ATM Tamil Romantic Novels

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் ஐந்து

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் ஐந்து

கோமதியை விரட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ரவியின் அத்தை விமலாவும் சென்னை வந்து விட்டாள்.

சமையல் அறையில் விமலா கோமதியை விட வில்லை. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள். இவளும் கூட உதவி செய்கிறேன் என்றாலும் கூட விடவில்லை. குழந்தைகளை பாசமாக இவளுடன் ஒரு தனி அறையில் வைத்துக்கொண்டாள். கோமதியுடன் பழகவே விட வில்லை.
“என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறீர்கள்” என்று கோமதி கேட்டே விட்டாள்.

அதற்கு உனக்கு என்ன என் வீடு இது , ரவியை மயக்கி உன் வசம் கொண்டு போக விட மாட்டேனடி. உன் ஜம்பம் என்னிடம் செல்லாது. போய் விடு உன் வேலையை பார்த்து கொண்டு என்றாள்.

மாமனார் இதை கவனித்து வந்தார். விமலாவின் நடவடிக்கைகள் ஏறு மாறாக இருந்தது.
கோமதியிடம் கேட்டார் “உங்களுக்குள் ஏதும் பிரச்சனையா” என்று .

“ஒன்னும் புரியவில்லை மாமா..” என்றாள்.

மாமாவுக்கு சாப்பாடு சுத்தமாக பிடிக்கவில்லை. ரவிக்குமார் தன் நிறுவன வேலையில் பிசி ஆகிவிட்டான். இத்தனை நாள் அலுவலகம் செல்லாமல் இருந்ததால் நிறைய வேலைகள் மீதம் இருந்தன. இதனால் வீட்டில் நடப்பதை சரிவர கண்காணிக்க அவனுக்கு நேரமே இருப்பதில்லை.

ஒரு நாள் கோமதி அவன் மாமனாரிடம் சென்று ” ரவி சாரின் அத்தை இருக்கும் பொது நான் வேறு இங்கே தேவை இல்லாமல் எதற்கு இருக்கவேண்டும். நான் வேலையை விட்டு நின்று கொள்ளலாம் என இருக்கிறேன்” என்றாள்.

அதற்கு மாமா ” என்னமா இது இரண்டு வாரங்கள் தானே ஆகிறது அதற்குள் இப்படி ஒரு முடிவா.. கொஞ்சம் பொறுத்து இரும்மா .. இவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருந்து கவனிக்க முடியும் .எதற்கும் ஒரு மாதம் பொறுத்து முடிவு செய்யலாம் . மேலும் ரவியிடமும் தெரிவித்து அவன் ஆலோசனையை பெற்று பிறகு முடிவெடு” என்று கனிவாக கூறினார்.

சரி என்று தன்ன்னால் முடிந்த வேலைகளை எல்லாம் செய்ய துவங்கினாள். குழந்தைகளை இவள் பக்கம் விமலா அத்தை விடுவதே இல்லை.

ஒரு ஞாயிறு கிழமை ரவிக்குமார் கோமதியிடம் வந்தான். கோமதி நீ இப்போதெல்லாம் சேமிப்பது இல்லை போல் இருக்கிறதே. மேலும் குழந்தைகளை நீ பார்ப்பதே இல்லை என்றும் அத்தை சொன்னார்கள். என்ன ஆச்சு உனக்கு. அத்தை வயதானவர்கள் அவர்களை சமையல் அறையில் விட்டு விட்டு நீ என்ன செய்கிறாய். உன் மீது நிறைய புகார்கள் கூறுகிறார்கள் அத்தை ” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

மாமனார் அங்கே இதை கேட்டுவிட்டு வந்தார்.

ரவிகுமாரிடம் “கொஞ்சம் தனியே நாம் வெளியே ஏதாவது ஒரு ஹோட்டல் போய் காபி சாப்பிடலாமா ? . உன்னிடம் கொஞ்சம் தனியே பேச வேண்டி உள்ளது” என்றார்.

கோமதி நீயும் வா எங்களுடன் என்று அவளையும் அழைத்து கொண்டு கிளம்பினார்கள்.

மாமா வீல் சேரில் இருந்து மெல்ல ஏறி முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். வீல் சேரை மடக்கி பின் இருக்கையில் தள்ளி வைத்து இவள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ரவி வண்டியை ஓட்ட மூவரும்
அருகே உள்ள ஒரு ஹொட்டேல் சென்று நிறுத்தினான்.

மூவருக்கும் காபி ஆர்டர் செய்து விட்டு “என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள்.” என்றான்.

மாமா ஆரம்பித்தார் ,” ரவி உன் அத்தை வந்ததில் இருந்து கோமதியை சமையல் அறைக்குள் விடுவதில்லை. குழந்தைகளையும் கோமதியிடம் காண்பிப்பதே இல்லை. அவள் வேலை செய்ய சென்றாலும் உனக்கு எங்கள் வீட்டில் என்ன வேலை. நீ போகலாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று இவளை தள்ளி நிற்க வைத்து விட்டாள். எனக்கே இப்போதெல்லாம் நாம் வேறு ஏன் தேவை இல்லாமல் இங்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

கோமதியும் என்னிடம் சென்ற வாரமே நான் வேலைக்கு தேவை இல்லாமல் இங்கே வெட்டியாக எதற்கு .. நான் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டாள். ஆனால் உன் அத்தை இவளை பற்றி உன்னிடம் புகார் வேறு மாதிரி திரித்து கூறி இருக்கிறார். அதனால் நீ தான் இனி முடிவு எடுக்க வேண்டும்.மேலும் நானும் கோமதியுடன் சென்று விடலாம் என்று இருக்கிறேன். பெண்ணை கட்டி கொடுத்த இடத்தில் பெண்ணே வாழாத போது நான் இருப்பது நல்லதல்ல. ” என்றார்.

ஓ இவ்வளவு நடந்து இருக்கிறது இந்த ஒரு வாரத்தில்.. என்று ரவி ஒரு பெரு மூச்சு விட்டான்.

“சரி வீட்டுக்கு வாருங்கள். அனைவரின் முன்னிலையில் ஒரு அறிவிப்பை செய்ய இருக்கிறேன். அங்கே வந்து ஏன் முடிவை கேட்டு விட்டு பிறகு முடிவு எடுத்து கொள்ளுங்கள். “என்று கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பலாம் என்றான்.

வீட்டிற்கு வந்தான். அனைவரையும் அழைத்தான். அனைவரும் ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தனர்.

குழந்தைகள் கீதாவிடம் இருந்தனர். கோமதி சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தாள். மாமா வீல் சேரில் அமர்ந்து இருந்தார்.

அத்தை, கீதா , கீதாவின் அப்பா மூவரும் ரவிக்கு எதிரே உள்ள சோபாவில் இருந்தனர்.

ரவி பேச தொடங்கினான். “நான் கோமதியை இந்த வீட்டு பொறுப்பை ஏற்று கொண்டு நிர்வகிக்க அமர்த்தியுள்ளேன். அத்தை நீங்கள் அந்த பொறுப்பை முழுவதுமாக ஏற்று கொள்வதாக இருந்தால் இங்கேயே தங்கி இருந்து பொறுப்பாக நிர்வகிக்க முடியும் என்றால் சொல்லுங்கள் நான் கோமதியை வீட்டு பொறுப்பில் இருந்து விலக்கி விடுகிறேன். ” என்றான்.

விமலா அத்தை “கீதாவை நீ திருமணம் செய்து கொள். குழந்தைகள் தாயில்லாமல் ஏங்கி கிடக்கின்றன. நான், மாமா , கீதா மூவரும் வீட்டை நிர்வகிக்க தயாராக இருக்கிறோம்.” என்றாள்

“திருமணம் பற்றி நான் இப்போது யோசிக்க வில்லை.. வீட்டு பொறுப்பை மட்டும் பற்றி பேசுங்கள்.” என்றான்.

“இப்போது திருமணம் பற்றி நீ யோசிக்காமல் இருக்கலாம். ஆனால் உன் குழந்தைகளுக்கு ஒரு தாய் தேவை. அதனால் நீ இப்போது உன் குழந்தைகளுகவாவது திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். அது தான் சரியாய் இருக்கும்.” என்றாள் விமலா

மாமா ராமமூர்த்தி ” ஆமாம் மாப்ள . விமலா சொல்வது தான் சரி. நீ இன்னொரு திருமணம் உடனே செய்து கொண்டால் தான் குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்கும். கீதாவும் தயாரக இருக்கிறாள். வேண்டாம் என்று சொல்லாதே. ” என்று ஏற்றி விட்டார்.

கீதாவை பார்த்தான். சரி எப்படியோ இவள் நாம் உறவில் ஒருத்தி. முறை பெண் வேறு.

கொஞ்சம் யோசித்து விட்டு ” சரி ஏற்பாடு செய்யுங்கள். ஆனால் என்னால் மைதிலியை மறந்து விட்டு கீதாவிடம் நெருங்க முடியுமா என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்காக கீதாவின் வாழ்க்கையை வீணாக்க வேண்டுமா? ” என்று கேட்டான்.

கீதா ” குழந்தைகளுக்காக நான் என் வாழ்க்கையை கொடுக்க தயார். நீங்கள் எப்போது என்னிடம் அன்பை கொடுக்க முடியுமோ அதுவரை நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் ரவி..” என்றாள்.

விமலா அத்தைகு கீதாவின் சாதுர்யமான பேச்சு பிடித்து இருந்தது.
எல்லாம் முடிவானது.

சரி இனி வீடு பொறுப்பு உங்களுடையது விமலா அத்தையிடம் கூறினான். இனி கோமதிக்கு வீட்டில் வேலை இல்லை” என்று அவளை பார்த்தான்.

கோமதி ” உனக்கு வீட்டில் வேலை இல்லை இனிமேல். அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இனி செல்லாது. ஆனால் நீ கெஸ்ட் ஹௌசை விட்டு செல்ல வேண்டாம். அதுவரை உன் அம்மாஉடன் சேர்த்து என் மாமனாரையும் கவனித்து கொள்ளவேண்டும்.” என்றான் .

மேலும் காவல் துறை செல்வகுமாரை விசாரித்ததில் அவன் உன் டிராயரில் இருந்து பரமசிவம் கையொப்பமிட்ட காசோலையை எடுத்ததை ஒப்புக்கொண்டான் என்று பரமசிவம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அதனால் உன்னை நீ விரும்பினால் மீண்டும் வேலைக்கு திருச்சிக்கு சென்று ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சொல்ல சொன்னார். சொல்லிவிட்டேன் .

நானும் பரமசிவமும் நல்ல நண்பர்கள். இருவரும் இணைந்து சிங்கப்பூரில் ஒரு கிளை நிறுவனம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அதற்கான கட்டிடம் எல்லாம் முடிவு ஆகி விட்டது. அப்படி நீ திருச்சி சென்று பழைய நிறுனத்தில் வேலை செய்ய விரும்பாத பட்சத்தில் இன்னும் பதினைந்து நாட்களில் உன்னை அந்த கிளையின் தலைமை பொறுப்பை கொடுக்க எண்ணி உள்ளோம்.

அதற்குள் என் மாமனார் மற்றும் உன் அம்மாவின் உடல் நலனை தேற்றி விட அப்பலோ மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் ஏற்பாடு செய்து உள்ளேன். “என்றான்.

மேலும் அவன் “உங்கள் மூவருக்கும் விசா ஏற்பாடு செய்ய இன்று ஒரு முகவர் வருவார். அவரிடம் வேண்டிய தகவல்களை கொடுங்கள். “என்று சொல்லிவிட்டு கோமதியை பார்க்க

மாமனார் ரவிகுமாரிடம் “மாப்ள சூப்பர் முடிவு .. கோமதியின் திறமை எங்கே வீட்டில் சமயலறையில் முடங்கி விடுமோ என்று நினைத்தேன். நல்ல வேலை அவளுக்கு ஒரு விடிவு காலம் கொடுத்து விட்டிர்கள். மிக்க நன்றி” என்று கண் கலங்கினார்.

கோமதியும் அவனை கை எடுத்து கும்பிட்டு அவன் பாதங்களை கண்ணீரில் நனைத்தாள்.

விமலா அத்தைக்கு வயிறு எரிந்தது. என்னடா இது இவளை வீட்டை விட்டு துரத்தினால் இவள் மேலும் மேலும் சிறப்பான பதவியில் சென்று கொண்டே இருக்கிறாளே. சரி எப்படியோ சொத்து நம்மிடமே வந்து விட்டது. அது வரை நல்லது என நினைத்து பெரு மூச்சு விட்டாள்.

முகவர் வந்தார் . தகவல்கள் கொடுத்தனர். அம்மாவும் , ரவியின் மாமனாரும் அப்பல்லோவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ரவியின் மாமனார் தேறிவிட்டார். நன்றாக நடக்க முடிந்தது. அம்மாவுக்கு முதுகு தண்டு வட ஆபரேஷன் செய்தனர். 3 மாதம் அப்பல்லோவில் தங்கி சிகிச்சை எடுத்து கொள்ள முடிவானது. உணவு மற்றும் நர்சிங் எல்லாமே அப்பலோவே பார்த்து கொள்ளும்.

மாமாவும் கோமதியும் சிங்கப்பூர் சென்று விட்டனர். மூன்று மாதம் கழித்து அம்மாவின் உடல் நலனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் போகலாம் என்று முடிவானது.

40 பேருடன் சிங்கப்பூர் நிறுவனம் செயல் பட துவங்கியது. மாமனாரும் தினமும் கோமதியுடனே நிறுவனம் கிளம்பி விடுவார்.

இவர்கள் தங்கி கொள்ள ஒரு 2 BHK வீடு அபார்ட்மெண்டில் பார்க்க பட்டது. நிறுவனத்தின் கார் இவர்களை தினமும் அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப கொண்டு வந்து விட்டு விடும்.

கோமதியின் அணுகு முறை வேலை செய்பவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. கோமதி எல்லோரையும் சமமாக எண்ணினாள். கடை நிலை ஊழியர் வரை அனைவரோடும் கனிவோடு பேசுவாள்.

முதல் மாதம் ப்ரொடக்க்ஷன் நல்லமுறையில் சிங்கப்பூரின் டெக்ஸ்டைல் மொத்த வியாபரிகளுக்கு வழங்கப்பட்டது. அதன் தரம் மிக சிறந்து காணப்பட்டது. சிங்கப்பூர் வாசிகள் மிகவும் விரும்ப தொடங்கி விட்டார்கள்.

இவர்களுடைய கார்மெண்ட்ஸ் தனி இடம் பிடித்தது. எல்லா மால்களிலும் ஷோ கேஸ் செய்தார்கள்.

சிங்கப்பூர் எக்ஸ்போ வில் தனி இடம் எடுத்து பெரிய ஷோ ரூம் நிறுவினார்கள்.

இவை அனைத்தும் கோமதியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

பரமசிவமும் ரவிக்குமாரும் வாழ்த்தினர். அவளுக்கு தேவைப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்தனர்.

சுயமாக முடிவு எடுக்க அதிகாரம் கொடுத்தனர். இவளுக்கு கீழே இப்போது 100 பேருக்கு மேல் வேலை பார்த்தனர்.

பரமசிவம் தனது நிறுவனத்தின் முக்கிய முடிவெடுக்கும் போர்ட் மெம்பர்களில் ஒருவர் ஆக இவளை தேர்வு செய்தார்.

மேலும் கோமதியின் கீழே தனது நிறுவுனத்தின் பொறுப்புகளை கொண்டு வந்தார். தனது மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்டார்.

மகனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். இவளுடன் இணைந்து வேலை கற்று கொள்ள சொன்னார்.

அவன் சிங்கப்பூர் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டான். அக்கவுண்டண்ட் செல்வகுமாரின் பேச்சை கேட்டு அவளை தவறாக நினைத்து விட்டதாக சொன்னான்.

அவளும் தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்தாள். இவனுக்கு முழுமையாக சொல்லி கொடுத்தாள். அவன் நன்றாக தொழிலை கற்று கொண்டான். சிங்கப்பூர் கிளையை அவனிடம் கொடுத்தாள்.

மேலும் மலேசிய நாட்டில் நிறுவனத்தை விரிவு படுத்தினாள். அந்த கிளையை வளர்ச்சியடைய வேண்டி சில மேனேஜர் களுக்காக நேர்முக தேர்வை சென்னையில் நடத்தினாள்.

சென்னை IIT இல் மேனேஜ்மென்ட் இல் ஆராய்ச்சி செய்த ஒருவனை தேர்ந்து எடுத்தாள். அவன் பெயர் சுந்தர் பெயருக்கு ஏற்றார் போல மிக அழகாக இருந்தான். அவன் சில நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் இருந்தது. அதனால் அவனை அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கொடுத்தாள்.

சிங்கப்பூர் மற்றும் மலேசிய நிறுவங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை இவள் தலைமை ஏற்று வழி நடத்தினாள். மேலும் பரமசிவத்தின் சென்னை நிறுவனமும் இவள் கீழ் வந்தது.

இவளுடன் அம்மா சிங்கப்பூர் வந்து விட்டாள். இப்போது நடக்க ஆரம்பித்து விட்டாள். தன வேலையை தானே செய்து கொள்ள முடிந்தது. அப்பா ஓய்வு பெற்று விட்டதால் அவரும் சிங்கப்பூர் வந்து விட்டார். ரம்யாவும் , கவிதாவும் சொந்தகார பாட்டியை வீட்டோடு துணைக்கு வைத்து கொண்டனர்.

ரவிக்குமார் சிங்கப்பூர் வந்தான். இவளின் வெற்றி கண்டு வியந்தான். மாமனார் ரவிகுமாரிடம் சொன்னார், இவளை வீட்டில் வீடு பொறுப்பை கொடுத்து இருந்தால் உன் பெண் குழந்தைகள் நன்றாக வந்து இருப்பார்கள் என்றார்.

மேலும் அவர் கோமதியை நீ திருமணம் செய்து இருந்தால் நன்றக இருந்து இருக்கும் என்ற அவரின் எண்ணத்தையும் சொன்னார்.

அதே நேரம் இவளின் நிர்வாக திறனால் உன் நிறுவனங்கள் இப்போது உள்ளது போல நல்ல லாபம் ஈட்டி இருக்க முடியாது.

உண்மை தான் மாமா என ஆரம்பித்து சென்னையில் ஏற்பட்ட நிகழ்வை சொன்னான்.

“குழந்தைகள் ஒரு நாள் சரியாக சாப்பிடவில்லை. என்னவோ பிரச்சனை கீதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா வீடு வைத்தியமாக ஓமம் கொடுத்தாள்.

வயிற்று போக்கு ஏற்பட்டு மூச்சு விடவே சிரம பட்டனர். இவனுக்கு தகவல் கொடுக்க பட்டு அப்பலோ அழைத்து சென்றான்.புட் பாய்சன் ஆகி இரண்டு நாள் கவனிக்காததால் மிக தீவிரமாக ICU வில் வைத்து பார்க்கும் அளவு சென்று விட்டது” என்று சொன்னான். நல்ல வேலை கீதாவை திருமணம் செய்யவில்லை என்றும் சொன்னான்.

அத்தையையும் கீதாவையும் திருச்சிக்கே அனுப்பி விட்டதாக சொன்னான்.

மாமனார் சொன்னார் ” அம்மாடி கோமதி , நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். மைதிலியின் குழந்தைகளை தயவு செய்து நீயே பார்த்து கொள்.” என்று சொன்னார்.

அதன் படி குழந்தைகள் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். சிங்கப்பூரில் ஒரு நல்ல பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்பில் சேர்த்து விட்டாள்.

குழந்தைகள் இவளிடம் மீண்டும் அன்பாக பழகி விட்டார்கள். ரவிக்குமாருக்கு ஆச்சர்யம் எப்படி இவளால் வீட்டையும் பார்த்து கொள்ள முடிகிறது. நிறுவனத்தையும் வெற்றிகரமாக செயல் படுத்த முடிகிறது என எண்ணி வியந்தான்.

சென்னை வீட்டை விட்டு விட்டு சிங்ப்பூரில் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் நான்கு வீடுகள் கொண்ட ஒரு புளோர் வாங்கி விட்டான்.

சென்னை வந்தால் தங்கி கொள்ள சென்னையில் ஒரு போஷ் அபார்ட்மெண்டில் ஒரு 4 BHK ஹவுஸ் வாங்கினான்.

ஒரு வருடம் ஓடி விட்டது. பரமசிவத்தின் பையன் திருமணத்திற்கு ரவிக்குமாரும் கோமதியும் குழந்தைகளுடன் சென்றனர்.

பரமசிவம் ரவிகுமாரிடம் ” ரவி நீ கோமதியை திருமணம் செய்து கொள். உன் எதிர் காலத்திற்கு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அது தான் நல்லது.” என்றார்.

“நான் வேண்டுமானால் கோமதியிடம் பேசி பார்க்கிறேன்” என்றார்.

“நானே பேசுகிறேன் சார் ..” என்றான் ரவி

“என் உதவி வேண்டுமானால் எப்போதும் உண்டு” என்றரர்.

சிங்கப்பூருக்கு திரும்ப இருவரும் ஒன்றாக விமானத்தில் அருகருகே அமர்ந்து இருந்தனர். குழந்தைகள் இவளுக்கு இடது புறத்தில் ஜன்னல் ஓரம் சீட்டில் இருந்தார்கள். அப்போது ரவியின் நண்பர் ஒருவர் , ரவி இது தான் உன் மனைவியா.. எப்போது திருமணம் நடந்தது .. எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லையே .. குட் சாய்ஸ் டா என சொல்ல

இவன் ஒன்றும் சொல்ல முடியாமல் விழித்தான்.

குழந்தைகள் அம்மா என்று இவளிடம் விளையாண்டதை பார்த்து விட்டு, கீதாவை இவர்கள் அம்மா என்று கூப்பிடவே இல்லையே , இவளை மட்டும் எப்படி அம்மா என்று சொல்கின்றன என வியந்தான்.

இவன் மனதுக்குள் இவளை நம் மனைவியை ஏற்றுக்கொள்ளலாமா என சிந்தனை துளிர் விட தொடங்கியது.

தொடரும்

 

1 thought on “காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் ஐந்து”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top