ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 20,21

20

 

 

ஓட்டமும் நடையுமாக வெற்றியின் அறையில் இருந்து ஓடி வந்தவள் தன்னறை கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மனம் ஆறவே இல்லை!!

 

எப்படி இப்படி ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறான்… பேசுகிறான்.. ரசிக்கிறான்.. கொஞ்சுறான்… அப்போ நடந்தது எல்லாம்?

 

அன்று தாலி கட்டிய கையோடு இரு குடும்பங்களும் வெற்றியின் வீட்டுக்கு செல்ல… தனபாக்கியமும் மலரும் மருதுவும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர் இல்லையில்லை சண்டையிட்டு கொண்டிருந்தனர். வாஞ்சி வேந்தனும் அழகுசுந்தரமும் அகிம்சையை கையில் எடுக்க.. இவர்கள் இம்சை தான் தாங்க முடியாமல் போனது நிவேதிதாவுக்கு!!

 

சுவாதியோ கடும் கோபத்தோடு தன் எதிரே இருக்கும் கணவனை தான் முறைத்துக் கொண்டிருந்தார். பெண்கள் எல்லாம் பரிதவிப்போடு நிவேதிதாவையும் வெற்றியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர். நிவேதிதாவின் கண்கள் அனைவரையும் ஒருமுறை சுற்றிச்சூழன்று வெற்றியிடம் நிலைக்க… அவன் முகத்திலோ அலட்சியம் கலந்த கர்வம்!! இனி என்ன செய்ய முடியும் உன்னால் என்று!!

 

அந்த ஒரு பார்வை..

அந்த ஒரு அலட்சியம்..

அந்த ஒரு கர்வம்..

அந்த ஒரு ஆணாதிக்கம்…

 

வெகுண்டு எழ செய்தது நிவேதிதாவை!!

 

வாஞ்சிநாதன் மற்றவர்களை அடக்கி அழகுசுந்தரத்திடமும் பேசி.. கிட்டத்தட்ட சம்மதமே வாங்கிவிடும் நிலை!! ஆனால் நிவேதிதாவின் கோபத்தில் சிவந்த கண்களோ வெற்றியைத் தான் எரித்தது அன்று மதுரையை எரித்த கண்ணகியை போல!!

 

அடுத்த நிமிடம் தன் கழுத்தில் அவன் கட்டியை தாலியை பறித்து வெற்றியின் மீது தூக்கி எறிந்தவள், “இது என் வாழ்க்கை!! நான்தான் முடிவு பண்ணனும்!! எவனோ அடுத்தவன் இல்லை… தாலி கட்டியதால் மட்டுமே அவனுக்கு நான் பொண்டாட்டியில்லை!!” என்றவள் அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேற பார்த்திருந்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்தில்!!

 

விடுவிடு சென்ற தங்கையோடு வெற்றியை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தவாறு சேர்ந்து கொண்டான் மருது!!

 

இன்று அனைத்தையும் நினைத்து பெருமூச்சு விட்டவள் இனி அவன் பக்கமே செல்லக்கூடாது என்று பெரு முடிவெடுத்தாள்!!

 

அடுத்த நாள் வேகமாக கிளம்பி அவர்கள் நண்பர்கள் நடத்தும் தொழில் முனைவோர் பயிற்சிக்கு சென்றாள் தன்னுடைய காரில் நிவேதிதா.

வழக்கம் போல அவர்களது ஆபீஸ் ரூமில் மற்ற நண்பர்கள் அமர்ந்திருக்க.. அனைவருக்கும் பொதுவாக “ஹாய் கைஸ்!! குட் மார்னிங்!!” என்றவள் தன்னுடைய பேக்கை அதற்கான செல்பில் வைத்து விட்டு “அப்புறம் எனக்கு இன்னைக்கு என்ன கிளாஸ்?” என்றவாறு தாமஸ் அருகில் அமர்ந்தாள்.

 

“நிவே!! நம்மையும் நம்பி இன்னைக்கு ஒரு புது கஸ்டமர் வந்திருக்காரு.. அதுவும் ஃப்ரம் இந்தியா. இன்னைக்கு டைம் மேனேஜ்மென்ட் நீதான் எடுக்கணும்” என்றான்.

 

லீவியோ “டயம் மேனேஜ்மெண்ட் பத்தி இவகிட்ட எடுக்க சொல்ற.. நல்ல டாபிக்? நல்ல ஆளு?” என்று சிரித்துக்கொண்டே கணினியில் தனது வேலையை செய்து கொண்டிருந்தவள், “நிவே.. ஏன் லேட்?” என்று கேட்க..

 

“அதை ஏன் கேக்குற காலையிலேயே ஒரு பஞ்சாயத்து!!” என்று அவள் அலுத்துக் கொள்ள..

 

“பஞ்சாயத்து? வாட் மீன் பஞ்சாயத்து?” என்றபடியே டேனி உள்ளே வந்தான்.

 

“சொன்னா மட்டும் உனக்கு அப்படியே புரிந்திட போகுது போடா” என்று முணுமுணுத்தாள். “அத அப்புறம் சொல்றேன். இப்ப போய் கிளாஸ் எடுக்க போறேன். நோட்ஸ் கொடு” என்றவள் என்ன நோட்ஸ் எடுக்க வேண்டும் என்பதை ஒரு முறை பார்த்துக் கொண்டு வேகமாக அந்த அறைக்குள் செல்ல..

 

இப்பொழுதுதான் இவர்களது வளர்ந்து வரும் ஒரு நிறுவனம். இங்கே எல்லாம் சிறுவயதில் படித்துக்கொண்டே ஏதாவது ஒரு பிசினஸ் ஆரம்பிக்கும் இளைஞர்கள் அதிகம். அது எந்த பிசினஸ் என்றாலும் சரி. அதிலும் தந்தையர்கள் பிஸ்னஸ் மேன் ஆக இருந்தால் கண்டிப்பாக பள்ளி கல்லூரி முடிக்கும் முன்பே இவர்கள் இதிலெல்லாம் தேறி, நிறுவனத்தை கையிலெடுக்கும் திறமையை வளர்த்திருப்பார்கள். அதையே தான் இவர்கள் ஒரு நிறுவனமாக வைத்து தங்கள் தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

 

மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் மட்டுமே இப்போது இவர்களுடைய ட்ரெய்னிங்கில் இருக்கிறார்கள். இவள் உள்ளே நுழையும் போது மூன்று பெண்களும் யாரோ ஒரு ஆண் மகன் முன்னே நின்று சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அங்கே இம்மாதிரி விகற்பம் இல்லாமல் தொட்டுப் பேசுவது எல்லாம் சகஜமே. அதே நேரம் இவள் ஆசிரியை என்ற மரியாதை கொடுத்து எழுந்து நிற்கவும் சொல்ல மாட்டார்கள்.

 

ஜஸ்ட் ஒரு ஹாய் ஹலோ என்பதே அங்கே!!

 

உள்ளே நுழைந்த நிவேதிதா “ஹாய் கைஸ்!!” என்று கூற அவர்களோ.. கண்ணனை சூழ்ந்த கோபியராக இவளை கண்டுக்கொள்ளாமல் தங்கள் பேச்சை அதாவது அவன் பேச பேச.. சிரித்து சிரித்து அவனுக்கு பதில் அளிப்பதையே தொடர்ந்தனர்.

 

‘அப்படி யாரு கிட்ட இவளுங்க வழிஞ்சி வழிஞ்சி பேசுகிறாளுங்க?’ என்று இவள் எட்டிப்பார்க்க.. அங்கே வசிக்கிற புன்னகையோடு ஒற்றை புருவத்தை உயர்த்தி இவளை எதிர் கொண்டான் இவளது மணவாளன்.

 

வெற்றிக்கு இவ்வளவு சிரிக்க தெரியும் என்பதே அன்றுதான் முதல் முதலாக பார்த்தாள் அவள் விழி விரிய.. முகம் மட்டும் அல்லாமல் கண்களும் சிரித்துக்கொண்டே இருக்க.. ஏதேதோ அவர்களோடு பேசிட்டு இருந்தவனோ இவளை பார்த்து கணநேரத்தில் உதடு குவித்து முத்தத்தை பறக்க விட்டு திரும்பவும் அவர்கள் பக்கம் திரும்பி விட்டான்.

 

ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி அங்கிருந்த டேபிளில் வேகமாக ஒரு தட்டு தட்டி “லிசன் கைஸ்!!” என்க..

 

 

“ஓ சாரி சாரி நிவே..” என்றவாறு அந்தப் பெண்களும் மற்றொரு ஆணும் அவரவர் இருக்கையில் அமர.. பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு இருபக்கமும் தலையசைத்தாள். தன் முன்னால் இருந்த ப்ரொஜெக்டரை கணிணி மூலம் இயக்கி அன்றைய பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

ஒவ்வொரு முறை அவர்களை பார்த்து நடத்தும்போதும் பழக்கதோஷமாக எல்லாரையும் ஒரு சுற்று சுற்றி வரும் அவளது கண்கள். ஆனால் அப்படி சுற்றி சுழன்று வரும் கண்களை தன் கண்களால் சிறை எடுத்தான் இந்த மாதவன். தன் கண்கள் என்னும் வலையால் கயல் விழிகளை பிடித்தான் மாயவன். தலையை சிலுப்பிக்கொண்டு மீண்டும் அவள் பாடத்தை தொடர்வாள். இரண்டு மூன்று முறை இவ்வாறு நிகழ்ந்து விட அதற்கு மேல் “கிளாஸ் ஓவர்!!” என்றுவிட்டு அவள் வெளிநடப்பு செய்ய.. போகும் அவளையே மென் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் வெற்றி.

 

நேராக தன் நண்பர்களிடம் வந்தவள் “யார் இந்த புது ஆள்? யார் சேர்த்தது அவன?” என்று படபடப்புடன் கேள்விமேல் கேள்வி கேட்க..

 

 

“ஹேய் ரிலாக்ஸ் யா.. நான்தான் சேர்த்தேன்” என்றான் டேனி.

 

“எதுவும் தொந்தரவு செய்கிறானா?” என்று தாமஸ் அவளை உற்றுப் பார்க்க.. என்ன சொல்வாள் நான் பாடம் நடத்துகிற போது கண்களால் என்னை சிறை செய்கிறான் என்றா.. இல்லை ஒவ்வொரு முறை அவன் பார்வையை பார்க்கும் போது நான் தட்டுத் தடுமாறுகிறேன் என்றா.. உண்மையில் வேந்தனை பார்த்த மாத்திரத்தில் அவள் பயம் கொண்டது அவனை நினைத்து அல்ல தன்னை நினைத்தே!!

 

இவற்றை எல்லாம் அவர்களிடம் கூறினால், இதெல்லாம் அவர்களுக்கு அபத்தமாக தெரியும் என்பதால்.. “அந்த ஆளை சுத்தி ஒரு கேர்ள்ஸ் கூட்டம்தான்!!” என்று காலையில் நடந்தவற்றை கூற..

 

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதற்குப்பின் வாய்விட்டு சிரித்தனர் சத்தமாக..

 

“எதுக்கு சிரிக்கிறீங்க இப்போ எல்லாரும்?” என்று இவள் கண்களில் கனல் கக்க..

 

தாமஸ் அவள் அருகில் வந்து அவள் தோளில் கை போட்டவன் “பேபி.. இதெல்லாம் இந்த வயசுல வரும் சிமிடம்ஸ் தான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று மிக சீரியஸாக பேச..

 

இவள் புரியாமல் தாமஸையும் மற்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“ஒரு அம்சமான ஆளை பார்த்து மற்ற பெண்கள் சிரித்து பேசிவதை நாம் பார்க்கும் போது கொஞ்சம் ஜலசா தான் இருக்கும் பேபி” என்றான் சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்த்து!!

 

“ஓ மை காட்..!!” என்று அப்போதுதான் அவளுக்கு புரிய தன் கையில் இருந்த நோட்ஸாலையே தாமஸை வெளுத்து வாங்கினாள்.

 

அதன்பின் அவள் கிளாசுக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய சேட்டைகள் லூட்டிகள் என்று இதுவரை காணாத புதிய வெற்றி வேந்தனை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்தான் நிவேதிதாவுக்கு. அதைப்போல வீட்டில் அவள் இருக்கும் நேரத்திலும் கண்களில் படும் போதெல்லாம் கருத்தில் நுழைய முயற்சித்தான்.

 

அவள் படம் எடுத்தால் அவளை விழிகள் அவளையே சீண்டாமல் சீண்டி.. அவள் மனதில் பொதிந்துள்ள அவனுக்கான காதலை உணரச் செய்தான். எவ்வளவு தான் முட்டி மோதினாலும் ஒரு எல்லைக்கு மேல் அவனால் நிவேதிதாவை நெருங்க முடியவில்லை.

 

 

தன் அறை கதவையும் மட்டுமல்ல அவன் புறம் சாய்ந்து விடாமல் தன் மனக் கதவையும் இறுக்கமாகவே சாத்தி வைத்திருந்தாள் நிவேதிதா. அவனைப் பார்த்த நொடி வேறு இடத்திற்கு இவளால் போக முடியும். ஆனால் அங்கேயும் துரத்திக்கொண்டே இவன் வருவான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இனி எதற்கு பயந்து ஓடுவானேன்.. தைரியமாக எதிர்கொள்வோம்!! 

 

“நானும் மதுரகாரி தாண்டா!!” என்று மனசுக்குள் சிலிர்த்துக் கொண்டாள்.

 

சில நேரம் அவனது தொல்லைகள் எல்லைகள் தாண்டியும் வரக்கூடும் அன்றும் அப்படித்தான்.. அன்று கடைசி கிளாஸ் இவளுடையது. அனைவரும் சென்ற பிறகு டவுட் டவுட்டு என்று இவளை நிறுத்தி வைத்திருந்தான் அவன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காமல்.. “எதுக்கு இப்படி போட்டு படுத்துற? உனக்கு தெரியாத பிசினஸா? புதுசா இங்கேதான் கத்துக்கிட்ட போய் நீ பண்ண போறியா ஹல்க்? யாரை ஏமாற்ற இந்த புது அவதாரம் உனக்கு?” என்று கைகளை கட்டிக்கொண்டு கூர்மையாக அவனைப் பார்த்து கேட்டாள்.

 

 

“நாட் பேட் டார்லிங்.. இவ்வளவு சீக்கிரம் உனக்கு கேக்கனும்னு தோணுச்சே?” என்றான் அவனும் சிரித்தபடியே..

 

“மொதல்ல இந்த ஊர விட்டு ஓடு ஹல்க்.. நீ எவ்வளவு தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இங்கு எதுவும் மாறப் போவது கிடையாது” என்று நறுக்குத் தெறித்தார் போல் அவளது வார்த்தைகள் வர..

 

“ஒருமுறை சான்ஸ் கொடுத்து தான் பாரேன் மாற்றம் வருதான்னு பார்க்கலாம்” என்றான் அவனும் விடாப்பிடியாக..

 

“சும்மா பசப்பு வார்த்தையை பேசி ஏமாற்றமா கெளம்புற வழியை பாரு” என்று அவள் சற்றே குரலை உயர்த்திப் பேச..

 

“உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியலன்னு சொன்னால் நீ நம்புவாயா டார்லிங்?” என்றான் அவளுக்கு முன் இருந்த டேபிளில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு அவளது கண்களை ஆழந்து நோக்கியவாறு!!

 

 

“சுத்தப் பேத்தல்.. பொய்..” என்றாள்.

 

“மெய்!! நிரூபிக்கட்டா??” என்றவன்,

 

“என் கை விரலால் உன் கன்னத்தில் தான் எப்போதும் கோலமிட துடிக்குது என்று சொன்னால் நம்புவாயா?” என்றவனது விரல்களோ கன்னத்தை தாண்டி காது மடலையும் அவள் போட்டிருந்த நீளமான காதணியை வருடியது. 

 

“உன் காதோர உதிரி முடியை மெதுவாக இழுத்து சுருட்டி விளையாட என் விரல்களுக்கு மிக பிடித்தம் என்றால் நம்புவாயா?” என்றவனது வாய் சொன்னவற்றை விரல் செய்து கொண்டிருந்தது.

 

“கோபம் கொள்ளும் உன் குட்டி மூக்கின் முனையை வருடி.. எனை திட்டும் போது அசைந்து அசைந்து பேசும் உன் செவ்விதழ்களை தடவ பித்தம் கொள்கிறது எனது இதழ்கள் என்றால் நம்புவாயா?” என்றவன் விரல்கள் மோவாயில் நிமிண்டி விட்டு சென்றது.

 

 

கழுத்து வழியாக விரல் கொண்டு போனவன் கன்றுக் குட்டிக்கு வருடுவது போல அவளது சங்கு கழுத்தை நீவி விட்டான். “இதே சங்கு களத்தில் மீண்டும் ஒருமுறை என் கை தாலி போட மனம் ஏங்குது என்றால் நம்புவாயா?”

 

 

அப்பறம் அவள் கழுத்தில் இருந்த குட்டிச் செயினை வருடியவன், “இதன் மேல் எனக்கு பொல்லா கோபமாக வருகிறது. நான் இருக்கும் இடத்தை இது தட்டிப் பறித்து விட்டது என்றால் நம்புவாயா?”  

 

 

அவளது சிலிர்ப்பை ரசித்துக் கொண்டே ஒவ்வொன்றாக அவன் வாய் பேச பேச விரல்களும் அதை செய்து காட்ட.. மன்னவன் விரல் ஜாலத்தில் உடல் குழைந்தது நிவேதிதாவுக்கு.

 

 

“பாரு இவ்வளவு ஆசையை உன் மேல வச்சிருக்கேன்.. ஆனால் நீயே மனம் மாறி வந்து என்னை ஏற்றுக் கொள்வதற்காக தான் கைய கட்டிகிட்டு எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறேன்” என்றவன், நல்ல பிள்ளை போல அவளிடம் இருந்து இரண்டு அடி எட்டி விலகி நின்று கண்களால் சிரித்தான் குறும்பு கண்ணனாக..

 

 

“ஓ மை காட் ஹல்க்.. மதுரையில அளவா பேசி அத்துமீறி நடந்த.. ஆஸ்திரேலியாவில் அதிகமா பேசி அதே அத்துமீறலுக்கு ட்ரை செய்யுற.. நீ எல்லாம் எப்பதான் திருந்த போற” என்றவள் விடுவிடு என்று அறைக்கு வெளியே நடந்து செல்ல..

 

 

அவனும் இரண்டே எட்டில் அவளோடு இணைந்து நடந்தவாறு “நான் என்ன தப்பு செஞ்சுட்டேன் திருந்தனும். என் பக்கம் மட்டுமே யோசிச்சு நான் தப்பு செய்தேன் நீ சொல்ற அதைதான் இப்ப நீயும் செய்யுற? என் பக்கத்தை ஒரு முறையாவது நீ காது கொடுத்து கேட்டியா இத்தனை நாளில்?” என்று அவளையே குற்றம் சாட்டினான்.

 

“ஓ மேன்!! நிஜமா நீயெல்லாம் வக்கீலுக்கு படித்து இருக்க வேணும்.. இங்கே வந்து ஏன் என் உயிர வாங்குற?” என்றவள் நடந்து வந்துக் கொண்டே அலுவலக அறைக்கு வந்துவிட்டாள்.

 

“உயிர் வாங்க இல்ல உயிர் கொடுக்க” என்றான் உயிர் உருகும் குரலில்..

 

அந்தக் குரலில் சட்டென்று அவனை நிவேதிதா பார்க்க.. கரை காணா காதலை சுமந்தபடி அவளையே ஏக்கமாக பார்த்தது அவனது இரு விழிகள்.

 

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு தாமஸூம் டேனியலும் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

 

“ஹாய்!!” என்று பொதுவாக வெற்றி வேந்தனை பார்த்து மொழிந்து விட்டு..

 

“ஐ திங் ஹி இஸ் கம் பிரோம் யுவர் ஸ்டேட்” என்று வெற்றி வேந்தனை பார்த்தபடியே நிவேதிதாவிடம் டேனியல் கூற..

 

“ஒரே ஸ்டேட் மட்டுமல்ல ஒரே ஊரும் கூட தான்” என்றான் நிவேதிதாவை மாட்டி விடும் நோக்கில் வெற்றி.

 

“இஸ் இட்? சூப்பர்.. இவர் எவ்வளவு டேலன்ட் தெரியுமா நிவே? சில சமயம் கிளாஸ் எடுக்கிற எனக்கே கிளாஸ் எடுக்கிறார்” என்று டேனியல் வெற்றியின் பராக்கிரமத்தை புகழ்ந்து பேச பேச பற்றிக்கொண்டு வந்தது நிவேதிதாவுக்கு.

 

 

“சாரோட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கோ நிவே.‌. நீ ஊருக்குப் போகும் போது உனக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்” என்று இலவச அட்வைஸ் தாமஸ் வழங்க..

 

“ஆல்ரெடி நாங்க சொந்தம்தான்” என்றான் நிவேதிதாவை பார்த்து வெற்றி. 

 

‘சொந்தம்ன்னு சொல்லிட்டோம்

பொண்டாட்டி திக்குவா திணருவா என்று அவள் ரியாக்ஷன் பார்க்க வெற்றி ஆவலுடன் காத்திருக்க.. அப்பக்கம் வந்த உதட்டு சுழிவு அலட்சிய பாவனை

என்னவோ பெருசா சொல்ல போறாளோ? என்னவாக இருக்கும்? என்று யூகிக்க முடியாது பார்த்தான் வெற்றி.

 

அவன் கண்களில் வந்துபோன மின்னலை கண்டு கொண்ட நிவேதிதா.. ‘என்னை மாட்டிவிட பார்க்கிறாயா நீ? இருடா உனக்கே திருப்பி விடுறேன்’ என்று வன்மம் கொண்டவள் உதட்டை காது வரை இழுத்து வைத்துக்கொண்டு ‘ஆமாம் நாங்கள் சொந்தம் தான்”என்று டேனியையும் தாமஸையும் பார்த்துக் கூறினாள்.

 

பின் வெற்றியை பார்த்து ‘சொல்லவா? சொல்லவா?’ உதடு அசைத்து கேட்டு வம்பு இழுக்க..

 

அவனோ ஆர்வமுடன் அவளை பார்க்க..

 

“இரத்த சம்பந்தம் கூட சொல்லலாம்” என்றாள் வேந்தனை பார்த்து..

 

“ஒரே குடும்பம் தான்.. அதுவும்..” என்று இழுத்து வெற்றியின் பிபியை எகிற வைத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஒரு ரியலி?!!” என்று இருவரும் அதிசயத்து தாமஸ் டேனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..

 

வெற்றிக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘இப்படி எல்லாம் எளிதில் ஒத்துக் கொள்கிற ஆள் இல்லையே இவள்? திடீர் என்று ஒத்துக் கொள்கிறான்னா..” என்று சற்றே புருவங்களை நெறித்து யோசனையாக அவன் பார்க்க..

 

“இன்னும் சொல்ல போனா.. ஒன்னு மண்ணா பழகிய உறவு.. இணை பிரியா பந்தம்..” என்று ஒவ்வொன்றுக்கும் இடைவெளியை விட்டு வெற்றியை பார்த்தாள்.

 

 

நிவேதிதாவோ சிரிப்பை அடக்க நாவை உதட்டுக்குள் ஒரு சுழற்று சுழற்றினாள் வெற்றியை பார்த்துக்கொண்டே.. 

தன் கண் இமைகளை கொட்டி பாசமாக வெற்றியை ஒரு பார்வை பார்த்து

“ஹி இஸ் மை ப்ரோ.. அண்ணன்” என்று கூறி பழியே வாங்கி விட்டாள்.

 

“ப்ரோ??” என்று ஆச்சரியமாக தாமஸ் கேட்க..

 

வெற்றிவேந்தனுக்கோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் இதயத்தில் டமால் என்று சத்தம்!! வலது கையால் இதயத்தை நீவி விட்டு கொண்டே “ஆல் இஸ் வெல்!!” என்று முனகியவன், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை நிவேதிதாவிடம். “ஸ்மார்ட் டி பொண்டாட்டி நீ!! சபாஷ்!! எனக்கு சரியான போட்டி தான் நீ!!” என்று முனங்கினான்.

 

 

‘கட்டம் வச்சு என்னை தூக்க வந்த இல்ல மவனே மாட்டியா நீ? இனி என் கிட்ட நெருங்குவ? கிஸ் பண்ண ட்ரை பண்ணுவ? அண்ணனுக்கு உண்டான விதிமுறையை இனி கையாண்டு தான் ஆகணும் நீ’ சிரிப்புடன் கண்களால் அவனிடம் பேசிவிட்டு.. எல்லோருக்கும் பொதுவாக “பை!!” என்றவள், பிரத்தியேகமாக வெற்றியை பார்த்து “பை ப்ரோ!!” என்று சிரிப்புடனே கூறி விட்டு சென்றாள்.

 

 

‘வச்சி செஞ்சிட்டாளே!!’ என்று முதலில் அதிர்ந்தாலும் பின்னே சிரித்துக் கொண்டவனை தாமஸ் பிடித்துக்கொண்டான். இரண்டு பேரும் எப்படி அண்ணன் தங்கச்சி என்று உறவு முறைகளை எல்லாம் தாமஸ் கேட்டுக் கொண்டே வர.. ‘ஏற்கனவே நான் கடுப்புல இருக்கேன் இவன் அதுல விறகு கட்டையை தூக்கிப் போடுறான்’

என்றவனை தவிர்க்க முடியாமல் அதேசமயம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

 

 

சென்று கொண்டிருந்த நிவேதிதா சட்டென்று அவனை திரும்பி பார்த்து அவனது தவிப்பை ரசித்து ஒற்றைக் கண்ணை அடித்துவிட்டு சென்றாள்.

 

 

“பாவி!! பாவி!! இவ பாட்டுக்கு போறாளே நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்” என்று தாமஸ் இடம் மாட்டிக் கொண்டவனை ஆபத்பாந்தவனாக வந்த காத்தான் அவனது தம்பி கதிர் வேந்தன். வெற்றி வேந்தனின் போன் அந்நேரம் குரல் கொடுக்க.. அதற்கு ஆதரவு கொடுத்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று தாமஸை விட்டு விலகி நடந்தான் வெற்றி.

 

 

“என்ன அண்ணே எப்படி இருக்க? பான்ட்ஸ் டப்பா கிட்ட ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?” என்றான் கதிர்.

 

“நல்ல முன்னேற்றம் டா!! சூப்பரா முன்னேற்றம் தெரியுது!!” என்று வெற்றி கூற..

 

“சூப்பர் சூப்பர்.. சீக்கிரமா பான்ஸ் டப்பாவை தூக்கி பையில் போட்டுக்கிட்டு மதுரைக்கு வர வழிய பாரு ணே!! எனக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் இருக்கு.. ஆமா அப்படி என்ன முன்னேற்றம் ணே?” என்று ஆவலுடன் கேட்டான்.

 

“ம்ம்.. இப்போ தான் அண்ணனா புரமோட் ஆகி இருக்கேன் அவளுக்கு” என்றான் சிரித்துகொண்டே..

 

அதைக் கேட்ட நொடி அதிர்ந்து தனது செல்லை தவறவிட்டு மீண்டும் சரியாக பிடித்து காதில் வைத்தவன் “என்னது?? அண்ணனா??” என்றான்.

 

 

“அதே தான் டா..” என்று நடந்தவற்றை சுருக்கமாக தம்பியிடம் கூற.. அவனும் விழுந்து விழுந்து சிரித்தான்.

 

“டேய் சிரிக்காத!!” என்று வெற்றி பல்லைக் கடிக்க..

 

“பின்ன சொல்றவரு இப்படித்தான் தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவியலோ.. பட்டுனு சொல்லியிருந்தேனா பான்ஸ் டப்பாவாலா அடுத்த வார்த்தை பேச முடியுமா? அதை விட்டுவிட்டு.. ஒரே ஊரு.. ஒரே சொந்தமுன்னு நல்லா நம்மவூரூ ஜவ்வு மிட்டாய் கணக்கா இழுத்து வைச்சுயிருக்க” என்று அவன் திட்ட ஆரம்பிக்க..

 

“பாருடா!! நீ எல்லாம் அட்வைஸ் பண்ற அளவு என் நிலைமை ஆகிட்டு” என்று போனை வைத்துவிட்டான் வெற்றி.

 

ஆனால் அந்தப் பக்கமும் கதிருக்கு தான் ஒரே ஃபீலிங் ஆஃப் ஆஸ்திரேலியா!!

 

பின்ன அவன் அண்ணன் ஆஸ்திரேலியாவில் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணி மதுரைக்கு உள்ள வந்தால் அல்லவா.. இப்பொழுது அதிகப்படியாக பார்த்துக் கொண்டிருக்கும் தொழில்களை அண்ணன் வசம் ஒப்படைத்துவிட்டு இவன் மச்சக்கன்னியை பார்க்க பறந்து போக முடியும் அல்லவா?

 

 

“இவன் வர்றதுக்குள்ள எவனையாவது புடிச்சு என் மச்சக்கன்னிக்கு கட்டி வைச்சிட போறான் என் மாமனார்.. அதுக்கு அப்புறம் ‘அவள் பறந்து போனாளே!!’ நான் பாட வேண்டியதுதான் போல.. நோ நோ நம்ம வாழ்க்கையில நோ சோகப்பாட்டு!! ஒன்லி குத்து பாட்டு!!” என்றவன் தலைக்கு மேலிருந்து வேலையெல்லாம் தவிர்த்துவிட்டு தலைவியைக் காண பறந்தான் தனது நவயுக ரதமான ஜாக்குவாரில்!!

 

 

இரவு நேரம் என்பதையும் மறந்து கைத்தறி நகரை நோக்கி விரட்டிய கதிர்.. வண்டியை இரண்டு மூன்று தெருக்கள் முன்னாடியே நிறுத்திவிட்டு.. வழக்கமாக அவளை சந்திக்கும் இடத்தில் நின்று தன் மச்சக்கன்னிக்கு போனை போட்டான்.

 

“மணி பத்துக்கு மேல் ஆகுது இப்ப ஏன் இவன் போனை போடுறான்? என்று யோசித்துக் கொண்டே போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மா.

 

இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்து விட.. அடுத்த முறை பாத்ரூமுக்கு சென்று எடுத்து அட்டென்ட் செய்தாள்.

 

“மச்சக்கன்னி…” என்று அவன் அழைக்கு முன் “அறிவிருக்கா உங்களுக்கு? மணி என்ன ஆகுது? எத்தனை மணிக்கு மேல போன் பண்ணி இருக்கீய்ங்க?” என்று அவள் திட்ட..

 

“போன் பேசுறதுக்கே திட்டற.. அப்போ நேரா வர சொன்னா?” என்று அவன் கொக்கி போட்டு நிறுத்த..

 

 

“காம் ப்பொட்டை மொர ஜல்” (அடி வாங்குவ என்கிட்ட) என்று அவள் கூற..

 

“ஆமாடி வரும் போது காம்ப்ளான் ஆத்தி எடுத்து வா ஆத்தா.. மாமன் ரொம்ப டயர்டா இருக்கேன்” என்று அவன் சொல்ல..

 

“உன்னை எல்லாம்.. அடி வாங்குவன்னு சொன்னேன்” என்றாள் அவள்.

 

“அடிப்பியோ? இல்ல கோபத்துல கடிப்பியோ? எதா இருந்தாலும் போன்ல செய்யாமல் டேரக்ட்டா வந்த செய் டி. நம்ம இடத்துல ஐ அம் வெயிட்டிங்” என்றவன் போனை வைத்து விட்டான்.

 

 

வேறு வழியில்லாமல் பின்பக்க கதவை திறந்து, யாருக்கும் தெரியாமல் பூனை நடை போட்டு பத்மா கதிர் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்க.. அவளையே பின் தொடர்ந்து வந்தது இரண்டு உருவங்கள்..

 

 

யாராக இருக்கும்??? 

 

 

காதலே.. காதலே..

 

 

21

 

 

காதலனைப் பார்க்க யாரும் அறியாமல் பூனை நடை நடந்து மெதுவாக வந்து சேர்ந்தாள் பத்மா. வந்தவளை நிமிடம் கூட தாமதிக்காது சட்டென்று இழுத்து அணைத்தவன், கழுத்து வளைவில் முகம் புதைக்க.. காதுக்கும் கீழே கழுத்துத்தில் இம்சிக்கும் அவனது கற்றை மீசையில் சிலிர்த்தாள் பத்மா.

 

“விடுங்க..” என்று அவள் சிணுங்கி அவனை தள்ள..

 

“ஒன்னுமே பண்ணலையே டி.. அதுக்குள்ள பிடித்து தள்ளிவிடுறவ” என்றவன் மீண்டும் அவள் வாசத்தை பிடிக்க முயன்றான.

 

“போதும் போதும் நேராமாச்சு.. யாராவது பார்த்தாய்ங்கனா? அவ்வளவுதான்!!” என்று அவனை விலக்கி நிற்பதிலேயே குறியாக இருந்தாள்.

 

 

“ஏன்டி அன்னைக்கு தாலி எடுத்து கட்டுடான்னு அவ்வளவு தைரியமா பேசுனவ.. இன்னிக்கு என்னடி இப்படி பம்முறவ?” என்றான் கேலியாக..

 

“காதல்ல திருட்டுக் கல்யாணம் இருக்கலாம். ஆனா கல்யாணம் ஆகாமல் இப்படி திருட்டுத்தனம் பண்ண கூடாது மாமா” என்றவள் அவனது மீசையை இரு பக்கமும் பிடித்து ஆட்ட.. வலியில் அவன் துள்ள.. அவள் கலகலத்து சிரிக்க.. சட்டென்று அந்த இரண்டு உருவமும் அவர்கள் முன்னால் வந்து நின்று முறைத்தது.

 

 

தங்கள் உலகத்தில் லயித்திருந்த இருவரும் இதை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ந்து பார்க்க.. பத்மாவோ இன்னும் ஒரு அடி மேலே போய் அந்தகால ஹீரோயின்கள் போல புறங்கையால் வாயை வைத்து “ஆஆஆ” வென்று சத்தம் போட சட்டென்று தனது கையால் அவள் வாயை பொத்தினான் கதிர். சத்தத்தை குறைத்தாலும் பயம் போகாமல் கதிரின் பின்னே ஒளிந்து கொண்டு முகத்தை மட்டும் எட்டிக்கொண்டு பார்த்தாள்.

 

 

“உனக்கே இது ஓவரா தெரியல டி? என் பின்னாடி நீ ஒளிஞ்சா.. நீ மறஞ்சிடுவியா? உன் உருவத்தை பாதி கூட என் உருவம் மறைக்காது” என்று அப்போதும் அவளை வாரினான். சட்டென்று அவனது இடுப்பில் கிள்ளியவள், “இருங்க இருங்க கல்யாணம் ஆகட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்று முறைத்தாள்.

ஆனால் அந்த இரண்டு உருவமோ தொண்டையை கனைத்து தங்கள் இருப்பைக் காட்ட.. பத்மா பயந்து பின்னிருந்து கதரின் இடுப்பை கட்டிக் கொண்டாள்.

 

கதிருக்கும் ஜிவ்வென்று ஆகி பறப்பது போல ஆக.. கண்களை மூடி டூயட் பாடவே சென்றுவிட்டான். திரும்பவும் அந்த இரண்டு உருவங்கள் தொண்டையை கனைத்து அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வர..

 

 

“அடச்சே அல்லக்கைகளா!! ஏன்டா பின்னாடியே வந்து என் உயிரை எடுக்கிறீய்ங்க?” என்று அவன் சத்தம் போட்டவுடன் தான் எப்பொழுதும் கதிருக்கு பின்னால் வரும் அந்த நால்வரில் இருவர் என்று உணர்ந்த பத்மா பயம் விட்டு மெல்ல வெளியில் வந்தாள்.

 

 

“என்ன ணே இப்படி சொல்லிட்டீய்ங்க? நீங்க தான் பொறுப்பு இல்லாமல் ராத்திரி நேரத்துல மதனிய வர சொன்னீங்க.. நாங்களும் அப்படி இருக்க முடியுமா? அதான் பொறுப்பா அண்ணிக்கு பின்னாலேயே பாதுகாப்பா வந்தோம்” என்று ஒருவன் கூறி மற்றவனை பார்க்க அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.

 

 

“உங்க பொறுப்பை கண்டு நான் வியக்கேன்!!” என்ற கதிர்.. “அதான் வந்துட்டீய்ங்க இல்ல அப்புறம் எதுக்கு டா இங்க முன்னாடி வந்து சும்மா சும்மா குதிரை கணக்கா இப்படி கணைத்துக்ககட்டு நிக்கிறீய்ங்க” என்றான் கடுப்போடு.

 

“முன்னாடி அண்ணிக்கு பாதுகாப்பா அவிய்ங்க பின்னாடி வந்தோமா? இப்போ உங்களுக்கு பாதுகாக்கத்தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறோம்” என்றான் ஒருவன்.

 

“எதே? எனக்கு பாதுகாப்பா?” என்று கதிர் கோபமாக கேட்க..

 

“ஆமா அர்த்தராத்திரி இப்போ!! அதை மறந்துட்டு ஏதோ லவ்வர் பார்க்ல இருக்கிற மாதிரி ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிக்கிறீய்ங்க.. அடிக்கிறீய்ங்க.. யாராவது அதை கேட்டு இங்கே உங்களைப் பார்த்து விட்டா என்ன செயறது? அதுக்கு முன்ன உங்களுக்கு எச்சரிக்கை பண்ண வேணுமில்ல” என்றான் மற்றொருவன்.

 

அவர்கள் சொன்னதை கேட்டதும் கதிர் முகம் போன போக்கை பார்த்து பத்மாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் அதை அவன் முன்னே காட்டாமல் வாயைப் பொத்திக் கொண்டாள்.

 

 

“சரி அண்ணே!! நாங்க பழையபடி எங்க இடத்துக்கு போறோம். நீங்க உங்க லவ்வை ஸ்டார்ட் பண்ணுங்க. ஆனால் சத்தம் வராம” என்றுவிட்டு அவர்கள் செல்ல.. அருகில் இருந்த கல்லை எடுத்து அவர்கள் மேலேயே அடித்தான் கதிர்.

 

 

“மச்சக்கன்னி!! இனி நீ வீட்டுக்கு கிளம்பு மாமனுக்கு ரொமான்ஸ் மூடு போயே போயிடுச்சு இந்தப் பக்கிங்களால.. இதுக்கு அப்புறம் என்னைக்கு எப்ப நேரம் கிடைக்குதோ பார்க்கலாம்” என்று பெருமூச்சு விட்டவன், அவள் பத்திரமாக வீடு செல்வதை பார்த்துவிட்டு இவன் வண்டியை எடுத்தான். அவனுக்கு முன்னால் இரண்டு அல்லக்கைகளும் வண்டியின் பின்னால் அமர்ந்திருக்க..

 

“அண்ணன் காதலை ஊட்டி வளர்த்தால் என் காதல் தன்னால வளரணும் பார்த்தா.. நான் வளர்த்து வைத்த ரெண்டு தடி மாடுங்களே குறுக்க பாயுது.. எல்லாம் என் நேரம்!!” என்று தலையிலடித்துக் கொண்டவனை, “அண்ணே.. வெற்றியண்ணே ஆஸ்திரேலியா தானே போய் இருக்காரு. அப்புறம் ஊட்டின்னு சொல்றீங்க?” என்று தங்கள் அறிவை நிலைநாட்ட.. இனிமேல் இவர்களால் தலையில் அடித்துக் கொண்டால் நம் தலைக்கு தான் ஆபத்து என்று நினைத்தவன் ஒன்றும் பேசாமல் வேகமாக வீட்டை நோக்கி வண்டியை விட்டான். 

 

 

 

மறுநாள் வழக்கம்போல பயிற்சி வகுப்பு சென்றவனை கண்களில் குறும்புடன்.. முகத்தில் பாசத்துடன்.. குரலில் நக்கலுடன் “அண்ணா!!” என்று சொல்லி வரவேற்றாள் நிவேதிதா. அவனை சீண்டுவதற்கே என்றாலும் இந்தக் குரல் அவனுக்கு வலிக்கத்தான் செய்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் அடுத்த நிமிடம் மீண்டு அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்தான் அமைதியாக..

 

அன்று மட்டுமல்ல அடுத்த வந்த இரண்டு நாட்களுமே வெற்றியை அண்ணா என்று கூப்பிட்டு அவனை சங்கடத்துக்குள்ளாகினாள். அவன் முகத்தில் தெரியும் அந்த சங்கடம் வருத்தம் வலி எல்லாம் இவளுக்கு ஒருவித மகிழ்ச்சியான போதையாகவே இருந்தது. “இவ்வளவு நாள் என்ன படுத்தி ஆட்டி வைச்சே இல்ல.. அதற்கு பதில் இப்போ நீ அனுபவி டா” என்று அவள் கண்கள் பேசும் பாஷையை புரிந்து கொண்டவன் அமைதியாகவே தான் கடந்தான். 

 

 

அதே சனிக்கிழமை அவர்களின் ஆஸ்தான பப்.. அவர்கள் நண்பர்கள் அனைவரும் வந்து விட இன்னும் டேனியல் வரவில்லை. “எங்க டேனி காணோம்?” என்று லீவி கேட்டுக்கொண்டிருக்க.. நிவேதிதாவோ அவனுக்குதான் போன் மூலம் அழைத்துக் கொண்டு இருந்தாள். ரிங் போனதே ஒழியே அவன் எடுக்கவே இல்லை. உதடு பிதுக்கி அவன் எடுக்கவில்லை என்று சைகை காட்டினாள். “என்னவாக இருக்கும்? ஏன் லேட்?” என்றவாறு தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

 

அடுத்து சிறிது நேரத்தில் “ஹாய் கைஸ்!!” என்று அட்டகாசமான சிரிப்புடன் வந்து டோனியலோடு நிவேதிதாவை தீர்க்கமாக பார்த்தவாரே வந்து அருகில் அமர்ந்தான் வெற்றி வேந்தன். அவன் பார்வையோ வெகு அழுத்தமாக அவளுக்கு முன்னால் வீற்றிருந்த மது கோப்பைகளையும் அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

குடிக்க வேண்டாம் என்று இவன் சொன்னால் கண்டிப்பாக அவனுக்கு வெறுப்பேற்றவோ அவன் சொல்லை மீறி வேண்டும் என்றோ குடிக்கத்தான் போகிறாள். அதனால் எதுவும் பேசாமல் இரு கைகளையும் அவன் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் கண்கள் நிவேதிதாவின் மீது பாய்ந்தது குத்தீட்டியாக..

 

 

அவன் ஏதாவது சொல்லியிருந்தால் கூட வீம்புக்காக அதை எதிர்த்திருப்பாள். அவன் அமைதியாக இருக்கவும் அவனின் பார்வை வீச்சும் இந்த அமைதியும் அவளுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம். மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே சிறிது சிறிதாக மதுவையும் சுவைத்துக்கொண்டிருக்க.. இவளோ கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அதற்காக பெரிய குடிகாரி எல்லாம் கிடையாது. அவள் வளர்ந்த சூழ்நிலை இதையெல்லாம் தவறு என்று அவளுக்கு எடுத்துரைக்கவில்லை.. அதனோடு கூட அவள் பெற்றோர்களும் இதெல்லாம் நாகரீகம் என்ற பெயரில் அனுமதித்திருக்க.. ஆண் பெண் பேதமில்லாமல் வார இறுதியை தங்களுக்குள் செலவிட அங்கே குடிப்பவர்களோடு இவளும் இணைந்து கொண்டாள். இத்தனை நாட்களாக கேலி கொண்டதோடு ஆட்டம் பாட்டம் என களித்துக்கொண்டு இருப்பவளுக்கு இன்று ஏனோ கைகள் தயங்கியது மது குப்பியை தொட.. கால்களோ ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறியது எழுந்து ஆட.. சலசலக்கும் வாயோ இன்று பூட்டு போட்டது போல அமைதியாக இருந்தது.

 

 

வெற்றிவேந்தன் தன் பார்வையை சிறிதும் மாற்றிக் கொள்ளவே இல்லை அதே தீர்க்க பார்வை அவளின் மீது!!

 

அதற்குப் பின் தான் லீவியும் மற்றவர்களும் நிவேதிதாவை பார்த்து “ஏய் நிவே இன்னும் என்ன ஸ்டார்ட் பண்ணாம இருக்க? இந்தா உன் பேவரிட்” என்று டேனியல் அவள் பக்கம் சிறுது மது குப்பிகளை தள்ள.. 

 

 

 

மெல்ல கை நடுக்கத்துடன் ஒன்றை எடுத்து வாயில் வைத்தவள், வெற்றியின் பார்வையைத் தாங்க முடியாமல் சட்டென்று வைத்துவிட்டாள். “நீங்க இங்க என்ஜாய் பண்ணுங்க நான் டான்ஸ் ஃப்ளோர் போறேன்” என்று அந்த நிலையை சமாளிக்க வேண்டிய அங்கே சென்று விட்டாள்.

 

“என்ன பார்வை டா சாமி!! பார்வையாலேயே ஒருத்தன குத்தி கிழிக்க முடியுமா என்ன? கேள்வி கேட்டு தோரணமா தொங்க விட முடியுமா என்ன? அத்தனையும் செய்கிறான் ஹல்க்!! ஹல்க்!! வீக் டேஸ்ல தான் வந்து என் நிம்மதியைக் கெடுக்கிறான்னா?? வீக் எண்டுலேயும் என்ஜாய் பண்ண விடுறானா??” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் கை கால்களை அசைத்து அந்த இசைக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்க..

 

 

சட்டென்று அவள் இடையில் பதிந்த முரட்டு கரம் அவளை தன்னோடு இழுத்து, பின்பக்கமாக அணைத்தது. முதலில் திடுக்கிட்டாலும், திரும்பிப் பாராமலே.. அவனின் கை ஸ்பரிசம் அவனுக்கே உண்டான பிரத்யேக மனமும் அவன் யார் என்பதை உரைத்திட.. அமைதியாகவே நின்றாள் நிவேதிதா. அவள் கழுத்து அருகில் தன் முகத்தை பதித்தவன்.. 

 

 

“என்ஜாய் பண்ணு அடியேன் காத்துக்கொண்டு இருக்க.. நீ ஏன் சோலோ ஃபர்மாமன்ஸ் கொடுக்கிற டார்லிங்” என்று மீசை உரச உரச பேசினான்.

 

 

“டேய் ஹல்க் என்னடா பண்ற.. நீ என் அண்ணனு சொல்லி வைச்சிருக்கேன்.. இப்படி நம்மை பார்த்தா உனக்கு தான் அசிங்கம். என்னை விடு டா” என்று அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க போராட ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இரும்பு பிடி உடும்பு பிடியாய் இருந்தது.

 

 

“பார்த்தால் பார்த்துட்டு போகட்டும். எனக்கு என்ன வந்தது? நீ தானே அண்ணன் என்று சொன்ன? அப்போ அதற்கான விளக்கத்தையும் நீ தான் சொல்ல வேண்டும்!!” என்று அவனின் அணைப்பு இன்னும் இறுக.. இதழ்கள் இப்பொழுது கழுத்தை விட்டு காதுமடலை தான் உரசிக் கொண்டிருந்தது. 

 

 

அடுத்த கணம் அவளை விட்டவன், அவளோடு இணைந்து அந்த இசைக்கு ஏற்ப ஆட ஆரம்பித்தான். அவனின் இந்த ஸ்டைலிஷான ஆட்டத்தையும், லாவகமாக தன்னோடு இணைந்து ஆடுவதையும் வியப்போடு வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதிதா.

 

“இப்படி மீன் குஞ்சு போல வாயை திறந்து வைத்தேயானால், அதனை கவ்வி பிடிக்கும் என் இதழ்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது டார்லிங்” என்று தாபத்துடன் அவள் காதுகளில் முணுமுணுத்தான். சட்டென்று அவள் வாயை மூடிக்கொள்ள வெற்றியின் இதழ் சிரிப்பில் விரிந்தது.

 

 

சிறிது நேரம் அவனோடு ஆடிக்கொண்டிருந்தவள், எங்கே தன் நண்பர்கள் வந்தால் இருவரையும் இந்த நிலைமையில் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று சட்டென்று அவனிடம் பிரிந்து பழைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து வெற்றியும் வந்து அதற்கு எதிர்ப்புறம் அமர்ந்துகொண்டான். அடுத்து அங்கே இருக்க இருக்க ஒவ்வொருவரும் அவளை குடிக்க வற்புறுத்த.. நண்பர்களின் பேச்சை தட்டவும் முடியாமல் அதேசமயம் வெற்றியின் பார்வையை மீற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவளின் தவிப்பை இவன் ரசித்துக் கொண்டிருந்தான். “இன்னைக்கு என்னானது நிவே உனக்கு? ஏன் இப்படி டென்ஷனா இருக்க? ரிலாக்ஸ் பண்ண தானே இங்கே வந்திருக்கோம். ஒரு சிப்பு மட்டும் குடி” என்று லீவி கொடுக்க.. 

 

 

‘ஆமா நீங்க எல்லாம் குடி குடின்னு சொல்லுங்க.. அவன் முன்னால உட்கார்ந்து கொங்கண முனி மாதிரி என்னை முறைச்சு முறைச்சு பாக்குறான். எங்கே நான் ரிலாக்ஸாக’ என்று நினைத்தவள், “சாரி கைஸ். நெக்ஸ்ட் வீக் எண்டில் பார்க்கலாம்” என்று அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

“என்ன ஆனது இவளுக்கு?” என்று நண்பர்கள் தங்களுடன் பேசிக்கொண்டிருக்க இப்பொழுது தாமஸ் “வெற்றி நீ என்ன ஒன்னுமே குடிக்கல?” என்று கேட்க..

 

“பழக்கம் இல்லை.. யூ கைஸ் என்ஜாய்” என்றவன் டேனியலிடம் சொல்லிவிட்டு நிவேதாவின் பின்னாடியே வால் பிடித்த படி சென்றான்.

 

வெளியில் வந்த பின்பு தான் யோசித்தாள். இன்று லீவி உடன் காரில் வந்ததால் இவள் காரை எடுத்துக் கொண்டு வரவில்லை. இப்போது கேப் பார்க்கவேண்டும் என்று நினைத்தவள் இந்த மன உளைச்சல் தீர சிறிது நேரம் நடப்போம் என்று நடந்து கொண்டிருந்தவளின் கால்களோடு இணையாக இரண்டு கால்களும் நடக்க.. திரும்பிப் பார்க்காமலே தெரிந்தது வெற்றிவேந்தன் தான் என்று!!

 

 

“நிம்மதியா நடக்கக்கூட விட மாட்டியா?” என்று பொருமிக் கொண்டே செல்ல.. அவனோ அமைதியாக அந்த தருணத்தை ரசித்தபடியே அவளுடன் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று தூறல் தூற.. “ஓ காட் மழை பிடிச்சது அவ்வளோ தான்!!” என்று சற்று அருகில் இருந்த ஒரு கடை வாசலை பார்த்து இவள் ஓட, அதற்குள் மழை வலுத்து விட்டது. அவனோ நிதானமாக அவள் பின்னே நடந்து சென்றான்.

 

 

தன் அருகில் நின்று கொண்டிருந்த வெற்றியை பார்த்து “எல்லாத்துக்கும் நீதான் காரணம். பார்?? பார்?? எப்படி இப்படி நனைந்து இருக்கேன்னு?” என்று அவனை தான் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

வெண்ணிற லாங் கவுனில் மழையில் நனைந்ததால் ஆங்காங்கே முகத்தில் நீர் திவிலைகள் நட்சத்திரங்களாய் மின்ன.. அவளைப் பார்க்கும்போது வனதேவதையாகத்தான் தெரிந்தாள் வெற்றிக்கு.

 

 

ஒரு பத்து நிமிடங்களுக்கு சடசடவென பெய்து கொண்டிருந்த மழை.. அப்பறம் திடீரென காற்றும் மின்னலுமாக சுழன்றடிக்கத் தொடங்கியது. அவ்வளவுதான் பயம் பீடித்துக் கொண்டது பெண்ணுக்கு.

 

இருட்டின் பயத்தில் அவன் கை விரலை கோர்த்துப் பிடித்துக் கொண்டாள் தன்னுடன் இறுக்கமாக. அவள் விரல்கள் மழையிலோ இல்லை பயத்திலோ ஜில்லென்று குளிர்ச்சியாக இருந்தது.

 

”போச்சு.. போச்சு.. இப்ப என்ன பண்றது, எப்படி போறது?” என்று அவள் பரிதவிக்க..

 

”ஒண்ணும் பண்ண முடியாது. நாம சேஃப்பாதான இருக்கோம். இப்படி மழையை என்ஜாய் பண்ண வேண்டியதுதான்” என்று சொன்ன வெற்றி கைகளை நீட்டி மழைநீரில் விளையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது லேசாக அவற்றை அவள் முகத்தில் தெளித்துக் கொண்டிருந்தான்.

 

சாலையில் போகும் வாகனங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது மழையினால். முதலில் நிறைய சென்றவை, இப்போது ஒன்றிரண்டு மட்டுமே இடைவெளி விட்டு விட்டு போய்க் கொண்டிருந்தது.

நகரமே ஒருவித அமைதியில் இருளில் சிக்கியிருக்க..’பளீர்.. பளீர்’ என மின்னலும்.. ‘டொம்.. டொம்’ என‌ இடியும் அமைதியை கிழித்து கொண்டு சத்தமிட்டன. ஒவ்வொரு முறை அவை சத்தமிடும் போதும் நிவேதிதாவின் உடலில் நடுக்கம் ஓடி மறைந்தது.

 

 

காற்று சுழன்றடிக்க மழைச் சாரலுடன் கூடிய ஈரக் காற்று வேகமாக வந்து மோதியதில் உடம்பு சிலிர்த்துக் கொண்டிருந்தது. உடம்பிலுள்ள ஒவ்வொரு மயிர்க் கால்கள் எல்லாம் நட்டுக் கொண்டது. கைகளை அவனிடம் இருந்து பிரித்து நன்றாக தேய்த்துக் கொண்டாள் நிவேதிதா.

 

வெற்றியோ சின்னச் சின்னதாக அவளோடு பேசிக் கொண்டு.. மழைக் காற்றை உடம்பில் வாங்கி சிலிர்த்துக் கொண்டு இருளில் மழையின் சத்தத்தை ரசித்தபடி நின்றிருந்தான்.

 

 

“நான் இங்க குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். நீ என்டான்னா மழையை இப்பதான் ரசிச்சு.. அதுக்கு கமெண்ட் வேற கொடுத்துக்கிட்டு இருக்க” என்று அவனை திட்டிக் கொண்டே தன்னுடைய உடலை இரு கைகளாலும் இறுக்கி கட்டிக்கொண்டாள்.

 

 

“எந்த சுச்சுவேஷனையும் ரசிக்க கத்துக்கிடனும். ஒரு ஃபேமஸான பழமொழி ஒன்னு இருக்கு சொல்லவா?” என்று அவன் கேட்க..

 

“சொல்லாம விடப் போறியா என்ன?” என்றாள் அவள்.

 

“ஒரு கற்பழிப்பை தடுக்க முடியவில்லை என்றால் நாமும் ரசிக்க ஆரம்பித்து விடனும் யாரோ சொன்னது. அது போலதான் ஒவ்வொரு சூழ்நிலையையும் நம்மால் தடுக்க முடியவில்லை என்றால் அதை ரசிக்க ஆரம்பித்து விடனும். இந்த மழை வந்தது போல..” என்றவன் மூக்கை அவள் காதோரம் வைத்து சூடாக மூச்சு விட்டான். அவளுக்கும் அந்த சூடு தேவைப் பட்டது போல.. அவளை அணைக்காமல் நெருங்கி நின்று கொண்டிருந்தான். அவன் அருகாமையில் அணைப்பில் உடல் கதகதப்பை அனுபவிக்கத் தொடங்கினாள்.

 

பேச்சை நிறுத்தாமல் ஏதோதோ அவளுடன் மெதுவாக பேசிக் கொண்டே அவள் காதோரம் முத்தம் கொடுத்தான். மீசையால் அவள் காது மடலை தீண்டினேன்.

 

”தள்ளி போடா ஹல்க்” சிலிர்த்து சட்டென தலையை சிலிப்பிக் கொண்டாள் அவள்.

 

மீண்டும் மீண்டும் அவன் அவள் காது மடலை, கழுத்து என தன் நாக்கால் தீண்ட.. அவளோ சிலிர்த்தாலும் சினம் கொண்டு திட்டினாள். அப்பறம் மெதுவாக அவளது காது மடலை தன் உதடுகளால் உரசி பல் படாமல் மெதுவாக கடித்தான்.

 

” ஹ்ம்ஹ்ம்.. என்ன பண்ற ஹல்க் நடு ரோட்டில ?” என்று கோபமாக பேச முயன்று திக்கித் திணறினாள்.

 

”உனக்கு குளிருது இல்லையா? அதான் சூடு பண்றேன்” என்றான் இன்னும் அணைப்பை நெருக்கியப்படி..

 

”இப்படி பண்ணா.. உடம்பு சூடாகுமா?” என்று அவள் கடுகடுக்க..

 

“ம்ம்ம். குளிரே தெரியாது. தெர்மல் ஹீட்” என்று விளக்கமாக விளக்கினான், தன் வார்த்தைகளாலும் செயல்களாலும்.. அவளை நெருங்கி நின்றப்படி..

ஆனால் அவளோ அடுத்த வார்த்தை தீயன உமிழ்ந்தாள்.

 

 

“இப்படி உரசி உரசி இன்னைக்கு நைட் என்னை எடுத்துக்கலாம்னு பாக்குறியா? ஒரு பெண்ணோட உடலில் எப்படி உணர்ச்சியைத் தூண்டி, அவளை படுக்கைக்கு அழைப்பது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா? நீ எல்லாம் என்ன ஆம்பளை? ஒரு பொண்ணுகிட்ட இப்படி அத்துமீறி நடக்குற? ச்சே” குளிரில் உதடுகள் தந்தி அடித்தாலும் வார்த்தைகள் என்னமோ சூடாக தான் வந்தது அவளுக்கு.

 

ஒரு நிமிடம் கண்ணை மூடி அவள் பேசியதை கிரகிக்க முயன்றவன் அடுத்த நொடி அவளை விட்டு நகர்ந்து.. “யாரடி ஆம்பள இல்லை? நானா? நானா?? இல்ல உன் அப்பானா? ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடக்கனும்னு நீ எனக்கு சொல்லித்தறியா? இதே கேள்வியை உன் அப்பனை பார்த்து கேளு? அப்படி என்ன உன் கிட்ட தப்பா நடந்துக் கிட்டேன். என் பொண்டாட்டி என்கிற உரிமையோடு தான் நடந்தேன்.. உன் அப்பன மாதிரி இல்லை” என்றவனின் கண்களில் பழைய ஞாபகங்கள் வலியோட ஓடத் தொடங்கியது..

 

 

காதலே.. காதலே..

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 20,21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top