ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 26

26

 

 

மறுநாள் காலை மேகநாதனை வெளியில் அழைத்து வந்தார் சுவாதி..

மாடியிலிருந்து அவரை தனியாக அழைத்து செல்வதற்கு லிஃப்ட் ஒன்று இருக்கும். அதன் வழியே மேலே வந்த மருதுவோ “சித்தி உங்கள அம்மா அவசரமாக கீழே கூப்பிட்டாங்க.. நீங்க போங்க நான் சித்தப்பாவை மெல்லமா கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல அவரும் சரி என்று கீழே சென்று விட்டார்.

 

 

மெல்ல சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்த மருது அன்று அழகுமீனாள் என்ற பூ கருகி போன அதே அறைக்கு முன்னர் நிறுத்திவிட்டு, வராத போனை வந்த மாதிரி அட்டெண்ட் செய்து சற்று தள்ளி பேசிக்கொண்டு நின்றான். 

 

 

அந்த அறையிலிருந்து ஜீன்ஸும் வெற்று மார்புமாய் வெளியே வந்த வெற்றி ஷர்ட்டை தூக்கி உதறி தோளில் போட்டுக் கொண்டு மேகநாதனை பார்த்து எள்ளலலாய் சிரித்துவிட்டு செல்ல.. மேகநாதனுக்கு திக்கென்று ஆனது.

 

“நீ ஏன் டா இங்கிருந்து போற??? ஓ மை காட்.. நிவே.. நிவே” என்று அவர் குளறலாக கதற.. “நித்தமும் இனி நடைபெறும்!!” என்றவன் சத்தமில்லாமல் அழுத்தமாக சொல்லி விட்டு செல்ல.. 

 

 

மேகநாதன் “மருது!! மருது!!” என்று அழைக்க.. அவனோ சைகையில் போன் பேசிவிட்டு வருகிறேன் என்று போனிலேயே கவனம் இருப்பது போல் திரும்பிக் கொண்டான்.

அவர் பயன்படுத்தும் அந்த சக்கர நாற்காலியோ பட்டன் சிஸ்டம் மூலம் இயங்க கூடியது. தன் நல்லா இருக்கும் ஒரே கையை வைத்து மெல்ல மெல்ல அந்த அறைக்கு செல்ல.. நலுங்கிய கோலத்தில் நிவேதிதா.. அதற்கு மேல் “வேண்டாம் விடு விடு.. அங்க எல்லாம் தொடாதே.. ச்சீ இடியட் விடுடா..” என்று அவள் கதறினாள். 

 

 

மேகநாதன் பதறிக் கொண்டு அவள் அருகில் செல்ல முயல.. “வராதே.. கிட்ட வராதே.. இதுக்கு மேல என்னால முடியாது. நான் செத்திருவேன் டா” என்று நிவேதிதா கண்களை மூடிக் கொண்டே விம்மி விம்மி அழ.. அவர் கண்களுக்கு மெல்ல மெல்ல நிவேதிதா மறைந்து அங்கே அழகு மீனாள் தெரிந்தாள். அன்று அவள் வடித்த கண்ணீர் செந்நீராய் மாறி இன்று இவரை சுட்டது.

கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவர், “மருது.. மருது” என்று கத்திக் கொண்டு வெளியில் வர,

 

 

“என்ன?” என்றான். 

 

“அங்க.. அங்க..”

 

“அங்க.. யாரு?”

 

“அங்க நிவேதிதா.. நிவேதிதா வந்து என்னால சொல்ல முடியல.. நீயே போய் பாரு” என்றார்.

 

அந்த அறையோ பூட்டியிருக்க.. “பூட்டியிருக்கிற அறைக்குள் யாரு இருக்க முடியும்.. என்ன ஏதாவது கனவு கண்டிய்ங்களா?” என்றவன், அவரை கீழே அழைத்து செல்ல.. அவரோ திரும்பத் திரும்ப அந்த அறையையே பார்த்துக்கொண்டே சென்றார்.

 

 

ஆனால் தன் மகளை பார்த்தால் தான் தமக்கு நிம்மதி என்று கண்களாலேயே அவளை தேடியவர் அதன்பிறகு சுவாதியிடம் கூறி அவளை வரச் சொல்ல அவளோ “எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்குறேன். டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

 

மேகநாதன் மனம் முழுவதும் தவியாய் தவித்து.. துடியாய் துடித்தது. தான் காண்பது கனவா நினைவா என்று புரியாமல் புழுங்கி தவித்தார்.

 

அன்று இரவு கூட அவருக்கு நிவேதிதாவின் அந்த தீனமான குரல் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது. அந்த இரவின் அமைதி மேகநாதனுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. தகிக்கும் அனலில் வாட்டப்படுவது போன்ற அவஸ்தை. உடல் சுகமின்மை ஒரு வதை என்றால் அவரின் மனதின் பயம் ஒரு வதை. சுற்றிலும் இருப்பது அனைத்தும் ஒவ்வாமை போன்ற உணர்வு.

 

இதற்கு முன் அவர் இவ்வளவு மோசமான, கொடிய அவஸ்தை ஒன்றை அனுபவித்ததே இல்லை என நினைத்தார். இரவு ஏற ஏற சுமையின் அளவும் அவர் நெஞ்சில் ஏறிய பாறாங்கல்லாய் கனத்தது. மூச்சுத் திணற வைத்தது. இருளின் அழுத்தம் தாளாமல் அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். அறைக்குள் ஏஸி மெலிதான சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. அதுகூட பேரிசைச்சலாய் அவரை அச்சுறுத்தியது.

மனதின் குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள மனம் நிறைய பயம்!! பயம்.. பயம் மட்டுமே!!

 

மறுநாள் சுவாதியை வெகு காலையிலேயே எழுப்பி நிவேதிதாவை பார்க்கவேண்டும் என்று அவர் கூற.. 

“வாட் இஸ் திஸ் நாதன்? ஏன் இப்படி எல்லாம் பிகேவ் பண்ணுறிங்க? அவ தூங்கிட்டு இருப்பா? என்னால கூட்டி போக முடியாது. பொண்ணுனாலும் பிரைவசி கொடுக்கனும்” என்று கராறாக கூறி விட.. “அப்போ என்னை வராண்டாவில் விடு.. ப்ளீஸ் சுவாதி” என்று அவர் கெஞ்ச.. “யுவர் விஷ்” என்று கூறி அவரை வராண்டாவின் பால்கனியில் சக்கரநாற்காலியோடு அமர வைத்து விட்டார்.

 

 

பெண்ணை பற்றிய பாதுகாப்பு ஒருபக்கம் அவர் மனதை பயமுறுத்த தன்னுடைய குற்றத்தை மனைவியிடம் ஒப்புக்கொள்ள விருப்பமில்லாமல் இருகொள்ளி எறும்பாய் தவித்தார்.

சற்று பொறுத்து விடிந்தும் விடியாததுமாய் அறையில் இருந்து வெளியே வந்த வெற்றியை பார்த்து இவர் அழுது கதறி.. சண்டையிட செல்ல.. அவனோ அதே எள்ளல் சிரிப்புடன் “அன்னைக்கு என் அக்காவுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்.. அதை உன் பொண்ணு அனுபவிக்கிறா.. சும்மா சொல்லக் கூடாது.. உன் பொண்ணு..” என்று அப்பன் என்றும் பாராமல் மகளை அவன் வர்ணிக்க.. அதை கேட்காமல் இரு கைகளால் காதை அடைக்க முடியாத தன் நிலைமை எண்ணி கண்ணீர் உகுத்தவர், “நிவே.. நிவே..” என்று கதறி கொண்டு அந்த அறைக்குள் செல்ல.. நேற்று இருந்ததை விட இன்று அதிகம் கூச்சலிட்டு கத்தி அப்பாவை கண்டு மிரண்டு பயத்தில் அலறி கட்டிலுக்கு அடியில் ஒளிந்தவளை கண்டவரின் இதயம் நின்று துடித்தது.

 

அன்று அழகு மீனாள் செய்ததை கேட்டவள், அப்படியே இன்று செய்ய.. “டேய் உன்னை கொல்ல போறேன்டா” என்று ஆவேசமாக நாற்காலியை உருட்டிக் கொண்டு வெற்றியை அடிக்க வர, அவனோ “என்னை கொல்லப் போறியா? உன்னால இல்ல.. செத்துப் போனானே உன் உயிர் நண்பன் பிராதாபன், அவனால கூட முடியாது.. ஏன் தெரியுமா?” என்றவன், சற்றே மேகநாதன் முன் குனிந்து அவள் கண்களை தீர்க்கமாக பார்க்க அதுவரை ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தவருக்கு அனைத்தும் புரிந்து போக, பதில் உரைக்க முடியாமல் விக்கித்துப் போனார்.

 

 

“என்னை என்ன வேணாலும் செய்துக்கோ.. நான் பண்ண தப்புக்கு என் பொண்ண பழி வாங்காத” என்று அவர் கெஞ்ச.. உதட்டை பிதுக்கி “முடிஞ்சா உன் பொண்ணை காப்பாத்திக்கோ என்னிடமிருந்து..” என்றவன் அவர் முன்னே நிதானமாக சட்டை பட்டன்களை போட்டு கொண்டு அவன் செல்ல.. மீண்டும் அந்த அறைக்குள் சென்றவர் பார்த்தது.. இரத்த வெள்ளத்தில் கைகளை அறுத்துக் கொண்டு கிடந்த நிவேதிதாவை தான்..

 

 

“அம்மாடி..” என்று அவர் கதறி கொண்டே அவள் அருகில் செல்ல.. “அப்..ப்..பாபா.. முடியல பா.. ரொம்ப வலிக்குது.. இங்க இங்க எல்லாம்” என்று அவள் கூறியது உலகத்தில் எந்த தந்தையும் கேட்கக் கூடாத ஒன்று.  

 

“அய்யோ.. நிவே.. நான் பண்ணிய பாவமெல்லாம் உன் மேல விடிஞ்சிடுச்சே.. என்னை மன்னிச்சுடுமா” என்று அழுதவரின் கண்களுக்கு அவள் அழகு மீனாளாகவே தெரிய..

 

“நான் போறேன்பா.. அந்த வலிக்கு இந்த வலியே பரவாயில்ல” என்று கூறி முடிக்கும் முன் அவள் கண்கள் சொருகிவிட.. “நிவே.. நிவே.. எழுந்திரிம்மா.. வேண்டாம்டா அப்பாவை விட்டுட்டு போகாதே.. அப்பாவால தாங்க முடியாது டா..” என்று கதறிக் கொண்டு எழ முடியாமல்.. சக்கரநாற்காலியில் இருந்து விழுந்து புரண்டு மகள் அருகே செல்ல முடியாமல் தவித்தார்.

 

 

“யாராவது வாங்களேன்.. என் பொண்ணை காப்பாத்துங்களேன்!!” என்று அவர் துடியாய் துடிக்க.. 

 

அந்தோ பரிதாபம்!! யார் காதுகளிலும் அவை விழவில்லை. வயிற்றால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தன் மகளை நடுங்கும் விரல்களால் தொட்டு பார்த்தவர், அவளின் இரத்தத்தை பார்த்து துடித்தார். நிவேதிதா பிறந்தபோது ரோஜா குவியலென தன் கைகளில் வாங்கியவருக்கு இன்று ரத்தத்தில் தோய்ந்து தன் மகளைப் பார்க்க மனம் தாளாமல் வாய்விட்டு ஓவென்று கதறி அழுதார்.

 

 

“மீனா.. மீனம்மா என்னை மன்னச்சிடு.. அன்னைக்கு உன்னை பெற்றவர் என்ன பாடு பட்டிருப்பாருன்னு இப்போ எனக்கு புரியுது.. ஆனா அதற்கு நான் கொடுத்த விலை என் மகளின் மரணம்!! ஆமா.. என் மகளின் கொடூரமான மரணம்!!” என்று கைகளை அந்த தரையில் படார் படார் என்று அடித்துக் கொண்டு அழுதவர் அப்படியே மயங்கி சரிந்தார்.

 

அதை அந்த வீட்டின் கீழ் அறையில் அமர்ந்து புனிதா அழகு சுந்தரம் மருது பார்த்துக் கொண்டிருக்க.. அதே போல வேந்தன் வீட்டிலும் இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அந்த அரக்கனின் அழுகை சற்றே ஆறுதல் அளித்தது. “ஆனால் இவனுக்கு இந்த தண்டனை எல்லாம் போதவே போதாது!!” என்று கதிர் கர்ஜித்தான்.

 

 

ஒரு மகளை இழந்த தந்தைக்கு மற்றொரு தந்தையின் அந்த வலி தெரியும் அல்லவா?? அதை உணர்ந்த வாஞ்சிவேந்தன் கதிரை நோக்கி “நீ அவனுக்கு உடம்புல எத்தனை சித்தரவதை செய்து இருந்தாலும் அவனுக்கு இவ்வளவு வலிச்சி இருக்காது. ஆனால் இந்த ஒரு நிகழ்வு அவனுக்கு ஆயுளுக்கும் மறக்காது” என்றார்.

 

“ஆனாலும் பாருங்க ஐயா.. பான்ட்ஸ் டப்பா ரொம்ப ஓவரா பர்பாமன்ஸ் பண்றத” என்று இவரின் அனைத்து அழுகைக்கும் மயங்கி கிடந்ததை போல இருந்த நிவேதிதை பார்த்து இவன் கூற..

 

 

“பாவம் டா அந்த பொண்ணு..” என்று மரகதம் பரிந்து வந்தார்.

 

சுலக்சோனாவோ மயங்கி கிடந்த மேகநாதனை தான் பார்வை அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அன்று அவர்கள் துடித்த துடிப்பு.. வலி வருத்தம் ஆதங்கம் என்று அனைத்து உணர்ச்சிகளையும்.. இன்று மேகநாதனை அதே போல் பார்க்கும் போது மனதில் சற்று நிம்மதி அவருக்கு. நாடகமே என்றாலும் அவரின் இந்த துடிப்பு அழுகை கதறல் எல்லாம் நிஜம் தானே!!

 

 

ஆனால் மதுரை ஆளும் அந்த மீனாட்சிக்கு இவர்கள் கொடுத்த இந்த தண்டனை போதாது என்று தோன்றியது போல.. அழகு சுந்தரம் வீட்டில் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று பின்னால் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க.. அங்கே அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் கையில் இருந்த காபி கோப்பையை போட்டபடி நின்றிருந்தார் சுவாதி.

 

 

அவர்களுக்கெல்லாம் சுவாதிக்கு இந்த விஷயத்தை கூறி அவரை கஷ்டப்படுத்தவோ இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை வெறும் கானல் நீரோ என்று அவரை வருந்த வைக்கவோ வேண்டாம் என நினைத்து தான் யாரும் அவரிடம் கூறவில்லை. ஆனால் அனைவருக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான் அல்லவா!! அவன் ஆடும் நாடகமே தனி அலாதிதான்!!

 

 

மருது தான் சுவாதியை அழைத்து அமரவைத்து தண்ணீர் கொடுக்க மூவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே “இங்கே என்ன நடக்குது? சொல்லப் போறீங்களா இல்லையா? அங்க என் பொண்ணுக்கு என்னாச்சு?” என்று மாடிக்கு ஓட துடித்தவரை பிடித்து அமர வைத்தவன் “நிவேதாவுக்கு ஒன்னும் இல்ல சித்தி” என்று தந்தை ஒரு கணம் பார்த்துவிட்டு அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தான். அதிர்ச்சியில் விக்கித்து நின்றார், தன் கணவனின் இந்த அருவுருப்பு மிகுந்த பக்கத்தை கேட்டு..

 

 

அதற்குள் வேந்தன் நிவேதிதாவை எழுப்பி அவள் அறைக்கு அனுப்பிவிட்டு மயங்கி கிடந்த மேகநாதனை ஒரு அற்பப் புழு போல் பார்த்தவன் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

 

 

அதன் பின் சுவாதி யாரிடமும் பேசவில்லை தன் அறையில் போய் முடங்கியவர் தான். ரொம்ப நேரமாக மயக்கம் தெளியாமல் கிடந்த மேகநாதனை அழகுசுந்தரம் ஆட்களை வைத்து மருத்துவமனையில் சேர்த்தார். வீட்டிலிருந்து யாருமே அவரை பார்க்க செல்லவில்லை. ஒரு நாள் முழுக்க மயக்கத்திலேயே இருந்தவர் மறுநாள் விழித்தபோது அவர் இந்த நிகழ் காலத்திலேயே இல்லை. 

 

இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்தி வாஞ்சி குடும்பத்தின் இத்தனை வருட வலியை அவரை உணர வைக்க திட்டமிட.. ஆனால் விதியோ வேறு திட்டமிட்டிருந்தது. ஆம்!! மேகநாதனின் நினைவுகள் எல்லாம் நிவேதிதாவை பார்த்த அந்த நொடியிலேயே அப்படியே உறைந்து நின்று விட.. 

 

 

ஒவ்வொரு நிமிடமும்.. ஏன் ஒவ்வொரு வினாடியும் கூட தன் மகள் தன் கண்முன்னே சிதைந்தது மரணித்தது மட்டுமே அவர் ஞாபக்த்தில் இருந்தது. மற்ற எதுவும்.. எவருமே ஞாபகத்தில் இல்லாமல்.. அந்த நிகழ்வை கண்டு துடியாய் துடித்தார். மயக்க மருந்து இல்லாமல் அவருக்கு கொஞ்சம் கூட ஆழ்ந்த உறக்கம் வரவே இல்லை.

பலர் உறக்கத்தை கெடுத்தவருக்கு..

 

 

மருத்துவர்களோ “இவர் இப்படியே நடந்துக் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரமே மனநோய்க்கு ஆட்பட வேண்டியதுதான்” என்று கூறி செல்ல.. அவர் வீட்டில் உள்ளவர்கள் யாரும் பெரிதாக அவரை கண்டு கொள்ளவில்லை. மனமே இல்லாத அந்தக் கொடியவனுக்கு கூட மனநோய் ஏற்பட.. அதற்கான மருத்துவமனையில் சேர்த்து விட்டனர் மேகநாதனை!!

 

தன் அறையில் முடங்கி இருந்த சுவாதி அதன்பின் மகளை அழைத்து அவளது வருங்காலம் என்ன என்று கேட்க..

 

அழகுசுந்தரம் மற்றும் புனிதாவை இருபுறமும் நிறுத்திக் கொண்டு.. “இனி இங்கே தான்” என்றாள். சடக்கென்று சுவாதி கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியில் வந்து “நீனும் உங்க அப்பாவை போலவே செல்ஃபிஷா?” என்று கேட்க..

 

 

அதில் பதறி அன்னையை அணைத்தவள் “அப்படி எல்லாம் இல்ல மாம்.. ஆஸ்திரேலியா வந்து இந்த சொத்துக்காக.. உங்கள மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க தான் அப்பா இவ்வளவு பாவத்தை எல்லாம் பண்ணினார். அதை நினைச்சாலே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அதுவுமில்லாம என் லைஃப் இனி இங்கே தான்” என்று வேந்தனை பற்றி கூற.. “அப்போ முறையா அவரை கல்யாணம் செய்துக்க சொல்” என்றார்.

 

 

ஆனால் வேந்தனின் குடும்பம் அவர்களின் பழைய வீட்டுக்குள் வர விருப்பம் காட்டவில்லை. பழைய நினைவுகளின் தாக்கங்களால்.. அடுத்த ஒரே வாரத்தில் வேறு வீட்டுக்கு மருது குடும்பம் குடிபெயர்ந்தது. அந்த வீட்டை இடித்து புதிதாக கட்டலாம் என மருது கூற.. அனைவரும் அதற்கு ஆமோதித்தனர்.

 

 

அடுத்து வந்த சுபயோக தினத்தில் வெற்றிவேந்தன் நிவேதிதா திருமணம் மதுரையே திரும்பி பார்க்கும்படி வெகு விமர்சையாக நடந்தது. ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யக்கூடாது என்பதால் ஒரு மாதம் கழித்து கதிரின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் முடிவு செய்தனர்.

 

ஒரு மாதம் தானே என்று கதிர் பொறுத்தாலும் பத்மா அவனை போன் போட்டு காட்டு காட்டு என்று காட்டிவிட்டாள். இவள் இம்சையை தவிர்ப்பதற்காகவே அவன் போனை ஆப் பண்ணி வைத்தாலும் நான்கு அல்லக்கைகளில் ஏதாவது ஒன்றுக்கு போனை போட்டு அவனிடம் கொடுக்கச் சொல்லி தனது கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் காட்டினாள் கதிரின் செல்ல இம்சை அரசி!!

 

அதே கொடைரோடு வீடு..

 

“இங்கே ஏன் கூட்டிட்டு வந்த ஹல்க். எனக்கு பிடிக்கவே இல்லை” என்று பழைய நினைவுகளின் தாக்கத்தில் நிவேதிதா கூற..

 

“ஏன் வேதா.. இங்க தான் நம்ம ஃப்ரஸ்ட் நைட் நடந்த ஃபர்ஸ்ட் இடம்” என்று அவன் கூறி கண்ணடிக்க.. 

 

“போடா ஹல்க்.. அன்னைக்கே ஒன்னுமே நடக்கல.. எனக்கு தெரியும்” என்று அவள் கூறி சிரிக்க..

 

“அவனோ அப்படி எல்லாம் என்னை நம்பாதே.. முழுசா நடக்கலைன்னாலும்.. ஏதோ இலேசு பாசா..” என்று அவன் இழுக்க..

 

“வாட்?” என்று அவள் அலற..

 

“ஆமாம்.. அப்புறம் எப்படி என் சட்டையை நீ போட்டு இருந்த? யோசி டார்லிங்.. யோசி” என்றவனை, “அடப்பாவி நீ நல்லவன்னு நினைச்சேனே..” என்று அவள் மூக்கை உறிஞ்சி கொண்டே கூற..

 

“அது நாள பின்ன நீ வெர்ஜின்டி டெஸ்ட் எடுத்தா என்ன பண்ணுறது.. அப்போ இதை எல்லாம் கூறி உன்னை குழப்பி விடலாமன்னு நான் பெருசா ப்ளான் எல்லாம் போட்டேன். ஆனா நீ படிச்சது தான் ஃபாரின்.. பட் பேஸிக் நாலெட்ஜ்..” என்று விரல்களால் அவள் முன்னே முட்டை போட்டுக் காட்ட..

 

“நான்.. நான்.. டர்ட்டியா? செத்தடா ஹல்க் இன்னைக்கு என்கிட்ட..” என்றவள் அவனை துரத்த, அந்த வீட்டை சுற்றி சுற்றி ஓடினான் வெற்றி.

 

“இது என்ன வார்ம் அப் ஆ.. அதுக்கு முன்னாடி??” என்றவனை கண்டவளுக்கு முகம் சிவந்தது.

 

அப்போது மருதுவிடம் இருந்து போன் வர.. “அடேய் மாப்புள.. எப்படிடா உன் தங்கச்சி இவ்வளோ டர்ட்டியா.. பல்ப்பா இருக்கா.. ஹா ஹா” என்று சிரித்தான் வெற்றி.

 

 

“அதான் நீ ரொம்ப அறிவு வாளியாச்சே மச்சான்.. சமாளி.. ஆனா உன்னை எப்படித்தான் அவ வெச்சு சமாளிக்க போறாளோ..” என்றான் மருது.

 

 

“அதை நான் சொல்லனும் டி மாப்புள” பேசிக் கொண்டே நிவேதிதாவின் கன்னத்தில் மென்யையாக ஒரு முத்தம் கொடுத்தான் வெற்றி.

 

அவள் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதைப் போல அவன் காதருகே தன் காதை வைத்துக் கேட்டாள். அவளின் மென்மைகள் அவன் புஜத்தில் மென்மையாக அழுந்தியது. அவர்கள் பேசுவது அவளுக்கு தெளிவாகக் கேட்டது. அதை ரசித்து சிரித்தபடி வாயைத் திறக்காமல் அமைதியாக அண்ணன் தனக்காக சப்போர்ட் செய்வதை கேட்டுக் கொண்டிருந்தாள். மறுமுனையில் இருக்கும் அவளின் பாசமலர் அவளை அப்படி பார்த்துக்கோ.. இப்படி பார்த்துக்கோ சொல்லிக் கொண்டிருந்தான். 

 

மருதுவுடன் பேச்சை தொடர்ந்தபடியே வெற்றி அவளின் கன்னத்தில் தொடர்ந்து நான்கைந்து முத்தங்களுக்கு மேல் கொடுத்தான். பின் அவள் உதட்டில் என்று முத்தங்கள் பட்டியல் நீண்டது.. அவள் மறுப்பின்றி முத்தங்களை வாங்கியபடி அவனுடன் அணைந்திருந்தாள். அந்த அணைவு அவளுக்கு மிகவும் இதமாயிருந்தது.

அவள் முகம் அதை காட்ட.. ரசித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

 

 

“என்னடா மச்சான் பதில காணோம்” என்றவனிடம்..

 

“நீ ஏதும் சொன்னியா மாப்புள??” என்று நிவேதிதாவை பின்னிருந்து அணைத்தப்படி வெற்றி கேட்க..

 

 

“நீ நடத்து ராசா..

எனக்குன்னு வருவா ஒரு ரோசா..

அவ கூட பண்ணுவேன் காதல் ஜல்சா..

அப்ப தெரியும் மருதுவின் ரொமான்ஸ் மாஸா..” என்றவன் போனை வைத்துவிட்டான்.

 

ஆனால் அவன் ஆரம்பித்த உடனேயே வெற்றி இங்கே போனை வைத்தது பாவம் அவனுக்கு எங்கே தெரிய போகிறது??

 

 

அவளின் முகத்தை திருப்பி சிறிய கூரான மோவாயை முத்தமிட்டு மெல்லக் கடித்தவன், அப்படியே முகத்தை கீழே இறக்கி அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவள் கன்றுக்குட்டி போல சிலிர்த்து அவனை தள்ள.. அவள் நெஞ்சுப் பரப்பில் முத்தமிட்டு முகத்தைப் புரட்டி, பின் புதைத்து அவளின் வியர்வை வாசணையை ஆழமாய் முகர்ந்தான் வெற்றி. அவளின் வெண்ணிற மென்சதையை முத்தமிட்டு பற்களால் தடம் பதிக்க.. அதற்கு மேல் அவளை அள்ளி கொண்டு மெத்தையிலிட்டு மோக பாடம் கற்று கொடுக்கும் ஆசானானான். 

 

சீறும் பாம்பாய் பெருமூச்சு விட்டபடி நெளிந்தவளிடம் மெலிதான சிணுங்கல் மட்டுமே இருந்தது. அவள் கைகள் அவன் தலையைத் தடவி அழுத்தமாக தன்னோடு இறுக்கிக் கொண்டது. அவன் முகம் கீழறங்கி அவளின் ஆலிலை வயிற்றில் புதைந்து, நாபிச் சுழலில் நாக்கால் விளையாடியது. அவன் கைகள் இடுப்பைப் பிசைய முகம் அங்கிருந்து இன்னும் கீழே இறங்கி அவளின் அந்தரங்கத்தை எல்லாம் களவாட… அவள் இன்பத்தில் வெடித்து சிதற.. மோக மந்திரங்கள் ராகங்களாக இசைக்கப்பட.. அந்த தாளத்தில் இரண்டு ஸ்வரங்களும் தாள லயத்தோடு பின்னி பிணைந்து பாடின..

 

காமத்தில் கிளர்ந்து மோகத்தில் கொந்தளித்து கரைப்புரண்ட காதலில் திளைத்து களைத்து சேர்ந்து சேர்ந்து சோர்ந்தனர். இருள் விலகினாலும் தன்னவளை விலகாமல் தன் அணைப்பிலே வைத்திருந்தவன், தூங்கும் அவள் மூக்கை நிமிண்டி, 

“எழுந்திருடி பொண்டாட்டி” என்றவன் அவள் எழும்பாமல் தூங்க, போர்வையோடு அவளை வாரி தூக்கி சென்றவன், விடியற்காலை மேகங்கள் சூழ்ந்த மலை முகடை காட்டினான்.

 

 

பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது.. “இட்ஸ் வொண்டர்ஃபுல்” என்று கண்களை விரித்து பார்த்தவள், “ரசிகன் டா நீ..” என்க.. அவளை மேலும் கீழும் பார்த்து, “இந்த ரசிகனோட ஆலாபனையை நைட்டு கேட்கல நீ” என்று அவளை நாணத்தில் சிவக்க வைத்தான்.

 

“இந்த இடம் எனக்கு ரொம்ப ப்ரீஸியஸ்.. ஏன் தெரியுமா? உன் மீதான என் காதலை உணர்த்திய இடமிது.. எங்கு காணினும் நின் காதல் முகம்!! நீக்கமற என்னுள் நுழைந்து விட்டாய் என புரிந்த இடமிது.. பழி வாங்க.. பழி வாங்க என்று ஆயிரம் முறை எனக்கு நானே உரு போட்டுக் கொண்டாலும்..

அவை அனைத்தையும் சில்லு சில்லாக உடைத்து, என் இதயம் நுழைந்து என் ஊணோடும் உயிரோடும் கலந்து விட்டாய் என உணர்ந்த இடமிது..” என்று காவி

யமாக தன் காதலை வெற்றி கூற..

 

“எனக்குமே ஆஸ்திரேலியா போன போது எங்க பார்த்தாலுமே உங்க முகம் தான் ஹல்க்” என்றவளின் முகத்தை தாங்கி இதழ்களை கொய்திருந்தான்.

 

காதலே.. காதலே..

1 thought on “எங்கு காணினும் நின் காதலே… 26”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top