மாமனே 14
“என்னவள் இதழ்கள் என்ன தீஞ்சுவையோ? எவ்வளவு சுவைத்தாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்றுதே!” என்று எண்ணியவனின் அதனை அவன் பார்வையில் உணர்த்த, அவன் பார்வையின் பொருளுணர்ந்த அவளிடமும் பெரும் படபடப்பு எழுந்தது!!
வெட்ட வெளி.. மொட்டை மாடி!! என்று!!
ஆனால் காதல் என்னும் நதியோ மோகம் தாபம் என்ற இரு கரைகளை உடைத்துக் கொண்டு அவனுள் பிரவாகம் எடுக்க இதெல்லாம் எங்கே அவன் கருத்தில் பதிந்தது!!
அதிலும் இருளிலும் பளபளக்கும் அவன் கண்கள் சொன்ன செய்தியில் அவளுள் ஏக திகைப்பு!!
ஆனாலும் அதை கண்களில் காட்டாமல் இருக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவனும் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமான அந்த மெல்லிய சுவரான கண்கள் எப்போது வேண்டுமானாலும் உடைபட்டு வெள்ளம் வரலாம் என்ற நிலை!!
பளீச்சென்று நரம்புகள் தெரிந்த அவளின் மிருதுவான வெண்ணிற கழுத்தில் மீசை முடிகள் குத்த அழுந்த முத்தமிட்டான் காளையவன்!
அவள் கழுத்துக் குழி சிலிர்க்க..
கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் மென்கழுத்துத் தோலை மெல்லக் கவ்வியிழுத்து மென் கடி வைத்து விடுவித்தான்!! லவ் பைட்ஸ் என்றோ எங்கோ படித்த கேட்டு சிரித்த ஞாபகம்!! ஆனால் இன்று தன்னவன் கொடுக்கையில்.. மேனி சிலிர்த்தது!!
அவளின் கழுத்து பரப்பெங்கும் முத்தமிட்டு, கடித்து, சுவைத்து என்று
காதலாய்.. காமமாய்.. இன்பமாய்.. தாபமாய்.. மோகமாய் என்று அவன் முகத்தை அவ்வழகிய கழுத்திலேயே புதைந்திருந்தான்.
மெல்ல தலையைப் பின்னால் இழுத்து முகத்தை அண்ணார்ந்து அவன் பிடறி முடியை இறுக்கியபடி அவனை தள்ள…
அவனோ அவள் எதிர்ப்பில்.. தள்ளுதலில் கிளர்ச்சியடைய.. மேலும் பல முத்தங்களை வைத்து விட்டு தான் அவள் முகத்தை பார்த்தான். இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டது காதலுடனும்! மோகத்துடன்!! சற்றே தாபத்துடன்!!!
பின் அவர்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை அவள் கண்களால் சுட்டிக்காட்ட.. அதனால் என்ன என்றவனின் கண்கள் சொன்ன பரிபாஷையில் நெற்றி ஓரங்களிலும்
மூக்குக்குக் கீழேயும் அரும்பென வியர்க்கத் தொடங்கியிருந்து.
அதில் வறண்ட தன் உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக் கொள்ள..
அவள் எச்சில் ஈரத்தில் பளபளத்த உதடுகளை தன்னை நோக்கி இழுத்து கொய்திருந்தான் மாயவன்.
இராட்ஷஸனாய்!!
சுவைக்கச் சுவைக்க உதடுகள் மேலும் தாகம் கொண்டதைப் போலாகி இன்னும் இன்னும் என்று ஏங்கித் தவித்து முடிக்க முடியாமல் முயன்று கொண்டிருந்தான்.
மொட்டை மாடி காற்றிலும் பயத்தால் கசிந்து நிறைந்த வியர்வை பிசுபிசுப்பு இருவரையும் நிறைத்திருக்க… ஆடவனோ அணங்கவள் ஆடைகளை எளிதாக விலக்கி வியர்வையை விரட்ட முயன்றான்.
அவனது முரட்டு கைகள் அவள் பட்டு மேனியில் பட்டும் படாமல் வருடியதால் உண்டான திடீர் தாப உணர்ச்சியை தாங்க முயன்று தோற்று கண் மூடி… மனம் இனம் புரியாமல் உணர்ச்சி குவியலில் சிக்கி தவித்து கொண்டிருந்தது மலருக்கு!!
முதன் முறை ஆணின் ஸ்பரிசம்!! அதுவும் கொண்டவனின் உரிமையான தொடுகை!!
ஒரு இனம் புரியாத உணர்வு அவள் தேகமெங்கும் வாரி இறைக்க.. ஆணவன் தீண்டலால் உண்டான சுக அவஸ்தை உடலெங்கும் பரவி சிலிர்த்தாலும் கூடவே நெருடலும் கூட அதுவும் கீழே வயசுக்கு வந்த பெண்கள் இருக்க.. இங்கே இவனோடு இப்படி இருப்பது சரியா என்று கேள்வி பெண்ணுள்!!
அவளின் அந்த நெருடல்., சிலிர்ப்பு எல்லாமே அவளின் கண்களில்.. முகத்தில் பிரதிபலிக்க.. அவனும் அவளை வைத்த கண் வாங்காமல் அந்த அழகை பார்த்தான். ரசித்தான்.. பின் ருசித்தான் இதழ்கள் கொண்டு.
ஓயாது இரைச்சலை ஏற்படுத்தும் கடல் அலைகள் போல அவளது மனப்போராட்டத்தால் அவளின் கைகள் மெல்ல நடுங்க.. நடுங்கும் அவள் கையை அவன் கையோடு சேர்த்து பிணைத்தான்.
உதட்டுக்கு மேலே அவளுக்கு அரும்பி இருந்த வியர்வையை மெல்ல துடைத்தான் நாவினால்...
அவனின் ஒவ்வொரு தாக்குதல்களையும் சமாளிக்க முடியாத பேதை அவள் அவனிடமிருந்து பிரிய போராடி அது முடியாமல்.. அவள் திரும்பி படுத்துக் கொள்ள.. அப்போதும் அவளை பார்த்து சிரித்தன அவனது கண்கள்.
“திரும்பி படுத்தால் மட்டும்…??” என்று மன்னவனின் கற்றை மீசை காதுமடலில் உரசி கவி பேசியது, பின் கழுத்தில் சூடான அவனது தடித்த உதடுகள் கோலம் போட…
சுதியேறிப் போய் இத்தனை நேரமும் இம்சையைக் கொடுத்த அவளின் இளமை நரம்புகள் தீண்டப் பட்டதும் அவளால் நம்ப முடியாத அளவுக்கு சுகமான ஒரு இன்ப உணர்ச்சியைக் கொடுத்தது!!
அவன் மெல்ல மெல்ல அவளின் மீது அழுத்தமான அணைப்பை கொடுத்தான். அதே போல கையை தூக்கி இடையோடு வளைத்தான்.
அந்த சுக உணர்வு கொடுத்த மயக்கத்தில் கிறங்கினாள் மலர்விழி!!
சில நிமிடங்கள்.. பொறுமையாகவும் நிதானமாகவும் மென்மையாகவும் அவனின் தீண்டலில் அவளின் நுண்ணிய நரம்புகளை முறுக்கேறச் செய்ய தீ பற்றிக் கொண்டது போல உடல் தகித்தது!!
பேச்சு மூச்சற்றுப் போனாள் அவள்!!
மூச்சாலே பேசினான் அவன்!!
அவள் கழுத்தில் பட்ட அவரது மூச்சுக் காற்றின் வெப்பம்.. அவள் பெண்மையை நடுங்க செய்ய.. நடுங்கும் தன் உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்வியபடி.. நாணத்தில் கண்களை மூடினாள் பாவை!
உடனே அவளின் மூடிய கண்களில் அழுத்தமாக முத்தமிட்டான். அவள் கண் இமைகள் துடித்து அடங்கின. அவளின் கண்கள் மட்டுமல்ல கன்னம், மூக்கு, இதழ்கள் எல்லாம் அவன் இதழ்களின் ஈரமே!!
ஒரு கை மெல்லிடையாளின் இடையை பதம் பார்த்துக் கொண்டிருக்க.. இன்னொரு கையை அவள் முதுகில் போட்டு வளைத்து அணைத்தபடி அவளின் சிவந்த உதடுகளை முத்தமிட்டு மெல்லக் கவர்ந்தான் இந்த கந்தர்வன்!!
இவன் கந்தர்வனா? இல்லை இல்லை!! இத்தனை பாடு படுத்துகிறானே வெறும் இதழ்கள் கொண்டே.. இவன் சரியான ராட்ஷஸன் தான்! என்ற எண்ணம் மேலோங்க… மோகன புன்னகை அவள் வதனத்தில்!!
மெல்ல அவள் கீழ் உதட்டை கவ்வி இழுக்க.. அவள் உதடுகள் பிரிந்தன.. அவனின் முரட்டு உதடுகள்.. மெல்லிய சிவந்த அவள் அதரங்களை உறிஞ்சி சுவைத்தன. பெண்மையின் பலமான உணர்ச்சி தாக்குதலை எதிர்க்க முடியாமல் கண்கள் இரண்டையும் இறுக்கி மூடினாள்!!
மெல்ல… மெல்ல… அவளைத் தன்வசமாக்கினான்!!
அவள் முகத்தை தனது உதட்டு எச்சிலால் முத்தமிட்டு நிறைத்தான்!!
அவள் கழுத்தில் முத்தமிட்டு சிலிர்க்க வைத்தான்!!
பின் அவள் கொங்கைகள் இரண்டுக்கும் ஆடை மீதே மாறி.. மாறி முத்தம் கொடுத்தான்!!
அதில் முற்றிலும் தன்னுணர்வு வந்தவள் அவனை தள்ளி நிறுத்த…
“ஏன் டி..??” என்றான் கரகரப்பான குரலில்..
இதனால் வரை பன்மை விகுதியாக மரியாதையாக பேசியவன், இன்று முழுக்க அவளோடு கலந்து விடும் நோக்கில் இருக்கும் தருணம்.. அவள் பிரிய அந்த ஆற்றாமையில் உரிமை அபரிமிதமாய் வெளிப்பட முதல் முறையாக டி போட்டு கூப்பிட்டான்.
இருவருக்குமே அப்பொழுது அந்த உரிமையின் அளவை அறியவில்லை!!
“போதும் மாமா… இதுக்கு மேல இங்க வேணாம்!!” என்று அவள் மெல்லிய குரலில் கூற…
“ஏனாம்? அப்போ ரூம் ஓகேவா?” என்றான் அவளை அள்ளிக் கொண்டு!!
“ம்ஹீம்… கீழ இரண்டு கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணுங்க இருக்காய்ங்க.. கூட பெரியவங்க இருந்தாலும் பரவாயில்லை! இந்த சமயத்தில் நாம மட்டும் தனியா ரூம்ல இருக்கிறது.. ம்ஹீம் நல்லா இருக்காது.. வேண்டாம் மாமா” என்று தன் உதட்டை கடித்து உணர்ச்சிகளை அடக்கியப்படி அவள் கூற.. அவனுக்கு புரிந்தது அவளின் வார்த்தைகள்!!
“சரி.. நீ கீழ போ..” என்று அவன் மீண்டும் பாயிலேயே கவிழ்ந்து படுக்க அவனுக்கு கோபமோ என்று பரிதவிப்பு ஆனது அவளுக்கு.
“கோபம் எல்லாம் இல்லை.. நீ சொன்னது சரிதான்! ஆனால் இதிலிருந்து கொஞ்சம் வெளியே வரணும்… சரி நீ போ!! இன்னும் கொஞ்ச நேரம் நீ இருந்தாலும் உன் வார்த்தைகள் எல்லாம் என் காதுக்கு கேட்கவே கேட்காது!” என்றான் தலையணையில் முகத்தை புதைத்தபடி!!
கணவன் சொன்ன வார்த்தைகள் புரிய மீண்டும் கீழ் உதட்டை கடித்துக் கொண்டவள், அவன் எதிர்பார்க்கா நேரம் முதுகில் மேலேறி படுத்துக் கொண்டவள், இரு பக்கமுமாக கையை கொண்டு சென்று அவன் மீசையை பிடித்தவள், “என் ஆச மாமா!! அதுவும் சரியான ராட்ஷஸ மாமா!!” என்றபடி எழுந்து கீழே ஓடி விட்டாள்!!
மீசையை நீவிகொண்டு மல்லாந்த படுத்தவனின் கண்களில் இப்பொழுது வானில் இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்து முழு நிலவில் பெண் ஒருத்தி முகம் மட்டுமே பளிச்சென்று தெரிய.. இடவலமாக தலையாட்டிக்கொண்டே சிரித்தவன், கண்கள் மூடி சுகமான உறக்கத்திற்கு சென்றான்!
மறுநாள் காலை இவன் விழிக்கும் போது கீழே கலவையான பேச்சு குரல்கள் கேட்க.. அங்கே மாடி ஓரத்தில் இருந்து பைப்பில் முகம் கழுவி கீழே வந்தவன், கண்டது என்னவோ.. ஜம்பமாக அவன் வீட்டில் அமர்ந்திருந்த கதிரேசனையும் அவனுக்கு காபி கொடுத்து விருந்து உபசாரம் செய்து கொண்டிருந்த மனைவியுமே!!
“ஏங்க யார் வந்திருக்கா பாருங்க? எங்க கதிரேசன் அய்த்தான் வந்து இருக்காரு!” என்று அத்தனை சந்தோஷமாக கூறினாள் பெண். பழையதை மறந்து மாமன் பெண்ணை காண ஆவலோடு வந்திருப்பவனை கண்டவளுக்கு மனதில் அத்தனை உற்சாகம்!!
ஆனால் அந்த அய்த்தானில் இவன் முகம் சற்றே கடுகடுவென்று மாற “வாங்க..!!” என்றவன் அவர்களது அறைக்குள் புகுந்து கொண்டான்.
சரி மூஞ்சி கழுவி வருவானாகும் வந்ததும் அவனுக்கும் டீ கொடுக்கலாம் என்று இவள் காத்திருந்தாள்.
ஆனால் வாய் என்னவோ கதிரேசனிடம் சலசலத்துக் கொண்டிருந்தது. “எப்படி இருக்காங்க அய்த்த? மாமாவுக்கு இப்ப மூட்டு வலி பரவாயில்லையா?” என்று ஆரம்பித்தவள் அவர்கள் கடைசியாக நடவு என்ன பயிர் நட்டார்கள்.. அதன் விளைச்சல் என்ன? என்று பசுமாடு கன்று போட்டு சீம்பால் சாப்பிட்டது வரை விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“நாம ரூமுக்கு வந்தா கூடவே இவளும் பின்னாடியே வந்தாளா பாரு! இப்பதான் அவனுக்கு முறை வாசல் செய்தது இல்லாம இன்னும் சலசலன்னு பேசிக்கிட்டே இருக்கா?” என்று அத்தனை கோபம் மாணிக்கவேலுக்கு!!
அடுத்தது “விழி..!” என்று சத்தமாக அழைத்தான்.
எப்போதோ இந்த பத்து நாட்களில் ஒரு முறை அவன் அப்படி அழைத்தது. இன்று அழைத்ததும் “இதோ மாமா வரேன்ங்க..” என்று இவள் அறைக்குள் செல்ல..
“எங்க இங்க இருந்த பேஸ்ட் ஆ காணோம்?” என்று கேட்க.. அதுவோ வைத்து இடத்தில் அப்படியே இருக்க.. யோசனையோடு அதனை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
வெளியில் அறை வாசலைக் கூட அவள் தாண்டவில்லை மீண்டும் விழி என்ற அழைப்பு…
“என்னங்க?” என்றவளிடம் “பாத்ரூம்ல தண்ணி தொறந்து விடு!” என்றான்.
“சரிங்க..” என்றவள் குழாயை திறந்து விட்டு, இவள் வெளியில் வந்து கதிரேசனை பார்த்து சிரிக்க.. மீண்டும் விழி என்று அதட்டலான அழைப்பு.. பொதுவாக அதட்டி எல்லாம் அழைக்க மாட்டான் மாணிக்கவேல் எப்பொழுதும் அம்மிணி என்கிற வார்த்தையை தாண்டி எதுவும் வராது! இன்று என்ன ஆனது என்று பெரும் குழப்பம் இவளுக்கு!!
மீண்டுமா?? மீண்டுமா?? என்று சலிப்புடன் அவள் உள்ளே நுழைய..
“ஜீவன் பொண்ணுங்க எல்லாம் எங்க காணோம்?” என்று கேட்டான்.
“காலைல இடியாப்பம் தேங்காய் பால் வேணும்னு கேட்டாய்ங்க.. அதனால வாங்கி தரேன்னு ஜீவன் அழைச்சிட்டு போயிருக்காரு! கதிரேசன் அய்த்தான் வந்ததுக்கு அப்புறம் இப்பதான் போனாய்ங்க” என்றாள்.
மாணிக்கத்தின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இவள் வெளியே வர..
“என்ன ரொம்ப தேன் அதட்டுறாரு உன் புருஷன்!” என்றான் சற்று முறைப்போடு கதிரேசன்!!
அவள் பதில் சொல்லும் முன்னமே “துண்டு யாரு எடுத்து கொடுப்பா விழி? வந்து துண்டு எடுத்துக் கொடு!” என்று மீண்டும் ஒரு அழைப்பு மாணிக்கவேலிடம் இருந்து.
“என்ன இவன் இன்னைக்கு இப்படி படுத்துகிறான்?” என்றபடி இவள் துண்டு எடுத்துக் கொடுக்க.. அத்தனை ஜலாம் செய்து விட்டே அவளிடம் இருந்து அதை வாங்கினான்.
கதிரேசனுக்கு நேராக அவனிடம் சண்டை போடவும் இவளுக்கு விருப்பமில்லை. ஏனென்றால் காதல் கல்யாணம் என்ற பிம்பம் உடைந்து விடும்!!
அதே நேரம் கோபத்தை மறைக்க முடியாமல் முகத்தை கஷ்டப்பட்டு புன்னகையோடு இவள் வைத்துக் கொள்ள.. கதிரேசனோ மாமன் மகள் அழுகையை தனக்காக அடக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு சிரிக்கிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டான். அதுவும் மாணிக்கவேல் அவனுக்கு ராட்ஷஸனாகவே தெரிந்தான்
அதேநேரம் ஜீவன் ஏதோ ஜோக் சொல்ல.. வள்ளியும் தேனும் சிரித்த முகத்தோடு உள்ளே நுழைய..
அவர்களைப் பார்த்த கதிரேசனின் கண்களில் யாரும் அறியா கோபம். அதே கோபத்தோடு “நான் வரேன் மலரு புள்ள!” என்று வெளியேறி விட்டான்.
கதிரேசன் சாப்பிடாமல் சென்றது மலர்விழிக்கு உறுத்தலாக இருக்க.. வேகமாக அறைக்குள் இவள் நுழைய.. அதே நேரம் குளித்து வந்திருந்தான் மாணிக்கவேல். அவனிடம் “எதுக்கு இப்படி பண்ணீக? பாருங்க எங்க அய்த்தான் ஒண்ணுமே சாப்பிடாம வருத்தத்தில போயிட்டாரு!! இருந்து இருந்து உங்களுக்கு இன்னைக்கு தான் பொண்டாட்டி ஞாபகம் வந்ததா?” என்று அவள் சிலிர்த்துக்கொண்டு கேட்க… அவனோ ஒற்றை கையால் அவள் இடையே வளைத்து தனது ஈரத் தலைமுடியை அவள் மீது சிலுப்பி விட்டவன், “இனிமேட்டு உனக்கு மாமா… அய்த்தான் எல்லாம் நான் தான்!” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து…
“அடப்பாவி மனுசா… அவனை அய்த்தான்னு கூப்பிட்டதுக்கா இந்த பாடு படுத்தின.. அய்த்த பையன் அய்த்தான்னு கூப்பிடாம வேற எப்படிடா கூப்பிடுறது?” என்று மைண்ட் வாய்ஸோடு அவனை விழி விரித்து பார்த்தாள் மாணிக்கத்தின் விழி!!
👌👌👌👌👌👌
OMG ipdiyaaaa da panuvaaa adhukuu……🤣🤣🤣🤣🤣
😍😍😍
Super sis ❤️