா பையே கட்டிக்க என்னைய ஏன் கூட்டிட்டு வந்தான்? இப்படியா ஒரு வீட்டுக்குள்ள போட்டு பூட்டி வைப்பான். அவனுக்கு மண்டைல மசாலாவே இல்ல. திங்குறதுக்கு ஒரு பீட்சா இல்ல பர்கர் இல்ல. அய்யோ இப்படி இங்க வந்து மாட்டிக்கிட்டேனே!” என்று புலம்புபவளை வித்தியாசமாக பார்த்த மல்லி,

 

“சீக்கிரமே இவரை யாருக்கும் தெரியாமல் குணப்படுத்தியாகணும்.” என்று முணுமுணுத்து கொண்டாள். ஏதோ யோசித்தபடியே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தவள்,

 

“மல்லி” என்றழைக்க அலாவுதீன் பூதம் போல் பூவிழியாழின் முன்னால் வந்து நின்றாள் மல்லி. 

 

“சொல்லுங்கள் இளவரியாரே!”

 

“நீ கவனிச்சியா?”

 

“எதை?”

 

“அதான்! ராணா பையே, என்கிட்ட ஒத்த வார்த்தை கூட பேசல.” என்றாள் தான் கையில் வைத்திருந்த கடைசி வாழைப்பழத்தை தின்றவாறே.  

 

“நான் அவனுக்கு அஃபிஸியால பொண்டாட்டி தானே.” என்று கூற, புரியாமல் முழித்த மல்லியைப் பார்த்து,

 

“அதாவது சட்டப்படி பெயரளவுல அவருக்கு நான் பொண்டாட்டின்னு அரசாணை வந்துருக்குல. அதைச் சொன்னேன்.”

 

“ஆமா இளவரசியாரே! தாங்கள் தான் இந்த சமஸ்தானத்தின் மகாராணி.”

 

“அப்படி இருக்கும் போது என்னைய கொஞ்சம் கூட மதிக்காம இப்படி அடைச்சு வைக்கலாமா?”

 

“அவரை யுத்தகளத்தின் அரக்கன்னு சொல்லுவாங்க இளவரசியாரே! அதனால் தான் அவர் மனதும் இரும்பாகவே உள்ளதோ? என்னவோ?” 

 

“இருக்கட்டும்.. இருக்கட்டும்.. ஒருநாள் அந்த ராணாவை உருட்டி சாறெடுக்கல, நான் பூ.. பூ.. ஏய் மல்லி! என் பெயரென்ன?”

 

“பூவிழியாழ் இளவரசியாரே!

 

“அதான்.. பூவிழியாழ் இல்ல.” என்றவள் தன் தாடையில் கைவைத்து தட்டியவாறே,

 

“ஆமா! என் பெயர் நிஜமாவே பூவிழியாழ் இல்லயே! அய்யோ ராமா! மண்ட காயுதே.” என்றவளை பரிதாபமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மல்லி. 

 

“ஏன் மல்லி! அவன் நிஜமாவே மாவீரன் தானா? இல்ல யுத்தகளத்தில் அங்க இங்க அடிபட்டு அவனால ஒன்னுமே பண்ண முடியாம இருக்குமோ? அதனால் தான் என்னைய இங்க அடைச்சு வைச்சுருக்கானோ?” என்று கூறியவளை ஆச்சரியமாக மல்லி பார்த்திருக்க,

 

“ஒரு வேளை அவனுக்கு என்னைய பிடிக்கலையோ? அப்படி பிடிக்கலைனா இங்கிருந்து வெளிய அனுப்பு வேண்டியது தானே?! எதுக்கு பட்டினி போட்டு சாகடிக்கணும்?!” என்று பூவிழியாழ் கேட்ட, எந்த கேள்விக்கும் மல்லியிடம் பதிலில்லை. அங்கு ஜன்னல் வழியே தெரிந்த முழுநிலவை பார்த்தபடியே படுத்திருந்தவளின் கனவில் வாளோடு வந்தான் ரணவீரன்.

 

“உண்மைய சொல்லு. நீ யாரு? எதை கொள்ளையடித்துச் செல்ல இங்கு வந்திருக்குறாய்?” என்று மிரட்ட,

 

“அய்யோ! அம்மா! அது நானில்ல. நான் எங்கம்மாக்கு ஒரே புள்ள. என்னைய விட்டுடுங்க.” என்று கத்தியவளைப் பிடித்து உலுக்கியெடுத்தாள் மல்லி.

 

“இளவரசியாரே! இளவரசியாரேஏஏஏஏஏஏ..” என்று எழுப்பியவளின் குரல் கேட்டு எழுந்தமர்ந்த பூவிழியாழ்,

 

“இது தலை, இது கை, இது கால், அம்மா, அப்பா, எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல அதது இருக்கு. நான் இன்னும் சாகல? உசுரோடத் தான் இருக்கேன்.” என்றவளை பார்த்த மல்லி,

 

“இளவரசியாரே! நான் வேண்டுமானால் அந்த மாவீரனிடம் சென்று பேசட்டுமா?” என்று கேட்க,

 

“போற உசுரு பசிலயே போகட்டும். பசில இருந்து செத்தாலும் பரவால்ல; வெட்டுப்பட்டு சாகக் கூடாது.” என்றவள் போர்வையை தலைவரை மூடி படுத்துக் கொண்டாள் பூவிழியாழ். இங்கு அர்த்த ராத்திரியில் புயலென வாள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான் ரணவீரன். அவனது நினைவு முழுவதிலும் பூவிழியாழே நிறைந்திருந்தாள். அப்போது அவனைத் தேடி வந்தான் வாயிற்காப்பாளன் அங்கதன்,

 

“மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்! தாங்கள் கூறியது போலவே அவர்கள் இருவரையும் விருந்தினர் மாளிகையில் வைத்து அடைத்து விட்டேன்.” என்று கூற, அதை கேட்ட ரணவீரன்,

 

“நல்லது. அவர்கள் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.” என்று கூறினான். 

 

“அப்படியே ஆகட்டும் மன்னா!” என்றவாறே பணிவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றான் அங்கதன். மரியாதையாக நடத்த வேண்டும் என்று ரணவீரன் கூறியிருக்க, இரவு உணவை சாப்பிடாமல் கூண்டுபுலியாய் அவனுக்காக காத்திருந்தாள் பூவிழியாழ். அடுத்த நாள் காலையில் அவளைத் தேடி வந்த ரணவீரனிடம்,

 

“வணங்குகிறேன் மன்னரே!” என்று பணிவாக வணக்கம் தெரிவித்தவளை வித்தியாசமாக பார்த்தான் ரணவீரன்.

 

“நேற்று வந்த பெண் தானா நீ?”

 

“ஏன் மன்னா அவ்வாறு கேட்கின்றீர்கள்? நான் தங்களது பூவிழியாழ் தான். இந்த அலங்காரம் அனைத்தும் தங்களுக்காக செய்யப்பட்டது. தாங்கள் ஆவல் கொண்டால் இதே போல் எப்போதும் தங்களுக்கென அலங்கரிக்கும் கொண்டு காத்திருப்பேன்.” என்று ரணவீரனைப் பார்த்து கூறினாலும், மனதுக்குள்,

 

‘வெற்றி! வெற்றி! எவ்வளவு பெரிய டயலாக்! மல்லி சொன்ன மாதிரியே சொல்லிட்டேனே!’ என்று குதூகலித்துக் கொண்டாள் பூவிழியாழ். அவளை சந்தேகமாக பார்த்த ரணவீரன்,

 

“நீ மன்னர் மதிவாணனின் மகள் என்றால், எதற்காக நீ வரும் போது கூடவே ஏன் கள்ளர் குலப் பெண்ணை அழைத்து வந்தாய்?” என்று கேட்க, அதிர்ச்சி அடைந்தாள் பூவிழியாழ்.

 

“எனக்கு அவளைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஏன் இதோ என் பக்கத்துல நிக்குறாளே இவளையே சரியாத் தெரியாது. இதுல அவளைத் தெரியுமா? இவளைத் தெரியுமான்னு கேள்வி வேற கேட்குறீங்க? இப்போ எனக்கு சாப்பாடு போட முடியுமா? முடியாதா?” என்றவளை பார்த்தவன், தன் பணியாட்களிடம் சாப்பிட உணவு வழங்க ஆணையிட்டான். பின்னர்,

 

“நீ எதற்காக அப்பெண்ணை உன்னுடன் அழைத்து வந்தாய் என்று அறியும் வரை நீ என் காவலில் தான் இருக்க வேண்டும்.” என்று கூறியவனின் அருகில் வந்தவள்,

 

“உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று கூற, ரகசியம் தான் கூறப் போகிறளோ என்றெண்ணிய ரணவீரன் அவளின் அருகில் வரவே, அவள் மீது வந்த கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது வாசனையோடு அவளின் பெண்மையின் வாசனையும் சேர்ந்து அவனை பித்தனாக்கியது. 

 

“இப்படி உசரமா இருந்தா, நான் என்ன ஏணிப் போட்டு ஏறியா, உங்க காதுல சொல்ல முடியும்?” என்றவள் கேட்ட, அவளின் உதட்டருகே தன் காதை கொண்டு சென்றான் ரணவீரன். 

 

“எப்பவுமே இப்படி திறந்த மாதிரியே தான் ஆடை அணிவீர்களா? இந்த உடம்பை பார்த்து கண்ணு வைக்கமாட்டாங்க?” என்று கேட்டவளைப் பார்த்து கோபப்பட நினைத்தாலும் அவனால் முடியவில்லை. அங்கிருந்து வேகமாக வெளியே சென்றுவிட்டான்.  

 

“மன்னர் கோபம் கொள்ளும் அளவிற்கு அப்படி தாங்கள் என்ன கூறினீர்கள் இளவரசியாரே?!”

 

“உண்மையைக் கூறினேன். நீ வேற தொணத் தொணன்னு பேசிட்டே இருப்ப. முதல்ல சாப்பிடலாம் வா.” என்று பூவிழியாழ், அவன் அனுப்பிய காலை உணவை ஒரு கை பார்த்து விட்டு, 

 

“ஏஏஏஏஏப்.. சாப்பாடு சூப்பரா இருந்துச்சு. இல்ல?” என்று மல்லியைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டவள், மல்லி பதிலளிக்கும் முன்பு,

 

“வா நாம் நகர் உலா போகலாம்.” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். கதவைத் திறந்ததும் வாயிலில் காவலன் நிற்க, சட்டென கதவை அடைத்தவள்,

 

“மல்லி எதுக்கு டி திரும்பவும் நாம் எங்கயும் போகாம இருக்க, காவலுக்கு ஆள் நிப்பாட்டி வைச்சுருக்கான் அந்த ராணா பையன்.” என்று கேட்க,

 

“தெரியவில்லை இளவரசியாரே!” என்று மல்லி அளித்த பதிலில் மனம் நொந்து போனவள்,

 

“சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!” என்று பாட அவளை புரியாது பார்த்தாள். 

 

“எனக்கு வர்ற கோபத்துக்கு செத்தாலும் பரவாயில்லன்னு, இங்க இருந்து ஓடிடணும்னு தோணுது.”

 

“அய்யோ இளவரசியாரே! நீங்க இல்லாமல் நான் எவ்வாறு சாவது? அதுவும் எனக்கு இன்னும் ஒரு தடவை கூட திருமணம் ஆகவில்லை” என்று அழுத மல்லியைப் பார்த்த பூவிழியாழ்,

 

“நான் சாகுறதைப் பத்தி உனக்கு இருக்குற கவலைய விட, நீ கல்யாணம் ஆகாம சாகப் போறதை நினைச்சு ரொம்ப கவலைப்படுற இல்ல?!”

 

“பின்னே எதற்காக நாம் வீணாக சாக வேண்டும்?”

 

“அப்போ கோழையா இங்கேயே அடைஞ்சு கிடக்கலாம்னு சொல்றியா?”

 

“இங்கயே இருந்தால்தான் என்ன தவறு? கோழையாகயிருந்தாலும் உயிரோடு இருப்போம் அல்லவா! கோழைகள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாம்!”

 

“உன்னை? இரு வர்றேன்.” என்று மல்லியை அடிக்க துரத்தியவளின் காலில் இடிபட்டது அவளது பிறந்த வீட்டு சீதனமாக வழங்கப்பட்ட இரும்பு பெட்டி. அதனை திறந்து பார்த்தவளுக்கு கடிதத்துடன் அடங்கிய சிறுபெட்டி ஒன்று கிட்டியது. அந்த கடிதத்தில் ‘அவசர காலத்தில் உதவும்’ என்று எழுதப்பட்டிருக்க, அதோடு இணைக்கப்பட்டிருந்த  சிறுபெட்டியை திறந்து பார்த்தாள் பூவிழியாழ். அதில் சிறு சிறு வில்லைகளாக உருண்டைகள் இருக்க, 

 

“இது என்னது மல்லி?” என்று கேட்க, அதனை வாங்கி முகர்ந்து பார்த்த மல்லி,

 

“இது ஆளை மெல்ல கொள்ளும் விஷம் இளவரசியாரே! இது எப்படி உங்கள் பெட்டியில் வந்தது?” என்று யோசித்தவளுக்கு, பூங்கொடியாழின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. 

 

“இளவரசியாரே! அன்று தங்களது பெட்டியில் எதையோ அந்த பூங்கொடி மறைத்து வைப்பதை பார்த்தேன். பிறகு நாம் இருந்த அவசரத்தில் அது என்னவென்று சோதிக்க மறந்துவிட்டேன். இப்போது தான் புரிகிறது, அவள் தங்களை உயிர்தியாகம் செய்ய சொல்லி, இதை இங்கு வைத்திருக்கின்றாள்‌ என்று. என்ன ஒரு கொடூர எண்ணம் அவளுக்கு?” என்று மல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த வில்லைகளை வாயில் போட்டு மிட்டாயை சாப்பிடுவதை போல் சாப்பிட ஆரம்பித்திருந்தாள் பூவிழியாழ். அதிர்ச்சி அடைந்த மல்லி,

 

“அய்யோ! இளவரசியாரே! துப்புங்கள். மெல்லாதீர்கள். இப்போது நான் என்ன செய்வேன்? ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று அழுதவளைப் பார்த்து சிரித்த பூவிழியாழ்,

 

“நமக்கு ஒரு கண்ணு போனா எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும். இப்போ நான் செத்துட்டேனா, அரசாணையை மதிக்காத குற்றத்திற்கு ரணவீரனை சிரச்சேதம் செய்வார்கள் அல்லவா?! இப்படி கூண்டு கிளியாக வாரக்கணக்குல அடைஞ்சு கிடக்குறதுக்கு ஒரே அடியா போய் சேர்ந்துடலாம்.” என்று கூறியவளை அப்படியே விட்டுவிட்டு ரணவீரனைத் தேடி ஓடினாள் மல்லி. தனக்கென தேடி வந்த பெண்ணின் உயிர் மீட்பானா ரணவீரன்?

 

2 thoughts on “இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top