ATM Tamil Romantic Novels

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் நான்கு

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் நான்கு

திருச்சி தில்லை நகரில் உள்ள ரவிக்குமாரின் அத்தை விமலா தன் கணவர் ராமமூர்த்தியை தன் பெண் கீதாவுடன் சென்னைக்கு அனுப்பியிருந்தாள். எப்படியாவது தன் பெண் கீதாவை ரவிக்கு கட்டி வைத்து விட்டால் அவனுடைய சொத்துக்கள் முழுதும் பெண் மூலம் நமக்கும் கிடைக்கும் என்ற பேராசையில் தன்னுடைய கணவரை நச்சரித்து இதோ இங்கே சென்னை பிருந்தாவன் இல்லத்துக்கு வந்து சேர்ந்து இருந்தார்.

கீதா அழகு தான் என்றாலும் மிகவும் ஆணவத்துடனும் கர்வத்துடனும் இருப்பவள். BE முடித்து ஒருவனை காதலித்து அவன் இவளை ஏமாற்றி வயிற்றில் சிசு உருவாகி கலைத்து இப்போது தாய் வீட்டில் ஒரு வேலைக்கும் செல்லாமல் நேரத்தை போக்கி கொண்டு இருப்பவள்.

கீதாவுக்கு வீடு வேலை செய்தே பழக்கம் கிடையாது. என்னேரமும் டிவி , யு ட்யூப் , முக நூல் என்று காலத்தை போக்கியே பழக்க பட்டவள். இவளால் ஒரு சின்ன வேலை கூட செய்ய முடியாது.

அப்படிப்பட்டவள் இங்கே கோமதி செய்யும் வேலைகளை பார்த்து எரிச்சல் அடைந்தாள்.

கோமதியை எப்படியாவது சதி திட்டம் தீட்டி துரத்த எண்ணினாள். இவளால் காலை 8 மணிக்கு கூட எழுந்திருக்க முடியவில்லை. கோமதியோ எட்டு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவாள். பம்பரமாய் சுழல்வாள்.

குழந்தைகள் கோமதியின் அன்பில் தாய் மைதிலியை சுத்தமாக மறந்து இருந்தனர். இவளை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர் .
இவள் வந்து நான்கே நாட்களில் குழந்தைகளை அம்மா என்று கூப்பிட வைத்து விட்டாளே என்று ரவிகுமாருக்கே ஆச்சர்யம். மாமனாருக்கோ இவளை ரொம்ப பிடித்து விட்டது. தன் பெண் மைதிலி இடத்தை கண்டிப்பாக இவளை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று தீர்மானத்திற்கே வந்து விட்டு இருந்தார் .

வேளா வேளைக்கு நல்ல சுவையான உணவு . வீட்டை சுத்தமாக பராமரிக்கிறாள். அங்கே வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் கார் ஓட்டுனர்கள் , தோட்ட வேலைக்காரர்கள் என அனைவர்க்கும் இவளே உணவு பரிமாறுவாள்.

அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்து விடும். இவளை பற்றி மாமனாரிடம் புகழ்ந்து சொல்லுவார்கள். ஐய்யா ரவி அய்யாவுக்கு கோமதியை கட்டி வைத்து விடுங்கள் உங்களால் முடிந்தால் என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டனர்.

ஒரு வாரம் ஓடி விட்டது . அது வரை திருச்சியில் இவளது தங்கைகள் ரம்யாவும் , கவிதாவும் வீட்டை பார்த்து கொண்டனர். இவள் அங்கு இல்லாதது அப்போது தான் அனைவர்க்கும் இவளது நிர்வாக திறனை உணர வைத்தது.

கவிதா கோமதியின் கைபேசியில் அவளை அழைத்து “நீ இல்லாமல் இந்த வீடே நல்லா இல்லை அக்கா. எப்போது வருவீர்கள்” என்று அழ

கோமதி ” கொஞ்ச நாள் பொறுத்து கொள்ளுங்கள் , ஒரு வேலைக்காரியை அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் ” என்று சொன்னாள்.

அப்பாவுக்கோ இவளது சுவையான சாப்பாடு சாப்பிட்டு விட்டு இப்போது சாப்பாடே பிடிக்காமல் ஏனோ கடமைக்கு சாப்பிட்டார்.

அம்மாவிடம் எவ்வளவு வேலை இருந்தாலும் காலையிலும் மாலையிலும் கொஞ்ச நேரம் அருகே கையை வாஞ்சையுடன் பற்றி கொண்டு ஆறுதலுடன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடப்பவற்றை எல்லா கதைகளையும் பேசி கொண்டு இருப்பாள். இப்போது அம்மாவிடம் பேசவே ஆள் இல்லை.

கவிதாவும் ரம்யாவும் நேரத்துக்கு சாப்பாடு ஊட்டி விட்டு செல்வார்கள்.
சில நேரம் மாத்திரை கொடுக்க மறந்து விடுவார்கள். எப்படியோ நாட்களை கடத்தினர்.

ரவிக்குமாருக்கு அன்று கட்டு பிரித்து கையை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டிய நாள்.

அன்று காலையில் 3 மணிக்கே எழுந்து வீடு வேலைகளை முடித்து பூஜை அறையில் சிறப்பாக பூஜை செய்து சுவாமி படங்களுக்கு மலை ஏற்றி சாம்பிராணி போடு இருந்தாள். மாமனார் 6 மணிக்கு எழுந்து வெளியில் சக்கர நாற்காலியில் வந்த போது இவளின் வீட்டை கவனிக்கும் முறை பொறுப்பு, தெய்வ பக்தி எல்லாம் பார்த்து பரவசம் அடைந்தார்.

எல்லோருக்கும் காபி கலந்து கொடுத்தாள். வேலை அட்டைகள் எல்லோரும் இவளின் காபி மற்றும் உணவின் சுவைக்கு அடிமை ஆகி விட்டனர்.

அனைவரிடமும் இவளின் சுறுசுறுப்பு பற்றி கொண்டது. இவளை பார்த்து பார்த்து பொறுப்பு என்றால் என்ன என்று கற்று கொண்டனர்.

ரவிக்குமார் வீட்டில் வேலை ஆட்களிடம் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை கவனித்தான். மாமனாரையும் அன்றே மருத்துவ மனைக்கு வருமாறு சொன்னாள்.

இருவரையும் டிரைவர் உதவியுடன் மருத்துவ மனைக்கு குழந்தைகள் உட்பட அழைத்து சென்று காண்பித்து வந்தாள். ரவிக்குமாருக்கு கட்டை பிரித்து சாதாரணமாக கையை வைத்து இருக்க சொல்லி விட்டார்கள். ஒரு மாதத்திற்கு அதிக எடை தூக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்கள். மாமனாருக்கு கட்டை பிரித்து பார்த்து வேறு கட்டு போட்டு இன்னும் ஒரு வாரம் கழித்து வர சொன்னார்கள்.

இருவரும் வீட்டுக்கு வந்ததும் வேலையாட்களிடம் சொல்லி வைத்து இருந்த ஆரத்தி தட்டை வாங்கி திருஷ்டி கழித்து உள்ளே கூட்டி சென்றாள்.

கீதாவுக்கு பொறுக்க முடியவில்லை . இவள் பலே கைகாரி அப்பா. அனைவரையும் மயக்கி தான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாள். என்று தன் அப்பாவிடம் குமுறி கொண்டு இருந்தாள்.

அப்பாவோ “உன்னால் கோமதி செய்யும் வேலையில் பத்து சதவீதம் கூட செய்ய முடியாது. இந்த வீட்டை உன்னால் கண்டிப்பாக நிர்வகிக்க முடியாது கீதா “என்று சொன்னார்.

“இருந்தாலும் இவள் சம்பளம் வாங்கும் வேலைக்காரிதானே அப்பா. நம் போல் உறவு காரர்கள் இல்லையே .. அதனால் நீங்கள் மாமாவிடம் சென்று எதற்கும் பேசி பாருங்கள் ..” என்று கீதா சொல்ல அப்பா ராமமூர்த்தியும் அவனிடம் கேட்டு பார்த்தார்.

“குழந்தைகளை பார்த்து கொள்ள இப்போது கோமதி இருக்கிறாள். வீட்டையும் நன்றாகவே நிர்வாகம் செய்கிறாள். அதனால் என் திருமணத்திற்கு இப்போது அவசரம் இல்லை மாமா . மைதிலி இறந்து இன்னும் நான்கு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி பட்ட பேச்சு வேண்டாம் மாமா. காலம் போகட்டும் எனக்கு திருமணம் தேவைப்பட்டால் சொல்கிறேன்” என்றான்.

மாமனாரும் அங்கே வர இவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். அனைத்தையும் காதில் வாங்கியவர் ” ஓஹோ இவர்கள் கீதாவை கட்டி வைக்க திட்டம் தீட்டுகின்றனர் ” என புரிந்து கொண்டார்.

கீதா இந்த வீட்டை நிர்வகிக்கவோ குழந்தைகளை பார்த்து கொள்ளவோ முடியாது. அவளது சோம்பேறி தனத்தை விட்டால் ஒழிய அது சாத்தியமே இல்லை என்று தனக்குள் சொல்லி கொண்டார்.

கோமதியை விட கீதா அழகில் உயர்ந்து இருந்தாலும் குணத்தில் கோமதியின் அருகில் நிற்க கூட முடியாது என நினைத்தார்.
சரி பார்க்கலாம் ரவியின் எண்ணத்தை அறியும் முன் எதுவும் முடிவு செய்ய கூடாது என நினைத்தார். சற்று முன் அவன் தன் மாமாவிடம் கூறியதும் அவர் மனதில் ஓடியது.

ரவிக்குமார் அவளை அழைத்தான் மாமனாரையும் கூப்பிட்டான்.
“கோமதி நீ வந்து ஒரு வாரம் ஆகி விட்டது .. உன் வரவு இந்த வீட்டை பொறுத்தவரை எங்களுக்கு நிறைந்த நிம்மதியை அமைதியை கொடுத்தது. குழைந்தைகள் மைதிலியை மறந்தே விட்டனர். உன்னையே அம்மா என்று அழைக்க துவங்கி விட்டனர். வேலை ஆட்களும் உன் உபசரிப்பில் சற்று மாறியுள்ளனர். உன் சுறுசுறுப்பு அவர்களுக்கும் தொற்றி கொண்டது. உண்மையை சொல்ல வேண்டுமானால் நானும் உன் வேலை திறமையால் உன் அணுகு முறையால் உன் செயல் பட்டால் மிகவும் கவர பட்டு இருக்கிறேன். மாமனாரும் உன்னை பற்றி குறை ஒன்றும் சொல்லவில்லை.

எனவே நீ நிரந்தரமாக நீ இங்கே வேலை செய்வதற்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இது. உன் சம்பளம் 2 லட்சம். இது கெஸ்ட் ஹவுஸ் சாவி. நீ விருப்ப பட்டால் உன் குடும்பத்தினரை இங்கே அழைத்து வரலாம். அது முழுக்க முழுக்க உன் விருப்பம்.

இது என் பரிசு என்று 5 ச்வரனில் தங்க சங்கிலி கொடுத்தான்.

இது போக உன் பழைய முதலாளி பரம சிவத்திடம் பேசினேன். உன்னை பற்றி மிக நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார். நீ அந்த பத்து லட்சத்தை கண்டிப்பாக எடுத்திருக்க வாய்ப்பு இல்லை , சந்தர்ப்ப சூழலால் நீ குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளாய் என்று சொன்னார்” என்றான்.

நான் எனது நண்பர் வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் உன்னை பற்றி கூறி அந்த அகௌண்ட்டண்ட் செல்வகுமாரை தீவிரமாக விசாரிக்க சொல்லி உள்ளேன் , பார்க்கலாம்” என்றான்.

மிகுந்த நன்றி சார் என்றாள். மேலும் நான் என் வீட்டாரை தற்சமயம் கூப்பிட முடியாது. வேண்டுமென்றால் படுத்த படுக்கையில் உள்ள என் அம்மாவை மட்டும் கூப்பிட்டு கொள்கிறேன்” என்றாள்.

“இட்ஸ் ஆல் ரைட் . அது உன் விருப்பம் கோமதி ” என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

ஒரு ஆம்புலன்ஸ் புக் பண்ணினான் . அவள் அம்மாவை திருச்சி வீட்டில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தான்.

கெஸ்ட் ஹவுசில் அம்மாவுக்கு தங்க ஏற்பாடுகளை வேலை ஆட்களை விட்டு செய்து கொடுத்தான்.

இவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி

நன்றி உணர்வின் மிகுதியால் அவன் கால்களில் விழுந்து விட்டாள் .

அவன் இதெல்லாம் கூடாது கோமதி என்று தடுத்தான்.

அங்கே அன்பு , பாசம் நிறைந்து இருந்தது. மாமனார் அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்தார்.

கீதாவும் அவள் அப்பாவும் கோமதியின் மீது கடுப்பில் இருந்தனர்.

தொடரும்.

 

 

 

1 thought on “காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் நான்கு”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top