காலை மணி நான்கு.திருச்சி மாநகரின் ஒரு அமைதியான பகுதியில் அமைந்த “கோகுலம் இல்லம் “
1200 சதுர அடி வீடு 2400 மனையில் கோமதி குளித்து விட்டு சுப்ரபாதம் ஒலிக்க விட்டாள் தன் கை பேசியில் .. அனைத்து சுவாமி பாடல்களையும் கேட்டுக்கொண்டே அனைவருக்கும் காலை ,மதிய உணவை சமைத்து வைத்து விடுவாள்.
இவளுக்கு டப்பா கட்டி வைத்து விட்டு , அம்மாவுக்கு வேண்டிய பணிவிடையை செய்வாள்.
அதற்குள் மணி 9 ஆகி விடும் . MD அலுவலகம் செல்லும் வழி என்பதால் இவளை தன் உடனே அழைத்து செல்வார். பின் மாலை வீட்டில் விட்டு விடுவார். அதனால் இவளுக்கு பஸ்சில் ஏறும் பிரச்னை இல்லாமல் இருந்தது. திருமணம் ஆகவில்லை இன்னும் .. ஆனால் வயது 25 ஆகி விட்டது..
அப்பா ஒரு வெகுளி அவரு அரசு அலுவலகத்தில் நேர்மையான வேலைக்காரர். அனைவரது வேலைகளையும் இவர் தலையில் கட்டி விடுவார்கள். அதனால் இவரால் சம்பளத்தை தவிர வேறு எதையும் வீட்டுக்கு கொண்டு வர முடிவதில்லை. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருப்பார். மற்றவர்கள் டான் என்று ஐந்து மணிக்கு கிளம்பி விடுவார்கள். இவர் மட்டும் அலுவலகமே கதி என்று வகை போய் விட்டதால் வீட்டை சுத்தமாக கவனிக்க முடியாமல் போய்விட்டது.
இவரின் பெரிய பெண் தன் நம் கோமதி. அழகிதான். ஆனாலும் படிக்கச் வைக்க பணம் இல்லாததால் ஒரு அரசு கல்லூரியில் BA English படித்தாள். அது தன் இவளுக்கு கிடைத்தது. நன்றாக படிக்கச் கூடியவள் தன் என்றாலும் ஒரு விபத்து ஏற்பட்டு அம்மா படுத்து விட்டதால் வீடு பொறுப்பு முழுதும் இவள் தன் பார்த்து கொள்ள கூடிய சூழல்.
ஒரு தனியார் நிறுவனத்தில் ரிஷப்சனிஸ்ட் . சம்பளம் இப்போது 40000 .
அதுவும் இவளுடைய ஆங்கில உச்சரிப்புக்காக கிடைத்தது. நிறுவனத்தின் அனைத்து வெளிநாட்டு பரிமாற்றங்கள் இவள் மட்டுமே பார்ப்பதாலும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பரமசிவம் இந்த தொகையை கொடுக்கிறார். இவருக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் இவளுடைய ஆங்கிலம் இவளுக்கு சோறு போட்டது.
கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனம் இது. 10 பேருடன் ஆரம்பித்த நிறுவனம் இன்று 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்.
ஒரு முறை வியாபார விஷயமாக இவர் சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. இவள் தன் அவருடன் சென்றாள். அவர் தமிழில் சொல்வதை இவள் ஆங்கிலத்தில் சொல்லி விடுவாள். மேலும் இவளது அணுகு முறையும் எல்லோர்க்கும் பிடித்து போக வியாபாரம் கைக்கு வந்தது.
இவளுக்கு 5 ச்வரனில் ஒரு செயின் பரிசளித்தார். இவள் ராசியானவள் என்று பெயர் எடுத்து விட்டாள். அதனால் பரமசிவம் ஐயாவுக்கு எப்போதும் இவள் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. அலுவலக ரகசியம் அனைத்தும் இவளுக்கு சொல்லுவார். இன்று வரை இவள் வழியாக யாருக்கு அந்த ரகசியங்கள் பரவியதில்லை.
கோமதிக்கு இரண்டு தங்கைகள் ரம்யா BE படிக்கிறாள். கவிதா பிளஸ் டூ படிக்கிறாள் .
அம்மா சரியாக இருந்து இருந்தால் இவளுக்கு இன்னேரம் திருமணம் நடத்தி வைத்து இருப்பார். அப்பா தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். மேற்கொண்டு எதுவுமே கண்டுகொள்ள மாட்டார்.
கோமதியால் தான் அவளது முயற்சியால் தான் தங்கைகள் படிக்கிறார்கள்.
ரம்யாவுக்கு தான் தான் உலக அழகி என்று நினைப்பு. எப்போதும் தன்னை அலங்கரித்து கொள்ளவதிலேயே நேரம் அவளுக்கு போய்விடும்.
சின்னவள் கவிதா ஓரளவு அக்கா கஷடம் தெரிந்து உதவி செய்வாள்.
ஒரு நாள் முதலாளி இவள் வீடு பற்றி கேட்டு அவள் கஷ்டம் புரிந்து கொண்டு அவ்வப்போது இவளுக்கு ஒரு போனஸ் தொகை கொடுப்பார்.
அது அம்மாவின் வைத்திய செலவுக்கே பத்தாது.சொந்த வீடாக இருப்பதால் ஏதோ வாழ்க்கை சக்கரம் ஓடுகிறது.
அலுவலக்தில் இவள் குடும்பம் பற்றி தெரியும் என்பதால் யாரும் இவளை காதலிக்க துணியவில்லை.
ஒரு நாள் முதலாளி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் , அவரது ஒரே மகன் கார்த்திக்கை நிறுவனத்தை பார்த்துக்கொள்ள சொல்லி அனுப்பி இருந்தார்.
நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபார பரிமாற்றங்கள் குறித்து அவனுக்கு புரிய வைத்தாள். அவனும் MBA படித்து விட்டு வந்ததால் சுலபமாக கற்று கொண்டான்.
ஆனாலும் அவனுக்கு பொறுப்பு சுத்தமாக வராது. அப்பா வரும் வரை தானே என்று அலட்சியமாக இருந்தான்.
ஒரு வாரம் ஒழுங்காக வந்தான் . அதன் பின் இவளையே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போய் விடுவான். நண்பர்களுடன் வெளியில் சென்று விடுவான்.
இவள் பரமசிவத்திடம் சொன்ன போது.. ” கொஞ்சம் பொறுத்து கொள்ளம்மா எப்படியாவது அவனை அந்த பொறுப்பில் கொண்டு வந்து வைக்க வேண்டும் அம்மா. நீண்ட நாடகளுக்கு பின் இப்போது தான் நிறுவனத்திற்கு வர தொங்கி இருக்கான். அதுவரை நீயே பார்த்து கொள்ளம்மா ” என்றார்.
ஒரு நாள் அவனை அலுவலகத்தில் இருக்குமாறு சொன்னதும் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சீறினான் இவளிடம்.
இவளுக்கு அழுகை வந்து விட்டது.
மீண்டும் பார்ப்போம்
Sema 👌👌👌👌👌👌