ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 23

23

 

எங்கு காணினும் நின் காதலே!!

 

ஜியா ஜானவி ❤️

 

 

“முதலில் பிள்ளையை பாருங்க டா.. அப்புறம் அவனை கண்டதுண்டம் பண்ணலாம்” என்று வேந்தர் கூற.. வழக்கம் போல தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இருவரும் கட்டுப்பட்டனர். அதற்கு முக்கிய காரணம், உடல்நலம் சீராகி தன் கையால் அவனை முடிக்க வேண்டும் என்ற வாஞ்சிவேந்தனின் வெறி!! பின் பார்வையாளராய் இருக்கும் நமக்கே அம்மிருகங்களை கொன்று குவிக்கும் வேகம் வரும் போது, பெற்றவரின் வலியையும் வெறியையும் வார்த்தைகளில் அடக்க முடியாது!!

 

 

பெண் மருத்துவரை வீட்டுக்கே அழைத்து வந்து அழகு மீனாளை காட்டினர். அவரும் அவளை சோதித்து, “மலரும் முன்னே கருக்கி விட்டனர், பிற்காலத்தில் பிள்ளை பிறப்பதுமே கஷ்டம் தான். அதைவிட அந்த பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கா.. கவனமா பார்த்துக்கோங்க” என்று அறிவுறுத்தி சென்றார். இவர்களும் கண்ணின் மணி போல பார்த்தும், நித்தமும் காண்பவர்களை கண்டு அஞ்சி நடுங்கிய அப்பிஞ்சு, ஒருநாள் காலை ‘போதுமடா!! பெண்ணாய் பிறந்து நான் பட்டபாடு. இனி ஒரு ஜென்மம் வேண்டாம்” என்று இவ்வுலக இன்னல்களை துறந்து சொர்க்கலோகம் சேர்ந்தது. அன்பு பேத்தியின் மரணத்தை தாங்க முடியாத வேந்தரும் அடுத்த சில நாட்கள் யாரிடமும் பேசாமல் நடைபிணமாக இருந்து, முற்றாக மூச்சை நிறுத்தி விட்டார். 

 

உடல்நிலை சரியானதும் வாஞ்சி மற்றும் மலரின் முக்கிய வேலையே பிரதாபனை கண்டுபிடிப்பதே.. ஆனால் அவரைப் பற்றி அறிந்தது மேகநாதன் மட்டுமே.. அவரும் மதுரை பக்கம் வராமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்ததால், கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று முதல் அழகுசுந்தரம் குடும்பத்தோடான தொடர்பை அறுத்திருந்தது. ஐந்து வருடங்கள் சென்ற நிலையில் சுவாதியை கரம்பிடித்து நிவேதிதாவுடன் ஊருக்கு திரும்பியவரை, கடத்தும் போது அழகுசுந்தரத்தின் ஆட்கள் தடுக்க, அதுமுதல் இரு குடும்பத்துக்கும் போர் தான்.

 

 

சுலோக்சனா சுத்தமாக மகளின் மறைவுக்கு பின் பேச்சே குறைந்திருந்தார். வீடே ஒரு கணமான சூழலில் தான் இருக்கும். அவை அனைத்தையும் தன் பேச்சால் குறும்பால் மாற்றினான் கதிர். வேந்தர் இறந்தவுடன் முழு பொறுப்பும் வாஞ்சியை வந்தடைய, சண்டியராய் திரிந்தவர் சாணக்கியனாய் மாற.. வெற்றி வேந்தன் இரண்டின் கலவையாய் உருவெடுத்தான் எதிரிகளை கருவறுக்க!! ஆளுமையிலும் கம்பீரத்திலும் தந்தையின் சாயலை கண்டவர்களுக்கு அன்று முதல் இவன் வேந்தர்!!

 

 

முழுதாய் அவன் சொல்லி முடிக்க.. அதிர்ந்த நிலையில் இருந்து சற்றும் மீளாமல் தான் கேட்டவற்றை கிரகிக்க முடியாமல்.. வடித்த வைத்த சிலையென நின்றிருந்தாள் நிவேதிதா. அவளால் சற்றும் தன் தந்தையின் அந்த அகோர பிம்பத்தை நம்ப முடியவில்லை. அதே சமயம், நல்ல குடும்பத்தில் பிறந்த.. நல்லவனாக பேர் எடுத்தவன் தன்னிடம் மட்டும் காட்டிய எல்லை மீறலுக்கான அர்த்தம் புரிந்தது. அனைத்தும் அறிந்து உலகம் புரிந்த நமக்கே வலித்தது என்றால், அழகு மீனாளின் நிலையை எண்ணி பார்க்க கூட பயந்தாள் பெண்.

 

 

எல்லாத்தையும் விட, தன் தங்கை வீடு என்று நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார்களே.. எப்படி ஒரு துரோகம்? அவர்களுக்கு இழைக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட, தன் வருங்காலத்திற்காக தந்தை செய்த ஈன செயலை எண்ணியவளுக்கு மனங்கொள்ளா பாரம். சீ என்ன மனிதன் இவன்? என்று வெறுத்தாள்.

 

ஒரு மகளாய்.. பெண்ணாய்.. அவருக்கு கிடைத்த தண்டனை வெகு சொற்பமே என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வழிய, 

 

“ஏன் உங்க அப்பனை நினைச்சு அழுகிறியோ? இதெல்லாம் அவனுக்கு பத்தாது.. இன்னும் இருக்கு” என்று காதலன் வெற்றியிலிருந்து கடமை கொண்ட வேந்தனாய் அவன் கர்ஜிக்க..

 

இல்ல என்று தலையாட்டியவள், “அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்கல்ல” என்று மேலும் கண்ணீர் வடிக்க, புருவங்களை சுருக்கி அவளை பார்த்தவன், “யாரு??” என்றான் தெரிந்தும் தெளியாமலும்..

 

“அவங்க தான் மதனி.. நாத்தனாரை அப்படி தானே கூப்பிடனும்?” என்று அவனிடமே சந்தேகம் கேட்டவளை பார்த்தவனுக்கு, மெல்லிய புன்னகை உதடுகளில் நெளிந்தாலும், மனம் முழுக்க அன்று பார்த்த காட்சிகளே ஓட, கண்களை மூடி தன் உணர்வுகளை கட்டுபடுத்த முயற்சித்தான்.

 

 

இதுவரை மனதுக்குள் வைத்து மருகிக் கொண்டிருந்த விஷயத்தை வெளிப்படுத்தியவன் முகமோ கல்லென இறுகியிருக்க.. உடலோ நாணென விரைத்து நிற்க.. கை முஷ்டியை இறுக்கத்திலேயே அவனின் வலியையும் வருத்தத்தையும் கோபத்தையும் உணர்ந்தவளுக்கு அவனை சமன்படுத்த வேண்டி உள்ளம் தவியாய் தவித்தது.

குறும்பை கையிலெடுத்தாள் பெண்!!

 

“அண்ணா!!” என்று அவள் அழைக்க..

 

சட்டென்று தன் இறுக்கம் கைவிட்டு அவளை பார்த்தவன் “யாரு டி யாருக்கு?” என்றான் அவளை கூர்ந்து..

 

“ம்ம் நீ தான்..” என்றவள் எக்கி அவனது கன்னத்தில் முத்தமிட.. “உங்க ஊர்ல அண்ணனை இப்படித்தான் கிஸ் பண்ணுவாங்களா?” என்றான் அவனும் விடாமல்.. 

 

“ஏதோ அண்ணன் சோகமாக இருக்காரே வருத்தத்தை போகலாம்னு பார்த்தேன்.. இனி நோ கிஸ்ஸிங் கிஸ்ஸிங்..” என்றவளை அவன் சுவாரஸ்யமாக பார்த்து, “பின்னே??” என்று கேட்க.. “ஒன்லி லவ்விங் தான்!!” என்றவள் அவனை இழுத்து அணைத்திருந்தாள். 

 

துளி காமமோ..

பெருங் மோகமோ..

இல்லை அதில்.. முழுக்க முழுக்க காதல் கொண்டு கணவனை தேற்றும் முயற்சியாக தான் இருந்தது. அதுவரை கல்லாக இருந்தவன் தன்னவளின் அணைப்பில் கரைந்து கனிந்து கண்ணீரில் கரைந்தான். இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருந்த மொத்த அழகையும் தன்னவளுடைய அணைப்பில் அவன் வெளிப்படுத்த அவனை தன் நெஞ்சில் சாய்த்து முதுகை வருடிக் கொடுத்து தன்னவன் சோகத்திற்கு தானே மருந்து ஆனாள்.

 

 

நேரம் ஆகியதை உணர்ந்த நிவேதிதா

“வாங்க போகலாம்” என்றவளின் பன்மை விகுதியை கேட்டவன், “நீ நீயா இரு டார்லிங்… அது தான் நல்லா இருக்கு, இப்படி வாங்க போங்கன்னு பேசினா நான் யாரோன்னு நினைக்க வேண்டியிருக்கு” என்று அவன் சிரிக்க..

 

“அப்போ உங்க செயலினால் வந்த கோபம் ஆத்திரம் அதனால் அப்படி கூப்பிட்டேன்.. ஆனா இப்போ..” என்று அவள் கூற.. அவள் கையை பிடித்து கொண்டே, “இப்போ கோபம் போய்டிச்சா? என்று கேட்க..

 

“நீங்க செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.. அதுவும் தப்பு தான். ஆனா என் அப்பா செய்ததுக்காக தானே!! அதே சமயம் என்னையும் பயன்படுத்தி தூக்கி போடலையே.. இதோ இப்படி ரோமியோ போல பின்னால் அலையுறிங்க தானே.. அதற்காக போனா போதுன்னு மன்னிச்சு வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கெத்தாக கூறினாலும் அவள் உள்மன காதலை உணர்ந்தவன், “ஐ அம் சாரி.. சாரி வேதா” என்று உணர்ந்து கூறினான்.

 

“வேதாவா?” என்று அவள் கேட்க.

 

“ம்ம்ம்.. எனக்கு காதல் வேதம் சொல்லிக் கொடுத்த தேவதை பெண் நீ.. வேதா!!” என்றவன், அவள் முகத்தை தன் அருகே இழுத்து முத்தங்களால் அர்ச்சித்தான்.

 

“போதும்!! போதும்!! விடுங்க நடு ரோடு!!” என்றவள் கேப்பில் அவர்கள் தங்கியிருந்த வீடுக்கு வந்தனர். 

 

“நீ தான் உன் ரூமுக்கு வந்தா திட்டுவ? நானெல்லாம் நல்லவன் மா!! திட்டவே மாட்டேன்” என்றவன் அவளை அவன் அறைக்கு அள்ளிச் சென்றான்.

 

அவளின் இந்த காதல், தவறு செய்திருப்பினும் அவனையே தன் கணவனாக வரிந்து கொள்ளத் துணிந்தது அவனுக்கு அவ்வளவு ஒரு நிம்மதியை தந்தது. இவள் எனக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?? என் தேவதை இவள்.. அன்பை மட்டுமே தரும் என் தேவதை!!

இளமை பொங்கும் என் வேதா மிகவும் அழகான தேவதை.

 

வெற்றி நிவேதிதாவை இறுக்கி அணைத்து மெதுவாக அவள் தோள்களை வளைத்து.. அவளின் ஈரமான உடலைத் தழுவினான்.

 

” வேதா டார்லிங் ”

 

” ம்ம்?” என்றாள் கிறக்கத்துடன். 

 

” நிஜமா ?”

 

”என்னது நிஜமா..?”

 

”நீ என்னை புருஷனாய் ஏத்துக்கிட்டியா?”

 

“இல்லையே.. இன்னும் அண்ணா தான்” என்றாள் குறும்பாக கண்ணடித்து..

 

“அண்ணா.. கையில தான் அம்மிணி இப்பிடி குழைவாங்களா?” என்றான் விரல் கொண்டு அவளை முகத்தை அளந்தவாறு..

 

“ஆமா.. அய்யர் பாஷை ண்ணா..” என்றவள் “இன்னும் சந்தேகமா உங்களுக்கு?” என்றவள் மெல்ல தன் முகம் உயர்த்தி வெற்றியின் கண்களை மிக நெருக்கத்தில் நேராகப் பார்த்தாள். பாலில் மிதக்கும் அவளது கருந்திராட்சை விழிகள் அவனை விழுங்கியது. ஈரமான அவளது மெல்லிய உதடுகள் அவனின் உதடுகளை மெல்ல முத்தமிட்டன. அவனோ நம்பமுடியாமல் சிலிர்த்துக் கொண்டு நின்றான்.

 

”இப்போ சந்தேகம் போச்சா?” என்று கேட்டாள்.

 

“போச்சு.. ஆனா…” என்று அவன் முடிக்கும் முன் அவனது இதழ்களை அவளின் உதடுகளைக் கவ்வியிருந்தன. அவளின் மெல்லிய பூவிதழ்களுக்குள் அவனின் முரட்டு உதடுகள் சிறைப்பட்டுக் கொண்டன. அவளின் இதழ்களுக்கு இவ்வளவு வலிமையா தன் இதழ்களை உறிஞ்சி சுவைக்கின்றனவே? அவளது மெல்லிய கரங்கள் இத்தனை வலுவானதாக மாறி என்னை இறுக்குகின்றனவே? என்று வெற்றியின் எண்ணங்கள் அலைபாய..

 

அவன் ஒரு கை அவள் தோளில் இருக்க.. இன்னொரு கை கீழே நழுவிச் சென்றது. இடையெனும் ஸ்பீடு பிரேக்கர் அவன் கைக்கு தடை போட.. கை அங்கேயே நிலைத்து விட்டது அதன் மென்மையை ஆராய்ந்தப்படி.

 

 

அவளின் இதழ் தேன் அவனுக்குள் அமிர்தமாக இறங்கியது. பிரிந்தவர்கள் கூடுகையில், பிரிந்திருந்த உதடுகளும் ஒன்றை ஒன்று பிரிய மனம் இல்லாமல் நீண்ட நேரம் ஒன்றை ஒன்று கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தது. பின் பிரிய மனம் இல்லாமலே இதழ்களைப் பிரித்தவன்..

 

”வேதா”

 

” ம்ம்.” கிறக்கமாக முனகினாள்.

 

” ஐ லவ் யூ.. வேதா!!” என்று சொல்லியே விட்டான் அவனின் நெஞ்சை முட்டிய காதலை..

 

அதில் நெகிழ்ந்து ”மீ டூ ஹல்க்!!” என்றாள் அவன் மீசையை வருடியப்படி..

 

சில நொடிகள்.. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்கள். சொன்ன காதலை அந்த நிமிட சந்தோஷத்தை மனதில் ரசித்தவாறு.

 

 

பின் மெதுவாக நகர்ந்து நின்ற நிவேதிதா ”உங்க ட்ரஸ் எல்லாம் ரொம்ப நனைஞ்சு போயிருக்கு.. சேன்ச் பண்ணிக்கோங்க” என்றாள்.

 

”என் பொண்டாட்டி இருக்கப்ப.. நான் ஏன் மெனக்கெடனும்?” என்றவன், விலகி நின்றவளது உதட்டோரம் முத்தமிட்டுச் சிரிக்க.. அவள் கைகளை என் நெஞ்சில் வைத்தாள்.

 

”வெறும் லவ்வர் தான் சாரே.. இன்னும் ஊரறிய பொண்டாட்டி ஆகல” என்றாள்.

 

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அவள் விசிறி எறிந்து விட்டு வந்த பொன் தாலிக்கயிற்றை அவள் முன்னால் எடுத்து அவன் காட்ட.. அந்த நிகழ்வில் அருவியாய் அவள் கண்களில் கண்ணீர்.

 

“பழிவாங்குவதற்காக உன்னை நான் சீண்டினாலும் அப்போவே என் மனசுல உன் மீதான காதல் இருந்திருக்கிறதை நான் உணரவே இல்ல.. அதனாலதான் வசீகரனுடன் உனக்கு திருமணம் என்றதும் என்னால் தாங்க முடியாமல் கோபம் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு தாலியை கட்டிட்டேன் அதுவும் பழிவாங்குதலே என்ற சப்பை கட்டு வேற” என்றவன் அவள் கண்களை பார்த்து.. “கட்டடுமா?” என்று அனுமதி கேட்க..

 

“ம்ம்ம்” என்றாள் பெண். 

அர்த்த ஜாம வேளையில்.. மழையில் நனைந்த ஈரம் இன்னும் விலகாமல் வனமோகினியான தன் வேதாவை.. வேதங்கள் சாட்சி இல்லாமல், காதல் எனும் வேதம் கொண்டு இம்முறை கைப்பிடித்தான். அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, பின் பிறை முதலில் மென்மையாக முத்தமிட்டு அக்கணத்தில் இருவருமே லயித்திருந்தனர்.

 

 

ஈரமாக இருந்த தன் சட்டையின் மீது அவள் கை வைத்து “இப்போது கழட்டி விடலாம் தானே” என்றான்.

 

 பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றினாள் அவனின் வேதா. அவளது தொடுகையில் அவனுக்குள் ஒரு மோக எரிமலை குமுற ஆரம்பித்திருந்தது. அதை வெடிக்க விடாமல் பாதுகாக்க அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

 

அவனின் சட்டை பட்டன்களைக் கழற்றியவள். ஈரமாக இருந்த நெஞ்சில் அவளது பட்டுக் கரத்தை வைத்து மெதுவாக தடவினாள். அவனுக்கோ சிலிர்க்க, தன் உடல் மெல்ல நெளிந்தான். அவள் விரல்கள் அவன் மார்பின் மெல்லிய ரோமங்களை வருடின.

 

”ஏய்ய்.. வேதா என்ன பண்ற ?”

 

”ஹல்க்.. நெஞ்சுல இவ்வளோ முடி.. பொசு பொசுன்னு இருக்கு” அவளது விரல்கள் அவன் மார்பை வருடியது. அவனுக்குள் சட்டென ஒரு மின் அதிர்வு பாய.. உடல் விறைத்தது.

 

”ஷ்ஷ்.. ஏய்…வேதா.. விடுடி” தன் கைகளால் அவளது பட்டுக் கரங்களைப் பிடித்தான்.

 

அவன் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில் அவள் உதடுகளை அவன் நெஞ்சில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

 

“ஹேய்.. என்ன இது?” என்றான் சிலிர்த்து வெட்கத்தோடு.

 

”சும்மா ப்ரோ…” கண்ணடித்து சிரித்தவளின் விரல்கள் மீண்டும் மீண்டும் அவன் நெஞ்சை வருட..

 

“வேதா!!” கிறக்கமாக முனகியவன் அவள் கழுத்தில் விரல்களால் மென்மையாகத் தடவினான். 

 

அவள் சுகித்தப்படி மீண்டும் அவன் மார்பில் முத்தம் கொடுத்தாள்.

 

அவனின் மோகம் சட்டென கிளர்ந்து அவளது ஸ்பரிசத்தில் பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் கழுத்தில் வைத்த அவன் கை விரல்களில் மெலிதான அழுத்தம் கொடுத்தான். அவளது ஈர உதடுகள் அவன் மார்பெங்கும் மென்மையாக முத்தம் ஊர்வலம் போக ஆரம்பித்தன.

 

” ம்ம்ம்ம்..” முனகிக் கொண்டே அவன் இடுப்பினோடு‌ தன் கைகளை கோர்த்து அவனை அணைத்துக் கொண்டாள். அவன் மார்பில் தன் முகத்தை அழுத்தி தேய்த்தாள். அங்கங்கே முத்தம் கொடுத்து அவனைக் கிறங்க வைத்தாள்.

 

“வேதா.. வேண்டாமடி.. இன்ப அவஸ்தையா இருக்கு. அப்புறம் என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது” என்றவன் அவளது முதுகில் தன் கைகளைப் படர விட்டு தன் நெஞ்சில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, அவளது காதில் கிசுகிசுத்தான் ரகசியமாய்.. 

 

“ச்சீய்.. !!” குபீரென பொங்கிய வெட்கத்தில் சட்டென தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள். சட்டென்று பின்னால் திரும்பி.. குனிந்தபடி சிரித்து.. வட்டமடித்து சுழன்று  வந்து அவனை நேராகப் பார்த்து.. வாயைப் பொத்திக் கொண்டு முகத்தை அன்னார்ந்து “இப்படியெல்லாம் இந்த ஹல்க்கு பேச தெரியுமா?” சிரித்தாள்.

 

வெட்கத்தில் அவள் உடல் வெளிப்படுத்திய அசைவுகள்.. எத்தனை கோடி கொட்டுக் கொடுத்தாலும் நடிப்பில் கொண்டு வர இயலாது. அவள் வெட்கம் அவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. வளைந்து நெளிந்து.. ஒரு வழியாக அவள் ஆடி நின்றபோது சில நிமிடங்கள் கரைந்திருந்தன.

 

 

சிறுது நேரம் அவளின் இந்த அழகினை பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் “நான் எல்லாம் செயல் வீரனாக்கும் செயலில் இறங்குவோமா?” என்று கண் சிமிட்டி கேட்டான்.

 

நாணத்தில் கன்னங்கள் ஜிவுஜிவுக்க.. முகம் சிவந்து போய் அவனைப் பார்த்தாள் வேதா. அவளால் பேச முடியவில்லை. 

 

 

அவளின் ஈர உதடுகள் வெளிச்சத்தில் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. மிருதுவான அவளது இரு வளைக் கரங்களையும் பிடித்து மெதுவாக அவன் பக்கத்தில் நெருக்கமாக இழுத்தான். அவளின் நெஞ்சுக் கனிகள் அவன் நெஞ்சில்  உரசியது.  அவன் உடலுடன் உடல் உரச நின்றாள்.

 

“வேதா.. இது என்ன வெட்கமா இல்ல தயக்கமா??”

 

அவளின் இரு கைகளையும் எடுத்து அவன் இடுப்பின் இரண்டு பக்கத்திலும் வைக்க அவளது மெத்தென்ற கைகள் பட்டதும் அவனுக்கு ஜிவ்வென்று ஏற.. அவளோ வெட்கம் கொண்டு சிலிர்த்தாள். அவள் கைகள் மெல்ல நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

 

“ரிலாக்ஸ் வேதா..”

 

மீண்டும் ஒரு ஆதுரமான அணைப்பு.. இறுக்கமான ஒரு தழுவல்.. அவள் மூச்சுக் காற்று அவன் மார்பில் சூடாய் கோலமிட்டது. அதன் பின் அவளது ஈர உடைகள் களையப்பட, அவளோ வெட்கம் கொண்டு கட்டிலில் போர்வையால் தன்னை மறைத்துக் கொள்ள.. வெற்றி கட்டிலை நெருங்கி அவள் அழகை மறைத்த போர்வையை நீக்கினான். வசந்தம் வீசும் வாலிபத்தின்.. இளமை ரகசியத்தை தனது கைகளால் மறைக்க முயன்று தோற்றாள் நிவேதிதா.

 

நாணம் கொண்ட மாது அவனையே போர்வையாகி போர்த்தி கொள்ள.. 

அவனோ ஆழமாய் முத்தமிட்டு வாயைப் பிரித்தான். அவனுக்கும் மூச்சு வாங்கியது. அவனுடலும் லேசாக படபடத்தது. அவள் கன்னங்களை முத்தமிட்டு மெல்ல கடித்தான். அவள் சிணுங்கி திரும்ப, வலது பக்கக் கழுத்தில் முகம் புதைத்தான். அங்கேயும் மெல்லிய சத்தத்துடன் அழுத்தி முத்தமிட்டு மெல்லக் கடித்துச் சப்பினான். இதழ்களால் அவளை கொண்டாடினான். அவை முத்தங்களாகவும் சில சமயம் அங்கங்கே கடிகளாகவும்… அவள் விம்மி விம்மித் தணிந்தாள். அவள் நெஞ்சில் முகம் புரட்டி நிமிர்ந்தான்.

 

“மிஸ் யூ டி.. இந்த இரண்டு மாதம் முழுதாக எனக்கு உன்னை உணர்த்திட்டு.. நான் செய்ததை தப்புன்னு சுட்டிக்காட்டிடிச்சு” என்று அவன் வருந்த.. 

 

அவளும் அதே வார்த்தையை சொல்லத் துடித்தாள். ஆனால் தொண்டையைத் தாண்டி வார்த்தைகள் வரவில்லை. எச்சிலை விழுங்கி கண் நிறைந்த காதலுடன் அவனைப் பார்த்துக் கனிந்தாள். உள்ளத்திலிருந்து ஒரு சொல்லும் எழவில்லை. பேசும் எண்ணமே இல்லை. ஆனால் உள்ளம் அவனையே தியானம் செய்தது. இன்பத்தில் கனிந்தது போன்ற இனிய உணர்வுகளே அவளை ஆக்ரமித்திருந்தன. சொன்னால் தானா??

 

இனி வருந்த வேண்டாம் என்பதை போல அவள் அவனை ஆதூர தழுவிக் கொண்டாள்.

 

அவனது 

ஒவ்வொரு தீண்டலும் 

ஒவ்வொரு அசைவும் 

ஒவ்வொரு முத்தங்களும்  

ஒவ்வொரு அணைப்புகளும்

அவளைக் கலையும் முகிலெனக் கரைய வைத்தது. தானற்ற உணர்வுகளில் கரைந்தாள். சத்தமில்லாத நிசப்தம் மட்டுமே!! வேதாவின் சிணுங்கல்கள் மட்டுமே பேரொலியாய் இன்பமாய் ஒலித்தது வெற்றிக்கு.

 

வெற்றி அவளை காதல் கொண்டு கூடி முடித்த பிறகு அவன் மிகப்பெரும் விடுதலையுணர்வை அடைந்தான். அவனின் மன இறுக்கம் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனது. வருத்தம் வேதனை துக்கம் துயரம் எல்லாம் சுத்தமாக நீங்கியது. 

 

வெற்றி நீள் மூச்சு விட்டு தளர்ந்தபோது நிவேதிதா மிகவும் களைந்திருந்தாள். அந்தப் பெண்மைக் கசங்கலில் அவளுக்கு துளியும் வருத்தமில்லை. மனதின் சிறைகள் உடைபட்டது போல மகிழ்ச்சி பல மடங்கு கூடியிருந்தது. அவன் முற்றிலுமாக தன்னை விட்டு பிரிந்து விலகியபோது அவள் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் நடுக்கமும் வலியுமிருப்பதை உணர்ந்தவள் அல்லவா? இன்றோ தன்னவன் மீது தவறில்லை.. ராவணன் இல்லை தன் ராமனே என்று உணர்ந்த போது எல்லையில்லா மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொண்டது.

 

“வேதா.. இன்னும் கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று அவன் ஆரம்பிக்க..

 

“உஷ்ஷ்.. கொஞ்ச நேரம் தூங்குங்க.. காலையில் பார்த்துக்கலாம்” என்றாள்.

 

“தூக்கமா??” என்று குறும்பாக சிரித்தவன், அவள் மீது படர்ந்து அவளுடன்‌ கூடத் தொடங்கியபோது நெஞ்சு நிறைந்த காதலுடன் அவனைத் தழுவிக் கொண்டாள் மாது. காலோடு கூடிய உறவிது அவளின் பெண்மையைக் கனிய வைத்தது. ஒவ்வொரு அங்கத்திலும் இனித்தது. முத்தங்களும் முனகலும் மூச்சிரைப்புமாக நிகழ்ந்த ஆழமான உறவுக்குப் பின் இருவருமே சிறிது கண் சொக்கி விட்டனர். 

 

காலையில் எங்கேயோ பலமாக ரூம் தட்டப்படும் சத்தம் கேட்க “யாரோ ரூமை தட்டுறாங்க.. போய் பாருங்க” என்று வெற்றியை நிவேதிதா எழுப்ப.. “போ டார்லிங்.. என் ரூமை யார் தட்ட போறா? எனக்கு இங்கே யார் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? அது வேறு எங்கே ரூமை தட்டுறது கேட்குது” என்றவன் மீண்டும் அவளை போர்வையாக்கி துயிலில் ஆழ.. 

 

“விடுங்க!!” என்று அவனிடம் இருந்து விலகியவள் தன்னுடையை டிரஸை தேட.. அது எங்கோ காணாமல் போயிருந்தது. குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்து அவனின் சட்டையையும் ஷார்ட்ஸையும் எடுத்து மாட்டிக் கொண்டிருக்கும் போது மீண்டும் அறைக்கதவு தட்டப்பட..

 

 

‘ஒருவேளை என்னை ரூமில் காணோம்னு இங்கே யாராவது தேடி வந்திருக்காங்களோ?’ என்று கதவைத் திறக்க..

 

 

“அறிவு இருக்கா டா மச்சான்!! எவ்வளவு நேரமா வந்து கதவைத் தட்டுறது.. காலையிலே என்னைய பிக்கப் பண்ண வரேன்னு சொன்னவன்.. இங்க நல்லா தூங்கிட்டு இருக்கியலோ? இப்படியே கும்பகர்ணனா தூங்கிட்டு இருந்தா என் தங்கச்சிய கரெக்ட் பண்ண மாதிரி தான்!! “என்று கதவு திறந்தது வெற்றி என்று நினைத்துக்கொண்டு மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிக் கொண்டிருந்தது மருதுவே தான்!!

 

இங்கே மருதுவை எதிர்பார்க்காத நிவேதிதாவும்.. வெற்றியின் அறையில் அதுவும் அவனது உடையில் தங்கையை எதிர்பார்க்காத மருதுவும் திகைப்பில் நின்றிருந்தனர்.

காதலே.. காதலே…

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 23”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top