ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 31 முதல் 35

அத்தியாயம் 31

 

அதிகாலையில் எழுந்த ரணவீரனின் கண்முன்னே தெரிந்த பூவிழியாழின் பூமுகத்தையே கண்ணிமைக்காது பார்த்திருந்தான். 

 

“தூங்கும் போது எவ்வளவு அமைதியான குழந்தையாக தெரிகின்றாள்? ஆனால் விழித்துக்கொண்டு இவள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லையே‌. இவள் குழந்தையா? இல்லை குமரியா? இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே?!” என்றவன் அவளது நெற்றியின் மத்தியில் தன் ஆள்காட்டி விரலை வைத்தவன், அங்கிருந்து நேர் கோடாக இழுத்து, அவள் நாசி வழியாக பயணித்து கழுத்தில் இறங்கி, இன்னும் கீழே இறங்கும் போது அவனது விரல்களை பிடித்து தடுத்து நிறுத்தினாள் பூவிழியாழ்.

 

“நைட்டு தான் தூங்க விடமாட்டேங்குறீங்கன்னா, அதிகாலைலயும் ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க? எனக்கு தூக்கம் வருது.”

 

“விழி இது அதிகாலை பொழுதில்லை. சுட்டெரிக்கும் சூரியன் உச்சிக்கு வரும் நேரம். நீ அசதியில் தூங்கியதால் உன்னை எழுப்ப மனம் வரவில்லை. இருப்பினும் உன் உடல் நிலையை காரணம் கொண்டு தான் இப்போதாவது எழுப்பலாமென்று வந்தேன்.” என்று ரணவீரன் கூறிய மறுகணமே எழுந்து அமர்ந்தவள், தன் மீது போர்த்தியிருந்த துணியை வாரி சுருட்டி கொண்டு குடிலுக்கு வெளியே தலையை மட்டும் விட்டு பார்த்தாள். மதிய நேர சூரியன் தன் பல்லை காட்டி சிரிக்க, தன் தலையில் கை வைத்தவாறு உள்ளே வந்தவளின் மனதில், ‘அப்போ ராஜமாதா?’ என்ற கேள்வி தான் எழுந்தது. வெகு நாட்களுக்கு பிறகு தன் கணவனின் அருகாமையில் தன்னை மறந்த நிலையில் இருந்தவள், தன்னை மட்டுமல்ல தன்னை நம்பி திட்டம் போட்டு வைத்திருந்த அப்பாவி ஜீவன் வேலுநாச்சியாரையும் மறந்திருந்தாள். தற்காலிகமாக போடப்பட்டிருந்த தடுப்பில் நுழைந்து வேக வேகமாக தன்னை சுத்தப்படுத்தி கொண்டு போர்வீரனுக்காக உடையை அணிந்து கொண்டவள், ரணவீரனிடம் ஒரு வார்த்தை சொல்லக்கூட நேரமில்லாது தனது ராஜமாதாவைக் காண ஓடினாள்.  

 

“ஏய்! எதற்காக மறுபடியும் இந்த வேஷம் போட்டுக்கொள்கிறாய்?” என்று பூவிழியாழின் கையைப் பிடித்து தடுத்தான் ரணவீரன்.

 

“அப்புறம் குருமாதா கேட்டா என்ன பதில் சொல்றது?” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவனை பார்த்தவளின் மனதில்,

 

‘அய்யோ! நேரங்காலம் தெரியாம இவர் வேற ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே? அங்கே ராஜமாதா என்ன நிலைமைல இருக்காங்கன்னு தெரியலையே?!’ என்று நினைத்தவள், 

 

“இல்ல! நான் எதுக்கும் இந்த ட்ரெஸ்லயே போயி பார்த்துட்டு வர்றேனே?!” என்று அவன் முகம் பார்த்து கேட்க, அதற்கு மேல் அவனால் அவளைப் பிடித்து வைக்க முடியவில்லை.

 

“அப்படியே ஆகட்டும்! ஆனால் இம்முறை மட்டுமே இந்த வேடத்திற்கு அனுமதியளிப்பேன். இதன் பிறகு உன்னை இவ்வேடத்தில் எங்கு பார்த்தாலும் அவ்விடத்திலேயே முத்தமிட்டு விடுவேன்.” என்று அவன் கூறி முடித்ததும், தன் வாயை கைகளால் பொத்திக் கொண்டே,

 

“இல்ல! இல்ல! இந்த ஒரே ஒரு தடவை மட்டும் தான். அதுக்கப்புறம் இந்த வேஷம் போடவே மாட்டேன்.” என்று கூறியவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விடுவித்தான். அவன் விடுவித்த வேகத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல் ராஜமாதாவை தேடி ஓடினாள். அங்கே குருமாதாவின் குடிலில் நனைந்து போன நாறாக கிடந்தார் வேலுநாச்சியார்.

 

‘அடியேய் ஆரு! இப்படியா இந்த தடிதாண்டவராயங்க கிட்ட என்னைய மாட்டிவிடுவ? அவ அங்க வரலைன்ன உடனே நான் சுதாரிச்சுருக்க வேண்டாமா? இப்படியா எலிப்பொறில மாட்டிக்கிட்ட மாதிரி எனக்கு நானே குழி தோண்டிக்குவேன்?!’ என்று தன் மனதுக்குள் புலம்பிக் கொண்டே, பூவிழியாழின் வரவிற்காக வாசலையே பார்த்திருந்தார். 

 

‘அடியேய் சில்லுவண்டு! சீக்கிரம் வந்து என்னைய கூட்டிட்டு போடி. நீ இங்க வர்றதுக்குள்ள இவனுங்க என்னைய பொடிமாஸ் போட்டுடுவானுங்க போலவே?!’ என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் வயிற்றில் பால்வார்க்கவென அங்கு வந்து சேர்ந்தாள் பூவிழியாழ். அவள் அக்குடிலுக்குள் நுழைந்ததும் முதலில் பார்த்தது, இருகைகளையும் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் அடிமைப்பெண் எம்ஜிஆர் போல் இருந்த வேலுநாச்சியாரை தான். 

 

‘அய்யோ! என் கடமை எம்ஜிஆர் மாதிரி இருந்தவங்களை அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி ஆக்கிட்டீங்களேடா?! பாவிகளா!’ என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளியே குருமாதாவிடம் பணிவாக வணக்கம் வைத்தாள் பூவிழியாழ். 

 

“நேற்று இரவில் இருந்து உன்னை காணவில்லயே?! எங்கு சென்றாய்?!”

 

“அது வந்து குருமாதா..” என்று பூவிழியாழ் இழுக்கும் போது அங்கு வந்து சேர்ந்தான் ரணவீரன். பதில் சொல்ல முடியாது திணறும் பூவிழியாழை பார்த்து சிரித்துக் கொண்டே,

 

“வணங்குகிறேன் குருமாதா!” என்று கூறியவன், பூவிழியாழை நோக்கி திரும்பினான். 

 

“என்னவாயிற்று எதற்காக இவனை இங்கே நிற்க வைத்திருக்கிறீர்கள்?” என்று குருமாதாவிடம் வினவியவன், பூவிழியாழைப் பார்த்து கொண்டே,

 

“இவனை நேற்று இரவே நம் அரண்மனையின் பாதுகாப்பிற்காக திரும்பி செல்ல உத்தரவிட்டேனே?! இன்னுமா அங்கு செல்லவில்லை?!” என்று வினவியவாறு தன் புருவங்களை ஏற்றி இறக்கினான். வில்லென வளைந்து காந்தமென ஈர்த்த அவனது விழிபார்வையில் தன்னை இழந்தாள் பூவிழியாழ். 

 

‘வாவ்! எவ்ளோ க்யூட்டா இருக்கான்?! இவன் என்னோட அழகன்.’ என்று மயங்கியவளின் விழிப்பார்வையில் இருந்தே அவளது மனதில் இருப்பதை அறிந்து கொண்டிருந்தான் ரணவீரன். பிறர் அறியாமல் தன் இதழ்களை குவித்து காற்றில் பறக்கும் முத்தத்தை அனுப்பினாள் பூவிழியாழ். அதை கண்டவனின் முகம் வெட்கத்தில் சிவக்க,

 

‘வாவ்! வெட்கப்பட்டாக்கூட எம்புட்டு அழகா இருக்கான்?!’ என்று கண்கள் பளிச்சிட பார்த்தவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவன், பின்னர் சுற்றுப்புறம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்த வேலுநாச்சியார்

 

“அடப்பாவிங்களா! என்னைய ரிலீஸ் பண்ணிவிட்டுட்டு புருஷனும் பொண்டாட்டியும் எந்த ஊரு வேணா போய் கனவுல டூயட் பாடுங்க. இப்போ என்னைய கவனிங்கடா’ என்று உள்ளுக்குள் புலம்புபவரை கவனிக்கத் தான் அங்கு ஆளில்லை. 

 

“இவன் என்னை விட்டு சென்று விட்டால் யார் எனக்கு பாதுகாப்பளிப்பார்கள்?” என்று கூறும் குருமாதாவை புருவம் உயர்த்தி பார்த்தவன்,

 

“அப்போது இவன் தான் தங்களுக்கு பாதுகாப்பளிக்கின்றானா?” என்று பூவிழியாழை நோக்கி கைநீட்டி ரணவீரன் கூற,

 

“பிறகு? இவன் என்னுடன் இருந்தால் எனக்கு எதுவும் ஆகாது. இவன் என்னுடன் இல்லாத போது தான் இம்மாதிரியான அபசகுணங்கள் நடக்கின்றன.” என்று குருமாதா உறுதியாக கூற ரணவீரனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரையும் கற்பூரமானது. பூவிழியாழை எப்படியாவது தங்களது அரண்மனைக்கு அனுப்பிவிட வேண்டுமென அவன் நினைத்திருக்க, அதற்கு இடையூறாக நின்றிருந்தார் குருமாதா. இவ்வளவிற்கும் அந்த ஒருவர் தான். கோபத்துடன் வேலுநாச்சியாரை திரும்பிப் பார்த்தான் ரணவீரன். அவன் முறைப்பதை பார்த்த வேலுநாச்சியார் கள்ளமிட்ட கள்ளன் போல விழித்தார். ரணவீரனின் முறைப்பை பார்த்த பூவிழியாழ், அவனை திசை திருப்பும் பொருட்டு குருமாதாவிடம்,

 

“ச்சு.. ச்சு.. ச்சு.. பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கும் இப்பெண்மணி யார்? என்ன குற்றம் செய்தாரென இவ்வாறு அமர வைக்கப்பட்டிருக்கிறார்?” என்று கேட்டு கொண்டிருக்க,

 

‘பாரு ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி கேட்குறா? நீ மட்டும் தனியா மாட்டுடி? அப்போ இருக்கு உனக்கு.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார் வேலுநாச்சியார். பூவிழியாழின் கேள்வியில் அவளை உறுத்து விழித்த குருமாதா,

 

“என்ன கூறினாய்? பரிதாபமாக இருக்கும் பெண்மணியா? இவளா? இவள் செய்த காரியம் என்னவென்று உனக்கு தெரியுமா?” என்று கேட்க,

 

“எனக்கு எப்படி தெரியும்? தாங்கள் கூறினால் தானே தெரிந்த கொள்ள முடியும்?” என்று வழக்கம் போல் துடுக்குத்தனமாக பேசிய பூவிழியாழ் இடையில் யாரும் அறியாமல் கிள்ளினான் ரணவீரன். 

 

“ஆஆஆஆ..” என்று பூவிழியாழ் கத்த, ஒன்றும் தெரியாதவன் போல்,

 

“என்னவாயிற்று?” என்றவன் கேட்க, அவளின் பதிலுக்காக அனைவரும் பூவிழியாழை நோக்கினர். 

 

“அது.. இப்பெண்மணி தங்களை என்ன செய்தாரோ என்ன அதிர்ச்சியில் என்னை அறியாமல் சத்தமிட்டேன். தங்களை இவர் என்ன செய்தார் குருமாதா? ஆணையிடுங்கள்! இவர் தலையை கொய்து தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன்.” என்று கூறி சமாளிக்க, அவளின் திணறலை கண்ட ரணவீரனின் உதட்டோரம் சிரிப்பு மின்னல் வெட்டியது. ரணவீரனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்ட சூர்யபிரபாகரனின் பார்வை, அதற்கு காரணமான பூவிழியாழை ஆராயத் தொடங்கியது. 

 

“குருமாதா இன்று காலையில் சூர்யோஸ்தனத்திற்காக ஆற்றங்கரை சென்ற போது, இம்மூதாட்டி அவர்களை பின்னால் இருந்து நீருக்குள் தள்ளிவிட்டுள்ளார். ஆதலால், குருமாதாவை கொலைசெய்ய முயற்சித்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.” என்று படைவீரன் ஒருவன் கூற, அதனை கேட்ட வேலுநாச்சியார்,

 

“நான் வேண்டுமென்று செய்யவில்லை, இவர்களுக்கு பின்னால் விஷஜந்து வருவது போலிருந்தது. அதில் இருந்து இவர்களை காப்பாற்றவே தண்ணீருக்குள் தள்ளினேன்.” என்று கூற, 

 

“பொய் சொல்லாதே!” என்று மிரட்டினான் சூர்யபிரபாகரன். அதனை கேட்ட பூவிழியாழ்,

 

“ஆமாம் பொய் சொல்லாதே! அப்படியே அந்த விஷஜந்து கடிச்சியிருந்தாலும் அவங்கள காப்பாத்த நாங்க எல்லாரும் இருக்கும் போது நீ எப்படி தண்ணீர் தள்ளி விடலாம்? விஷஜந்து கடிச்சு சாக இருந்தவங்கள தண்ணீர் தள்ளிவிட்டு கொல்லலாம்னு நினைச்சியா? உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும். குருமாதாவை காப்பாத்துன குற்றத்திற்காக இவங்க தலை துண்டிச்சாலும் தப்பில்ல.” என்று கூறிய பூவிழியாழை விநோதமாக பார்த்தவாறு,

 

“இவள் கூறுவதும் சரிதான். ஒருவர் உயிரை காப்பாற்றியதற்காக இவ்வளவு சித்திரவதை செய்ய வேண்டுமா? குருமாதா! எனக்கு இவர் தவறேதும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.” என்று சூர்யபிரபாகரன் கூற, அவனை சட்டென திரும்பிப் பார்த்த பூவிழியாழின் விழிகள், அவனின் தோற்றத்தினை மேலிருந்து கீழாக அளவிடத் தொடங்கியது. அவளின் பார்வையினை சூர்யபிரபாகரனும் தாங்கி நிற்க, அவர்கள் இருவரையும் பார்த்த ரணவீரன், அவர்களின் நடுவே வந்து நின்றான். அவர்களின் கவனத்தை கலைக்கும் பொருட்டு,

 

“இம்மூதாட்டியை விடுதலை செய்யுங்கள்.” என்று உத்தரவிட, பூவிழியாழின் கண்ணில் மின்னல் வெட்டியது. அதனை சூர்யபிரபாகரன் கண்டு கொண்டான். இங்கு ஏதோ சரியில்லாதது போல் தோன்றவே படைவீரர் போல் வேஷமிட்டிருக்கும் பூவிழியாழை பின்தொடர தீர்மானித்தான். பூவிழியாழை நோக்கி அருகில் வந்த சூர்யபிரபாகரன்,

 

“இன்று இளவரசி வைதேகி அரண்மனைக்கு வருகை தர இருக்கிறார். அதற்காக ஏற்பாடுகளை நீ தான் முன்னின்று செய்ய வேண்டும். நீ அங்கே பிரதான காவலாளியாக இருப்பதினால் உனக்கு தான் அங்கிருப்பவர்களைப் பற்றி நன்கு தெரியும். ஆகையால் ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.” என்று கூறியவன், ரணவீரனை பார்த்து கொண்டே,

 

“அப்படியே மகாராணி பூவிழியாழுக்கும் தகவல் தெரிவித்து விடு.” என்று கூற,

 

“என்னவென்று தெரிவிப்பது இளவரசரே?!” என்று வினவியவளை கூர்மையாக பார்த்தவாறே,

 

“மாவீரர் ரணவீரன் மறுமணம் செய்யவிருக்கிறார் என்று கூறு.” என்று கூற தனது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் முகத்திற்கு கொண்டுவராது இருக்க, பெருமுயற்சி செய்தாள் பூவிழியாழ். 

 

‘என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறீங்களா? அது இந்த ஆருஷா உசுரோடு இருக்கும் வரைக்கும் நடக்காதுடா.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவளின் கையை யாரும் அறியாமல் ரணவீரன் பற்ற, அதனை உதறிவிட்டு அங்கிருந்து அகன்றவள்,

 

“அப்படியே ஆகட்டும் இளவரசரே! நான் இப்போதே அரண்மனைக்கு புறப்படுகிறேன்.” என்றவள்‌ அங்கிருந்து கிளம்பும் போது,

 

“நில்! இம்மூதாட்டியையும் உடன் அழைத்துச் செல். ஏதேனும் வேலை கொடுத்து உன்னுடன் வைத்துக் கொள்.” என்று ரணவீரன் கூற, அவனைப் பார்க்காது தரையை பார்த்தவாறு நின்றிருந்தாள் பூவிழியாழ். 

 

“இவன் இங்கில்லை என்றால் எனக்கு யார் பாதுகாப்பு? ஆகையால் இவனுடன் நானும் அரண்மனைக்கு செல்கிறேன்.” என்று குருமாதா கூற, 

 

“ஆகட்டும்! அப்படியென்றால் அனைவரும் அரண்மனைக்கு திரும்பிச் செல்வோம். நாளை மறுநாள் தலைநகரில் நடக்கவிருக்கும் அரசர்கள் கூடத்திற்கான ஆவணங்கள் செய்ய வேண்டும். இம்மூதாட்டியை குருமாதாவுடன் அழைத்துச் செல்லுங்கள். மேலும் பூவரசனுடன் சில பாதுகாப்பு விஷயங்களை பற்றி பேச வேண்டியுள்ளதால் அவன் என்னுடன் வரட்டும். சீக்கிரம் தயாராகுங்கள்.” என்று பூவரசனின் கையைப் பிடித்து தன்னுடன் இழுத்துச் சென்றான் ரணவீரன். ரணவீரனின் நடவடிக்கைகள் யாவும் சூர்யபிரபாகரனுக்கு குழப்பத்தையே கொடுத்தது. 

 

அனைவரும் அரண்மனைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, பூவிழியாழை மட்டும் தன்னுடன் குதிரையில் ஏற்றிக்கொண்டான் ரணவீரன். அதனைக் கண்ட சூர்யபிரபாகரன், “படைவீரனென்று சொல்லும் உனக்கு குதிரை ஓட்ட தெரியாதா? எதற்காக அண்ணனுடன் ஏறிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, 

‘அவனுக்கு கையில் காயம்‌ பட்டுள்ளது. ஆகையால் அவனை என்னுடன் அழைத்து வருகிறேன். நீ குருமாதாவின் பாதுகாப்பிற்காக அவர் பின்னால் வா.” என்று கூறிய ரணவீரன் குதிரை கிளப்பத் தாயாராகும் போது, சட்டென அவனது கையைப் பிடித்து தடுத்து பூவிழியாழின் இதழ்கள் “மல்லி?” என்று முணங்க, “இப்போது தான் அவளது ஞாபகம் வந்ததா உனக்கு? அவளை படைதளபதி அழைத்துக் கொண்டு வருவான். நீ சற்று அமைதியாக இரு.” என்று ரணவீரன் கூறியதும் வாயை மூடிக் கொண்டாள் பூவிழியாழ். 

 

அத்தியாயம் 32

 

குருமாதாவுடன் குதிரை வண்டியில் வேலுநாச்சியார் வந்து கொண்டிருக்க, அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுடன் சூர்யபிரபாகரன் சென்று கொண்டிருந்தான். ரணவீரனுடன் பூவிழியாவும் படைவீரனுடன் மல்லியும் வந்து கொண்டிருந்தனர்.

 

“கொஞ்சம் மெதுவா தான் போங்களேன்.”

 

“ஏன்? என்னவாயிற்று?”

 

“என்னன்னு தெரியல? ஒரு மாதிரி வயித்தை புரட்டிட்டு வருது.”

 

“அப்படியென்றால்?”

 

“காலைல சாப்பிட்ட சாப்பாடு நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. நீங்க வேற குதிரைல வைச்சு இந்த குலுக்கு குலுக்குனா, தின்னதெல்லாம் வாய் வழியா வர்ற மாதிரியே இருக்கு.”

 

“அதெல்லாம் சரி. நீ தான் பூவிழியாழ் என்று குருமாதாவிடம் ஏன் சொல்லவில்லை?”

 

“எதுக்கு சொல்லணும்?”

 

“அப்போது இந்த வேஷத்திலேயே இருந்துவிட போகின்றாயா?”

 

“இல்ல.. அதுக்கு ஏதாவது ஐடியா பண்றேன். ஆனா நீங்க மட்டும் என்னைய தவிர வேற எவளையாவது பார்த்தீங்க?!”

 

“என்ன செய்வாய்?”

 

“அன்னைக்கு தான் நீங்க என்னைய பார்க்குற கடைசி நாளா இருக்கும்.”

 

“விழிஇஇஇ.. இப்படி எல்லாம் பேசாதே. நீ இல்லாத உலகை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.” என்று கூறியவன், ஒரு கையால் குதிரை விரட்டிக் கொண்டே மற்றொரு கையால் அவளது இடையை வளைத்து, அவளை யாருக்கும் தர மாட்டேன் எனும் விதமாக இறுக்கித் தழுவிக் கொண்டான். பின்னர் மெதுவாக அவளது கதருகே தன் உதடுகளை கொண்டு சென்றவன், மெல்லிய குரலில்,

 

“இப்பொழுதெல்லாம் நீ எனக்கு மரியாதை கொடுத்து பேசிகின்றாயே?! ஏன் விழி?!” என்று கேட்க, அவன் முகம் நோக்கி திரும்பியவள்,

 

“பின்ன நாளப்பின்ன நமக்கு ஒரு குழந்த பிறந்தா, அவங்க முன்னாடியும் இப்படி பேசமுடியாதில்ல?! அதான் இப்பவே மாத்திக்க முயற்சி பண்றேன். ஆனா எனக்கு கோபம் வந்தா எப்படி வேணாலும் பேசுவேன். ஓகே?!” என்று தன் விழி விரித்து பதில் கூறினாள். அதனை கண்ட ரணவீரனின் இதழ்கள் அவனது கன்னத்தில் கோலமிட்டவாறே,

 

“இம்மொழியை எங்கு கற்றுக் கொண்டாய்? நீ பேசுவது ஒன்றும் புரியவில்லை என்றாலும் நீ பேசும் போது மெய் மறக்கச் செய்கின்றது.” என்று கூற, மெய்சிலிர்த்துப் போனாள் பூவிழியாழ். 

 

“குதிரைய நிறுத்துங்க. நிறுத்துங்கன்னு சொல்றேன்ல.” 

 

“ஏன் விழி? என்னவாயிற்று?”

 

“நான் பூவிழியா மாறப் போறேன்.” என்றவள் தன் முன்னே இருந்த ஆடைகளை குவித்து முடிச்சிட்டிருந்த பொட்டலத்தில் இருந்து தன் உடைகளை எடுக்க ஆரம்பித்தாள். குதிரையில் இருந்து இறங்கிய ரணவீரன், பூவிழியாழின் இடையைப் பற்றி தூக்கி இறக்கிவிட, செந்தாமரையாக தன் கன்னம் சிவந்தாள். மறைவான இடத்திற்கு சென்று தன் ஆடைகளை உடுத்தி கொண்டு திரும்பி வந்தவளை பார்த்தவன், காதலில் கசிந்து உருகி நின்றான். 

 

“போலாமா?!

 

“ம்ம் போகலாம். ஆனா பூவரசனைப் பற்றி கேட்டால் என்னவென்று கூற?”

 

“உங்களை எதிரிங்க தாக்க வந்தப்போ, உங்களை காப்பாத்த துக்கமாக உயிர் தியாகம் பண்ணிட்டான்னு சொல்லிடுங்க.” என்றவள் சாதாரணமாக கூற, அதிர்ந்து போன ரணவீரன்,

 

“என்னால் இப்படி கூற முடியாது.”

 

“அப்போ நானே சொல்றேன். நீங்க எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுனா போதும். ஓகே?!”

 

“நீ எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டால், என்னவென்று கூறுவாய்?” 

 

“உங்கள பார்க்க வந்தேன்னு சொல்லேங்க. அதானே உண்மை?!”

 

“சரி.. ஆனால் இன்னொரு உனக்கெதும்படியான பொய்யை கூறாதே.”

 

“இந்த ஒருவாட்டி மட்டும் தான்பா. ப்ராமிஸ்.” என்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அவளது உச்சியில் முத்தமிட்டான். 

 

“பொழுது கழிகிறது. நாம் மிகவும் விரைவாக அரண்மனைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.” என்றவாறே அவளை குதிரையில் ஏற்றிக்கொண்டு தானும் குதிரையில் ஏறிக்கொண்டவன் அரண்மனையை நோக்கி பயணமானான். இங்கே குருமாதாவுடன் வந்து கொண்டிருந்த வேலுநாச்சியார் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். 

 

‘பாதகத்தி! வயசானவன்னு கூட பார்க்காம இப்படி வேல வாங்குறாளே! கடவுளே! இவ வாயை மட்டும் அடைச்சுட்டேனா எவ்ளோ நல்லாருக்கும்?!’ என்று கடவுளிடம் முறையிடும் அளவிற்கு வேலுநாச்சியாரை வேலை வாங்கினார் குருமாதா. ஒரு வழியாக அனைவரும் அரண்மனைக்கு வந்து சேர, பூவரசனை காணாது, அவனுக்கு பதிலாக பூவிழியாழைக் கண்டதும் ரணவீரனிடம் குருமாதா விளக்கம் கேட்க, பூவிழியாழ் கூறிய கதையை அச்சுப்பிசகாமல் கூறினான் ரணவீரன். அதனை குருமாதா நம்பினாலும் பூவிழியாழையும் ரணவீரனையும் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யபிரபாகரன். அதனைக் கண்ட பூவிழியாழ், வேலுநாச்சியாரை தனியாக சந்திக்கும் போது,

 

“ராஜமாதா! இந்த சூர்யபிரபாகரன் முழியே சரியில்ல. அவன் நம்மளையே வேவு பார்க்குறான். அவனுக்கு முதல்ல பொங்கல் வைக்கணும்.” என்று பொங்கியவளின் தோளில் கை வைத்து சமாதானப்படுத்தினார் வேலுநாச்சியார்,

 

“விடு விடு ஆருக்குட்டி அந்த வைதேகியோட சேர்த்து இந்த சூர்யாவுக்கும் பொங்கல் வைச்சுடுவோம்.” என்று கூற, அவரை அண்ணார்ந்து பார்த்த பூவிழியாழ்,

 

“எப்படி ராஜாமாதா? என்னப் பண்ணப் போறீங்க?” என்று கேட்க, அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தார் வேலுநாச்சியார். அப்படி அவர் என்னதான் செய்யப் போகிறாரோ? அதனால் பூவிழியாழின் வாழ்வில் நிகழப் போகும் மாற்றங்கள் என்னவாக இருக்கும்?

 

 அத்தியாயம் 33

 

இளவரசி வைதேகியின் வரவிற்காக அனைவரும் காத்திருக்க, பூவிழியாழின் விழிகள் மட்டும் ரணவீரனை சுற்றியே இருந்தது. 

 

‘எல்லாருக்கும் ஒரு நேரம் டூட்டி இருந்துந்துச்சுன்னா எனக்கு மட்டும் ஓவர் டூட்டியால இருக்கு. மொட்ட மாடில காயப் போட்ட வத்தல யாரும் கொத்திட்டுப் போகாம பார்த்துக்குறதே பொழப்பா போச்சு. இவரோட கண்ணு மட்டும் அந்த வைதேகி மேல் விழட்டும், அப்புறம் இருக்கு இவருக்கு..’ என்று புலம்பியபடி நின்றுக் கொண்டிருந்த பூவிழியாழை நிமிடத்துக்கு ஒரு முறை பார்வையால் வருடி நின்றான் ரணவீரன். அனைவரும் விருந்திற்காக தயாராகி வந்திருக்க, வானில் இருந்து இறங்கி வந்த தேவதையோவென வந்திறங்கினாள் வைதேகி. பெண்ணிற்கு பெண்ணே பொறாமை கொள்ளும் பேரழகியாக இருந்தவளின் புறம், தனது பார்வை என்ன? விழி அசைவை கூட காட்டவில்லை ரணவீரன். வெண்ணெயில் உருக்கி செய்த சிலையென இருந்தவளின் மனதில், அனைவரும் ஆசையாக பார்த்த பார்வை, அவளது அழகின் மீது கர்வம் கொள்ள வைத்தது. இருப்பினும் ரணவீரனின் பார்வை தன்னை தொடாததை கண்ட வைதேகிக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவனை எப்படியாவது தன்னை பார்க்க வைத்துவிட வேண்டும் என்ற வன்மமாக மாறியது. ரணவீரனைத் தொடர்ந்து சூர்யபிரபாகரனும் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்தாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று குறுகுறுக்கத் தான் செய்தது. ஆனால் இவை எதையும் அறியாத, வைதேகிக்கு தான் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊத்துயது போல் ஆனது. அண்ணனையும் தம்பியையும் தனக்காக ஏங்க வைக்க முடிவு செய்தாள். அரச சபையில் இவ்வளவும் நடந்து கொண்டிருக்க, விருந்து தயாரிக்கும் இடத்தில் இருக்கும் வேலுநாச்சியாரோ சாப்பாட்டில் ஏதோ கலந்து கொண்டிருந்தார். 

 

“அடியேய் கிழவி! இதை சாப்பிட்டு இன்னும் நாலு நாளைக்கு நீ எந்திரிச்சு நடமாடவே கூடாது. ராஜபரம்பரைக்கிட்டயே உன் வேலையை கட்டுறியா? இரு உன்னோட அந்த வைதேகிக்கும் சேர்த்து போடுறேன்.”என்று கூறியபடியே யாரும் அறியாமல் தன் கையில் வைத்திருந்ததை குருமாதா மற்றும் வைதேகி சாப்பிட இருக்கும் உணவு குவளையில் கலந்து வைத்தார். அனைவரும் உணவருந்தும் சபையில் அமர்ந்திருக்க, அவரவர்களுக்கென பிரத்யேக  உணவும் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அவையோருக்கு சோமபானம் பரிமாறப்பட்டது. குருமாதா சாப்பிட்ட உடன் வயிற்றை கலக்கிக் கொண்டு வரவே, முதலில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் அவசர அவசரமாக கிளம்பிச் செல்வதைக் பார்த்த வேலுநாச்சியாருக்கு அவ்வளவு கொண்டாட்டமாக இருந்தது.  

 

‘ஐய்யா! கிழவிக்கு வயித்த கலக்கிடுச்சு. சூப்பர்.. சூப்பர்.. ஆனா இந்த சூர்யபிரபாகரன் பையே இன்னும் திடமான இருக்கானே?’ என்று அவர் நினைப்பதற்குள் வேலு நாச்சியாருக்கும் வயிற்றை பிரட்டிக் கொண்டு வர, அப்போது தான் சுவைக்காக தானும் இரு தட்டுக்கள் கோழி வறுவலை உள்ளே தள்ளியது ஞாபகம் வந்தது. 

 

‘அய்யோய்யோ! நான் வைச்ச ஆப்பு.. எனக்கே திருப்பி வந்துருச்சே?! யார் செய்த சதியிது?’ என்று நினைத்தவருக்கு மேற்கொண்டு எதுவும் நினைக்க முடியாத நிலையில் கழிவறையை நோக்கி ஓடினார் வேலுநாச்சியார். ரணவீரனுக்கு அருகில் அமர்ந்திருந்த பூவிழியாழிடம் வந்த வைதேகி, 

 

“சற்று தள்ளி அமர்கின்றாயா? நான் மன்னரிடம் சிறிது பேச வேண்டும்.” என்று கூற வைதேகியை பரிதாபமாக பார்த்த பூவிழியாழ், ரணவீரனை முறைத்து விட்டு சற்று தள்ளி அமர, விட்டால் ரணவீரனின் மடியில் அமர்ந்து விடுபவள் போல் மிகவும் நெருங்கி அமர்ந்தாள் வைதேகி. 

 

“தங்களது வெற்றியை என்னுடன் பகிர்ந்து கொள்வதற்காக இதை பருகுங்கள் அரசே!” என்று தன் கையில் இருந்த சோமபானத்தை ரணவீரனின் கையில் கொடுத்தாள் வைதேகி. அதனைப் பொறாமையுடன் பார்த்திருந்த பூவிழியாழ்,

 

‘பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று தன்னைத் தானே தைரியமூட்டிக் கொண்டவள், நேரே ரணவீரன் குடிக்க இருந்த சோமபானத்தை வாங்கி ஒரே வாயாக தன் வாயில் ஊற்றிக் கொண்டாள். அதனை பார்த்த வைதேகி கண்ணில் கோபம் கொப்பளிக்க,

 

“ஏய் என்ன பழக்கம் இது? இவ்வாறு செய்வது உனக்கு கேவலமாக இல்லையா?” என்று கத்த,

 

“உனக்கும் தான் சற்றும் கூட வெட்கமே இல்ல. அப்படி இருந்திருந்தா என் புருஷன் கூட இப்படி இடிச்சிட்டு வந்து உட்காருவியா? தள்ளிப் போடி. யாரோட இடத்துல வந்து யாரு பட்டா போடுறது? இது எனக்கு சொந்தமான இடம்; இங்க நான் இப்படி உட்காருவேன்.” என்ற பூவிழியாழ், சட்டென ரணவீரனின் மடியில்‌ அமர அதிர்ந்து போனது என்னவோ ரணவீரன் தான். அவன் மடியில் அமர்ந்தது மட்டுமின்றி,

 

“இந்தா இப்படி கட்டிப்பிடிச்சு, இப்படி முத்தங்கொடுப்பேன்.” என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட, அவனது ஆணிவேரும் வேர்த்தது. பூவிழியாழின் அடாவடியை எதிர்பாராத வைதேகி, மீண்டும் தன் முன்னே இருந்த சோமபான கின்னத்தில் இருந்து குவளையில் இன்னும் அதிகமாக ஊற்றி ரணவீரனை நோக்கி வர, கோபமுற்ற பூவிழியாழ்,

 

“இவ்வளோ தூரம் சொல்ற நான் என்ன கேனச்சியா?” என்றவள் வைதேகியின் கையில் இருந்ததை பிடிங்கி, வைதேகியின் வாயிலேயே ஊற்றினாள். அதன் பிறகு இருவரும் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் சோமபானத்தை ஊற்ற, என்றுமில்லாத அளவிற்கு போதையில் மிதக்கத் தொடங்கினர். இதனை கண்ட ரணவீரனுக்கு கோபம் ஒருபுறமிருந்தாலும் அவையோர் முன்னே தன் மனைவியை விட்டுக் கொடுக்க முடியாது, அவளை யாருக்கும் காட்டாது தன்னுடன் இறுக்கிக்  கொண்டான். வைதேகியை பத்திரமாக அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் கொண்டு சேர்க்குமாறு சூர்யபிரபாகரனுக்கு உத்தரவிட்டான். பின்னர் அவை கலையப்பட்டது என்ற அறிவிப்புடன் தன் மனைவியை ரணவீரன் ஏந்திக் கொள்ள, தள்ளாடிக் கொண்டிருந்த வைதேகியை சூர்யபிரபாகரன் தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டான். சூர்யபிரபாகரனின் கையில் இருந்த வைதேகி, அவனது நெஞ்சோடு சொகுசு பூனையாக கிடக்க, வழக்கம் போல் தன் மன்னவனின் கையில் இருந்து குதித்திறங்கி ஓடத் தொடங்கியவளின் பின்னோடு ஓடினான் ரணவீரன். 

 

தன் கையில் இருந்த வைதேகியை அவளது கட்டில் மெத்தையில் சூர்யபிரபாகரன் படுக்க வைக்க, அதுவரை பூனைக்குட்டியென அவனது கையில் துஞ்சியவள், சட்டென அவனது கழுத்தோடு கையிட்டு புலியென தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள். அவளிடம் இருந்து விலக முயன்றவனின் மேலாடையை பற்றி இழுத்து அதனை கலைய முயன்றவள், அவனது முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். அவளது இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத சூர்யபிரபாகரன், மங்கையவளின் மோக வலையில் வீழ்ந்தான். அவளது ரோஜ இதழ்கள் மிகவும் அதிரடியாக சூர்யபிரபாகரனின் முரட்டு இதழ்களை கொய்திட, அவளது வெண்பட்டு உடல் வளைவில் தன்னை இழந்தான். எப்போதும் புள்ளிமானை புலியொன்று தானே வேட்டையாடும்?! ஆனால் இங்கே அதற்கு நேர் மாறாக சூர்யபிரபாகரன் எனும் புலியை வைதேகி எனும் புள்ளிமான் வேட்டையாடியது. 

 

“ம்ம்ம்ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆஹ்.. ம்ம்ம்ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம்.. அஅஅஆஆஹ்..” என்ற பிதற்றலுடன் தனது வேட்டையை தொடர்ந்தாள் வைதேகி. வேர்வை ஆறாக ஓட, அன்றே வாழ்நாள் முடிந்து விடுமோ என்பது போல் சூர்யபிரபாகரனின் ஊணோடு உயிரானாள் வைதேகி. அவளாக என்றுமே ரணவீரனை விரும்பியதில்லை. தன்னை திரும்பிப் பார்க்காத ஒருவனை தன்னிடம் மண்டியிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் சோமபானத்தை குடிக்கும்படி ரணவீரனை வற்புறுத்தினாளே ஒழிய அவன் மீது வேறெந்த எண்ணமுமில்லை. இருப்பினும் விழிப்பு வந்த உடன் வேட்டையாடிய இப்புள்ளிமான் வேங்கையிடம் மண்டியிடுமா? இல்லை புலியை மீண்டும் வேட்டையாடுமா? 

****************************************************

“விழி ஓடாத! நில்லு விழி!” என்று ரணவீரனின் குரல் எதுவும் பூவிழியாழின் காதில் விழவில்லை. தனக்குத் தானே பேசிக் கொண்டே, சிரித்தப்படி தங்களது அறைக்குள் சென்றவள், அங்கிருந்த கதவின் பின்னே ஒளிந்து கொண்டாள். பூவிழியாழை தேடி அவ்வறைக்குள் ரணவீரன் நுழைந்ததும் கதவை சாத்தி தாழ்ப்பாளிட, இதனை தன் அறையில் இருந்து வெளியே வந்த குருமாதா பார்த்துவிட்டு, தன் தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றவர்,

 

“பகலிலேயே இவ்வளவு கும்மாளமிடுகின்றனரே?! சிவ! சிவா!” என்று புலம்பியபடியே மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டார். இங்கே அறைக்கதவை பூட்டிய பூவிழியாழ், அடுத்த நிமிடம் ரணவீரனின் தோளில் உப்புமூட்டையாக தொங்கினாள். 

 

“ஹேய் மாமு! இன்னைக்கு நீ எவ்ளோ ஹாட்டா இருக்க தெரியுமா?” என்று கூறியபடியே அவனது ஆடைகளை தளர்த்தினாள். 

 

“வேண்டாம் விழி! இப்போது நீ உனது சுயநினைவிலேயே இல்லை. விழிப்பு வந்ததும் என்னைத்தான் குறை கூறுவாய்.” என்றவனின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், அவனது இதழ்களில் தன் இதழ்களை நுழைத்து மேலுதட்டையும் கீழுதட்டையும் மாற்றி மாற்றி ஆழமாக முத்தமிட,

 

“ஹுகும்.. இதற்கு பின் நடக்கப் போகும் எதற்கும் நான் பொறுப்பல்ல விழி. முழுக்க முழுக்க நீ மட்டும் தான் காரணம்.” என்றவன் சுவற்றில் தன்னை சாய்த்து தன் மீது படர்த்திருந்தவளின் இடையைப் பற்றி திருப்பியவன், இப்போது அவள் மீது தான் சாய்ந்து படர்ந்திருந்தவாறே, அவள் தொடங்கியதை தன் கையில் எடுத்துக் கொண்டான் ரணவீரன். இருவருமே காதலின் விதிமீறலில் தன்னை மறந்து லயித்திருந்தனர். உதடுகள் தீண்டிக்கொள்ளும் போது, என்றுமில்லாத அளவிற்கு சிக்கி முக்கி கற்களாய் அவைகள் மோதிக் கொண்டன. முகத்தில் முத்தமழை பொழிந்து அவள் மீது தான் வைத்திருக்கும் எல்லையற்ற காதலை வெளிப்படுத்தினான். செந்தாமரைப் பூப்போன்று மலர்ந்திருக்கும் பாதத்தில் தன் உதடுகளை கொண்டு முத்த ஊர்வலம் நடத்த ஆரம்பித்தான். காலிலுள்ள ஒவ்வொரு விரலுக்கும் முத்தமிட்டவாறே மெல்ல மேலேறியவனை இன்னும் பித்தம் கொள்ள செய்தன வாழைத்தண்டு போல் இருக்கும் கால்கள். ஆலிலைப்போல் சிறுத்த இடையில் தன் முகத்தை வைத்து தேய்த்தவனின் தலைமுடியை தன் கைகளால் இறுக்கிக் கொண்டாள் பூவிழியாழ். அவன் தரும் இன்ப அவஸ்தையை தாங்க முடியாமல் மங்கையவளின் மேனி துவண்டு, அவனுக்கு வளைந்து கொடுக்க தொடங்கியது. அவளது கொய்யாப் கனிகளை ஒன்றோடொன்று நெருக்கமாக பற்றி, அதில் பாலும் செவ்விளநீரும் வருமாவென ஆராய்ச்சி செய்தான். அவனது விரல் வித்தையில் அனல் மேலிட்ட புழுவாக துடித்தாள் பூவிழாயாழ். முழு நிலவுபோல ஒளிமிக்கதான அவளின் முகத்தில் தன் இதழ்களால் கோலமிட்டபடியே, தன் செங்கோலாட்சியை அவளிடம் நிலைநிறுத்தினான். உருண்டு திரண்டு பவளம் போலிருந்த உதடுகளை கனிகளென கவ்வி சுவைக்கலானான். அவன் தரும் சுகவேதனையை தாங்கிக் கொண்டவள், ரணவீரனின் உயிருக்குள் உயிரானாள். விடிய விடிய இருஜோடிகளும் தங்களது தேடுதல் வேட்டையை முடிவுறாது தொடர்ந்து நடத்த, பொறுமையில்லாத சூரியனும் அடுத்த நாள் தொடக்கத்தை இனிதாக ஆரம்பித்து வைத்தான். காலையில் எழுந்ததும் தன் அருகே இருந்த சூர்யபிரபாகரனை பார்த்ததும் என்ன செய்வதென்று அறியாது, தன் உடல் முழுவதையும் போர்வையால் சுருட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வைதேகி. 

 

‘எங்கு? எப்படி? எவ்வாறு தவறு நிகழ்ந்தது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் இடையை வளைத்தது சூர்யபிரபாகரனின் இரும்பு கைகள். 

 

“என்னை மன்னித்து விடு பெண்ணே! உன் மீது நான் இவ்வளவு ஆசை வைத்திருப்பேன் என்று நானே எதிராபார்க்கவில்லை. இத்தவறுக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். ஆகையால், குருமாதாவிடம் சென்று நானே விளக்கிக் கூறுகிறேன்.” என்றவனை விழிவிரித்துப் பார்த்தவள், மெல்ல அவனது மார்பில் தலை சாய்த்தாள். இருப்பினும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வராதவள், தனக்கு இரண்டு கண் போனால், தன்னுடைய எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள். அதன்படி குருமாதாவை சென்று சந்தித்தாள் வைதேகி. பூவிழியாழ் தான் வைதேகி சாப்பிட்ட சாப்பாட்டில் ஏதோ போதைப்பொருளை கலந்து கொடுத்ததாகவும் அதனால் தான் சூர்யபிரபாகரனுடன் தன் வாழ்வு பிணைந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூற, அடுத்த நிமிடம் ரணவீரனின் உத்தரவின்றி, அவனுக்கு தெரிவிக்காமல், அவன் பாண்டிய மாமன்னரை சந்திக்க சென்ற சமயம், பூவிழியாழை அவளது தந்தை வீட்டிற்கு திருப்பி அனுப்பினார் குருமாதா. வேலுநாச்சியார் சாப்பாட்டில் பேதி மருந்து கலந்ததை, போதை மருந்து கலந்ததாக கதை ஜோடிக்கப்பட்டு அவரையும் பூவிழியாழோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மல்லி மட்டும் பூவிழியாழோடு செல்லாமல் ரணவீரனிடம் உண்மையை சொல்வதற்காக அரண்மனையில் ஒளிந்து கொண்டாள். ரணவீரன் திரும்பி வந்ததும், அவனிடம் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிய மல்லி, பூவிழியாழுக்காக திரும்பி மதிவாணனின் சமஸ்தானத்திற்கு சென்றாள். மங்கையவளின் துயர் துடைப்பானா? அவள் மீதிருக்கும் பழியை துடைத்து மீண்டும் அவளை அழைத்து வருவானா? 

 

அத்தியாயம் 34

 

“என்னவாயிற்று? இந்த இரவு நேரத்தில் நீ மட்டும் தனியாக வரும் அளவிற்கு அப்படி தவறு செய்தாய்?” என்று பதறிய குரலில் பூவிழியாழை அணைத்துக் கொண்டார் அவளது தாயார். 

 

“க்கும்.. அம்மா வீட்டுக்கு பொண்ணு தனியா ராத்திரில வந்தா, அவ தான் பிரச்சனை பண்ணிட்டு வந்துருப்பான்னு அர்த்தமா? ஏன் அங்க ஏதாவது பிரச்சனைல நிம்மதிக்காக கூட அம்மா வீட்டுக்கு வரக்கூடாதா?’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே எதுவும் பேசவில்லை. அவளுக்கு இன்னுமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனெனில் அரண்மனையை விட்டு வெளியேறுமாறு குருமாதா கூறினாலும் ரணவீரனின் வரவிற்காக காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி ரணவீரனிடமிருந்து வந்ததாக மடல் ஒன்றை அவளிடம் கொடுத்தார் குருமாதா. அதில் பூவிழியாழ் அவளுடைய தோழியுடன் உடனே அரண்மனையை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறியிருந்தது. அப்போதும் அம்மடலை அவன் தான் அனுப்பியிருந்தான் என்று நம்ப மறுத்தவளின் கையில், ரணவீரனுக்கு பூவிழியாழ் ஆசையாக அணிவித்த மோதிரத்தை, அவன் அவளிடமே திருப்பி கொடுக்கச் சொன்னதாக அதையும் சேர்த்து அவளிடமே அளிக்க, அவளது இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. ஏனெனில் இது அவனுக்கென பிரத்யேகமாக அவளே வடிவமைத்து கொடுத்த மோதிரமாகும். இம்மோதிரத்தைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. அவர்களுக்கான தனிமையில் நடந்த நிகழ்வை பற்றி மற்றவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினாள். அதன்பின்னரே அரண்மனையை விட்டு வெளியேற முடிவு செய்தவள், இதோ தன் தந்தையின் அரண்மனைக்கு திரும்பியும் வந்துவிட்டாள். அரண்மனைக்குள் பூவிழியாழ் நுழைந்ததும், அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த மதிவாணன்,

 

“என்னவாயிற்று கோசலை? எதற்காக உன் மகள் இந்த அர்த்த ஜாமத்தில் இங்கு வந்திருக்கின்றாள்? ஒரு பெண் தனியாக அதுவும் நடுநிசியில் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கின்றாள் என்றால் ஊர் உலகம் தவறாக பேசாதா? உனக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கின்றேன். அதற்குள்ளாக அவள் தனது கணவன் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். இல்லையெனில் நீயும் உன் மகளோடு சேர்ந்து இங்கிருந்து வெளியேற நேரிடும்.” என்று கூறி விட்டு செல்ல,

 

‘எனக்கு மட்டும் இந்த லப்பர் மூஞ்சி வாயனோட வாயை பார்த்துட்டே இருக்கணும்னு ஆசையா? நான் என்னை பெத்த தகப்பன் சொன்னாலே கேட்கமாட்டேன். நீ சொல்லி கேட்டுருவேனா?’ என்று உள்ளுக்குள் நினைத்தவள், வெளியே எதுவும் தெரியாதவள் போல் நின்று கொண்டாள். பூவிழியாழ் அமைதியாக இருப்பதை பார்த்த வேலுநாச்சியார், மெல்ல அவளருகில் சென்று,

 

“பேச்சாடா பேசுன? கொஞ்ச நஞ்சு பேச்சா பேசுன? மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. என்னையத் தவிர அந்த ரம்பா, ஊர்வசி வந்தாலும் திரும்பிப் பார்க்காத சொக்க தங்கம்னு சொன்னியே? இப்போ உன்னைய வெளியில தள்ளிவிட்டுட்டானே அந்த படுபாவி. இனிமே என்ன பண்ணப் போற? இவனை நம்பி நம்ம காலத்துக்கு போற காலச்சக்கரத்தையும் விட்டுட்டு இப்படி நிக்குறியே? உன் அப்பனுக்கு மட்டும் இது தெரிஞ்சுது?” என்று கூற,

 

“அதான் தெரியாதில்ல. சும்மா தொணதொணன்னு பேசாம வாங்க ராஜமாதா.” என்ற பூவிழியாழ், முன்பு இதே வீட்டில் தான் இருந்த அறைக்கு செல்ல, அங்கே பூங்கொடியாழ் தன் கணவன் கருணாகர பாண்டியனுடன் தங்கியிருந்தாள். தன் அறையின் முன்னே நின்றிருந்த பூவிழியாழைப் பார்த்த பூங்கொடியாழ்,

 

“என்ன பார்க்கின்றாய்?” என்று எகத்தாளமாக கேட்க,

 

“இது.. இது எனது அறை.” என்று பூவிழியாழ் பதிலளிக்க, கலகலவென சிரித்த பூங்கொடியாழ்,

 

“இதோ பார் பூவிழி! இந்த அரண்மனையில் உனக்கு இடம் கிடைக்க வேண்டுமானால் நீ உன் கணவனுடன் தான் வரவேண்டும். இல்லையேல் மாட்டுக் கொட்டகையில் கூட உனக்கு இடமிருக்காது.” என்று கூறிவிட்டு பட்டென கதவை பூட்டிக் கொண்டாள் பூங்கொடியாழ். நாகரீக உலகில் யாவரும் சமம் என்ற கொள்கைப்பாட்டுடன் வளர்ந்த பூவிழியாழுக்கோ நடப்பதனைத்தும் வித்தியாசமாக தெரிந்தது. எங்கு செல்வது என்று அறியாது நின்றிருந்தவளின் கைப்பற்றி கோசலையின் அறைக்கு அழைத்துச் சென்றாள் மல்லி. மல்லியைக் கண்டதும் முகம் மலர்ந்தது பூவிழியாழ்,

 

“மல்லி..” என்றழைக்க, தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் மல்லி. அதனைக் கண்ட பூவிழியாழ்,

 

“ஏன் மல்லி உனக்கும் என்னை பிடிக்கலையா?” என்று சோகமாக கேட்க, பதறிப்போன மல்லி,

 

“அப்படியெல்லாம் இல்லை இளவரசியாரே! அன்று என்னை அந்த படைத்தளபதியோடு தனியாக குதிரையில் விட்டுவிட்டு தாங்கள் சென்றதை நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அதனால் தான் அப்படி நடந்து கொண்டேன். ஆனால் உங்களிடம் வருத்தமும் கொள்ள முடியவில்லையே?!” என்றவள் கூற மல்லியின் கைகளைப் பிடித்து கொண்ட பூவிழியாழ்,

 

“சாரி மல்லி.. வெரி சாரி.. நான் உன்ன மறந்தே போயிட்டேன். சாரி.. சாரி..” என்று கெஞ்ச, அவள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் அவள் தன்னிடம் மன்னிப்பை யாசிக்கின்றாள் என்பதை அவளுடைய உடல் மொழியால் அறிந்து கொண்டாள் மல்லி. 

 

“அய்யோ இளவரசியாரே! தாங்கள் என்னிடம் எதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கின்றீர்கள்? தங்களால் வளர்க்கப்பட்ட அடிமை நான். நீங்கள் என்னை தோழியாக ஏற்றுக் கொண்டதே என் பாக்கியம்.” என்று கூறிய மல்லியை கட்டிக் கொண்ட பூவிழியாழ், சட்டென கதறி அழுக ஆரம்பித்தாள். 

 

“எனக்குன்னு இங்க யாருமே இல்லன்னு நினைச்சேன். ஆனா எனக்காக நீ இருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.” 

 

“ம்ஹும்.. இந்த மல்லி இருக்கின்ற வரைக்கும் என் இளவரசிரயார் எதற்காகவும் அழுகக்கூடாது..” என்ற மல்லி பூவிழியாழின் கண்களை துடைத்து விட்டாள். அவர்கள் இருவரின் நட்பைப் பார்த்து நிம்மதியடைந்தார் வேலுநாச்சியார். 

 

‘என் பேத்தி இம்புட்டு வெசனப்படுறாளே?! இவளை இப்படியே விடக்கூடாதே. இதுக்கு ஒரு ஐடியா பண்றேன்.’ என்று வேலுநாச்சியார் மனதுக்குள் நினைக்கும் போதே, அவர்களே கையில் கிள்ளிய பூவிழியாழ்,

 

“எந்த ஐடியாவும் யோசிக்காதீங்க. இதுவரை நீங்க எனக்கு பண்ணவே போதும்.” என்று கூற, ஒன்றும் புரியாது பார்த்த மல்லியிடம்,

 

“இன்னைக்கு அந்த ராணா என்னை துரத்தி விட்டுருக்கான்னா அதுக்கு இந்த ராஜமாதா தான் காரணம்.” என்று கூற, மல்லியின் மனதுக்குள் ரணவீரன் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தன. 

 

“நீ என் விழியோடு எப்போதும் இரு. அவளது கேடயம் நீ. நான் அங்கு வரும் வரை என் விழி உன் பொறுப்பு.” என்று கூறி தான் மல்லியை விரைவாக பூவிழியாழை வந்து அடையும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தான். தனக்காக தன் கணவன் எதுவும் செய்யவில்லை என்று பூவிழியாழ் நினைத்துக் கொண்டிருக்க, அன்று நடந்த விருந்தில் போதைவஸ்துக்களை கலந்தது யாரென்று கண்டுபிடித்து குருமாதாவின் முன் நிறுத்தியிருந்தான் ரணவீரன். தன் மனைவி எவ்வித தவறும் செய்யவில்லை மாறாக இவை அனைத்திற்கும் வைதேகி தான் காரணம் என்று நிரூபித்திருந்தான். அவையோர் முன்னே தன் காதலி தலைகுனிவதை ஏற்றுக் கொள்ள முடியாது வைதேகியை திருமணம் செய்து கொண்டு, இனி அவளால் பூவிழியாழுக்கு எவ்வித தொந்தரவும் வராது என்ற உத்திரவாதம் அளித்த நிலையில், தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பி சென்றான் சூர்யபிரபாகரன். கூடப்பிறந்த பிறப்பாக இருந்தாலும் தன் மனைவியை விட்டுக் கொடுக்காது நடந்து கொண்டனர் இருவரும். இறுதியாக குருமாதாவிடம் வந்த ரணவீரன்,

 

“வணங்குகிறேன் குருமாதா!” என்று ஆசிர்வாதம் பெற்ற பின்னர், அவரை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்து நின்றவன்,

 

“தங்களுக்கு என் மனைவியின் மீது என்ன கோபமென்று அறிவேன். அதனால் உங்களிடம் ஒன்று மட்டும் கூற எண்ணுகிறேன். அவள் இப்போது எனது மனைவி; இந்த ரணவீரனின் உயிரானவள்; என்னில் பாதியவள். அவளிடம் அன்பாக நடக்க வேண்டாம்; அவளுக்கு தீங்கு எண்ணாது இருந்தால் போதும். தாங்கள் அவளுக்கு என்னவெல்லாம் செய்தீர்கள் என்று எனக்கு எல்லாம் தெரியும். இருப்பினும் தாங்கள் எனது குருமாதா என்பதினால் தங்களை விட்டு வைக்கின்றேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியவன், மதிவாணனின் சமஸ்தானத்திற்கு செல்ல தயாரானான். தன் மனைவிக்காக இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து செய்தவன், அவளைக் காண துடித்துப் போய் ஓடி வர, அவன் மேல் கொலைவெறியோடு காத்திருந்தாள் அவனது தர்மபத்தினி. 

***************************************************

“கணவனை விட்டு பிரிந்து எப்படித்தான் அர்த்த ராத்திரியில் வருகிறார்களோ? என்னைப் பார் என் கணவனை விட்டு ஒரு நிமிடமேனும் பிரிந்திருக்கிறேனா? இதற்கெல்லாம் பிறக்கும் போதே மச்சத்தோடு பிறந்திருக்க வேண்டும்.” என்று பூவிழியாழ் காதில் விழுமாறு பேசிக் கொண்டிருந்தாள் பூங்கொடியாழ். பூ தொடுத்தவாறு முற்றத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்த பூவிழியாழின் கைவிரல்கள் ஒருநிமிடம் நின்று பின் தன் வேலையை எப்போதும் போல் செய்து கொண்டிருந்தது. பூவிழியாழ் இங்கு வந்திருக்கும் இந்த ஒருவார காலமாக இப்படித்தான் அவளை தன் பேச்சினால் சண்டைக்கு இழுத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடியாழ். ஆனால் எப்போதும் பதிலுக்கு பதில் திருப்பி கொடுக்கும் பூவிழியாழோ அமைதியாக அவள் கூறுவதையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாளே ஒழிய எதிர்த்து எதுவும் பேசவில்லை. இதைக்கண்ட பூங்கொடிக்கும் அவளது தாயார் தேனிசைக்கும் வயிறு எரிந்தது. 

 

“என்ன பூங்கொடி?! நாம் இவ்வளவு பேசியும் இவள் திருப்பி பதில் எதுவும் கூறாமல் இப்படி அமைதியாக இருக்கின்றாளே?! இப்போது என்ன செய்வது?” என்று தேனிசை தன் மகளிடம் வினவ, 

 

“இப்போது பாருங்கள் எப்படி கொந்தளிக்கின்றாள் என்று?” என்று தன் தாயாரிடம் கூறிய பூங்கொடி, பூவிழியாழிடம்,

 

“என்னதான் வேஷம் போட்டாலும் பூனை புலியாகிவிட முடியுமா? இவளுடைய தாயார் போலவே அரசனுக்கு துணையாளாக இருக்கக்கூட தகுதியில்லாதவள், மகாராணியாக இருக்க முடியுமா? அதனால் தான் அரண்மனையை விட்டு துரத்திவிட்டு விட்டார்கள். க்கும்.. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை.” என்று கூற,

 

“மிகச் சரியாய் சொன்னாய். அவளது தாயின் ரத்தம் தானே இவளது உடலிலும் ஓடுகிறது. ஆனால் அவளை போல் இவள் சாமர்த்தியமாக இல்லாது போய்விட்டாளே?! அம்மா இந்த சமஸ்தானத்தையே தன் அழகால் வீழ்த்த எண்ணினாள்; மகள் எவனை அழகால் வீழ்த்த எண்ணினாளோ?” என்று தேனிசை கூற, பூவிழியாழ் அமைதியாக இருந்தாலும் கோசலையால் அமைதி காக்க முடியவில்லை. கோழி கூட தன் குஞ்சிற்கு ஒன்றென்றால் பருந்திடம் வீரமாக சண்டையிடுமே?! ஆகையால் தன் மகளிடம் அனைவரும் இவ்வாறு பேசுவதை கோசலையால் தாங்க முடியாது, 

 

“சற்று பொறுமை காப்பீராக! என்னை எது வேண்டுமானாலும் பேசுங்கள்; என் மகளை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்று இதே ரணவீரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டி, நீங்கள் செய்த வேலைகளெல்லாம் மறந்து விட்டதா? அன்று மட்டும் என் மகள் இத்திருமணத்தை செய்யவில்லை என்றால், இங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் யார் சுத்தமான தங்கம்? யார் தகரமென? என் பெண் கற்புக்கரசியாவாள். அவளைப்பற்றி பேச உங்களில் யாருக்கும் எந்த யோக்கியதையும் இல்லை.” என்று ஆவேசமாக பேசிய கோசலையை ஆத்திரத்துடன் நெருங்கிய தேனிசை, கோசலையின் தலைமூடியை பிடித்து இழுக்க, அதுவரை யாரையும் கவனிக்காது தன் வேலையில் மட்டும் கவனம் வைத்திருந்த பூவிழியாழ், தன் தாயாரை காக்கும் பொருட்டு, தேனிசையைப் பிடித்து தள்ளியவள், தன் தாயை இறுக்கி அணைத்துக் கொண்டாள். எப்போதும் தன்னை விட ஒருபடி மேலே இருக்கும் பூவிழியாழை பொறாமையோடு பார்த்திருந்த பூங்கொடி,

 

“எனது தாயாரையா தள்ளிவிடுகிறாய்? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்?” என்று கூறியவாறே பூவிழியாழின் கைப்பிடித்து இழுத்த பூங்கொடி, பூவிழியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைய முயன்றாள். ஆனால் பூங்கொடியின் கையை தன் கையால் பிடித்து தடுத்து நிறுத்தினாள் பூவிழியாழ். 

 

“என் மகளை எதிர்த்து கொண்டு, இங்கு நீ வாழ முடியுமா? ” என்று ஆக்கோரஷமாக கத்திய தேனிசை பூவிழியாழைப் பிடித்து கீழே தள்ள முயன்ற போது, அருகே இருந்த ஊஞ்சலில் பூவிழியாழின் வயிறு பலமாக இடித்துக் கொண்டது. அடுத்த கணமே “அம்மாஆஆஆஆ..” என்ற அலறலோடு தரையில் விழுந்தவளை, தன் மடியில் ஏந்திக் கொண்டான் கோசலை.

 

“அய்யோ மகளே! என்னவாயிற்றம்மா?” என்றா மயக்கமடைந்த பூவிழியாழின் கன்னத்தை கோசலை தட்டிக் கொண்டிருக்க, அவரிடமிருந்து அவளை கிட்ட தட்ட பிடிங்கிக் கொண்டான் ஒருவன். சட்டென பூவிழியாழை தன் கையில் ஏந்திக் கொண்டு அவளது அறைக்குள் தூக்கிச் சென்றவன், உடனே ராஜவைத்தியர் அரண்மனைக்கு வருமாறு ராஜகட்டளையிட்டான். பூவிழியாழின் கன்னத்தை மெல்ல தட்டியவன்,

 

“மன்னித்து விடு கண்ணம்மா! வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள் காலதாமதமாகி விட்டது. அதற்காக நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்; தயவுசெய்து இப்படி மௌனமாக இருந்து என்னை கொல்லாதே. நான் தான் தவறிழைத்து விட்டேன். உன்னை உடனே வந்து என்னோடு அழைத்து சென்றிருக்க வேண்டும். என்னை மன்னித்து விடு விழி! கண் திறந்து பாரம்மா.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி ஓடி வந்தார் ராஜவைத்தியர். வந்த உடனே அவளை சோதித்துப் பார்த்தவர், சில மூலிகை மருந்துகளை அவளது வாயில் திணித்தார். அவர் கொடுத்த மூலிகைகள் கசக்கவே, தன் முகத்தை சுளித்து மயக்கத்தில் இருந்து வெளியே வந்த பூவிழியாழ்,

 

“அய்ய.. என்னதிது? இப்படி கசக்குது? த்தூ.. த்தூ.. அய்யோ எனக்கு மிட்டாய் வேணும்; ஒரே கசப்பாயிருக்கு.” என்று கண்ணை மூடியவாறே புலம்பியவளை காற்றுகூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்துக் கொண்டான் ரணவீரன். பூவிழியாழிற்கு என்னவாயிற்று என்று பார்க்க வந்த மதிவாணன், மகாராணியார் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோருடன் அங்கிருந்த அனைவரும் தங்கள் முகத்தை திருப்பிக் கொள்ள, அவையாவையும் கவனிக்கும் நிலையில் இல்லாத ரணவீரன், தன் மனைவின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான். அவனது மேனியின் வாசனையை உணர்ந்து கொண்ட, பூவிழியாழ், மேலும் அவனோடு ஒட்டுக் கொண்டு சுகமாக கண்ணயர்ந்தாள். அவள் நன்றாக உறங்குகின்றாள் என்பதை அறிந்து கொண்ட ரணவீரன், மெல்ல தன்னிடம் இருந்து பிரித்து தலையணையில் படுக்க வைத்தான். அங்கிருந்த அனைவரையும் வெளியே செல்லுமாறு சைகையில் கூறியவன், மல்லியை மட்டும் பூவிழியாழுடன் இருக்குமாறு பணித்தான். 

 

அனைவரும் வெளியே வந்திருந்தனர். என்ன சொல்வதென்று அறியாது திணறியபடி மதிவாணன் நின்றிருக்க, ராஜவைத்தியரை நோக்கி திரும்பினான் ரணவீரன்.

 

“சொல்லுங்கள் வைத்தியரே! என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்ட உடன், அவனை தலை குனிந்து வணங்கிய ராஜவைத்தியர், 

 

“மாமன்னருக்கு வெற்றி உண்டாகட்டும். மிகவும் சந்தோஷமான செய்தி. தங்களின் சாம்ராஜ்யத்திற்கு வாரிசு வர உள்ளது. மகாராணி பூவிழியாழ் கற்பம் தரித்திருக்கின்றார்.” என்று கூற, ரணவீரனின் முகத்தில் லட்சணக்கணக்கான ஒளியின் பிரகாசம் ஒரே நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கும் முன்னர், ரணவீரனை வருத்தத்துடன் பார்த்த ராஜவைத்தியர்,

 

“ஆனால் அரசே?!” என்று இக்கன்னாவிட்டு கூற, பதறிப்போனான் ரணவீரன்.

 

“என்னவென்று தயங்காமல் கூறுங்கள் வைத்தியரே. விழிக்கு என்றுமில்லையல்லவா?!” என்று கேட்க,

 

“மகாராணியார் மிகவும் நலமாக உள்ளார். ஆனால் அவருக்கு வயிற்றில் பட்ட அடியினால் கிட்டத்தட்ட கரு கலைந்துப் போகும் அபாயம் உள்ளது. ஆதலால் அவர்களை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றவர் கூறியதும், ரணவீரனின் முகம் இறுகிப் போனது. தன் பற்களை நறநறவென்று கடித்தவன்,

 

“ஆகட்டும் வைத்தியாரே! எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். நான் அவ்வாறே கவனித்துக் கொள்கிறேன்.” என்று வைத்தியரிடம் தன் சந்தேகங்கள் சிலவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டவன், அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்த மறுநிமிடம் அங்கிருந்தோரை உக்கிரப் பார்வை பார்த்தான். ரணவீரனின் கோபத்திற்கு ஆளாகப் போவது யாரோ? கண்மூடி இருப்பவள் கண் திறந்ததும் ரணவீரனை என்ன செய்வாளோ? 

 

அத்தியாயம் 35

 

“அரசே! என்னதிது? பூவிழி என்ன தான் உங்கள் மகளாக இங்கு வந்திருந்தாலும் என்னுடைய  சாம்ராஜ்யத்தின் மகாராணி. அவளுக்கு இவ்வாறு உங்கள் அரண்மனையில் மதிப்பளிப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், அவளை இங்கு அனுப்பியிருக்கவே மாட்டேன். வீட்டில் உள்ளவர்களையே சமமாக நடத்தத் தெரியாத தாங்கள் எவ்வாறு ஒரு நாட்டையே சமமாக நிர்வகிப்பீர்கள்?!” என்று ரணவீரன் மதிவாணனைப் பார்த்து கேட்க, தேனிசையை முறைத்துக் கொண்டே ரணவீரனின் கையைப் பிடித்து கொண்ட மதிவாணன்,

 

“மன்னித்துவிடுங்கள் அரசே! இது ஏதோ எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு. இதை பெரிது படுத்தி விடாதீர். இனி இது போல் நிகழாது பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூற, மதிவாணனின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்ட ரணவீரன்,

 

“என்ன இன்னொருமுறை நிகழாது பார்த்துக் கொள்வீரா? இம்முறை நடந்ததற்காக தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் பாண்டிய மாமன்னரிடம் குற்றம் பதிவிட முடியும். ஆனால் அதை மயக்கத்தில் இருக்கின்றாளே என் விழி?! அவள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றவன், அங்கு அப்போது தான் வந்து கொண்டிருந்த கருணாகர பாண்டியனைப் பார்த்து,

 

“ஊருக்கு நல்லது செய்து வாங்கிய நற்பெயரை, உங்களது திருமதியார் ஒரு நிமிடத்தில் குலைத்துவிடுவார். என்றும் அவரவர் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு. மாமன் வீடே ஆனாலும் அத்திப்பூ தந்தாள் போல் வருகை தர வேண்டும். தங்களுக்கு தொல்லையாக இருக்கிறதென்று இங்கே அனுப்பினீர்கள் என்றால் அது சரியாகுமா? கட்டிய மனைவிக்கு சற்று நேரம் ஒதுக்கி அறிவுரை வழங்குங்கள். இல்லையெனில் சகளை என்றும் பார்க்க மாட்டேன். விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.” என்று பூங்கொடியின் புறம் கூட திரும்பாது தன் மனைவியைத் தேடிச் சென்றான் ரணவீரன். அங்கு மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பூவிழியாழின் அருகே அமர்ந்து கொண்டவன், அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான். 

 

“விழி! என்ன கோபமாக இருந்தாலும் என்னிடம் கொட்டிவிடு. இந்த மாதிரி நேரத்தில் கோபத்தை உனக்குள் அடக்கிக் கொள்ளாதே. அது உனக்கும் நம் குழந்தைக்கும் ஆகாது.” என்றவன் கூறியதும் அவனது கைக்குள் இருந்த தனது கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவள், அவனைப் பார்க்கப் பிடிக்காது தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் முகத்தை பிடித்து மீண்டும் தன்னை நோக்கி திருப்பியவன்,

 

“என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்?! அதற்காக என்னை விட்டு வந்து விடுவாயா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இங்கு வந்துவிட்டாயே? இது தான் நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டுமே? எத்தனை ஆதாரங்களை காட்டினாலும் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்திருக்க வேண்டாமா? நான் வரும்வரை காத்திருந்திருக்க வேண்டாமா? மல்லி சொல்லித் தான் நடந்தவை அனைத்தும் எனக்கு தெரிய வந்தது. உன் மீது எத்தவறும் இல்லையென நிரூபித்துவிட்டு வர சற்று தாமதமாகிவிட்டது. மன்னிவிடு கண்ணம்மா!” என்றபடியே அவளது இதழில் முத்தமிட செல்ல, தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் பூவிழியாழ். 

 

“இன்னும் உனக்கு என் மீதான கோபம் குறைவில்லையென்றால் எனக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடு; ஆனால் அதை நம் வீட்டில் என் அருகில் இருந்து கூடு. இது நம் வீடல்ல. இங்கிருந்தால் நமக்கு மதிப்பும் இல்லை.” என்றவாறே அவளது வயிற்றில் கை வைத்து வருட, அவளது மேனி சிலிர்த்தடங்கியது. 

 

“மன்னித்து விடு விழி! ஒரு முறையல்ல ஓராயிரம் முறை? லட்சம் முறை கேட்கின்றேன். ஆனால் என்னுடன் வந்துவிடு விழி.” என்றவன் கூற, எழுந்தமர்ந்தவள்,

 

“மல்லி! மல்லி!” என்று சத்தமிட,

 

“அதுவரை வெளியே நின்றிருந்த மல்லி வேகமாக உள்ளே ஓடி வந்தாள்.

 

“இளவரசியாரே!” என்று தன் முன்னே வந்து நின்றிருந்தவளிடம்,

 

“நாளை காலைல நம்ம அரண்மனைக்கு போகணும். எல்லாத்தையும் எடுத்து வை‌. அப்புறம் இன்னைக்கு நான் என்னோட அம்மா ரூம்ல தான் தூங்கப் போறேன். யாரும் என்னைய டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர முயன்ற பூவிழியாழை தன் கையில் ஏந்திக் கொண்டான் ரணவீரன். 

 

“வைத்தியர் உன்னை கவனமாக பார்த்துக்கொள்ள கூறியிருக்கின்றார். நீ நடந்தால் என் பிள்ளைக்கு வலிக்குமே?!”

 

“அப்போ உங்க புள்ளைக்கு வலிக்கக்கூடாது. அதுக்காக என்னைய உப்பு மூட்டை தூக்கிட்டே திரிவீங்க. அப்படி தானே?! இறக்கி விடுங்க என்னைய. இறங்கி விடுன்னு சொல்றேன்ல. இவர் புள்ளை நல்லாருக்கணும்னா நான் நல்லாருக்கணும். அதுக்காக தூக்குவாராம். ப்ராடு, எரும, கெடா இறக்கிவிடுன்னு சொல்றேன்லலல.. விடுடா தடிமாஆஆஆ.” 

 

அதற்கு மேல்‌ வந்த வார்த்தைகள் யாவும் ரணவீரனின் முரட்டு இதழ்களுக்கு பலியாகின. அவளது இதழ்களை இறுக்கி அணைத்துக் கொண்டு, இதழ்களில் இருந்த மொத்த தேனையும் உறிஞ்சி எடுத்து விடுபவன் போல் சுவைத்துக் கொண்டிருந்தவனை பலமாக தள்ளியவள், அவனை தூணோடு தூணாக நிற்க வைத்து, அவனின் இருபுறமும் கை ஊன்றி அணைகட்டியவள்,

 

“இப்ப எதுக்கு இவ்வளோ எமோஷனல் ஆகுறீங்க? எனக்கும் நம்ம பையனுக்கும் எதுவும் ஆகாது. அப்படி ஆகத்தான் விட்டுடுவீங்களா? ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.” என்னவளின் இடையோடு கையிட்டு தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளது மூக்கோடு மூக்கு உரசியபடியே,

 

“கேள்..” என்று கூற,

 

“இப்படி கொஞ்சிட்டு இருந்தீங்கன்னா எங்க கேட்க? கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” என்று அவனை விட்டு விலகியவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவனின் தோள்களை சுற்றி கையிட்டுக் கொண்டவள்,

 

“நான் உங்களுக்கு கொடுத்த மோதிரம் குருமாதா கைக்கு எப்படி போச்சு?” என்று முகம் வாட கேட்டவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன், 

 

“போர்களத்தின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த மோதிரத்தை கலட்டி பத்திரமாக வைத்திருந்தேன். சிறிது நாட்களுக்கு முன்பு அம்மோதிரத்தை காணவில்லை. என்னிடம் இருந்து எப்படி எடுத்தார்கள் என்று கூட தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் தான். ஆனால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால் மிகவும் பத்திரமாக, என் உயிரை விட மேலாக பாதுகாத்திருப்பேன். அதற்காக என்னை மன்னித்து விடு கண்ணம்மா.” என்றவனின் தோளில் சாய்ந்தவள், கேவிக் கேவி அழுக ஆரம்பித்தாள். 

 

“நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? நான்.. இங்க இருக்கேன்னா அதுக்கு காரணமே நீங்க தான். உங்க மேல நான் வைச்சுருக்குற காதல் தான் காரணம். நீங்களே என்னைய வேணாம்னு சொல்றீங்கன்னு சொன்னப்போ நிஜமாவே செத்துடலாம்னு இருந்துச்சு. ஆனா நான் சாகுறதுக்கு முன்னாடி உங்களையும் என்னோட சேர்த்து கூட்டிட்டு போகணும் முடிவு பண்ணியிருந்தேன். அதெப்படி உங்களை சும்மாவிடலாம்ற கோபம் தான் உங்களுக்காக வெயிட் பண்ண வைச்சுது.” என்று கூறி முடித்தவளின் கன்னத்தை வலிக்காமல் கடித்து சுவைத்தவன்,

 

 “ஆப்பிள் போலவே இருக்கின்றன, உன் கன்னங்கள்.” என்று கூற, ரணவீரனின் மார்பு முடிச்சுருளை நீவியவாறே 

 

“ஓகே ஓகே! அவர் யாரு? ம்ம் ஹஹஹ பாண்டிய மாமன்னர், அவரை பார்த்துட்டீங்களா?” என்று கேட்க,

 

“அந்த கவலையெல்லாம் உனக்கெதற்கு? என் மகாராணிக்கு என்னைத் தவிர வேறு எந்த நினைப்பும் இருக்கக்கூடாது.” என்றவன், அவளது கழுத்து வளைவை இதழ்களால் கவ்வி சுவைத்தவாறே இன்னும் சற்று கீழிறங்க,

 

“இப்போ நான் அங்க வந்தா குருமாதா கோபப்படமாட்டாங்களா?” என்று கேட்டவளிள் இடையை சுற்றி கையிட்டவன், அவளது கன்னத்தோடு கன்னம் உரசி, அவளது‌ நெற்றியோடு நெற்றியை முட்ட வைத்து, நேருக்கு நேராக அவளது விழிகளைப் பார்த்து,

 

“நீ என் உயிர்; நீயில்லையேல் இந்த ரணவீரனின் வாழ்வில் உயிர்ப்பில்லை. குருமாதாவிடம் மரியாதை இருக்கின்றது தான். அதற்காக உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ தான் எனக்கு எல்லாம். நீ அங்கு அரண்மனையில் இல்லையென்று தெரிந்ததும், என்னிடம் உயிரே இல்லை. நீ எனக்குள் ஊனாய் உயிராய் நிறைந்துவிட்டாய் கண்ணம்மா.” என்றவனின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தவள்,

 

“நீங்க பேரரசை பார்க்கப் போனீங்கன்னா நான் சொல்ற ஐடியாவை அவங்கக்கிட்ட சொல்றீங்களா?” என்று கூற, அவளது தேன் மழையில் நனைந்தவன்,

 

“இது போல் கூறினாய் என்றால் என்னால் எவ்வாறு மீள இயலும். நீ கூற விழைவதை கூறு.” என்றவனின் காதில்‌ சில அறிவுரைகளை கூறினாள் பூவிழியாழ். அதனை கேட்டவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன. 

 

“இதெல்லாம் உனக்கு எவ்வாறு தெரியும்?”

 

“நான் எதிர்காலத்துல இருந்து தானே வந்துருக்கேன். போங்க பாஸ்! நான் சொன்னதை செஞ்சு முடிங்க.” என்றவள் அவனிடமிருந்து விலகி வெளியே செல்ல முயல, 

 

“எங்கு செல்கிறாய்?” என்றவன் கேட்க,

 

“சாப்பிடத் தான். பசிக்குதே.” என்றவளை மீண்டும் தன் கையில் ஏந்திக் கொண்டு, சாப்பிடும் அறையை நோக்கிச் சென்றான். அங்கு பெண்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, பூவிழியாழை அங்கே அமர வைத்தவன், தன் கையால் அவளுக்கு உணவு பரிமாறியதோடல்லாமல் ஊட்டிவிட்டதைக் கண்ட பூங்கொடிக்கும் தேனிசைக்கும் வயிறெரிந்தன. ரணவீரனின் கையால் வழங்கிய உணவை  சிறுசிட்டென இதழ் குவித்து வாங்கியவளின் இதழ் மீது படிந்து உணவுத்துண்டுகளை எடுத்து தன் வாயில் வைத்து சுவைத்தவனைப் பார்த்தவளின் கன்னங்கள் செம்மை நிறத்தை தத்தெடுத்தன. 

 

“என்னப் பண்றீங்க எல்லோரும் பார்க்குறாங்க?” என்ற பூவிழியாழின் கன்னத்தை உரசிய காதோர முடிக்கற்றையை காதோரமாக ஒதுக்கிவிட்டவாறே,

 

“ஏன்? என் மனைவிக்கு தானே சேவைகள் செய்கின்றேன்?! இதில் அவர்கள் பார்க்க என்ன இருக்கின்றது?” என்று கேட்டவன் அவள் வயிறு முட்ட சாப்பிடும் வரை தன் பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டு, மல்லியின் பொறுப்பில் தன் மனைவியை ஒப்படைத்தவன், பேரரசரை காணச் சென்றான். பேரரசரை பார்த்துவிட்டு திரும்பி வந்தவன், கண்ட காட்சியில் அவனது ரத்தம் உதிரமே போனது. ரணவீரன் உறைந்து போய் நிற்கும் அளவிற்கு அவனது மனைவி என்ன செய்தாளோ? 

 அத்தியாயம் 36

 

“பூவிழி என்ன செய்கிறாய் நீ? உன்னை தான் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே கூடாது என்று கூறியிருக்கின்றேனே?! அதையும் மீறி எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறாய்?

 

“அம்மா நிஜமாவே முடியலம்மா. படுத்தே கிடந்தா ஏதோ நோயாளி மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் அப்படியே காலார நடந்துட்டு வரட்டா?”

 

” ம்ஹூம் உன் பேச்சும் செயலும் எதுவும் எனக்கு புரியவில்லை. நீ எனது விழியா என்றே எனக்கு சந்தேகமாக உள்ளது.” என்று படுக்கையில் இருந்து மெல்ல நடப்பதற்கான எழுந்தவளைப் பார்த்து கோசலை கூற,

 

“க்கும் இது தான் உங்க டக்கா?! கதை பாதிக்கு மேல முடியவே போகுது. இப்பத்தான் உங்களுக்கு என் மேல சந்தேகமே வருது.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பூவிழியாழ். அவளது பேச்சற்ற நிலையைப் பார்த்த கோசலை, 

 

” பூவிழி என்னவாயிற்றம்மா? ஏன் ஏதோ போல் இருக்கின்றாய்? நான் பகட்டிற்காக தான் அவ்வாறு கூறினேன். நீ எனது பூவிழியாழ் தான். மனதில் எதையும் நினைத்துக் குழம்பி கொள்ளாதே. இதோ பழங்கள் இருக்கின்றன. இதை சாப்பிட்டால் வேங்கையென குழந்தை பெறுவாய்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியவரை  பெருமூச்சுடன் பார்த்தாள் பூவிழியாழ். கோசலை இப்பக்கம் சென்றதும் அப்பக்கமாக பூவிழியாழின் அறைக்குள் நுழைந்தாள் மல்லி. 

 

“இளவரசியாரே! இதோ பாருங்கள்! உங்களுக்கு பிடிக்குமென சிறு நெல்லிக்காய் எடுத்து வந்திருக்கிறேன்.” என்று சிறு நெல்லிக்காயில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கொண்டு வந்து பூவிழியாழின் கையில் கொடுத்தாள் மல்லி. அதனை ஆசையோடு எடுத்து வாயில் வைத்து சுவைத்தவளின் நாக்கிற்கு அப்போது தான் சுரணை வந்தது போல் இருந்தது. 

 

“மல்லி சூப்பராயிருக்கு. ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ” என்று ராகமிட்டு சுவைத்தவள்,

 

“ஏய் மல்லி! எனக்கு மாவடு சாப்பிடணும் போல இருக்கு. அதை செய்ய சொல்லேன்.” என்று கூற,

 

“இங்கே தாங்கள் சாப்பிட கேட்கும் எதுவும் தரக்கூடாதென்று அந்த பூங்கொடியும் அவளுடைய அம்மாவும் சமையலறையிலயே அமர்ந்திருக்கின்றனர். இங்கு தாங்கள் ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியாது இளவரசி! ஆனாலும் நான் எப்படியாவது செய்து எடுத்து வருகிறேன்.” என்றபடியே அங்கிருந்து ஓட முயன்ற மல்லியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வெளியே ஓடினாள். 

 

“இப்போது நாம் எங்கு செல்கிறோம் இளவரசியாரே?”

 

“அரண்மனையை விட்டு வெளியே போகப் போறோம். கடைத்தெருவில விதவிதமா சாப்பாடு வைச்சுருப்பாங்கல்ல.”

 

“அய்யோ இளவரசியாரே! அப்படி வாங்க வேண்டுமென்றால் தங்களிடம் பொற்காசுகள் இருக்க வேண்டும். இருக்கின்றனவா?”

 

“பொற்காசுகள் இல்லை. ஆனால் இதோ பார்! இது இருக்கின்றதே!” என்று கூறிய பூவிழியாழ், தன் கையில் இருந்த ராஜமுத்திரையை காண்பிக்க, 

 

“நீங்கள் பலே ஆளு தான் இளவரசி! எல்லாவற்றையும் முன்னேயே தயார் செய்து வைத்திருக்கின்றீர்கள். ம்ம்ம் எல்லாம் சரிதான். ஆனால் இங்கிருக்கும் காவலர்களைத் தாண்டி எவ்வாறு செல்வது?” என்று கேட்ட மல்லிடம், 

 

“வழக்கம் போல தான்..” என்று கூறி சிரித்த பூவிழியாழை பயத்துடன் பார்த்தாள் மல்லி.

 

“அய்யோ இளவரசியாரே! வேண்டாம்.. வேண்டாம்.. முன்பாவது தாங்கள் தனியாளாக இருந்தீர்கள். ஆனால் இப்போது இருவராக இருக்கிறீர்கள். வைத்தியர் வேறு தங்களை ஓய்வெடுக்க சொல்லிச் சென்றிருக்கிறார்; மாமன்னர் தங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றிருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தாங்கள் இப்படியெல்லாம் செய்தால் என்னை சிறைசேதம் செய்து விடுவார்கள். வேண்டாம் இளவரசியாரே! நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்.” என்ற மல்லியை அதட்டி உருட்டி அரண்மனை சுவற்றின் கீழே அமர வைத்த பூவிழியாழ், மல்லியின் தோளில் கால் வைத்து ஏற, பூவிழியாழை மெல்ல தூக்க முயன்றாள் மல்லி. 

 

“இளவரசியாரே! இப்பொழுதெல்லாம் தங்களை என்னால் இப்படி தூக்க முடியவில்லை. தாங்கள் எடை கூடிவிட்டீர்கள்.”

 

“பேச்சை குறை. இன்னும் கொஞ்சம் மேலத் தூக்கு.” என்று மல்லியிடம் கூறிய பூவிழியாழ், அரண்மனையின் மதில் சுவற்றில் ஏறி வெளியே செல்ல முயன்று கொண்டிருக்க, அவளைத் தாங்கி நின்றிருந்த மல்லியின் முன்னாள் ரணவீரன் அவர்களை நோக்கி நடந்து வருவது தெரிந்ததும், பயத்தில் பூவிழியாழை நழுவவிட்டாள். 

 

“ஆஆஆஆஆ அம்மா..” என்று கத்தியவாறு கீழே விழ இருந்தவளை தனது இரும்பு கரத்தினால் சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான் ரணவீரன். 

 

“நல்ல வேளை கீழே விழுந்திருந்தா சிதறு தேங்கா தான். தாங்க் யூ பாஸ்.” என்று கூறியவளை தன் பற்கள் நறநறக்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரணவீரன். கோபத்தில் அவளை அறைந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் கைகளை மடக்கி இறுக்கிக் கொண்டான். 

 

“என்ன செய்கிறாய் விழி? சரியான நேரத்தில் நான்  மட்டும் வரவில்லை என்றால்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. உன்னை..” என்றவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவனை தடுத்து நிறுத்தியவள்,

 

“எனக்கு மட்டும் இப்படியெல்லாம் சர்க்கஸ் பண்ணணும்னு ஆசையா? இங்க இருக்கவே பிடிக்கல. நாம நம்ம அரண்மனைக்கு எப்பப் போறோம்?” என்று கூறி அவன் முகத்தை பார்க்க,

 

“இன்னும் சில நொடிகளில் கிளம்பத் தயாராக இரு. நாம் நமது அரண்மனைக்கு செல்லப் போகின்றோம். ” என்று கூறியவன், அவளோடு மல்லியையும் வேலுநாச்சியாரையும் கூட்டிக்கொண்டு தனது அரண்மனைக்கு திரும்பிச் சென்றான். ரணவீரனின் வாரிசு பூவிழியாழின் வயிற்றில் வளர்வதை அறிந்த குருமாதா, அவளது வழியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் குருமாதாவிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தான் ரணவீரன். தன் கணவனிடம் ஓயாது பேசிக் கொண்டே இருக்கும் பூவிழியாழைப் பார்க்கும் போதெல்லாம், ‘இவள் வாய் ஓய்வே எடுக்காதா?’ என்று கேட்கத் துடிக்கும் தனது மனதை அடக்கிக் கொண்டார்‌. பூவிழியாழின் பாதம் தரையில் நடக்காது அவளை கங்காருக்குட்டி போல் தூக்கிக் கொண்டே திரிந்தான். அவள் பேசும் கிள்ளை மொழியின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பான். ஐந்தாம் மாதத்தின் போது மருந்து கொடுக்கும் விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருந்தான் ரணவீரன். அன்று மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டாள் பூவிழியாழ். கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் காலுக்கருகில் அமர்ந்த ரணவீரன், தன் கையில் வைத்திருந்த மூலிகை எண்ணெய்யை அவளின் காலில் ஊற்றி மிதமாக பிடித்துவிட ஆரம்பித்தான். 

 

“ம்ம்ம்.. வாவ் ராணா! அப்படித்தான்.. அங்கதான் நல்லா பிடிச்சு விடு.. மசாஜ் பண்ணுறதுக்கு உனக்கு அவார்டே கொடுக்கலாம். ஆமா! இதெல்லாம் எங்கக் கத்துக்கிட்ட?” என்றவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன்,

 

“நான் உனக்கு மட்டும் சொந்தமானவன்; எனது சேவைகளும் உனக்கு மட்டுமே சொந்தமானது.” என்று கூற, அவனது நெற்றியோடு தனது நெற்றியை முட்ட வைத்தவள்,

 

“உன்னைய எனக்கு கொடுத்த காலச்சக்கரத்துக்கு ரொம்ப கடமை பட்டுருக்கேன். எங்க உலகத்துல இருந்து இங்க வந்தப்போ ரொம்ப பயந்தேன். அங்க இருந்த சூழ்நிலை வேற; இங்க இருக்குற சூழ்நிலை வேற. அங்க இருக்குற பீட்சா, பர்கர், சிக்கன் ரோல் இதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். உங்களுக்கு தெரியுமா? மொபைல் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருந்ததில்ல. ஆனா இப்போ?” என்றவள் அவனது கழுத்தோடு தன் கைகளை மாலையாக கோர்த்தவள்,

 

“ஆனா இப்போ? அதெல்லாம் எதுக்குன்னு தோணுது? உங்களை விட்டு ஒரு நிமிஷங்கூட என்னால் இருக்க முடியல. என்னைய விட்டு எங்கயும் போக மாட்டீங்க தானே?” என்று ஏக்கமாக கேட்டவளின் முன்னே தட்டு ஒன்றை நீட்டினான் ரணவீரன். 

 

“என்னதிது?”

 

“திறந்து தான் பாரேன்.” என்றதும் மூடியிருந்த தட்டை நீக்கிப் பார்த்தவளின் விழிகள் விரிந்தன. 

 

“பீட்ட்ட்சாஆஆஆ?”

 

“ஓ! இதற்கு பெயர் தான் பீட்சாவா? எனக்கு இதனுடைய பெயரெல்லாம் தெரியாது. உன்னுடைய ராஜமாதாவிடம் உனக்கும் பிடித்ததை செய்யச் சொன்னேன். அவர் தான் இதனை தயாரித்து என்னிடம் கொடுத்தார். ஆனால் இதன் பெயர் பீட்சா என்று எனக்கு தெரியாது. இந்தா சாப்பிடு.” என்றவன் அவளது வாயில் ஊட்டிவிட,

 

“ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்.. யம்மிஇஇஇ..” என்றவாறே அதனை தன் வாயில் வாங்கிக் கொண்டாள் பூவிழியாழ். அவளது வாயினோரம் ஒட்டிக் கொண்டிருந்த சிறு துளி மிச்சத்தை அமிர்தமென வாயோடு வாய் வைத்து சுவைக்கலானான். 

 

“ம்ம்ம்.. நிஜமாகவே மிகவும் சுவையாக இருக்கின்றது.” என்று கூறியவனை வெட்கம் மின்ன பார்த்தாள் பூவிழியாழ். சட்டென ஏதோ ஞாபகம் வரவே, பூவிழியாழின் வயிற்றில் தன் காதை வைத்துப் பார்த்தான் ரணவீரன். அதனைக் கண்டவள்,

 

“என்னப் பண்றீங்க?” என்று கேட்க,

 

“நம்ம குழந்தையிடைய சத்தம் கேட்கின்றதா என்று பார்க்கின்றேன்.” என்று கூறி மீண்டும் அவளது வயிற்றில் தன் காதை வைத்து கேட்க, அவனுக்கு எந்த அசைவும் தெரியவில்லை. தன்னை நோக்கி நிமிர்ந்தவனைப் பார்த்த பூவிழியாழ்,

 

“ஏதாவது தெரிஞ்சுதா?” என்று கேட்க, இல்லையென்று தன் உதட்டை பிதுக்கினான் ரணவீரன். 

 

“ம்ஹூம் ஒரு அசைவும் தெரியவில்லை. நான் நினைக்கிறேன், இது எனக்கு முதல் அனுபவம் அல்லவா?! அதனால் தான் சரியாக கணிக்க இயலவில்லை என்று. அடுத்த முறை நம் மகள் என்ன கூறுகின்றாளென மிகவும் சரியான கணித்து கூறுவேன்.” 

 

“அடுத்த முறைன்னா?”

 

“அடுத்த முறை யென்றால், அடுத்த குழந்தைக்கு என்று பொருள்.”

 

“என்னது இன்னோன்னா? இதுக்கே ராத்திரி தூங்க முடியமாட்டேங்குது. கை காலெல்லாம் வலி; அதுவுமில்லாம வாந்தி; நினைச்ச மாதிரி படுக்க முடியுதா? இல்ல சாப்பிடத் தான் முடியுதா? இந்த ஒன்னே நமக்கு போதும்டா சாமி. இனிமே இன்னோன்னு சொல்லிட்டு பக்கத்துல வந்தீங்க. அவ்ளோ தான்.”

 

“ஒன்றிற்கே இப்படி அழுகின்றாயே?! நான் மொத்தம் பத்தென்று கணக்கு செய்து வைத்திருக்கின்றேனே. என் கனவில் மண்ணள்ளி போட்டுவிடாதே.”

 

“என்னது பத்தா? போயா யோவ்! கொலைகேஸ்ல உள்ளப் போகப் பாரு. என்னை விட்டுடு டா.” என்றவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து சமாதானப்படுத்தினான் ரணவீரன். ஒரு நல்ல நாளில் பூவிழியாழுக்கு பிரசவவலி ஏற்பட, அவளை விட அதிகமான வலியை உணர்ந்தான் ரணவீரன். அறையின் உள்ளே அவள் அலறிய குரலைக் கேட்டு வெளியே நடைபயின்று கொண்டிருந்தவனின் காதில், “டேய் ராணாஆஆஆஆஆ!” என்று பூவிழியாழ் அழைப்பது கேட்கவே பதறிப்போய் கதவின் அருகில் சென்று, “விழிம்மா.. நான் இங்கதான் கண்ணம்மா இருக்கின்றேன்”  என்று கத்தினான். அவன் குரலை கேட்டதும், 

 

“வெளியே நின்னு என்னடா பண்ற? உள்ள வா. வலி தாங்க முடியலடா. இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம். இப்ப நீ உள்ள வரப்போறியா? இல்லையா?” என்றவள் கத்தியதைத் தொடர்ந்து அனைவரின் எதிர்ப்பையும் மீறி அவளிருந்த அறைக்குள் சென்றான் ரணவீரன். அங்கே படுக்கையில் கிழிந்த நாறாக கதறிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் ரணவீணனின் மூச்சே நின்று போனது. இவ்வளவு நாளும், அவளுடன் கூடிய நாட்களில் இருந்த காதலை விட இப்போது தனது வாரிசிற்காக துடித்துக் கொண்டிப்பதை பார்த்ததும் இன்னும் அதிகமாக காதலிக்க தொடங்கியிருந்தான். அவளின் அருகில் சென்றவன், 

 

“ஒன்றும் இல்லை கண்ணம்மா. இங்கே பார். நான் வந்து விட்டேன் அல்லவா?! உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்.” என்று கூறியவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் பூவிழியாழ். ரணவீரன் அளித்த தைரியத்தில் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள் பூவிழியாழ். எக்காலத்தில் இருந்தாலும், ரணவீரனுடன் மட்டுமே தன் பேத்தியின் வாழ்க்கை அழகாக செல்லும் உணர்ந்து கொண்டார் வேலுநாச்சியார். தன் மனைவியோடு சேர்த்து மகனையும் உயிராக பார்த்துக் கொண்டான் ரணவீரன். 

******************************************************

“ஆஆஆஆஆ அம்மா.. நாதாஆஆஆஆ..” என்று ஆருஷா அலற, அவளது கையைப் பிடித்தபடியே நின்றிருந்த ராக்கி, 

 

“அவ்ளோ தான் பேபி. இன்னும் கொஞ்சம் புஸ் பண்ணு பேபி. அவ்ளோ தான்டா. ப்ளீஸ் புஸ் பேபி..” என்று மருத்துவமனையில் பிரசவவலி வந்து துடித்துக் கொண்டிருந்தவளுக்கு ஆறுதல் அளித்தபடி அவளது நெற்றி வேர்வையை துடைத்துக் கொண்டிருந்தான் ராக்கி. ஊரே கண்டு நடுங்கும் ராக்கியை நான்காக மடக்கி தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. அதிர்ந்து கூடப் பேசாதவளின் விழிப்பார்வைக்கு பெட்டிப் பாம்பாய் மாறியிருந்தான். அவள் வாய் திறந்து பேச வேண்டாம்; விழிப்பார்வையிலேயே அனைத்தையும் செய்து முடிப்பான். அப்படிப்பட்டவனுடைய மனைவிக்கு பிரசவவலி என்றால் சும்மாவா இருப்பான்? அந்த மருத்துவமனையையே உண்டில்லையென்று ஆக்கிவிட்டான். 

 

“பேபி.. நம்ம பேபி வந்துட்டா..” என்று தன் தேவதைப்பெண்ணை முதன்முதலில் கையில் வாங்கியவனின் கைகள் நடுங்கி கண்ணில் இருந்து அவனையுமறியாமல் நீர் வழிந்தது. பல உயிர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றவனுக்கு, ஒரு உயிரின் மதிப்பென்ன என்பதை சத்தமில்லாது சொல்லிக் கொடுத்தாள் அவனது சீமந்த புத்திரி. 

 

“ஹேய் பேபி! இங்கப்பாரேன். இவளோட குட்டி காலும் கையும் என்னைய மாதிரியே இருக்கு. அப்புறம் இந்த முகம், உதடு அப்படியே உன்னையே உறிச்சு வைச்சுருக்கா. பிடிவாதத்துல உதட்டை குவிக்கும் போது அப்படியே என்னைய மாதிரி இருக்காப் பாரேன்.” என்று ஆவலாக தன் மகளின் மேனியை, அவளுக்கு வலிக்குமோவென மயிலிறகால் வருவது போல் வருடிக் கொண்டே ஆருஷாவின் அருகே அமர்ந்தவன், அவளது நெற்றியில் மென்முத்தமிட்டு, “தாங்க்ஸ் டி பொண்டாட்டி. நீ கொடுத்த பரிசுலயே ரொம்ப ரொம்ப பிடிச்ச பரிசு இது தான்டி.” என்று கூற, தான் இவ்வுலகில் எதையோ சாதித்து விட்டது போல் உணர்ந்தாள் ஆருஷா. அனுராகா மற்றும் சின்னாவின் வாழ்க்கையோடு ராக்கி மற்றும் ஆருஷாவின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல் ஓடத் தொடங்கியது. 

 

காலத்தால் பிரிந்தவர்கள் காலத்தால் பிரிக்க முடியாத உறவை அடைந்தனர். காதல் காலம் கடந்து கூட செல்லும். குரங்காக இருந்தவனை மனிதனாக மாற்றியதும் இக்காதல் தான். காதலுக்கு நேரங்காலம் எதுவும் கிடையாது. அதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. 

 *****************************************************

“அவ்வளவு தான் கதை முடிஞ்சுது. இதை எடிட் பண்ணி நாளைக்கு மதியத்துக்குள்ள நம்ம விஜிமாக்கு அனுப்பணும். ஏடிஎம் வாசகர்களுக்கு என் கதை பிடிக்குமா? கதை நல்லாருக்கா?”  என்றபடியே எழுந்த பாரதியின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தினான் சான்ட்டி.

 

“ம்ம்ம் கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்ல தான் ஆசை. ஆனா சுமார் தான்.” என்றவனை துரத்திக் கொண்டு ஓடினாள் பாரதி. 

 

“அடேய் சுமார் மூஞ்சி குமாரு! எவ்வளவு கஷ்டப்பட்டு பல தடைகளை எகிறி குதிச்சு எழுதி, உனக்கு படிச்சு காண்பிச்சா, கிண்டலா பண்ற? மவனே! இனிமே பாரு! மோருன்னு ஹாஸ்டல் பக்கம் வந்த உனக்கு சங்கு தாண்டி.” என்று பாரதி சான்ட்டியை திரும்பியும் பார்க்காது நடந்து செல்ல அவள் பின்னோடே ஓடினான் அவளது தோழன் சான்ட்டி. 

 

1 thought on “இரகசிய மோக கனாவில் 31 முதல் 35”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top