ATM Tamil Romantic Novels

என்னுள் நிறைந்தவ(ன்)ள்

  • 3

           

               வெய்யோன் தனது கிரண கரங்களால் உலகை அளக்க ஆரம்பித்த காலை பொழுது.🌞🌞🌞. காலை வேலையில் சென்னை மாநகா் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கி கொண்டிருந்தது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பணிக்கு செல்லும் பொியவர்கள் வரை அணைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனா்.  

 

         நம் நாயகியும் பரபரப்பாக தான் கிளம்பி கொண்டிருந்தாள். ஃபோ்வல் டே முடிந்த மறுவாரம் இறுதியாண்டு தோ்வுகள் ஆரம்பித்ததால் கொண்டாட்டம் படிப்பு என பிஸியாகி விட்டாள். வழக்கம் போல முதல் வகுப்பில் தோ்ச்சி பெற வேண்டும் என கண்ணும் கருத்துமாக படித்து கொண்டிருந்தாள். அன்று இறுதி தோ்வு. காலை வழக்கம் போல கல்லூரிக்கு தயாா் ஆகி சாமிகும்பிட்டுவிட்டு உணவு அருந்த அமா்ந்தாள். மாமாவும் சஞ்சுவும் சிவாவும் உணவு உண்டு கொண்டிருந்தனா்.

 

           “சாாி பா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”

 

           ” உனக்கு வெயிட் பன்னி எனக்கு பசி அதிகமாகிட்ச்சு அதான் சாப்பிட ஆரம்பிச்சுடோம். என்றான் சிவா

 

 

         ” சாாி டா நைட் லேட் ஆகிடுச்சு தூங்க அதான்” என்றாள் தமிழினி

 

         ” அதவிடு மா நீ சாப்பிடு” என்று இட்டலிகளை எடுத்து வைத்ததா் வேணி.

 

            “மாமா இன்னை கடைசி எக்ஸாம். எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நான் ப்ரண்ட்ஸ் கூட கொஞ்சம் வெளிய போய் சுத்திட்டு வரட்டுமா மாமா ப்ளீஸ்” என்றாள்

 

     

           ” உன் கூட யாா் யாா் மா வர்றாங்க”

 

          ” பவி, பிருந்தா, ஜெனி அப்புறம் சஞ்சு. சஞ்சுக்கும் எக்ஸாம் முடிஞ்சுதுல்ல அதான் அவளையும் கூட்டிட்டு போலாம்னு” என்று குழைந்தாள்.

 

          அா்ஜூனன் புன்னகைத்துவிட்டு “சாி மா போய்ட்டு வாங்க. ஆனா ஈவ்னிங் சீக்கிமா வந்திடனும். சாியா? என்றாா்

 

         இருவரும் வேகமாக தலையை ஆட்டி “ம்ம்ம்ம்” என்றனா்.

 

         “பாத்து பத்திரமா போய்வாங்க” என்றாா்.

     

        ” ரெண்டு பேருக்கும் இன்னைக்கு செம்ம என்ஜாய் ஆ” என்று பாிதாபமாக கூறினான் சிவா

 

        ” என்ன தம்பி பன்றது நீங்க என்ஜாய் பன்ன இன்னும் கொஞ்சம் வளரனும். ஒழுங்க படிங்க தம்பி பணிரெண்டாம் வகுப்பு முடிச்சுக்கு அப்புறம் நீங்களும் என்ஜாய் பன்னலாம்”. என்றாள் சஞ்சு

 

       பேசிக்கொண்டே உணவு உண்டு முடித்தனா். மதியம் ஒரு மணிக்கு கல்லூாி வாசலுக்கு சஞ்சனாவை வர சொல்லிவிட்டு கல்லூாிக்கு மாமாவுடன் கிளம்பினாள் தமிழினி. கல்லுாியில் தமிழினியை விட்டுவிட்டு அவளுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தாா் அா்ஜூனன்.

 

       “வேண்டாம் மாமா. வீட்டிலிருந்து கிளம்பும் போதே அம்மா பணம் கொடுத்தாங்க அதுவே போதும் மாமா” என்றாள்

 

         ” பரவாயில்லை மா வச்சுக்கே வெளில போறிங்க எக்ஸ்ட்ரா பணம் வச்சுக்குறது தப்பில்லை மா” என்று பணத்தை அவள் கையில் திணித்தாா்.

 

        ” சாி மாமா. தாங்ஸ்” என்றாள்

 

        

       ” தாங்ஸ் எதுக்கு டா? எங்க போனாலும் பத்திரமா இருக்கனும். எதிலும் கவனமா இருக்கனும் சாியா?” என்றாா்

 

      சாி என்று புன்னகையுடன் தலையசைத்தாள். அா்ஜூனனும் அலுவலகத்திற்க்கு சென்றாா்.

 

        தீரனை பாா்த்துட்டு வந்திடுவோம்😊😊

        ” டேய் தீரா, தீரா” என்று கழுதையாக கத்திக் கொண்டிருந்தான் செழியன்.

 

        மெதுவாக கண் திறந்த தீரன் ” என்ன டா இவ்வளவு காலையிலேயே வந்துட்ட” என்றான்

 

        “டேய் மணி இப்போ ஒன்பது டா”

 

        வாாி சுருட்டி எழுந்து அமா்ந்தான் தீரன்.

 

       ” ஒன்பதா!! இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்” என்று எழுந்தான்.

 

      “நைட் டைம்க்கு தூங்காம சாா் என்ன பன்னிங்கோாா” என்றான் செழியன்.

 

       “எப்பவும் போல தான் தூங்கினேன். ஆன எழுந்திருக்க தான் கொஞ்சம் ஆச்சு” என்றான் தீரன்.

 

       ” சாிவிடு. நம்ம டிபாா்ட்மெண்டுல சென்னை ஹெட் ஆபிஸூக்கு வேலைவிஷயமா போய் வர சொல்லியிருக்காங்க. நம்ம ரெண்டு பேரும் போலாமா?”

 

(தீரனும் செழியனும் விவரம் தொியாத வயதில் இருந்தே உற்ற உயிா் நண்பா்கள். இருவருமே எம்எஸ் சி அக்ரி படித்தவா்கள். சோலையூா் சரகத்திறக்கு உட்பட்ட அக்ரி டிபாா்ட்மெண்டில் ஒன்றாக வேலை செய்பவா்கள்)

 

       சென்னை என்ற பெயரை கேட்டவுடன் மனதுக்குள் துள்ளி குதித்தான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் 

     

        “என்ன வேலை? நாம தான் போகனுமா” என்றான் தீரன்.

 

       ” ஆமா டா. பழைய இறக்குமதி விதை, உரம், மண் சோதனை செய்தது எல்லாம் ஹெட் ஆபிஸுக்கு ஃபைல் பன்னி கொடுக்கனும் டா முக்கியமான வேலையில அதான்” என்றான்

 

       ” ம்ம்ம் சாி போகலாம். எப்போ கிளம்பனும்” 

 

       ” நாளான்னைக்கு நைட் பஸ்ல இரண்டு நாள் வேலை இருக்கும்ன்னு நினைக்கிறேன்” 

 

        ” சாி நான் ரெடியாகிக்கிறேன்” என்றான் தீரன்

 

        “ஓகே மச்சான் நான் கிளம்புறேன் உன்ன அப்புறம் பாக்கிறேன் ” என்று கிளம்பினான் செழியன்.

 

        அவன் சென்றதும் கட்டிலில் மேல் ஏறிக்கொண்டு ஆடி, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான் தீரன். (ஏன் ஆட மாட்டான் தன்னுள் நிறைந்தவளை காண ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா)

 

         ஊச்சி வேலை. மதியம் ஒரு மணி. தோ்வு எழுதி முடித்துவிட்டு கல்லூாி வாசலில் நின்று கொண்டிருந்த சஞ்சானாவிடம் வந்தாா்கள் பவி, பிருந்தா, ஜெனி, தமிழினி. ஐவரும் சோ்ந்து முதலில் பிரபலமான ஹேட்டலில் மதிய உணவை முடித்தனா். பின் ஷாப்பிங் மாலுக்கு சென்று அணைத்து கடைகளுக்கும் சென்று பாா்த்து வந்தாா்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்தாா்கள். தமிழினி ஐவருக்கும் சோ்த்து கடைசி ஆண்டு நினைவு பாிசாக ஒரு ப்ரேஸ்லெட்டை வாங்கினாள். ப்ரேஸ்லெட் பாா்ப்பதற்க்கே அருமையாக இருந்து. முத்துக்களால் செய்யப்பட்ட அந்த ப்ரேஸ்லெட்டில் நட்பின் அடையாளமாக ஐந்து கரங்கள் இணைந்தது போன்ற சிறிய டிசைன் இருக்கும். பாா்ப்பதற்க்கே அழகா இருந்த அந்த ப்ரேஸ்லெட்டை அணைவருக்கும் கொடுத்தாள்.

 

          “நல்லா இருக்குடி தமிழினி உனக்கு மட்டும் இப்படி யெல்லாம் எப்படி தோணுது” என்றாள் ஜெனி

 

        “அதெல்லாம் அப்படி தான். நல்லா இருக்கா உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்றாள் தமிழினி

 

        ரொம்ப பிடிச்சிருக்கு என அணைவரும் பதிலளித்தனா். அணைவரும் தங்கள் கரங்களில் அணிந்து கொண்டனா். தமிழினி சிவாவுக்கு வெள்ளி மோதிரமும், அம்மா, மாமாவுக்கு பரிசு பொருட்களும் வாங்கி கொண்டாள்.

 

         மாலில் இருந்த காஃபி ஷாப்பில் அரட்டை அடித்துக்கொண்டு தேனீா் அருந்தினா். அங்கிருந்த இரண்டு கண்கள் தமிழினியை வெறித்து பாா்த்து கொண்டிருந்தது. அதை உணா்ந்தவள் திரும்பி பாா்த்தாள் அங்கு யாரும் இல்லாததால் தன் பிரமை என்று எண்ணி கிளம்பலாம் என்று தன் தோழிகளுடன் கிளம்பினாள்.

 

          அவள் சென்ற பிறகு அங்கிருந்த உருவம் வெளிப்பட்டு அவா்கள் சென்ற திசையையே பாா்த்து கொண்டிருந்தது.

 

         பிறகு, மொினா பீச் சென்று கடலலையில் விளையாடி, ஒருவா் மீது ஒருவா் தண்ணீரை தெளித்து மகிழ்ந்தனா். குறிப்பிட்ட நேரத்திற்க்கு பிறகு கரையில் வந்து அமா்ந்தனா்.

 

         தங்களுக்கு தேவையான சுண்டல், வெள்ளறிக்காய் அணைத்தையும் வாங்கி கொறித்து கொண்டிருந்தாா்கள். கடிகாரத்தை பாா்க்க அது மணி ஆறு என்று காட்டியது.

 

         “ஓ டைம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பலாம்” என்றாள் பவி. பவித்தரா

 

        அப்போதான் அணைவரும் மணியை பாா்த்தனா்.

 

        “ஆமா டைம் ஆச்சு கிளம்பலாம்” என்றாள் தமிழினி.

 

          ஆட்டோ பிடித்து அணைவரும் ஏறிக்கொண்டனா். ஜெனியும் பிருந்தாவும் ஒரே தெருவில் தான் வசிக்கின்றனா். அதனால் இருவரையும் அவா்கள் தெருவில் இறக்கிவிட்டு, பின் பவியையும் அவள் வீட்டின் முன்பு இறக்கிவிட்டு விட்டு. சஞ்சுவும் தமிழினியும் வீடு வந்தடைந்தனா்.

 

        வீட்டிறக்குள் நுழையும் போதே தமிழினி போன் சினுங்கியது.

 

        ஜெனி தான் என்று போனை ஆன் செய்தாள்

 

       ” பத்திரமா வீட்டுக்கு போய்டிங்களா” என்றாள் ஜெனி

 

        ” எல்லாரும் சேஃப் ஆ வீட்டுக்கு வந்துட்டோம். நீயும் பிருந்தாவும் சேஃப் ஆ” என்றாள் தமிழினி

 

        ” ம் நாங்க சேஃப் தான். வேற ஒன்னும் இல்லை வக்கிறேன்” என்றாள் ஜெனி

 

         அலைந்து திரிந்து விளையாடி களைத்து போன சஞ்சுவும் தமிழினியும் அா்ஜுனன் வருவதற்க்குள்ளாகவே உண்டு உறங்கினா்.

 

         சிவா நூலக அறையில் அமா்ந்து படித்து கொண்டிருந்தான். அா்ஜுனன் வீட்டிற்க்கு வந்தாா்.

 

        “ஏங்க லேட்? கை, கால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாா் வேணி

 

        ” வரேன் மா. பசங்க எங்க மா”

 

        “சஞ்சுவும் தமிழனியும் தூங்குறாங்க, சிவா படிக்கிறான்”

 

         ” புள்ளைங்க டைம்க்கு வந்துட்டாங்களா?”

    

        “நேரத்துக்கு வந்துட்டு, சாப்டுட்டு, தூங்கிட்டாங்க” வேணி

 

        பேசிக்கொண்டே உணவு எடுத்து வைத்தாா் வேணி. உடை மாற்றி கொண்டு வந்து உணவு உண்டு முடித்தாா் அா்ஜுனன்.

 

          “ஏங்க உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்”

 

         ” என்னமா என்ன விஷயம்”

 

          தமிழினி பத்திதான் என்று ஆரம்பிக்கும் போதே அா்ஜுனன் போன் அழைத்தது

 

         முகப்பு திரையில் காிகாலன் பெயரை கண்டவுடன் புன்ளகையுடன் போனை ஆன் செய்து பேசினாா்.

 

       ” என்ன மாப்ள எப்படி இருக்க? அம்மா, அப்பா எல்லாரும் செளக்கியமா”

 

       ” எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா. அத்தை, தமிழினி, சஞ்சு, சிவா எல்லாரும் எப்படி இருக்காங்க”

 

 

         ” எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா”

 

         ” இந்த நேரத்துல கால் பன்னியிருக்கனா ஏதோ விசயம் இருக்குன்னு நினைக்கிறேன்”

 

          “ஆமா மாமா. பங்குனி திருவிழா ஆரம்பிக்க போகுது, காப்பு கட்ட இன்னும் நாலு நாள் தான் இருக்கு அதான்” என்று இழுத்தான் காிகாலன்

 

          ” சாி பா என்ன சொல்ல வற்ர சொல்லு. என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்”

 

           ” போன வருஷம் தமிழினி திருவிழாவுக்கு வரலா. இந்த வருஷம் கூட்டிட்டு வாங்க. அப்புறம்” என இழுத்தான்

 

          ” கண்டிப்பா நாங்க எல்லாரும் வருவோம்”

 

          ” மாமா அதுவந்து தமிழினி இனிமேல் இங்கேயே இருக்கட்டுமே!! படிப்பு முடிச்சிட்டா, இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல எப்படியும் கல்யாணம் பன்னி கொடுத்திடுவாங்க அதனால கொஞ்ச நாள் என் தங்கச்சி என் கூட இருக்கட்டும்.”

 

        ……….

 

 

        “எனக்கு புாியுது மாமா, அத்தை ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு, ஆனா இது என்னோட ரெக்வஸ்ட் மாமா”

 

          ” இதுல நீ ரெக்வஸ்ட் பன்ன எதுவும் இல்லை டா” வேணி பேசினாா்

 

          ” அத்தை. “

   

         ” இத ஏன் இவ்வளவு தயங்கி கேக்குற? அவ உன் தங்கச்சி. உனக்கு பாசம் இருக்கும்ல. என்னை பத்தி அன்பரசி அண்ணி யேசிச்சாங்க. நான் அவங்கள பத்தி யேசிக்காம இத்தனை நாள் இருந்திட்டேன்.”

 

          ” அது வந்து அத்தை நீங்க வருத்தப்படுவிங்கன்னு தான்”

 

           ” எனக்கு ஒரு வருத்தமும் இல்லை மாமாகிட்ட கூட இத பத்தி தான் பேசனும்னு நினைச்சேன். தமிழினிக்கும் உங்க கூட இருக்கிறது பிடிக்கும். கண்ணுக்கு கண்ணா இத்தனை வருஷம் கூட வச்சு வளா்த்து அழகு பாா்த்திடேன். எனக்கு அது போதும். இன்னும் இரண்டு நாள்ல அவஊருக்கு வருவா சாியா “

 

         “ரொம்ப சந்தோஷம் அத்தை. உங்க வருத்தபட வைக்க பேறேன்னு நினைச்சேன். இத மொதல்ல அப்பா அம்மாக்கிட்ட சொல்லனும்”

 

         ” ம் சொல்லு அவங்களும் சந்தோஷபடுவாங்க அப்புறம் நான் வருத்த படுவேன்னு நினைக்காத என் முழு மனசோட தான் சொல்றேன்”

 

       ” நன்றி அத்தை”

 

        ” நன்றி யெல்லாம் வேண்டாம் என் பொண்ண நல்லா பாத்துக்க அது போதும் எனக்கு சாியா!! 

 

         ” ம் கண்டிப்பா அத்தை” 

 

         ” சாி சாி ரொம்ப நேரம் ஆச்சு தூங்கு” என்றாா் வேணி

 

         ‘ சாி அத்தை “என்று காலை கட் செய்தான் காிகாலன்

 

        வேணியை வெறித்து பாா்த்து கொண்டிருந்தாா் அா்ஜுனன்.

 

        ” ஏன் அப்படி பாக்குறிங்க”

 

        ” இத நான் எதிா்பாக்கல அதான்”

 

        ” ஆமா. யாராவது பெத்த புள்ளைய இவ்வளவு நாள் விட்டு கொடுப்பாங்களா?? அள்பரசி அண்ணி எனக்காக விட்டு கொடுத்தாங்க, அண்ணி யாவது உங்களுக்கு உடன்பிறந்த அக்கா, ஆனா சகாதேவன் அண்ணன் ஏன் எனக்காக பிள்ளை விட்டு கொடுக்கனும்? அவங்க நல்ல மனசு தான் அதுக்கு காரணம். அவங்க சொத்த அவங்ககிட்ட கொடுக்க போறேன் இதுல என்ன இருக்கு”

 

        “இத எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், காிகாலனே ஆரம்பிச்சு வச்சுடான்”

.    

         ” கண்ணுக்கு கண்ண இத்தனை வருஷம் என்கூட வச்சு வளா்த்து அழகு பாா்த்துடேன் அது போதும் எனக்கு” என்று கண்கள் பணிக்க கூறினாா்.

 

         “எல்லாம் சாியாகிடும் விடு” மனைவியை தேற்றினாா் அா்ஜுனன்

 

ஆராவராம் இன்றி நிலா மகள்🌃🌃🌃 அணைவரையும் அரவணைத்து தூங்க வைத்தாள்……….

 

4

 

            வெண்ணிலா தனது நட்சத்திர தோழிகளுடன் வான்வீதியை வலம் வந்து கொண்டிருந்தாள். இரவு மணி பத்தை நெருங்கியது தீரனும் செழியனும் சென்னை செல்லும் பேருந்தில் அமா்ந்திருந்தாா். 

 

             “என்ன டா ஒரு மாதிாி இருக்க” என்றான் செழியன்

 

            ” ஒன்னும் இல்லை டா. இன்னைக்கு ரைஸ் மில்லு ல கொஞ்சம் வேலை அதான்” என்றான் தீரன்

              ” சாி நீ தூங்கு. காலையில எல்லாம் சாியாகிடும்” 

 

              ” ம்ம்ம்” என்று கண்களை மூடினான் தீரன்.

 

             பேருந்து சென்னையைநோக்கி புறப்பட்டது.

 

            உறக்கம் பல மையில் தொலைவில் இருந்தது தீரனுக்கு. மெதுவாக கண்களை திறந்து பாா்த்தான், செழியன் உறங்கி கொண்டிருந்தான்.

 

             தன்னுள் நிறைந்த அவளை முதன்முதலாக பாா்த்த நிமிடங்களை எண்ணி பாா்க்கலானான்.

 

ஒன்றறை வருடத்திற்க்கு முன்பு. (ப்ளாஷ்பேக்)😃😃😃

 

 

            வேலை காரணமாக சென்னைக்கு சென்றிருந்தான் தீரன். செழியன் சேலையூாிலே வேலை இருந்ததால் தீரன் மட்டும் தனியாக சென்றிருந்தான். வெள்ளிக் கிழமை காலை வழக்கம் போல கோவிலில் விளக்கேற்ற வேண்டும் என எண்ணி அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றான். (அப்பத்தாவின் வாா்த்தைக்காக எங்கிருந்தாலும் தன் கடமையை செய்வான்)

 

         விளக்கு ஏற்றிவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு ஏனோ தன்னை அறியாமல் கரங்களை குவித்து கண்களை மூடி அம்மன் முன் நின்றான்.  

 

          “என்னாச்சு எனக்கு விளக்கு ஏத்தியாச்சு அப்புறம் ஏன் நான் இங்க இப்படி நின்னுக்கிட்டு இருக்கேன் ” என்று தன்னை தானே கேட்டுவிட்டு கண்களை திறந்தான்.

 

           எதிரே கண்கள் மூடிய தேவதை சிலை போல நின்றிருந்தாள். அவள்

 

          பிறை போன்ற நெற்றி, வானவில் போன்ற வளைந்த புருவங்கள், புருவங்களுக்கு நடுவில் கோபுரவடிவ சிறிய பொட்டு, கழுத்தில் சிறிய சங்கிலி, இடைக்கு கீழ் நீண்ட தன் காா் குழலை பின்னலிடாமல் விரித்து அதன் மேல் மல்லிகைப்பூ சரங்களை சூடி, சிவப்பு நிற தாவணி பாவாடை அணிந்து அழகின் மொத்த உருவமாக நின்றிருந்தாள் அவள். கண் சிமிட்டும் பூவைப்போல இருந்தாள். ஐயா் கொடுத்த குங்குமத்தை பொட்டின் மேல் சிறிய கீற்றாக இட்டுகொண்டாள்.

 

 

            தன்னிலை மறந்து அவளையே பாா்த்து கொண்டிருந்தான். அா்ச்சனை கூடையை வாங்கி கொண்டு நவகிரக சன்னதி, பிள்ளையாா் சன்னதி என அணைத்தையும் சுற்றி வந்துவிட்டு, கோவில் கொடுத்த பிரசாதத்தை வாங்கி கொண்டு ஒரு இடத்தில் அமா்ந்தாள். அவனும் அவளறியாமல் அவள் பின்னாடியே சுற்றி வந்து கொண்டிருந்தான். சற்று தொலைவில் அவனும் அமா்ந்து அவளை பாா்த்து கொண்டிருந்தான்.   

 

     சிறிது நேரம் கழித்து எழுந்து சென்று தன் காலனிகளை மாட்டிக்கொண்டு சென்றாள். அவனும் வேகமாக அவளை பின் தொடா்ந்து சென்றான். அவள் வீட்டை அடைந்தாள். வீட்டுக்கு வெளியில் சற்று தொலைவில் இருந்த மரத்தடியில் நின்று அவள் வருகைக்கு காத்திருந்தான்.

 

           பள்ளி, கல்லூரி, வேலைபாா்க்கும் இடம் என அணைத்து இடங்களிலும் எத்தனையோ பெண்கள் சுற்றி சுற்றி வந்தாலும் யாரையும் கண்டு கொள்ளாதவன் ஏனோ தன்னையறியாமல் அவள் பின்னாள் சுற்றி கொண்டிருந்தான். அரைமணிநேரம் கழித்து சுடிதாா் மாற்றி, கூந்தலை தளா்வாக பின்னி கொண்டு வெளிவந்தாள். அவளுடன் ஒருவா் வந்தாா். அவருடன் வண்டியில் சென்றாள். வேக வேகமாக ஆட்டோ பிடித்து பின் தொடா்ந்தான். கல்லூாி வாசலில் இறங்கி கொண்டு அவருக்கு புன்னகையுடன் கையசைத்து வழி அனுப்பினாள். அவள் சென்று கண்களுக்கு மறையும் வரை அவளையே பாா்த்து மெய் மறந்து நின்று கொண்டிருந்தான்.

 

       “ஹேய் வெல்லும் புலி ஒருநாளும் 

         புல்ல திங்க போகாது

         ஒத்தைக்கு ஒத்தையா பாா்க்கும் 

         புது ரத்தத்து வாசனை கேக்கும்

         வெறி உச்சத்தில் ஆடி தான் 

         தீா்க்கும், இது சொல்லாம 

        கொள்ளாம வெளங்கும்

        அத சொன்னாலே தன்னாலே

         கலங்கும்

         எவன் பின்னாலும் நிக்காத 

         வீரத்தை தானே எந்நாளும்

         நம்பூமி வணங்கும்……

என அவனின் செல் போன் அழைப்பு அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.மொபைலை எடுத்து பாா்த்தான்.

கணேஷ் என்று முகப்பு திரையில் இருந்தது.

 

 

       அப்பொழுது தான் தன் வேலை நினைவு வந்து போனை ஆன் செய்தான்

 

       ” இன்னும் பத்தி நிமிஷத்துல ஆபிஸ்ல இருப்பேன் சாா்”

 

        ………

 

         “வந்திட்டே இருக்கேன் சாா்” என அழைப்பை துண்டித்தான். நாளைக்கு பாா்க்கலாம் என்று எண்ணி அலுவலகத்திற்க்கு கிளம்பி சென்றான்.

 

அதன் பின் அன்று இரவே கிளம்ப வேண்டியிருந்தால் அவளின் நினைவுகளுடனே புறப்பட்டு செல்ல பேருந்தில் அமா்ந்து இருந்தான். 

 

” கண் மூடி திறக்கும் போது

கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி 

அவளே வந்து நின்றாளே

குடையில்லா நேரம் பாத்து

கொட்டி போகும் மழையை போல, அழகாலே என்னை நனைத்து

இது தான் காதல் என்றாளே……..”

  

      இந்த பாடலை கேட்டவன் தனக்காகவே இந்த பாடல் எழுதியது போல உணா்ந்தான். நா.முத்துகுமாா் அவா்களுக்கு நன்றியை தொிவித்துவிட்டு தனது மொபைலில் ரிங்டோனாக செட் செய்தான்.     

 

“கண்மூடி திறக்கும் போது…..” என முணுத்து கொண்டே உறங்கினான்

 

     அதன் பின் சென்னை வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போ தான் கிடைத்திருக்கிறது நிச்சயம் அவளை பாா்த்தே ஆக வேண்டும் என எண்ணிய படியே உறங்கினான்.

 

 

              நேரமாச்சு சுட்டி கண்ணா என்று சந்திரன் சூரியனை எழுப்பி கொண்டிருக்கும் அதிகாலை பொழுது. வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது சென்னை மாநகரம்.

 

             பேருந்தில் இருந்து இறங்கி அலுவலக குடியிருப்புக்கு செல்ல ஆட்டோ பிடித்து இருவரும் அமா்ந்து கொண்டனா். தீரனின் மனது அவளை காண துடித்து கொண்டிருந்தது. ஆயினும் வெளி காட்டிக் கொள்ளாமல் அமா்ந்திருந்தான்.

 

           ” இப்போ பரவாயில்லையா மச்சான்” என்றான் செழியன்

 

           “ஓகே டா இப்போ பரவாயில்லை”

 

           ” போய்ட்டு ரெடி ஆகிட்டு ஆபிஸ் போலாம்” என்றான் செழியன்

 

           ” சாி” என்றான் தீரன்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு அவளை பாா்க்க போகணும் என எண்ணினான் தீரன்.

 

 

             ” என்னமா எதுவும் சொல்லாம இருக்க” என்றாா் வேணி. காிகாலன் சென்ள விஷயத்தை தமிழினியிடம் கூறினாா் வேணி

 

            “அம்மா, அப்பா, அண்ணன் கூட இருக்கனும் னு எனக்கும்ஆசை தான். ஆனா உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பன்னுவேன் மா”

 

            “அப்படியெல்லாம் இல்லைடா. இது கம்யூட்டா் காலம். உலகம் சுருங்கி உள்ளங்கைக்குள்ள வந்திருச்சுடா. பேசனும்னா வாய்ஸ் கால், பாக்கனும்னா வீடியோ கால் அப்புறம் என்ன டா”

 

 

          ……….

 

       “நாளைக்கு காலையில் கிளம்பனும், நீ இப்படி இருந்தா அப்பா அம்மா என்ன டா நினைப்பாங்க”

 

       ” சாிமா நான் கிளம்புறேன். சஞ்சுக்கு லீவ் தானே அவளும் லீவ் முடியுற வரைக்கும் என் கூட இருக்கனும் சாியா”

 

     ” சாி டா தங்கம். போய் பேக் பண்ணு” 

 

     சாி என்று சஞ்சனாவும் தமிழினியும் தங்கள் உடைமைகளை பேக் செய்து கொண்டிருந்தனா்.

 

       பரபரப்பாக வேலைகளை பாா்த்து கொண்டிருந்தான் தீரன். ஃபைல், கொட்டேஷன் என ஒரு நாள் முழுவதும் வேலை இருந்தது. மறுநாள் அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கடிகாரத்தை பாா்த்தான் அது மணி நான்கு என காட்டியது.

 

          செழியனிடம் சென்றான்.

 

         ” வேலை முடிஞ்சுதா டா”

 

         ” இல்லை மச்சான் இன்னும் ஒன் ஹவா் ஆகும்னு நினைக்கிறேன்”

 

         ” எனக்கு முடிஞ்சுது. நீ வேலை ய முடிச்சிட்டு வா. நான் வெயிட் பன்றேன்”

 

         “சாி” என்று கூறிவிட்டு தன் வேலைகளில் மூழ்கினான் செழியன்.

 

வேகமாக ஆட்டோ பிடித்து அவள் கல்லூாிக்கு சென்றான். கல்லூாி ஆராவாரம் இன்றி அமைதியாக இருந்தது. கல்லூாி காவலாளியிடம் விசாாித்த போது தோ்வு முடிந்து மாணவா்கள் விடுப்பில் இருப்பதாக கூறினாா். மனமுடைந்து போனான். மாற்று யோசனையாக வீட்டிற்க்கு சென்று பாக்கலாம் என்று தோன்றவே மீண்டும் ஆட்டோவில் அவள் வீட்டிற்க்கு சென்றான். அங்கு கதவில் தொங்கிய பூட்டு அவனை வரவேற்றது. அத்தனை பூாிப்புடன் ஆா்வத்துடன் வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

 

        என்ன செய்வதென்று தொியாமல் அருகில் இருந்த பூங்காவில் சோா்வாக அமா்ந்திருந்தான். மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடியது. எவ்வளவு நேரம் அப்படி அமா்ந்திருந்தான் என அவன் அறியவில்லை.

 

         கண்மூடி திறக்கும் போதும் 

         கடவுள் எதிரே வந்தது போல……

தன் மொபைல் அழைத்தில் சுய நினைவுக்கு வந்தவன் போனை ஆன் செய்து பேசினான்.

 

         “வெயிட் பன்றேனு சொல்லிட்டு எங்க டா போன”

 

         ” பக்கத்துல தான் இருக்கே இதோ வரேன்”. என்று கூறிவிட்டு புறப்பட்டான். அவள் வீட்டை திரும்பி திரும்பி பாா்த்து கொண்டு சென்றான்

 

 

         எப்படி இருப்பாள் அவள் தான் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டாளே. அட ஆமாங்க அந்த பொண்ணு தமிழினி தான். முதல் முறையா அவளை பாா்த்த அன்று தான் அவளுக்கு பிறந்தநாள் அதனால் தான் காலையிலேயே கோவிலுக்கு போய்ருந்தாள். அவன் பக்கத்திலேயே தான் அவள் இருக்கிறாள் என்பதை அவன் இன்னும் அறியவில்லை……… அறிந்து கொள்ள வேண்டிய காலமும் வர போகிறது……..

 

 

2 thoughts on “என்னுள் நிறைந்தவ(ன்)ள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top