ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 22

 

22

 

எங்கு காணினும் நின் காதலே!!

 

ஜியா ஜானவி

 

மதுரையில் மிகப் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று ராஜவேந்தன் குடும்பம். பெரும் செல்வந்தர் குடும்பம் கூட… வழிவழியாக ஊருக்கு நல்லது செய்வதிலிருந்து.. கோயில்களுக்கு கொடை அளிப்பது முதல்.. வறியோருக்கு உதவுவது வரை என்று நல்ல விஷயங்கள் செய்தாலும் அதேசமயம் எதிர்ப்பவர்களையும் தீயவர்களையும் தங்கள் ஆளுமையாலும் அடிதடியாலும் அடக்கி வைத்தவர்கள். பெயருக்கு போல் வேந்தனை தான் அவர்கள்!!

 

 

ராஜ வேந்தனுக்கு மூன்று பிள்ளைகள். வாஞ்சி வேந்தன்.. மலர் வேந்தன்.. புனிதா நாச்சியார்.‌ ஆம்!! அழகுசுந்தரத்தின் மனைவியும் மருதுவின் தாயாருமான புனிதாவே தான். சுதந்திரப் போராட்ட தியாகியான வாஞ்சியின் பெயரை தன் மூத்த மகனுக்கு வைத்ததும் வைத்தார் வாஞ்சி எப்பொழுதும் மற்றவர்களைவிட துடுக்கும் ஊருக்கு ஒன்று என்றால் முன்னணியில் நிற்கும் சண்டியராகவே வளர்ந்தார். சண்டியரும் சாணக்கியரும் எதிர் எதிர் துருவங்கள்.. இக்காலத்தில் ஒருவனுக்குள் இருவருமே இருந்தால் தான் ஒழுங்காக நிர்வாகமும் ஆளுமையும் கொள்ளமுடியும் என்று வாஞ்சிக்கு போதிப்பார் வேந்தர்.

 

 

“சரிங்க அய்யா!! சரிங்க அய்யா!!” என்று அவர் சொல்லும் போது தலையை தலையை ஆட்டும் இந்த வாஞ்சியார்.. “அண்ணே.. அவிய்ங்க அடிப்புட்டாய்ங்க” என்று யாராவது வந்து நின்றால், “எவன்டா அவன்?” என வேட்டியை மடித்துக் கட்டி கிளம்பிவிடுவார் ஜல்லிக்கட்டு காளையாக.. வேந்தருக்கு தான் இவரை எப்படி திருத்துவது என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு வாஞ்சியே வாய்ப்பு கொடுத்தார். மதுரையில் பட்டாளத்திற்கு ஆள் சேர்ப்பதாக நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க.. நாம் ஏன் சேரக்கூடாது என்ற ஆசை துளிர்விட்டது அவருக்கு. சரி என்று மகன் அங்கே சென்றாலாவது திருந்துவான் என்று நினைத்த வேந்தர் அவரை அனுப்பி வைக்க முடிவு செய்தார். 

 

 

எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் தலைமகன் தாய்க்கு தனி பிரியம் அல்லவா?? அதனால் பட்டாளம் என்றதும் பயந்து போனார் பெரிய நாச்சி.

“மொதல்ல நா ஜோசியக்காரன கிட்ட ஜோசியம் பார்த்து தான் அனுப்புவேன்” என்று விடாப்பிடியாக இருக்க.. வேந்தரும் ஒத்துக்கொள்ள.. வந்து ஜோசியம் பார்த்தவனும் வேறு குண்டை போட்டு விட்டு சென்றான்.

 

 

அதாவது வாஞ்சிக்கு இப்பொழுது திருமணயோகம் இருப்பதாகவும் இப்போது முடியவில்லை என்றால் முப்பத்தேழு வயதுக்கு மேல் தான் நடக்கும் என்று கூறி விட்டு செல்ல.. வெறும் இருப்பத்திரண்டு வயதேயான மகனுக்கு திருமணம் முடிக்கிறதா? போடா நீயும் உன் ஜோசியமும்!! என்று அவனை விரட்டி விட்டார் வேந்தர்.

 

 

அதுவுமில்லாமல் வேந்தருக்கு 30 வயதில் கண்டம் ஒன்று இருப்பதாக போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டு சென்றான் அந்த ஜோதிடர்.

பெரிய நாச்சியின் அழுகையையும் ஆட்டத்தையும் சொல்லியா தெரிய வேண்டும்??

 

 

சரி என்று வேந்தரும் ஒத்துக்கொள்ள, பதினெட்டு வயதான சுலோக்சனாவை வெளி இடத்தில் இருந்த பெண் பார்த்து அவருக்கு கட்டி வைத்தார்கள். அந்தக் காலத்தில் பதினெட்டு வயது எல்லாம் பெண்களுக்கு கல்யாண வயது என்று நினைப்பவர்கள். சுலோக்சனாவின் அமைதியும் அழகும் பெரியநாச்சியை பெரிதும் கவர்ந்தது என்று சொல்ல வேண்டும். அடுத்த மாதத்திலேயே சுலக்சனா கருவுற்றார். அதன்பின்னே மகனை அனுப்ப சம்மதித்தார் பெரியநாச்சி. வாஞ்சி ராணுவத்தில் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது என்று செய்துவர சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

 

 

சமவயது உள்ள புனிதாவும் சுலோக்சனாவும் வீட்டில் எப்பவுமே ஒற்றுமைதான். கூட குறைக்கு அழகு தேவதையென பெண் குழந்தை இருக்க யாருமே கையை விட்டு அவளை இறக்கவில்லை. பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் அல்ல தாத்தாக்களுக்குமே அவள் அரசிகள் தான்!!

 

 

வேந்தருக்கு தன் பேத்தி என்றால் கொள்ளை பிரியம். அழகுமீனாள் என்று ஆசையோடு பெயரிட்டவரும் அவரே. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணம் என்று கூறுவார்களே அது போல தாத்தா அப்பத்தா அத்தை சித்தப்பா என்று அவள் வளர்ந்தது தான் அதிகம் அன்னையை விட.. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது பேசும் தந்தை ஒரு புறம். இரண்டு ஆண்டுகள் கழித்து தான் ஊருக்கு வந்தார் வாஞ்சி. ஒன்றரை வயது மகளை ஆசையுடன் அள்ளிக் கொண்டார். அதன்பிறகு பெரியநாச்சி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் திரும்பவும் ராணுவத்துக்கே சென்றார். அடுத்த மூன்று ஆண்டுகளில் புனிதாவுக்கு அதே ஊரை சேர்ந்த அழகுசுந்தரத்திக்கும் திருமணம் நிச்சயம் செய்ய.. தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு வந்தார் வாஞ்சி. ஐந்து வயது ஆனாலும் மகளை கீழே இறக்காமல் கையிலே தூக்கிக் கொண்டு அலைந்தார் அந்த திருமணத்தில் அனைவரை வாயையும் கண்டுகொள்ளாமல். 

 

 

மூன்று மாத விடுமுறையில் வந்தவர் வேந்தன் கருவில் உருவாக திரும்பவும் ராணுவத்திற்கு சென்றுவிட்டார். வெற்றிவேந்தன் பிறந்து இரண்டு மாதங்களில், மலர் வேந்தருக்கும் மரகதத்திற்கும் திருமணம் நடைபெற, ஊருக்கு வந்து தம்பியை நேரில் வாழ்த்துவில்லை என்றாலும் போனிலேயே வாழ்த்து தெரிவித்தார்.

வெற்றியின் மூன்றாவது வயதில் பிறந்தவன் கதிர். அதேசமயம் புனிதாவுக்கு மருது பிறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தது.

 

 

அழகுமீனாளுக்கு மூவருமே தம்பிகள் தான். அத்தை பையன் சித்தப்பா பையன் என்றெல்லாம் பிரித்து பார்க்க மாட்டாள். மூவருமே உயிர் அவளுக்கு.

தங்களது பங்காளியான வரதனுக்கு தனபாக்கியத்தை பெண் பேச அழகுசுந்தரம் ஒத்துக்கொள்ள, அவர்கள் திருமணமும் சோழவந்தானில் வெகு விமர்சையாக நடந்தது. ஆனால் மதுரை என்னும் பெரிய டவுனை விட்டு கிராமமான சோழவந்தானில் இருக்கப் பிடிக்கவில்லை தனபாக்கியத்திற்கு. ஏதாவது ஒரு குறை அல்லது சாக்கு சொல்லிக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தால் நான்கைந்து மாதங்கள் தங்கிவிட்டு தான் போவார். அடுத்த இரண்டே வாரத்தில் திரும்பவும் வந்து விடுவார். இப்படியாக சென்றதில் வரதனின் அண்ணனும் பெற்றோர்களும் அவரை அங்கேயே தங்க சொல்லிவிட்டு அவரது சொத்துகளையும் தொழிலையும் பிரித்துக் கொடுத்து விட்டனர்.

பெரிதும் மகிழ்ந்த போனது தனபாக்கியம் மட்டுமே.. அவரது அண்ணகளுக்கோ பெற்றவருக்கோ துளி விருப்பமில்லை. மாமியார் வீட்டோடு வந்து மருமகன் இருந்தால் அவனுக்கு என்ன மரியாதை இருக்கும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் தனபாக்கியம் திருந்தவில்லை.

 

 

மேகநாதன் தொழில் விவசாயம் எல்லாம் பிடிக்காமல் அவர் அப்போது பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருந்தார். இப்படியாக காலங்கள் செல்ல.. ஐந்து வயதான வெற்றிவேந்தனையும் இரண்டு வயதான கதிரையும் பார்த்துக் கொள்ளும் மொத்தப் பொறுப்பும் பதினோரு வயதான அழகுமீனாளுக்கே. 

 

 

சொன்னது பலித்ததோ இல்லை நேரமோ.. முப்பது வயதில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட ஒரு தாக்குதலில் தன் படைகளை வழி நடத்திச் சென்ற மேஜர் வாஞ்சிவேந்தனுக்கு அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைக் கேட்ட மொத்த குடும்பமும் ஆடியே போனது. என்னதான் வேந்தரும் மலரும் குடும்பத்தை தாங்கினாலும் வாஞ்சி இல்லாது அவனது மனைவியும் பிள்ளைகளும் எவ்வாறு இருப்பார்கள்?

பெரியநாச்சி மீண்டுமொரு அழுகையை துவக்கினர். 

 

“எப்பாடுபட்டாவது என் பிள்ளையை இங்கேயே கூட்டி வாங்க.. அந்த ஜோசியக்காரன் அப்பவே சொன்னான் முப்பது வயசுல கண்டம் இருக்குன்னு.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல பெரிய ஆபத்து வந்தது இதோட போகட்டும். எனக்கு என் பிள்ளை இப்பவே வேணும்” என்று அவர் விடாப்படியாக நிற்க… வேறுவழியின்றி வேந்தரும் வாஞ்சியை பார்த்து கையோடு அழைத்து வர சென்றார்.

 

 

பெரியநாச்சி விடாப்பிடியாக நானும் வந்து ஆவேன் என்று நிற்க.. அவர் வாயால் கேட்டதை கண்களில் தவிப்போடு பார்த்த மருமகளை பார்த்தவர்.. பொறுப்பை மலரிடமும் மரகதத்திடமும் கொடுத்து விட்டு மனைவி மருமகளுடன் வாஞ்சியை அழைக்க சென்று விட்டார். புனிதாவுக்கும் தனபாக்கியத்துக்கும் பெரிதாக எல்லாம் ஒத்துப்போகாது. தன் அண்ணியோடு ஒத்துப்போகும் அவருக்கு நாத்தனார் நடவடிக்கைகள் சுத்தமும் பிடித்தம் இல்லாதவை. ஊரில் அம்மா அப்பா இல்லை பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறி இங்கே அம்மா வீட்டுக்கே வந்து விட்டார் புனிதா மருதுவை அழைத்துக்கொண்டு. பெரும்பாலும் பிள்ளைகள் மூவரும் ஒத்து விளையாடுவதால் இவர்களும் தங்கள் வேலைகளை பார்த்துக் கொள்ள மலர்வேந்தன் தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அந்த நேரத்தில்தான் சித்திரை திருவிழா ஆரம்பமானது மதுரையில்.. அவர்கள் குடும்பத்திற்கான கெட்ட நேரமும் ஆரம்பமானது!!

 

சித்திரை திருவிழா வேலைகளில் இவர்கள் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு திருவிழா சம்பந்தமாக பேச வருபவர்களை கவனிக்க முடியாமல் தவித்தார் மரகதம். கூடவே கதிருக்கு அப்போது அம்மையும் போட்டுவிட.. “பிள்ளைகளை நான் எங்க வீட்டுக்கு கொண்டு போகிறேன் மதனி” என்று புனிதா தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனபாக்கியம் வருடத்துக்கு ஒருமுறை திருவிழா சமயம் மட்டுமே தன் புகுந்த வீட்டிற்கு செல்வார். 

 

வீட்டில் அழகுசுந்தரத்தின் பெற்றோர்களும் புனிதாவும் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர் அப்போது. சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேகநாதனுக்கு ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் ஒரு நண்பர் மூலம் அவர் நண்பரின் கம்பெனிக்கு. அந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் தன் ஊரு சித்திரை திருவிழாவின் பெருமையை மேகநாதன் பறைசாற்ற வெளிநாட்டவரானான பிரதாபனுக்கு திருவிழாவை பார்க்கும் ஆசை வந்தது.

 

 

தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் அந்த நண்பன் பிரதாபனை. சித்திரைத் திருவிழானால் நித்தமும் சாமி ஊர்வலம் கொண்டாட்டம் என்று களை கட்டியது மதுரை. கழுத்தில் காமிராவுடன் ஃபுல் சூட்டில் தனது வெளிநாட்டு பாவனையை கைவிடாமல் உலாவந்த பிரதாபனை எல்லோரும் ஆச்சரியமாகவே பாவித்து மரியாதை கொடுத்தனர்.

அதிலும் அவர் கழுத்தில் இருக்கும் அந்த கேமிரா படம் எடுத்த உடனேயே வந்து விட அந்த ஆச்சரியத்தை விழி அகலாமல் பார்த்தாள் பேதையான அழகு மீனாள்.

 

பெண்கள் வளர்ந்தி பீர்க்கன் வளர்த்தி என்பார்கள்!! அதுவும் பன்னிரெண்டு வயதில் மற்ற பெண்களை விட, சற்றே உயரத்தோடு பதினாறு வயது பெண் போல, பட்டு பாவாடையில் அழகு தேவதையாய் வலம் வந்த அழகு மீனாளின் மீது அந்த கழுகின் இச்சை பார்வை பட்டது. பெண்கள் பொதுவாக தங்களை தவறாக பார்த்தால் அவர்களது உள்ளுணர்வு அவரருகே போக அச்சப்பட்டு விலகிப் போகும். ஆனால் வீட்டின் உள்ளே விருந்தினராய் இருக்கும் இந்த கழுகின் பார்வையை புரியாமல் போனது அந்த சின்னஞ்சிட்டுக்கு. அந்த நவீன ரக புகைப்படக் கருவியை அவள் பார்க்கும் போது அதை துருப்பாக பயன்படுத்திக் கொண்டான்.

 

 

மீனாட்சி திக்விஜயம் அன்று இரவு சாமி பார்த்துவிட்டு இவர்களெல்லாம் வீட்டிற்கு வர புனிதாவை அழைத்த மரகதம், “மதனி நாளைக்கு திருக்கல்யாணம் எனக்கு தெரிந்தது எல்லாம் எடுத்து வச்சிட்டேன். நீங்க ஒரு முறை வந்து எல்லாத்தையும் சரி பார்த்தா நல்லா இருக்கும்” என்று அழைத்தார். எப்பொழுதும் பெரியநாச்சி தான் இதையெல்லாம் எடுத்து வைப்பார். தனியாக மரகதம் எல்லாத்தையும் கையாண்டாலும் ஒரு பயம் எதையும் தவற விட்டு விடுவோமோ என்று புனிதாவை அழைத்திருந்தார்.

 

 

வீட்டில் தானே பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று அலட்சியத்துடன் மாமியாரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அழகுசுந்தரத்தோடு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பிள்ளைகள் மூவரும் ஒரே அறையில் உறங்க.. வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட அந்த அரக்கன் சிறு பறவையை சாப்பிட துடித்தது.

 

மூன்று குழந்தைகளும் தூங்கும் அறையை திறந்து பார்க்க அங்கே தம்பிகள் இருவரோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அழகுமீனாள். தூக்கத்தில் ஆடைகள் அங்கே நெகழ்ந்து அவளது முழங்காலை காட்ட.. காமவெறி கொண்ட மிருகத்திற்கு அந்த சிறு பகுதியே போதுமானதாக இருந்தது. மெல்ல உள்ளே நுழைந்து கண்களாலே அவளைத் துகிலுரித்தான் அவன். 

மேலும் உடை மறைக்காத அவளது பிரதேசங்களை மெதுவாக அவன் தீண்ட அதில் சட்டென்று கண் விழித்து அவனை பார்த்து என்ன என்று அரண்டு போய் கேட்க..

 

 

“நீ தானே கேமரா பாக்கணும்னு சொன்ன இல்ல.. அதுக்காக தான் உன்னை தொட்டு எழுப்பினேன். வரியா பார்க்கலாம்?” என்றான்.

 

அவளும் தூங்கும் தம்பிகளை ஒரு முறை பார்த்துவிட்டு இருபக்கமும் அணைவாக தலையணையை வைத்துவிட்டு அந்த ஓநாயின் பெண்ணே வஞ்சம் இல்லாத சென்றது அந்த ஆட்டுக்குட்டி. அவர்கள் அறையைத் தாழிட்டு விட்டு கையில் அந்த கேமராவை கொடுத்து பார்க்கச் சொன்னான். அவளும் அதன் செயல்முறை பற்றி கேட்க.. அவள் பின்னோடு நின்று இணைந்து அணைத்து என்று சிறு சிறு சில்மிஷங்கள் செய்தபடியே அவளுக்கு கற்றுக் கொடுத்தான். இன்னும் சிறிது நேரம் சென்று இருந்தால் அவளை என்ன செய்திருப்பானோ அதற்குள் மேகநாதன் வந்துவிட.. இரவு நேரத்தில் இங்கே வந்திருக்கும் அழகுமீனாளையும் பிரதாபனையும் மாறி மாறி பார்த்தார்.

 

 

அழகுமீனாள் “மாமா இந்த கேமரா அழகா இருக்கு இல்லையா? அதுதான் இந்த அங்கிள் கிட்ட கேட்டேன் எப்படி யூஸ் பண்ணனும்னு. இதேமாதிரி அப்பா வரும்போது ஒன்னும் வாங்க சொல்லணும்” என்று பிள்ளை மொழியில் மிழற்றினாள் அவள்.

 

 

“சரி சரி நேரமாச்சு நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு பிரதாபனை பார்த்து “என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? இதெல்லாம் தப்பு. அவ சின்ன பிள்ளை” என்று இவன் கடிய..

 

 

“யாரும் கை படாத இந்த மாதிரி சின்ன புள்ளைங்க தான்…” என்று தன் வக்கிரத்தை வாய்மொழியாக அவன் கூற கூற மேகநாதனுக்கு கோபம் வந்தது. “எங்க வந்து யார் வீட்டு பொண்ண பத்தி பேசிட்டு இருக்கீய்ங்க?” என்று அவன் சட்டையை பிடித்தார்.

 

 

“நல்லா யோசிச்சு பாரு.. ஒரே ஒரு தடவை மட்டும் தான். அதுக்கு நீ சத்தம் போடாம ஏற்பாடு பண்ணினா உன்னோட வாழ்வு பின்னாடி பிரகாசிக்கும். என் கம்பெனி உனக்கு ஜெனரல் மேனேஜர் போஸ்ட் காத்துக்கிட்டு இருக்கு.. அதுமட்டுமல்ல நீ விரும்புற மாதிரி நல்ல பணக்கார பொண்ணா பார்த்துட்டு அங்கேயே செட்டில் ஆயிடலாம்” என்று மேகநாதனின் பலவீனமான வெளிநாட்டு கனவு வாழ்க்கையை பயன்படுத்தி அவன் தன் பேச்சின் வசீகரத்தால் அவரை முற்றுமாக மாற்றினான். “ஒரே ஒரு தடவை இருக்கிறதுனால அந்த பொண்ணுக்கு என்ன அவ பேரு வந்திற போது? காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுட்டு நாம பாட்டுக்கு போய்டலாம். அந்த பொண்ணுக்கும் இதுபற்றிய விவரம் தெரியாது தெரிந்தாலும் பொண்ணுங்க இந்த விஷயத்தை பயந்து சொல்ல மாட்டாங்க. அப்புறம் என்ன பயம்.. நீயும் அதுக்கப்புறம் இந்த ஊர்ல இருக்க மாட்ட” என்று இன்னும் தன் குற்றத்திற்கு அவரை வலு சேர்த்துக் கொண்டான்.

 

 மறுநாள் திருக்கல்யாணம் அந்த வருடம் விடியற்காலையிலேயே நடக்க.. குழந்தைகளை எழுப்பி கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பெரியவர்கள் மட்டும் கிளம்பி சென்றனர்.

 

 

தன் வீட்டில் தன் உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்ற பெற்றோர்களின் உற்றர்களின் நியாயமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை எல்லாம் இப்போதெல்லாம் எத்தனை வீட்டில் இருக்கிறது.

 

 

 

அனைவரும் சென்றுவிட காலையில் அதேபோல் பிரதாபன் அவளை அழைத்து மாடிக்கு சென்றான். வீட்டில் ஒருவரும் இல்லாதது இன்னும் வசதி ஆகிவிட.. மேகநாதன் பசங்கள் விழித்துவிடாமல் இருக்க அந்த அறையில் இருந்து கொண்டார். ஒரு சிறு பெண்ணை கூட்டி கொடுத்து அதன் மீது தனது எதிர்காலத்தை வளமாக்க நினைக்கும் நாசகார புத்தியாக மாறியிருந்தது மேகநாதனின் பட்டப்படிப்பு. கேமரா செயல் விளக்கத்தை காட்டுவது போல மெல்ல மெல்ல அவளை துகிலிரித்து, அவள் கதற கதற தன் இச்சையை தீர்த்து கொண்டது அந்த மிருகம். 

 

வீட்டில் இருந்த பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்து வெளியேற்றி கொண்டிருந்தார் மேகநாதன் அப்போது.

அக்காவின் சத்தம் கேட்டு வெற்றியும் மருதுவும் ஓட, அறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. இவர்கள் இருவரும் வெளியே “அக்கா!! அக்கா!!” என்று கதறியபடி மாடியில் அந்த அறையை சுற்றி சுற்றி வந்தனர். அதற்குப்பின் சத்தம் வராமல் போக “அக்கா எங்க சென்றாள்? ஏன் பதில் சொல்லல..என்னாச்சு அவளுக்கு?” என்று அழுது கொண்டே அவர்கள் கீழே இறங்கி வர மேகநாதன் அப்போது தான் வீட்டுக்குள் வந்தார். வந்தவரிடம் “அக்கா எங்கே?” என்று இவர்கள் இருவரும் கேட்க.. “அவள் அப்போதே அண்ணியோடு கோயிலுக்கு போயிட்டா.. நீங்க தூங்குறதால உங்களை விட்டுட்டு போயிட்டாங்க” என்று அவர்களை திசை திருப்பி வெளியே அழைத்து வந்தார்.

 

கசங்கிய மலரென கிடந்த அந்த சிறு பெண்ணின் மீது சிறிதும் இரக்கமில்லாமல் அரக்கனாய் மாறி வதைத்திருந்தான். மீண்டும் மீண்டும் வதைத்தான். 

 

 

கதிருக்கு தலைக்கு ஊற்றி விட்டதால் கூடவே பிள்ளைகளையும் பார்த்து வர மரகதம் மலர் தம்பதியினர் புனிதாவோடு வீட்டுக்கு வர, அங்கே ஹாலில் கோபம் முகத்தோடு அமர்ந்திருந்த வெற்றியை பார்த்து “வெற்றி ஏன் சாமி இங்கே உக்காந்து இருக்க. அக்கா எங்கே?” என்று கேட்டவாறு மலர் அருகில் வர.. 

 

 

“அக்கா உங்க கூட வரலையா ஐயா?” என்று கேட்கவும் அதிர்ந்தனர் மற்றவர்கள்.. அதற்குள் அங்கு வந்த மேகநாதன் “மீனா உங்க கூட வந்தான்னு நாங்க நினைச்சோம். அப்ப எங்க போனா?” என்று தெரியாத மாதிரியே கேட்க..

 

 

“மேலே அக்கா சத்தம் கேட்டது அந்த ரூம்ல” என்று வெற்றி போட்டு உடைக்க ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேகமாக மேலே ஏறிச் செல்ல, அப்போதுதான் கதவை திறந்து கொண்டு வெளிவந்த பிரதாபனை பார்த்தவர்கள், பதறி உள்ளே சென்று பார்க்க.. தங்கள் வீட்டு பெண் நிலை குலைந்து கிடந்ததை பார்த்து முதலில் கதறித் துடித்து, அடுத்த நிமிடம் ரௌத்திரத்தில் பிரதாபனை போட்டு வெளுத்தனர்.

 

அவனோ ஒருவனாக சமாளித்து “எதுக்கு என் போட்டு இப்படி அடிக்கிறீங்க. நான் உங்க பொண்ணுகிட்ட போய் எதுவும் பண்ணல. அந்த பொண்ணா தான் என்னை தேடி வந்தது” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் அவர்கள் தலையில்..

 

அதுவரை அவனை அடித்துக் கொண்டிருந்த கை சட்டென்று இறங்கி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சத்தம் கேட்டு மேலே வந்த புனிதாவும் மரகதமும் மீனாவை பார்த்து வாய்விட்டு கதறி தாங்களும் அவனை நாராசமாக திட்டி அடிக்க செல்ல.. 

 

 

“என்ன குடும்பமே நடிக்கிறீங்களா? அந்த பொண்ண நீங்க எல்லாரும் சேர்த்து எனக்கு அனுப்பிச்சிட்டு இப்ப என்ன இப்படி பேசுறீங்க?” என்று அழகு மீனாளின் நடத்தையையும் குடும்பத்தையும் இவன் தூற்றி பேசப்பேச இன்னும் வெகுண்டு எழுந்தனர் அழகுசுந்தரம் மலரும்.

 

 

அதற்குள் புனிதாவும் மரகதமும் அவளை அழைத்துக் கொண்டு சென்று வேறு உடை அணிய வைத்து தெளிய வைத்து கொண்டிருந்தனர். “சும்மா என் கிட்ட சண்டை போடாம.. அந்த பொண்ணை கூப்பிட்டு கேளுங்க?” என்றான் அவன்.

 

“டேய் அது பச்சை மண்ணுடா!! அதுக்கு என்னடா தெரியும் நாதாரி.. அந்த பிள்ளையை நாசப்படுத்திட்டு பேச்சு பேசுறான் பேச்சு” என்று மலர் அடங்காமல் அவனை இன்னும் போட்டு மிதி மிதி என்று மிதித்தார்.

 

 

“நான் சொல்றது பொய்ன்னா.. இங்கே உன் மச்சான் நிக்கிறான் தானே அவன் கிட்ட கேளு?” என்று மலரை பார்த்து மேகநாதன் கை காட்டி விட்டான் பிரதாபன்.

 

 

நீதி நியாயம் தர்மம் எல்லாம் தாண்டி தனது வளமான வாழ்க்கையை கண் முன்னாடி தெரிய.. மௌனி ஆகிய போனான் மேகநாதன். அழகுசுந்தரம் தம்பியின் அருகில் சென்று “நீதானே இந்த நாதாரி இங்கன அழைச்சிட்டு வந்த. உண்மையை சொல்ல போறியா இல்லையா? அவன் கண்டது வாயில் வந்தபடியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான்” என்று தம்பியை உலுக்கினார். மலர் வேந்தனும் கண்களாலேயே மேகநாதன் எரிக்க..

 

“ஆமா ணா.. நேத்து நைட்டு நான் வரும்போது இந்த பொண்ணு தான் பிரதாப் ரூம்க்கு வந்துச்சு.. அவன்கிட்ட ஏதோ சிரிச்சு சிரிச்சு பேசி நெருக்கமாக உட்கார்ந்து இருந்தது. என்ன பார்த்த உடனே பயந்து கீழே ஓடிப் போயிடுச்சு.. இன்னைக்கு காலைல நான் வரும் போது அந்த பொண்ணு ரூம்ல இல்லை இவிய்ங்க ரெண்டு பேரும் தான் படுத்து இருந்தாய்ங்க..மாடி பார்க்கும்போது அந்த பொண்ணு பிரதாப் ரூம் உள்ள போய்க்கிட்டு இருந்திச்சு” என்று கொஞ்சமும் சிறு பெண் மீது பழி போடுகிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பிரதாப்பின் குற்றத்துக்கு துணை போனான் மேகநாதன்.

 

 

நொடி அவன் வாயை பேத்த மலர் “சீசீ.. தூ” என்று அவனை காறி உமிழ்ந்து துப்பிவிட்டு “இனிமே உன் குடும்பத்தில் உள்ள எவனும் என் வீட்டுக்கு வந்திடாதிய்ங்க” என்றவர் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 

 

தனக்கு நடந்தது லேசாய் புரிய அதேநேரம் மேகநாத சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அழகுமீனாவுக்கு பயங்கர அதிர்ச்சி.. நடுங்கியபடியே தூங்காமல் அமர்ந்திருந்தாள். “பாப்பா..” என்று மலர் அவளிடம் நெருங்கி செல்ல சட்டென்று இரண்டு அடி விலகி தன் முழங்காலில் முகத்தை புதைத்துக்கொண்டு “கிட்ட வராதே!! கிட்டே வராதே!!” என்று அவள் கத்த.. பெற்றால்தான் மகளா? வளர்த்த தந்தைக்கும் துக்கம் மிகுந்து வலித்தது.

கதறி கதறி மனைவியிடம் அழுதார்.

“திருவிழா முடிஞ்சு உனக்கு இருக்கு டா” என்று பிரதாப்பை அந்நேரமே கரம் கட்டிவிட்டார் மலர்.

 

 

இரவெல்லாம் மரகதமும் வெற்றியும் மட்டுமே மீனாவின் அருகிலிருக்க பயத்திலும் அதிர்ச்சியிலும் ஜுரம் கண்டது அந்த சின்ன பெண்ணுக்கு.

 

“கிட்ட வராதே.. கிட்ட வராதே” என்று முனகலும் “நான் அப்படியெல்லாம் செய்யல சித்தி.. என்னை நம்புங்க” என்று இரவில் எல்லாம் துடித்து துடித்து எழுந்து அமர்ந்து அழுதாள் அந்த சின்ன பெண்.

 

விஷயத்தைக் கூறாமல் “என்ன நிலையில் இருந்தாலும் பரவாயில்லை கிளம்பி வாங்க” என்று மலர் வேந்தன் தந்தைக்கு போன் அடித்து சொல்ல.. 

மறுநாள் விடியலில் கிளம்பி மகனையும் ஆம்புலன்ஸிலேயே அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

 

 

வீட்டுக்கு வந்தவுடன் அண்ணனையும் அப்பாவையும் கட்டிக்கொண்டு நடந்த விஷயத்தைக் கூறி மலர் கதறி அழுக.. ஒவ்வொருவரின் அதிர்ச்சியை வார்த்தைகளால் வடிக்க இயலாது. 

விஷயத்தைக் கேட்ட உடன் சுலோக்சனா மயங்கி சரிய.. பெரிய நாச்சி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பேத்தியை பார்க்க சென்றார்.

 

உடம்பில் கட்டு போட்டதோடு மகளை பார்க்க பாய்ந்து சென்ற வாஞ்சி அங்கே கண்டது துவண்டு போய் கிடந்த மகளை தான். அணைத்து ஆறுதல் சொல்ல தொட முயன்ற தந்தையை கூட அவள் கண்களுக்கு ஆண் என்ற மிருகமாக தெரிய பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாள்.

 

 

பெற்ற தந்தை.. பாசத்தோடு வளர்த்த தாத்தா.. அன்பை கொட்டிய சித்தப்பா என்று எந்த ஆணையும் அருகில் விடாமல் அன்று முழுவதும் கட்டிலுக்கு அடியிலேயே அவள் பயந்து கோழிக்குஞ்சு என சுருண்டு கிடக்க..

பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நெஞ்சே பதறித் துடித்து கண்களில் ரத்தக் கண்ணீர் தான் வந்தது.

 

பாதகம் செய்தவனை அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொள்ளும் வேகம் பிறந்தது அவர்களுக்கு. ஆனால் அன்றிரவே மேகநாதனும் பிரதாபனும் ஆஸ்திரேலியா பறந்து விட்டனர். ஆஸ்திரேலியா என உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் உன் சாவு என் கையில் தாண்டா என்று என் தந்தையர் சூளுரைத்து அவனை கட்டம் கட்ட திட்டம் போட..

 

 

மறுநாள் காலை அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அதிர்ச்சி அழுத்தம் எதையும் தாங்கிக் கொள்ள முடியாத அந்த சின்னஞ்சிறு மொட்டு தன்னை மாய்த்துக் கொண்டு இருந்தது.

 

 

காதலே.. காதலே…

2 thoughts on “எங்கு காணினும் நின் காதலே… 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top