27
வெற்றிவேந்தன் நிவேதிதா, திருமணம் முடிந்த பதினைந்து நாட்களில் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் சுவாதி. அங்கே தன்னுடைய தொழில்துறை நண்பர்களுக்காக ஒரு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார். அதே மிடுக்கான தோற்றம் நிமிர்ந்த பார்வையோடு வளைய வந்தவரை பார்த்தவர்களுக்கு சற்றே நிம்மதி..
மேகநாதனை கேட்டவர்களுக்கு “ஹீ இஸ் நோ மோர்!!” என்றே பதிலளித்தார். அவர் வாழ்க்கையில் இனி அவர் ‘நோ மோர் தான்!!’ யார் எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்களோ எடுத்துக் கொள்ளட்டும் என்ற பாவனை தான் சுவாதியிடம். கணவனின் இந்த மறுபக்கத்தில் அவர் சுருண்டது என்னவோ ஒரு சில நாட்கள்தான். மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையென இதோ தனது தொழிலை பார்க்க வந்து விட்டார்.
அதேநேரம் தாயாய் நிவேதிதாவுக்கு செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது அல்லவா? அதற்கு தான் ஒரு சிறிய கெட் டுகதர் மாதிரி தன் தொழில் வட்டாரங்களுக்கு தன் மகளையும் மருமகனையும் அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த தொழிலதிபர்களை சுவாதி வெற்றிவேந்தனுக்கு அறிமுகம் செய்து வைக்க.. முதல் வார்த்தை மட்டுமே அவருடையதாக இருக்கும். அடுத்தடுத்து அவர்களைப் பற்றி.. தொழில் பற்றி என கூறி ஒரு சிறு நல விசாரிப்புடன் அழகாக முடித்து வைப்பான் வெற்றி வேந்தன்.. வேந்தனாய்!!
ஏதோ இரண்டு மூன்று நபர்களை மட்டுமே தெரிந்தது போல இருக்கும் என்று நினைத்திருக்க.. இவனோ ஓரிருவரை தவிர மற்ற அனைவர் பற்றிய தகவல்களை இவன் கூறுவதை பார்த்து அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த பிரமிப்பு.. அவரைப் பொறுத்தவரையில் வெற்றிவேந்தன் மதுரையில் தொழில் நடத்தும் தொழிலதிபர் மட்டுமே!! அதை தாண்டி பகைக்காக தன் பெண்ணை பணயம் வைத்தாலும்.. எங்கோ மூளையின் ஒரு மூலையில் காதல் பொறி பற்றி.. இன்று தன் மகளை கைப்பற்றி இருக்கிறான். இது எல்லாத்தையும் விட புனிதாவின் அண்ணன் மகன் கண்டிப்பாக நல்லவனாக இருப்பான் என்று அந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே சுவாதியிடம்!!
இன்று இதை எல்லாத்தையும் தகர்த்து எறிந்து தனக்கென்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சுவாதியையே பிரமிக்க வைத்தது இந்த கிராமத்து காளை. அவர் ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை இவன் அருகில் கூட நிற்க முடியாத அளவுக்கு இவனின் பிம்பம் வளர்ந்து கொண்டே சென்றது அந்த ஒற்றை விருந்திலே!!
இவன் மட்டுமா?? வந்தவர்கள் பலரும் நல்ல பரிச்சயத்துடன் “ஹாய் வெட்ரி” என்று குழைத்து குழைந்து பேச பேச.. அதற்கு சற்றும் குறையாத அதே மேல்நாட்டு ஆங்கில பாணியில் அவர்களிடம் பேசினான் வெற்றி. அம்மாவின் இந்த ஆச்சரிய பார்வையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதா, வெற்றி மற்றவரிடம் பேசி கொண்டு இருக்கும் சமயத்தில் வெற்றியைப் பற்றி அனைத்தும் கூற.. அவருக்கு ஆனந்தமே!! மகளுக்கு பொருத்தமான மணமகன் கிடைப்பதைவிட பெற்றவருக்கு வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்? அந்த பொருத்தம் வெறும் பணம் அந்தஸ்து மட்டும் இல்லை.. குணத்தாலும் நடத்தையிலும் கூடத்தான்.. அதன்பின் மேலும் ஒரு பத்து நாட்கள் வெற்றியும் நிவேதிதாவும் ஆஸ்திரேலியாவில் தேனிலவை கொண்டாடி விட்டே மதுரை வந்தனர்.
வெற்றி வந்தவுடன் தான் அடுத்து கதிரின் கல்யாண வேலைகள் நடக்கத் துவங்கின.. பெண் பார்ப்பதிலிருந்து கல்யாணம் முடியும் வரை இரு வீட்டினரும் சமுதாய பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்க.. “எங்களுக்கு இதுதான் பழக்கம்!!” “இல்லை! இல்லை!! இப்படித்தான் செய்ய வேண்டும்!!” என்று பெரும்பான்மை நேரம் அமைதியாக சென்றாலும் சில நேரங்களில் இம்மாதிரியான பேச்சுக்களும் முணுமுணுப்புகள் இரு பக்கங்களும் இருந்து எழத்தான் செய்தன..
ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி நம் பிள்ளைகள்.. அவர்களின் சந்தோசம் முக்கியம் என்ற இருவரின் பெற்றோர்களின் முயற்சியால் அம்மாதிரி பிரச்சினைகள் எதுவும் பெரிதாகாமல் சுமூகமாகவே நடந்தேறியது கதிர்வேந்தன் பத்ம பிரியலோச்சனி திருமணம் வெகு சிறப்பாக கள்ளழகர் கோவிலில்… இரு குடும்பத்துக்கும் இதில் ஏக சந்தோஷங்கள்.
அதன்பின் இவர்களுக்கான முதலிரவுக்கு நாள் பார்க்க பத்மாவின் வீட்டினரோ.. “எங்கள் வீட்டில் தான் நடக்க வேணும். அதுவும் நல்ல நாள் பார்த்து நாங்க தான் மாப்பிள்ளையை அழைத்து வருவோம். அதுவரை பெண் எங்க வீட்டில தான் இருக்க வேணும்” என்று கூறிவிட.. “என்னது?? நாள் நட்சத்திரம் பார்த்து அதுக்கப்புறம் தான் கூட்டிட்டு வருவீய்ங்களா?” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டுவிட்டான் கதிர்.
கதிரின் செய்கையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் நிவேதிதா. “ஏய்.. பான்ட்ஸ் டப்பா.. வாய மூடு!! நீ ரெண்டு மூணு முறை கல்யாணம் நாலஞ்சு ஹனிமூன் முடிச்சிட்டு குஜாலா வந்தவ.. எனக்கு பாரு.. ஒரே ஒரு கல்யாணம் பண்ணியும் அதுக்கப்புறம் நடக்க வேண்டிய ஒரே ஒரு முதலிரவு கேள்விக்குரியா நிக்குது? இதுக்கு மேல நீ சிரிச்சு வச்ச??” என்று அவன் முறைக்க..
சட்டென்று அவன் முதுகில் ஒரு அடி விழ திரும்பி பார்த்தால் அங்கே மரகதம் “அது என்ன மதனிய.. சும்மா பான்ட்ஸ் டப்பான்னு கூப்பிடுறது. ஒழுங்கா மதனினு கூப்பிடு” என்று அவனை திட்டி விட்டு செல்ல…
“எவ்ளோ பெரிய விஷயம் இங்கே சிக்கலா இருக்கு. உங்களுக்கு இந்த பான்ட்ஸ் டப்பாவை கூப்பிடுறது தான் இப்ப பிரச்சனையா? எங்க என் பேபி? எங்க என் பேபி?” என்று அவன் அப்பத்தாவை கூப்பிட..
“பாரு பேபி.. என் வாழ்க்கையில எல்லாரும் எப்படி எல்லாம் விளையாடுறாய்ங்க!!” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் கூற..
ஆசை பேரனின் அழுகையை தாங்குவாரா அந்த பாசமிகு அப்பத்தா..
“எவ்வளவு திமிரு இருந்தா உன் மாமனாரு இப்படி சொல்லி இருப்பான். நல்ல நாள் பார்த்து அதுக்கப்புறம் உன் கூட்டிட்டு போவானாமே?? எந்த ஊர்லையாவது இந்த மாதிரி ஒரு அநியாயம் நடக்குமா?” என்று அவர் கோபத்தில் கொந்தளிக்க..
“பேபி னா.. பேபி தான். பேபி பொங்குற பொங்கை பார்த்தா.. இன்னைக்கு என் பொண்டாட்டிய போய் கூட்டுட்டி வந்திடும் போலையே” என்று சந்தோஷ மிகுதியில் தன் அப்பத்தாவை கட்டிக் கொண்ட கதிர், “அப்படி சொல்லு பேபி.. அவருக்கு நாம யாருன்னு காட்டனும்!!” என்று கூற..
“அதாண்டா பேராண்டி.. அவிய்ங்களுக்கு நான் உடனே போனை போட்டு அவன உண்டு இல்லைன்னு ஆக்குறேன். அதெல்லாம் நடக்காது.. அதுவும் அவிய்ங்க வீட்ல தான் நடக்கணுமாமுல.. நான் சொல்றேன் அவன் பொண்ண எப்ப இங்க அனுப்புறானோ அப்பதான் உனக்கு முதலிரவு” என்று நடு வீட்டில் நின்று உரத்த குரலில் கூறிவிட்டு அவர் செல்ல..
“என்னது???” என்று கதிரின் சின்ன இதயம் உடைந்து தூள் தூளானது.
வாஞ்சி மலர் வெற்றி மூவரும் சற்று தள்ளி அமர்ந்து இவன் செய்யும் கூத்துக்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் இதில் தாங்கள் சொல்ல என்ன இருக்கிறது என்று அமைதியாக இருந்தனர். அப்பத்தா அதோடு விடாமல் போனைப் போட்டு பரமேஸ்வரனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.
இப்படியாக நல்ல நாள் என்று இவர்கள் குறித்த அந்த தினத்தில் “என் பேரனை அங்க அனுப்பவே மாட்டேன்” என்று விடாப்பிடியாக நின்று அழுது வெற்றிகரமாக கதிரின் முதலிரவை தடுத்துவிட்டார் அப்பத்தா!!
அதற்குப்பின் வாஞ்சியும் சுலோக்சனாவும் போய் பேசி தன் அம்மாவைப்பற்றி கூறி பெண்ணை அழைத்துக் கொண்டு வாங்க என்று சமாதானம் செய்து விட்டு வந்தனர்.
அந்தா இந்தா என்று அவர்கள் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தவர்கள், “நாளை முதல் ஆடி மாசம் தொடங்குது. அதனால் பேருக்கு பொண்ணு கொஞ்ச நேரம் உங்க வீட்டில இருக்கட்டும். சாயந்திரம் போல நாங்க கூட்டிட்டு போறோம்” என்று கதிரின் வாழ்க்கையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டனர்.
“என்னது ஆடிமாசமா?? ஆனி மாசம் நடந்த என் கல்யாணத்துக்கு நான் இன்னும் முதலிரவே கொண்டாடலையேடா?? அது காட்டியும் ஆடி மாசம்ன்னு சொல்லி பிரிச்சி வச்சிட்டீய்ங்களே?” என்று ஒரு கன்னி பையன் குமுறி குமுறி அழுவது எல்லாம் பொருட்படுத்தாத அந்த கல்நெஞ்சகார குடும்பமோ, கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் அன்று மாலையே பத்மாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
“ஒரு மாசமும் இவனை இங்கன வைச்சா ஏதாவது அந்த பொண்ணு வீட்ல போயி நின்னு நம்ம மானத்தை வாங்கவியான். அதனால இவனை ஊரு கடத்துறா” என்று அப்பத்தா வெற்றிடம் கூற.. தம்பியின் மனதை அறிந்த வெற்றிக்கு சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் பெரியவர்களை தட்டமுடியாமல் பதினைந்து நாளைக்கு அவனை கொடைக்கானலில் உள்ள அவர்களது தேயிலை தொழிற்சாலையை பார்க்க அனுப்பி வைத்துவிட்டான்.
“டேய் அண்ணா நீயெல்லாம் நல்லா வருவடா.. நீ மட்டும் விதவிதமா வித்தியாசமா கல்யாணம் பண்ணி முதலிரவு கொண்டாடிட்டு. எனக்கு மட்டும் எல்லாரும் சேர்த்து ஆப்பு வைக்கிறிய்ங்களா? பார்த்துக்கிட்டே இருங்க நான் என் காதல் கிளிய புடிச்சிகிட்டு பறந்து போக போறேன்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள்” என்றவன் வேண்டாவெறுப்பாய் கொடைக்கானல் போனான். தனியாகவா?? இல்லை இல்லை அவனுடைய நான்கு அல்லக்கைகளோடு தான்!!
இருபது நாள் முடிந்திருந்த நிலையில் மதுரைக்கு திரும்பியிருந்த கதிருக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. உடனே தனது அல்லக்கைகளுக்கு போனை போட்டு “டேய்களா!! அன்னைக்கு மட்டும் உங்க அண்ணிய தூக்கிட்டு வந்திய்ங்க இல்ல.. இன்னைக்கு உங்க அண்ணன் உங்க அண்ணி கிட்ட தூக்கிட்டு போங்கடா. உங்க அண்ணிய பார்த்தே ஆகணும்” என்று இவன் ஓரண்டை இழுக்க..
கதரின் அந்த சிவப்பு நிற ஜாக்குவார் கைத்தறி நகரை நோக்கி அர்த்தராத்திரியில் அமைதியாக பயணமானது யாரும் அறியாமல்..
வழக்கம்போல பத்மாவின் தம்பி பாலாஜியை கரெக்ட் செய்து அவன் மூலம் பத்மாவை வர வைத்து இருந்தான்.
அவர்களின் அதே இடிந்த காம்பவுண்ட் மறைவில்.. “பத்து.. என் மச்சக்கன்னி” என்று தாபம் மோகம் எல்லாம் பாய இறுக்க அணைத்துக் கொண்டான் பத்மாவை. அவளும் அவனுக்கு ஈடான அதே காதலுடன் அணைத்துக் கொள்ள சிறிது நேரம் பேச்சு இன்றி.. முத்தங்களும் சிணுங்களும் மட்டுமே அங்கே அரங்கேறியது.. அதுவே அவ்வப்போது வழக்கமாகியது ஆடி மாதம் முடியும் வரை.
அதன்பின் வெளிநாட்டுக்கு இருவருக்கும் ஹனிமூன் செல்ல வெற்றி டிக்கெட் எடுத்திருந்தான். இவர்கள் இருவரும் வெனிஸூக்கு செல்ல.. அதே நேரம் கொரோனா கொடூரமாக பரவ.. அந்த நாட்டு போலீஸ்காரர்களோ இருவரையும் பிடித்து கோரன்ட்டைனில் பதினைந்து நாட்கள் போட்டுவிட்டனர்.
அதற்குள் அவர்களது விசா காலமும் முடிய இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
நொந்து நூடுல்ஸாகி வந்த கதிரை இந்தியா எம்ஃபஸியும் “நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்று கூறி..
“பிடிடா அவனை..
போடுங்கடா கோரன்டனை.!!”
என்று வைச்சு செய்ய.. மீண்டும் பதினைந்து நாட்கள் என ஆவணி மாதம் சென்றுவிட.. வந்தது புரட்டாசி மாதம்.. கூடவே பரமேஸ்வரரும்.
காலையிலேயே மஞ்சள் வேஷ்டி சட்டை மஞ்சள் புடவையில் என்று அவர்கள் குடும்பமே மங்களகரமான மஞ்சளில் வந்து வேந்தன் வீட்டில் நிற்க..
“புரட்டாசி மாசம் நாங்க எங்கள் குல தெய்வமான திருப்பதி திருமலையானுக்கு விரதம் இருப்போம். என் பொண்ணுக்கு நல்லப்படியா கல்யாணம் நடந்தா குடும்பத்தோடு பாத யாத்திரை வரதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அதனால உங்க சம்மதத்தோடு மாப்பிள்ளையையும் பெண்ணையும் திருப்பதிக்கு நடைபயணமாக அழைச்சிட்டு போக வந்திருக்கோம்” என்று கூறி.. இம்முறை அணுகுண்டை தூக்கி கதிரின் வாழ்க்கையில் போட.. மேலிருந்து இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட கதிரோ.. மெல்ல பதுங்கிப் பதுங்கி வந்து பின் பக்கம் நிவேதிதாவோடு பேசிக்கொண்டிருந்த பத்மாவை சட்டென்று தூக்கி கொண்டு ஓடினான்.
நிவேதிதா ஒன்னும் புரியாமல் “ஏய்.. கதிரு மச்சான்.. ஏன் அவள தூக்கிட்டு போறீங்க?” என்று ஓட முடியாமல் ஓட..
நிவேதிதா ஓடுவதைப் பார்த்த வெற்றியோ பாய்ந்து வந்து இரண்டே எட்டில் அவளை நிறுத்தி “அறிவிருக்கா உனக்கு வயித்துக்குள்ள பாப்பா வச்சிகிட்டு இப்படி ஓடுற?” என்று திட்ட..
அவளோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க “ஆமால்ல.. ஆனா பாருங்க பத்மாவை இந்த கதிர் மச்சான் தூக்கிட்டு போறாரு. ஏன்?” என்று அப்பாவி போல் கேட்டாள்.
ஏற்கனவே பத்மாவின் பெற்றோர் வந்ததையும் பேசியதையும் கேட்டு வந்திருந்த வெற்றியோ “அவனும் அவனோட பாப்பாவுக்கு ரெடி பண்ண தூக்கிட்டு போறான் நீ வா” என்று நிவேதிதாவை உள்ளே அழைத்து சென்றான்.
“நல்ல குடும்பம் டா ஹல்க்.. நீங்க!! தூக்குறதையே வேலையா வச்சிருக்கீங்க!!” என்றவாறே சென்றாள்.
இங்கே இவர்கள் எல்லாம் பேசி முடித்து ஒருவழியாக கதிரையும் பத்மாவையும் அழைக்க.. அப்போது கதிரின் ஜாக்குவாரோ மதுரையைத் தாண்டி கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இம்முறை அல்லக்கைகளை விடுவித்து.. அதற்கு அவன் பட்ட பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்!!
கதிர் போய் சேருவதறக்குள் வெற்றி போன் மூலமாக அவனுக்கு தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்து வவைத்திருந்தான். ஒரு வினாடி கூட கடத்தாமல், தன்னவளை மெத்தையில் கிடத்தி தன் வேலையை செவவ்னே தொடங்கினான் கதிர்.
அவளது தோளிலிருந்த அவன் இடது கையை அவள் முகத்துக்கு நகர்த்தியவன். அவள் கன்னத்தில் விரலால் வருடி.. அழுத்திப் பிடித்தவனின் வலக்கை அவள் இடுப்பை இறுக்க.. அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன் இதழ்களை கவ்வி சுவைக்க..
”ம்ம்!!” எனச் சிணுங்கினாலும் அதிக எதிர்ப்பில்லாமல்.. அவன் பக்கம் முகத்தைத் திருப்பி ஒத்துழைத்தாள் பத்மா.
அவளது பவழ இதழ்கள் அழகாய் பிளந்து விரிந்திருக்க.. அவன் உதடுகள் அவள் உதடுகளுக்கு பக்கத்தில் கொண்டு போய்.. மெதுவாக உரசினான்.
”செம டேஸ்ட்.. மச்சக்கன்னி.”
”இதுலாம் வேணாம் மச்சி..” முனகினாள்.
அவள் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக் கொண்டவன். தடித்து சிவந்த அவள் கீழுதடை தன் வாய்க்குள் இழுத்து.. உறிஞ்சிச் சுவைக்கத் தொடங்கினான். அவளது இதழ் நீர்.. மெல்லிய பனித்துளியாக அவன் நாவில் இறங்க.. இதழ் சுவையில் கிறங்கினான்.
அவள் உதட்டைச் சுவைக்கும் என் உறிஞ்சலின் வேகம் சற்று அதிகரிக்க.. அவள் உதடுகளை பிரித்தவள் நுனி நாக்கு மெல்ல வந்து அவனின் உதடுகளை வருடியது. குறுகலான அவளின் கழுத்து இடை வெளியில் தன் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
இதுவரை உணராத ஒரு இன்ப உணர்ச்சியில் மிதந்தார்கள் இருவரும்.
அவள் கழுத்தில் இருந்து இன்னும் அவன் முகத்தை கீழே நகர்த்தி.. விம்மிக் கொண்டிருந்த அவள் இளமைகளின் மேலாக அவன் பயணம் நடத்த, அவள் உடலில் இருந்து வந்த இனிய நறுமணம் அவனின் நரம்புகளின் உச்சத்தை ஒரு வித மயக்கத்தில் ஆழ்த்துவதாக இருந்தது.
அவள் முகடுகளின் மேல் பயணித்தவனின் முகம் விரிந்து நின்ற பள்ளத்தாக்கில் மெல்ல வந்து இளைப்பாற.. அவனது முகம் செய்த ஊர்வலத்தை அவனது இதழ்களும் செய்தது. மெல்லிடை சதையைக் கவ்வி.. மெல்ல இழுத்து உறிஞ்ச.. அவள் இன்பத்தில் நெளிய.. ஆலிலை வயிறு முழுவதும் எச்சில் படர ஈரம் செய்து.. சுழற்றிச் சுழற்றி ஆற்று சுழலிகளாய் மாறி அவளை இன்பத்தில் சிதறடித்தான். அதன்பின் காட்டாற்று வெள்ளமாய் அவள் மீது படர்ந்து அவன் ஆள..
“மாமா.. போதும்.. என்ன இவ்வளவு அவசரம்? ரொம்ப காஞ்சு போயிருக்கிங்களா என்ன?” என மெல்லிய கிசுகிசுப்புடன் வார்த்தைகளில் கிண்டல் தொணிக்கக் கேட்டாள் பத்மா.
“நாலு மாசுமாச்சு கல்யாணம் முடிஞ்சு.. ரொம்பத்தான் காஞ்சு போயிருக்கேன்.. !! கண்ணுக்கு பசுமையா.. குளுகுளுன்னு என் முன்னால இருக்கிற.. கல்யாணம் முடிஞ்ச நொடில இருந்து.. உன்னை மேஞ்சிரனும்னு துடிச்சிகிட்டிருக்கேன்” என்றான் அதே கிசுகிசுப்புடன்..
அதற்கு பின் அந்த பேச்சுக்களுக்கும் அங்கே பஞ்சமாக.. மோக மந்திரங்கள் மட்டும் ஒலித்தது இடைவிடாது..
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு…
சுவாதி தங்கள் தொழிலின் ஒரு பகுதியை லாபத்தை மீனாள் என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து கணவன் செய்த பாவத்திற்கு தன்னால் முடிந்த பிராயிச்சித்தை செய்தார். அதன்மூலம் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் கல்வி மட்டுமல்லாமல் வளரும் பொழுதே தற்காப்பு கலைகளையும், தங்களை காத்துக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்கப்பட்டது அவர்கள் டிரஸ்ட் மூலம்.
பெரும்பான்மையான நேரம் மருதுவும் வெற்றி வேந்தனும் மாறி மாறி ஆஸ்திரேலியா சென்று நிவேதிதா தொழில்களை பார்த்துக் கொண்டனர்.
சுவாதி முற்றும் முதலாக டிரஸ்டை மட்டுமே பார்த்துக் கொண்டார்.
மருது இப்போது தனது வீட்டை புதிதாக கட்டும் வேலையில் இறங்கியுள்ளான். வேலை முடித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விட்டான். அவர்கள் வீட்டு இன்டீரியர் டெக்கரேஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த ஆர்கிடெக்ட்டை கண்டவனின் இதயம் தாளம் தப்பி துடித்தது. மருதுவின் மனம் கவர்ந்த அந்த மங்கை யாரவளோ??(அடுத்த பார்ட்டில் பார்க்கலாம்)
இரண்டரை வயது வெற்றியின் மகள் ரதிமீனாளை தொரத்திக் கொண்டே வந்தான் இரண்டு வயதான கதிரின் மகன் தீரன்.
எதிரில் வந்த வெற்றிவேந்தன் மகளை தூக்கிக்கொண்டு “என்ன பண்ணுன தம்பிய? ஏன் உன் தொரத்திக்கிட்டு வரான்” என்று மகளை அறிந்தவனாய் கேட்க.. அந்த சிட்டோ இரு கைகளையும் விரித்து கண்களையும் பெரிதாகி “ஒண்ணுமே செய்யல” என்று கிளைமொழியில் மிழற்றியது.
“ஐயா.. என்ன கடிச்சூ மீனா” என்று கூறி அழுதான் தீரன்.
“கடிச்சியா?” என்று மகளை பார்த்து முறைப்புடன் வெற்றி கேட்டவன், மகனையும் மறுகையில் ஏந்திக் கொள்ள..
“அவன் என்ன பிடிச்சு தள்ளிச்சூ.. மீ டோண்ட் டச் சொன்னா.. எகைன் எகைன் என்னை தள்ளிச்சூ.. அதான் கடிச்சூ”
அவள் பேச பேச அவள் கண்களும் சேர்ந்து பேச.. அந்த அழகில் சொக்கி தான் போனான் இந்த மதுரையே தன் ஒற்றை பார்வையில் ஆட்டி படைக்கும் சொக்கநாதன்.
மகள் சொன்ன விசயம் அவள் அம்மா கற்றுக் கொடுத்ததை அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறாள் அதைத்தான் தன் தந்தையிடமும் செய்திருக்கிறாள் என்ற புரிந்தவன், “தம்பி டா இப்படி எல்லாம் கடிக்கக் கூடாது சரியா?” என்று இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
குழந்தைகள் எவ்வளவு தான் வளர்ந்தாலும் குறும்பு பேச்சாலும் விளையாட்டுத்தனத்தாலும் அவர்களின் கள்ளம் கபடமற்ற நடத்தையாலும் நம் கண்களுக்கு சிறு குழந்தைகளாக தெரிந்தாலும்.. சில தீய காமுகன் கண்களுக்கு வெறும் சதை பிண்டங்களாக தான் தெரிவார்கள்.
பாலியல் குற்றம் செய்பவர்கள் குடும்ப நண்பர்களாகவோ, குழந்தை காப்பகங்களில் உள்ளவர்களாகவோ, அண்டை அயலார் போன்ற பிற அறிமுகமானவர்களாகவே இருக்கலாம். பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இல்லாத சமூகம் கேவலமானது.. அசிங்கமானது.. வக்கிரமானது. அப்படியானால், மிக மோசமான ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? ஆம்!! ஏற்றுக்கொள்ளக் கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை!!
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க, தனியாகக் காவல்துறைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதும் தமிழகத்தில்தான். அதே தமிழகத்தில்தான் இப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், பாலியல் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன.
தங்கள் குழந்தைகளுடன் உறவினர்கள் நெருங்கிப் பழகுவதை எந்தப் பெற்றோரும் பெரிதாகக் கண்காணிப்பதில்லை. இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள், குழந்தைகளுடன் விளையாடுவது போல பாலியல் சீண்டல்களை முதலில் ஆரம்பிக்கிறார்கள். விளையாட்டுப் போக்கில் செய்யப்படும் சீண்டல்களைக் குழந்தைகளும் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் பிடிக்குள் குழந்தைகளைக் கொண்டுவர ஆரம்பிப்பார்கள்.பருவ வயதை எட்டும் குழந்தைகளுக்குப் பாலியல் உணர்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். அது போன்ற குழந்தைகளை எளிதாகத் தங்கள் வலைக்குள் வீழ்த்திவிடும் கொடுமையும் அதிகரித்துவருகிறது.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான உறவு எளிமையாக, இனிமையாக இல்லாததால், பல குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி பெற்றோரிடம் சொல்லவே அஞ்சுகிறார்கள். வக்கிரங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது வசதியாகிவிடுகிறது. நம் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு நம் பெற்றோர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை.. தைரியத்தை கொடுத்தாலே
போதும்.
குழந்தைகள் கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட வரங்கள்.. சமூக தேவைகளுக்காக ஓடும் நாம்.. காரிருளில் கல்லென வைரங்களை தொலைத்தவர்களாய் இருந்துவிட கூடாது..
சுபம்..
💐😍😍😍😍😍😍😍💐💐💐💐💐🌷🌷🌷🌷♥️♥️♥️♥️♥️