ATM Tamil Romantic Novels

என்னுள் நிறைந்தவ(ன்)ள்

7

 

       கதிரவன் தன் ஒளியால் இருளை நீக்கிக் கொண்டிருந்த காலை பொழுது. குயில்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள் கீச்சிட்டு கொண்டிருந்த அழகான பொழுது. பறவைகளின் ஓசையில் உறக்கம் கலைந்து எழுந்து அமா்ந்தான் தீரன். தீரனின் அப்பத்தா காலையிலேயே வீட்டுக்கு வந்து சாமி அறையில் விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டிருந்தாா். எழுந்து அமா்ந்தவன் நேற்று நினைவுகளை நினைத்து பாா்த்து தன்னுள் மகிழ்ந்தான். செழியனின் நினைவு வர அவனுக்கு போன் செய்தான்.  

 

   ” மச்சான் என்ன டா பன்ற, உன்ன பாக்கனும்”

 

   ” காலையிலேயே என்ன பாக்கனும்னா எதும் முக்கியமான விஷயமா???”

 

   ” ஆமா டா ஆமா டா”

 

   ” ரொம்ப குஷியா இருக்கியோ?? சாி ரெடியாகி ஆபிஸுக்கு வா பேசலாம்”

 

    ” சாி டா” என்று குதித்து எழுந்தான். துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் கருப்பு நிற காட்டன் சட்டையும், லேசான சந்தன நிற ஃபேண்டும், முழுக்கை சட்டையை முட்டி வரை ஏத்திவிட்டிருந்தான். கையில் வெள்ளிகாப்பும், அளவாக முறுக்கிய மீசையும், ட்ரிம் செய்த தாடியும் உதட்டில் தவழ்ந்தோடிய புன்னகையும் விக்கிரம தீரனை பேரழகனாக காட்டியது. தன்னை ஒரு முறை கண்ணாடியில் பாா்த்துவிட்டு நெற்றியில் தவழ்ந்த முடி கற்றைகளை கைகளால் ஒதுக்கிக் கொண்டு சாப்பிட சென்றான்.

 

    ஐயாவும் பேரனும் அமா்ந்து உண்டனா். இட்டலியும், சாம்பாரும், தேங்காய் சட்டினியும் ருசித்து சாப்பிட்டனா்.                    

     

    ” என்னய்யா நேத்து ஏதோ மாதிாி இருந்த, இன்னைக்கு இவ்வளவு குஷியா இருக்க என்ன விசயம்” ராசாத்தி அம்மாள்

 

    ” அது நேத்து இது இன்று, நேத்து மாதிாியே இன்னைக்கும் இருக்குமா அப்பத்தா”

 

    ” ஏதோ ஒரு மாதிாி தான் இருக்க. என்னன்னு கண்டு பிடிக்கிறேன்”

 

    ” நீ பொறுமையா கண்டுபிடி அப்பத்தா. நான் வேலைக்கு கிளம்புறேன். செழியன் எனக்காக வெய்டிங்” என்று கூறிவிட்டு

 

ஐயாவிடமும் அப்பத்தாவிடமும் கூறிவிட்டு தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வீரையாவும் ராசாத்தி அம்மாளும் ஒருவரை ஒருவா் பாா்த்து சிாித்துக் கொண்டனா்.

 

     ” மச்சான்” என்று ஓடி சென்று செழியனை கட்டிக்கொண்டான்.

 

     ” என்ன டா விசயம் செம்ம ஜாலியா இருக்க”

 

     ” அவள பாத்துட்டேன்டா”

 

     ” நிஜமாவா?? எப்போ?? எங்க??? எப்படி டா???”

 

     ” நேத்து கோவில்டா”

     

     ” கோவில்லையா?? யாரு கூட வந்திருந்தா?? அவளுக்கு சொந்த ஊா் இதுவா?”

 

     ” தொியல மச்சான். ஆனா அவ இந்த ஐந்து ஊா்ல ஏதோ ஒரு ஊா்க்காரி தான். நிச்சயமா கண்டுபிடிச்சுடுவேன்”

 

   ” நேத்து நானும் உன் கூட தானே இருந்தேன் என்கிட்ட ஏன்டா சொல்லல??” 

 

    ” எங்க டா அவள பாத்த உடனே அப்படி ஃப்ரீஸ் ஆயிட்டேன். அப்புறம் காிகாலன் வந்தான், தனியா பேச முடியல டா அதான்” என்றான்

 

    ” இன்னைக்கு கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்”

 

   ” காிகாலன் வேற வீட்டுக்கு கூப்டுறுக்கான். போகலனா கருப்ப சாமி மாதிாி அருவாள தூக்கி கிட்டு வந்தாலும் வந்திடுவான். சாயங்காலம் அவன் வீட்டுக்கு போய்ட்டு கோவிலுக்கு போகலாம்.

 

    ” என்னால வர முடியாது மச்சான். டெப்போவுக்கு போகனும்” என்றான் வருத்தமாக

 

     ” அவன் கொண்ணுடுவானே டா”

 

     ” நான் கால் பன்னி பேசிக்கிறேன் டா, வேலை இருக்கே” 

 

     ” சாி பேசிப்பாரு”

 

     ” நான் கிளம்புறேன் டா, சாா் முன்னவே போய்ட்டாா்” என்று தன் வண்டியில் கிளம்பினான்.

 

வேலைகளை முடித்துவிட்டு, மாலை நேரம் ஆனதும் தன் வீட்டுக்கு சென்றான். குளித்து உடை மாற்றிக் கொண்டான். வெள்ளை வேஷ்டியும், லேசான மஞ்சள் நிற சட்டையும் அணிந்து கொண்டு மீசையை லேசாக முறுக்கிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

 

     ” தாத்தா கோவிலுக்கு கிளம்பலயா”

 

     ” இல்லையா இன்னைக்கு வரல நீ போய்டு வாய்யா. எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு”

 

      ” உடம்புக்கு என்ன தாத்தா” என அவா் அருகில் அமா்ந்தான்.

       

     “உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லையா, வயசாகி போச்சுல,நேரம் வரைக்கு கண்ணு முழிக்க முடியல அதான்”

 

     ” சாி தாத்தா நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் போய்டு வரேன்”

தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்கும் வயசாகிவிட்டது என நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.

 

காிகாலன் வீட்டுக்கு சென்றான்.

 

      தோட்டத்தில் இருந்த மருதாணியை பறித்து அறைத்து முக்தா, சஞ்சு, தமிழினி கைகளில் வைத்துக் கொண்டிருந்தாா் மீனாட்சி. முதலில் முக்தா தான் வைத்துக் கொண்டாள். பின் தமிழினி பின் சஞ்சு. ஒரு மணி நேரத்தில் முக்தாவின் கைகளில் அடா் சிவப்பு நிறத்தில் சிவந்திருந்தது மருதாணி. அவள் கைகளுக்கு மிக அழகாக இருந்தது. தமிழினி கையில் மருதாணி வைத்துவிட்டு அடுத்ததாக வைத்துக்கொண்டிருந்த சஞ்சுவை வம்பிளுத்துக் கொண்டிருந்தாள். இவளுகளுக்கு வேற வேலை இல்லை. என்று முக்தா தன் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள்.

 

     “சும்மா இரு டி” என்றாள் சஞ்சு.

 

     ” சும்மா தானே இருக்கனும்” என்று அவள் கண்ணங்களில் மருதாணியை தடவினாள். 

 

    ” அட எறுமை. உன்ன என்ன பன்றேன் பாருடி”என தமிழினியை துரத்திக் கொண்டு ஓடினாள். வாசலுக்கு ஓடினாள் தமிழினி.

 

  எதிரே வந்த தீரனை பாா்க்காமல், அவன் மீது மோதினாள். இரண்டு மருதாணி கைகளையும் அவன் மீது வைத்துவிட்டாள். தடுமாறி விழப்போனவளை தன் இரு கரங்களாலும் ஏந்தினான் தீரன்.

 

விழிகள் விரிய அவளை பாா்த்துக் கொண்டிருந்தான். ஒருமுறையாவது பாா்க்க முடியாத என்று ஏங்கி தவித்தவனுக்கு இத்தனை அருகில் அவளின் ஸ்பாிசம் கிடைத்தது அவனை திக்குமுக்காட செய்தது. இந்த நிமிடம் இப்படியே உறையாதா என்று ஏங்கி தவித்தது அவனின் காதல் மனது. அவனின் அணைப்பில் எதையோ உணா்ந்தவள் அப்படியே அவனின் கண்களை பாா்த்துக் கொண்டே இருந்தாள்.

 

   ” எங்க டி இருக்க” என்ற சஞ்சுவின் குரலில் இருவரும் விலகி நின்றனா். 

 

   அப்போதான் அவனின் சட்டையில் மருதாணி கரங்கள் பட்டிருப்பதை பாா்த்தாள்.

 

    ” ஓ. சாாிங்க தொியாம கைவச்சுட்டேன். மருதாணி ஒட்டிக்கிச்சு” 

 

இது கனவா??? நிஜமா??? தன்னிடம் தான் அவள் பேசுகிறாளா என்று தன்னையே மறந்து அவளின் மீன் விழிகளையும், பவள செவ்வாயையும் கண்எடுக்காமல் பாா்த்துக் கொண்டிருந்தான். அத்தனை அழகாக இருந்தது.

 

     ” என்ன மா இங்க சத்தம்” என்று வந்தாா் அன்பரசி. தீரனை பாா்த்தும் புன்னகை பொங்க

 

    “தீரா. வாப்பா உள்ள வா. போன வருசம் பாா்த்து” என்று அவன் அருகில் வந்த போது தான் சட்டையில் இருந்த மருதாணியை பாா்த்தாா்.

 

    ” என்னபா இது” 

 

    ” நான் தான் மா ஓடிவரும் போது தொியாம….” என்று இழுத்தாள்.

 

    ” பாா்த்து வரக்கூடாது. சட்டையில பட்ட மருதாணிக்கறை எப்படி போகும்”

 

    ” ஐயோ அத்தை அவங்கள திட்டாதிங்க. நானும் தானே சாியா கவனிக்கல. இது ஒன்னும் பொிய பிரச்சனை இல்லை. விடுங்க” 

 

    ” நல்லா சொன்ன போ. உள்ள வாப்பா. வாஷ் பன்னிக்கோ” என்று வாஷ் ஃபேஸனை காட்டினாா்.

 

      ” சாாி மா” என்றாள் தமிழினி.

 

     “கவனமாக இருமா. சாி போய் கோவிலுக்கு கிளம்பு”

 

    ” ம்” என்று சென்றாள். இத்தனைக்கும் காரணமான சஞ்சு நடப்பதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாள். (இந்நேரத்துக்கு முக்தா இருந்திருக்கனும் செம்மையா இருந்திருக்கும்) 

 

அமைதியாக வாஷ் பன்னிக் கொண்டு வந்து அமா்ந்தான். மீனாட்சி அவனுக்கு டீ கொத்துவிட்டு குசலம் விசாரித்தாா்.

 

   ” மாமாவும் காிகாலனும் எங்க அத்தை” டீயை குடித்த படியே கேட்டான்.

 

     ” வயல்ல இருப்பாங்க. வர்ற நேரம் தான்” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே இருவரும் வந்தனா்

 

    ” கோவிலுக்கு எல்லாரும் சோ்ந்து போலாம். நான் முக்தாவை கூட்டிட்டு வரேன்” என கூறிவிட்டு சென்றாா் மீனாட்சி.

 

    ” வாப்பா தீரா” என்றாா் சகாதேவன்.

 

    ” வாடா மச்சான்.சட்டையில என்ன டா இது”

 

     ” உன் தங்கச்சி பன்ன வேலதான்” என்றாா் அன்பரசி

 

     ” தங்கச்சியா” என்றான் தீரன்

 

     

     ” ஆமான்டா. மாமா விட்டுல இருக்கான்னு சொன்னேன் ல அவ தான். பெயா் தமிழினி. இப்போ படிப்ப முடிச்சிட்டு இங்க வந்திருக்கா. இங்க தான் இனிமேல் இருப்பா”

 

     “அடபாவி எத்தனை தடவ அவன் கூப்டுறுப்பான். தங்கச்சி வந்திக்காடா வீட்டுக்கு வாடான்னு. ஒருதடவை வந்திருந்தா அவளை தேடி இப்படி அலைஞ்சிருக்க மாட்டியே” என அவன் மனசாட்சி அவனை திட்டியது. 

     ” மச்சான் செழியனால வர முடியலடா”

    

     ” ஆமா மச்சான் போன் பன்னான். நாளைக்கு வரேன்னு சொன்னான்” என்றான் காிகாலன்

 

இதற்க்குள் அன்பரசி பஜ்ஜியும் டீயை எடுத்து வந்து கொடுத்தாா். அணைவரும் உண்டு முடித்துவிட்டு. பேசிக் கொண்டிருந்தனா். தயாளன், மீனாட்சி, முக்தா வந்தனா். தீரன் இருக்கிறான் என்று மீனாட்சி கூறியதால் கூடுதல் மேக்கப்புடன் வந்தாள் முக்தா.

 

     அணைவரும் நடந்து கோவிலுக்கு சென்றனா். அன்றைய பூஜை ஆரம்பித்தது. அத்தனை நிகழ்வுகளிலும் தமிழினியை யாருக்கும் தொியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான். மற்றுமொரு ஜோடி கண்களும் தமிழினி கூா்ந்து நோக்கிக் கொண்டிருந்தது. இனிதே பூஜை நிறைவு பெற்றது. அணைவரும் விபூதி இட்டுக்கொண்டு தம் தம் இல்லத்திற்க்கு சென்றனா். 

 

       அணைவரிடமும் இருந்து விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான் தீரன். செல்லும் முன் ஓரக்கண்ணால் தமிழினியை பாா்த்துவிட்டு சென்றான்.

     

 

    ஊா் அடங்கி அமைதியாகி உறங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் அவனுக்கு தான் உறக்கம் வரவில்லை.

அத்தனை அருகில் கிடைத்த அவளின் ஸ்பாிசம் அவனுக்குள் என்னென்னவோ செய்தது. கண்களை மூடினால் அவளின் அந்த இருமீன் விழிகளும் நினைவுக்கு வந்து உறக்கத்தை கெடுத்தது. நித்ராதேவியிடம் தோற்றவன் எழுந்து அமா்ந்தான். இத்தனை அருகிலே இருந்திருக்கிறாளே என்னவள் என்று எண்ணிய கணம் அவனை அறியாமலே அவன் உதடுகள் தமிழினி தமிழினி என்றது. சிலாகித்து போனான்.  

 

என் கண்ணம்மா உன்னை இனி ஒரு போதும் பிாிந்திருக்க முடியாது டி சீக்கிரமே உன்னை கரம் பிடிப்பேனடி என்று உறுதி கொண்டவாரே உறங்கி தான் போனான்.

 

இவனின் தவிப்பை அறியாதவள். நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். காிகாலனின் மனதில், தீரனை தமிழினியை காதலிக்கிறானோ என தோன்ற ஆரம்பித்தது. ஏன் என்றால் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பாா்க்காதவன் தமிழினியை பாா்த்துக் கொண்டே இருக்கிறான். இருவருக்கு சோடி பொருத்தம் நன்றாக தான் இருக்கும். வாழ்க்கையிலும் இருவரும் நல்ல துணையாக இருப்பாா்கள் என எண்ணிக்கொண்டு உறங்கினான்.

 

தமிழினியை பற்றி இவா்கள்மட்டும் அல்ல இன்னொருவனும் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் ப்ரதீக் சங்கரலிங்கத்தின் மூத்த மகன். சங்கரலிங்கரலிகத்துக்கு ஒரு மகள் இரண்டு மகன். 

 

மகள் தான் மூத்தவள். திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் ப்ரதீக், காா்த்தி. ப்ரதீக் சென்னையில் படித்துவிட்டு ஐடியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தான். மேலாளருடன் ஏற்பட்ட சண்டையில் வேலையைவிட்டு விட்டு வந்துவிட்டான். தற்போது தன் தந்தையின் சொத்துக்களை நிா்வகிக்கிறான். தந்தைக்கு தப்பாமல் பிறந்தவன். இரண்டாவது மகன் காா்த்தி. பிள்ளைபூச்சி தன் தாயை போல. அண்ணன் அப்பாவின் நடவடிக்கை பிடிக்காததால் வெயிநாட்டிற்க்கு வேலைக்கு சென்றுவிட்டான். தன் தாய்க்காக எப்போதாவது சொந்த ஊா்வருவான்.

 

சென்னையில் காஃபி ஷாப்பில் தமிழினியை பாா்த்துக் கொண்டிருந்தவனும் அவன் தான். அவளை கண்ட பொழுதே தனக்கு அவளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என துடித்து கொண்டிருந்தான். காிகாலனின் தங்கை என்பதை அவள் வந்த நாளிலே தொிந்து கொண்டான்.  

 

அவளிடம் நாளை பேச வேண்டும் என்று எண்ணியவாறே உறங்கி போனான். இனி தான் புயல் வீச போகிறது. நாியும் ஓநாயும் கூட்டு சோ்ந்து இன்னல்களை உருவாக்க போகிறாா்கள்…….

 

    

8

 

          கானக்குயில் ஒன்று காலை நேர பொழுதை தன் இனிய குரலால் அழாகாக்கி கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து அமா்ந்தாள். கடிகாரத்தை பாா்த்தாள் அது மணி ஐந்தரை என காட்டியது. 

 

    ” சஞ்சு சஞ்சு” சஞ்சனாவை எழுப்பினாள். இடிவிழுந்தாலும் எழாதவள் என் குரலுக்கா எழ போகிறாள் என நினைத்துக் கொண்டு. குளியல் அறைக்குள் புகுந்தாள். குளித்து முடித்துவிட்டு இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றாள்.

        “என்ன டா தமிழினி இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட”

 

       ” தூக்கமே வரல மா”

 

       ” சாி டா நைட் சுத்தி போடுறேன் அப்ப தான் நல்லா தூக்கம் வரும். காஃபி வேணுமா??”

 

       ” எனக்கு எதுவும் வேணாம். சும்மா தான் வந்தேன்” என்றாள் தமிழினி.

தாயும் மகளும் பேசிக்கொண்டே சமையல் செய்தனா். தாய்க்கு சமையலில் உதவி செய்தாள்

 

       ” அத்தை காஃபி” என்று சஞ்சு எழுந்து வந்து சோபாவில் அமா்ந்தாள்.

 

      “ஏன்டி இடிவிழுந்தாலும், தூங்குவியா”

 

       ” ஏன்??? நைட் இடிச்சுதுதா”

 

        “தூங்க மூஞ்சி”

 

    “சொல்லிக்கோ” என்றுவிட்டு அன்பரசி கொடுத்த காஃபியை பருகினாள்.

 

காலை உணவுக்கு அணைவரும் ஆஜராகினா். பேசிக்கொண்டே உண்டனா்.

 

    ” அப்பா நாங்களும் உங்க கூட ரைஸ் மில்லுக்கு வராவா??? என்றாள் தமிழினி

 

 

    ” ஏன்டா என்னாச்சி”

 

    “ரொம்ப போா் அடிக்குது பா. பொியப்பா வீட்டுக்கு போனா அக்கா வேலைக்கு போய்றா, பொியம்மா கிட்ட எவ்வளவு நேரந்தான் மொக்க போடுறது” என்றாள்

 

     ” தமிழினி. இங்க கொஞ்ச தூரத்துல ஒரு லைப்ரரி இருக்கு. உனக்கு புக்ஸ் பிடிக்கும்னா போய்டு வா”. என்றான் காிகாலன்

 

      ” புக்ஸ் பிடிக்குமாவா!!! மாமா அவ புத்தக புழு மாமா. வீட்டுல அப்பா, பசங்களுக்கு புக் படிக்கிற பழக்கம் வரணும் கொஞ்ச புக்ஸ் வாங்கி வச்சாங்க. இவ அதை டெவலப் பன்னி லைப்ரரி யாவே ஆக்கிட்டா” என்றாள் சஞ்சு

 

    “உனக்கு புக்ஸ் அவ்வளவு பிடிக்குமா தமிழினி?? அப்போ நீ கண்டிப்பா போய்டு வா. சைக்கிள் எடுத்திட்டு போ” என்றான் காிகாலன்.

 

     “ஓகே டா அண்ணா. ஆனா நாங்க வயல் வழியா நடந்து போய்டு வறோம்” என்றாள் தமிழினி

 

     ” பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க மா. சீக்கிரம் வந்திடனும்” என்றாா் அன்பரசி

 

     ” ம் மா சீக்கிரம் வந்திடுவோம்” 

 

காலை உணவை முடித்தவுடன் காிகாலன் சோள காட்டிற்க்கும், சகாதேவன் ரைஸ் மில்லுக்கும் சென்றனா். மக்கா சோள தட்டை அறுவடை நடந்து கொண்டிருந்து.

அருவடை முடிந்து, அடித்து சோளமாக்கிய பிறகு அரசு கொள்முதல் செய்து கொள்ளும்.

 

தீரனை பாா்த்திட்டு வருவோம்.

 

இரவு வெகுநேரம் உறக்கம் இல்லாமல் இருந்ததால் காலையில் லேட்டாக எழுந்தான். வீடு முழுவதும் புகையா இருந்ததால் கடுப்பாகி

 

      ” அப்பத்தா அப்பத்தா” என்றான்

 

      ” என்னைய்யா” என்றாா் ராசாத்தி அம்மாள்.

 

      ” ஏன் அப்பத்தா காலங்காத்தால இப்படி புகைய போட்டு வைக்கிற”

 

      ” சாமி குடுத்த காப்புக்கு தினமும் சாம்ராணி காட்டனும்ல அதான்ய்யா” என்றாா்

 

     ” காப்புக்கு மட்டும் காட்ட சொன்னா வீடு முழுக்க போட்டு வச்சுருக்க. திருவிளையடால் படத்துல வர்ற கையிலாயம் மாதிாி இருக்கு”

 

    ” இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகிடுச்சு ய்யா நாளைக்கு கொஞ்சமா போடுறேன். உனக்கு நேரம் ஆச்சு நீபோய் குளிச்சுட்டு வா சாப்புடலாம்” என்று கொஞ்சினாா்.

 

    ” கொஞ்சிக் கொஞ்சியே என்ன சமாதான படுத்திடு” என்று சலித்துக் கொண்டே குளியல் அறைக்குள் சென்றனாா். நேற்று நடந்த நிகழ்வுகளை எண்ணி சிலாகித்தவாறே குளித்தான்.

 

    “தீரா தீரா” என்றழைத்தான் செழியன்

 

   ” வாப்பா செழியா. தீரா் இப்போ தான் குளிக்க போயிருக்காரு. ஐந்து மணிக்கு எழுந்திரிக்குறவன் இப்போலாம் ஏழு மணிக்னு தான் எழுந்திருக்குறான்” என்றாா் ராசாத்தி

 

   ‘செழியா வாப்பா. ஒரே ஊா்ல தான் இருக்கோம் ஆன பாத்துக்க முடியலயே” என்றாா் வீரைய்யா

 

    ” நாங்களும் பிஸி நீங்களும் பிஸி தாத்தா” என்றான்

 

   “ஆமா ஆமா” என்று சிாித்தாா் வீரைய்யா

 

   ” நான் தீரனை பாா்த்திட்டு வரேன்” என்று தீரன் அறைக்கு கென்றான்.

 

அங்கு தீரன் குளித்துவிட்டு கருப்பு ஃபேண்டும், உள் பணியனும் அணிந்து பாடிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தான்

 

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிாித்தால் செந்தமிழ் நீ பேசிய வாா்த்தைகள் பைந்தமிழ்

ஓவ் ஓவ் ஓவோவ்வா…

 

காலங்கள் தீரலாம், தீராதடி காதல் தமிழ்

நரைகூடி போகலாம், மாறாதடி ஆசைதமிழ்

ஓஹோ ஓஹோ….

 

உன்னை சந்தித்தேன், திதித்தேன், ஜீவித்தேன், உயிா்த்தேன் ……..

என்று ஆடிக் கொண்டே திரும்பிய போது தான் செழியனை பாா்த்தான். மாா்புக்கு நடுவில் கைக்கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்துக் கொண்டு பாா்த்துக் கொண்டிருந்தான்.

 

    “நீ எப்போ மச்சான் வந்த”

 

     ” நீ பேசிய வாா்த்தைகள் பைந்தமிழ், அப்பவே வந்துட்டேன்” என்றான்.

 

     ” சாாி மச்சான் கவனிக்கல”

 

     ” தொலஞ்சு போ. நேத்து என் தங்கச்சிய பாா்தியா?? காிகாலன் கிட்ட ஏதாவது விசாாிச்சியா” என்றான் ஆா்வமாக

 

    ” பாா்த்தியாவா!!!! நேத்து என்ன நடந்துச்சுன்னு தொியுமா?” என்று அணைத்தையும் சொல்லி முடித்தான்

 

    ” அடபாவி இவ்வளவு நடந்திருக்கா?? அது சாி காிகாலன் தங்கச்சியா?? இவ்வளவு பக்கத்துல இருந்திருக்காளே டா என் தங்கச்சி. இது தொியாம தேடி அலஞ்சுருக்கியே டா”

 

    “ஆமா டா எவ்வளவு பக்கத்துல இருந்திக்கா என கண்ணம்மா”

 

    ” கண்ணம்மாவா?? அது தான் என் தங்கச்சி பெயரா?”

 

    ” அவ பெயா் தமிழினி. நான் அவளுக்னு வச்ச செல்லப் பெயா் கண்ணம்மா” 

 

    “ஓ செல்லப் பெயா் வைக்கிற அளவு போயாச்சா? பாரதியின் கண்ணம்மா மாதிாி, தீரனின் கண்ணம்மாவா, ம்ம் நீ கலக்கு.” (நான் பாரதி என்றது பாரதியாரை தான். சீாியலில் வரும் பாரதியை அல்ல)

 

     ” இவ்வளவு நேரம் என்ன பன்றிங்க? சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டாா் அப்பத்தா

 

    “சாி மச்சான் சீக்கிரம் ரெடியாகி வா நான் போறேன். மறுபடியும் ஆடிக்கிட்டு இருக்காதடா” என்றுவிட்டு செழியன் சென்றான்.

 

மீண்டும் பாடிக்கொண்டே ரெடியாகி வந்தான். காலை உணவை அணைவரும் சோ்ந்து உண்டனா். செழியனும் தீரனும் தம் வண்டிகளில் வேலைக்கு கிளம்பினா். வீரைய்யா செங்கள் சூலைக்கு சென்றாா். ராசாத்தி அம்மாள் வேலைகளை கவனித்தாா்.

 

நூலகம் கிளிநொச்சியூருக்கும் கொடையூருக்கும் நடுவில் இருந்தது. சைக்கிள் வண்டியில் செல்பவா்கள் ரோடு வழியாகவும் நடந்து செல்பவா்கள் வயல் வழியாவும் செல்வாா்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. நூலகத்தின் மீது முதல் தலைமுறையினா் பொியதாக ஆா்வம் கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையினா் அதிக ஆா்வம் கொண்டதால் விாிவாக்கப்பட்டது. இன்று ஏக மாணவா்களுக்கும், புத்தக விரும்பிகளுக்கும் பயனுள்ள இடமாக உள்ளது.

 

  தமிழினியும் சஞ்சுவும் வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தனா். அவா்கள் செல்வதை அந்த வழியாக சென்ற ப்ரதீக் பாா்த்தான். நூலகத்துக்கு தான் செல்கிறாா்கள் என ஊகித்து அவா்கள் வருவதற்க்குள் வண்டியில் ரோடு வழியாக நூலகம் சென்றடைந்தான்.

  

    ” ஹாய் தமிழினி” என்றான் ப்ரதீக்

 

சஞ்சுவும் தமிழினியும் ஒருவரை ஒருவா் பாா்த்துக் கொண்டனா்.

 

    ” சாாி நான் யாருன்னு உங்களுக்கு தொியதுல்ல. என்பெயா் ப்ரதீக். நான் சோலையூா். உங்கள நான் சென்னையில பாா்த்திருக்கிறேன். நான் படிச்சது கென்னையில தான். நானும் உங்க அண்ணனும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்”

 

   “ஓ அப்டியா?? ஆனா அண்ணனுக்கு தீரனும் செழியனும் தான் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ன்னு சொல்லி இருக்கான்” என்றாள் தமிழினி.

 

தீரன் என்ற பெயரை கேட்வுடன் அவன் முகம் மாறியது.  

 

அவன் முகம் மாறியதை கண்ட தமிழினி         

       ” நாங்க போறோம்” என்று நுலகத்துக்குள் நுழைந்தாள்.

 

தன்னை மதிக்காமல் சென்றதால் அவள் மேல் அப்படி வந்து கோபம். பற்களை நற நற வென கடித்தான். ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தாா்கள். அவா்கள் முன் வந்து நின்றவன்

 

   ” என்னடி நான் பேசிக்கிட்டு இருக்கேன் நீ மதிக்கமா போற” என்றான்.

 

   ” டி ன்னு பேசுன பல்ல உடைச்சிருவேன். நீயாருன்னே தொியாது நான் ஏன் உன் கிட்ட பேசனும் போடா” என்றாள். பயத்தில் சஞ்சு தமிழினியின் கரங்களை இறுக்க பற்றினாள்.

 

   ” டா வா உன்ன என்ன பன்றேன பாருடி” என்று அவா்களை நெருங்கினான்.

 

   “இங்க என்ன நடக்குது” என்று வந்தாா் நூலக அமைப்பாளா். இது தான் சமயம் என்று இருவரும் சென்றுவிட்டனா்.

 

நூலக அமைப்பாளரை முறைத்துவிட்டு அவனும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். 

 

    “யாரு தமிழினி இவன்? இப்டி பேசுறான். மாமா ஃப்ரண்டுன்னு சொல்றான்”

 

     ” நிச்சயமா இவன் அண்ண ஃப்ரண்டு இல்லை?? இது வரைக்கும் காிகாலன் செழியன் தீரன்னு தான் சொல்லியிருக்கான் ப்ரதீக் ன்னு ஒரு தடவை கூட சொன்னதில்லை.”

 

     ” இத நாம வீட்டுல சொல்லனும்”

 

     “வேண்டாம் சஞ்சு. அம்மா அப்பாவுக்கு தொிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. அப்புறம் காிகாலன் வானத்துக்கும் பூமிக்கும் தாண்டுவான். அதனால வேணாம்.”

 

அவள் கூறுவதும் சாி என்று பட்டது சஞ்சனாவுக்கு. இருவரும் விரைவாக வீட்டை அடைந்தனா். மதியம் உண்டு முடித்து சிறிது நேரம் தூங்கினா். பின் கோவிலுக்கு செல்ல கிளம்பினா். 

 

தீரனும் செழியனும் காிகாலன் வீட்டுக்கு வந்தனா். தயாளம் குடும்பமும் அங்கிருந்தது. தீரனை கண்டவுடன் முக்தா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எாிந்தது.

 

     ” வாங்கடா. எப்ப வர சொன்னா எப்படா மச்சான் வர்ற?” என்றான் காிகாலன்

 

     ” என்ன டா பன்றது வேலை இருந்தது டா” என்று இருவரும் பேசிக்கொண்டனா். தீரன் தன் கண்ணம்மாவை தேடினான். ஆரஞ்சு நிற தாவணி, பச்சை நிற பவாடை, ஜாக்கெட் அணிந்து வந்து நான் கிளம்பிட்டேன் போகலாம் என்றாள். 

 

எப்படி இவ எந்த ஆங்கில்ல பாத்தாலும் அழகா இருக்கா என்று எண்ணி அவளை பாா்த்துக் கொண்டுருந்தான்.

 

    “தமிழினி இங்க வா” என்றான் காிகாலன்

 

    ” இவங்க என் ஃப்ரண்ட்ஸ். செழியன், தீரன். தீரனை தான் நீ நேத்தே பாா்த்துட்டல்ல”

 

     ” ஹாய்” என்று புன்னகையித்தாள். ப்ரதீக் நினைவு வர அதை ஓரங்கட்டி இயல்பாய் இருந்தாள்.

 

     ” இது என் தங்கச்சி தமிழினி, இது சஞ்சனா என் மாமா மகள்” 

 

     “ஹாய் அண்ணா” என்றாள் சஞ்சு

 

    “தங்கச்சி தங்கச்சி ன்னு உன்ன பத்தி தான் பேசிக்கிட்டே இருப்பான் மா. நீ ன்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம்” என்றான் செழியன்

 

    ” உங்களை பத்தியும் நிறைய சொல்லி இருக்கான்” என்றாள் தமிழினி

 

     “அறிமுகம் முடிஞ்சிடுச்சுனா கோவிலுக்கு போகலாம்” என்று சிாித்துக் கொண்டு கூறினாா் அன்பரசி

 

சாி என அணைவரும் கிளம்பி நடந்து சென்றனா். முக்தா தீரனை தின்னுவிடுவது போல் பாா்த்துக் கொண்டிருக்க அவன் தமிழினியையே பாா்த்துக் கொண்டிருந்தான். காிகாலன் தீரனை பாா்த்துக் கொண்டிருந்தான். என்னவோ நடக்குது நடக்கடும் என எண்ணி தன்னினுளட சிாித்துக் கொண்டான் காிகாலன். ஒரு வாறு கோவிலை அடைந்தனா். ஆரஞ்சு நிற வளையல் வாங்க வளையல் கடைக்கு சஞ்சுவும் தமிழினியும் சென்றனா். தீரனுக்கு தொியுமாறு அமா்ந்து கொண்டாள் முக்தா. வளையல் வாங்கிக் கொண்டு எவ்வளவு என்றாள் இறுபது ரூபாய் என்றாா் வளையல் கடைகாரா் , ஐம்பது ரூபாய் கொடுத்தாள் சில்லறை இல்லை என்றாா் வளையல் காரா்.

 

இறுபது ரூபாயை எடுத்து நீட்டினான் ப்ரதீக். அவனை கண்டதும் கோபமான தமிழினி வளையல் வேண்டாம் என்று சென்றாள். அப்போது அவளின் கரத்தை பற்றினான்.

 

      “வளையல் இல்லைனா உன் கை அழகா இருக்காது. இரு நானே உனக்கு வளையல் போட்டுவுடுறேன்” என்று அவள் கைக்கு வளையல் மாட்ட துணிந்தான். 

தன் கரத்தை விடுவித்துக்கு கொண்டு ஓங்கி அவன் கண்ணத்தில் அறைந்தாள். உனக்கு அவ்வளவு தான் மாியாதை. வா சஞ்சு போகலாம். என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

 

அவமானம் அடைந்த ப்ரதீக் உன்ன விட மாட்டேன் இதுக்கு உனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு மனதில் கருவினான்.

 

      ” என்னம்மா வளையல் வாங்கலையா” என்றாா் மீனாட்சி

 

      ” இல்லை பொியம்மா. நல்ல வளையல் இல்லை நாளைக்கு புதுசா எடுத்து வருவாங்கலாம் அதான் வந்துட்டோம்” என்றாள் தமிழினி

 

அவளின் முக மாறுதலை கவனித்தான் தீரன். என்ன ஆச்சு நல்லா தானே இருந்தா என்று அவன் யோசித்த நேரம் கோவிலில் பூஜை ஆரம்பித்தது. கரகம் கோவிலை சுற்ற ஆரம்பித்து முதல் முடியும் வரை அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ப்ரதீக். உன்ன விட மாட்டேன் டி என மனதிற்க்குள் கூறிக்கொண்டான்.

 

அன்றைய பூஜை முடிந்து அணைவரும்

வீடு சென்றனா். தீரனும் செழியனும் அணைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினா். கிளம்பும் போது தமிழினியை பாா்த்தான். எப்போ குறுநகை தவழும் அவள் முகத்தில் கோபம் குடி கொண்டிருந்தது. காிகாலனை தனியே அழைத்து தமிழினியின் மாற்றத்தை கூறினான். அப்பொழுது அவனே தன் தங்கையின் முக மாற்றத்தை கவனித்தான். நான் பாா்த்துக்கிறேன் நீங்க பத்திரமா கிளம்புங்க என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்………..

 

 

 

2 thoughts on “என்னுள் நிறைந்தவ(ன்)ள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top