அத்தியாயம் 23
“போயா லூசு ராணா! உன்னைய எல்லாம் எவன் தான் ராஜாவாக்குனானோ? அவன் ஒரு கூமுட்டை; நீ ஒரு கூமுட்டை. நான் என்னோட காலத்துக்கே திரும்பிப் போறேன்.” என்று புலம்பிக் கொண்டே சென்றவளை சுற்றி வளைத்தனர் கள்ளர் கூட்டத்தினர்.
“நீ தானே பூவிழியாழ்?! ரணவீரனின் மனைவி?!”
“இல்லயே. அப்படின்னு நான் சொன்னேனா? உங்க வேலையப் பார்த்துட்டு போங்க. நானே கொலகாண்டுல இருக்கேன். எவனாவது என் வழில வந்தீங்க. அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.” என்று கூறியவளை திகைத்து போய் பார்த்தனர் அனைவரும்.
“இவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ?” என்று கள்ளர்கூட்டத்தில் இருந்து ஒருவன் கூற,
“இந்த பைத்தியத்தையா வேங்கையன் விரும்பினான்?” என்று மற்றொருவன் கூற,
“பாவம் அந்த மாவீரன்! போயும் போயும் ஒரு பைத்தியத்தையா திருமணம் செய்திருக்கின்றான்?” என்று மீண்டும் ஒருவன் கூற,
“என்ன தான்யா நடக்குது இங்க? யார் பைத்தியம்? நானா? நானா?” என்று சந்திரமுகி ஜோதிகா போல் கேட்டவளை பார்த்த கள்ளர்கூட்டத்தின் தலைவர்,
“வீண் பேச்சு வேண்டாம். இவளின் கையை காலைக் கட்டி தூக்கி வாருங்கள். இவளை நம் பாதாள பைரவிக்கு பழிகொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.” என்று கூறியவரை பார்த்து உறுத்து விழித்தவளின் கழுத்தில் வாளை வைத்ததும் தன் கண்களை அகல விரித்தவள்,
“அடப்பாவி சண்டாளா! என்னையவே ஏன்டா குறி வைச்சு தாக்குறீங்க? உங்களுக்கும் அந்த ராணா பையலுக்கும் என்னப் பிரச்சனையோ எனக்கு எதுவும் தெரியாது. என்னை விட்டுடுங்கடா. அடேய் லகுடபாண்டிகளா! நான் சொல்றது உங்க காதுல விழுகுதா?” என்று கத்தியவளின் வாயை கட்டி தூக்கிச் சென்றனர். இங்கே பூவிழியாழைத் தேடிக் கொண்டிருந்தான் ரணவீரன்.
“விழி! விழிஇஇஇஇ! எங்கிருக்கிறாய்? வெளியே வா. விழிஇஇஇ.. அரசனாய் நான் ஆணையிடுகின்றேன், வெளியே வா.” என்று கத்திக் கொண்டே வந்தவனின் குரலைக் கேட்ட பூவிழியாழ் பதில் தான் கூறமுடியவில்லை.
‘அய்யோ என்னால் கத்த முடியலையே! ராணா! நான் இங்க இருக்கேன்டா! சீக்கிரம் வந்து என்னைய கூட்டிட்டு போடா! இவனுங்க என்னைய சிக்கன் சிக்ஸ்டிஃபை ஆக்கிடப் போறாங்க டா. சீக்கிரம் வாடா.’ என்று மனதுக்குள் கத்திக் கொண்டிருந்தவளிடம் வந்து சேர்ந்தான் ரணவீரன். மரத்தோடு மரமாக நிற்க வைத்திருந்தவளின் அருகே வந்து, அவளது கன்னங்கள் இரண்டையும் பிடித்து கூப்பிட்டுக் கொண்டிருந்தவனின் முன்னே தன் கண்களை காட்டி சைகை காட்டிக் கொண்டிருந்தாள் பூவிழியாழ்.
‘அடேங்கப்பா டேய்! உன் பக்கத்துல பார்டா. கத்தியோட வர்றாங்க. ஒன்னு என் கைகட்டை அவிழ்த்து விடணும்; இல்ல என்னோட வாயைகட்டையாவது அவிழ்த்து விடணும்; இப்படி கன்னத்தை பிடிச்சுட்டு நிக்குறியே! அங்கப் பாருடா.’ என்று தனது புருங்களோடு கண்ணையும் காட்டியவளின் முகம் மட்டுமே அவனது கண்முன் நின்றது.
“விழிஇஇஇ.. விழிஇஇஇ.. உனக்கொன்றும் ஆகவில்லையே?!” என்று கேட்டவாறே பூவிழியாழின் வாயை கட்டியிருந்த துணியை நீக்கினான் ரணவீரன். வாயிலிருந்து துணியை எடுத்ததும், தங்களைச் சுற்றி நடப்பதை பார்த்தவள்,
“ராணாஆஆஆஆ..” என்று சத்தமிட, அப்போது தான் தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணர்ந்தான் ரணவீரன். அதுவரை அவனது கண்களில் பூவிழியாழ் மட்டுமே தெரிந்தாள். தன்னைச் சுற்றி வில்லும் வாளுமாக நின்றிருந்தவர்களை பார்த்தவன், தன் இடையில் இருந்த வாளை எடுத்து சுழற்ற, பூவிழியாழின் கழுத்தில் வாளை வைத்து அவனை எதுவும் செய்ய விடாது எச்சரித்தனர் கள்ளர் கூட்டத்தினர். பூவிழியாழை காக்க தனது வாளை நிலத்தில் குத்தியவனை இறுக்கிப் பிடித்து அவளுடனேயே சேர்த்து மரத்தில் கட்டி வைத்தார்கள்.
“யோவ் ராணா! வந்தோமா என்னைய தூக்கிட்டு போனோமான்னு இல்லாம, எதுக்குயா வெட்டியா என் மூஞ்சையே பார்த்துட்டு இருந்த?”
“விழி உண்மையாகவே நீ?”
“ஏன்யா இப்படி பேய் முழிக்குற? நான் தான் கண்ணை கண்ணை உருட்டி காண்பிச்சேன்ல? அப்பவே சுதாரிச்சு இருந்தேன்னா, இப்படி நீயும் என் கூட சேர்ந்து மரமோட மரமா நிக்க வேண்டியது இருந்துருக்காதுல்ல!” என்றவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, பாதாள பைரவிக்கு பூஜைகள் தொடங்க ஆரம்பித்தன. பெரிய யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த பூவிழியாழ்,
“அங்கப்பாருய்யா, நம்ம ரெண்டு பேரையும் என்னையே இல்லாம பொரிச்சு சாப்பிடுறதுக்காக எவ்ளோ பெரிய அடுப்பை பத்த வைச்சுருக்காங்க?! போச்சு போச்சு.. இன்னைக்கு சிக்கன் சிக்ஸ்டிஃபை ஆகப் போறோம்.”
“விழி! பயப்படாதே! நானிருக்கும் போது உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன். கவலை வேண்டாம்.”
“எங்க? நீங்க இருக்கும் போது தானே என்னைய தூக்கிட்டு வந்தாங்க?! இதோ உங்க கண்ணு முன்னாடியே என்னைய தூக்கி நெருப்புல போடப் போறாங்க.” என்றதும் தன் காலில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து கயிற்றினால் கட்டி வைத்திருந்த கைகளை விடுவித்தவன், சத்தமில்லாமல் பூவிழியாழியின் கைக்கட்டுக்களையும் விடுவித்தான். அனைவரும் பாதாள பைரவிக்கு பழியிடுவதற்கான பூஜையில் மும்முரமாக இருக்க, யாரின் கவனத்தையும் ஈர்க்காத வகையில் பூவிழியாழின் கையைப்பிடித்து இழுத்துச் செல்ல, வழியில் இருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்தாள் பூவிழியாழ்.
“அய்யோஓஓஓஓஓ.. அம்மாஆஆஆஆ.. என்னோட காலு போச்சே?!” என்று பூவிழியாழ் கத்த, கீழே விழுந்தவளை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து போக முயன்றவனை சுற்றி வளைத்தனர் கள்ளர் கூட்டத்தினர்.
“வசமாக மாட்டிக் கொண்டாயா? இன்று உன்னை கொன்று என் மகனின் ஆன்மாவிற்கு சமர்ப்பிக்கின்றேன்.” என்று கூறியவாறே கள்ளர் கூட்டத்தினரின் தலைவன் ரணவீரனை தாக்க வர, தன் தோளின் ஒருபுறம் பூவிழியாழை சுமந்து கொண்டு அவர்களோடு சண்டையிட ஆரம்பித்தான் ரணவீரன். சிறிது நேரத்தில் ரணவீரனின் படைவீரர்களும் அவனைத் தேடிக் கொண்டு அங்கு வந்து விடவே, கள்ளர் கூட்டத்தினரால் அதிக நேரம் ரணவீரனோடு சண்டையிட முடியவில்லை. அவர்களை தன்னிடம் சரணடையச் செய்தான்.
“இதோ பாருங்கள்! நான் வேங்கையனை வேண்டுமென்று கொல்லவில்லை. ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவளை கவர்ந்து செல்ல முயன்றான். அதுவும் என் மனைவியை; அதைப் பார்த்துக் கொண்டு என்னை இருக்கச் சொல்கிறீர்களா? பெண்ணின் மனதிற்கு விரோதமாக அவளை அழைத்துச் செல்பவன் எவ்வாறு வீரனாவான்? இப்போது நீங்களே சொல்லுங்கள்?! உங்கள் கூட்டத்தில் இருக்கும் பெண்களை நான் அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக கவர்ந்து சென்றால், நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?” என்று ரணவீரன் கூறியதும், வேங்கையன் செய்த தவறான செயலைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டனர். ரணவீரனின் முன் தலைகுனிந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டனர்.
“எங்களை மன்னித்து விடுங்கள் அரசே; செல்வந்தர்களின் வீட்டில் பொன் பொருளை கள்ளமிடுவது தான் எங்கள் குலத்தொழில். கன்னியரை கவர்ந்து வருவதல்ல; அவன் செய்தது எங்கள் தொழிலுக்கு விரோதமானது. அதற்காக தாங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.” என்று கள்ளர் கூட்டத்தினரின் தலைவன் கூற, தன் படைதளபதியை பார்த்த ரணவீரன்,
“இவர்களின் வறுமைக் காரணமாகவே கள்ளமிடுகின்றனர். இவர்களுக்கு கல்வியறிவு கிடைக்குமாறு செய்து, மாற்றுத் தொழில் கற்றுக் கொள்ளச் செய்யுங்கள்.” என்று ஆணையிட்டான். கள்ளர் கூட்டத்தினர் அனைவரும் ரணவீரனின் செயலால் தங்களை எண்ணி வெட்கி தலைகுனிந்தனர்.
“மாவீரர் ரணவீரன்! வாழ்க! வாழ்க!” என்று கோஷமிட்டவர்களை புன்னகையோடு பார்த்தவன், தன் தோளிலேயே தூங்கி விட்டிருந்த பூவிழியாழோடு தன் கூடாரத்திற்கு திரும்பியிருந்தான். தன்னருகே அவளை படுக்க வைத்தவன், பொம்மையென அவளை இறுக்கி அணைத்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தான். இப்போது ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. பூவிழியாழ் இல்லையென்றால் தனக்கு வாழ்வில் எதுவுமே இல்லை என்று. ஆனால் அவள் எதிர்காலத்தில் இருந்து இங்கு வந்துள்ளாள் என்பதை தான் அவனால் நம்பமுடியவில்லை. மறுநாள் காலையில் எழுந்ததும் தன் அருகில் தன்னை அணைத்தப்படி படுத்திருந்த ரணவீரனைக் கண்ட பூவிழியாழுக்கு கோபம் உச்சியைத் தொட்டது.
“அடேய் கழுகுமூக்கா! என்னைய எதுக்குடா திருப்பி இங்க கூட்டிட்டு வந்த? என்னைய தான் உனக்கு பிடிக்கலைல?! அப்புறம் எதுக்குடா காப்பாத்துன? நான் எங்கேயோ போய் தொலையுறேன்; இல்ல சாவுறேன். உனக்கென்ன வந்துச்சு?” என்று கத்திக் கொண்டிருந்தவளை தன் அருகில் இழுத்தவன், அழுத்தமாக அவளது இதழ்களை கவ்விக் கொண்டான்.
“ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்..” என்று அவனிடமிருந்து விடுபட முயன்றவள், தன் பலங்கொண்ட மட்டும் அவனைப் பிடித்து தள்ளினாள் பூவிழியாழ்.
“யோவ் ராணா! எதுக்குய்யா ஆனா ஆனா என்னோட வாயை கடிச்சு வைக்குற? ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. எப்படி எரியுது தெரியுமா?”
“இன்னொரு தடவை என்னை விட்டு போய்விடுவேன்; மரணித்துவிடுவேன். அப்படி இப்படி என்று கூறினால் இதழை மட்டுமல்ல; உன்னை மொத்தமாக சாப்பிட்டு விடுவேன்.”
“நான் என்ன சொன்னா உங்களுக்கென்ன? நீங்க தான் என்னைய வேண்டாம்னு சொல்லிட்டீங்கல்ல; நான் போறேன்.” என்று வெளியே செல்ல கிளம்பியவளின் கையைப் பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவனின் கையை விலக்க போராடினாள் பூவிழியாழ்.
“என்னைய விடுங்க.. நான் போறேன்.. போய் தொலையுறேன்.”
“நிறுத்து.. பெண்ணே இத்தோடு நிறுத்தி கொள். இன்னும் ஓர் வார்த்தை பேசினாய் என்றால்?”
“என்ன செய்வீங்க? ம்ம்ம்.. என்ன செய்வீங்க? என் தலையை சீவிடுவீங்களா? இல்ல கையை காலை உடைச்சுடுவீங்களா? என்னப் பண்ணுவீங்க? ம்ம்ம் சொல்லுங்க.”
“இதோ பார் விழி! என்னை கொஞ்சம் புரிந்து கொள்ளேன். நான் உனக்கு மணமுறிவு சான்றிதழ் எதற்காக கொடுக்க இருந்தேன் என்று தெரியுமா?”
“வேறென்ன? என்னைய விட பெட்டரா ஏதாவது பட்சி கிடைச்சுருக்கும். அதான் என்னைய துரத்திவிடப் பார்க்குறீங்க. போடா.. போடா.. வெள்ளகாக்கா.”
“நீ சொல்வது எதுவும் எனக்கு விளங்கவில்லை பெண்ணே! ஆனால் நான் உனக்கு மணமுறிவு சான்றிதழ் வழங்க காரணம் இருக்கின்றது.”
“என்ன காரணம்? அதையும் தான் சொல்லித் தொலைங்களேன். அப்படி என்ன தான் சாக்கு சொல்றீங்கன்னு நானும் பார்க்குறேன்.”
“என்னால் நீ விதவையாவதை என்னுடைய ஆன்மாவாலும் தாங்க முடியாது விழி! போரில் எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; எனது சதியோடு உன்னை உடன்கட்டை ஏறும் படி செய்வார்கள். என்னால் நீ வாழ வேண்டுமே தவிர என்னால் நீ மரணிப்பதை தாங்கிக் கொள்ள முடியாது. என்னைப் புரிந்து கொள் விழி.” என்று கண்கள் கலங்க கூறியவனின் மார்போடு புதைந்து கொண்டாள் பூவிழியாழ்.
“நீ எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கிறாயோ இல்லை எங்கிருந்து வந்திருக்கிறாயோ எனக்கு எதுவும் தேவையில்லை. நீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும். நீ இல்லாத உலகை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என்னுடன் இறுதி வரை இருப்பதால்தான்?!” என்று கூறி அவளது முகத்தை தன் கையில் ஏந்தியவனை கண்கலங்க பார்த்த பூவிழியாழ்,
“நான் உசுரோட இருக்குற வரைக்கும் உங்க நினைப்பு என் மனசுல இருக்கும். செத்தாலும் உங்கள விட்டு பிரியமாட்டேன். நீங்களே என்னைய துரத்திவிட்டாலும் உங்களை திட்டிகிட்டே நீங்க இருக்குற இடத்தை சுத்திக்கிட்டு தான் இருப்பேன்.” என்றவளின் இடையோடு சேர்த்து அணைத்தவன், அவளை தன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டு படுக்கையை நோக்கி நகர, அவனிடம் இருந்து துள்ளிக் குதித்து விலகி நின்றாள் பூவிழியாழ்.
“ஏன்? என்னவாயிற்று?”
“இன்னும் பெயரளவில தான் பொண்டாட்டியா?”
“இப்போது ஊரறிய திருமணம் நடத்த இயலாது. காரணம் என்னவென்று உனக்கே தெரியும். போர்களத்தில் இருக்கும் போது திருமணம் செய்வது அவ்வளவு உசிதமல்ல.”
“எப்பா உசிதமணி! எங்கிருந்துயா எனக்குன்னு வந்து வாச்சுருக்க. நீ கல்யாணமும் பண்ண வேணாம்.. ம்ம்ம்ம்ம்ம்.. பண்ண வேணாம். வாழ்க்க பூரா சும்மா இப்படி பார்த்துட்டே இரு.”
“ஏன் இவ்வளவு கோபம்? ஊரறிய செய்ய இயலாது என்று தான் கூறினேன். என் தேவி உனக்காக நம் அரண்மனைய சேர்ந்தவர்கள் முன்னால் திருமணம் செய்து கொள்வோம்.” என்றவன் கூறியதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் பூவிழியாழ்.
“போயா! யாருக்கும் தெரியாம கஞ்சப்பிசுனாரியா கல்யாணம் பண்ணப் பார்க்குற. நான் போறேன்.”
“உன்னை என்னால் எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது. என் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. நான் வாழும் காலம் முழுவதும் உன்னோடு ஒரு நிமிடம் பிரியாமல் இருக்க நினைக்கின்றேன். நான் கூறுவதை கூறிவிட்டேன். முடிவு உன் கைகளில்.” என்று கூறி அங்கிருந்து செல்ல முயன்றவனின் பின்னோடு அணைத்துக் கொண்டாள். அவனது முதுகில் முத்தமிட்டு தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
அத்தியாயம் 24
வாழை இலை தோரணங்கள் வாசலில் தொங்க, படைவீரர்களுக்கு அறுசுவை உணவோடு, எங்கும் பூக்களின் வாசத்தோடு, அரண்மனையில் இருக்கும் அனைவரின் முன்பும் பொன் மஞ்சள் தாலியை பூவிழியாழின் கழுத்தில் அணிவித்து அவளை தனது மனைவியென முழு மனது ஏற்றுக் கொண்டான் ரணவீரன். அன்றிரவு தனது புது மனைவிக்காக கட்டிலில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூவின் வாசத்தை நுகர்ந்தவாறு அமர்ந்திருந்தான் ரணவிரன்.
மணப்பெண்ணாக தங்க தேவதையைப் போல் உள்ளே நுழைந்த பூவிழியாழின் விழிகளில் கொஞ்சம் பயம், கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் கலக்கம், கொஞ்சம் மோகம், கொஞ்சம் காதல், கொஞ்சம் ஏக்கமென அத்தனை நவரசங்களையும் கண்டான் ரணவீரன்.
“விழி!” என்று அவளை இறுக்கி அணைத்தவன், இடையோடு வளைத்து தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளது முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான். அவனது திடீர் முத்தத் தாக்குதலில் உடல் முழுவதும் மின்சார அலைகள் தாக்கியதைப் போல் உணர்ந்த பூவிழியாழ், துவண்டு அவனது கைகளிலேயே மாலையாக விழுந்தாள். சந்தனமும் ஜவ்வாதும் மலர் வாசனையும் மங்கையவளின் மேனியில் மணக்க, சொக்கித்தான் போனான் மன்னவன். மங்கையவளுக்கு மாறனின் பரந்த நெஞ்சத்தை மஞ்சமாக்கிக் கொள்ள தோன்றினாலும் எங்கே தன் வேட்கையை உடல் மொழியில் உணர்த்தினால், ஆணவன் தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணம் வந்து அவளது உணர்வுகளுக்கு தடை விதித்தது.
“வாய் ஓயாமல் பேசுவாயே?! எங்கே போயிற்று உன் முத்துப் போன்ற பேச்சுக்கள்?! இந்த மான் விழி கண்களும், கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும்..” என்று அவளது அங்கங்களை வர்ணித்துக் கொண்டே தன் வாள் பிடித்த கையால் பெண்ணவளின் பூ மேனியை தழுவினான் ரணவீரன். அவனது கண் பேசும் வார்த்தைகளை தன் விழி கொண்டு பார்க்க முடியாது, தன் கைகளைக் கொண்டு தனது முகத்தை மூடிக் கொண்டாள் பூவிழியாழ்.
“விழி?! வெட்கப்படுகின்றாயா? எங்கே உன் திருமுகத்தை என்னிடம் காட்டு.” என்று அவளது முகத்தில் இருந்து கையை விலக்கியவனின் சந்தனமார்பில் குங்குமமென சிவந்து, தன்னை முழுவதுமாக புதைத்துக் கொண்டாள் பூவிழியாழ்.
“நீ இப்பிரபஞ்சத்தின் பேரரழகியாவாய்! மலரென விரிந்து மணம் பரப்பும் இவ்விதழ்கள் எவ்வகையான சுவையோ?! இதிலிருந்து எடுக்க எடுக்க குறையாமல் வரும் அமுதத்தை அருந்திக் கொண்டே இருந்தால், இந்த ஜென்மத்தின் மோட்சம் கிடைக்குமோ?!” என்றவன் அவளது செவ்விதழில் தன் முரட்டு இதழ்களை பொருத்தி கவ்விக் கொண்டான். மங்கையவளின் செவ்விதழ்கள் கன்றிவிடும் அளவிற்கு, வண்டென மாறி அதிலிருந்து தேனை உறிஞ்சியவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள் பூவிழியாழ்.
“யோவ் ராணா! மெதுவாயா.. பாரு எப்படி வலிக்குதுன்னு.. இப்படியா பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்ததும் அது மேல பாயுற மாதிரி பாயுவ?!” என்று தன் இதழ்களை கைகளால் தடவிக் கொண்டிருந்தவளை எலும்புகள் நோக இறுக்கியணைத்தான் ரணவீரன்.
“காந்த கண்ணழகி.. உன் விழி பேசும் மொழியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பலவித மாயஜாலங்களை நிகழ்த்துகிறது. இதன் ஆழம் கடலினும் பெரிது.” என்றவன் பூவிழியாழை பூவைப் போல் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையை நோக்கிச் சென்றான். மெதுவாக அவளை படுக்கையில் படுக்க வைத்தவன், மயிலிறகுபோல் இருக்கும் அவளது கால்விரல்களை தன் கைகளில் ஏந்தியவனின் இதழ்கள், அவளது மென்மையை சோதிக்க முத்த ஊர்வலம் நடத்த தயாரானது. அவனது இதழ்கள் அவளது பாதவிரல்களில் பட்டதும் கூச்சம் தாளாது சட்டென பாதத்தை இழுக்க முயற்சித்தாள் பூவிழியாழ். ஆனால் அவளது பாதத்தை தன் கைகளில் இருந்து விடாது பிடித்திருந்தவன், மெல்ல வாழைத்தண்டுபோல் பளபள என்று உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சியளிக்கும் தொடையை நோக்கி நகர்ந்தனின் இதழ்கள் செய்யும் மாயாஜாலத்தை தாங்காது தனது கைகளால் படுக்கையை சுருட்டி, தன் இதழ்களை தனக்குள் இழுத்து கடித்துக் கொண்டாள் பூவிழியாழ்.
அவளின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க, ஆலிலைப்போல் இடை அமைந்திருக்கும் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அவளது இடை வெள்ளித் தட்டுப்போலும் உந்திச்சுழி வலது பக்கமாக சுழித்திருந்தும் இருக்க, அதில் தன் முகத்தை ஆழமாக புதைத்தவன், தன் நாக்கின் முனையை கொண்டு அவ்விடத்தில் கோலமிட்டவனின் தலைமுடியை தன் கைகளால் இறுக்கிக் கொண்டாள். உயர்ந்த கோபுரமென யாருக்கும் அஞ்சாது நிமிர்ந்து நிற்கும் இரு கோபரகலசங்களிலும் தன் முகத்தை புதைத்து தனது மன்மத சாம்ராஜ்யத்தை நிகழ்த்த தொடங்கினான். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. அவளின் சிவந்த இதழ்களை கவ்விக் கொண்டு, அவளது கைவிரல்களோடு தன் கைவிரல்களை கோர்த்துக் கொண்டான். கன்னியவளின் கன்னித்தன்மையை தன் பசிக்கு உணவாக்கிக் கொண்டான். வலி தாளாது மிரண்ட பெண்மையை தன் இதழ் கொண்டு சமாதானப்படுத்தினான். பூவிழியாழுக்குள் முழுமையாக தன் தடத்தை பதித்தான் ரணவீரன். களைத்து கலைந்து மங்கையவள் ஓயும் வரை மன்னவனின் வேட்கை முடியாது விடியும் வரை தொடர்ந்தது. விடிந்ததும் தன் அருகே இல்லாத மன்னவனை தேடினாள் பெண்ணவள். ஆனால் யுத்தகளத்திற்கு செல்வதற்காக தயாராகி தன் முன்னே நின்ற தலைவனை விழிகள் கலங்க பார்த்திருந்தவளின் அருகே வந்த ரணவீரன், அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு,
“விடை கொடு மலரே! உனக்காக நான் மீண்டு வருவேன். என் ஆன்மாவை உன்னுடன் விட்டுச் செல்கிறேன்; கவனமாக இரு.” என்று கூறியவன், தன் கண்களில் வழிய இருக்கும் கண்ணீரை அவளுக்கு காட்டாது போர்க்களத்தை நோக்கிச் சென்றான். யுத்தக்களத்திற்கு செல்பவனின் உயிர் பெண்ணிடம் மீண்டு வருமா?
Heart touching sis 💕
Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️ waiting for nxt epiii 💕 veryyyyyy intresting…….