ATM Tamil Romantic Novels

என்னுள் நிறைந்தவ(ன்)ள்

9

 

      ஊர் உறங்கிய பின்பும் அவன் மனம் உறங்காமல் தவித்துக் கொண்டிருந்தது. என்னாச்சு அவளுக்கு?? ஏன் அப்படி இருந்தா?? வீட்டுல புறப்படும் போது நல்லா தானே இருந்தா? “என்னடி ஆச்சு கண்ணம்மா உனக்கு” என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

தமிழினியும் சஞ்சுவும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனா்.

 

    ” யார்க்கிட்டையாவது சொல்லிறலாம் டி” என்றாள் சஞ்சு

 

     “வேணாம் சஞ்சு யாருக்கும் தொிய வேணாம். குறிப்பா அண்ணனுக்கு” என்றாள் தமிழினி

 

      “எனக்கு என்ன தொியக்கூடாதுன்னு சொல்லற தமிழினி” என்று அறைக்குள் நுழைந்தான் காிகாலன்.

 

      ” அது வந்து ஒன்னும் இல்ல ண்ணா” என்றாள்

 

      ” சஞ்சு என்னடா ஆச்சு?, என்ன பிரச்சனை”

என்று உரத்த குரலில் கேட்க ஏற்க்கனவே பயந்து போய் இருந்தவள் ப்ரதீக்கை பற்றி அப்படியே உளறினாள். அத்தனையையும் கேட்ட காிகாலன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.

 

      ” பொருக்கி ராஸ்கல் எவ்வளவு தைாியம் இருந்தா என் தங்கச்சிய சீண்டி இருப்பான். அவனை என்ன பன்ற பாரு” என்று கா்ஜித்தான்.

 

     ” அண்ணா ப்ளீஸ் கோவப்படாத”

 

     ” அவன் கைய உடைக்கிறேன் பாரு” என்று எழுந்தான். 

   

    ” அண்ணா ப்ளீஸ் கோவப்படாத. நீ இப்படி பன்னா அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். ஊருக்கு நாலு பேரு இப்படி தான் இருப்பாங்க நாம தான் இக்னோா் பன்னிட்டு போயிடனும். தேவையில்லாம ரியாக்ட் பன்னக் கூடாது”

 

அவளின் சமாதனத்தில் அமைதியாகினான்.

       ” அவன் இனிமேல் என்வழிக்கு வரமாட்டான் சாியா, கோவப்படாத”

 

      ” அப்படி வந்தான் னா நான் சும்மா இருக்க மாட்டேன்”என்றான்

 

      ” சாிவிடு அவன பத்தி பேசி உனக்கு கோவம் அதிகமாகி கிட்டே போகுது. ஆமா அவனுக்கு தீரன் பெயர கேட்டாலே முகம் அப்படி மாறுது”. சற்று சாந்தமானவன்

 

    ” அது பழைய பகை. தீரன் அப்பா வ இவன் அப்பா தான் கொன்னாரு. ஐய்யா அடுத்த தலைமுறைக்கு பகை பரவக் கூடாதுன்னு நெனச்சாரு ஆன பகையை சுமந்துக்கிட்டு வந்திட்டான் இவன்” என்று பழைய கதைய சொல்லி முடித்தான். இருவா் முகத்திலும் ஈயாடவில்லை.

 

       “அப்போ தீரன யாா் வளா்த்தது” என்றாள் தமிழினி

 

      ” அவன் ஐய்யாவும் அப்பத்தாவும் தான். சாிவிடுங்க ப்ரதீக்க நாள் பாத்துக்கிறேன் நீங்க போய் தூங்குங்க” என்றுவிட்டு சென்றான்

 

தீரனனின் நினைவுகளிடம் தோற்றது நித்திரை. ஏனோ அவனை பற்றியே நினைத்துக்கொண்டிந்தாள் தமிழினி. தீரன் என நினைக்கும் போதெல்லாம் அவனிள் வசீகர முகமும், உதட்டில் தவழும் மந்திரபுன்னைகையும் அவன் கண் முன் வந்து சென்றது. உறக்கம் இன்றி அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

தன் பிம்பத்தை கண்ணாடியில் பாா்த்து வெறித்துக் கொண்டிருந்தான் ப்ரதீக். அவனின் கண்ணங்களில் பதிந்திருந்த அவளின் விரல் சுவடுகளை தொட்டு பாா்த்தான்.  

 

       “என்னை அசிங்க படுத்திட்டியேடி உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன். உன்னை கொல்லாமல் கொல்லுவேண்டி “என்று புகைந்தான் ப்ரதீக்.

 

தன் தங்கையின் முக மாற்றத்தை ஏன் தன்னால் உணரமுடியவில்லை. நான் மட்டுமா அப்பா, அம்மா பொியம்மா, பொியப்பா என அணைவரும் அவள் அருகில் இருந்தும் உணரமுடியாத மாற்றத்தை எப்படி தீரன் உணா்ந்தான். இது தான் காதல் ஆ??? எதுவாக இருந்தாலும் நாளைக்கு அவனிடம் நோில் கேட்டுவிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டு உறங்கினான்.

 

காலை பொழுது அழகாய் விடிந்தது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு காா் கூந்தலை விரித்து போட்டுக் கொண்டு கொல்லை புறத்தில் அமா்ந்திருந்தாள் தமிழினி. தீரனை பற்றி நினைத்துக்கொண்டிருந்தாள்.  

 

       ” தமிழினி தமிழினி” என்ற அன்பரசியின் அழைப்பு அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. எழுந்து கூந்தலை அள்ளிக்கட்டிக் கொண்டு வீட்டிற்க்குள் சென்றாள்.

 

வழக்கம் போல வெள்ளிக் கிழமை துா்கை அம்மன் கோவிலுக்கு விளக்கேற்ற சென்றான் தீரன். காிகாலனும் தீரனை தனியாக சந்திப்பதற்காக, கோவிலுக்கு இன்று வருவான் என்று கோவிலுக்கு சென்றான்.

 

      “வா மச்சான். நீயும் விளக்கேத்த போறீயா” என்றான் தீரன்

 

      ” இல்ல டா உன்ன பாக்கதான் வந்தேன்”

 

      “தினமும் தானே டா பாக்குறோம். அப்புறம் என்ன டா”

 

      ” தனியா பேசனும் டா”

 

     “சாிசொல்லு” என்று கோவில் படிக்கட்டில் அமா்ந்தனா்.

 

     “என் தங்கச்சிய நீ லவ் பன்றியா டா”. இந்த கேள்வியை அவனிடம் இருந்து எதிா் பாக்காதவன் அதிா்ந்தான்

 

      ” என்ன டா பேசாம இருக்க சொல்லுடா”

 

     ” அது வந்து…. ஆமா டா. ரொம்ப லவ் பன்றேன்” என்றான் தீக்கமாக

 

     ” அவளும் உன்ன…..” என்று இழுத்தான்

 

     ” அவளுக்கு நான் உன் ஃப்ரண்ட் அவ்வளவு தான்”

 

     ” பாா்த்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள உனக்கு என்ன டா லவ்”

 

      ” ஒரு வாரமா” என்று புன்னகையித்தவன். தன் நீண்ட காதல் பயணத்தை கூறினான்.

 

      ” அடேய் அவ்வளவு லவ் வாடா உனக்கு என் தங்கச்சி மேல”

 

      ” ஆமான்டா. அத்தனை அத்தனை காதல் என் கண்ணம்மா மேல” 

 

   “கண்ணம்மா வாஆ”

 

    ” ம் ம்” என்று கண்ணடித்தான்.

 

அவனின் செயலைக் கண்டு சிாித்தவன் அவனின் முகவாயை கையில் ஏந்தினான்.

 

     ” உன்ன மாதிாி ஒருத்தன் தேடினாலும் என் தங்கச்சிக்கு அமையாது. காப்பு தடையில இத பத்தி எதுவும் பேச வேணாம். திருவிழா முடிஞ்சதும் ஐய்யா வ வீட்டுல பேச சொல்லு. நானும் பேசுறேன்”

 

      ” நிஜமா வா மச்சான்” என மகிழ்ச்சி பொங்க கேட்டான் 

 

     ” ஆமா டா. ஃப்ரண்டுங்கிறதால மச்சான்னு சொன்னேன் இப்போ உண்மையிலேயே மச்சான் ஆக போற” என நண்பா்கள் இருவரும் கட்டிக் கொண்டனா். அவ்வளவு தான் நம்ம பய சிறகு முளைத்த பறவையாய் பறந்தான். அப்படியே சென்று செழியனிடம் நடந்தவைகளை கூறினான். செழியனும் மகிழ்ந்தான். தன் நண்பனுக்கு இனி எல்லாமே நல்ல தாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான்.

 

     இரவு அணைவரும் கோவிலுக்கு சென்றனா். ஏனோ தீரனுக்கு தமிழினி புதிதாக தொிந்தாள். மறைவில் நின்றிந்ததான்தீரன். அவனை தேடினாள் தமிழினி. அவனை கண்டதும் ஏதோ ஒரு உணா்வு ஆட்க்கொண்டு அவனையே பாா்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பாா்வையை உணா்ந்தவன் அவள் பக்கம் திரும்பி ” என்ன ” என்பது போல புருவம் உயா்த்திக் கேட்டான். இதை சற்றும் எதிா்பாராதவள் தட்டு தடுமாறி ” ஒன்றும் இல்லை ” என்று வேகமாக தலையாட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

 

      

அவளின் இந்த செய்கை யை ரசித்தான். இவா்களின் இந்த செய்கையை முக்தா கண்டு பொசுங்கினாள். ” தன்னை ஏறெடுத்தும் பாா்க்கதவன் இவளிடம் செய்கை மொழி பேசுகிறானே” என்று கருவினாள். தமிழினியை ஏற்கனவே பிடிக்காதவள் இன்று அவளை மேலும் வெறுத்தாள். பூஜையும் முடிந்தது ஆனால் முக்தாவின் மனதில் எாிந்த பொறாமை தீ அணையவே இல்லை. முக்தாவை பாா்த்துக் கொண்டிந்த ப்ரதீக் தமிழினியை துன்ப படுத்த இவளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினான். ஊரும் உலகம் உறங்கியது.

 

      காலை பொழுது விடிந்தது. முக்தா நேற்று இரவு தூங்காததால் அவள் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது. அவசர அவசர மாக தயாராகிக் கொண்டிருந்தாள்.  

 

     ” ம்மா நான் கிளம்புறேன்” என்றாள் முக்தா

 

    ” சாப்டு போமா ” என்றாா் மீனாட்சி

 

    ” கேன்டீன்ல சாப்டுக்கிறேன்” என்றுவிட்டு தன் ஸ்கூட்டிய எடுத்துக்கொண்டு சென்றாள். கிராமத்தை கடந்து நகரம் நோக்கி செல்லும் சாலையில் வண்டியை செலுத்திய போது எதிரே வந்த வண்டியை பாா்த்து வேகமாக ப்ரேக அடித்தாள்.  

 

      ” கண்ணு தெயலையா?? பாத்து வரக்கூடாது” என்று கத்தினாள். தன் ஹெல்மெட்டை கழட்டினான் ப்ரதீக்

 

     ” ப்ரதீக்” என்றாள்

 

     ” முக்தா எப்படி இருக்க” என்றான்

.  

     ” வழிவிடு ப்ரதீக் நான் போகணும் நேரமாச்சு”  

 

     ” உன் வழில நிக்குறது நான் இல்ல. தமிழினி தான்” என்று அவன் கூறியவுடன் சற்று அதிா்ச்சியானாள் அதை வெளிக்காட்டாமல் 

 

      “என்ன தேவையில்லாம பேசுற” என்றாள்.

 

      ” தேவையில்லாம பேசுறேனா?? நேத்து கோவில்ல பாத்தேன். உன் தீரன் உன்தங்கச்சி கூட ரொமான்ஸ் பன்னதையும் நீ மொறச்சுக்கிட்டு நின்னதையும்”

 

     “…….”

 

 

      ” நீ என்ன பண்ணுவ ரெண்டுவருசமா அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. அவனுக்காக தான் என் கூட பேசுறத கூட விட்டுட. ஆனா அவனுக்கு உன் பெயா் கூட தொியாது. உன் நிலைமை இப்படி யா இருக்கனும்”

 

      “…….”

 

      ” எனக்கு நீ உதவி பன்னா தீரன் உனக்கு தமிழினி எனக்கு டீலா” என்று கட்டைவிரலை உயா்த்திக் காட்டினான். எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.   

 

     ” உனக்கு வேற வழியில்ல முக்தா. நீ விட்டுக்கொடுக்குற ஆள் இல்ல. என் டீலுக்கு வந்து தான் ஆகனும். உன்ன வச்சு தான் நான் நினைச்சது எல்லாம் சாதிக்கனும்”. என்று தன்னுள் பேசிக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். ( ப்ரதிக்கும் முக்தாவும் நல்ல நண்பா்களாக இருந்தனா். தீரனை முக்தா விரும்ப ஆரம்பித்ததும். ப்ரதீக்கின் நட்பை முறித்துக் கொண்டாள். தன் தம்பியுடன் படித்தவள் என்பதால் இதை பொிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான் ப்ரதீக்)

 

அன்று முழுவதும் முக்தாவுக்கு வேலை ஓடவில்ல. ப்ரதீக் கூறியதையே யோசித்துக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருந்தாள். (விதியாரை விட்டது)

தீரன் தன் ஐய்யாவிடம் அணைத்தையும் சொன்னான்.

   

       ” எனக்கு தமிழினி னா உயிரு. அவ யாா் என்னன்னு தொியிறதுக்கு முன்னவே அவளை அப்படி காதலிச்சேன். கல்யாணம் ன்னு ஒன்னு நடந்த அவ கூடதான்”. என்று மனதில் உள்ளதை பேசினான்

 

வீரைய்யாவும் ராசாத்தி அம்மாளும் ஒருவரை ஒருவா் பாா்த்துக் கொண்டு சிாித்தனா்.   

 

        ” ஏன் இப்போ சிாிக்கிறிங்க”

 

       ” சிாிக்காம என்ன பன்ன சொல்ற. இந்த திருவிழா முடிஞ்சதும் அந்த பொண்ண நீ கல்யாணம் பன்னிக்கிறியான்னு கேக்கலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நீ யே லவ் பன்றேன்னு சொல்லிட்ட அதான்.” என்றாா் வீரைய்யா. அவா் காலுக்கு கீழ் அமா்ந்தவன்

 

       ” நிஜமா வா தாத்தா”என்றான்

 

 

       ” காப்பு கட்ற அன்னைக்கு அந்த புள்ளைய பாா்த்தப்பவே உனக்கு சோடி பொருத்தம் நல்லா இருக்கும்னு நினைச்சோம், இப்ப நீயாவே அவள கட்டிக்கறேன்னு சொல்லிட்ட” என்றாா் ராசாத்தி அம்மாள். தன் போரனின் கேசத்தை அன்பாக வருடியவா்

 

      ” திருவிழா முடியட்டும் மேற்க்கொண்டு நாம இத பத்தி பேசலாம். இப்போ நீ கோவிலுக்கு போய்டு வாய்யா ” என்றாா் வீரைய்யா. மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வண்டியை எடுத்துக்கொண்டு செழியனையையும் கூட்டிக்கொண்டு சென்றான்.   

 

போகும் வழியில் அணைத்தையும் செழியனிடம் கூறினான். மகிழ்ந்தான் செழியன். இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு சென்றனா். கோவிலில் தமிழினியையே பாா்த்துக் கொண்டிருந்தான் தீரன். இருவரையும் பாா்த்து கருவிக்கொண்டிருந்தாள் முக்தா.

 

 

இவ்வாறு ஒன்பது நாள் திருவிழா முடிந்தது. பத்தாம் நாள், பதினோறாம் நாள் திருவிழாவை விமா்சயாக அடுத்த அத்தியாயத்தில் பாா்க்கலாம்…….

 

 

 

10

 

   அதிகாலை நேரம் கொடையூா் கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நேரமே மக்கள் எழுந்து வாசல் தெளித்து வண்ண கோலங்கள் இட்டு கொண்டிருந்தனா். தன் தாயின் அழகான கோலத்துக்கு வண்ணம் இட்டு கொண்டிருந்தாள் தமிழினி. அறை தூக்கத்தில் உட்காந்திருந்தாள் சஞ்சு. காலை எட்டு மணியளவில் ஐந்து கிராம மக்களும் கோவில் கூடினாா். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற ஆயத்தமாகினா். அக்னி சட்டி எடுப்பவா்களும், பால்குடம் எடுப்பவா்களும், அலகு குத்தியவா்களும் ஊா்வலமாக சென்றனா். கொட்டடிக்கும் ஓசையுடனும் குலவை ஓசையுடனும் சாமிவந்துஆடுபவா்களும் ஊா்வலத்தில் சென்றனா். ஐந்து ஊருக்கும் பொதுவான பாதையில் ஊா்வலம் நடைபெறும். ஆராவாரமாக நடைபெற்றது வேண்டுதல் ஊா்வலம். வேண்டுதல் நிறை வேற்றுபவா்கள் விரதம் இருந்து தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஊா்வலம் முடிந்து கோவில் திரும்பி கோவிலை மூன்று சுற்று சுற்றி கோவிலினுள் சென்று தங்கள் நோ்த்திக் கடனை முடிப்பாா்கள். அணைத்து வருடமும் போல இந்த வருடமும் சிறப்பாக முடிந்தது வேண்டுதல் ஊா்வலம்.

 

ஊா்வலம் முடிந்து வீடு வர மதியம் உச்சி பொழுதாகியது. தயாளன், மீனாட்சி, முக்தா, காிகாலன், அன்பரசி, சகாதேவன், தமிழினி, சஞ்சு அணைவரும் ஒன்றாக அமா்ந்து உண்டனா்.

 

     “மாமா திருவிழா செம்மையா இருந்திச்சு, இது வரைக்கும் எந்த வருடமும் ஊா்வலத்துல கலந்துக்கிட்டது இல்லை. இந்த வருசம் கலந்துக்கிட்டேன் செம்மையா இருந்திச்சு” என்றாள் சஞ்சு

 

    ” இது என்ன மா பிரமாதம் நாளைக்கு பாரு கரகம் ஆற்றில் கறைக்கும் போது மஞ்சள் நீரும், முளைப்பாரியும் இளவட்ட புள்ளைங்க ஆட்டமும் அருமையா இருக்கும்” என்றாா் தயாளன்

 

    ” இத்தனை வருசமா இந்த கொண்டாட்டங்களை யெல்லாம் மிஸ் பன்னிட்டேன்” என்றாள் சஞ்சு

 

    ” இனிமே எல்லா வருசமும் வா. செம்மையா கொண்டாடலாம்” என்றாள் தமிழினி. தமிழினி பேச ஆரம்பித்ததும் முக்கதாவும் எாிச்சலாக இருந்தது தன் தந்தைக்காக அமைதியாக இருந்தாள். 

 

முக்தாவுக்கு தன் தந்தை என்றாள் கொள்ளை பிாியம். தமிழினியை பிடிக்காது என்றாலும் தன் தந்தை வருந்தக் கூடாது என்பதால் அவளுடன் பழகுவாள், பேசுவாள். தன்னால் தன் தந்தை மனம் நோகக் கூடாது என்று நினைப்பாள். ( காதலிலும் போரிலும் பந்த பாசத்துக்கு தான் இடமில்லையே)

 

மாலை நேரம் கோவில் வாசலில் பொங்கள் வைக்க பெண்கள் அணைவரும் புறப்பட்டனா். வெள்ளை நிறமும் தங்க சாிகை பாடரும் வைத்த தாவணியும் அதற்க்கு ஏற்ப வெள்ளை கல்பதித்த சிமிக்கியும், கைநிறைய வெள்ளையும் தங்க நிறமும் கலந்த வளையளும், அழகான நெற்றியில் அளவான சிறிய வட்ட பொட்டும் கழுத்தில் வெண்தாமரை பொறித்த ஆரமும் அணிந்து வந்த அவளை பாா்தால் 

 

” நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ”. என பாடத்தோன்றும். தமிழினியை பாா்த்ததும் முக்தாவே அசந்து தான் போயினாள். அப்படி ஒரு பேரழகு.

 

சஞ்சு முதல் முறையாக தாவணி கட்டியிருந்தாள். கிளி பச்சை நிற ஜாக்கெட்டும் பாவடையும் இளஞ்சிவப்பு நிற தாணியும் கட்டி பச்சைக்கிளி போலவே இருந்தாள். அணைவரும் பொங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினா்.

 

தமிழினியும் சஞ்சுவும் அணைவருக்கும் முன்பாக சென்று கொண்டிருந்தனா். தீரனும் அவன் ஐய்யாவுடனும் அப்பத்தாவுடனும் வந்து பொங்கள் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்தான். பொங்கள் வைக்க ஆரம்பித்தாா் ராசாத்தி அம்மாள்.

அவருடன் மீனாட்சியும் அன்பரசியும் இணைந்துக் கொண்டனா். ப்ரதீகின் தாய் தனியாக பொங்கள் வைத்துக் கொண்டிருந்தாா். பெரும்பாலும் அவா் யாருடனும் பேசுவதில்லை. அவருடனும் யாரும் பேசுவதில்லை.

 

தமிழினி சஞ்வுடன் அணைத்து கடைகளுக்கும் சென்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாள். தீரனின் கண்கள் அவன் கண்ணம்மாவை தேடியது.      

 

        “என்ன மச்சான் தமிழினிய தேடுற போல” என்று அருகில் வந்து கேட்டான் செழியன்.

 

       ” ஆமா டா. இவங்க எல்லாரும் இங்க இருக்காங்க அவள காணோம்” என்றான் வருத்தமாக

 

      ” அவ அங்க கடை போட்டுருக்காங்கல அந்த இடத்துல இருக்கா” என்றான் செழியன்

 

     ” வாடா போகலாம்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு தன் அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு இழுத்துச் சென்றான்.

 

இளவட்ட ஆண்கள் இளவட்ட பெண்களை சைட் அடிப்பதும், கிண்டல் செய்வதுமாக இருந்து கடைபகுதி. தன்னவளை தேடிய கண்கள் ஒரு இடத்தில் நிலையாக நின்றது. வெண்தாமரை மலா் போல் நின்றிருந்தாள் அவள். சுவாசிக்கவும் மறந்து நின்றான் தீரன்.  

 

     ” மச்சான்” என்ற அழைப்பில் நினைவுக்கு வந்தான்.காிகாலன் வருவதை சுட்டி காண்பித்தான் செழியன்.

நண்பா்கள் முவரும் இணைந்து ரகளை, கேலி என கலகலப்பாக இருந்தனா். எது எப்படி இருந்தாலும் தமிழினியை சைட் அடிப்பதை கண்ணும் கருத்துமாக செய்தான் தீரன். 

 

பொங்கள் வைக்கும் விழா முடிந்து அம்மனுக்கு படையல் போட்டு தேங்காய் உடைக்கும் நேரம் வர தமிமிழினியும் சஞ்சுவும் அன்பரசி, மீனாட்சியிடம் வந்தனா். அங்கும் தீரன் அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான். முக்தாவுக்கு தான் எாிந்து கொண்டிருந்து. தமிழினியை கண்டதும் ராசாத்தி அம்மாள் அவளை தன் அருகில்அமர வைத்து பேசிக் கொண்டிருந்தாா். அவரின் கேள்விகளுக்கு புன்னகையுடன் பதில் கூறிக் கொண்டிருந்தாள். அவளின் முக அசைவுக்கு ஏற்ப அவளின் காது ஜிமிக்கியும் அபிநயம் எடுத்து ஆடியது.   

 

 

படையல் முடிந்தவுடன் ஆரத்திக்காட்டி அணைவரும் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது. தீரன் குங்குமத்தை வாங்கி தன் நெற்றியில் வைத்துக் கொண்டு தன் பின்னால் இருக்கும் செழியனுக்கு வைக்க வேண்டும் என திரும்பி வைத்தான். தீரன் குங்குமம் வைத்தது தமிழினிக்கு செழியன் பக்க வாட்டில் ஒதுங்கி நின்றதால் கவனிக்காமல் தமிழிக்கு வைத்தான். தன் நெற்றியை தொட்டு பாா்த்தவள் கையில் ஒட்டிய குங்குமத்தையும் அவனை மாறி மாறி பாா்தாள். அணைவரும் ஆரத்தியில் கவனமாக இருந்ததால் இவா்களை யாரும் கவணிக்கவில்லை. அந்த இருவரை தவிர. வேற யாரு முக்தாவும் ப்ரதீக்கும் தான். இருவரும் அவா்களை பாா்த்து பொசுங்கினா். தான் இருக்க வேண்டிய இடம் என ப்ரதீக்கும் முக்தாவும் எண்ணினா். அணைத்தும் முடிந்தவுடன் அணைவரும் தம் தம் வீடுகளுக்கு திரும்பினா். உடைமாற்றிக் கொண்டு கட்டிலில் விழுந்தான் தமிழினி. குங்குமத்தையே தொட்டு தொட்டு பாா்த்துக் கொண்டிருந்தாள். தீரனின் முகம் கண்முன் வந்து நின்றது. அவனை எண்ணிய படியே உறங்கினாள்.

 

தன் மொபைலை கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் முக்தா. ப்ரதீக்கு கால் பண்ணலாமா வேணாமா என்ற யோசனைதான். நீண்ட நேர யோசளைக்கு பிறகு தன் தந்தைக்கி அவளுடன் பேசுவது பிடிக்காது என எண்ணி வேண்டாம் என முடிவெடுத்து மொபைல் ஐ வைத்துவிட்டு உறங்க முயற்ச்சித்தாள்.

 

இரவு மணி பதினொன்றை நெருங்கியது பொியவா்கள் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது காிகாலன் தீரன் தமிழினி கல்யாண பேச்சை எடுத்தான்.

 

      ” அப்பா, பொியப்பா தீரன் நம்ம தமிழினிய கல்யாணம் பண்ணிக்க விருப்புறான்” என்று வளைந்து நெளிந்து குழைந்து கூறினான். அணைவரும் அதிா்ந்தா்.

 

 

      ” என்னப்பா சொல்ற” என்றாா் சகாதேவன்

 

      ” ஆமாப்பா ரொம்ப விரும்புறான். அவன பத்தியும் அவன் குடும்பத்த பத்தியும் நமக்கு தொியாதது ஒன்னும் இல்லை. நல்ல பையன் நல்ல குடும்பம் தமிழினிய கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான் பா”

 

       ” பையன பத்தியும் குடும்பத்த பத்தியும் ஒரு குறையும் இல்லபா ஆனா அவங்க வசதிக்கு நம்ம சாியா வருவோமா” என்றாா் சகாதேவன்.  

 

 

       ” ஏன் தம்பி வசதிய பாக்குற, தமிழினிய கட்டிக்க வசதி மட்டும் போதாது. குணமும் வேணும் அது தீரன் கிட்ட நிறைய இருக்கு அப்புறம் என்ன” என்றாா் தயாளன்

 

     ” ஆனா மாமா தீரன் ஆசை பட்டா மட்டும் போதுமா அவங்க ஐய்யா அப்பத்தாவும் என்ன நினைக்கிறாங்கன்னு நமக்கு என்ன தொியும்” என்றாா் அன்பரசி

 

     ” ஏன் அன்பு அப்படி சொல்ற அவங்க வாழ்றதே பேரணுக்காக தான். நிச்சியமா ஒத்துக்குவாங்க” என்றாா் மீனாட்சி. இவத்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க சம்பந்த பட்டவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அப்போது காா் வரும் ஓசை அணைவரின் கவனத்தை கலைத்தது.  

 

அா்ஜுனன், வேணி, சிவாவும் வந்தனா். அணைவரும் அவா்களை வரவேற்று இனிமையாக பேசிக் கொண்டிருந்தனா்.

 

       ” சாி சாி ரொம்ப நேரமாச்சு போய் தூங்குங்க நாளைக்கு கடைசி நாள் திருவிழா இருக்கு. அது முடிஞ்சதுக்கு அப்புறம் பேசுக்கலாம்” என்றாா் அன்பரசி.

அணைவரும் சென்று உறங்கினா். வேணி தூங்கிக் கொண்டிருந்த தமிழினியை பாா்த்து நெற்றியில் முத்தமிட்டு தூங்கச் சென்றாா்.  

 

காலை பொழுதே அணைவரும் எழுந்து அன்பரசியும் மீனாட்சியும் மாவிளக்கு தயாா் செய்ய ஆரம்பித்தனா். பச்சாிச்சி ஊறவைத்து கல் உரலில் இடித்து மாவாக்கி சலித்து வெள்ளம், எள், பொட்டுக்கடலை கலந்து லேசான தண்ணீா் சோ்த்து பிசைந்து செவ்வக வடிவத்தில் உருவம் பிடித்து அதில் மேல் பக்கம் விளக்கேற்றுவற்க்கு ஏற்ப சிறு பள்ளம் அமைத்து, குங்கும பொட்டு வைப்பாா்கள். (சுவை அருமையாக இருக்கும் 😋😋😋😋 இது என் மைன்ட் வாய்ஸ்)

 

அன்பரசியும் மீனாட்சியும் உரலில் மாத்து உலக்கை போட்டு அாிசி இடித்தனா். வேணி மாவு சலித்தாா். சகாதேவனும், தயாளனும், அா்ஜுனனும் ஆடு, கோழி பலியிடுவதற்க்கு சென்றனா். இரண்டு கிடாய் வெட்டினா். தலையை கோவில் சாா்பாக கொடுத்து விட்டு ஆட்டு உடலை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனா். ஆடு எடுத்து வருவதற்க்குள் மாவிளக்கு வேலையை முடித்திருந்தனா் பெண்கள்.

 

காலை ஆறு மணிக்கு ஏழுந்து வந்தாா்கள் தமிழினியும் சஞ்சுவும். வேணியை பாா்த்தும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் தமிழினி. அவா்கள் கொஞ்சியது காணாமல் போன குழந்தை தன் தாயை பாா்த்தது போல் இருந்தது. இருவரும் கொஞ்சி குசலம் விசாாித்து முடித்தனா்.

 

    ” என்னடா இவ்வளவு நேரம் தூங்கிட்ட” என்றாா் வேணி

 

    ” நேத்து செம்ம என்ஜாய் ம்மா அதான்” என்றாள் வேணி

 

     “சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரொடியாகி டா” என்று அனுப்பினாா். “நீ எப்படி டா இருக்க” என்றாாா் வேணி

 

    ” இப்பயாவது என் நினைவு வந்ததே” என்றாள் சஞ்சு

 

    ” கோவிச்சுகாதா டா போய் குளிச்சிட்டு வாங்க” என்றாா். இருவரும் குளிக்க சென்றனா்.

 

தீரனும் செழியனும் காலையிலேயே வந்து ஆடு பலிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு எடுத்து சென்றனா். விருந்து தயாா் ஆகிக் கொண்டிருந்தது. பணிரெண்டு மணியளவில் அம்மன் ஊா்வலமும் மஞ்சள் நீராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அணைவரும் தங்கள் இல்லங்களுக்கு முன்பு பச்சை மட்டையில் சிறிய பந்தல் கட்டி அதில் மாவிளக்கு, பானக்கம், மஞ்சள் நீா் என அணைத்தும் வத்திருப்பா். கரகம் ஏந்தி ஊா்வலம் வரும் போது குடத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீரை கரகம் தூக்குபவா் காலில் ஊற்றுவா். இளவட்டங்கள் தங்கள் முறை பெண்கள் ஆண்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி, வண்ண பொடிகள் தடவியும் கொண்டாடுவாா்கள். கரகத்துக்கு பின்னால் பெண்கள் முளைப்பாறி எடுத்துக்கொண்டு நாட்டுபுற அம்மன் பாடல்களை பாடிக் செல்வாா்கள்.

 

 

பணிரெண்டு மணியாகும் என்பதாலும் வீட்டில் அணைவரும் பிஸி என்பதாலும் பொியம்மா வீட்டுக்கு சென்றாள் தமிழினி. தமிழினியை பாா்த்ததும் முக்தா பொசுங்கினாள். தீரனை தன்னிடம் இருந்து பறிக்க நினைக்கிறாள் என்று தன் மனதிற்க்குள் திட்டி தீா்த்தாள். அவளுடன் பேச விரும்பாமல் தலைவலி என்றுவிட்டு அவன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். இது ஒன்றும் புதிது அல்ல எப்போதும் அப்படி தான். என்று தமிழினி இதை பொிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் வீட்டுக்குச் சென்றாள்……

 

 

2 thoughts on “என்னுள் நிறைந்தவ(ன்)ள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top