ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை

அத்தியாயம் 11

 

நேரே ரணவீரனிடம் மூச்சிறைக்க ஓடிய மல்லி,

 

“மன்னா! மன்னா! இளவரசியார் விஷமருந்தி விட்டார். தயவு கூர்ந்து அவருடைய உயிரை காப்பாற்றுங்கள்” என்று கூற, 

 

“என்ன? விஷமருந்தி விட்டாளா? அங்கதா! ராஜ வைத்தியரை வரச்சொல்லி உடனே தகவல் அனுப்பு.” என்று உத்தரவிட்டவாறே பூவிழியாழைக் காண விரைந்தான் ரணவீரன். 

 

இங்கே விருந்தினர் மாளிக்கைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்த பூவிழியாழ்,

 

“என்ன இது? விஷம் சாப்ட உடனே வாயில் நுரை தள்ளி சாவாங்கன்னு தானே படத்துல எல்லாம் காட்டுறாங்க. எனக்கு மட்டும் ஏன் எதுவுமே தோண மாட்டேங்குது. ஒரு வேலை நான் விஷத்தையே சாப்பிடலையோ? ஆமா இப்ப எதுக்கு இவ்வளோ வேர்த்து கொட்டுது. என் ட்ரெஸ் தான் ஃப்ரீயா இருக்கே. அப்புறமும் ஏன் வேர்க்குது? என்னடா இது தொண்டைய கவ்வுது. பேச்சு வரமாட்டேங்குது. நாக்கு குளறுது.” என்றவள் இங்கும் அங்கும் நடைபயின்று கொண்டிருக்க, கோட்டைச் சுவற்றின் மேலே இரண்டு தடியர்கள் ஏறி உள்ளே இறங்குவதை கண்டாள். 

 

“ஏய்! யாருடா நீங்க? எதுக்கு டா வாசற்படி அங்க இருக்குறப்போ, ஏன்டா சுவர் ஏறி குதிக்குறீங்க? அடேய் தடி தாண்டவராயா! எங்கேடா போய் தொலைந்தாய். இவ்வளோ நேரம் என்னைய வெளிய விடாம ஈட்டியை நீட்டி பிடிச்சுட்டு இங்க தானே நின்னான். இப்போ எங்க கொல்லையில போனானோ?” என்றவள் சத்தமாக பேசிக் கொண்டிருக்க, அவரைப் பார்த்த கள்ளர்கள் இருவருக்கும், அவள் கூற வருவது எதுவும் புரியவில்லை. நாக்கு குளறுவதினால், அவளது பேச்சு யாருக்கும் புரியப் போவதில்லை என்பதை அறிந்து கொண்ட கள்ளர்கள் இருவரும் அவளை நெருங்க, பேச முடியாத பூவிழியாழோ,

 

“அட தண்டங்களா! திரும்ப திரும்ப எதுக்குடா என்னைய குறி வைச்சே வர்றீங்க. இதையும் என்னோட க்ரைம் லிஸ்ட்ல சேர்த்துடுவானே அந்த மூக்கு வேர்த்தவன். ஹேய்! ஹேய்! பக்கத்துல வராதீங்க டா. என் புருஷன் வந்தான், உங்க தலையை சீவிடுவான்.” என்றவளின் கழுத்தில் கத்தியை வைத்து கள்ளர்கள்,

 

“கத்துன குத்திடுவேன்.” என்க, “குத்துனா கத்திடுவேன்” என்றவள், “குத்துனா எப்படி கத்த முடியும்? அய்யய்யோ குத்திடாத.” என்று பேசியவளின் பாஷை அவர்களுக்கு புரியவில்லை இருந்தாலும், வந்த வேலையை நிறைவு செய்ய எண்ணியவர்கள்,

 

“ஒழுங்கா கஜானா எங்கே இருக்கிறதென்று கூறிவிடு. உன்னைய விட்டு விடுகிறோம்.” என்று கூற,

 

“டேய்! நான் என்னமோ இந்த கோட்டைய ப்ளான் போட்டு கட்டுன கொத்தனார் மாதிரி, என்கிட்ட வந்து கேட்குறீங்களேடா?! நான் என்ன கத்தி விஜயா?! கண்ணாலேயே ப்ளூ ப்ரிண்ட் எடுத்து உங்கள அங்க கூட்டிட்டு போக? எப்பா ராசாக்களா! விட்டுடுங்க டா. ஏற்கனவே பாதி செத்துட்டு இருக்கேன். மீதி உசுரை காமெடி பண்ணி கொன்னுடாதீங்கடா.” என்று பேசுபவளின் பரிபாஷை எதுவும் புரியாததால், 

 

“ஹேய்! இவளைத் தூக்கி தோள்களில் போடு! கஜானா எங்கே இருக்கிறதென்று தெரியலை என்றாலும், இவளுக்காக அந்த ரணவீரன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான் போலிருக்கின்றது.‌ இவளை நம் பாதாள பைரவி தேவிக்கு பழி கொடுக்கலாம்.” என்று கூறி, அவளின் வாயை பொத்தி தூக்கிக் கொண்டார்கள். அவர்கள் பேசியதை கேட்ட பூவிழியாழ்,

 

“என்னது பாதாள பைரவி தேவிக்கு பழி கொடுக்கப் போறீங்களா? அடேய் சார்! அடேய் சார்! என்னைய விட்டுடுங்களே ப்ளீஸ். பியூச்சர்ல உங்களுக்கு சிலை வைக்குறேன்.” என்று முணங்கியவளின் வாயிற்குள் துணியை வைத்து அடைத்தனர். 

 

‘அய்யோ! என்ன நாத்தம் பிடிச்ச துணியோ?! இந்த நாத்தத்துக்கு பதிலா நீங்க என்னைய கொன்னுருக்கலாம்டா.’ என்று மனதுக்குள் புலம்பியவளை தூக்க முயன்றவர்களை தடுத்தவள், தானே அவர்களோடு நடந்து வருவதாக கூறியவள், தனது வாயில் இருந்து துணியை எடுக்குமாறு சைகை செய்ய, 

 

“இதை எடுத்ததும் நீ கத்தக்கூடாது.” என்ற நிபந்தனையுடன் அதை அகற்றினர். 

 

“முன்னை செல்.” என்றவளை தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்வதை தூரத்தில் இருந்து பார்த்தான் ரணவீரன். அவனுடைய மனதில் இவள் உண்மையிலேயே மதிவாணனின் மகள் தானா? அல்லது அவரது மகளை கடத்தி வைத்துக் கொண்டு, கள்ளர்கூட்டப் பெண்ணை நடிக்க வைப்பதற்காக அனுப்பி உள்ளனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால் நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ரணவீரனின் அருகில் நின்றுகொண்டிருந்த மல்லியோ,

 

“விஷம் சாப்பிட்டால் நடக்க முடியாதே! ஆனால் இளவரசியார் தனியாக அவர்களுடன் நடந்தே செல்கிறார். என்னவாயிற்று அவர்களுக்கு?” என்று முணுமுணுத்தவாறே பூவிழியாழை பின்தொடர்ந்து செல்ல முயற்சிக்க, அவளை தடுத்து நிறுத்தினான் ரணவீரன். 

 

“நீ இங்கேயே இரு. நான் சென்று என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்.”

 

“அப்படியே ஆகட்டும் மன்னா!” என்ற மல்லி, பூவிழியாழுக்காக காத்திருந்தாள். அவர்கள் அவளை காட்டு வழியாக அழைத்துச் செல்ல அவர்களோடு சேர்ந்து நடக்க முடியாமல் நடந்து வந்தவள்,

 

“அடேய் தடி தண்டவராயா! எங்கடா கூட்டிட்டு போறீங்க? எனக்கு ரொம்ப பசிக்குது டா. இந்நேரம் அந்த வளர்ந்து கெட்டவன் கூட சாப்பிட ஏதாவது கொடுத்துருப்பான். நீங்க எதுவுமே கொடுக்காம நடத்தியே கூட்டிட்டு போறீங்கடா. காலெல்லாம் வலிக்குது. ஆமா! நான் விஷம் சாப்பிட்டு கிட்டத்தட்ட ராத்திரி ஆகப்போகுது. இன்னும் நான் ஏன் சாகல? டேய்! நான் உங்கக்கிட்ட ஒன்னு கேட்கணுமே?!”

 

“அடடடா இவளுடைய வாய் வலிக்கவே வலிக்காதா? பேசிக் கொண்டே இருக்கின்றாள். எனக்கு காதில் இருந்து ரத்தமே வந்துவிடும் போலிருக்கிறது சகோதரா!” என்று ஒருவன் கூற,

 

“சரியாகச் சொன்னாய். எனக்கும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் நமக்கே இப்படி இருக்கின்றதே அந்த மாவீரனைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார். அவனைக் கொல்ல போர்க்களம் தேவையில்லை. இவளோடு அவன் ஒரு நாள் இருந்தாலே போதும்; இவளது வாயே அவனை கொன்றுவிடும்.” என்று மற்றொருவர் கூறிக் கொண்டிருக்க,

 

“டேய் காட்டெருமைங்களா! நான் கேட்குறதுக்கு முதல்ல பதில் சொல்லிட்டு, அப்புறம் நீங்க உங்களுக்குள்ள பேசிக்கோங்க.” என்றவள், “நான் ஏன் பாதாள பைரவி கிணத்துல விழுந்தேன்? சொல்லு. நீ தானே என்னைய தள்ளிவிட்ட?!” என்று போதை ஏறியவள் போல் பிதற்றியவாறு தள்ளாடியபடியே நடந்தாள். இவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் ரணவீரன். 

 

“பேசாமல் வேகமாக நட.” என்றவளை தள்ள,

 

“ஹேய்! என்னைய தொடாத. தொட்ட மவனே கொன்னுடுவேன்.” என்ற பூவிழியாழ் தள்ளாடியபடியே செல்ல, அருகில் மண்டபம் ஒன்று வரவே, அதில் அமர்ந்து கொண்டாள். 

 

“ஹேய் என்ன உட்கார்ந்துவிட்டாய்?! எழுந்து வேகமாக நட.” என்றவர்களை முறைத்துப் பார்த்தவள், 

 

“போடாங்! என்னால முடியாது. போங்கடா. எனக்கு மயக்கமா வருது.” என்றவள் மயங்கி சரிய, சட்டென ஒரு கரம் வந்து அவளை தாங்கிப் பிடித்தது.

 

“முட்டாள்களா! இவளை இப்படியா அழைத்து வருவீர்கள்? என் மகாராணியின் கால் தரையில் படாமல் அழைத்து வந்திருக்க வேண்டாமா?” என்று வந்தவனைப் பார்த்த கள்ளர்கள்,

 

“இளவரசே! தாங்கள் கூறியபடி அவர்களை தூக்கிக் கொண்டு வரத்தான் நினைத்தோம். ஆனால் அவர்களே எங்களுடன் வந்துவிட்டதினால் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.” என்றவர்களை முறைத்துப் பார்த்தவன்,

 

“அந்த தண்ணீரை எடுங்கள்.” என்று கூறியவன், அவர்கள் கொடுத்த தண்ணீரை பூவிழியாழின் முகத்தில் தெளித்து, கன்னத்தை தட்டினான்.

 

“பூவு! பூவு! உன்னுடைய வேங்கையன் வந்திருக்கின்றேன். கண்விழித்து பார்.” என்று கூற, மறைந்திருந்து இவையனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த ரணவீரனின் புருவங்கள் முடிச்சிட்டன. 

 

‘யார் இவன்? கள்ளர்கள் கூட்டத் தலைவனா? அப்படி என்றால் இவனுக்கும் பூவிழியாழுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது பூவிழியாழின் குரல். 

 

“ஏய்! ச்சீ.. என்னைய தொடாத. தள்ளிப் போ. நான் யார் தெரியுமா? ராணாவோட பொண்டாட்டி. அவருக்கு மட்டும் நீங்க என்னைய கடத்திட்டு வந்தது தெரிஞ்சுச்சு, மவனே நீ காலி.” என்று கண்ணை திறவாமல் உலறியவாறே, வேங்கையனின் கையை தட்டிவிட்டவள், அங்கிருந்து எழுந்து செல்ல நினைத்து, எழுந்தவளின் கால்கள் மடங்கிட, அப்படியே மண்டபத்தில் இருந்து கீழே உருண்டு விழுந்தாள். 

 

“அய்யோ! பூவு!” என்றவாறே அவளைப் பிடிக்க வந்த வேங்கையனின் முன் வாளோடு வந்து நின்றான் ரணவீரன். அவனைக் கண்டதும் வேங்கையென பாய்ந்தான் வேங்கையன்,

 

“என் பூவு என்னை விட்டு போக நீ தானே காரணம். உன்னை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன்.” என்று தொடர்ந்து ரணவீரனின் மீது தாக்குதல் நடத்த,

 

“அது உன்னை படைத்த பிரம்மனாலும் முடியாது. பூவிழி எனது மனைவி. அவளை நினைக்க மட்டுமல்ல பார்க்கக்கூட உனக்கு உரிமையில்லை.” என்றவன் காற்றைத் போல் சுழன்றான். அவனை தடுக்க வந்த கள்ளர்களை வெட்டி வீழ்த்தியவனின் கண்ணில் இருந்து மறைந்து தப்பித்து ஓடினான் வேங்கையன். அவனை சுற்றி தேடி ரணவீரன், மண்டபத்தில் மூச்சு பேச்சில்லாமல் படுத்திருந்தவளின் கழுத்து நரம்பின் துடிப்பை அறிய எண்ணி, தொட்டு பார்க்க அதில் எவ்வித துடிப்பும் இல்லாமல் இருந்தது. 

 

“உன்னை தவறாக நினைத்து விட்டேன். என்னை மன்னித்து விடு பெண்ணே!” என்றவன் அவளை தனது கைகளில் ஏந்திக் கொண்டு தனது அரண்மனைக்கு விரைந்தான் ரணவீரன். அரண்மணையில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அவளை தூக்கிச் சென்றவன், படுக்கையில் படுக்க வைத்தான். பூவிழியாழின் நிலையை பார்த்த மல்லி, அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தவள்,

 

“இளவரசியாரே! தங்களுக்கு என்னாயிற்று? ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள்? எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பீர்களே?! இப்போது தங்களது பேச்சு எங்கே போயிற்று? கண்ணைத் திறந்து பாருங்கள் இளவரசியாரே! அடியேய் மல்லி! என்று என்னை திட்டுங்கள்; முடிந்தால் தாங்கள் விஷத்தை அருந்துவதை பார்த்துக் கொண்டிருந்ததற்காக என்னை நான்கு அடிகூட அடித்துவிடுங்கள். ஆனால் என்னை தனியாக விட்டு எங்கும் செல்லாதீர்கள் இளவரசியாரே! தாங்கள் இல்லாமல் என்னால் இவ்வுலகில் வாழ இயலாது. என்னையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுங்கள். எழுங்கள் இளவரசியாரே!” என்று கதறி அழுதவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று அறியாது நின்றிருந்தான் ரணவீரன். 

 

“மன்னா! இப்போது என்ன செய்வதென்று ஆணையிடுங்கள் மன்னா!” என்றவாறு அங்கதன் வந்து நிற்க, 

 

“இவள் எனது மனைவி. இச்சமஸ்தானத்தின் மகாராணி. அரச மரியாதையுடன் இவளது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்.” என்று கூற, அதனை கேட்ட மல்லி, பூவிழியாழின் உடலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உலுக்கிய உலுக்கலில் சட்டென எழுந்தமர்ந்தாள் பூவிழியாழ். 

 

“அக்அக்க்அக்க்.. நான் எங்க இருக்கேன்? இது எந்த இடம்? சொர்க்கமா? நரகமா?” என்றவள் ரணவீரனைப் பார்த்ததும்,

 

“அய்யோ! இவனும் இங்க தான் இருக்கானா? அப்போ இது கண்டிப்பா நரகம் தான். ஆமா! எங்க எமதூதர்கள்? இவனுமா இங்க இருக்கான்” என்றவள் அங்கதனை பார்த்து கை நீட்ட, 

 

“இளவரசியாரே! தங்களுக்கு எதுவும் ஆகவில்லை அல்லவா?! தாங்கள் நன்றாக இருக்கின்றீர்கள் தானே?!” என்ற மல்லி, பூவிழியாழைப் பிடித்து உலுக்கி எடுக்க,

 

“சும்மா இரு மல்லி. நீ உலுக்குற உலுக்குல உள்ள வேலை செய்யாம இருக்குற விஷம், வேலை செஞ்சிடப் போகுது.” என்ற பூவிழியாழை நோக்கி வந்த ரணவீரன்,

 

“நீ எதை சாப்பிட்டாய்? அதை என்னிடம் காட்டு.” என்று கூற, பூவிழியாழின் பெட்டிக்குள் மீதமிருந்த சில வில்லைகளை எடுத்து கொடுத்தாள் மல்லி. அதனை நுகர்ந்து பார்த்த ரணவீரன்,

 

“இது விஷமல்லவே; போதை தரும் ஒரு பாங் வகையைச் சேர்ந்த இலை வகைகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதை சாப்பிட்டால் மனநோய் குணமாகும். இதையா விஷமென்று சாப்பிட்டாய்?” என்றவன் கேட்க, மல்லியை நோக்கி கையை நீட்டிய பூவிழியாழ்,

 

“இவ தான் சொன்னா இது விஷம்னு. அதான் சாப்டேன்.” என்று உதட்டை சுளித்தவாறு கூறியவளை கோபத்துடன் பார்த்த ரணவீரன்,

 

 “இப்போது சாக வேண்டும் என்ற அவசியமென்ன வந்தது?” என்று கேட்க, 

 

“நான் எந்த தப்பும் செய்யலைன்னு நிரூபிக்க எனக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை.” என்று கூற, ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து செல்ல முயன்றவனிடம்,

 

“இப்போ தான் நான் எந்த தப்பும் செய்யலைன்னு புரிஞ்சுகிட்டு மன்னிப்பெல்லாம் கேட்டீங்களே?!” என்று கூற,

 

“அதற்கு நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று திரும்பியவனைப் பார்க்காது, வேறெங்கோ பார்த்தவாறு முகத்தை திருப்பி வைத்துக் கொண்டவள்,

 

“என்னால ஒரே ரூம்குள்ள அடைஞ்சு கிடக்க முடியாது. அதுனால சுதந்திரமா வெளிய போயிட்டு வர்றதுக்கு அனுமதிக்கணும்.” என்று கேட்க, முடியாதென தலையாட்டியவன், அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவன் நகர முடியாது பின்னால் இருந்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பூவிழியாழ். 

 

“நீங்க எனக்கு அனுமதி அளிக்கும் வரைக்கும் உங்களையும் வெளியே விடமாட்டேன்.” என்றவனை பிடித்து இழுத்தவளின் மேனி பட்டு சிலிர்த்தான் ரணவீரன். பலங்கொண்ட மத யானையையே தன் கைகளால் தூக்கி வீசக்கூடிய அசாதாரண சூரனான ரணவீரனுக்கு எறும்பை போல் இருக்கும் பூவிழியாழை தூக்கி வீசுவது அவ்வளவு கடினமான காரியமல்லவே! இருந்தாலும் அவளின் போக்கிற்கே சென்றான் ரணவீரன். தன் மன்னரை போகவிடாது தடுத்து கொண்டிருக்கும் பூவிழியாழின் கழுத்தோடு மர்ம அடி ஒன்றை அங்கதன் வைக்க, அப்படியே மயங்கி சரிந்தாள் பூவிழியாழ். இதனைக் கண்ட ரணவீரன் அங்கதனை முறைக்க, அங்கதனின் மீது தாவி ஏறி அவனை தாக்கத் தொடங்கினாள் மல்லி. அவர்கள் இருவரும் அங்கு சண்டையிட்டு கொண்டிருக்க, பூப்போன்றவளை தன் கைகளில் தாங்கி படுக்கையில் கிடத்திவிட்டு அங்கிருந்து சென்றான் ரணவீரன். மங்கையவளின் மனதோடு மன்னவனின் மனம் சேருமோ?

 

அத்தியாயம் 12

 

மதியம் போல் எழுந்தமர்ந்த பூவிழியாழ்,

 

“எப்பா யாரோ அடிச்சு போட்ட மாதிரி உடம்பு என்னமா வலிக்குது?” என்று கூற, சட்டென அங்கதன் தன்னை தாக்கியது நினைவுக்கு வரவே,

 

“என்னையவாடா அடிச்ச? தடி தாண்டவராயா! இதோ வர்றேன்டா. வந்து உன் கையை உடைச்சு அடுப்புல போட்டு எரிக்கல?! நான் வேலுநாச்சியார் கொல்லுபேத்தியில்ல!” என்றவள் வேகமாக எழுந்து வெளியே செல்ல கதவை திறக்க முயல, அது பின்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவளின் பின்னோடு ஓடி வந்திருந்த மல்லி,

 

“இளவரசியாரே! வெளிபக்கமாக தாள் போடப்பட்டுள்ளது.” என்று கூற, தன் தலையில் குத்தியிருந்த ஹேர்பின்னை எடுத்து தாளிட்டப்பட்ட கதவின் பூட்டுக்குள் விட்டு குடைந்தாள். பட்டென்று கதவு திறந்து கொண்டதும்,

 

“ஹேய்! பாரு மல்லி. நான் கதவை திறந்துட்டேன். எத்தனை தடவை ராஜம்மாவை ஏமாத்தி திறந்துருப்பேன்.” என்று வெளியே ஓடியவளை பின்தொடர்ந்து சென்றாள் மல்லி. சமஸ்தானத்தின் எல்லை வரை சென்றவளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஒற்றர்கள் ரணவீரனுக்கு தகவல் சொல்ல, அந்நாட்டின் எல்லையை தாண்டும் முன் குதிரையில் அங்கு வந்து சேர்ந்தான். அங்கே வாயிற்காவலனோடு சண்டையிட்டு கொண்டிருக்கும் தன் சண்டைக்காரியை இடையோடு வளைத்து தன்னோடு குதிரையில் அமர்த்திக் கொண்டான் ரணவீரன்.  

 

“யோவ் விடுயா என்னை! நான் என்ன கோழியா டக்குன்னு கொத்திட்டு போற? விடுன்னு சொல்றேன்ல.” என்று கத்த, 

 

“விட்டால் கீழே விழுந்துவிடுவாய். பிறகு கை உடைந்து விட்டது; கால் உடைந்து விட்டது என்று என்னை குறை சொல்லாதே!” என்று கூறியவனின் கையில் நறுக்கென கிள்ளியவள்,

 

“யோவ் ராணா! இதென்ன டொக்கு டொக்கு நோஞ்சானாட்டும் போகுது. குதிரைனா அப்படி பறக்கணும்.” என்று தன் கையை விமானம் பறப்பது போல் செய்து காண்பிக்க, அவளது இடையை இறுக்கமாக பற்றினான் ரணவீரன்.

 

“யோவ் வலிக்குது! இப்படியா அழுத்துவ? காலையில் சாப்பிட்டது அப்படியே வாய் வழியா வர மாதிரி இருக்கு.” என்றவளின் காதருகே தன் உதடு உரசுமாறு கொண்டு வந்தவன்,

 

“நான் உன்னை பிடிக்கவில்லை என்றால் நீ தான் கீழே விழுவாய்.” என்றவன் காற்றைத் கிழித்துக் கொண்டு செல்லுமாறு குதிரை விரட்டினான். 

 

“யாஹூஊஊஊஊ.. இன்னும் வேகமா.. இன்னும் வேகமா..” என்றவள் உற்சாகமாக கத்த, இன்னும் வேகமாக விரட்டினான். அவளின் கூந்தல் கற்றை முடி தன் முகத்தில் மோத, அதன் வாசனையை முகர்ந்தவாறே அவளது தோள்பட்டையில் தனது தாடையை வைத்தவனின் இதழ்களை தொட்டு சென்றது அவளது ஜிமிக்கி. எவ்வளவு தூரம் தன்னை மறந்து சென்றனரோ, அவர்களது சமஸ்தானத்தை தாண்டி வெகு தூரம் சென்றுவிட்டனர். அவளின் களைப்பை கவனித்தவன், நதிக்கரை ஓரத்தில் குதிரையை நிறுத்திவிட்டு, அருகே குகை போல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

“இரவு வெகு நேரமாகி விட்டது. இனி நாம் காலையில் பயணம் மேற்கொள்வதே சிறந்தது. இப்படி அமர்ந்திரு. இதோ வருகிறேன்.” என்று கூறியவன், அவளுக்கு சாப்பிட சில பழங்களை பறித்து கொடுத்தான். அதனை ஆசையாக எடுத்து வாயில் வைக்கும் போது சரியாக அவர்களை நோக்கி அம்பு மழை பொழிய, பூவிழியாழை மறைவாக இழுத்தவன், தன் வாளை தூக்கிக் கொண்டு மின்னலாக பாய்ந்தான் ரணவீரன். கள்ளர்கூட்டம் ஈட்டி மற்றும் அப்போது நெருங்கி வர, சட்டென பூவிழியாழை தன் தோளில் தூக்கிப் போட்டவன், சரசரவென அருகில் இருந்த மரத்தின் கிளையைப் பிடித்து மேலே சென்றவன், அங்கிருந்த கிளையில் அவளை அமர வைத்தான். தன் உடலை மறைத்திருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து அவள் மேல் போர்த்தியவன்,

 

“இங்கிருந்து எதற்காகவும் கீழே இறங்காதே!” என்றவள் கன்னத்தை தட்டிவிட்டு, அடுத்த கிளையை தாவி சென்று விட்டான். 

 

“அடப்பாவிகளா! வடைப் போச்சே! கையில கிடைச்சதை முழுசா என்னைக்கும் திங்க விடமாட்டிங்களாடா?!” என்றவள் மேலிருந்து கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். ரணவீரனின் வலது புறம் இருந்து ஈட்டியோடு தாக்க வந்தவர்களை தனது வாளினால் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தனின் பின்னால் இலைதளைகளை உடையாக அணிந்து கொண்டிருந்த வேங்கையன் வாளோடு தாக்க வரவே, மேலிருந்து பார்த்தவள்

 

“ராணாஆஆஆஆஆஆஆ! உனக்கு பின்னாடி வர்றான் பாருஆஆஆஆஆ!” என்று பூவிழியாழ் கத்த, சட்டென திரும்பியவனின் கையை உரசிச் சென்றது வேங்கையனின் வாள். அதனை மேலிருந்து பார்த்தவள், அதிர்ச்சியில் உறைந்து போனாள் பூவிழியாழ். அடிபட்டது ரணவீரனுக்காக இருந்தாலும் அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. தனக்கு பின்னால் ஏதோ சலசலப்பு தெரிய திரும்பி பார்த்தவளின் இதயம் துடிக்காமல் நின்றுவிட்டதை போல் இருந்தது. கீழே தன் காயத்தினை கூட பொருட்படுத்தாது வேங்கையனோடு ரணவீரன் போர் புரிந்து கொண்டிருக்க, இங்கு கிளையில் வேட்டையாடும் கண்கள் பளபளக்க, தன் இரையின் இலக்கை நோக்கி வந்து கொண்டிருந்தது சிறுத்தை. 

 

“அடேய் இது ஒன்னு தான் பாக்கி. டிஸ்கவரி சேனல்ல பார்த்தது. கடைசில இதையும் என்னைய நேர்ல பார்க்க வைச்சிட்டீங்களேடா. அது ஏன் என்னைய அப்படி குறுகுறுன்னு பார்க்குது? கத்துனா கழுத்தை கவ்வுமோ? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? கடவுளே! என்னைய எப்படியாவது இதுகிட்ட இருந்து காப்பாத்திடுப்பா!” என்றவளை தாக்க தயாரானது சிறுத்தை. கீழே தங்கள் உயிரை காப்பாற்ற போராடும் ரணவீரன்; இங்கு மரக்கிளையில் தன் கண் முன்னே நிற்கும் மரணம். சிறு சத்தம் கொடுத்தாலும் மரணம் நிச்சயம். விதியின் வசத்தில் சிக்கிருக்கும் இருவரும் உயிர் பிழைப்பனரா?

 

அத்தியாயம் 13

 

சிறுத்தை மெல்ல அடியெடுத்து வைக்க, தனக்கு பின்னால் மிக மெதுவாக நகரந்தவளின் கால் தடுமாறி கீழே விழப் போனாள் பூவிழியாழ். எங்கே தனது இரை தன்னுடைய கையை விட்டு சென்று விடுமோ என்ற பதற்றத்தில், அவளின் மேல் பாய விழைந்த சிறுத்தையின் கழுத்தில் சரியாக வந்து சொருகியது ரணவீரனின் அம்பு. கீழே விழுந்து விடாமல் இருக்க கிளையைப் பற்றி தொங்கிக் கொண்டிருந்தவளின் கை வலுக்கி விழுந்துவளை தனது கைகளில் தாங்கிக் கொண்டான். அவர்களை இன்னும் பலர் சுற்றி வளைத்திட, அவளை இறக்கிவிட்ட மறுநிமிடம் சுழற்காற்றாய் சுழன்றவன், அங்கிருந்த அனைவரையும் கொன்று குவித்தான். அவனின் வீரவேகத்தை கண்ட வேங்கையனின் வாள் பிடித்த கைகளும் நடுங்கின. பூவிழியாழை தன் அணைப்பில் வைத்தவாறே, வேங்கையனை மண்டியிடச் செய்து, அவனது கழுத்தில் வாளை வைத்தான் ரணவீரன்.

 

 “இவள் எனது மனைவி. இந்த ரணவீர சமஸ்தானத்தின் மகாராணி. புரிந்ததா?” என்று கத்தியபடியே அவனது தலையை சீவ வாளை ஓங்கியவனை இடையோடு பயத்தில் இறுக்கி அணைத்துக் கொண்டாள் பூவிழியாழ். அவளின் மூடிய கண்களை பார்த்ததும், தன் உறைவாளை கீழே இறக்கியவன், 

 

“உயிர்ப்பிச்சை தருகிறேன். இங்கிருந்து ஓடிவிடு.” என்று கூற, 

 

“நீ தரும் உயிர்ப்பிச்சை எனக்கு தேவையில்லை.” என்ற வேங்கையன், தன்னை மிரளும் விழியால் பார்த்துக் கொண்டிருந்த பூவிழியாழிடம்,

 

“இவன் உயிர்ப்பிச்சை கொடுத்த இத்தேகம் எனக்கு தேவையில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். எங்களின் சொத்தை எங்களிடம் உன் மணவாளன் ஒப்படைக்கும் வரை, உங்கள் வாழ்வில் நிம்மதியேது? அடுத்தொரு ஜென்மம் உண்டெனில் உன் கணவனாக வருவேன்.” என்று கூறிய மறுநிமிடம் தனது வாளால் தன்னை குத்திக் கொண்டு உயிர்த்தியாகம் செய்தான் வேங்கையன். அதனை பார்த்தவள்,

 

“ஏய்! லூசு!” என்றவாறு தடுக்க நினைத்தாள், ஆனால் முடியாது போயிற்று. வேங்கையனின் தற்கொலையை நேரில் பார்த்த அதிர்ச்சியில் அதிர்ந்து போய் தன் கையணைப்பில் கோழிகுஞ்சாக நடுங்கிக் கொண்டிருப்பவளை தூக்கி குதிரையில் அமர வைத்தவன், காற்றை கிழித்துக் கொண்டு அரண்மணை வந்து சேர்ந்தான். மல்லியிடம் பூவிழியாழை கவனித்துக் கொள்ளுமாறு கூறியவன், தனதறைக்குச் சென்றான். ராஜ வைத்தியரை அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டவன், அவருக்காக காத்திருக்கலானான். இங்கு தனதறையில் தூங்கிக் கொண்டிருந்தவளின் கனவில் வந்த வேங்கையன், தன் கையில் இருக்கும் வாள் கொண்டு ரணவீரனை குத்துவதை கண்டவள், 

 

“நோ, ராணாஆஆஆஆஆஆ..” என்று அலறியபடி எழுந்ததும், அவனை தான் எங்கும் தேடினாள் பூவிழியாழ்.

 

“ராணா.. ராணா.. டேய் எரும ராணா..” என்று பித்துப் பிடித்தவள் போல் அவனை தேடியவளை தடுத்து நிறுத்தினாள் மல்லி. 

 

“சாந்தி கொள்ளுங்கள் இளவரசியாரே! சாந்தி கொள்ளுங்கள்..”

 

“நான் ஏன் அவளை கொல்லணும்? இந்த ராணாவைத் தான் கொல்லணும். எங்கப் போய் தொலைஞ்சான்? அந்த கடங்காரன்!”

 

“அய்யோ இளவரசியாரே! மன்னர் ஏற்கனவே அடிபட்டு இருக்கிறார். இதில் தாங்கள் ஏன் அவரை வதைக்க எண்ணுகிறீர்கள்?”

 

“கொஞ்ச நேரம் உன்னோட கோனார் நோட்ஸை ஸ்டாப் பண்றியா? எனக்கு இப்பவே அந்த ராணா பையனை பார்க்கணும். கூட்டிட்டு போவியா? மாட்டியா?”

 

“உங்களை தடுக்க மன்னராலும் முடியாதே?! வாருங்கள் அழைத்துச் செல்கிறேன். பார்த்து வாருங்கள் இளவரசியாரே!” என்ற மல்லி, ரணவீரனிடம் பூவிழியாழை அழைத்துச் சென்றாள். அவனது அறையை நெருங்கியதும், பூவிழியாழிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் மல்லி. உள்ளே நுழைந்த பூவிழியாழின் விழிகளில் விழுந்தான் ரணவீரன். அடிபட்ட கையில் ராஜ வைத்தியர் வழங்கிய களிம்பை தன் தோளில் தடவ முயற்சித்து கொண்டிருந்தான். 

 

“க்கும்..” என்று தொண்டையை செறுமியவாறே உள்ளே சென்றவள், அவன் கையில் இருந்த களிம்பை வெடுக்கென்று பிடுங்கியவள், அவன் மேலிருந்த அங்கவஸ்திரத்தை நீக்கினாள். அதில் கண்ட எண்ணற்ற வடுக்களை கண்டவளின் விழிகள் கலங்கியது.

 

“என்னடா ராணா இது? இவ்வளோ வாங்கி வைச்சுருக்க? இதெல்லாம் ரொம்ப ஆழமான காயமா இருக்கு. உனக்கு கொஞ்சம் கூட வலிக்கலையா?” என்றாள் அதையெல்லாம் தொட்டுப்பார்த்தவாறே.

 

“இதெல்லாம் விழுப்புண்கள். எனக்கு கிடைத்த சன்மானங்கள். என் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க எனது உயிரையும் கொடுப்பேன்.”

 

“யோவ் ராணா! அப்புறமெதுக்குயா என்னைய கல்யாணம் பண்ணப் போறேன்னு அழைச்சுட்டு வந்த? உன் கூட சேர்ந்து சந்தோஷமா சாகவா? திரும்பு நானே மருந்து போட்டுவிடுறேன்.”

 

“பெண்ணே, நீ பேசுவது எதுவும் எனக்கு விளங்கவில்லை.”

 

“நாளைக்கே ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் எழுதி தர்றேன். படிச்சு புரிஞ்சுக்கோ.” என்றவளைப் பார்த்து கன்னத்தில் குழி விழுக அழகாக புன்னகைத்தான் ரணவீரன். அதனை பார்த்த பூவிழியாழ்,

 

“என்ன இளிப்பு? என்னைய பார்த்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?”

 

“ஆம் என்று சொன்னால் என்ன செய்வாய்?” என்றவன் கூறியதும் காயத்தில் மருந்தை அழுத்தி தேய்த்தவளின் கையைப் பிடித்து முன்னால் இழுத்ததும், அவனின் மடியில் வந்து விழுந்தாள். சூரியனை நோக்கி மலரும் தாமரைப் போல் அவனது முகம் நோக்கி மலர்ந்தவளின் விழிகளுக்குள் தன் விழிகளை கலந்தவனின் விரல்கள், வழுவழுப்பான அவளது தோள்களை வீணையென மீட்டத் தொடங்கியது. அவனது விரல் மொழி மங்கையவளுக்கு புரிந்ததோ? அவளது தளிர் மேனியும் சிலிர்த்து நடுங்கியது. 

 

“யோவ் ராணா! ஏன்யா பட்டிக்காட்டான் மிட்டாயை பார்க்குற மாதிரியே பார்க்குற? இதுக்கு முன்னாடி நீ பொண்ணையே பார்த்ததில்லையா?”

 

“இல்லையென்று கூறினால் நம்புவாயா?”

 

“சும்மா உடான்ஸ் விடாத. நீ இரண்டு இல்ல மூணு..” என்று அவனிடம் தன் கைவிரல்களை மாற்றி மாற்றி காண்பித்தவள்,

 

“கல்யாணம் பண்ணி அத்தனை பேரையும் வெட்டி கொன்னுட்டியாமே?! எனக்கு எல்லாம் தெரியும். போயா! போயா! புழுகு மூட்டை!”

 

 “அதெல்லாம் கட்டுக்கதைகள். நான் போர்க்களத்தில் எதிரிகளைத் தான் கொன்று குவித்திருக்கின்றேன். ஒரு பெண்ணிடம் என் வீரத்தை காட்டும் அளவிற்கு நான் ஒன்றும் பேடியில்லை. பெண்களை தெய்வமென நினைப்பவன்.”

 

“அப்போ உன்னோட அம்மா எங்க? அப்பா எங்க?”

 

“என்னைப்பற்றி தெரிய வேண்டுமா?”

 

“ம்ம்ம்..”

 

“நான் பேரரசர் பாண்டிய மன்னனின் மெய்காப்பாளன் சந்திரசேனாபதியின் மகன். ஒருமுறை மன்னரையும் அரசியாரையும் காக்கும் பொருட்டு என் தந்தை தனது உயிரை தியாகம் செய்தார். அதன்பின்னர் நான் மன்னரின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டேன். எனது தாயார் என்னுடைய இளம்வயதிலேயே கொடிய நோயின் தாக்கத்தால் இறந்துவிட்டார். எனது உயிர், உடல், ஆன்மா அனைத்தும் என் நாட்டுக்கு சேவகம் செய்வதில் தான் இருக்கிறது.”

 

“ஓ! அதுனால தான் அந்த மன்னர் உனக்காக எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு என்னைய இங்க அனுப்பி வைக்கப் சொன்னாரா?” 

 

“இருக்கலாம்..”

 

“சரி ராணா! எனக்கு தூக்கமா வருது. ஏதோ உன்னைய பார்க்கணும்னு தோணுச்சு. அதான் வந்தேன். நீ நல்லப்பிள்ளையா சாப்பிட்டு தூங்கு. நானும் போய் சாப்பிட்டு தூங்குறேன். குட் நைட்.”

 

“பெண்ணே! பேசும் வார்த்தைகளில் சில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? அது என்ன மொழி? வித்தியாசமாக உள்ளது.”

 

“நானே வித்தியாசமானவ தான்.” என்றவள் முணுமுணுக்க, அவளை புரியாது பார்த்திருந்தான் ரணவீரன். 

 

“உடனே ஏலியனை பார்க்குற மாதிரி பார்க்காத. எல்லாத்தையும் பொறுமையா இன்னொரு நாள் சொல்றேன். இப்போ கிளம்புறேன்.” என்றவள் அவனது காயத்தினை பார்த்து,

 

“காயம் ரொம்ப ஆழமா இருக்குல்ல. ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க, பூவை விட மென்மையாக அவளை அணைத்தவன், மெல்ல அவளது நெற்றியில் முத்தமிட, சட்டென பூவிழியாழின் உள்ளங்காலில் இருந்து தலை வரை மின்னலொன்று வெட்டியது. அவனது மார்ப்பில் தன் கைகளை வைத்து அழுத்தியவளின் தேக சூட்டை உணர்ந்திருந்தான் ரணவீரன். கண்களை மூடி இருந்தவளின், கண்களுக்குள் பட்டாம்பூச்சியாய் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்த கருவிழிகளுக்கு இருமுத்தங்களை பரிசளித்தான். அவளின் உடல் ஒருமுறை தூக்கிப் போட, அவளுக்குள் நடக்கின்ற மாற்றத்தை உணர்ந்தவாறே, துடிக்கும் அவளது சிவந்த மென்மையான அதரங்களோடு தனது முரட்டு அதரங்களை இணைத்துக் கொண்டான். முதலில் மெல்ல இதழோடு இதழ் ஒற்றி எடுத்தவனுக்கு, இன்னுமொரு இதழ் ஒன்றில் தேவையிருக்கவே, இரண்டாம் முறை இன்னும் அழுத்தமாக ஒற்றி எடுத்தான். அதன் நெருக்கம் போதவில்லை என்றெண்ணியவன், இம்முறை அவளது இதழை தன் இதழால் பிரித்து மேலிதழை மட்டும் தனது இதழுக்குள் இழுத்து சுவைக்க ஆரம்பித்தான். பின்னர் கீழிதழை வலிக்காது கடித்து இழுத்து சப்பியவன், தங்களது பற்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று உரச, நாக்கு இரண்டும் போர்க்களத்தில் போர் புரிவது போல் சண்டையிட்டு கொள்ளும் வகையில் வன்முத்தம் அளித்தான். இதழ்கள் மட்டுமே சண்டையிட்டு கொண்டிருக்க, தன் மடியில் அமர்ந்திருந்தவளின் இடையை மேலும் இறுக பற்றி அழுத்தியவனுக்கு, தன் முகத்தை இன்னும் ஏந்தி கொடுத்தாள் பூவிழியாழ். இருவரும் தங்கள் நிலை மறந்திருக்க, வாயிலில் வாயிற்காப்பாளனின் குரல் கேட்டது. 

 

“மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்!” என்ற அவனது குரலில் சட்டென தன்னை மீட்டுக் கொண்டவன், தன் மடியில் அமர்ந்திருக்கும் பூவிழியாழை தூக்கி கீழே அமர வைத்தான். சிறு பிள்ளை போல் திருதிருவென விழித்தவள், தலை குனிந்தவாறே தன் இதழ்களை துடைத்துக் கொண்டு, தனது உடைகளையும் சரி செய்து கொண்டாள். அவள் சமநிலைக்கு வந்து விட்டாள் என்பதை அறிந்து கொண்ட பிறகே, அந்த வாயிற்காப்பாளனை உள்ளே வர அனுமதி அளித்தான் ரணவீரன். உள்ளே வந்த வாயிற் காப்பாளன்,

 

“அரசே! பேரரசர் பாண்டிய மன்னரிடம் இருந்து ஓலை வந்துள்ளது.” என்று அந்த ஓலையை ரணவீரன் கையில் அளித்து விட்டு செல்ல, அதனை பிரித்து பார்த்தவனை கேள்வியாக பார்த்தாள் பூவிழாயாழ். அவளுக்கு பதில் அளிக்கும் பொருட்டு,

 

“நாளை நம் நாட்டு ஆஸ்தான ஜோதிடர் வருகை தர உள்ளதாக பேரரசர் ஓலை அனுப்பியுள்ளார்.” என்று கூறியதும் அவ்வளவு தானா, என்பது போல் அவனை பார்த்தாள். இவ்வளவு நேரம் தன்னிடம் இளகி, ஒட்டி உறவாடியவனா இவன்? என்றவளது உள்ளம் கேள்வி கேட்டது. ஏனெனில் அவனது கண்களில் இப்போது காதல், மோகம் எதுவுமில்லை. அவன் கண்களில் இருப்பதென்ன? வலியா? சோகமா? குற்ற உணர்ச்சியா? ஏக்கமா? எதுவென்று அறியாது மங்கையவளின் மனமும், அலை மேல் படகாக தத்தளிக்கத் தொடங்கியது. உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை பார்த்தவன்,

 

“இரவு வெகுநேரம் ஆகிவிட்டது தாங்கள் சென்று ஓய்வெடுங்கள் இளவரசியாரே!” என்றவனை புரியாது பார்த்தவளுக்கு, ஏதோ ஒன்று அந்த ஓலையில் இருக்கின்றதென புரிந்து போனது. 

 

“அந்த ஓலைல அப்படி என்ன இருக்கு? அதை பார்த்த உடனே ஏன் உங்க முகம் மாறுது?” என்றவளின் வாயில் இருந்து வந்த மரியாதையை கண்டதும் அவனது மனம் வலித்தது. அனைவரும் மன்னரென்று தள்ளி நிற்கும் போது, தோழியாக, தாயாக தன்னை அதட்டி உருட்டி திரிந்த பெண்ணின் நடவடிக்கைகள் யாவும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இப்போது அவளிடமும் தனது கடினத்தன்மையை காட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பவனுக்கு மனம் முழுவதும் வலித்தது. இருப்பினும் அவளது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை அவன் செய்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். அவள் எதிர்காலத்தை அவன் முடிவு செய்தால் போதுமா? ரணவீரனின் முடிவிற்கு பூவிழியாழின் பதில் என்னவோ?!

 

அத்தியாயம் 14

 

“ஆஆஆஆஹ்ஆஆஆஆஹ்..”

 

“அய்யோ எதுக்கு டி இப்ப இப்படி அழுகுற?”

 

“அதைச் சொன்னால் உங்களுக்கு புரியாது.”

 

“நீ சொல்லு. புரியுதா? புரியலையான்னு நான் சொல்றேன்.”

 

“அது வந்து ராஜமாதா..” என்று தொடங்கிய ஆருஷா, கப்பலில் நடந்த அத்தனையையும் கூறி முடித்துவிட்டு மீண்டும் அழுகுத் தொடங்க, எரிச்சலான வேலுநாச்சியார்,

 

“இப்ப அழுத? மவளே! கொன்றுவேன். வாயை மூடு. ம்ம் மூடு.” என்றதும் தன் வாயின் மேல் இரு கைகளையும் வைத்து மூடியவளைப் பார்த்த வேலுநாச்சியார்,

 

“இப்ப நான் கேட்கும் கேள்விகளுக்கு அழுகாம ஒழுங்கா பதில் சொல்லணும். புரியுதா?” என்று சொல்ல, அதற்கு “ம்ம்ம்..” என்று பதிலளித்தவாறு தலையை ஆட்டினாள் ஆருஷா. 

 

“சும்மா எதுக்கெடுத்தாலும் அழுகக்கூடாது. நீ ஒரு இளவரசி. புரிஞ்சுதா?”

 

“ம்ம்ம்..”

 

“இப்போ உங்களுக்குள்ள கசமுசா நடந்துடுச்சேன்னு நினைச்சு அழுகுறியா இல்ல அந்த பெட்டிங்க காணாம போனதால, உன் இடத்துக்கு திரும்பிப் போக முடியாதேன்னு நினைச்சு அழுகுறியா? எதை நினைச்சு அழுகுற? முதல்ல அதைச் சொல்லு.”

 

“என் மாங்கல்ய தோஷத்தை நினைத்துத் தான் அழுகின்றேன். நான் என் இடத்திற்கு செல்லவில்லை என்றால் எவ்வாறு தங்களது பேத்தியை இங்கு அழைத்து வருவது? என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது கணவரும் உங்கள் பேத்தியும் நன்றாக இருந்தால் போதும். அதற்கு அந்த பெட்டிகள் வேண்டும்.” என்றவளை பார்த்த வேலுநாச்சியாருக்கு மனம் வலித்தது. இவளைப் பார்த்து தான் பொறாமைப்பட்டதை நினைத்து வருந்தினார்.

 

“அப்ப என்னோட பேத்தி வந்தோனே இந்த வாழ்க்கையை அவளுக்கு கொடுத்துடப்போறியா?”

 

“நான் வாழ்ந்து கொண்டிருப்பதே தங்கள் பேத்தியின் வாழ்க்கையை தானே?! அதை அவருக்கு திரும்பி தருவதே தானே நியாயம்?!”

 

“ரொம்ப சந்தோஷம்மா. நான் கூட உன்னைய என்னமோ நினைச்சேன். எப்படியாவது என் பேத்தியை திருப்பி கூட்டிட்டு வந்துருமா.”

 

“கண்டிப்பாக! உங்க பேத்தியை உங்களிடம் ஒப்படைத்து, அவர்களது வாழ்வை அவர்களுக்கு திருப்பி தருவேன் என்று உங்களுக்கு நான் வாக்களிக்கின்றேன் ராஜமாதா.”

 

“அப்படின்னா நான் ஒன்னு சொல்வேன். நீ அதை செய்யணும்.”

 

“சொல்லுங்க ராஜமாதா.”

 

“இனி இது என்னோட பேத்தியோட வாழ்க்கை அப்படித்தானே?!”

 

“ஆம் ராஜமாதா!”

 

“அப்போ இனிமே.. நீ ராக்கி கூட அப்படி இப்படி ம்ஹும்..”

 

“அப்படி இப்படி என்றால்?”

 

“அதான் கப்பல்ல நடந்துச்சே, அது மாதிரி இனிமே நடக்காம பார்த்துக்கணும். ஏன்னா இனிமே இது என் பேத்தியோட வாழ்க்கை.”

 

“ஓ! அப்படியே ஆகட்டும் ராஜமாதா.” என்றவள் மெல்ல எழுந்து தனதறைக்குள் சென்றாள். 

 

*********************************************

 

தனது புதையல் பெட்டிகளை மல்கோத்ராவின் ஆட்கள் தூக்கிச் சென்றுள்ளனர் என்று தெரிந்த அடுத்த நொடியே அவைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு தான் சென்றான். அங்கு நுழைந்ததும் தன்னை தாக்கத் தயாரானவர்களை பார்த்த ராக்கி,

 

“எத்தனை தடவ தான்டா என்கிட்ட வாங்குவீங்க? அடி வாங்கும் உங்களுக்கு போர் அடிக்குதோ இல்லையோ அடிக்குற எனக்கு ரொம்ப போர் அடிக்குது. அதுனால ஸ்ரைட்டா ஒரு டீல் வைச்சுப்போமா? டேய் தூக்கிட்டு வாங்கடா அந்த தெய்வத்தை..” என்றதும் மல்கோத்ராவின் செல்ல மகன் ராஜை தூக்கிக் கொண்டு வந்தனர் ராக்கியின் ஆட்கள். இங்கப்பாரு மல்கோத்ரா! எனக்கு வாயால பேசி பழக்கமேயில்ல. அடிக்கு உதவாதவன் யாருமில்ல. அதுனால நீயா அந்த புதையலை கொடுத்துட்டா நல்லது. அப்புறம்‌ உன்‌ மகன்கிட்ட சொல்லி வை. என் பொண்டாட்டி மேல துரும்பு பட்டாக்கூட தாங்க மாட்டேன். இவன் அவளை கொல்ல பார்த்துருக்கான். இவனை சும்மா விட்டா நல்லாவா இருக்கும்?” என்றவன், ராஜின் கைகளை உடைத்தான். 

 

“உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என் பொருள் என் முன்னாடி வந்தாகணும்.” என்றவன், ராஜின் தலையில் துப்பாக்கியை வைக்க, பதறிப் போன விராட் மல்கோத்ரா,

 

“அவனை ஒன்னும் பண்ணிடாத. ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான். இனிமே அவன் லைனுக்கே வராம நான் பார்த்துக்குறேன்.” என்ற மல்கோத்ரா, தன் அடியாட்களை பார்த்து,

 

“என்னடா வாய்ய பார்த்துட்டு நிக்குறீங்க? அந்த புதையலை எடுத்து வந்து கொடுங்க டா.” என்று கட்டளையிட்ட மறுநொடி, ராக்கியின் முன் இரு பெட்டிகளும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. 

 

“இனிமே என்னோட திங்ஸ் மேல கையில்ல, உங்க கண்ணு பட்டாக்கூட உசுருக்கு நான் கேரண்டி கிடையாது.” என்றவன் அப்பெட்டிகளை தன் அடியாட்கள் மூலம் இழுத்துக் கொண்டு வரச் செய்தான். அப்பெட்டிகளை தன் வீட்டுத் தோட்டத்தின் பின்னால் இருக்கும் குடோனில் வைத்து பூட்டியவன், வீட்டிற்குள் நுழைந்ததும் தனது மனைவியை தான் தேடினான். 

 

“எங்கப் போனா இவ?” என்று முணுமுணுத்து கொண்டே, “பேபி.. பேபிஇஇஇ..” என்று கத்திக் கொண்டே இரண்டிரண்டு படிகளாக தாவித் தாவி ஏறியவன், தங்களதறைக்குள் சென்று பார்க்க, தனது தலைவரை போர்வையை போர்த்தி கொண்டு படுத்திருந்தாள் ஆருஷா.

 

“என்னடியாச்சு? எதுக்கு இப்படி படுத்துருக்க? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டவாறே அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவனிடம் இருந்து விலகி அமர்ந்தவளை கூர்மையாக பார்த்தான் ராக்கி.

 

“என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்க?”

 

“அது அது வந்து.. இந்த மாதிரி சமயத்தில் தாங்கள் என் அருகில் வரக்கூடாது.”

 

தன் புருவங்களை உயர்த்தி பார்த்தவாறு “ஏன்?” என்றான் ராக்கி.

 

“மாதம் மாதம் இப்படியெல்லாம் வரத்தான் செய்யும். அந்நேரம் ஆண்கள் பெண்களின் அருகில் வரக்கூடாது.”

 

“ஓஹோ! அப்போ இன்னைக்கு காலைல கோவிலுக்கெல்லாம் போகலாமா?”

 

“அது காலையில்.. இப்போது சமயம் இரவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. புரிந்து கொள்ளுங்கள் நாதா!”

 

“ம்ம்ம் நீ சொல்ற.. நான் கேட்குறேன்.. மவளே என்கிட்ட இருந்து எஸ்ஸாகுறதுக்கு ஏதாவது ப்ளான் போட்டேன்னு தெரிஞ்சது? அவ்வளவு தான்! உடனே முட்டைக்கண்ணை விரிச்சு பார்க்காத. சரி நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. இதுக்கெல்லாம் சேர்த்து மூணு நாள் கழிச்சு வட்டியும் முதலுமா வாங்கிக்குறேன்.” என்று அவளது கன்னத்தை தட்டிவிட்டு சென்றான் ராக்கி. அவன் செல்லும் வரை படுக்கையில் படுத்திருந்தவள், அவன் சென்றதும் “அப்பாடா..” என்றவாறே எழுந்தமர்ந்தாள். அவனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க வேண்டுமென்று அவள் நினைத்தாளோ, அந்த அளவிற்கு அவளிடம் நெருங்கி வந்தான் ராக்கி. நான்கு தாதிகளை நியமித்து அவளை ஒரு குழந்தையை போல் கவனித்துக் கொள்ளச் செய்தான். ஆருஷாவின் கால் தரையில் படாமல் தன் உள்ளங்கையில் தாங்கினான் ராக்கி. ஆனால் அவனது முகத்தை கூட பார்க்காது, அவனது விரல் நுனி கூட தன் மேல் படாமல் நடந்து கொண்டாள் ஆருஷா. மங்கையிவள் தன் மனதினை இறுக்கி கட்டி வைத்திருக்க, மன்னவன் எவ்வாறு அதில் இருந்து அவள் மனதினை மீட்பானோ? 

 

1 thought on “இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top