25
மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய மூவரும் ஒரு கள்ளப் புன்னகையுடன் தத்தம் ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வெளியே வர.. அண்ணனை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தான் கதிர் வேந்தன்!!
முதலில் வெற்றியும்.. வெற்றிக்கு பின்னால் நிவேதிதாவும் சற்று பொறுத்து மருதுவும் வந்தார்கள். நிவேதிதாவை பார்த்தவுடனேயே அண்ணனை கட்டிக்கொண்ட கதிர் “அண்ணே.. பான்ட்ஸ் டப்பாவை ஒரு வழியா கூட்டிட்டு வந்துட்டியா.. சூப்பர்!! சூப்பர்!! எப்பவும் மதுரன்னாலே மீனாட்சி ஆட்சி தான் சொல்லுவாய்ங்க.. இப்ப பாரு நம்ம வீட்ல சொக்கநாதர் ஆட்சி!!” என்று அவன் சிலாகித்து கூற..
நிவேதிதாக்குப் பின் வந்து மருதுவை பார்த்தவன் “இவன் ஏன் பான்ட்ஸ் டப்பா பின்னால வரான்?” என்று அண்ணனிடம் கேட்க..
அவனோ முகத்தை பாவமாக வைத்து “உங்க அண்ணியை அவன் அவிய்ங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறானாம்” என்றான்.
மருதுவும் கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டு இருவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு.. தங்கச்சியை தோளோடு அழைத்தவன் கார் இருக்கும் பகுதிக்குச் சென்றான்.
இவர்கள் இரண்டு பேரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்பதை அறியாத வெள்ளந்தியான நம் கதிர் வேந்தனும் முறைத்து விட்டுச்செல்லும் மருதுவை விமான நிலையம் என்று பார்க்காமல் சண்டையிட செல்ல அவனை பிடித்து இழுத்து நிறுத்தினான் வெற்றி.
“வேண்டாமடா.. சும்மா சண்டை போட வேண்டாம். முதல்ல வீட்டுக்கு போகலாம்” என்று தம்பிக்காக சப்போர்ட் செய்வது போல உண்மையிலேயே அவன் மச்சானுக்கு தான் சப்போர்ட் செய்தான்.
“உனக்காக விடுறேன் ணே இல்லேன்னா” என்று தன் முடியை சிலிப்பி விட்டுக்கொண்டு சென்றவனை பார்த்த வெற்றி “என்னைக்கு இவனுக்கு உண்மை தெரிஞ்சு.. இவன் ஒரு ஆட்டம் ஆட போறான் தெரியலையே!! சொக்கநாதா!!” என்றவாரே பின்னால் சென்றான்.
வீட்டுக்கு சென்ற நிவேதிதாவை கண்டு அனைவருக்கும் ஆனந்தம்.. இந்த இரண்டு மாதங்களாக சுவாதி தான் படாதபாடு படுகின்றார். ஒரு பக்கம் மேகநாதன் மகளுக்கு என்னானதோ? ஏதானதோ? என்று பதறியதால் அவரது உடல்நிலை முன்னேற்றம் இல்லாமல் இன்னும் சீர்குலைய.. மற்றொருபுறம் நிவேதிதா சுவாதியிடம் சரியாக பேசாமல் அலைக்கழிக்க.. போதா குறையாக அவரது தொழில்கள் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட நேரடி கவனிப்பில் இல்லாமல் பல பிரச்சனைகளை இழுத்து வைத்திருந்தது.
இன்று மகளை கண்டவுடன் தான் அவருக்கு ஆசுவாசம். இனி மகள் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுத்துவிட்டு மேகநாதனுடன் ஊருக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார் சுவாதி.
பகல் முழுக்க ஓய்வு எடுத்து விட்டு மாலை போல் தான் வந்தாள் நிவேதிதா. படுக்கையில் இருந்த அப்பத்தாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வர, ஹாலில் மேகநாதனும் சுவாதியும் அமர்ந்திருக்க அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்தாள்.
எதா இருந்தாலும் மகள் மூலமே வரட்டும் என்று சுவாதி அவளையே தீர்க்கமாக பார்க்க.. மேகநாதன் மகளின் பத்திரத்தை ஆரோக்கியத்தை தலைமுதல் பாதம் வரை ஆராய்ந்தார்.
“நான் இனி இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆஸ்திரேலியா வரல” என்று அவள் கூறிய உடன் சுவாதியை விட அதிகம் பயந்தார் மேகநாதன்.
அவர் பேச வாய் எடுக்க முன் சுவாதி தடுத்தவர் “இங்கே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்னா.. இதுக்கு அப்புறம் உன்னோட ஃப்யூச்சர் இதெல்லாம் பத்தி எனக்கு தெரிஞ்சாகணும். நாளைக்கு காலைல வரைக்கும் உனக்கு டைம். அதுக்குள்ள நீ என்கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லனும்.. இல்லனா ஒன் வீக்ல நாம ஆஸ்திரேலியா போகிறோம்” என்று பழைய சுவாதி கண்டிப்புடன் கூறி விட்டு மேகநாதனை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அம்மாவிடம் உண்மையை சொல்ல முடியாமலும்.. சொன்னால் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.. நினைத்தவாறு பெருமூச்சுடன்.. பெரியப்பா அறைக்குச் சென்றாள்.
கணக்கு வழக்குகள் பற்றி புனிதா சொல்லிக்கொண்டிருக்க அதை தன்னுடைய நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார் அழகுசுந்தரம்.
“பெரியப்பா..” என்று இவள் உள்ளே நுழைய.. அனைத்தையும் மூடி வைத்தவர் “வாடா பாப்பா” என்றார் தன்மையோடு.. புனிதா அவளை தன் அருகில் அமர்த்தி “ஏன்டா பாப்பா.. இப்படி போயி ரெண்டு மாசமா பேசாம கொள்ளாம இருந்த.. நாங்க எல்லாம் எவ்வளவு தவிச்சி போயிட்டோம் தெரியுமா? நல்லவேளை உங்க அண்ணன் மருது தான் நான் போய் பாப்பா கூட்டிட்டு வரேன்னு கிளம்பினான். நான் கூட நீ வருவியோன்னு யோசிச்சேன்? ஆனா பய உன்ன கூட்டிட்டு வந்துட்டான்” என்றார் சந்தோஷமாக…
“உங்களால எப்படி முடிஞ்சது எங்க அப்பாவை மன்னிக்க?” என்று அவள் நேரடியாக கேட்க..
அதுவரை சிரித்த முகமாக இருந்த புனிதா அவளது கேள்வி புரியாமல் அவளைப் பார்த்தவர், அடுத்த கணம் புரிந்து கொண்டவரின் முகமும் கடினத்தை தத்தெடுத்து இருந்தது.
“யார் சொன்னது உங்க அப்பாவை நாங்க மன்னிச்சிட்டோம்ன்னு?” என்றார் அந்த குரலில் தான் எவ்வளவு விலகல்..
“பின்னே.. இத்தனை வருடமா அவர் இங்கே வந்து போய்ட்டு தான் இருக்கார். இதோ இப்ப கூட வந்து இருக்கார். அவரை நீங்க எதுவுமே சொல்லல.. இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து நீங்களெல்லாம் மறைச்சிட்டீங்க” என்றாள் குற்றம்சாட்டியப்படி..
“உனக்கு மருதுவ பிடிக்குமா பாப்பா?” கேட்டார் புனிதா.
முன்னே கேட்டால் ஏதோ பிடிக்கும் என்று பதில் சொல்வாள், ஆனால் வெற்றியின் வாய்மொழியாக அனைத்தும் கேட்டபின் “எங்க அண்ணன ரொம்ப பிடிக்கும்” என்றாள் முகம் கொள்ளா பாசத்தோடு..
“இவ்வளவு நாளா ஒருத்தரை ஒருத்தர் பாக்காமலேயே உனக்கு மருது மேல் இவ்வளவு பாசம் இருக்குன்னா.. ஒண்ணு மண்ணா வளர்ந்த என் அண்ணன்ங்கள இத்தனை வருஷமா பார்க்காமல்.. பிறந்த வீட்டுல சீராடாம.. அதைவிட முக்கியமா எங்க அப்பா சாவுக்கு கூட எட்டி நின்னு பார்த்த எனக்கு எப்படி இருக்கும்னு நினைச்சு பாரு.. இது எல்லாத்துக்கும் காரணம் உன் அப்பா.. அவரு செய்ததை எதையும் நாங்க மறக்கல.. உள்ளுக்குள் மூலையில் மறைச்சு வைச்சிருக்கோம். ஏன் தெரியுமா?” என்று கேட்ட புனிதா வேந்தனை ஞாபகப்படுத்தினார் அவளுக்கு. அவ்வளவு வலி வருத்தம் கூடவே கோபம் ரௌத்திரம் அனைத்தும் கலந்து ஒலித்தது குரலில்.
“எங்க வீட்டு பெண்ணை சீரழித்தவனை தெரிஞ்ச ஒரே ஆள் உன் அப்பன் தான். அவர் கூட நாங்களும் பேசாம இருந்துட்டா? சுத்தமா மதுரய மறந்துட்டு அந்த ஊரிலேயே செட்டிலாகிடுவார்.. வரப்போக இருந்தால்தான் ஒவ்வொரு முறையும் இதே வீட்டுக்கு வரும்போது அவர் பண்ணின பாவத்தோடு சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும். என் அண்ணன்களால முடியலனாலும் என் அண்ணன் பிள்ளைய்ங்க கண்டிப்பா செய்வாய்ங்க.. அதற்காகத்தான் அவர விட்டு வைச்சிருக்கோம்” என்றார் வீர மங்கையாக.. மதுரை பெண்ணாக புனிதா நாச்சியார்!!
அதைக் கேட்டவுடன் ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டாள் நிவேதிதா. பெரியப்பாவை பார்க்க அவர் முகத்திலும் புனிதாவின் கருத்துக்களே!!
“விதியின் செயலோ? இல்லை உன் அப்பா செய்த பாவத்தின் விளைவோ? ஏதோ ஒன்று அவரை இங்க கூட்டிட்டு வந்துடுச்சு.. அதற்காக உனக்கு வேந்தன் செஞ்சது சரின்னு நான் சொல்ல மாட்டேன். இப்போ நீயாகவே எங்க ஊருக்கு வந்து இருக்க.. அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சொல்லு உன்னோட முடிவு என்ன?” என்று அவளை அறிந்தவராக புனிதா கேட்க..
“இனி நான் அழகுசுந்தரம் புனிதா நாச்சியார் மகளாக இங்கே இருக்க ஆசைப்படுறேன் பெரியம்மா” என்று அவள் கூற.. அவளை நம்பா பார்வை பார்த்தார் புனிதா.
“என் அப்பா செய்ததற்கான சரியான தண்டனை அவருக்கு கிடைக்க என் வழியில் நான் உதவி செய்வேன் அவ்வளவுதான்..” என்று அவள் திட்டங்களை கூற கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு.. “சூப்பர் டா உன் அண்ணனிடம் உதவி கேள்!!” என்றனர்.
“மச்சக்கன்னி!! எங்க அண்ணன் ஊரிலிருந்து வந்துட்டான்.. இனிமேல் நோ ட்ரீம்ஸ்ல டூயட். நேரிலேயே டூயட் ஆடலாம்.. பாடலாம்.. கொஞ்சலாம். அதனால இன்னைக்கு கனவுல மாமன் வரமாட்டேன். என்னை எதிர்பார்த்து ஏமாந்து போகாதே” என்று வாய்ஸ் மெசேஜை பத்மாவிற்கு தட்டி விட்டு நிம்மதியாக உறங்கினான் வெகு நாட்களுக்கு பிறகு கதிர் வேந்தன்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கதரின் போர்வையை மெல்ல விலக்கி அவன் பக்கவாட்டில் இருந்த தலையணையை அவன் முகத்திற்கு நேராக கொண்டு சென்றது ஒரு உருவம்.
பின் அந்த தலையணையில் அவனை மொத்து மொத்த்தென்று மொத்தினாள் வேறு யார்? அவனது மச்சக்கன்னிதான்!!
“அய்யோ!! யாரோ என்னை கொல்ல வராய்ங்க.. காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!” என்று அலறியடித்து அவன் எழுந்து அமர..
அவள் அடித்த அடியில் தலையணையில் இருந்த பஞ்சு எல்லாம் அறை முழுக்க பரவி அது அவள் மீது அபிஷேகம் ஆகியிருக்க.. பத்மாவோ குட்டி பில்லோவாக நின்றிருந்தாள். விளக்கைப் போட்ட கதிரோ பயந்து “கியூட்டி பேய்!! கியூட்டி பேய்!!” என்று அலற.. “நான் பேயா?” என்று கோபம் கொண்டவள், இரத்த காட்டேரியாக உருமாறி அவனின் இதழ்களை கடித்து இரத்தம் உறிஞ்ச தொடங்கியிருந்தாள்.
“விடுடி!! டிராக்குல்லா மாதிரி கடிக்கிற” என்று அவன் விடுவித்து கொள்ள..
“முதல்ல கியூட்டி பேய்.. இப்போ டிராகுலா வா? முன்னாடி எல்லாம் ஆசையாசையா பேசுவீய்ங்க.. இப்போ என்னைய பேய் பிசாசுன்னு திட்ட ஆரம்பிச்சுட்டீய்ங்க.. இதுக்கு தானா நான் உங்கள லவ் பண்ணுனேன்? இதுக்கு தானா அர்த்தராத்திரியில் உங்கள பாக்க ஓடி வந்தேன்? இதுக்குத்தானா எங்க அம்மா அப்பா பார்த்து வைச்சிருந்த மாப்பிள்ளையை எல்லாம் வேணாம் வேணாம்னு சொன்னேன்?” என்று அவன் பெட்டில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு இவள் ஒப்பாரி வைக்க..
“அடியேய்!! வாய மூடி!! வாய மூடுடி!! சத்தம் கேட்டு யாராவது வந்துட போறாய்ங்க” என்று தவித்தான்.. புலம்பினான்.. கலங்கினான் நம் கதிர் வேந்தன்!!
அசைந்து கொடுத்தாள் இல்லை பத்மா..
“தாயே.. ஆத்தா.. கொஞ்சம் மனசு வை.. சத்தம் கேட்டு எழுந்து யாராவது வந்தாய்ங்கன்னா அவ்வளவுதான்” என்று அவன் தோப்புக்கரணம் போடாத குறையாக அவளிடம் மன்றாட.. போனால் போகுது என்று அழுகையை குறைத்தவள், “சரி சரி தூக்கம் வருது லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்குங்க” என்றாள் தாலி கட்டிய மனைவியை போல..
“நீ சொல்றத கேட்கும் போது மனசு அப்படியே ஜிவ்வுன்னு ஆகுது டி.. ஆனா அதுக்கு முன்னால கல்யாணம்னு ஒன்னு நமக்கு நடந்து இருக்கணும். முதல்ல எழுந்திரு.. வீட்டுக்கு போகலாம்” என்று அவன் சேட்டைகளை கைவிட்டு அழுத்தமாக அவளை பார்த்து கூற..
“நாளைக்கு எனக்கு பூ வைக்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராய்ங்க.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ரெண்டு நாளா உங்க கிட்ட பேசுறதுக்கு ட்ரை பண்றேன். பேசவே முடியல அதுதான் உங்கள பார்க்க வந்துட்டேன்” என்று அவள் கூற..
பெருமூச்சு ஒன்று இழுத்துவிட்டவன், “இப்படியே உன்னைய எங்க வீட்டில் கொண்டுபோய் நிறுத்தினாலும் கண்டிப்பா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாய்ங்க எங்க வீட்டுல.. ஆனா அதுக்கப்புறம் யோசிச்சு பார்த்தியா? நீ இங்க சந்தோசமா இருந்தாலும் கூட.. வெளியில உங்க அப்பா அம்மாவை பார்க்கும் போது.. மத்தவய்ங்களுக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பெத்தவைய்ங்க சீர் செய்வதைப் பார்க்கும் போது.. இல்ல நாளைக்கு நீயே மாசமான அப்போ எல்லாம் உன்னை பெத்தவைய்ங்கள தான் உன் மனசு தேடும். இப்ப அவசரப்பட்டு பின்னால் அவஸ்தைப்படுவதற்கு, இப்ப கஷ்டப்பட்டாலும் ரெண்டு பேர் வீட்டிலும் பேசிய கல்யாணத்துக்கு நாம சம்மதம் வாங்குவோம். சரியா” என்று குறும்பில் விளையாடினாலும் நிதர்சன உண்மையை நிதானமாக தன் காதலிக்கு எடுத்துக் கூறினான் கதிர்.
அவன் சொல்வது அனைத்தும் உண்மை தானே!! என்று நினைத்து வருந்தியவள் அடுத்த நிமிடம் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டு “உங்களை விட்டுட்டு என்னால வேற ஒருத்தன் கூட எல்லாம் வாழ முடியாது” என்று அழுக..
“என்னாலையும் தான்டி” என்றவன்
அவளின் ஆப்பிள் கன்னங்களை கவ்வியபடி, கழுத்தை வளைத்து அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். இன்னும் முத்தம் வேணும் என்பதைப் போல இன்னோரு கன்னத்தையும் திருப்பி வாட்டாமாகக் காட்டினாள் அவனின் மச்சக்கன்னி!! அவள் கன்னத்தை விட்டு காதோரம் முத்தமிட.. சிலிர்த்து தலையை சிலுப்பினாள். அதில் முரட்டுதனமாய்.. அதிலும் சற்றே மென்மையாய் அவளின் இதழ்களை தன் இதழ்களின் ஆளுகைக்கு கதிர் கொண்டு வர.. இந்த தீராத இன்பம் நீண்ட நேரம் நீடித்தது..
“சரி வா.. முதல்ல உன்னை கொண்டு போய் உங்க வீட்டுல விட்டுட்டு வரேன்” என்று யாருக்கும் தெரியாமல் கதவை திறந்துகொண்டு இவன் வெளியே வர, அதேசமயம் மாடியில் அண்ணனும் தம்பியும் ஆக பேசிக்கொண்டு விட்டு வாஞ்சியும் மலரும் அப்போதுதான் கீழே இறங்கி வந்தார்கள்.
இவனோ கீழேயே உத்து உத்துப் பார்த்துக் கொண்டு செல்ல. அவர்களோ இவனுக்கு பின்னால் நின்று கையை கட்டி இவனைத்தான் பார்த்தார்கள்.
“அப்பாடி வீட்ல யாரும் முழிச்சு இல்ல.. வா வா போய்டலாம்” என்று பத்மாவை அவன் கூப்பிட.. அவளோ அவனது இரு தந்தையர்களை பார்த்துவிட்டு பயத்தில் நா உலர பேசமுடியாமல் அவனது கையை சுரண்டினாள்.
“இங்க பாரு மச்சக்கன்னி.. உன் அவசரம் எனக்கு புரியுது. ஆனாலும் மாமா படு ஸ்ட்ராங்கு.. ஒழுங்கா வீட்டுக்கு போற வழிய பாரு” என்று அவள் புறம் திரும்பியவன் தந்தையர்களை பார்த்து
ஷாக்காகி நின்று விட்டான்.
“ஐ..ய்..யா.. பெ.. பெ..ரி.ய்..ய்..யாஆஆஆ” என்று நா நடுநடுங்க.. கைகால்கள் வெடவெடக்க இருவரையும் பார்த்தான்.
வாஞ்சியோ அவனை தீர்க்கமாக பார்க்க.. மலர் வேந்தனோ நெற்றிக்கண் மட்டும் இருந்தால் இப்போதே எரித்து விடுவது போல அவ்வளவு உக்கிரமாக முறைத்தார்.
“பாத்தீங்களா ணே.. பெரிய பயல் அந்த பொண்ண கூட்டிட்டு வேற எங்கோ தான் போனான். இந்த சின்னவனுக்கு இருக்கிற திமிர பாத்திங்களா? இவள நம்ம வீட்டுக்குள்ளேயே கூட்டிட்டு வந்து வச்சு கும்மாளம் போடுறான்.. இவனை..” என்று பாய்ந்து அவனை அடிக்க செல்ல..
“இரு மலரு.. பொண்ணு விஷயம் எடுத்தோம் கவுத்தோம்ன்னு எல்லாம் முடிவெடுக்க முடியாது.. வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு தைரியம் எல்லாம் அவனுக்கு கிடையாது. அந்த பொண்ணா தான் வந்து இருக்கணும்” என்று கரெக்டாக யோசித்தவர் பத்மாவை பார்த்து “இங்கே வா புள்ள? யாரு நீ” என்று விசாரிக்க.. அவளும் நாக்கு குழற தொண்டை அடைக்க பயத்தோடு தன்னைப் பற்றிக் கூறி முடித்தாள்.
“சரி இந்த பொண்ண கொண்டு போய் பத்திரமா அவிய்ங்க வீட்ல விட்டுட்டு வா மத்தத காலைல பேசிக்கலாம்” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு மலரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.
ஸ்டியரிங்லேயே தலையை முட்டிக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் கதிர்.. “இப்படி வந்து மாட்டிவிட்டுடியே டி.. வீட்ல போய் என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலையே. அதை விடு இப்போ எப்படி நீ வீட்டுக்குள்ள போவ?” என்று அவளிடம் கேட்க..
“கவலைப்படாதீய்ங்க அண்ணே.. அண்ணியை பத்திரமாக நாங்க கொண்டு போய் வீட்டுல விட்டுட்டுறோம்” என்று பின்னாடி குரல் கேட்க.. திரும்பிப் பார்த்தால் அவனின் அல்லக்கைகளில் ரெண்டு அமைதியாக பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது இவள் எப்படி வீட்டுக்குள் நுழைந்தாள் என்று!!
“நல்லா வருவீய்ங்கடா!! நீங்க எல்லாம் நல்லா வருவீய்ங்க” என்றவன் வழக்கம்போல காரை இரண்டு தெருவுக்கு முன்னாடியே நிறுத்திவிட்டு..
அவளுடன் யாரும் அறியாமல் பின் கதவு பக்கமாக செல்ல.. அங்கே காத்திருந்த அவளது தம்பியோ..
“பெய்.. ச்சுரும் ஆவ் (அக்கா சீக்கிரம் வா)” என்றவன், “பவா(மாமா) தாங்க்ஸ்” என்றான்.
“நல்லா குடும்பம் டா!!” என்று பாராட்டி விட்டே சென்றான் கதிர்.
மறுநாள் காலை வாஞ்சியும் சுலோக்சனாவும் பரமேஸ்வரர் வீட்டில் அமர்ந்திருந்தனர். “கல்யாண பட்டு ஒன்னு செய்யணும் பரமேஸ்வரர்.. நல்ல கிராண்டா” என்று வாஞ்சி கூற..
“அதுக்கு என்னங்க அய்யா செஞ்சுடுவோம்” என்று எதிரே அமர்ந்திருந்த பரமேஸ்வரனும் பவ்வியமாக கூற..
“முகூர்த்த பட்டு துணை பட்டுனு ஒரு பத்து புடவைங்க செய்யணும்” என்று சுலோக்சனா மகிழ்ச்சியுடன் கூறினார்.
“டிசைன் சொல்லுங்கம்மா உங்களுக்கு பிடிச்ச படியே செஞ்சு தரோம்” என்று அவர் கூற.. “பொண்ணுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா போதும்” என்றவர் அங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பத்மாவை அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்து “உனக்கு என்ன மாதிரி டிசைன் கலர் பிடிக்கும்ன்னு உங்க அப்பாட்ட சொல்லுறியா பத்மா?” என்றார்.
பரமேஸ்வரர் பயந்துபோய் “என்னையா சொல்றீங்க? எங்க சமூகத்தில இதெல்லாம் ஒத்துக்க மாட்டாய்ங்க” என்று வழக்கமான தந்தை போல பக்கம் பக்கமாக வசனம் பேச..
“நல்லா யோசிச்சு பாரு.. நாள பின்ன இந்த பொண்ண வேறு இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்தால் சந்தோஷமா வாழ்வாளா இல்ல உன்னை மீறி நான் கூட்டிட்டு போனாலும் என் வீட்ல அவ நிம்மதியாக இருப்பாளா? நம்ம புள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம். இந்த சமூகம் சடங்கு இதெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது தான். அந்த மனிதனுக்கு எதிராக அதெல்லாம் திரும்பும் போது..அதையெல்லாம் தூக்கி போடுறதுல தப்பு இல்ல. சீக்கிரம் கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டு வரேன். பட்டு ரெடி பண்ணி வைங்க” என்று கம்பீரமாக கூறி விட்டு வெளியே சென்றார் வாஞ்சி.
மூவர் கூட்டணியின் முதல் திட்டமாக.. மேகநாதனின் அறையை மாடியில் இதுநாள்வரை பூட்டியே வைத்திருந்த பிரதாபன் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறைக்கு மாற்றினர்.
அந்த அறை பல வருடங்ககளாக சுத்தம் செய்யாமல் மூடப்பட்டு இருந்தது. ஒரு பெண்ணின் உயிரை மானத்தை காவு வாங்கிய இடம் அல்லவா? அதனால் அதனை பூட்டியே வைத்திருந்தனர் அழகுசுந்தரம் குடும்பத்தினர். மாடியில் நிவேதிதாவின் அறையில்தான் இப்பொழுது இந்த மாநாடு.
நிவேதிதா கட்டிலில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் வெற்றி.. எதிரே நாற்காலியில் மருது. “உன் அலும்புக்கு ஒரு அளவே இல்லடா..”
“அது அலும்பு இல்ல மாப்ள.. அன்பு.. என் பொண்டாட்டி மேல நான் வைச்ச அளவில்லாத அன்பு” என்றவன் நிவேதிதாவின் இரு கன்னங்களையும் இரு கைகளால் கிள்ளி முத்தம் வைத்தான். “பாப்பா இவன் இப்படியே பண்ணிகிட்டு இருந்தான். நாம இங்க பேச வந்ததெல்லாம் மறந்து போயிடும்.. இவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு” என்று நிவேதிதாவிடம் முறையிட..
“கொஞ்ச நேரம் சும்மா இரு ஹல்க்.. அண்ணன் இருக்காரு இல்லையா? உங்க கொஞ்சல் எல்லாம் அவர் போனதுக்கப்புறம் வச்சுக்கோங்க சரியா?” என்று இவள் டீல் பேச..
“இதுக இரண்டுத்தையும்..” என்று தலையிலடித்துக் கொண்டான் மருது.
“எங்களுக்கும் ஆள் கிடைக்கும்!! நாங்களும் இதைவிட சூப்பராக ரொமான்ஸ் பண்ணுவோம்!!” என்று அவன் கண் காது மூக்கு என்று அனைத்தும் புகை வர கூறினான்.
“ஜோக்ஸ் அப்பார்ட்” என்று நிவேதிதா கூற.. அதுவரை காதலனாக இருந்தவன் கடமை வீரனாக எழுந்து அமர்ந்து திட்டங்களை தீட்டினான். “ஓகே டன் இது படி நாளைக்கு செய்திடலாம்” என்று கூறி மருதுவும் வெற்றியும் எழுந்து கொள்ள..
அறைக்கு வெளியே முதலில் வெளியே சென்ற மருதுவை பார்த்து “அப்புறம் குட்நைட் மாப்புள” என்று கூறி வெற்றி கதவடைக்க செல்ல..
“என்னது குட் நைட்டா? டேய் மச்சான்.. நீ இங்க குடும்பம் நடத்துறது யாருக்காவது தெரிஞ்சது? அவ்வளவுதான்!! எல்லா ப்ளானும் க்ளீன் போல்ட்” என்று அவன் மிரட்ட..
“என் பொண்டாட்டிய பார்த்து மூன்று நாள் ஆச்சு. நான் ஏங்கி போய் இருக்கேன்.. காலைல கொஞ்சம் சீக்கிரமா வந்து எழுப்பி விடு” என்று மச்சானையே காவலுக்கு வைத்துவிட்டு கட்டியவளுடன் காதல் களியாட்டத்தை தொடர சென்றான் வெற்றி!!
நிவேதிதா கண்களிலோ தூக்கக் கலக்கம். ஆனால் அவள் மெல்லிய உதடுகள், இவன் இதழ் சிறையினால் கொஞ்சம் தடித்து சிவந்திருக்க பார்த்த நொடியே கவ்விக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
அவளின் மெல்லிய காது மடலை முத்தமிட்ட.. சூடாக ரத்தம் பாய்ந்து அவளின் இளங்காது மடல் சிவக்க.. அதை நாவில் வருடி உதட்டால் பற்றி மெதுவாக கவ்வி சுவைத்தான். சிணுங்கிச் சிலிர்த்து தலையை ஆட்டினாள். “ம்ம்.. ஹல்க் என்ன பண்றீங்க?” மெல்லக் கேட்டாள்.
“லவ் பண்ணிட்டு இருக்கேன்
வேதா டார்லிங்.. கொஞ்ச நேரம் பேசாதே” அவள் மூக்கில் முத்தமிட்டான். அவள் கண் மூடிக் கிறங்க.. மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே ஜபித்து தன்னவளை
சுவைத்து சுகித்து கொண்டாடினான் விடியும் வரை..
காதலே.. காதலே...