ATM Tamil Romantic Novels

22கணவன்

ஸ்ரீ அவர்களுடன் போகவில்லை.. டிவியில் கார்ட்டூன் போட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தான்
அது தகப்பனை போல பொறுமையுள்ள சமர்த்து குட்டி. மகி அவனுக்கு அடிக்கடி ஸ்னாக்ஸ் கொடுத்து கவனித்தவாறே வீட்டு வேலைகளை கை செய்தாலும் மனம் பூரா மகளிடமிருந்தது. மனம் சுழித்த மாதிரி முகமும் கூம்பிப்போனது. என்ன செய்வான்? ஏது செய்வான்? உறவு கொண்டாடி பிள்ளை மனதை குழப்புவானோ? அஜுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? சட்டப்படி எல்லாம் கட் பண்ணியாச்சு.. இதென்ன புது தொடர்பு? இவளுக்கு ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் வெளியில் சொல்ல முடியாது. முக்கியமா அஜுவிடம் சண்டை கூட போடமுடியாது. இதும் கூட ஒரு சாபம் தான் நொந்தாள். நல்லது நிறய நடந்தாலும் அல்லது குறுக்கிடும்பொழுது விட்டு விட முடியாதுல்ல.. தவித்தாள்.

பெற்றோருக்கு கூட இந்த விடயம் சொல்லல பிற்பாடு கேள்விப்பட்டால் இவளை கைமா போடுவது உறுதி. அது வேறு உறுத்தியது.

மகியை ரொம்ப நேரம் தவிக்கவிடாது இருவரும் திரும்பி வந்துவிட.. அட்சயா நார்மலாக இருந்தாள். அஜுவோ பசிக்குது பசிக்குது பறந்தான். வீட்டிலிருக்கும் பொழுது எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவது பழக்கம். எனவே சாப்பிட பின் அட்சயா மதிய உறக்கத்துக்கு போய்விட .. அஜு லாப்டாப்பில் அமர்ந்துவிட்டான்.. கான்காலில் மீட்டிங் நடக்க கிட்டே போக முடில மகியால்.. போரிங் தாங்காது இவளும் அட்சயாவோடு சும்மா படுத்தவள் தூங்கிவிட்டாள்.

சாயங்காலம் பெருமாள் கோவில் போக பிள்ளைகளை கையில் பிடித்தவனை ட்ராகுலா போல கடிச்சி வைக்கலாமா கடுப்பாகிட்டா மகி.

எதுன்னாலும் பேசும் மகள் கூட எதுவும் சொல்லாதது. அங்கு என்ன தான் நடந்துச்சு கேட்க ஆவல் கூடியது.

நானும் வரேன்.

நீ இரு .. பிரசாதம் வாங்கிட்டு வரோம்.. மூணும் கொஞ்சம் கூட மதிக்காது ஓடி விட்டன.

நீங்க கூட்டிட்டு போகலேன்னா என்ன? நான் வீட்டிலேயே அவருக்கு அர்ச்சனை வைக்கிறேன் என்று மகி விளக்கேற்றி டீப்பா பிரார்த்தனை.

பின்னோடு அஜு வாசம் வர வாய்ப்பேயில்லை என்று திரும்ப உதடும் உதடும் சேர்ந்து கிஸ்ஸாகிவிட்டது.

அச்சோ! சாமி ரூம்.. மகி உடனடியா தலைவனை இழுத்துக்கொண்டு வெளி அறைக்கு வர..

“சேலைலாம் வீட்டில் எதுக்கு?” நல்லா அவளை உரசிக்கொண்டு, கையால் கனிகளை சோதித்து குறை சொன்னான் அஜு.

இரவு தூங்கும் முன் மாத்திக்கிறேன் அஜுமா

இப்பவே வேணும்?

இருக்கட்டுமே.. பசங்க முன்னாடி நீட்டா இருக்கணும்ல..

பசங்க இன்னைக்கு பிசி.. வீட்டுக்கு வர மாட்டாங்க

ஏன்?

உங்க பெரிய அக்கா வீட்டில் நைட் ஹால்ட்க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க..

அக்காவும் அவங்க வீட்டுக்காரரும் உலக பொறுப்பை கொடுத்தாலும் அசால்ட்டாக செய்வார்கள். பொறுமையானவர்கள் பாதுகாப்புக்கு குறைவில்லை.

ஓ! அட்சயா இருப்பா! ஸ்ரீ சின்ன பையன் தேடுவானே?

ஹுக்கும் அவன் தான் உங்க அக்காவீட்டுக்காரை ஐஸ் வச்சு கூப்பிடவே வச்சான்..

அது சரி நாமும் போணும்ல

சின்ன பசங்க மட்டும் தான் நோ பெருசுகள்..

இதென்னவோ அவங்க திட்டமாயிருக்காது இவனே ஏதாச்சும் உள்வேலை பார்த்திருப்பான் சந்தேகம் கொண்டாள்.

ட்ரெஸ் மாத்து மகி.. முன்பு தப்பா பட்ட உதடுகளை இப்போ சரியா பொருத்தி அடம் அஜு.

இவனை என்ன பண்ணால் தகும்?!! தீவிர யோசனையில் மகி.

பாலா பற்றி அவனா சொல்லணும்ல .. அட்சி கிட்டே பேச முடில. முன் டென்ஷன் இப்ப கோபமா மாறுச்சு…

பாலா வீட்டுக்கு போனீங்களே என்னாச்சு?

போனோம் வந்தோம் அவ்ளோதான்.. தோள் குலுக்கிட்டு.. தங்கள் படுக்கையறைக்கு தள்ளிக்கொண்டு போனான்.

சப்பென்றானது மகிக்கு..

அவ்ளோதான்னா?

சரியான கேனையாயிருக்கான் அவன்.. என் பொண்ணு எங்கிறான் மெனக்கெட்டு கூட்டிட்டு போயிருக்கேன். பொண்டாட்டி கிட்டே பயப்படுறான்.. அது உள்ளேயே விட மாட்டுது.. என்கிட்டே சண்டைக்கு நிக்குது.. ஏற்கனவே நோஞ்சானா அங்கு மூணு குழந்தைங்க இருக்கு.. தக தக ன்னு தங்கக்குடமா ஜொலிக்கும் அட்சயாவை பார்த்து மிரளுதுக..

அவன் பொண்டாட்டி கிட்டே சொல்லிட்டேன்.. வீட்டு வாசலில் வந்து என் பொண்ணை பழகவிடு கெஞ்சுறான் உன் புருஷன்.. அங்கே எதுக்கு? இங்கேயே எப்பன்னாலும் கூட்டிட்டு வரேன்.. மனிதாபிமானத்தில் தான் இந்த உதவி.. கறாரா சொன்னேன்.

உடனே அந்தம்மா உண்மையா? னு புருஷனை கேட்டுச்சு.. அவன் ஆமாம்னு சொல்ல ஒற்றே இரணகளம்.

நான் இடையில் புகுந்து.. நான் என் மனைவி பேச்சை கேட்டு உங்க வீட்டுக்கு பிள்ளைய கூட்டிட்டு வந்தேன்.. அதே போல இனி இவர் கூப்பிட்டா செல்லாது.. நீங்க கூப்பிட்டாத்தான் பெண்ணை கூட்டிட்டு வருவேன்… சிஸ்டர் இந்தாங்க என் மொபைல் நம்பர்.. வசனம் பேசி விசிட்டிங் கார்ட் கொடுத்துட்டு வந்துட்டேன்..

முன் பற்கள் மிளிர இனி அந்த இத்துப்போனவன் வருவான் எங்குற?!

பாலா உரிமை கொண்டாட வருவானா? இல்லையா?இவளுக்கு தான் ஆண்கள் விளையாட்டு புரில. எப்படியோ கண்ணில் திரும்பப்படாமலிருந்தால் நிம்மதி.

இனி இப்படிலாம் செய்யாதீங்க.. பயமாயிருக்கு! தன் நைட்டி எடுக்க.. பிடுங்கியவன்.. தன் டீ சர்ட் ஒன்றை கொடுத்து போட்டுக்கோ

ஏன்? என்று புருவம் வளைத்து கேட்டவளை.. உதடு குவித்து காற்றில் முத்தமிட்டு கண்ணால் கெஞ்சி போடு என்பதாய் அபிநயிக்க.. சேலையை வாயில் கவ்வி சோளி அவிழ்த்தவளின் வாயை தன் வாயோடு சேர்க்க சேலை தலைப்பு நழுவ அங்கோர் காமக்கவிதையின் முதல் வரி எழுதப்பட்டது..

 

 

 

 

 

 

 

5 thoughts on “”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top