ATM Tamil Romantic Novels

உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது

உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது

ஸ்ரீராம் வீட்டில் நிவேதாவின் அறையில்

அப்பா சிவக்கொழுந்து சொன்னதும் தீபிகாவை தன அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கி கொடுத்தாள். இருவரும் பேசி கொண்டு இருந்தனர். “எப்படி அண்ணனை தெரியும்” என கேட்டாள்.

அவள் தான் பெங்களூரு கான்பரன்ஸில் அவனை சந்தித்து நட்பை ஏற்படுத்தி கொண்டதை தெரிவித்தாள்.
“ஓ ஒரு வாரத்தில் இந்த அளவு காதலை நன் எங்குமே கேள்வி பட்டது இல்லை தீபிகா .. எனக்கு உண்மையாவுமே வியப்பாக உள்ளது என்றாள்.

“நிவேதா, உனக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்லுகிறேன் யாரிடமும் சொல்லாதே. உண்மையில் நன் அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு துணை தேவை அப்பா துணை இல்லாமல் போக கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டதால் உன் அண்ணா எனக்கு உதவுவதற்காக, திருமணம் செய்து கொள்ளலாமா என் நான் கேட்டதும் நீண்ட விவாதத்திற்கு பின் ஒத்துக்கொண்டார். வேறு இதில் ஒன்றுமில்லை. காதல் என்று சொன்னால் தான் அது சாத்தியப்படும் என்பதால் இப்படி வரு வழியை யோசித்து திட்டம் போட்டு இருக்கிறோம் ” என்றாள்.

ஓ … என வாயை பிளந்தாள் நிவேதா

“மேலும் இன்னொரு ரகசியம் இதில் உண்டு… அது என்னவென்றால் நீயும் நானும் உறவுக்காரர்கள்” என்றாள்.

“எந்த வகையில்… ” என கேட்டாள் நிவேதா ..

தீபிகா ” உன் தாத்தாவிடம் உனக்கு எதனை பிள்ளைகள் என்று பொய் கேட்டு அவர் என்ன சொல்லுகிறார் என்று என்னிடம் வந்து சொல்லு .. ” என கேட்டாள்.

“அது தான் எனக்கே தெரியுமே … என் அப்பா மட்டும் தான்.. ” என்றாள்.

“நீ போய் கேட்டு விட்டு வா.. உண்மையா சொல்ல சொல்லி கேள்.. உன் அப்பாவிற்கு ஒரு தங்கை உண்டா என்று கேள். அப்போது அவர் சொல்லுவார்.” என்றாள் தீபிகா .

நீயும் என்னுடன் வா நம் தாத்தா அறைக்கு சென்று வருவோம் என அவளையும் அழைத்து போனாள்.

நிவேதா தாத்தாவிடம் ” தாத்தா நான் நம் குடும்ப ரகசியம் ஒன்று கேட்பேன் கோபப்படாமல் உண்மையை மட்டும் நீங்கள் சொல்லணும் ” என்று ஆரம்பித்தாள்.

தாத்தா ” என்ன கேள்விக்கு கேக்கும் முன்னாடியே இப்படி சொல்லுற .. சரி கேள் உன் கேள்வியை எனக்கு தெரிந்தால் சொல்லுறேன்” என்றார்.

“கண்டிப்பா உங்களால் பதில் சொல்ல முடிகின்ற கேள்வி தான் ” என்றாள்.

“ஹ்ம்ம் … அப்படி என்ன தான் கேட்கப்போற நீ… பீடிகை ரொம்ப பலமா இருக்குடி .. சீக்கிரம் கேள்வியை கேளுடி…” என்றால் பாட்டி.

“தாத்தா, உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் .. ” என்றாள்

தாத்தா உடனே ” என்னடி இது கேள்வி.. உன் அப்பா ஒருத்தன் தானே .. இதில் என்ன ரகசியம் இருக்கு.. ” என்றார்.

“கடவுள் மீது ஆணையாக சொல்லுங்க, தாத்தா” என கேட்டாள் நிவேதா.

“உனக்கு என்ன தெரியணும் இப்போ. யாரோ உன்னை கேட்க சொல்லி தூண்டி விட்டார்களா .. ” என தீபிகாவை பார்க்க .

“அது எதுவோ யாரோ சொன்னா என்ன இப்போ.. நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன அதை மட்டும் சொல்லுங்க” என்றாள்.

“சரிம்மா .. சொல்லுறேன் கேட்டுக்கோ .. உன் அப்பாவுக்கு ஒரு தங்கை உண்டு என்று ஆர்மபித்து பகை ஏற்பட்டது வரை சொல்லிவிட்டு , இப்போ அதறகு என்ன அவசியம் வந்தது “என கேட்டார்.

“உடனே, அவள் தீபிகாவிடம் இதற்கு நீதான் பதில் சொல்லவேணும் தீபிகா” என்றாள் நிவேதா.

நான் வேறு யாருமல்ல .. அந்த உன் அப்பாவின் தங்கையின் ஒரே மகள் என்று தீபிகா சொல்ல ..

தாத்தாவும் பாட்டியும் அதிர்ச்சியில் ஆச்சர்யத்தில் எழுந்து உட்கார்ந்து தீபிகாவை அருகே அழைத்து கட்டி பிடித்து கொண்டனர்.

நிவேதாவுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.. அவளுக்கு இந்த வீட்டில் சொந்தத்தில் இன்னொரு துணை இருப்பதை அறிந்ததும் தீபிகாவை இறுக கட்டி பிடித்துக்கொண்டாள்.

அனைவரும் ஆனந்த கண்ணீரில் நனைந்தனர். தாத்தா சிவநேசன் ” இதை கல்யாணம் கண்டிப்பாக நடக்க வேண்டும் . விட்டு போன நம் உயிர் உறவுகள் மீண்டும் இதன் மூலம் இணைய வேணும்நாளைக்கே நான் ஜோசியரை அழைத்து உங்கள் திருமணத்திற்கு நல்ல நாள் பார்க்க சொல்லுகிறேன்” என்றார்.

உன் அம்மாவிடம் பேச வேணும் போல் உள்ளது .. போன் போட்டு கொடம்மா தீபிகா என்று பாட்டி சொல்ல

தீபிகா போட்டு கொடுக்க .. அவர்கள் தங்கள் மகளிடம் ஆனந்தமாக உரையாடினார்.

நாளைக்கே அவளை வீட்டுக்கு வர சொன்னார் தாத்தா . முதல் விமானத்திலேயே வந்து விடு.. என்றார்,

பார்வதி ” அண்ணா என்ன சொல்லுவாரோ .. என பயமாய் கேட்டாள்.

“நான் இருக்கிறேன் தைரியமாக வா.. ” என்றார். தான் அப்பா அம்மாவிடம் நீண்ட நாட்களுக்கு பின் பேசியது அவளுக்கு ஒரு புது தெம்பை கொடுத்தது. தனக்கு பின் தன் மகளுக்கு உறவில் சொந்தம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனாதையாய் விட்டு விட மாட்டார்கள் தன் உறவுகள் என்று பரவசம் அடைந்தாள். நீண்ட நாட்களாக அவளுக்கு இந்த விஷயம் மனசுக்குள் கவலையை கொடுத்த விஷயம். இன்று அதற்கு விடை கிடைத்து விட்டதால் அவளுக்கு நிலை கொள்ளவில்லை தன் செல்லமகள் தனக்கு பின் தன் உறவுகளோடு இருப்பாள் என்று.

அப்பா ,அம்மா ,நிவேதா என்று போனில் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசி கொண்டு இருந்தாள்.

அதற்குள் தீபிகாவின் அப்பா வெங்கடேசன் பார்வதியிடம் ” என்ன இன்னும் தூங்கவில்லையா அப்படி என்ன போனில் யாருடன் பேசி கொண்டு இருக்கிறாய் பார்வதி .. ” என கேட்க

இவள் விஷயத்தை கூற .. ஓ ஸ்ரீராம் தீபிகாவுக்கு சொந்த முறைப்பையன் ஆகின்றது. அப்போ வேறு எந்த பிரச்சனையும் இல்லை இவர்கள் திருமணத்திற்கு.. உறவு நீடிப்பது இனி அது சிவக்கொழுந்து கையில் தான் உள்ளது.. நம்மை அவர் மன்னிப்பாரா பார்வதி .. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று ..

“நாளைக்கு அப்பா நம்மை முதல் விமானத்திலேயே வர சொல்லி இருக்கார். டிக்கெட் புக் பண்ணுங்கள் ” என்று தன் கணவரை அந்த நடு ராத்திரியில் எழுப்பி விட்டாள்.

அவரும் தங்களுக்கு பின் தன் மகளுக்கு ஒரு சொந்தம் கிடைத்ததில் எல்லையில்லா ஆனந்தம். தன் மனைவி பார்வதியிடம் கண் கலங்கினார்.
“நாம் என்ன தான் சொத்து சேர்த்து வைத்து தீபிகாவுக்கு கொடுத்தாலும் அது இந்த சொந்த பந்தம் கூட துணை நிற்பதை போல வராது ..இதை நான் நன்கு உணர்ந்து விட்டேன் பார்வதி.. நேராக உன் அண்ணனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கோரப்போகிறேன்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

மனைவி தன் கணவனை நினைத்து பெருமை பட்டாள். இவர் இன்னும் பழைய பகையை வைத்துக்கொண்டு அடம் பிடிப்பார் என்று தான் நினைத்து கொண்டு இருந்தாள். இன்று இவர்களிடம் நிறைய சொத்து உண்டு சிவக்கொழுந்துவை விட அதிக சொத்துக்கள் உண்டு. ஆனாலும்
மனதில் எப்போதும் ஒரு வெறுமை இருந்தது சொந்த பந்தங்களின் துணை இல்லாமல் இருந்ததால், அது இப்போது பாதி கிணறு தண்டி விட்டது.

சிவக்கொழுந்து ஏற்று கொண்டால் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு கொள்வதாகவும் தீபிகா கல்யாணத்தின் போது அனைத்து சொத்துக்களையும் ஸ்ரீராம் பேருக்கு மாற்றி எழுதவும் வேண்டிக்கொண்டார்.

அன்று அவர்களுக்கு தூக்கமே வரவில்லை. சென்னை சென்றதும் அனைவர்க்கும் ஏதாவது வாங்கி செல்லவேண்டும். என்ன வாங்கலாம் எது வாங்கலாம் என யோசித்து யோசித்து ஒரு லிஸ்ட் போட்டு கொண்டனர்.

அண்ணாவுக்கு அகர்வால் ஸ்வீட்ச்சில் செய்யும் நெய் ஹல்வா மிகவும் பிடிக்கும். அண்ணிக்கு ஒரு பட்டு புடவை எடுத்து கொள்ள சொன்னாள்.
நிவேதாவுக்கு ஒரு 5 ச்வரனில் சங்கிலியும் , ஸ்ரீராமுக்கு ஒரு 4 ச்வரனில் ப்ரெசெலெட் மற்றும் ஜீன்ஸ் பாண்ட் மற்றும் ஷிர்ட்டும் வாங்கி கொள்ள சொன்னாள்.

மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இருந்தனர் இரண்டு பேரும்.

மீண்டும் சந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top