19
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.. நாம் முதல்முறை நிவேதிதாவை பார்த்த அதே பப் தான்!!
அன்றும் தங்கள் வார விடுமுறையை செலவழிக்கவென்று கும்பல் கும்பலாக மக்கள் குவிந்திருந்தனர். இணையுடனும்.. இணை இல்லாமலும்.. நண்பர்களுடனும் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் தங்களை மறந்த ஆட்டத்தில் கொண்டாட்டத்தில் களித்து இருந்தனர்.
தமிழ் பாட்டு காதைக் கிழித்துக் கொண்டு இருந்தது… அதை விட அந்தப் பாட்டுக்கு நம்ம ஊர் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள்..
என்னது? ஆஸ்திரேலியா பப்பில் தமிழ் பாடலா? அதுவும் அங்குள்ளவர்கள் சேர்ந்து ஆடுகின்றார்களா? என்று நாம் வியக்கவும் வாய்ப்பு இருக்கிறது தானே!!
இப்படி அவர்கள் எல்லாம் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல ஆடிக்கொண்டு இருப்பதற்கு காரணம் நம் நிவேதிதாவே தான்!! அவளின்றி யாராக இருக்க முடியும்??
நிவேதிதா மெல்போர்ன் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. மறந்தும் சிட்னி நகரத்திற்கோ அவர்களது வீட்டுக்கோ செல்லவே இல்லை. ஏற்கனவே அவள் தங்கியிருந்த அதே பேயிங் கெஸ்ட் எலிசா வீட்டில் தான் இப்பொழுதும் தங்கியிருக்கிறாள்.
இதோ இப்போதும் ஆட்டத்துக்கு குறைவில்லாமல் தன் நண்பர்களோடு ஆடி கொண்டுதான் இருக்கிறாள் நிவேதிதா.. மதுரையில் ஏற்பட்ட தடம்புரண்ட அவளது வாழ்க்கை எந்த விதத்திலும் தன்னை பாதிக்கவில்லை இந்த ஆஸ்திரேலியாவில் என்று நண்பர்களுடன் கொண்டாட்டமாக தான் இருந்தாள்.
அவளுக்குள்ளே ஒரு எண்ணம். தப்பு செய்து விட்டு அவனே அவனுடைய ஊரில் சந்தோசமாக சுற்றும் பொழுது நான் ஏன் அதை நினைத்து மருகிக் கொண்டிருக்க வேண்டும்? அதை நினைத்து ஏன் என் சந்தோசத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்? ஏன் என் நண்பர்களை தவிர்க்க வேண்டும்? என்று பலவாறு தன்னைத்தானே மாற்றிக்கொண்டாள்.. அதற்கு பெரிதும் உதவியாக இருந்தது அவளுடைய நெருங்கிய தோழி லீவி பெர்னாண்டஸ்.
வீட்டில் இருந்தவளை வம்படியாக அழைத்து வந்தது லீவிதான். வழக்கம்போல நண்பர்களுடன் ஆடிக்கொண்டிருந்தவளுக்கு ஏனோ மனதில் உள்ளவை தீரும் வரையில் ஆட்டம் போட.. மேல்நாட்டு பாட்டோ ராகமோ அவளுக்கு பிடிக்கவில்லை.
அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கு மேலாக “ஸ்டாப் இட்” என்று இவள் கத்த.. நண்பர்கள் மட்டுமல்ல அவளை சூழல் இருந்தவர்களும் இவளை வினோதமாக பார்க்க..
“என்னங்கடா பாட்டு போடுறீங்க? இந்த மாதிரி பாட்டு போட்டா எப்படிடா ஆட முடியும்? இப்ப நான் சொல்ற பாட்டு போடுற விஜே” என்று தன் போனில் இருந்து சில பல பாட்டுகளை அவள் அந்த விஜேவிடம் கொடுக்க.. முதலில் அவளோடு சேர்ந்து நண்பர்கள் மட்டுமே புரியாமல் ஆடினர். அதன்பின் இசையை ரசிக்க மொழியா முக்கியம்? கூடவே நிவேதிதா மற்றும் நண்பர்களின் அட்ராசிட்டியில் அங்கு உள்ளவர்களுமே ஆர்வமாகி.. இதோ வெளுத்து வாங்கியது நம்மூர் தமிழ் குத்து பாடல்கள் வரிசை கட்டிக் கொண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பப்பில்!!
சற்று நேரத்தில் ஆடி ஆடி களைத்து ஓய்ந்து போய்.. வேர்க்க விருவிருக்க மேசையில் சாய்ந்தாவாறு அவள் அமர, அருகில் லீவியும் வந்து அமர்ந்தாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது நிவேதிதாவுக்கு..
“என்ன நிவே அதுக்குள்ள சோர்ந்து போயிட்ட?” என்று கிண்டல் அடித்தாள் லீவி..
என்னதான் வெளியில் நான் நேர்கொண்ட நிமிர்வான பெண் அவனை மறந்துவிட்டேன்.. துறந்து விட்டேன்.. என்று பக்கம் பக்கமாக டயலாக் அடித்தாலும் மனதின் ஓரத்தில் அந்த நெடியவனின் நிதான பார்வை அவளை நித்தமும் கொன்று கொண்டுதான் இருந்தது.
அதற்குமேல் வந்த முதல் நாளில் நம்மை தேடி இங்கேயும் வந்து விடுவானோ? என்று ஒரு சிறு பதட்டமும்.. ஏன் வரவில்லை? என்ற வருத்தமும் இரு துருவங்களாக அவளை தாக்கியதும் உண்மை. ஆனால் எல்லாமே ஒருவாரத்திற்கு தான்!! அதற்கு மேல் அவளின் பழைய நிவேதிதாவை திருப்பி விட்டனர் அவளது நண்பர்கள்.
இவளின் நண்பர்கள் சேர்ந்து தொழில் முனைவோருக்கான பயிற்சி என்று ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதில் இப்பொழுது நிவேதிதாவையும் சேர்த்துக்கொண்டு விட.. அவளது உள்ளமோ பழையதை நினைத்து வருந்தாமல்.. புதிய புதிய ஆட்களும் அவர்களுக்கான பயிற்சியும் என்று பொழுது ரொம்பவே ருசியாகவும் இனிதாகவுமே சென்றது.
கேள்வி கேட்ட லீவியை பார்த்து புன்னகை புரிந்தாள் நிவேதிதா. ஆனால் பதில் எதுவும் கூறவில்லை. இன்னும் இருக்கு இருக்க நண்பர்கள் வந்து அமர..
பேச்சும் கேலியுமாக நேரம் சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது டேனியல் வைத்திருந்த அந்த சின்ன சின்ன குப்பிகளில் உள்ள மதுவை கூர்ந்து பார்த்த மாதுவோ அடுத்த நிமிடம் தனது வாய்க்குள் அடைக்கலம் கொடுத்தாள்.
“நிவே யூ ஆர் அல்ரெடி இன் ஃபுல்.. டோன்ட் டேக் மோர்” என்ற டேனி அவசரவசரமாக மற்றதை மறைக்க..
அவளோ முறைக்க..
“ப்ளீஸ் டேனி.. கொடுடா!! நானே ரொம்ப பீலிங் ஆஃப் மதுரைல இருக்கேன்” என்று அவள் உளற..
“மதுர? வாட் மதுர?” என்று தாமஸ் கேட்க..
“ஆமாண்டா தாமஸ் வாயா.. என் டோட்டல் சந்தோசத்தையும் அந்த மதுர காவு வாங்கிடிச்சு.. அதிலும் அந்த மதுரகாரவிய்ங்க இருக்காய்ங்களே.. ம்ஹும் எல்லாரையும் சொல்லக்கூடாது அந்த ஒருத்தன்.. அந்த ஒருத்தன் தான்.. எல்லாத்துக்கும் காரணம்” என்று தனது கையை டேபிளில் தட்டி தட்டி அவள் கூற..
தமிழும் ஆங்கிலமும் கலந்து குளறலாக அவள் பேசியதைக் கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏய் நிவே.. வொய் டோன்ட் யு மேரி மீ? ஐ வில் ஹெல்ப் அவுட் ஃபார் யுவர் ஆல் வொர்ரிஸ்” என்று கண்ணடித்துக் கொண்டே விஷமமாக அவன் பேச.. அதில் பெரிதாக ஒன்றும் விகற்பம் இல்லை. அவள் மூடை மாற்றுவதற்காக மட்டுமே கூறினான்.
“போடா டேய்!! ஒரே ஒரு தரம்!! ஒரே ஒரு தரம்.. மேரேஜ் பண்ணிட்டு எனக்கு வந்த மண்டைவலி இருக்கே??” என்று தலையை பிடித்துக்கொண்டாள் அவள்.
அவனோ இன்னும் விடாமல் “மேரேஜ் கூட தேவை இல்ல பேபி.. நாம லிவிங் டுகெதர் இருக்கலாம். மண்டவலி என்ன எல்லா வலியும் பறந்துவிடும்” என்று இன்னும் கேலி பேச.. மற்றவர்கள் சிரித்தாலும் லீவிக்கு அங்கே நடந்தது எல்லாம் தெரியும் அல்லவா? உடனே தாமஸை கண்டித்தாள் அவள்.
“டோண்ட் கிராஸ் யுவர் லிமிட் தாமஸ்?” என்று முறைப்புடன் கூறியவளை பார்த்து இரு கைகளையும் மேலே தூக்கி “சரண்டர்!!” என்று கூறி சிரித்தான் தாமஸ்.
எந்த சீரியஸான விஷயங்களையும் இலகுவாக மாற்றி சிரிப்பை மட்டுமே விதைக்கத் தெரிந்த கூட்டம் அதன் நண்பர்கள் கூட்டம் மட்டுமே!!
விடிய விடிய இங்க கொண்டாட்டங்கள் தொடர்ந்தாலும் ஒரு நேரத்திற்கு மேல் இருக்க மாட்டாள் நிவேதிதா. “ஓகே பை கைஸ்” என்று சற்றே தள்ளாடியபடி எழுந்து அவள் செல்ல.. டேனி வந்து “நான் வேணா டிராப் பண்ணுறேன் நிவே” என்று கேட்க “நோ தேங்க்ஸ் பட்டி ஐயம் ஆல்வேஸ் ஸ்டேடி” என்றவள், லேசாக கோணல் மானலாக தற்போது தான் நடைபயிலும் சிறுபிள்ளை போல நடந்து நடந்து நேராக முட்டி நின்றாள்.
அன்று போல இன்றும் ஏதேனும் தூணில் முட்டிக் கொண்டோமா? என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டே அந்த திருமலை நாயக்கர் துணை ஒத்த அவனிடம் சண்டை போட வேண்டும் நிமிர்ந்து பார்த்தாள் நிவே.
காட்சிப் பிழையா இல்லை? கானல் நீரா? புரியவில்லை அவளுக்கு!! இன்னும் நன்றாக கண்களை தேய்த்துவிட்டு பார்க்க.. முன்னை விட இப்போது இன்னும் மங்கலாக ஆனால் அவனின் பிம்பம் மட்டும் தெளிவாக!!
“வெற்றி.. வெற்றி வேந்தன்!!” என்று உதடுகள் மெல்ல முனுமுனுக்க. கண்களோ அதிர்ச்சியில் விரிந்த நிலையிலே!!
“வெற்றி..ஹல்க்.. நீ.. நீ எப்படி இங்க?” என்று வார்த்தைகள் கோர்வையாக வராமல் திக்கித் தடுமாறி விழிகளை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள் அவள்!!
கருவிழிகள் இங்குமங்கும் உருண்டு ஓட அவள் இருந்த விதம்.. அவளது உடை அலங்காரம்.. என்று ஒவ்வொன்றையும் நிதானமாக உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்த வெற்றியின் விழிகளும் ரசனையுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் கண்களில் தெரிந்த ரசனையில் அவளது கண்கள் அச்சத்தை பிரதிபலித்தது.. ‘நிதானமாக பார்த்தாலே இவன் பார்வையின் வீச்சை தாங்க இயலாது. இப்போது ரசனையுடன் வேற பார்க்கிறானே?’ என்று மிரண்டாள்.
எல்லாம் ஒரு நொடிதான். அதற்கு பின் இது எனது ஊர்!! இங்கே உன்னால் என்ன செய்ய முடியும்? என்று தெனாவட்டாக அவனை பார்க்க முயன்று அவனை நோக்கி ஒரு அடி வைத்தவள், அடுத்த நொடி ஏற்கனவே இருந்த உடம்பின் தள்ளாட்டம் போதாக்குறைக்கு அழகுக்காக வைத்திருந்த பூந்தொட்டிகள் தடுக்கி அவள் சாய.. முரட்டு கையோ மென்மையாக அவளை தாங்கிக் கொண்டது.
“நீ விடு விடு!! ஹல்க் மறுபடியும் என்னையும் கடத்திட போறியா மதுரைக்கு? வரமாட்டேன் போடா?” என்று அவனை தூக்கி கொண்டு சென்ற வெற்றியின் மார்பு தலை கன்னங்கள் என்று தன்னாலான மட்டும் அடித்து கடைசியில் அவன் மார்பிலேயே தொலைந்து போனாள் மயக்கத்தில் நிவேதிதா.
காலையில் அடுத்தடுத்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை என வரிசையாக வைத்திருந்த அலாரத்தை கேட்டவளால் கண்களை விழிக்க முடியவில்லை.. மெதுவாக ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து மொபைலை எடுத்து ஆஃப் பண்ணியவள் இன்னும் வாகாக தலையை தலையணையில் சற்று சாய்ந்து படுத்தாள்.
அவள் சற்று முன் ஒற்றைக் கண்ணை திறந்த போது அவளது பார்வை வட்டத்தில் ஏதோ ஒரு பிம்பம் விழுந்த மாதிரி இருந்தது. அது சற்று லேட்டாக மூளையில் பதிவாக.. யார் என்று கண்ணை திறந்தவள் முன்னே அமர்ந்திருந்தான் அவளுடைய ஹல்க்.
எப்பவும் பார்க்கும் அந்த வேஷ்டி சட்டை இல்லை ஜீன்ஸ் இல்லாமல்.. இலகுவான டீசர்ட் அதுவும் ஸ்வீவ்லெஸ்.. த்ரீ ஃபோர்த் ஸ்சாட்ஸ் போட்டு அமர்ந்து இருந்தவனை பார்த்தவளுக்கு பக்கென்றாக.. சட்டென்று எழுந்து அமர்ந்தவள், சிமிட்டாமல் அவனைப் பார்க்க அவனோ கண்ணடித்து சிரித்தான்.
“அப்படி பார்க்காத டார்லிங் ” என்றான் வெற்றி தலையை கோதிக் கொண்டு..
“டார்லிங் ஆஆஆ.. ஏ..ன்..ஏன்? ஏன் பார்க்க கூடாது??” என்று மெத்தையில் இருந்தவாறே கேட்க..
“உன் காந்த விழிகளில் எதிர்த்து மீளுற சக்தி என் கண்களுக்கு இல்ல.. டார்லிங்” என்றான் மந்தகாச புன்னகையுடன்..
நாம் காண்பது கனவா நினைவா என்று புரியாமல் தன் கையை கிள்ளி பார்த்து நிவேதிதாவுக்கு நன்றாக வலித்தது “அவ்வ்ச்ச். வலிக்குதே.. அப்போ நினைவு தானா? கனவில்லையா?” என்று அவளுக்குள் முனுமுனுத்துக் கொண்டே அவனைப் பார்த்தவள்,”நீ இங்க ஏன்டா வந்த? ஏன் வந்த?” என்றவள் சட்டென்று தனது அறையை சுற்றி நோட்டமிட்டாள்.
அறைக் கதவு தாளிடப்பட்டு இருந்தது உள்பக்கமாக..
‘கதவு உள்பக்கமாக சாத்தி இருக்கு இவன் எப்படி வந்தான்?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே..
“நான் நேத்து நைட்ல இருந்து இங்கேதான் இருக்கேன்.. கதவும் அப்போதிலிருந்து உள்பக்கம் லாக் ஆயிருக்கு” என்றான் இருக்கைகளையும் சோம்பல் முறித்து பின்பு தலைக்கு கீழ் கட்டிக்கொண்டு..
“வாட்?? நீ இங்க இருந்தியா? உன்னை யார் இங்க வர சொன்னா? ஏற்கனவே நீ செய்தது எல்லாம் போதாதா? போ டா வெளியே..” என்று மெத்தையில் இருந்து குதித்து வந்தவள்.. கதவைத் திறந்துகொண்டு “எலிசா!! எலிசா!!” என்று சத்தம் போட..
அவனும் காதை நன்றாகக் குடைந்து கொண்டு இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தானே ஒழிய எழவே இல்லை..
இவளின் சத்தத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்குமே என்று கோபத்தோடு மூச்சுவாங்க மேலேறி வந்தார் அந்த குண்டான நீக்ரோ பெண்மணி எலிசா.
“என்ன ஆச்சு நிவே?? ஏன் இந்த மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற?” என்று மூச்சுவாங்க அவர் கேட்டவுடன்.. “இந்த ஆள் ஏன் இங்க இருக்கான்? என் பர்மிஷன் இல்லாம என்னோட ரூம்ல வந்து இருக்கான்.. ஜஸ்ட் த்ரோ ஹிம் அவுட்” என்று அவனை முறைப்புடன் பார்த்து கூறிக் கொண்டே இருந்தாள்.
எலிசாவுக்கோ அலுப்பாக இருந்தது. ஒற்றை பெண்மணி கிட்டத்தட்ட எட்டு பேர் இருக்கும் இந்த ஹோம்டேவை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் தங்கள் அறையை சுத்தப்படுத்திக் கொள்வார்கள். மீதமுள்ளோருக்கு இவர்தான் சுத்தப்படுத்தி வைப்பார். அதற்காக தனியாக பேமெண்ட் வாங்கி விடுவார்.
இப்போதுதான் அந்த வேலையெல்லாம் முடித்துவிட்டு ஆறுதலாக அமர்ந்து இருந்தவரை நிவேதிதாவின் சத்தம் மேலே வர வைத்திருந்தது.
“ஓஹ்ஹோ நிவே.. காம் கேர்ள்!!” என்று சமாதானப்படுத்த அவர் முனைய..
“நோ வே எலிசா.. முதல்ல இவனோ வெளிய அனுப்பு” என்று கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு நின்றாள் நிவேதிதா.
இருவரும் மாறி மாறி.. எங்கே மாறி மாறி? நிவேதா மட்டும் பேசிக் கொண்டிருக்க.. அவளை சமாதானப் படுத்த முயன்றார் எலிசா.
அவனும் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்கிற மாதிரி இரண்டு பேரையும் மாத்தி மாத்தி சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு புன்னகையோடு..
இதற்கு மேல் பொறுமை காக்க முடியாத எலிசா. “ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவே.. அவரு ஒன்னும் உன் ரூம்ல இல்லை. நீதான் அவரு ரூம்ல நின்னுகிட்டு இருக்க” என்று சற்று அழுத்தமாக கூறியவுடன் தான் அவள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.
“ஆனா.. ஆனா.. இந்த ரூம்..’ என்று அவள் இழுக்க..
“நீ ஆல்ரெடி காலேஜ் படிக்கும்போது ஸ்டே பண்ணி இருந்த அதே ரூம் தான். ஆனா இப்போ நீ வந்த போது இந்த ரூம் எங்கேஞ்டா இருந்தது. அதனால உனக்கு கொடுக்க முடியல. வேறொரு உனக்கு அலாட் பண்ணினேன். இப்போ அவருக்கு கொடுத்திருக்கிறேன். எனி டவுட்?” என்றவர் கேட்க..
அதுவரை மாஞ்சு மாஞ்சு சண்டை போட்டுக் கொண்டிருந்தவள் அப்போது மருளும் விழிகளுடன் மான்குட்டி போல பம்மினாள்.
“ஓ ஜீசஸ்!! இந்த பொண்ணுக்கு ரூமே மறந்து போச்சு” என்று தலையிலடித்துக் கொண்டவர் “சாரி வெற்றி!!” என்று விட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.
‘இப்போ என்ன சொல்லி அவனிடம் மன்னிப்பு வேண்டும்? என்று சிறிது நினைத்தாலும்.. நான் எதுக்கு இவனு கிட்ட மன்னிப்பு கேட்கணும்? என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் தான் எப்படி இந்த ரூமுக்கு வந்தோம் என்று புரிந்தது.
நேற்றிரவு இந்த ஹல்க்கு தான் நம்மை இங்க தூக்கிட்டு வந்திருப்பான் என்று அவனைத் திட்டிக்கொண்டே.. அங்கே அறையில் இருந்த தன்னுடைய பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல்.. அருகிலிருந்த ஜெக்கில் இருந்த தண்ணீரை எடுத்து அவசரமாக தொண்டைக்குள் சரித்தாள்.
மெல்லிய புன்னகையுடன் தண்ணீர் குடித்தவளை தான் பார்த்தான் அணுஅணுவாக.. அவள் போட்டிருந்த கருப்பு ஸாண்டின் கவுனில் பார்ப்பதற்கு கருப்பு அங்கிக்கு வெளியே முளைத்த ரோஜா மலர் போலிருந்த அவள் முகம் பளபளத்தது. அவள் அன்னார்ந்து தண்ணீர் குடிக்க.. சிவந்த மேனியில் ஓடும் அவளின் கழுத்து நரம்புகளை பார்த்து கிறங்கினான் வெற்றி. அவள் குடிக்கும் தண்ணீர் அவளின் தொண்டைக்குள் இறங்கியபோது மெலிதாக மேடுதட்டியிருந்த அவள் தொண்டைகுழி அழகாய் ஏறி இறங்கியது.
அவன் தன் கழுத்தை வெறிப்பதை கீழ் பார்வையில் உணர்ந்து ‘கடக் கடக்’ கென குடித்ததில் உதடுகளின் ஓரத்தில் தண்ணீர் ஒழுக அவனைப் பார்த்து முறைத்தாள்.
“என்ன பார்வை இது?” என்று அவள் சிடுசிடுக்க..
“ஏனோ??” என்றான் அவளை நெருங்கியபடி..
“இப்படி பார்த்தா நான் எப்படி தண்ணி குடிக்கறது? போடா ஹல்க்!!”என்றவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“நீ குடி டார்லிங்.. நான் பாட்டுக்கு உன்னை சைட் அடிக்கிறேன்” என்றவன் கச்சிதமாக தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.
அவசரமாக தண்ணீரை குடித்து விட்டு தனது ஷோல்டர் பாக்கை எடுத்தவள், “இனி என் கண்ணில் படாது!!” என்றவாறு தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
“என்னது உன் கண்ணுல படக்கூடாதா? அதுக்காகத்தானே வந்துருக்கேன்!!” என்று நினைத்தவனுக்கு நாள் பின்னோக்கி கொடைரோடு வீட்டின் முன் நின்றது.
இலக்கில்லாமல் வந்தவன் கலங்கரை ஒளியை போல தெரிந்தது அந்த வீடு. மற்றும் ஏனோ தோன்ற சட்டென்று வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் அதுவும் அந்த அறைக்குள்ளே சென்றான்.
அங்கிருந்த காற்றுக்குள் கூட அவள் விட்டு சென்று வாசம் இருப்பது போலவே அவனுக்குத் தோன்ற.. ‘எனக்கு என்ன நிகழ்ந்தது? நிகழ்கிறது?’ என்று புரியாமல் நடை பயின்றவன் அங்கிருந்து இருள் சூழும் வரை மலை முகடையை வெறிக்கத் தொடங்கினான்.
பல இடங்களிலும் அண்ணனை காணாத கதிர் சட்டென்று கொடைரோடு ஞாபகம் வர.. நிவேதிதா ஊருக்கு சென்றதை அறியாமல்.. அண்ணனை கண்டு பிடித்துவிடும் நோக்கில் வேகமாக கொடைரோடு வீட்டுக்கு விரட்டி வந்தான்.
எதிர்பார்த்தது போலவே அண்ணன் எங்கே இருக்க..
தான் வந்ததையோ இல்ல காரின் சத்தத்தையும் அறியாமல் அவனுள் ஏதோ யோசனையில் உணர்ந்து இருந்தவனை பார்த்தவனுக்கு மனதில் மணி அடித்தது.
மெதுவாக அண்ணன் முன்னே சென்று இவன் நிற்க.. அவனது பார்வை வட்டத்தில் கதிர் இருந்தாலும் எண்ணங்கள் யாவும் அந்த மலை முகட்டையே குவிந்து இருக்க இவனை அறிய முடியவில்லை.
“அண்ணே!!” என்று சற்று அழுத்தமாக கதிர் அழைக்க.. தன் எண்ண அலைகளில் இருந்து விடுபட்டு தம்பியை திரும்பிப்பார்த்தான்.. “நீ எங்க இங்க?” என்ற பொருளில்..
“‘அதைத்தான் நானும் கேட்கிறேன் நீ எங்க இங்க? என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்றான்.
“ஒன்னு இல்ல அப்படியே வந்தேன் சும்மா” என்று தம்பியின் முகத்தைப் பாராமல் வேறு பக்கம் அவன் திருப்பிக்கொள்ள..
“அண்ணே.. அந்த பான்ட்ஸ் டப்பாவ நீ லவ் பண்றியா?” என்று சட்டென்று கேட்டான் கதிர்.
அதில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் தம்பியை.. “உன்னை வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போனவ.. உன் மனதில் இல்லை என்றால் உனக்கு ஏன் உலகமே அழிந்து போனது போல இப்படி ஒரு சோகம்? அதிலும் எங்க யாரிடமும் எதுவும் பேசாமல் இந்த தனிமை எதுக்கு உனக்கு? போடி என்று வேலையை பார்க்காமல்.. எதிலிருந்தோ தப்பித்துக் கொள்ள முயல்வது போல எதுக்கு இங்கே வந்து ஒளிஞ்சிருக்க?”
என்று வரிசையாக கேள்வி கேட்ட தம்பிக்கு ஒன்று கூட பதிலளிக்க முடியவில்லை வெற்றியால்.
“பாம்பின் கால் பாம்பறியும்!!” என்று கதிர் சொன்ன தினுசில் வழக்கம்போல உதட்டை மடித்துக் கடித்து தம்பியை உற்று நோக்க…
“ஹான்.. ஹ.. அதுவும் இப்ப பிரச்சினை? முதல்ல உன் பிரச்சினையை பாரு!!” என்றவனுக்கு அடுத்து போன் வர..
“ஆன்.. இருக்கான். இங்க கொடைரோட்டுல இருக்கான். அப்படியா? சரி சரி நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்” என்று போனை அணைத்தவன் வெற்றியை திரும்பி பார்த்து..
“பான்ஸ் டப்பா பிளைட் ஏறி பறந்துருச்சி!!” என்று இரு கைகளையும் சிறகு போல் அவன் விரிக்க…
“ஆஸ்திரேலியா என்ன? அண்டார்டிகா போனால்கூட அவள் எனக்கு தான்!!” என்றவன் அதன்பிறகு தனது கடமைகளை தொழில்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி தம்பியிடமும் தந்தையிடமும் ஒப்படைத்து விட்டு, நிவேதா சென்ற மூன்றாவது வார முடிவில் ஆஸ்திரேலியா வந்து இறங்கினான்.
அடுத்த இரண்டு நாட்கள் அவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அவள் தங்கியிருக்கும் அதே கெஸ்ட் ஹவுஸில்.. அதுவும் முன்னால் அவள் இருந்த அதே ரூம் தான் வேண்டும் என்று அதில் தங்கியிருந்தவர்களை வம்
படியாக வெளியேற்றிவிட்டு இவன் வந்து தங்கி இருக்கிறான்.
மறு நாள் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பில் பாடமெடுக்க வந்தவளை சிரித்த முகத்துடன் வரவேற்றான்.. வகுப்பின் மாணவனாய் வெற்றி வேந்தன்!!
காதலே.. காதலே…
Nice ud mam
Super sis