மாமனே 15
முறைப்படி மாணிக்கவேல் மற்றும் மலர்விழியின் திருமணம் கருமத்தம்பட்டியில் நடக்க இருப்பதால், ஏற்கனவே சுந்திரவேலு அல்லி மலர் சார்பாக அவரது பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து மலர்விழியின் சொந்தக்காரர்களில் அதி முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து விட்டு சென்றிருக்க… அங்கேயும் செல்ல தான் மொத்த குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் வேதாமணி கதிரேசனை அழைத்து “பாப்பாவிற்கு எதாவது வேணுமானு கேட்டுட்டு வரியா கதிரேசா? போன போட்டாலும் எடுக்க மாட்டேங்கற! நீ கொஞ்சம் நேர்ல பார்த்து கேட்டுட்டு வாயேன்! தேவையான நகை புடவை ஏற்கனவே எடுத்ததெல்லாம் இருக்கு. அது தவிர அவளுக்கு ஏதும் வேணுமானு கேட்கணும்! அது மாப்பிள்ளைக்கு நேரா கேட்காத.. சமயம் பார்த்து கேளு” என்று அனுப்பி வைத்திருந்தார்.
அதை கேட்க தான் வந்திருந்தான் கதிரேசன். ஆனால் எங்கே கேட்க விட்டான் இந்த மாணிக்கவேல். அடிக்கு ஒருமுறை “விழி..” “விழி..” என்று அழைத்து அவன் வேலை வாங்க.. மாமன் மகள் கஷ்டப்படுவதை பார்த்த கதிரேசன் கடுப்புடன் வந்து விட்டான்.
திருமாறன் தங்கச்சி மகேஸ்வரியின் கணவர் சந்திரசேகர் மற்றும் மனைவியின் அண்ணன் கலியபெருமாள் ஆகியோரோடு பேசிக் கொண்டிருக்க..
மகளுக்கு எடுத்த நகைகளை தன் அண்ணி அமுதாவிடமும் நாத்தனார் மகேஸ்வரிடமும் காட்டிக் கொண்டிருந்தார் வேதாமணி!
யாருக்கு வந்த விருந்தோ என்று களஞ்சியம் தான் இது எதையும் கண்டு கொள்ளாமல் தனியாக துக்க கடலில் மூழ்கி இருந்தான்!
காரணம் இன்று மருமகனாக மறு வீட்டுக்கு வந்திருக்க வேண்டியவனை மணமகனுக்கு தோழனாக இருக்க சொன்னால் அவனுக்கு
வருத்தம் வருமா? வராதா?..
சோகம் பொங்குமா? பொங்காதா? துக்கம் பீறிடுமா? பீறிடாதா??
“போங்கடா!! நீங்களும் உங்க கல்யாணமும்!” என்று அவன் போனில் மூழ்கியிருக்க.. அப்பொழுது வேகமாக உள்ளேன் அந்த கதிரேசன் “மாமி தண்ணி குடுங்க!” என்று கேட்க.. முகத்திலும் குரலிலும் அத்தனை கடுப்பு அவனிடம்!!
“மலர்விழியை பார்க்க போனியான், என்ன ஏதோ கடுப்போடு வந்திருக்கியான்?” என்று பெண்களுக்குள் பேசிக்கொண்டே, அவனுக்கு நீர் மோர் கரைத்து வந்து கொடுத்தார் வேதாமணி.
குடிக்கும் வரை அமைதியாக இருந்தவர் “என்னாச்சு கதிரேசா?? கேட்டியா அவகிட்ட என்ன வேணும் வேணான்னு?” என்று வேதமணிக்கு “அட போங்க மாமி!! அந்த பய எங்க கேக்கவிட்டியான்?” என்று சத்தம் போட்டான்.
கதிரேசன் சட்டென்று மரியாதை இல்லாமல் பேசியது களஞ்சியத்துக்கு ஆர்வம் பொங்க தலையை தூக்கி “என்னடா அங்கே நடக்கிறது?” என்று பார்த்தான்.
பொதுவாக கதிரேசன் சட்டென்று யாரையும் இப்படி தூக்கி எறிந்து பேசி விடமாட்டான் களஞ்சியத்தை போல.. கொஞ்சம் பொறுப்பானவன் தான்.
“கதிரேசு என்ன இருந்தாலும் அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை! இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசக்கூடாது!” என்று சந்திரசேகர் மகனை கண்டிக்க..
“ஆமாம் கதிரு..!” என்று கலியபெருமாளும் ஒத்து ஊத..
“அட.. நீங்க சும்மா இருங்க பெரியப்பா! அவன் இன்னைக்கு என்ன மலரு புள்ள கிட்ட பேசக்கூட விடல தெரியுமா?” என்றதும் அனைவருக்கும் பக் என்றானது.
நகைகளை பார்த்துக் கொண்டிருந்த அமுதாவும் மகேஸ்வரியும் கூட அப்படியே அதை விட்டுவிட்டு இவன் அருகே வந்து “என்னடா சொல்ற புள்ளைய பார்க்க கூட விடலையா? பேசக்கூட விடலையா? அப்படியாடா அடச்சு வச்சிருக்காய்ங்க?” என்று வருத்தமாக கேட்டார் மகேஸ்வரி. அண்ணன் மகள் மீது அவருக்கு தனி வாஞ்சை தான்.
“இல்லையே முந்தாநாள் கூட நான் பேசினானே.. அப்ப கூட நல்லா தானே பேசினா?” என்று அமுதா தாடையில் கை வைத்து சந்தேகமாக கேட்க…
“நீங்க வேற பெரியம்மா.. அவன் இன்னைக்கு அடிச்ச கூத்துக்கு எனக்கு வந்த கடுப்புக்கு.. மலர் பிள்ளைக்காக அமைதியா இருந்துட்டேன். ஆனா இந்த மதுரைக்காரன் யாருன்னு அந்த கோயம்புத்தூர் குசும்பு பிடிச்சவனுக்கு காட்டுறானா இல்லையானு மட்டும் பாருங்க!” என்று பல்லை கடித்துக் கொண்டான்.
வேதாமணிகோ மொத்தமும் பதறியது நெஞ்சம்! கொஞ்ச நாள் முன்னால் வந்த மாணிக்கவெலின் அக்கா மாமா இருவரும் தன்மையாக தான் பேசி விட்டு சென்றார்கள். ஃபோனில் அழைத்து சுந்தரவேல் அல்லிமலர் கூட அவ்வளவு அன்பாக தான் பேசி உறவுகளையும் அழைத்து இருக்க.. “இவன் என்ன திடீர்னு இப்படி பேசுறியான்? தலையில் குண்ட இல்ல அணுகுண்ட தூக்கி போடுறியான்!” என்று பதைப்பதைத்தவர், அவன் பக்கத்தில் அப்படியே அமர்ந்து விட்டார்.
“என்னன்னு சொல்லு கதிரேசா? எனக்கு அப்படியே படப்படனு வருது! இந்த பொண்ணுக்கு கல்யாணத்தை ஒன்னு முடிக்கறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்கு தானேன் தெரியும்! என்னால முடியல…” என்று அவர் முந்தானையில் மூக்கை உறிஞ்ச…
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும் மாமி! அவதான பாத்து விரும்பி கட்டிக்கிட்டா.. அந்த ஆளு என்கிட்ட பேசக்கூட இல்ல தெரியுமா? நான் போனப்ப அப்பதான் மாடியில் இருந்து தூங்கி எந்திரிச்சு வந்தவர் என்னைம பாத்து வாங்கன்னு சொல்லிட்டு போய் ரூம்குள்ள போயிட்டாரு.. அதுக்கு அப்புறம் மலருபுள்ள என்கிட்ட பேச வந்தா..
“வந்தா… வந்தா…” என்று மொத்த குடும்பமும் அவன் முகத்தை தான் பார்த்தது. ஏன் கட்டிலில் படுத்திருந்த களஞ்சியம் கூட சுவாரசியமாக எழுந்து அமர்ந்து விட்டான்.
“விழி.. விழின்னு அத்தனை தடவை கூப்பிடுகிறாரு! அடிக்கு ஒரு தரம்
கூப்பிட்டு விழி பிரஷ் எடுத்துட்டு வா.. விழி குழாயில் தண்ணீர் திறந்துவிடு.. விழி டவுல் எடுத்துட்டு வானு அத்தனை வேலை கொடுக்கிறார்! ஏன் இவள கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இதெல்லாம் யாரு செஞ்சா? அந்த ஆள் தானே செஞ்சுக்கிட்டாரு! இப்ப என்னடானா தொட்டத்துக்கும் விழி விழின்னு…. அதையும் அதட்டல் போட்டு கூப்பிடுகிறாரு.. எனக்கு பார்க்கவே ஒரு மாதிரியா ஆயிடுச்சு!!” என்று அவன் பேசிக் கொண்டிருக்க…
“அடப்பாவி..!!” என்று சுற்றி இருந்த பெண்கள் நெஞ்சில் கை வைக்க.. ஆண்களோ நமட்டு சிரிப்போடு தங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டனர்.
“பாத்திங்களா நான் சொல்லும்போது உங்களுக்கே இவ்வளோ அதிர்ச்சியா நெஞ்சை பிடிச்சிட்டு இருக்கீங்க… அப்ப பார்த்த எனக்கு எப்படி இருக்கும்?” என்றதும் மகேஸ்வரியோ மகனின் குமட்டில் ஒரு குத்து குத்தி “இப்ப மட்டும் இல்லடா.. உனக்கு எப்பவுமே கல்யாணமே நடக்காது! ஒரு அம்மாவா இதை சொல்லக்கூடாதுனு தான் நானும் பார்க்கிறேன். ஆனாலும் என் வாயாலே சொல்ல வைக்கிற பாரு… மதனி வாங்க.. அவன் கிடக்கிறான் போக்கத்த பய..” என்று எழுந்து சென்று விட்டார்.
அமுதாகவும் “நல்ல புள்ள போ நீ.. கொஞ்ச நேரத்துல எங்களை எல்லாம் பதற வச்சுட்ட!” என்று செல்ல..
வேதாமணியோ அதுவரையும் பிடித்திருந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டு “ஒரு நிமிஷம் என் உசுரே போயிடுச்சு மதனி.. உள்ளுக்குள்ள நடுக்கமே வந்துடுச்சு.. பார்த்தா இப்படி சொல்றியான்!” என்று மூவரும் சிரித்துக் கொண்டு மீண்டும் நகைகளை பார்த்து பத்திரமாக எடுத்து வைக்க சென்றார்கள்.
அமுதாவுக்கும் மகேஸ்வரிக்கும் மலர்விழி தங்களுக்கு மருமகளாக வரவில்லை என்று ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், அதை மீறி அவளுக்கு பிடித்த வாழ்க்கை அவள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்டவர்கள்!
உறவுகள் என்றாலே டாக்ஸிக் என்று இல்லை!! இது போல சில நல்ல உறவுகளும் இருக்கத்தான் செய்கிறது நம்மிடையே….
“யோவ் பங்காளி. .. என்னய்யா நடக்குது இங்க.. இவ்வளவு நேரம் அவன் வந்து மலர்புள்ளைய போட்டு அந்த பாடு படுத்துறான்னு சொன்னா ஒருத்தரும் கேட்காம.. நீ என்ன பைத்தியமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு என்னை பார்த்துட்டு போறாய்ங்க… எனக்கு தான் புரியல! இந்த விஷயத்தில் நீ கரை கண்டவன் தானே.. நீயாவது சொல்லுயா?” என்று களஞ்சியத்தின் வாயை புடுங்க…
களஞ்சியமோ அவனை நிமிர்ந்து பார்த்தவன் “அப்போ மலர் அங்க அவன் கூட சந்தோஷமா இல்ல.. அப்படித்தானே சொல்ற?”
“ஆமாய்யா.. அடிச்சு சொல்லுவேன்! நம்ம குலதெய்வம் அய்யனார் முன்ன சூடம் ஏத்தி அடிச்சு சொல்லுவேன். மலர்புள்ள அங்கன சந்தோசமா இல்ல.. இந்த பையன் அரட்டி உருட்டி அவளை படுத்தி எடுக்கிறான்” என்றான்.
களஞ்சியத்தின் எண்ணம் எப்படி இருந்தது என்றால்.. அன்று நாம் விட்ட வார்த்தைக்காக தான் மலரை தூக்கி அவன் திருமணம் செய்து இருக்கிறான் என்று புரிந்தது.
ஆனால் இது யாரிடமும் சொல்ல முடியாது அதைவிட மலர்விழிக்கு முன்னே அவனை தெரியுமா தெரியாதா என்றும் இவனுக்கு தெரியவில்லை. இவர்களை அவன் அவதானித்த வரை ஒட்டி ஒட்டாமல் பட்டும் படாமல் இருக்கிறார்கள் என்று புரிந்தவனுக்கு மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது கண்ணா என்றபடியே எழுந்தவன் “நான் போய் பாத்துட்டு வரேன் பங்கு! அதுக்கப்புறம் நம்ம முடிவு பண்ணலாம்..” என்றவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு மாணிக்கவேலின் கடையை நோக்கி வந்தான்.
கடைக்கு காலையிலேயே வந்து விட்ட மாணிக்கவேல் காலையில் நடந்தவற்றை நினைக்கையில் அவன் தடித்து அதிரங்கள் கூட அழகாக சிரித்தது. அதிலும் கதிரேசனுக்கு முன்னால் மனைவியை சீண்டி விட்டு.. பின் தீண்டும்போது அந்த சுகமே சுகம்!!
ஊடலுக்குப் பின்னான காதல் கூட அழகுதான் என்று நினைத்துக் கொண்டு வேலையில் பார்த்தவனுக்கு, அவளுக்கு என்று திருமணத்திற்கு தான் ஒன்றும் எடுத்துக் கொடுக்காதது நினைவில் வர.. ஜீவனுக்கு ஃபோன் செய்தான்.
“ஜீவா கல்யாணத்துக்கு உங்களுக்கெல்லாம் ஏற்கனவே துணிமணி எடுத்தாச்சு தானே?” என்று கேட்க..
“அதெல்லாம் ஆச்சி அப்பவே பக்காவா எடுத்துட்டாங்க மாமா! ஏன் மாமா உங்களுக்கு எதுவும் வாங்கணுமா?” என்றதும் “எனக்கு இல்லடா உங்க அத்தைக்கு தான் வாங்கோணும்” என்றான்.
“இல்ல மாமா.. அன்னிக்கு அவிய்ங்க கடைக்கு போகும் போது முகூர்த்த புடவை எல்லாம் அத்தைக்கு புடிச்ச மாதிரி தான் வீடியோ கால்ல போன் போட்டு கேட்டு வாங்கினாங்க” என்றான் ஜீவன்.
“டேய் அது அவங்க எடுத்து கொடுத்ததுடா! நான் அவளுக்கு ஏதாவது எடுத்து கொடுக்கணும்னு ஆசைப்படறேன். இப்போ அவளை நான் தனியா அழைச்சிட்டு போக முடியாது. நீ என்ன பண்ற உன் அக்காளுங்கள ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஏதாவது சினிமாவுக்கு போ” என்றான்.
“அப்போ கடை மாமா?”
“அது கிடக்குது! அப்புறம் பாத்துக்கலாம்!!” என்றான் மாணிக்கவேல்.
“சொன்னது நீதானா??
சொல் சொல் என் உயிரே…” என்று ஜீவன் மறுபக்கம் இருந்து பாட்டு பட..
“எதுக்குடா இந்த பாட்டு பாடுற?” என்று இங்கே மாணிக்கவேல் பல்லை கடிக்க..
“அதில்ல மாமா இத்தனை வருஷத்துல நான் லேட்டா வந்தா அத்தனை திட்டு திட்டுவ.. இப்ப என்னன்னா பட்ட பகலுல் கடையை மூட்டிட்டு என்னை சினிமாவுக்கு போக சொல்ற பாத்தியா.. அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு? பேசுறது நீதானானு பாட்டு மூலமா நான் கேட்டேன்” என்றான்.
“டேய். ஒழுங்கா நான் சொன்னது செய்! இல்ல..” என்றதும், ஜீவனுக்கு மீண்டும் மாமனை சீண்ட ஆசை பிளாக்கிங்.. “என்ன மாமா… அப்போ பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா எங்களை எல்லாம் விட்டுடுவ அப்படித்தானே? அப்ப நாங்க எல்லாம் ஆரோ தானே!” என்று இவன் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே பேச மீண்டும் அத்தனை கோபம் மாணிக்கவேலுக்கு..
“ஏன்டா உங்களுக்கு மாமனா எதுலடா நான் கொற வச்சேன்? என் பொண்டாட்டிக்கு இப்பதான் முதல் முதல ஒன்னு எடுத்து கொடுக்கிறேன். அவ கூட தேனுவையும் வள்ளியையும் கூட்டிட்டு போனா.. நல்லாவா இருக்கும் சொல்லு? ஏற்கனவே அவங்களுக்கும் இவளுக்கும் முட்டிக்குது! இவங்க ஏதாவது சொல்லி அவ மனசு கஷ்டப்பட்டால்.. சொன்னதை புரிஞ்சுக்கடா! சில பல விஷயங்களை இப்படித்தான் நம்ம பேலன்ஸ் பண்ணனும்” என்றான்.
“மாமா.. நீ ரொம்ப தேறிட்ட!! வர வர சம்சாரி ஆகிட்டே வர போ போ” என்று சிரித்தவன், “அப்படியே ஒரு ஐயாயிரம் கூகுள் பேல அனுப்பு. உன் அக்கா மகளுங்க ரெண்டு பேரும் வாய தொறந்தாளுங்கனா மூடவே மாட்டாளுங்க! இதுக்கெல்லாம் காசுக்கு நான் எங்க போறது?” என்றதும் அவன் சொன்னபடி பணத்தை அனுப்பி வைத்து மூவரையும் படத்துக்கு அனுப்பி விட்டு, “டேய் அப்படியே உங்க அய்த்தைம எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லு! அவளுக்கு சர்ப்ரைஸா நான் கூட்டிட்டு போறேன்” என்றான் மாணிக்கவேல்.
*மாமா.. ம்ம்ம்.. நீ நடத்து! நடத்து!! என்ஜாய் மாமோய்!” என்றான்.
வீட்டிற்கு சென்றவன், “அய்த்த மாமா உங்களை சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னாரு” என்றவன், “நான் சினிமாக்கு போலாம்ன்னு இருக்கேன்! நீங்க வரிங்களா?” என்று கேட்டதும்..
“போடா.. எங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல!” என்றனர்.
“சரி போங்க.. நீங்க ரெண்டு பேரும் தான் தனியா இருக்கணும்!” என்றதும் “தனியா வீட்டில் இருந்து போர் அடிப்பதற்கு அங்க போய் கொஞ்ச நேரம் தியேட்டர்லையாவது இருந்துட்டு வரலாம் வாடி” என்று தேன வள்ளியை கிளப்ப, இருவரும் ஜீவனோடு சென்றார்கள்.
மலர்விழிக்கு அவர்களோடு செல்ல விருப்பம் இல்லை. அன்று வாஞ்சையோடு கண்கள் நிறைய திருப்தியோடு மன்னவன் தன் கைப்பக்குவத்தை சாப்பிட்டதே மனதில் நிறைந்திருக்க.. முதல் நாள் என்று சைவமாக செய்தவள் இன்று அசைவம் செய்து கொண்டு எடுத்துச் சென்றாள்.
அதேசமயம் களஞ்சியம் மாணிக்கவேலின் கடைக்குள் நுழைந்து இருந்தான், அவன் முன் கட்டாக பணத்தை எடுத்து வைத்தான்.
*என்னது?” என்று அவன் கேட்க..
“முன்னையாவது நீ வேற.. எனக்கு கடன் கொடுத்தவன் மட்டும். இப்பதான் சொந்தமா போய்ட்டோமே.. அதனாலதான் பணத்தை திருப்பி கொடுக்க வந்து இருக்கேன்! என்னனு பாத்து பைசல் பண்ணிவிடு” என்றான்.
உறவு வேற தொழில் வேற என்று மாணிக்கவேல் தெளிவாக இருக்க.. கணக்கு எடுத்துப் பார்த்தவன் வட்டியை அவனுக்காக குறைத்துக் போட்டு சரியா இருக்கு என்று கடனுக்காக எழுதிக் கொடுத்த பத்திரத்தை கேன்சல் செய்து அவன் கையில் கொடுத்தான்.
“சரி. நான் என் கடனை கொடுத்துட்டேன்! நீ எப்போ என் அத்தை பொண்ணு தர போற?” என்று கேட்டான் களஞ்சியம்!
திடுக்கிட்டு மாணிக்கவேல் அவனை பார்த்தான்.
மாமனே 16
“என்ன பார்க்குற? என்ன பழி வாங்கத் தானே என் அய்த்த பொண்ண தூக்குன? இப்போ உன்னோட கடனை ஒன்னு இல்லாம பைசல் பண்ணிட்டேன்! என் அயத்த பொண்ண அதே மாதிரியே நீ திரும்ப என்கிட்ட ஒப்படைச்சிடு!” என்று கேட்டவன் முன் அய்யனாராக உறுமி நின்றான் மாணிக்கவேல்!!
“என்ன சார்? என்ன கோபம் எல்லாம் படுறிங்க? உண்மையை தானே சொல்றேன். உனக்கு முன்ன பின்ன என் அத்தை பொண்ணு தெரியாது ஏதோ சந்தர்ப்ப வசத்தால கட்டிக்கிட்ட… இல்ல இல்ல என்னை பழி வாங்குவதற்காக இந்த பணத்துக்காக தானே மலர கட்டிக்கிட்டு! இப்போ அதை நான் மொத்தமா திருப்பி கொடுத்துட்டேன்! அதனால என்ன பண்ற.. இந்த கல்யாண ட்ராமா எல்லாம் நிறுத்திட்டு.. மலர நீ வீட்டுக்கு அனுப்பிடு!” என்றான் களஞ்சியம்!!
ஏற்கனவே முழு எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தவன் மீது பெட்ரோலை குடம் குடமாய் கொண்டு ஊற்றினான் களஞ்சியம்!!
நக்கலாக தன் முன்னே அமர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த களஞ்சியத்தை கண்டதும், ‘இவன் நம் வாயை பிடுங்க வேண்டியே வந்திருக்கிறான்! இவனுக்கு எல்லாம் சொல்றதை விட செயலில் காட்டுறது தான் சிறந்தது!’ என்று முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் மாணிக்கவேல்
இவனிடம் சண்டை போட்டு மோதி ஒரு பயனும் இல்லை! வீண் வம்புக்கு விவாதத்திற்கு என்று வந்திருக்கிறான். இவனை இவன் வழியில் சென்று தான் அடக்க வேண்டும் என்று நினைத்தவன், “இப்ப என்ன நான் உன் அத்தை பொண்ணு கூட வாழ்றேனா இல்லையா? நெஜமாவே நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ணுனோமா இல்லையானு? உனக்கு தெரியனும்! நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குமா இல்ல நடிக்கிறோமானு உனக்கு தெரியனும்! அவ்வளவு தானே… இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவா… வந்ததுக்கு அப்புறம் நீயே பார்த்துக்கோ!” என்றான்.
களஞ்சியம் அதற்கு ஏதோ கூற வர..
“இரு இரு அவசரப்படாதே!” லாக்கர் அருகில் இருக்கும் அறையை காட்டி “அங்க போய் இருந்துக்கோ! நடக்குறத பாரு!” என்றான் சிரிப்போடு.
“நீ வேணும்னு என் கிட்ட நடிச்சேனா?” என்று களஞ்சியம் அவனை முறைத்துக் கொண்டு கேட்க…
“சரி.. நான் தான் நடிக்கிறேன்! ஆனால் உன் அத்தை பொண்ணு நடிக்க மாட்டா தானே.. உள்ள வந்ததிலிருந்து நாங்க கிளம்பி போற வரைக்கும் நீ வேணா பார்த்துக்கொண்டே இருக்கலாம்! பங்காளிக்கு மட்டும் ஃப்ரீ ஷோ!” என்று கண்ணடித்துக் கூறினான்.
களஞ்சியம் எதிரே ஹெவி பர்பாமென்ஸ் பண்ண காத்திருந்தான். களஞ்சியமும் இவனை நம்பாமல் இவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அந்த அறையில் சென்று நின்றான்.
“என்னங்கடா காலையிலிருந்து ஒவ்வொருத்தனா வந்து என்ன கடுப்பேத்துறதா நினைச்சுட்டு காதலாட வைக்கிறீங்க.. மங்குனி அமைச்சர்களா! அய்யோ என்னை கூட வெக்கப்பட வைக்கிறானுங்க!”
என்று சிரித்துக் கொண்டவன் தன் காதல் கண்மணியோடு காதலாக காதலாட காத்திருந்தான்!!
“கதிரேசன் பேச்சை நம்பி இங்க வந்துட்டோம்… இவனும் நம்ம பழிவாங்க தான் மலர தூக்கி இருக்கிறானு நினைத்துக்கொண்டு இருக்கோம்!! ஆனால் நிஜம் அதுதானா? ஒருவேளை நம்மை ரூம்ல வச்சு பூட்டி விடுவானோ? ச்சசே… அப்படி எல்லாம் பண்ண மாட்டான்! நாம நாலு மாசம் வட்டி கட்டாத போதே ஒன்னும் செய்யல.. அதுவும் இப்போ அவன் பொண்டாட்டி என் அத்தை பொண்ணு!! என்னதான் நடக்குது பார்ப்போம்?” என்று அங்கிருந்து நாடா கட்டில் அமர்ந்து இருந்தான்.
ஜீவன் போகும்போது அருகில் தெரிந்த ஆட்டோ பையனிடம் மலர்விழியை கடைக்கு அழைத்து செல்ல பணித்து விட்டு செல்ல… அவர்கள் சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் வந்த ஆட்டோ பையன் “அக்கா.. போகலாமா?” என்று வெளியில் இருந்து குரல் கொடுக்க..
“இன்னொரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு தம்பி! வரேன்!” என்றவள் சமைத்து முடித்து, தன் உருவத்தை பார்க்க.. வியர்வையில் குளித்து தலையெல்லாம் கலைந்து எப்படியோ இருக்க.. வேகமாக ஒரு காக்கா குளியலை போட்டு அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு கூடவே காலையில் தொடுத்து வைத்து மதுரை மல்லியையும் இரு பக்கம் வழிய சூடிக்கொண்டு ஒருமுறை கண்ணாடியில் பார்க்க.. திருப்தியாக இருந்தது!!
“அழகி டி நீ மலரு!” என்று கண்ணாடியில் தன்னை கொஞ்சிக் கொண்டாள்!
அதிலும் மேல் உதடு சற்றே தடித்து காணப்பட்டது. காலையில் அவன் செய்த கலாட்டாவினால்… அதை நினைத்து உதடு கடித்து சிரித்தவள் மெலிதாக லிப்ஸ்டிக்கால் அதை மறைத்து தீட்டினாள். இன்னும் வசீகரமாய் இருந்தது அச்செவிதழ்கள்.
கேரியரில் சாப்பாட்டோடு தனியாக ஒரு பாட்டிலில் மோர் கடைந்து அதில் இஞ்சி வெட்டிப்போட்டு எடுத்துக் கொண்டாள். அடுத்த பத்தாவது நிமிடம் மாணிக்கத்தின் கடையின் முன்னே மலர்விழி!!
ஆட்டோ சத்தம் கேட்டவுடன் மெல்ல எட்டிப் பார்த்தவன் மலர்விழி வந்ததும், வேகமாக அந்த அறைக்குள் வந்து “உன் அத்த பொண்ணு வந்துட்டா.. கதவை லைட்டா தான் சாத்தி வைக்கிறேன்” என்றவன் உள்ளே இருப்பவன் தெரியாதவாறு ஒருக்களித்து வைத்தான் கதவை.
வேலை இருப்பது போல நடித்தவன், “விழி…கொஞ்சம் வேலை இருக்கு, இரு வரேன்!” என்றான்.
“சரிங்க.. நீங்க வேலை பாருங்க, நான் சாப்பாட்டை கொண்டு போய் ரூமுக்குள்ள வைக்கிறேன்” என்று அவள் அறைப்பக்கம் செல்ல..
பதறியவன், “நில்லு.. நில்லு
. அங்க என் பிரண்டு படுத்து இருக்கான். ஊர்ல இருந்து பார்க்க வந்திருந்தான். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்னா அதான் அங்க படுக்க வச்சேன். நாம இங்கேயே சாப்பிடலாம். இரு கடையை அடைச்சிட்டு வரேன்” என்றவன் எழுந்து கடையை அடைத்து விட்டு லஞ்ச் பிரேக் போர்டு மாட்டி விட்டு வந்தான்.
அவளோ ஒருக்களித்த கதவை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே களஞ்சியமோ இவர்கள் பேசுவதை கேட்டால் போதும் என்றபடி கதவுக்கு பின்னால் தான் நின்று இருந்தான்.
கீழே சில பழைய செய்தித்தாள்களை போட்டு “இது மேல சாப்பாடு எடுத்து வை விழி..” என்றான். அவளும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே “ரொம்ப க்ளோஸ் பிரண்டா மாமா?” என்று கேட்டாள்.
“ஆமா.. சின்ன வயசுல இருந்து நானும் அவனும் ரொம்ப ஃப்ரெண்ட். மதுரைக்கு வரும்போது எல்லாம் என்னையும் பார்க்க வருவான். நான் ஊருக்கு எப்பவாவது தானே போவேன்.. அதனால் அவனே வரும் போது என்னை பார்ப்பான்” என்றவன் இருவருக்கும் தட்டை எடுத்து வைக்க இவளும் பரிமாறிக் கொண்டே, “நம்ம கல்யாண விஷயம் தெரியுமா மாமா?” என்றாள்.
“தெரியும்!! இப்ப வந்த போது தான் சொன்னேன். ஊருக்குள் நடக்கும் கல்யாணத்துக்கும் வர சொல்லி இருக்கேன்” என்றான் அமர்ந்துக் கொண்டே…
‘என்ன மாமா ரொம்ப பம்மிக்கிட்டே பேசுறாரு? இவரு இப்படிப்பட்ட ஆள் இல்லையே? அவர் பிரண்டுக்கு முன்னாடி அடக்க ஒடுக்கமா இருக்காரோ? மவனே காலையில் அத்தானுக்கு முன்னாடி என்னைய என்ன பாடு படுத்துன? விழி விழின்னு கூப்பிட்டு… கொஞ்ச நேரம் அந்த மனுஷன் கிட்ட என்னைய பேச விட்டாயா? இருடா மாப்பு… உனக்கு நான் திரும்பி வைக்கிறேன் ஆப்பு!” என்ற நினைத்தவள்,
“மாமா.. மாமா.. இன்னைக்கு சமைச்சதுல என் கை கால் எல்லாம் ஒரே வலி! மூணு பேரு என்னை விட்டுட்டு சினிமாவுக்கு வேற போய்ட்டாய்ங்க.. நான் மட்டும் தேன் செஞ்சேன்” என்றதும், “நீயே செஞ்சதா.. பிரியாணி நல்லா இருக்கு விழி!” என்று இவன் சாப்பிடுவதில் பிஸியாக..
“என்னால கையை தூக்கி சாப்பிட முடியல மாமா.. அதனால நீங்க எனக்கு ஊட்டி விடுங்க!” என்றாள் பாவமாக முகத்தை வைத்து…
‘என்னடா நாம எதுவும் பண்ணாமலே இவளே பர்பாமென்ஸ் பண்ண ஆரம்பிக்கிறா.. ஆக்சுவலி நாமதான் ஊட்டிவிட சொல்லலாம்னு யோசித்து இருந்தோம்? ஆனா இவ சொல்றா?
எலி இப்ப எதுக்கு அம்மணமா ஓடுதுன்னு தெரியலையே…??” என்று யோசித்துக் கொண்டவன் ‘பரவால்ல.. இதுவும் நமக்கு நன்மைதான்!’ என்று அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான் ஓரக்கண்ணால் கதவை பார்த்துக் கொண்டே…
ஒரு நிமிடம் அவர்களை எட்டிப் பார்த்த களஞ்சியமோ “ஊட்டி விடுவதெல்லாம் லவ் ஆயிடுமா? போடா.. போடா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு!” என்று திரும்பிக் கொண்டான் அவர்களை பார்க்காமல்…
“மாமா.. மாமா… இந்த ஷேர்ட்ல நீங்க அம்சமா இருக்கீக!” என்றாள்.
“எதே.. இந்த வெள்ளை சட்டையிலா? ம்ம்ம்.. இருக்கும் இருக்கும். நீ சாப்பிடு!” என்று தொடர்ந்தான்.
“நீங்க ஊட்டுங்க..” என்று வாயை திறந்தவள், அவனது கையை பிடித்து ஒவ்வொரு விரலாய் சப்புக் கொட்டி சாப்பிட்டாள்!
அவனுக்கோ கொஞ்சம் கூச்சமாகி போனது. எங்களைப் பார்த்து தெரிந்து கொள் என்று களஞ்சியத்திடம் கூறிவிட்டான் தான். ஆனால் மற்றவன் முன்னே இப்படி அந்நியனோனியமா இருக்க விரும்பவில்லை. இப்பொழுது மனது குறுகுறுத்தது!! அதைவிட இவள் செய்யும் அலும்பில் கருத்த தேகம் கொண்டவனும் செக்க சிவந்த வானமாய் மாறி போனான்!!
“மாமா… மாமா…”
“ஏம்மா?”
“நான் சமைக்கும் போது கூட இந்த பிரியாணி இவ்வளவு டேஸ்ட்டா இல்ல மாமா.. இப்போ இவ்ளோ டேஸ்டா இருக்கு பாருங்களேன்?” என்று கண் சிமிட்டி அதிசயத்தாள்.
“ஏனாம்?” கேட்டான் குறும்பில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே…
“ஏன்னா.. என் மாமா எனக்கு ஆசை ஊட்டி விடுவதால் தான், பிரியாணிக்கு டேஸ்ட் வந்துருச்சாம்!” என்று கண்களை உருட்டி உருட்டி காதில் இருக்கும் இரண்டு ஜிமிக்கிளும் கன்னத்தை தொட்டு தொட்டு விளையாட.. தலையை சாய்த்து பேசியவளை கொள்ளை கொள்ளும் வேகம் எழுந்தது மாணிக்கவேலுக்கு!!
“போடி வாலு….!” என்றான் மீண்டும் அவளுக்கு ஊட்டிக் கொண்டு, இம்முறை தனக்கு ஊட்ட வந்த கையை அப்படியே அவன் பக்கம் திருப்பி “நீங்களும் சாப்பிடுங்க மாமா! அப்புறம் சூடு ஆறி போயிடும்! ருசியும் போய்டும்” என்றாள்.
“ரொம்ப தான் மாமா மேல அக்கறை டி உனக்கு! பாதி பிரியாணி உள்ள போனதுக்கப்புறம் தான் மாமன பத்தி உனக்கு நினைப்பே வந்திருக்கு” என்றான்.
“ஏன் தெரியுமா? கிட்ட வாங்க சொல்றேன்?” என்று மெல்லிய குரலில் சொல்ல.. அவன் வரவில்லை.
“அட..! கிட்ட வாங்க மாமா!!” என்று அவன் இரு கன்னங்களையும் கிண்ணங்களாக இரு கைகளால் தாங்கி தன் முன்னே இழுத்தாள்.
“என்ன பேச்சைக் காணோம்?” என்று மெல்ல எட்டிப் பார்த்த களஞ்சியத்தின் கண்களோ விரிந்து கொண்டது. இருவர் முகமும் அருகாமையில் இருக்க.. அதுவும் மலரின் பின்புறம் மட்டுமே தெரிந்த அந்த நெருக்கத்தில் பட்டென்று போய் அந்த நாடா கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். வியர்த்து வழிந்தது அவனுக்கு.
“ஏன்னா…காதலை விட பிரியாணி முக்கியம் பிகிலு!” என்று கிசுகிசுப்பான குரலில் கூறி சிரித்தவளின் இதழ்கள் அவன் இதழ்களை உரசி விட்டு சென்றது அழுத்தமாக… உரிமையாக…
“அடியே…!!” என்று அலறிவிட்டான் மாணிக்கவேல். அதுவும் பக்கத்துல களஞ்சியம் இருக்கிறான் என்று தெரிந்ததும் இன்னும் சங்கடமாகி போனது அவனுக்கு.
“என்ன மாமா… ஏதோ புதுசா கொடுக்குறது போல அலறுரிங்க!! இதெல்லாம் டூ பேட் மாமா… நீங்க காலையில பண்ணாததையா நான் இப்ப பண்ணிட்டேன்! பாருங்க என் உதடு எப்படி தடிச்சு போய்ட்டு!” என்று உதடு குவித்து காட்டினாள்.
களஞ்சியத்தின் காதுகள் மட்டுமல்ல உடம்பே பூசியது இந்த காதலர்களின் சம்பாஷனையில்…
“அடேய் கதிரேசா!!! உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லணும் டா.. என்ன சொல்லணும் டா!” என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு இவர்கள் பேச்சு கேட்காத தூரமாய் அந்த ரூமின் ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான்.
“ஆமா மாமா.. கேக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். அது என்ன நேத்து வரைக்கும் அம்மிணி வாங்க போங்கனு அத்தனை மரியாதையா பேசுனீங்க.. இப்ப என்னமோ வாடி போடினு சொல்றிங்க? என்ன விஷயம் சொல்லுங்க… சொல்லுங்க..” என்று அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து கேட்ட விதத்தில் இன்னும் பித்து பிடிக்க வைத்தாள்.
மாணிக்கவேலுக்கு தான் வெட்க வெட்கமாக வந்தது. அதுவும் அடுத்த அறையில் களஞ்சியம் இருக்கிறான் என்பதே அவனுக்கு இன்னும் நாணமுறச் செய்தது.
‘முழுதும் நனைந்தாச்சு இனிமே முக்காடு எதற்கு?’ என்பது போல ‘கொஞ்ச நேரம் முன்னே நடந்ததையே பார்த்திருப்பான் இதை கேட்டா மட்டும் என்ன?’ என்று நினைத்த மாணிக்கவேல் “நேத்து நம் நெருக்கத்திற்கு பிறகும் வாங்க போக வேண்டுமா அம்மிணி?” மந்தகாச புன்னகையோடு கேட்டான்.
“ச்சீ போ மாமா… பொல்லாத மாமா… சரியான இராட்ஷஸ மாமா…!” என்று வெட்கப்பட்டு கொண்டு அவன் புஜத்தில் குத்தினாள் மலர்விழி.
சாப்பிடும் வரை அவர்களின் சம்பாஷனை இப்படியேதான் தொடர்ந்து கொண்டு இருந்தது.
“உள்ளே களஞ்சியமோ தெரியாம வந்துட்டேன் டா.. என்னை விட்டுடுங்கடா!” என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான.
‘ஒரு கன்னி பையன் இல்லை இல்லை காஜி பையனின் சாபம் உங்களை எல்லாம் சும்மா விடாதுடா!’ என்று சாபம் வேறு!!
சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைத்தவன் “கொஞ்சம் இரு விழி பிரண்டு கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்! தூங்குறேன்னா பார்க்கிறேன். தூங்குனா நம்ம கடையை சாத்திட்டு போவோம்” என்று அந்த அறையை நோக்கி சென்றான்.
“எங்க மாமா போறோம் நாம..” என்று கேட்க..
“கல்யாணம் ஆனதில் இருந்தது உனக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். அதுக்கு தான் மூணு பேரையும் அங்க தியேட்டருக்கு பார்சல் பண்ணிட்டு உன்னை இங்கு வர வெச்சேன்” என்று அவன் கண்ணடிக்க..
“எப்பா!! செம ஆளு மாமா நீங்க!” என்றவள் அவனை உரசி கொண்டே நிற்க.. மனைவியின் இந்த புது நெருக்கத்தில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாகி “தள்ளி இருடி என் ப்ரண்ட் இருக்கான்!” என்றான்.
“இருக்கட்டுமே! இருந்தா இருக்கட்டும்!! காலையில் மட்டும் என் மாமா பையன் முன்னாடி என்ன அலும்பல் பண்ணீங்க நீங்க.. அவரை பேச விட்டீய்ங்ககளா? அத்தனை தரம் விழி விழினு என்னை கூப்பிட்டு கூப்பிட்டு எப்படி எல்லாம் பாடாய் படுத்தினீங்க.. சாட்சிக்கு என் உதடு கூட இருக்கு! அதுக்கு உங்களை பழிவாங்க வேண்டாம்” என்று அவள் கூறி சிரிக்க..
“அடிப்பாவி..!!” என்று சிரித்தவன்,
“அப்போ என்ன பழிவாங்க தான் இதெல்லாம் செஞ்ச.. அப்படித்தானே?” என்று அவளை பார்த்து ஒரு மாதிரியாக கேட்க…
“அப்படின்னு சொல்ல முடியாது! ஆனா கொஞ்சம் அப்படி தான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி..” என்று அவள் சிரிக்க..
“ஆமா என் பிரண்ட உனக்கு இன்ட்ரோ பண்ணனும்ல.. டேய் நண்பா கொஞ்சம் வெளியில வா!” என்றான் சத்தமாக…
அசட்டு புன்னகையோடு வெளிவந்த களஞ்சியத்தை பார்த்தவளோ “அய்யய்யோ மாமா.. இவரா இவ்ளோ நேரம் உள்ள இருந்தாரு?” என்று கேட்டவளுக்கு முகம் மருதாணியாய் சிவந்து போக கணவன் பின்னே ஒளிந்து கொண்டாள்.
“என்ன ப்ரோ.. உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்று மாணிக்கவேல் கேட்க..
“ஆளை விடுங்கடா சாமி!!” என்று களஞ்சியம் சென்று விட்டான் மலரிடம் தலையசைத்து விட்டு..
அவளும் அசட்டு சிரிப்போடு வழி அனுப்பி வைத்தாள். “என் மாமா பையன் தான் உள்ள இருக்கான்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? போச்சு.. போச்சு.. என் மானம் போச்சு! என் மருவாத போச்சு!” என்று அவள் புலம்ப… மாணிக்கவேல் வெடித்து சிரித்தான்.
“நான் என்னடி பண்ணட்டும்! அவனா வான்டடா வந்து வாங்கிட்டு போறான்!! விடு.. விடு.. ஆனாலும் உன் முறை பசங்களால் காலையில் இருந்து இன்னைக்கு ஒரே குஜால் தான்!” என்றவன் மனைவி அழைத்துக்கொண்டு முதலில் நகை கடைக்கு சென்றான்.
பார்த்து பார்த்து அவளுக்கு பெரிய ஆரம் தோடு கைக்கு ப்ரேஸ்லெட் என்று வாங்கி கொடுத்தவன், அடுத்து அவள் விரும்பிய வண்ணத்தில் பட்டு புடவை சாதாரண புடவைகள் என்று வாங்கினான். அதனை எல்லாம் ஒரு பெட்டியில் வைத்து அடுக்கி, பெட்டியை கடையில் கொண்டு போய் வைத்துவிட்டு தான் வீட்டிற்கு சென்றான்.
என்னதான் இதை ஆசையாக வள்ளியிடம் தேனிடம் மலர் காட்டினாலும் அவர்களுக்கு இந்த நிலைமையில் பொறாமை தான் எழும் என்று புரிந்து கொண்டவன், ஊருக்கு போகும்போது பெட்டி எடுத்துட்டு போகலாம் என்று மனைவியிடம் கூறி விட்டான்.
நகை இருப்பதால் அப்படி சொல்கிறான் என்று அவளும் ஒன்றும் கூறவில்லை.
அன்றிரவும் மொட்டை மாடியில் தான் மாணிக்கவேலுக்கு படுக்கை!! ஆனாலும் கொஞ்ச நேரம் பிறகு..
மெல்லிய கொலுசு ஒலி இசைக்க…
“மொட்டை மாடி.. மொட்டை மாடி..
ஒரு லவ் ஜோடி.. லவ் ஜோடி..!” என்று பாடலுக்
கு ஏற்ப திருட்டுத்தனமாக மேலேறி வந்து கணவனோடு படுத்துக் கொண்டாள் மலர்விழி!!
மறுநாள் காலையிலேயே மலர்வழி குடும்பம் தனியாக ஒரு பஸ்ஸில் கோயம்புத்தூரை நோக்கி செல்ல.. இவர்கள் அனைவரும் தனி காரில் கோயம்புத்தூர் நோக்கி சென்றனர்.
கருமத்தம்பட்டி அவர்களை கலகலப்போடு வரவேற்றது!!
👌👌👌👌👌👌
Super ❤️❤️
Wow super sis