ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 28,29&30

அத்தியாயம் 28

 

அடுத்த நாள் காலையில் அமைதியாக நடந்தது சின்னா மற்றும் அனுராகாவின் திருமணம். எல்லாவற்றையும் தானே முன்னால் நின்று செய்தான் ராக்கி. திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மணமக்களை மைதிலியின் படத்திற்கு முன்னால் நிற்க வைத்து,

 

“சின்னா இது அனுவோட அம்மா மைதிலியக்காவோட சொத்து பத்திரங்கள். இத்தனை நாள் இதை அனுவோட கார்டியனா பத்திரமா பார்த்துக்க வேண்டியதா இருந்துச்சு. எப்போ அனுவிற்கு கல்யாணம் ஆகிடுச்சோ இனி அவளோட புருஷங்குற முறையில நீதான் இனிமே இதையெல்லாம் பார்த்துக்கணும். இப்போ தான் என் மனசுல இருந்த பெரிய பாரம் இறங்குன மாதிரி இருக்கு. இனி இந்த சாம்ராஜ்ஜியம் முழுவதும் உன்னோடது. அதோட அனுவையும் பத்திரமா பார்த்துக்கோ. குறும்புக்கார பொண்ணு தான், ஆனா எடுத்துச் சொன்னா கேட்குக்குவா. உனக்கு இதெல்லாம் சொல்லணும்னு அவசியமில்ல தான். ஆனா சொல்ல வேண்டியது என்னோட கடமை.” என்றவனை இறுக அணைத்துக் கொண்டான் சின்னா.

 

“எங்களுக்கு இந்த சொத்து பத்து எதுவும் வேணாம். எங்களுக்கு எப்பவும் நீதான் வேணும். நானும் நீயும் எப்பவும் வேற வேற இல்லடா. எந்த சொந்தம் எனக்கு வந்தாலும் நீதான் எனக்கு முதல்ல, தெரிஞ்சுக்கோ. இனிமே இந்த மாதிரி பேசாத.” என்று அழுகுரலில் கூறியவனை பார்த்து புன்னகை புரிந்தான் ராக்கி. 

 

“இங்கப்பாரு! பொண்டாட்டிய பக்கத்துல வைச்சுக்கிட்டு இந்த மாதிரி உருக்கமா எல்லாம் பேசக்கூடாது. என்னைக்குமே பொண்டாட்டிக்கு தான் உன் மனசுல முத இடத்தை கொடுக்கணும். நம்பல மட்டும் நம்பி, நம்மக் கூட வாழ வர்றவ மனசு கோணாம நடந்துக்கோ.” என்று கூறிய ராக்கியின் கழுத்தை கட்டிக் கொண்டு தொங்கினாள் அனுராகா.

 

“இப்படி எல்லாம் பேசுற வேலைய விட்டுடு அத்தான். நான் பொறந்ததுல இருந்து எனக்கு அம்மாக்கு அம்மாவா, அப்பாக்கு அப்பாவா, அதட்டி வளர்க்குறதுல அண்ணனுக்கு அண்ணனா நீங்கதானே வளர்த்தீங்க. நானும் உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன்.” என்று மாறி மாறி சோகத்தை பிழிந்து கொண்டிருக்க, அவர்களது மனதை திசை திருப்பும் விதமாக,

 

“ஆமா! இந்த வேலுநாச்சி எங்கப் போனாங்க? நேத்துல இருந்து என் கண்ணுல படவே இல்ல?!” என்று மரகதவல்லி கேட்க, திருதிருவென விழித்தபடி ராக்கியைப் பார்த்தாள் ஆருஷா. பதட்டத்துடன் இருக்கும் தன் மனைவியை நோக்கி கண்ணடித்த ராக்கி,

 

“பாருங்க பாட்டி! வர வர எனக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு. நேத்து நைட்டு தான் உலகம் பூரா இருக்குற கோவிலுக்கு யாத்திரை போகணும்னு மூட்டை முடிச்செல்லாம் கட்டிட்டு கிளம்பிப் போயிட்டாங்க. நான் தான் டிக்கெட் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். உங்கக்கிட்ட நான் சொல்லிக்குறேன்னு சொல்லி அனுப்பி வைச்சேன், ஆனா மறந்துட்டேன்.” என்று கூற,

 

“ஏன்டா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானும் அவங்கக்கூட போயிருப்பேன்ல? அவங்களை மட்டும் தனியா அனுப்பிருக்” என்று கேட்ட மரகதவல்லியின் கையைப் பிடித்து தனக்குள் வைத்துக் கொண்ட ராக்கி,

 

“நீங்களும் அவங்கக்கூட போயிட்டா, என் பொண்டாட்டிக்கு யாரு பிரசவம் பார்ப்பா? சும்மாவே நான் சொல்லுற எதையும் கேட்கமாட்டா. இந்த மாதிரி நேரத்துல சுத்தமா கேட்கமாட்டா.” என்று ஆருஷாவை பார்த்தபடி ஒருமாதிரி குரலில் கூறிய ராக்கியை கெஞ்சலுடன் பார்த்தாள் ஆருஷா. 

 

“நீ சொல்றதும் சரி தான். நானும் போயிட்டா அப்புறம் என்னோட கொல்லுப் பேரனை யார் பார்த்துப்பா? ஆனாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம்.” என்று சலித்துக் கொண்டார் மரகதவல்லி. 

 

“இந்த சான்ஸ் எப்ப கிடைக்குமோ? அதான் போகமாட்டேன்னு சொன்னவங்ககிட்ட, என் பாட்டி நல்லவங்க, வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லி அனுப்பி வைச்சுருக்கேன். ஆனா நீங்க என்னன்னா இப்படி சலிச்சுக்குறீங்க? போங்க! போங்க! யாரும் வேணாம். என் பொண்டாட்டி புள்ளைய நானே பார்த்துப்பேன்.” என்று கோபமாக கூறியவனின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவர்,

 

“ஆன்னா ஊன்னா கோபம் மட்டும் வந்துடுது. உன்னைய பெத்துப் போட்டுட்டு என் மவ கண்ணை மூடிட்டா. இதோ இவனை என் மருமவ பெத்துப் போட்டுட்டு மகராசி போய் சேர்ந்துட்டா. உங்களைப் பெத்தவனுங்க அவனுங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு வேற எவளையோ கல்யாணம் பண்ணிட்டு போயிட்டானுங்க. ஒத்தப் பொம்பளையா நின்று உங்களை வளர்த்தேன். மைதிலி பொண்ணு தான் நம்மளை கூட்டிட்டு வந்து அதோட பங்களால வேலைப் போட்டு கொடுத்து, அவங்க குடும்பத்துல ஒருத்தரா நம்பள நடத்துச்சு. யார் கண்ணு பட்டுச்சோ அந்த மயங்க் பயே தொழில் போட்டிக்காக அனுவோட மொத்த குடும்பத்தையும் வெடிகுண்டு வைச்சு கொன்னுப் போட்டுட்டான். அன்னைல இருந்து எனக்கு மூணு பேரக்குழந்தைங்க ஆகிடுச்சு. செய்நன்றிக்காக இந்த குடும்பத்தை இன்னும் உன் தோள்ல சுமக்குற மாதிரி உன்னைய பொறுப்பா வளர்த்துருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.” என்று கூற,

 

“நான் ஒன்னும் யாருமே இல்லாம வரலையே?! அம்மா மாதிரி இருந்து மைதிலியக்கா என்னைய வளர்த்தாங்க. இறந்து போற நேரத்துலயும் அவங்க என்னைய தானே தேடினாங்க. அவங்களுக்கு விசுவாசமா நடப்பேன்னு நம்பி தானே ஒரு வயசு அனுராகாவை என் கைல ஒப்படைச்சுட்டுப் போனாங்க‌. அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்னு தான் இத்தனை நாள் போராடினேன். அந்த மயங்க்கோட கண்ணு அனு மேல பட்டுடக் கூடாதுன்னு தான் யாருக்கும் தெரியாம வெளி நாட்டுல படிக்க வைச்சேன். இப்போ அந்த மயங்க்கும் இல்ல, மல்கோத்ராவும் இல்ல. அனு இப்போ சந்தோஷமா வாழலாம். அதுனால தான் இதையெல்லாம் அவகிட்டயும் அவ புருஷன் கிட்டயும் ஒப்படைச்சுட்டு போலாம்னு நினைச்சேன். நானும் ஒன்னும் சும்மா இல்ல; நானும் என் குடும்பமும் தலைமுறை தலைமுறையா உட்கார்ந்து சாப்பிட்டு வாழுற அளவுக்கு என் சொந்த சம்பாத்தியத்துல நிறைய சொத்து வாங்கிப் போட்டுருக்கேன். அதுனால நான் ஒன்னும் கஷ்டப்பட போறதில்ல. அதுனால தயவுசெஞ்சு வாங்கிக்கோங்க. இதுக்கு மேல என்னால இந்த சோகக்கதை எல்லாம் சொல்ல முடியாது. இது தான் முதலும் முடிவுமா இருக்கணும்.” என்று ஆருஷாவைப் பார்த்து கூறியவிட்டு, தன் கையில் இருந்த சொத்து பத்திரங்களை சின்னா மற்றும் அனுராகாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான் ராக்கி. இப்போது தான் என்ன செய்வது என்று அறியாது முழித்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. அவளால் அவன் மனதில் ஏற்பட்ட காயம் பெரும் ரணமாக இருந்தது. சிலக் காயங்கள் மருந்தினால் ஆறும்; ஆனால் சிலக் காயங்களை காலம் தான் ஆற்றும். அவளால் ஏற்பட்ட காயத்திற்கு அவள் தான் மருந்திட வேண்டும். ஆனால் ராக்கியின் அருகே செல்லவே பயந்து போய் நின்றிருந்தாள் ஆருஷா. கணவனுக்கு கோபம் வந்தால் அதை தணிக்கும் மந்திரம் மனைவியின் புன்னகையில் இருக்கிறது என்பதை அவளுக்கு யார் சொல்வது? இரவின் தனிமையில் தன்னை நோக்கி வந்த மனைவியின் அழகினை உள்ளுக்குள் ரசித்தாலும் அவள் தன்னை விட்டு மிகச்சுலபமாக பிரிந்து செல்ல முடிவெடுத்துவிட்டாள் என்ற நினைவு வரவே கனிந்த முகம் மீண்டும் பாறையென இறுகிவிட்டது. அவளைப் பார்க்காமல் படுக்கையின் அந்தப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் ராக்கி. அவனை எப்படி தன்புறம் திருப்புவது என்ற யோசனையில் இருந்தவளின் காதில் மரகதவல்லியம்மா கூறியவை ஒலிக்க ஆரம்பித்தன. 

 

“புருஷங்காரே கோபப்பட்ட பொண்டாட்டிக்காரி அவனை சமாதானப்படுத்துற ஐஸ்கிரீமா மாறிடணும். புருஷங்கிட்ட மட்டும் அச்சம் மடம் நாணம் இதெல்லாம் பார்க்கவே கூடாது. இவே என் புருஷே. எனக்காக கடவுள் படைத்தவன். அவனுக்காக நீ வளைஞ்சு கொடு; உனக்காக காலம் பூரா அவன் வளைஞ்சு கொடுப்பான். விட்டுக் கொடுத்து வாழுறவங்க கெட்டுப் போக மாட்டாங்க. போ.. போயி உன் புருஷனை எப்படியாவது சமாதானப்படுத்து.” என்று கூறி ஆருஷாவை அவளது அறைக்குள் அனுப்பி வைத்திருந்தார் மரகதவல்லி. 

 

‘என் கணவனிடம் பேச எனக்கென்ன பயம்?’ என்று உள்ளுக்குள் நினைத்தவள், அவளுக்கு எதிர்புறமாக முதுகை காட்டிப் படுத்திருந்தவனின் தோளில் கையிட்டு தன்னை நோக்கி திருப்பினாள். தன்னை முழுமைக்கும் திருப்பிய மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் ராக்கி. அந்த அதிர்ச்சியுடனே கண்களை விரித்து அவளை அவன் பார்க்க, அவளோ அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை என்பது போல் அவனது கழுத்தை கட்டிக் கொண்டு நெஞ்சில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவள் விலகி இருந்தாலே அவளை கண்களால் தொடந்து கொண்டு இருப்பவன், இப்போது அவளோ அவனது கைகளுக்குள் இருக்கின்றாள். அவனால் அவளை விட்டு விலகி இருக்க முடியாது போய்விடுமோ? என்று பயந்தான். தன் கைகளால் கட்டிலின் விரிப்பை அழுத்தி சுருட்டிப் பிடித்துக் கொண்டவன், ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் தலை வைத்திருந்தவள், அவனது நெஞ்சு தெரியுமாறு அணிந்திருந்த சட்டையின் பட்டனை திருக்கிக் கொண்டும், வெளியே தெரிந்த அவனது மார்பில் தன் கன்னத்தை வைத்து தேய்த்துக் கொண்டும் இருந்தவளின் கைகளைப் பிடித்து தள்ளிப் படுக்க வைக்க முயன்றான். இனிப்பைத் தேடி வரும் எறுப்பாக மீண்டும் அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டவள், இம்முறை அவனது மார்பில் உதடுகளால் கோலமிட ஆரம்பித்திருந்தாள்.  

 

‘அய்யோ! இந்த நிலைமைக்கு முன்னாடி இருந்ததே பரவாயில்லப் போலவே?! விடமாட்டேங்குறாளே!’ என்று நினைத்தவனின் கட்டுப்பாடு எந்த நிலையிலும் உடைந்து விடும் தருணத்தில் இருந்தது. இதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவன், அவளை புயலென திருப்பி அவளது இதழ்களை கவ்வி கொண்டான். பல நாட்கள் பட்டினி கிடந்தவன் போல், அவளது இதழில் இருக்கும் மொத்தத் தேனையும் உறிந்து எடுத்துக் கொண்டிருந்தான். எப்போதும் அவனுக்கு அடங்கி அவன் செய்யும் அத்தனை லீலைகளுக்கும் வழிவிட்டு அமைதியாய் இருப்பவள், இப்போது அவனின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாக அதே செயலை திருப்பிக் கொடுத்தாள். அவனது இதழ்களை இவளும் வன்மையாக கவ்விக் கொள்ள ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றான் ராக்கி. இருவரும் முத்தமிடுவதில் பட்டம் பெற்றவர்கள் போல் மாற்றி மாற்றி முத்தமிட்டு தங்களது இணையின் மீதிருக்கும் அன்பினை வெளிப்படுத்தினர். அவளது ஆடைகளை நீக்க ஆரம்பித்தவனுக்கு அப்போது தான் அவளின் மணிவயிற்றில் தனது உதிரம் இருப்பது ஞாபகம் வர, அவனை விட்டு மெல்ல நீங்கினான். அவனது செயலில் பயந்து போன ஆருஷா, இம்முறை தானே அவனை எடுத்துக் கொள்ள நினைத்தாள். அவனின் மீது இவள் படர,

 

“வேணாம்டி குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுது?!” என்று மென்மையாக கூறியவனின் முகத்தை தன் கையில் ஏந்தியவள்,

 

 “அப்படி எதுவும் ஆகாது. உங்களை நான் நம்புகின்றேன் நாதா!” என்றவள் தானே அவனது தடைகளை அகற்றி மேலும் முன்னேறினாள். யாருக்கும் எதற்கும் அஞ்சாதவன், முதல் முறையாக தனக்காகவும் தங்களது மகவிற்காகவும் அஞ்சியதைக் கண்டு தனக்குள் பூரித்துப் போனாள். முழுதாக தன்னை அவனிடம் ஒப்படைத்தாள். இதுவரை நெஞ்சில் இருந்த குற்ற உணர்ச்சியினால் தடைப்பட்டிருந்த மொத்த காதலையும் அவனிடம் கொட்டினாள். அவளது செயலில் திகைத்துப் போனவன், தன் சூழ் சுமந்திருக்கும் தங்கத் தாமரை மகளை கண்ணாடிப் பொருள் போல் கையாடினான். இருவரும் இந்த மண்ணுலகம் மறந்து தங்களது உலகத்தில் சஞ்சரிக்கும் தொடங்கினர். நேசிப்பதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. ஆனால் பின்வாங்குவதன் மூலம் உங்களது காதலை மட்டுமல்ல வாழ்க்கையையே இழக்கின்றீர்கள். 

 

ஒரு காதல் ஜோடி இனிதே தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்க, மற்றொரு ஜோடி என்னவாகினரோ? 

 

அத்தியாயம் 29

 

“போர் வீரன் போல் வேடமிட்டு எங்கு செல்கிறோம் இளவரசியாரே?!”

 

“என் மாமனைப் பார்க்க தான். அந்த ஆளு போர்னு போயி ரெண்டு வாரம் ஆச்சு. ஒரு போன் இல்ல; மெசேஜ் இல்ல. அவன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்? நிஜமாவே போருக்கு தான் போயிருக்கானா? இல்ல சைட்ல ஏதாவது சின்ன வீடு கண்டா வைச்சுருக்கானா? எதுவுமே தெரியமாட்டேங்குது. அதான் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னு போறோம்.”

 

“என்னது போர்களத்துக்கு போகின்றோமா? அது என்ன கலையரங்கமா?! நாம் சென்று பார்வையிட, ரத்த பூமி; சவங்கள் இரைந்து கிடக்கும் நரகம். எங்கு திரும்பிலும் சாவின் ஓலங்களே நிறைந்திருக்கும். அங்கெல்லாம் தாங்கள் செல்லக்கூடாது. மன்னருக்கு தெரிந்தால் என்னை பலியிட்டு விடுவார். சொன்னால் கேளுங்கள் இளவரசியாரே! மன்னர் வரும் வரை அவருக்காக இறைவனிடம் பூஜை செய்து காத்திருங்கள். சொல்வதை கேளுங்கள்.”

 

“ஹூக்கும்.. என் காது; கேட்காது. சீக்கிரம்.. சீக்கிரம்.. கிளம்பு மல்லி.”

 

“ஆனால் இளவரசியாரே!”

 

“இந்த ஆன்னா ஆவன்னா எல்லாம் இங்க வேண்டாம். ஒழுங்கு மரியாதையா எங்கூட வா.” என்ற பூவிழியாழ், மல்லியை போர்க்களத்திற்கு இழுத்துக் கொண்டு சென்றாள். போர்களத்தில் மறுநாள் நடைபெறப் போகும் போருக்கு முன்னேற்பாடாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் போர்வீரர்கள். அவர்களோடு இவர்களும் நின்று கொள்ள, சட்டென அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு வீரர்களோடு வீரனாக வரிசையில் நின்றிருந்தவளுக்கு முன்னே என்ன நடக்கின்றது என்பது தெரியாததினால் எம்பி எம்பி குதிக்க ஆரம்பித்தாள். இதனைக் கண்ட மல்லியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. 

 

“ஆஹ்..! இளவரசியாரே! என்ன செய்கின்றீர்கள்? இவ்வாறு குதித்து அட்டகாசம் செய்தால் நாம் யாரென்று அனைவருக்கும் தெரிந்து விடும். சற்று நேரம் அமைதியாக நில்லுங்கள்.” என்ற மல்லி, பூவிழியாழின் கையைப் பிடித்து அழுத்த, இவள் குதித்த குதியில் இவளை அடையாளம் கண்டு கொண்டான் ரணவீரன். 

 

“இவள் எதற்காக இங்கு வந்திருக்கின்றாள்? இவளை என்ன செய்வதென்றே தெரியவில்லையே!” என்று ரணவீரன் புலம்ப,

 

“மாவீரரின் குருமாதா வாழ்க! வாழ்க! மாவீரர்! அசராய சூரர் சூர்ய பிரபாகரன் வாழ்க! வாழ்க!” என்று படைவீரர்கள் கோஷமிட, முதிய வயதில் ஒரு பெண்மணி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருக்க, அவருக்கு மிக அருகில் ரணவீரனின் ஜாடையில் இளவயது ஆண்மகன் ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அதனைக் கண்ட பூவிழியாழ் தன் அருகே இருந்த மல்லியின் கையைப் பிடித்து இழுத்து அவளது காதுக்குள்,

 

“ஆமா யாரிந்த பெரிசு? அதுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய பில்டப்பு? அந்தம்மாவைப் பார்த்ததும் எதுக்கு இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அட்டேண்சன்ல நிக்குறாரு? அந்த வொல்ட் லேடிக்கு பின்னாடி வர்ற அந்த பையன் யாரு?”

 

“தாங்கள் இவ்வளவு கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டால், நான் எவ்வாறு பதில் கூற இயலும்?”

 

“இப்ப சொல்லப் போறியா? இல்ல அந்த ஹல்க்கிட்டயே போயி கேட்டுட்டு வரவா?” என்றபடி முன்னே செல்ல முயன்ற பூவிழியாழின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய மல்லி,

 

“சொல்கிறேன்! சொல்கிறேன்! என்னை தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கைப் பார்க்க, எவ்வளவு ஆர்வம் தங்களுக்கு? அந்த வயதான பெண்மணி தான் நம் மாவீரரின் குருமாதா ஆவார். அவருக்கு பின்னால் கம்பீரமாக நடந்து வருபவர் தான் மாவீரரின் தமையன் சூர்யபிரபாகரன்.” என்று கூற,

 

“ஓ! இவங்க ரெண்டு பேரும் அவரோட சொந்தமா?” என்று தன் கண்களை ஆச்சரியமாக விரித்தாள் பூவிழியாழ்.

 

“ஆம் இளவரசியாரே! மாவீரரையும் அவரது தமயனையும் சிறு வயதில் இருந்தே வளர்த்து வந்தவர். இவர் பேச்சுக்கு மாவீரர் எப்போதும் எதிர்பேச்சு பேசவேமாட்டார்.” என்று மல்லி கூற,

 

“ஓ! அப்படிப்பட்டவர் எதுக்கு எங்க கல்யாணத்துக்கு வரல?!” என்று தன் நாடியில் ஒற்றை விரலைத் தட்டி யோசிக்க,

 

“அது வந்து.. அது வந்து.. தங்களது தந்தை மதிவாணனுக்கும் குருமாதாவிற்கும் சிறு சண்டை ஒன்று ஏற்பட்டது. அதனால் தான் தங்களை அவருக்கு பிடிக்காது போய் விட்டது.” என்று கூற,

 

“அப்படி என்ன சண்டை? குருமாதாவின் மகளான இசைவாணியை மன்னருக்கு நான்காவது மனைவியாக திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். திருமணத்தின் போது மன்னரைப் பிடிக்காது இந்நாட்டு தளபதியோடு விவாகம் செய்து கொண்டார். தன்னை அவமானப்படுத்திய குற்றத்திற்காக மதிவாணன் இந்நாட்டின் போர் தொடுக்க எண்ணினார். அப்போது பாண்டிய மாமன்னர் தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்தார். இப்போதும் பாண்டிய மாமன்னரின் ஆணைக்காக தான் தங்களை இக்குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளார். இல்லையெனில் தங்களது தந்தை இக்குடும்பத்திற்கு கொடுத்த தொல்லைகளுக்காக தங்களை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்.” என்று வருத்தத்துடன் கூறிய மல்லியை சிறு யோசனையுடன் பார்த்த பூவிழியாழ்,

 

“அப்போ அதுனால தான் மைனரு நான் முதமுதலா இங்க வந்தப்போ என்னைய கூட்டிட்டு போகாம அவ்ளோ தூரம் நடக்க வைச்சாரோ? டேய் ராணா! உனக்கு அந்த கிழவி ரொம்ப முக்கியமா போயிடுச்சு இல்ல. உன்னையே நம்பி ஒரு ஜுவனை அனுப்பி விட்டுருக்காங்களே! அது வந்து சேர்ந்துச்சா? இல்லையா? உனக்கு எதுவுமே தோணலைல?! இப்போ என்னமோ எனக்காக உருகி வழியுற மாதிரி சீனாப் போடுற? இரு டா! உன்னை என்னப் பண்ணுறேன்னு பாரு.” என்று முணுமுணுத்தவளை பயத்துடன் பார்த்த மல்லி,

 

“என்ன செய்யப் போகிறீர்கள் இளவரசியாரே?! விபரீதமாக எதுவும் செய்து விடாதீர்கள்! சற்று நேரம் அமைதி காத்திருங்கள் இளவரசியாரே!” என்று கெஞ்சினாள். 

 

“ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன். என்னப் பண்ணப் போறேன்னு பொறுத்திருந்து பார்.” என்ற பூவிழியாழ், மெல்ல நடந்து முன்னே செல்ல, 

 

‘அய்யகோ! முடிந்தது. இன்றோடு எனது வாழ்நாளும் முடிந்து போய்விடும் போல?!’ என்று மனதுக்குள் புலம்பியவாறே பூவிழியாழின் பின்னோடு சென்றாள் மல்லி. குருமாதாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்த ரணவீரன், தங்களின் அருகில் வந்து கொண்டிருந்தவளை பார்த்ததும்,

 

‘இவள் எதற்காக இங்கு வருகிறாள்?’ என்று எண்ணமிட்டு முடிப்பதற்குள்ளாக, குருமாதாவின் அருகே வந்து கொண்டிருந்த விஷம் வாய்ந்த தேளை தன் கையில் வைத்திருந்த ஈட்டியினால் கொன்றாள். அவள் குருமாதாவை நோக்கி ஈட்டியை தூக்கவும் முதலில் பயந்து போன குருமாதா, ஒரு அடி பின்னால் சென்றார். ஆனால் போர் வீரனாக வேடமிட்டிருக்கும் பூவிழியாழ் தன் உயிரை காப்பாற்றியிருக்கின்றாள் என்பதை அறிந்ததும் நிம்மதியுற்றார். 

 

“மிக்க நன்றி வீரனே! நீ எனது உயிரை காப்பாற்றியுள்ளாய். இதற்காக உனக்கு என்ன உபயம் வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். கேள்! உனக்கு என்ன வேண்டும்?” என்று குருமாதா கேட்ட மறுநொடி, ரணவீரனை நோக்கி தன் கையை நீட்டினாள் பூவிழியாழ். அவள் இவ்வாறு செய்வாள் என்று சிறிதும் எதிர்பாராது திகைத்துப்போய் நின்றிருந்த ரணவீரனுக்கோ அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. தனது வெண்புருவங்களை சுருக்கி பூவிழியாழை போர்வீரனாய் நினைத்துப் பார்த்த குருமாதா,

 

“நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு எதுவும் புரியவில்லையே?!” என்று கேட்க,

 

 “இவர் எனக்கு சரியாகவே உணவிடவில்லை. அதனால் எனக்கு சுவையான அறுசுவை உணவு வேண்டும்.” என்று குருமாதாவைப் பார்த்து கூறிய பூவிழியாழ், தனக்கு எதிரே நின்றிருந்த ரணவீரனைப் பார்த்து கண்சிமிட்டினாள். 

 

“ஓ! கவலை வேண்டாம்! யாரங்கே?” என்று அழைக்க, சில போர்வீரர்கள் வந்து நின்றனர். அவர்களை நோக்கி திரும்பிய குருமாதா,

 

“இன்று இவனுக்கு அறுசுவை உணவு வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.” என்று கூறியவர், ரணவீரனை நோக்கி திரும்பினார்.

 

“நான் நம் நாட்டிற்கு திரும்பி வந்த நேரம் நீ மீண்டும் வெற்றி வாகை சூடியிருக்கிறாய். அதனை நினைக்கும் போது என் உள்ளம் பூரிக்கின்றது ரணவீரா!” என்று ரணவீரனை அவர் அணைத்துக் கொள்ள, அவருக்கு பின்புறமாக, நேர் எதிரே முறைத்தப்படி நின்றிருந்த பூவிழியாழைப் பார்த்தான் ரணவீரன்.  

 

‘இவள் எதற்காக இவ்வளவு உக்கிரமாக நிற்கிறாள்?’ என்று நினைத்த ரணவீரன், பூவிழியாழைப் பார்த்து தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, அம்மாயக்கண்ணனின் குறும்பில் அவளது இதயத்தின் தாளம் சற்றுத் தப்பித்தான் போனது. 

 

‘எப்படி பார்க்குறான் பாரு? ஒன்னுமே தெரியாதவன் மாதிரி! தனியா மாட்டுடி! உன் கண்ணுமுழியை நோண்டி கைல கொடுக்குறேன்.’ என்று தன் மனதுக்குள் கருவிக்கொண்டாள் பூவிழியாழ். 

 

“ரணவீரா! யாரிந்த வீரன்? இவனது பெயர் என்ன? பார்க்க மிகவும் மெலிவாக இருக்கும் இவனை எவ்வாறு போர்வீரனாக தேர்ந்தெடுத்தாய்?” என்று குருமாதா தனது கேள்விக்கணைகளை அவனை நோக்கி தொடுக்க, 

 

‘கிழவி! உன்னைய அந்த தேள்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கக் கூடாது. போட்டு தள்ளட்டும்னு விட்டுருக்கணும். உன்னையே போய் காப்பாத்துனேன் பாரு?! என்னைய பிஞ்ச செருப்பாலயே அடிக்கணும்.” என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சிரித்தவாறு நின்றிருந்தாள் பூவிழியாழ்.

 

“இவன் பெயர் பூவரசன். நம் அரண்மனையில் முக்கிய பாதுகாவலனாக இருக்கின்றான். பார்க்கத் தான் மெலிவாக இருப்பான்; ஆனால் பிற விஷயங்களில் மிகவும் பொருத்தமானவன்.” என்று பூவிழியாழை மேலிருந்து கீழாக அளவிட்டவாறே கூறியவனைப் பார்த்தவளின் மேனி செவ்வரளியாக மலர்ந்தது. இவை யாவையும் கவனிக்காமல் ரணவீரனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த குருமாதா,

 

“அப்படியென்றால் இவன் எனக்கும் சிறப்பு பாதுகாவலனாக இருக்கட்டும். இன்றிலிருந்து இவன் என்னுடனேயே இருப்பான்.” என்ற குருமாதா, பூவிழியாழை தன்னுடன் அழைத்துக் கொண்டு தனது குடிலுக்கு சென்றார். அவருடன் சென்றாலும் ரணவீரனைத் திரும்பி திரும்பி பரிதாபமாக பார்த்தபடி பலியாடாக அவருடன் சென்றாள் பூவிழியாழ். குடிலுக்குள் சென்றதும்,

 

“வீரனே! நீ இக்குடிலுக்கு வெளியே நின்று யாரும் வராமல் பார்த்துக் கொள். என் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்.” என்று உத்தரவிட்டார் குருமாதா. குடிலுக்கு வெளியே இரவின் குளிரில் நின்று கொண்டிருந்த பூவிழியாழ்,

 

“அடியேய் லூசுக்கிழவி! இப்படி என்னை தனியா கொசுக்கடில நிக்க விட்டுட்டியே! நீயெல்லாம் நல்லாருப்பியா?!” என்று புலம்பியவாறே நின்று கொண்டிருந்தாள். அப்போது உள்ளே சூர்யபிரபாகரனும் குருமாதாவும் பேசிக் கொண்டிருந்த விஷயங்கள் அவளது காதினில் விழுந்தன. 

 

“குருமாதா! இவ்வளவு நாள் அந்த மதிவாணனின் மகள் இங்கிருப்பதை விரும்பாமல் தானே நாம் வடக்குப் பகுதியில் தனித்திருந்தோம். இப்போது எதற்காக திடீரென இங்கு வந்திருக்கின்றோம்?”

 

“எல்லையை விரிவுபடுத்தவென ரணவீரன் தொடுத்த போரில் மன்னன் கரிகாலன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவரது புதல்வி வைதேகியை நம் ரணவீனனுக்கு மணமுடித்து வைக்க முடிவு செய்துள்ளதாக ஒற்றன் மூலம் அறிந்து கொண்டேன். ஆனால் நம் ரணவீரனோ அந்த மாயக்காரி பூவிழியாழின் வலையில் வீழ்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்கே அவன் இச்சம்பந்தத்தை வேண்டாம் என்று கூறிவிடுவானோ என்ற பயத்தில் தான் உடனே கிளம்பி வந்து விட்டேன். இத்திருமணம் மட்டும் நடக்காது போனால் பாண்டிய மாமன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மன்னர்கள் பல மனைவிகளுடன் வாழ்வது ஒன்றும் புதிதில்லையே. முதலில் ரணவீரனின் சம்மதத்தை பெற்றுவிட்டால் போதும்; பிறகு அம்மாயக்காரியை ரணவீரனின் மனதில் இருந்து மட்டுமல்ல அவனது நாட்டில் இருந்தே அப்புறப்படுத்துவது எளிதாகிவிடும். இதற்கு உனது துணையும் எனக்கு வேண்டும் பிரபாகரா!” 

 

“நிச்சயமாக குருமாதா! தங்களை துச்சமாக நினைத்த மதிவாணனுக்கு அதே மரியாதையை திருப்பி செலுத்த வேண்டும். அதற்காக எப்போதும் நான் உங்களுக்கு துணையிருப்பேன்.” என்று பிரபாகரன் குருமாதாவின் திட்டத்திற்கு உறுதியளிக்க, வெளியே போர்வீரனாக நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பூவிழியாழின் மனதில் இடி இறங்கியதை போல் இருந்தது.

 

ரணவீரன் பூவிழியாழை தனித்து தவிக்கவிடுவானா? வைதேகியை தனது மனைவியாக்கிக் கொள்வானா?

 

அத்தியாயம் 30

 

குருமாதாவும் சூர்யபிரபாகரனும் பேசியதை கேட்ட பூவிழியாழுக்கு அழுகையாக வந்தது. 

 

“தாய்கிழவி உன்னை காப்பாத்தி இருக்கவே கூடாது. அப்படியே விட்டுருக்கணும். இப்ப என்னையவே இங்கிருந்து பார்சல் பண்ணப் பார்க்குறயில்ல. அந்த ராணா பையனுக்கும் நான் வேண்டாமா? எப்படியெல்லாம் சோப்புப் போட்டான். அது எல்லாம் அந்த ஒரு ராத்திரிக்கு மட்டும் தானா? இதுக்கு தான் அவசர அவசரமா யாருக்கும் தெரியாம என்னைய கல்யாணம் பண்ணானா? அந்த மதிவாணன் மேல இருக்குற கோபத்தை என் மேல காட்டிட்டானா? அய்யோ கடவுளே! எனக்கு இப்பவே என்னோட அம்மா, அப்பா, ராஜமாதாவைப் பார்க்கணும். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.” என்று புலம்பிய படியே அங்கிருக்கும் ஆற்றங்கரையோரம் வந்து அமர்ந்து கொண்டவள், நேரே வானத்தை நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்தி,

 

“ஓ காட்! என்னைய என்னோட உலகத்துக்கே திருப்பி அனுப்பிடுங்களேன். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இங்க நான் நானாவே இருக்க முடியல. எல்லாமே போலி; வெளி வேஷம். இங்க யாருக்குமே என்னைய பிடிக்கல. அட்லீஸ்ட் என்னோட ராஜமாதாவையாவது இங்க அனுப்பி வை.” என்றவள் கத்திக் கொண்டிருக்கும் போது, உடை முழுவதும் நனைந்தபடி 

 

“ஆருக்குட்டி!” என்றபடியே அவளது தோளில் ஒரு கை விழுந்ததும்,

 

“போச்சு! போச்சு! பேய்! ரத்தக்காட்டேரி! டேய் ராணா! பூச்சாண்டி வந்துருக்காடா.” என்று கண்களை மூடிக் கொண்டு கத்தியவளின் தோளில் பட்டென ஒரு அடி விழவே அங்கிருந்து துள்ளி குதித்து விலகினாள் பூவிழியாழ். 

 

“யாருடி பேய்? யாருடி ரத்தக்காட்டேரி? நீ தான்டி பூச்சாண்டி.‌ உனக்காக அந்த ராக்கிப் பையகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன் பாரு. நீ இதுவும் சொல்வ? இன்னமும் சொல்ல?” என்று கூறிய வேலுநாச்சியாரை மெல்ல தொட்டும் பார்த்தவள், அவர் தன்னுடைய பாட்டி தான் என்பதை உணர்ந்ததும்,

 

“ராஜாமாதா!” என்று கதறியடி அவரை அணைத்துக் கொண்டாள் பூவிழியாழ். 

 

“ராஜமாதா! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இப்பவே என்னைய இங்கிருந்து கூட்டிட்டு போ. ப்ளீஸ்.”

 

“ஏய் நிறுத்து! இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு. அதுவும் இல்லாம இங்க என்ன பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்ஸா விடுறாங்க?! இங்க ஏறி அங்க இறங்குறதுக்கு. நானே என்னைய பெட்டிக்குள்ள தூக்கிப் போட்டு பார்சலா இங்க அனுப்பி விட்டுட்டானேன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற திரும்பப் போகணும்னு குதிக்குற. இனிமே நீயும் நானும் திரும்பி நம்ம உலகத்துக்கு போக முடியாது. வாழ்வோ சாவோ இங்க தான். ஆமா! இது என்னடி வேஷம்? இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுருக்க?” 

 

“அதெல்லாம் பெரிய கதை. அப்புறமா சொல்றேன். கொஞ்ச நேரம் இப்படி உட்காரு. நான் போய் உனக்கு போட்டுக்க ஏதாவது ட்ரெஸ் இருக்கான்னு யார்கிட்ட இருந்தாவது சுட்டுட்டு வர்றேன்.” 

 

“அடியேய்! அப்போ நீ இங்க திருடியாவா இருக்க? அய்யோ! ராஜபரம்பரைல பிறந்து வளர்ந்த பொண்ணு இப்போ திருடியா மாறிட்டாளே?! என் பேத்தியை நான் இப்படியா பார்க்கணும்?! அடக்கடவுளே! உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லயா?” 

 

“நீ மங்குனி அமைச்சர் என்பதை நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் காண்பிக்கின்றாய்.”

 

“????”

 

“என்னப்பார்க்குற? இங்க இப்படி சுத்தத்தமிழ்ல தான் பேசியாகணும். அதனால உன் திருவாயை கொஞ்ச நேரம் மூடிட்டு உட்காரு. நான் ட்ரெஸ்ஸோட வர்றேன். இங்கிருந்து எங்கயும் எந்திரிச்சு போயிடாத. அப்புறம் புள்ளப்புடிக்குற பூச்சாண்டின்னு ஜெயில்ல தூக்கிப் போட்டுடுவாங்க.” என்று வேலுநாச்சியாரிடம் பல முறை கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் பூவிழியாழ். அருகே இருந்த வீட்டில் இருந்து உடுத்தும் உடைகளை திருடிக் கொண்டு வந்து வேலுநாச்சியாருக்கு கொடுத்து அணிந்து கொள்ள செய்தவள், நடந்த அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொள்ள, தானும் ராக்கியைப் பற்றியும் அங்கு நடந்ததைப் பற்றியும் பூவிழியாழிடம் கூறினார். 

 

“ஓ! இவ்வளோ நடந்துருக்கா? நார்மலா உன்னைய பார்த்த உடனே கொன்னுடணும்னு தான் நினைச்சேன்.”

 

“ஏன்டி? ஏன் இந்த கொலைவெறி?”

 

“பின்ன? சும்மா இருந்தவளை காலச்சக்கரப் பெட்டிக்கிட்ட கூட்டிட்டு போனதே நீதானே?! அப்போ நான் இங்க வந்து மாட்டிகிட்டதுக்கு காரணம் யாரு? இப்போ திரும்பிப் போக இருந்த ஒரே வழியையும் மொத்தமா ஊத்தி மூடியது யாரு? நீதானே?!”

 

“நான் ஏதோ அறியாத புள்ள நாலு விஷயத்தை அறிஞ்சுக்கட்டும்னு தான் உன்னைய கூட்டிட்டு வந்து காண்பிச்சேன். நீ அந்த பெட்டிக்குள்ள ஏறிப்படுப்பன்னு நான் என்ன கனவா கண்டேன்?”

 

“ராஜமாதா! ரொம்ப அதிகமா பேசுற. அப்புறம் மூச்சு முட்டிக்கப் போகுது.”

 

“என் மூச்சு எப்படிடி முட்டிக்கும்?”

 

“என் புருஷன் மாவீரன் ரணவீரன் தெரியும்ல?! காத்தே வராத இடத்துல அடைக்கச் சொல்லிடுவேன்.”

 

“ஏய் என்ன?! இந்த வேலுநாச்சியாரையே மிரட்டுறியா?”

 

“அய்யோ! ராஜமாதா! கொஞ்ச நேரம் வாயமூடுறீங்களா? நானே உங்களை எப்படி அந்த கூட்டத்துக்குள்ள கூட்டிட்டு போறதுன்னு யோசிச்சுட்டுருக்கேன். சும்மா ஓட்டப் பானைக்குள்ள நண்டு விட்ட மாதிரி நொய்யி நொய்யின்னு பேசிட்டுருக்கீங்க. இங்க நாம் ரெண்டு பேரு மட்டும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்கணும். புரியுதா?”

 

“அப்படின்னா என்னைய உன்கூட கூட்டிட்டு போயிடுவ தானே?!”

 

“வேற வழி?! ம்ம்ம்.. ஐடியா. நாளைக்கு அந்த தாய்கிழவி சூர்யநமஸ்காரம் பண்ண எப்படியும் இங்க தான் வரும். அப்போ.. சரியா அது பின்னால் இருந்து நான் அதை தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுர்றேன். நீ பாய்ஞ்சு அதை காப்பாத்தி மாதிரி தடுத்து பிடிச்சுக்கோ. அதோட உயிரை காப்பத்துனதுக்காக உன்னைய அந்த கூட்டத்தில சேர்த்துக்குவாங்க. அந்த கூட்டத்தில சேர்த்தா போதும், மீதியை நான் பார்த்துக்குறேன்.”

 

“ஏன்டி பாய்ஞ்சு வந்து காப்பாத்த நான் என்ன இளவட்டமாடி. என்னால என் காலை தூக்கி நடக்கவே அரை நாள் ஆகும். இதுல அந்த கிழவியை நான் காப்பாத்தணுமா?”

 

“நான் ப்ளானை சொல்லிட்டேன் செய்யுறதும் செய்யாததும் உன் இஷ்டம்.”

 

“எல்லாம் சரி தான். இன்னைக்கு நைட் நான் எங்க தங்குறது. நீ வேற பாதி ட்ரெஸ்‌ தான் கொடுத்துருக்க. உன்னைய மாதிரி முழுசா போட்டுக்குற மாதிரி ஏதாவது ட்ரெஸ் இருந்தா, கொடேன்.”

 

“ராஜமாதாஆஆஆ.. இது ஆம்பளைங்க போடுற ட்ரெஸ். நான் இப்போ சிப்பாய் வேஷத்துல இருக்கேன். என்னைய ரொம்ப தொந்தரவு பண்ணாம, அதோ தெரியுது பாரு?! அந்த சத்திரத்துல தங்கிக்கோ. நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கெல்லாம் நீ வந்துடணும். நான் உனக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணி கொண்டு வந்து தர்றேன்.”

 

“ராஜக்குட்டி! என்னம்மா ப்ளான் போடுது?! குட்டிம்மா நீ நல்லாருக்கியாடி?! அந்த மாவீரன் உன்னைய நல்லாப் பார்த்துக்குறானா?” என்ற வேலுநாச்சியாரின் கேள்வியை கேட்டதும் அவளின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. அதனை அவருக்கு தெரியாமல் மறைந்தவள்,

 

“இது தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு. இதுக்கு மேல் அவன் என்னைய நல்லாப்‌ பார்த்துகிட்டாலும், இல்லேன்னாலும் நான் இங்க தானே வாழ்ந்தாகணும்? என்னால முடிஞ்ச வரைக்கும் போராடுவேன் ராஜமாதா. ஆனா உனக்கெதுவும் ஆகவிடமாட்டேன். எனக்குன்னு நீயாவது கூட இரு ப்ளீஸ்..” என்று கூற,

 

“என் தங்கம்! கலங்காதடி! உன்னைய இப்படி பேச வைச்சதுக்காகவே அந்த கிழவியை உண்டில்லைன்னு பண்ணிடுறேன். இந்த வேலுநாச்சி நினைச்சா, நினைச்சதை செஞ்சு முடிப்பா. நீ கலங்காதடா. பாட்டி எப்பவும் உன் நிழலா உன் கூடவே இருப்பேன்.” என்று தன் பேத்தியை ஆறுதலாக அணைத்துக் கொண்டார் வேலுநாச்சியார். மாலை நேரம் தாண்டி இரவு நெருங்கும் நேரத்தில் தன் பாட்டியை மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு குருமாதாவின் குடிலுக்கு வந்தவள் ஈட்டியை நீட்டி பிடித்தபடி காவலுக்கு நின்று கொண்டாள். இரவின் குளிரில் உடல் நடுங்கியபடி நின்றிருந்தவளை பின்னிருந்து ஏதோ ஒரு உருவம், அவளது வாயை துணியால் அடைத்து, துண்டாக மடித்து தன் தோள்களில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது. சற்று தூரத்திலேயே தன் வாயில் அடைந்திருந்த துணியை எடுத்துவிட்ட பூவிழியாழ்,

 

“யோவ் பேமானி! இறக்கிவிடுயா. என் புருஷே யாருன்னு தெரியுமா? இறக்கிவிடுயா. அப்பால ரொம்ப வருத்தப்படுவ. அந்த மனுஷனுக்கு மட்டும் நீ என்னைய இப்புடி இஷ்துக்கின்னு போறது தெரிஞ்சது? மவனே உன் நெஞ்சாங்கூட்டுல இருக்குற மஞ்சாசோத்தை எடுத்துடுவாரு. இறக்கிவிடுயா. அடேய் இறக்கிவிடுடா. குள்ளநரிப்பயலே!” என்று கத்தியவளை சற்று தூரத்தில் வந்த மரத்தின் கீழ் நிற்க வைத்த அந்த உருவத்தைப் பார்த்ததும் வாயடைத்துப் போய் நின்றிருந்தாள் பூவிழியாழ். 

 

“யோவ் ராணா! என்னைய எதுக்குயா இப்படி தூக்கிட்டு வர்ற? சொந்த பொண்டாட்டியை இப்படித்தான் திருட்டுத்தனமா தூக்கிட்டு வருவியா?”

 

“சொந்த மனைவி நல்ல பெண்ணாக அரண்மனையில் இருந்தால் நான் ஏன் இவ்வாறு தூக்கிக் கொண்டு போகப் போகிறேன். கள்ளனாக வந்து படைவீரனாக வேடமிட்டு நிற்கும் மனைவியை இப்படி தான் தூக்கிச் செல்ல தோன்றுகிறது.” என்றவன் மேற்கொண்டு அவளை பேசவிடாது அவளது இதழ்களை கவ்வி கொண்டான். அவனிடமிருந்து திமிறிக் கொண்டு விலகியவள்,

 

“ஏன்யா உதட்டை இப்படி கடிச்சு வைக்குற? ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பா.. எப்படி வலிக்குது தெரியுமா? இப்படி காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி அவசரப்படுவீங்க?” என்று அவனைப் பற்றி அவனிடமே புகார் அளித்தவனை மீண்டும் தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன்,

 

“சற்று நேரம் அமைதியாக வா. நமது குடிலுக்கு சென்றதும் நீ எப்படி வேண்டுமானாலும் பேசு. நீ என்ன பேசினாலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்றவாறே அவளை தன் தோளில் போட்டுக் கொண்டு தனது குடிலுக்கு சென்றான். அங்கு வந்த அடுத்த நொடி அவனிடமிருந்து குதித்து இறங்கியவள்,

 

“இங்க எதுக்கு என்னைய தூக்கிட்டு வந்தீங்க? ஆமா! போருக்கு போறேன்னு வெற்றிவேல்! வீரவேல்னு கிளம்பிப் போறீங்க தானே? எப்ப போர் முடிஞ்சுது? ம்ம் சொல்லுங்க?!” என்றவாறே சுற்றி முற்றி எதையோ தேட, அவளருகில் சென்று அவளது கைப்பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன்,

 

“இப்போது எதற்காக குனிந்து எதையோ தேடுகிறாய்?” என்றவனின் கையை உதறினாள் பூவிழியாழ். 

 

“ம்ம்ம்.. இல்ல இங்க ஏதாவது கட்டை இருக்குமான்னு பார்க்குறேன்.”

 

“எதற்காக?”

 

“இதற்காக..” என்றவள் கட்டையை எடுத்து அவனது காலுக்கடியில் வீசத் தொடங்கினாள் பூவிழியாழ்.

 

“அடிப்பாவி சண்டாலி! கட்டிய கணவனை உருட்டுக்கட்டையால் அடிக்க வருகிறாயே?! நீயெல்லாம் ஒரு தர்மபத்தினியா?! உலகமே என்னைக் கண்டு அச்சம் கொள்ளும் அசாதாரண சூரன் நான். என்னையே அடிக்க வருகின்றாயே?!” என்றவன் எளிதாக அவளது கையில் இருந்த கட்டையை வாங்கி தூரப்போட்டான். அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டான். 

 

“இப்போது சொல் உன் மனதில் என்ன குழப்பம் நிலவுகிறது?” 

 

“நீயும் மத்த ராஜாக்கள் மாதிரி பல பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்குவியா? அப்போ உனக்கு நான் வேண்டாமா?”

 

“நீ எனக்கு வேண்டாம் என்று நினைத்திருந்தால் உன்னைத் தேடி இந்த அர்த்த ராத்திரியில் வந்திருப்பேனா? இன்று தான் போர் முடிந்ததென அறிவிக்க நேர்ந்தது. வெற்றியினை உன்னுடன் சேர்ந்து கொண்டாடவென நினைத்திருக்கும் போது, என் தேவதை என் கண்முன்னே வந்து நிற்கிறாய். ஆனால் அதே நேரம் வெகு நாட்களுக்கு பிறகு குருமாதாவும் சூர்யாவும் திரும்பி வந்திருக்கிறார்கள். வந்த உடனே அவர்கள் கூறுவதை என்னால் மறுக்க முடியவில்லை. இருப்பினும் இந்த மாவீரன் ரணவீரன் உனக்கொரு வாக்களிக்கின்றேன். உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணிற்கும் என் மனதிலும் வாழ்க்கையிலும் இடமில்லை. என் வாழ்வில் ஒரு திருமணம் தான்; ஒரு மனைவி தான். என் மேல் நம்பிக்கை கொள்ளடி பெண்ணே?!”  

 

“க்கும்.. எப்படி நம்ப சொல்றீங்க? அந்த குருமாதா பேசுனது எல்லாத்தையும் தான் நான் கேட்டேனே?! நீங்க என் அப்பாவ பழிவாங்கத்தானே என்னைய கல்யாணம் பண்ணிகிட்டீங்க?! எனக்கு தெரியும். அப்போ உங்ளுக்கு என் மேல லவ்வே இல்ல..”

 

“சித்தம் கலங்கிவிட்டதா உனக்கு?! உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது பேரரசர் பாண்டிய மன்னர். நானாக உன்னைத் தேடி வரவில்லை.” என்றவன் கூறியதும்,

 

“ஆஆஆஆ.. ஆஆஆஆ..” என்று அழுகத் தொடங்கியவளின் வாயோடு வாய் வைத்து இதழ் பொருத்தியவன், 

 

“உன்னை பழிவாங்கவென்று திருமணம் செய்திருந்தால் என் வெறுப்பை உன்னிடம் காட்டியிருக்கமாட்டேனா? நீயாக எதையும் நினைத்துக் கொள்ளாதே!” என்றவனின் இரும்புக்கரங்கள் அவளை சுற்றி வளைக்க, வெட்கத்தில் மூச்சு முட்டியது. அவளை அங்கம் அங்கமாக ரசிக்கத் தொடங்கினான். அவளது எதிர்ப்புகள் அத்தனையையும் தன் கரங்களால் தடுத்து நிறுத்தியவன், அவளது கண், காது, மூக்கு, வாய், உதடு மற்றும் கொடி இடை அனைத்திலும் பாரபட்சம் முத்தமழை பொழிந்தான். 

 

“அதென்ன கோபம் வந்தால் மட்டும் மரியாதை வருகின்றது. மற்ற நேரம் எல்லாம் உன்னுடைய மரியாதை காற்று வாங்க போயிற்றோ?!” என்று அவளிடம் பேசிக்கொண்டே பெண்ணவளின் உடலை வீணையென மீட்ட, அவன் கொடுத்த சுகவேதனை தாங்காது, மங்கையவள் தோடி ராகம் பாடினாள். மன்னவன் வெளிப்படையாக தன் மோகத்தை காட்ட, மங்கையவள் அம்மோகத்தில் மூழ்கித் தான் போனாள். போர்களத்தில் பலநாட்களை கழித்தவன் முன்னே பொற்குவியலாக கிடந்த பெண்ணழகை, எங்கேயும் எதிலும் கிடைக்காத இன்பத்தை தன் மனைவியிடம் தேடினான். அவளது செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் ரணவீரனை இரவெல்லாம் தூங்க விடாமல் மேலும் மேலும் அவளை நாடச் செய்தது. களைத்து கலைந்த ஓவியமாக ரணவீரனின் மார்பின் மேல் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருக்கும் பூவிழியாழின் மணவாளன் மற்றொரு மங்கையை மனைவியாக கைப்பிடிப்பானா? இல்லை குருமாதாவின் வார்த்தையை மீறுவானா? மலருக்கு மலர் தாவும் வண்டென மாறுவானா? 

 

1 thought on “இரகசிய மோக கனாவில் 28,29&30”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top