காற்றுக்கென்ன வேலி – ஆறாம் அத்தியாயம்
விமானத்தில் பக்கத்தில் இருந்த கோமதியிடம் ரவிக்குமார் சொன்னான்
“உனக்கு ஏதாவது வேண்டுமா ? எது வேண்டுமானாலும் கேள் . என்னால் முடிந்தால் செய்து தருகிறேன். உனக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா கிடைத்து விட்டாள். அன்பை ஊட்டி வளர்க்கும் ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட அதிர்ஷ்ட சாலி வேறு யாரும் இல்லை இப்போது. அதனால் நீ என் சக்திக்குள் என்ன கேட்டாலும் கொடுக்க தயார்” என்றான்.
“நான் கேட்ட பிறகு மனம் மாற மாட்டீர்கள் என்றால் நான் கேட்கிறேன்” என்றாள்.
“சத்தியமாக மனம் மாற மாட்டேன் கேள் “
அப்படியானால் நான் கேட்கும் போதெல்லாம் ஏன் என்று கேட்காமல் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முடியுமா ? ” என்றாள்.
ஒரு நிமிடம் யோசித்தான்.. மௌனமாக இருந்தான்.
“என்ன பணம் என்றவுடன் யோசிக்க ஆரம்பித்து விட்டிர்கள்”. என்றாள்.
ஏன் என்று கேட்க கூடாது என்று சொல்லிவிட்டாய் ? அதனால் கொஞ்சம் யோசிக்கிறேன் என்றான்.
“சரி உங்களால் முடியாது . எனக்கு உங்கள் பணம் வேண்டாம்.” என்றாள்.
இல்லை இல்லை நீ கேட்டது கொடுப்பேன் ஏன் என்று கேட்காமல் .. போதுமா .. கண்டிப்பாக நீ நல்ல காரியத்துக்காக தான் கேட்பாய். அது எனக்கு கண்டிப்பாக தெரியும். அதனால் அதை பற்றி கவலை இல்லை . என்றான்.
வீடு வந்ததும் என் பேங்க் அக்கவுண்ட்ஸ் எல்லாம் உன் பெயருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக மாற்றி விடுகிறேன். நீயே செக்கில் சைன் பண்ணி பணம் எடுத்துக்கொள்ளலாம் சரியா .. என்றான்.
“ஓகே சார் தேங்க்ஸ் எ லாட்” என்றாள்
குழந்தைகள் பசியால் அழுதன. அவர்களுக்கு என்று கொண்டு வந்து இருந்த பழ ரசங்களை கொடுத்தாள். பருப்பு சாதம் எடுத்து வந்து இருந்தால் கல்யாண வீட்டில் இருந்து அதையும் கொடுத்தாள்.
விமானத்தில் கொடுத்த உணவை ரவியும் , கோமதியும் உண்டனர்.
சரி நான் ஒன்று கேட்டால் சரியான பதில் சொல்வாயா .. என்றான்.
கேளுங்கள் சார் என்றாள் .
நீ திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையா ? வயது ஏறிக்கொண்டே போகிறதே.
இப்போதைக்கு இல்லை. என்னை மிகவும் புரிந்து கொண்டவர் யாராவது வந்தால் கல்யாணம் பண்ணி கொள்வேன் .. என்றாள்.
நானும் தான் உன்னை புரிந்து கொண்டுள்ளேன். நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா ? என்று கேட்க நினைத்தான்.
வேண்டாம் தவறாக எடுத்து கொள்வாளோ என கேட்கமால் விட்டு விட்டான்.
சார் நீங்கள் என் இன்னொரு திருமணம் செய்து கொள்ளமல் இருக்கிறீர்கள் .. மைதிலி இன்னும் மனதில் இருக்கிறாளா ? … என்று கேட்டான்.
என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக யார் இருப்பார்களோ அவர்களே என் மனைவி. ஆனால் என்னால் மைதிலி மேல் கொண்ட காதல் அவள் மீதும் வைக்க வேண்டும் அல்லவா.. அதனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். என்றான்.
நான் நல்ல அம்மாவை இருக்க முடியும். ஆனால் உங்கள் மீது காதல் வர வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நான் உங்களை வேறு ஸ்தானத்தில் வைத்து விட்டேன். அது மாறுமா என்று தெரியவில்லை. என்றாள்.
என்ன ஸ்தானத்தில் வைத்து இருக்கிறாய் ?
கடவுள் போல என்று சொல்வார்களே .. அது போல ..
இனிமேல் அப்படி சொல்லாதே .. நாம் நம் நிறுவனத்தின் பார்ட்னர்ஸ் ..
நண்பர்கள் இனிமேல்.. என்னை ரவி என்றே நீ அழைக்க வேண்டும்.
சரி சார் என்றாள்.
ஐயோ ரவி என்று சொல்லு .. என்று சிரித்தான்.
ஓகே ரவி ..
அதற்குள் சிங்கப்பூர் வந்து விட இவன் ஒரு குழந்தையும் அவள் ஒரு குழந்தையும் தூக்கி கொண்டனர். குழந்தைகள் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.
டிரைவர் அழைத்து போக வந்து இருந்தான். அவளுக்கு கொடுத்து இருந்த வீட்டிற்கு சென்றனர்.
மாமனார் அங்கே இருந்தார். அம்மாவும் அப்பாவும் உள்ளே டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் இணைத்து வருவதை அதுவும் ஆளுக்கொரு குழந்தையை தூக்கி கொண்டு வரும் காட்சியை கண்டு மனம் சிலிர்த்தார் .
கோமதியிடம் சொன்னார். அம்மாடி கோமதி நான் பார்க்கும் இந்த காட்சி என்றைக்கும் மெய்யாக வேண்டுமானால் தயவு செய்து நீ ரவியை கல்யாணம் செய்து கொள் என்றார்.
அப்போது தான் இந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல ரவிக்கும் நல்லது. என்றார்.
“இந்த எண்ணத்தை வளர விடாதீர்கள் மாமா .. அது நல்லதல்ல என்று சொன்னாள். காலம் என்ன என்ன மாற்றங்களை கொண்டு வருமோ யாருக்கு தெரியும். நம் ஆசைகள் எல்லாம் மனசுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை மாமா .. அது நடக்கும் போது நடக்கும் தானாகவே .. என்றாள் .
வீட்டில் இவர்களை ட்ரோப் செய்து விட்டு காபி சாப்பிட்டு கிளம்பினான்.
மாமனார் கோமதியின் அம்மாவிடம் கோமதியின் திருமணம் குறித்து பேசினார். ரவியை மணந்து கொண்டால் நல்ல இருக்கும் .ஆனால் அது கட்டாயம் அல்ல . உங்க உங்கள் விருப்பம் தான் .. என்று சொன்னார்.
கோமதியிடம் பேசுங்கள் அம்மா . பேசி அவளை இந்த திருமணத்திற்கு தயார் செய்யுங்கள் அம்மா . என்றரர்.
மறுநாள் இவள் அலுவலகம் சென்று விட குழந்தைகள் பள்ளியிலிருந்து இவளுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது.
மறுநாள் நடைபெறும் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அப்பா , அம்மா இருவரும் நேரில் வர வேண்டும் என்று.
சரி என்று சொல்லி ரவிக்கு கைபேசியில் சொன்னாள். அவனும் வருவதாக சொல்லி விட்டான்.
பள்ளியில் பெற்றோருக்கு நடுவே குழந்தைகள் உட்கார வைக்கப்பட்டனர்.
குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குகிறார்கள் என்று சொல்லி இவர்களுக்கு பரிசு கொடுத்தார்கள்.
மேலும் மற்ற குழந்தைகளுடன் உணவை பங்கிட்டு சாப்பிடுவதை சொன்னார்கள்.
நல்ல குண நலன்கள் இவர்களுக்கு உள்ளன என்று சொன்னார்கள்.
கடைசியில் சிறந்த பெற்றோர் என்ற பரிசை கொடுத்தனர்.
ரவிக்குமாருக்கு மிகுந்த சந்தோசம். கோமதியின் வளர்ப்பு சரியாக இருப்பதாய் அறிந்தான். அவளின் கைகளை பற்றி ” ரொம்ப நன்றி ” என்று குலுக்கினான் .
குழந்தைகள் அப்பாவும் அம்மாவும் கை குலுக்குவதை பார்த்து சந்தோச pattnar . வாய் விட்டு சிரித்தனர்.
அவர்கள் இருவரின் கால்களை கட்டி கொண்டு விளையாண்டனர்.
மற்ற பெற்றோர் எல்லாம் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி சென்றனர்.
பார்த்தாயா கோமதி.. இது எல்லாம் உன்னால் தான் உன் வளப்பினால் தான் என்று சொன்னான்.
அதனால் இன்று முதல் நீங்கள் அனைவரும் என்னுடன்உ soll என் இல்லத்தில் தங்க வேண்டும் என்று சொன்னான்.
குழந்தைகள் ஹை ஜாலி என்று குதித்தனர்.
தொடரும்
Sema 👌👌👌👌👌