மொத்த குடும்பமும் கோயிலில் இருந்து குணசேகரனின் வீட்டிற்கு சென்றார்கள். மணமக்களை வாசலில் நிறுத்தி நாத்தனார் முறையில் உள்ள உறவு பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்கள். உடனே அழகுராணியும் சண்முகவள்ளியும் வந்து ஹர்ஷினியை பூஜையறையில் விளக்கேற்ற சொல்ல மணமக்கள் இருவரும் பூஜை அறைக்கு சென்று அங்கிருந்த பெரும் குத்துவிளக்கு இரண்டும் நடுவில் இருந்த காமாட்சி விளக்கையும் மனமுருக கடவுளை பிராதித்து விளக்கை ஏற்றினாள். இருவரும் தங்கள் வாழ்வு நலம் ஆக இருக்க வேண்டும் என வேண்ட அந்த நேரத்தில் கடவுள் என்ன வேலை செய்தாரோ இவர்கள் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.
இருவரையும் ஹாலில் அமர வைத்து பால் பழம் கொடுத்த குணசேகரனின் தாய் தன் மருமகளிடம் “சண்மு போய் நம்ம பரம்பரை நகையை எடுத்துட்டு வா. ரொம்ப நல்ல முகூர்த்தமா இருக்கு ஹர்ஷினி கையில கொடுத்திடலாம்”.
அனைவரும் என்ன என்பது போல் பார்க்க “இல்ல எப்பயுமே புதுசா வர்ற மருமகளுக்கு எங்க வீட்டோட பரம்பரை நகைகள் கொண்ட பெட்டியை கொடுத்து அதில் இருக்கிற சில நகைகளை அவங்களுக்கு போட்டு விடுவோம். இப்ப நல்ல முகூர்த்தமா இருப்பதால் செய்யலாம்னு இருக்கேன். இந்த மாதிரி கொடுக்கறதனால அந்த பொண்ணுக்கு தன்னோட வீடு என்ற நெருக்கம் வரும்னு நாங்க நம்புறோம். அதனால இந்த சடங்கை நாங்க எப்பயும் பண்னுவோம்.எல்லாரும் என்ன சொல்றீங்க”என கேட்க அனைவரும் ஆமோதிப்பாக தலையாட்ட சண்முகவள்ளி தன் அறையில் இருக்கும் லாக்கரில் சென்று பரம்பரை நகை கொண்ட பெட்டியை எடுத்து வந்தார்.
வீட்டில் முக்கிய உறவுகள் மட்டுமே இருக்க இந்த சடங்கு இப்போதே செய்யலாம் என குணசேகரனின் தாய் மரகதவல்லி கருதினார். சண்முகவள்ளிக்கும் அதுவே சரியாகப்பட்டது. சண்முகவள்ளி இந்த வீட்டுக்கு திருமணமாகி வந்தவுடன் நல்ல நேரம் சீக்கிரமாகவே முடிந்து விட பரம்பரை நகையை அவர் கையை ஒப்படைக்க சிறிது காலம் ஆனது. அதில் கம்பெனி முதற்கொண்டு அனைத்திலும் சிறு சிறு பிரச்சனை வர பரம்பரை நகை அணியும் சடங்கு நடத்தாததால்தான் இந்த வீட்டின் மருமகளாக அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதாலே இப்படி நடக்கிறது என அவர் நம்ப ஆரம்பித்தார்.
சண்முகவள்ளிக்கு இந்த ஜோதிடம் இந்த மாதிரி சில சடங்குகளில் நம்பிக்கை அதிகம்.இவர் நம்பிக்கை எதுவும் தவறாக படாததால் குணசேகரன் அவரை எதுவும் கூறாமல் அவரின் போக்கிலே விட்டுவிட்டார். பரம்பரை நகைகள் அடங்கிய பெட்டியை முதலில் பூஜை அறைக்கு எடுத்து சென்று பூஜை செய்து ஹாலில் வைத்தார். அதிலிருந்து முதலில் அவளுக்கு கைவளையர்களை தேட சண்முகவல்லி மரகத கற்கள் பதித்த தங்க வளையலை எடுத்துப் போடப் போனார்.
உடனே மரகதவல்லி “நிறுத்து இந்த வளையல் எதுக்கு போடுற அத வச்சுட்டு அந்த மாணிக்க கல் வெச்ச வளையல் போடு” என அதட்ட. அப்போது அந்த வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் கண்ணம்மா பாட்டி. 24 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு தன்மகன் கிராமத்தில் இருக்கவே அவனிடம் சென்று விட்டு விதவை மகளை தன் மருமகள் கொடுமைப்படுத்துவதாலும் தானும் எதுவும் கேட்க முடியாது என்பதாலும். தான் வேலை செய்யும் வீட்டிலே மரகத அம்மாவிடம் தன் மகள் சுமதியை ஒப்படைத்தார்.
மரகதவல்லி வெங்கடாசலத்தின் மகள் அமிர்தவல்லி நாகராஜனின் தம்பி கனகராஜன் திருமணத்தின்போது தனது மகன் ஊருக்கு போனவர்தான். இப்பொழுதுதான் வீட்டின் மூத்த வாரிசு ஆதித்யாவின் திருமணத்திற்கு வந்துள்ளார். வயது அதிகமாக கூடிப்போனதால் தள்ளாத நடையுடன் மரகதவள்ளியின் அருகில் வந்தவர் “என்ன மா இந்த வளையல் நம்ப அமிர்தா பாப்பாவோட நகைன்றனால குடுக்க மனசு வரலையா. என்ன பண்றது இந்த அரண்மனையே சுத்தி ஓடிட்டு இருந்த பிள்ளை இந்த அபி பையன் மட்டும் அவளை வலுக்கட்டாயமா அனுப்பாம இருந்தா உங்க பேத்தி இந்நேரம் நம்ம ஆதி தம்பிக்கு பொண்டாட்டியா வந்திருக்கும் “என கூற அனைவரும் அதிர்ச்சியுடன் என்ன அபிநந்தனா என மரகதவல்லி கேட்க உடனே கண்ணம்மாவின் மகள் சுமதி தன் அம்மாவை இழுத்து செல்ல பார்த்தார்.
“அடி ஏண்டி இந்த தள்ளாத வயசுல என்னை போட்டு இந்த இழு இழுக்கிற “என புலப்பி கொண்டே மரகதம்மாவிடம் திரும்பி “ஆமா மா அந்தப் பையன் தான் அந்த பிள்ளை கிட்ட எதையோ கொடுத்து ஒரு பையனோட அனுப்பி வச்சான் . போய் கேட்டதுக்கு ஏதோ சொன்னான் எனக்கு ஞாபகம் இல்லையே.என் புருஷனுக்கு மேலுக்கு சுகம் இல்லாம இருந்ததால சுமதிபிள்ளையும் இங்க விட்டுட்டு கிளம்பிட்டேன். அப்புறம் நம்ம பெரிய ஐயா இறந்ததுக்கு கூட என்னால வர முடியல அப்ப என் புருஷன் இறந்ததுனால. அப்படியே தொடர்பு விட்டு போச்சுமா. என் மருமக சுமதி பொண்ணு கிட்ட பேசவே கூடாதுனு உத்தரவு போட்டுடா.நானும் அங்க இருக்குற காட்டு வேலையை செஞ்சுட்டு அவ கொடுக்கிற கூழையை குடிச்சிகிட்டு இத்தனை வருஷம் இருந்தேன். எப்பயாச்சும் ஒரு தடவை சுமதி வந்தா தான் உண்டு”. என பெருமூச்சு விட்டுக் கொண்டே ஏதோ பேச சுமதி அவரை வலுக்கட்டாயமாக இழுத்து தனது அறையில் வைத்து கொண்டார்
கண்ணம்மா பாட்டிக்கு ஞாபக மறதி அடிக்கடி ஏதோ யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அந்த வளையலை பார்த்தவுடன் என்ன ஞாபகம் வந்ததோ அமிர்தா- கனகராஜ் திருமணத்தின் போது நடந்த நிகழ்வுகளை கூறினார். ஆனால் அவர் அறியாதது அபி அவரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியே அவர்களை அனுப்பி இருந்தான். அதை மறந்துவிட்டு வேறு ஏதோ சொல்லிவிட்டார்.
குணசேகரன் என்னதான் நல்லவராகவும் நண்பர்களிடையே நட்பு அதிகமாக பாராட்டினாலும் முன்கோபி எதையும் தீர ஆலோசிக்காமல் வார்த்தையை விட்டுவிடுவார். மரகதவள்ளி இடிந்து போய் அழ உடனே குணசேகரன்” அபி அவங்க சொல்றதெல்லாம் உண்மையா? என ஒரு வித நம்பிக்கையான குரலுடன் கேட்க ” குணா அவங்க சொன்னது உண்மைதான். ஆனால் ” கூற வர அவரை அப்படியே நிறுத்தி ” எதுவும் பேசாத உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சிட்டல்ல. கல்யாணத்து அப்போ என் தங்கச்சி ஓடிப்போய் அவமானம் தாங்காம எங்க அப்பா துடி துடிச்சு செத்தாரு அது எல்லாத்துக்கும் நீ தான் காரணமா?. அதோ அங்க நிக்கிறானே நாகா அவனோட தம்பியும் ஊர்க்காரங்க பேசின பேச்சு தாங்க முடியாம தற்கொலை பண்ணி செத்தான்.
எல்லாத்தோட சாவுக்கு நீ மட்டும் தான் டா காரணம் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல. கல்யாணத்துக்கு முன்னால சொல்லல. நீ சரியான நம்பிக்கை துரோகி டா. நம்பிக்கை துரோகம் பண்ண நீ எல்லாம் உயிரோடவே வாழவே கூடாது”. என அவரை போட்டு அடிக்க போக ஆதித்யாவும் ஈஸ்வரனும் அவரை தடுத்து நிறுத்த பார்க்க அபிநந்தன் எதுவும் பேசாமல் சிலை போல் இருந்தார்.
சண்முகவளியும் மரகதவள்ளியும் ஒரு மூலையில் அமர்ந்து அழ அழகு ராணி என்ன செய்வதென்றே புரியாமல் கையை பிசைந்து கொண்டே இருந்தார்.ஒருபுறம் தன் கணவரின் நிலை இன்னொரு புறம் தன் மகளின் இப்பொழுது தான் மலரப்போகும் திருமண வாழ்வு அனைத்தும் அவர் கண்களை கலங்க செய்தது. திக்பிரமை பிடித்தது போல் அப்படியே நின்றார்.
இருவரின் இளைய மகள்கள் ஆத்மிகாவும் ஸ்வனிதாவும் எதுவும் பேசாமல் ஒரு மூலையில் இருவரும் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் அவர்களுக்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்ன செய்வதென்றே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாகராஜனின் மகன் சர்வேஷ் அவன் வீட்டிற்கு சென்று விடவே நாகராஜன் எதுவும் பேசாமல் கல் போல் இருகி நின்று கொண்டிருந்தார்.
இதில் ஹர்ஷினி தான் என்ன செய்வதென்றே புரியாமல் தன் கழுத்தில் தொங்கும் தாலியை இருக்க பற்றிக்கொண்டு கண்ணீருடன் நின்றிருந்தாள்.பல தொழில்களை திறமையாக நடத்தும் அவளுக்கு இந்த குடும்பத்தின் பிரச்சினையை எப்படி சரி செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.அதுவும் குணசேகரனின் ஆக்ரோஷத்தை கண்டதும் ஒரு நிமிடம் அவள் மேனியே அதிர்ந்தது.
குணசேகரன் விடாமல் அபியை அடிக்க செல்லவும் மரகதவல்லி இதற்கு மேல் குணசேகரனை விட்டால் அபிநந்தனை கொன்று விடுவான் என தோன்றவே “குணா போதும்டா விடு ஏற்கனவே ஒருத்தியை இழந்து கஷ்டப்பட்டுடு இருக்கோம். இதுல நீயும் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடாதடா” என தலையில் அடித்து கொண்டு கதற தன் அம்மாவின் குரலுக்கு செவிமடுத்து அவரும் அமைதியாக நிற்க ஆதித்யாவும் ஈஸ்ரும் அவரை விட்டு தள்ளி நின்றனர்.
உடனே குணசேகர் தன் கோபத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்தி அபி புறம் திரும்பாமலே ” ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது கிளம்பு” என கர்ஜிக்க அபிநந்தன் ஏதோ சொல்ல வரவும்” உன் வார்த்தையை கூட கேக்குறதுக்கு எனக்கு விருப்பமில்லை. இதுக்கு மேல ஒரு நிமிஷம் இருந்தின்னா கூட செக்யூரிட்டி கூப்பிட்டு கழுத்தை புடிச்சு வெளியே தள்ள சொல்லுவேன். ” அவர் குரலில் இருந்த உறுதி அவர் கூறுவதை செய்வார் என காட்ட வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்து பார்க்க அழகு ராணி அண்ணா என வரவும் “உங்க குடும்பத்தோட எனக்கு ஒட்டும் வேணாம் உறவும் வேணாம். எனக்கு அவன பத்தி தெரியும். எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி இருப்பான்
நீ கூட என்கிட்ட சொல்லல. உண்மைய சொல்லு உனக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரியாதா.”
அழகு ராணி அழுது கொண்டே “தெரியும் அண்ணா ஆனா முழுசா”என மேலே சொல்ல வர ” குடும்பமா சேர்ந்து ஏமாத்திட்டீங்க இல்ல. 24 வருஷம் நம்ப வச்சு கழுத்தறுத்த துரோகிங்க.இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன். கிளம்புங்க” மூவரும் கிளம்ப பார்க்க அபிநந்தனும் அழகு ராணி அழுது கொண்டே கிளம்ப தயாரானார்.
மரகதவல்லி சண்முகவள்ளி இருவருமே அவர்களை தடுர்க்கவில்லை. ஆசை கணவரை இழந்து விட்டும் தன்னுடைய ஆஸ்தான மாமாவையும் இழந்த அவர்களுக்கு இப்பொழுது நந்தன் குடும்பம் வெளியே போவது பெரிதாக தெரியவில்லை. சண்முகவள்ளி குணாவின் தந்தை வெங்கடாசலத்தின் ஒரே தங்கையின் மகள்.குணசேகரன் விரும்பி சண்முகவள்ளியை மணமுடிந்தார்.
இதில் ஆதி “அப்பா கொஞ்சம் பொறுமையா பேசுங்க எதா இருந்தாலும் தீரா விசாரிச்சுட்டு பேசலாம்” என பொறுமையாக அவரிடம் கூற” நீ வாய மூடுடா கல்லு மாதிரி அவன் நின்னுட்டு இருக்கான். ஒரு வார்த்தை இல்லைன்னு சொன்னா நான் நம்பாம ஏன்டா இருக்க போறேன். அவனை முதல்ல போ சொல்லு அவன் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கல. அந்த நம்பிக்கை துரோகியை பார்க்க பார்க்க கொல்லணும்னு அவ்வளவு வெறி உள்ளுக்குள்ள இருக்கு. பழகினா பாவத்துக்கு அமைதியா இருக்கேன்”.
அபிநந்தன் அழகு ராணியிடம் கண்ணை காட்ட மூவரும் இணைந்து வீட்டை விட்டு வெளியே செல்ல போனார்கள். அப்போது குணா நில்லுங்க எனக் கூற எதிர்பார்ப்புடன் அபி திரும்ப “உன்னோட மூத்த பெண்ணையும் கூட்டிட்டு போ” என கட்டமாக கூற அனைவரும் அதிர்ந்தார்கள். ஹர்ஷினி தவிப்பாக ஆதியை பார்க்க ஆதியும் ” அப்பா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க. அவ இப்ப என் பொண்டாட்டி”.
“நிறுத்து ஆதி அந்த வீட்டு ஆளுங்களோட ஒரு விஷயம் கூட இங்க இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அப்படி இருக்கிறப்ப நீ அவனோட பொண்ணு வந்து உன் பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்க நான் பார்த்து வெச்சது தான் இந்த கல்யாணம். இப்ப நான் சொல்றேன் அவ உனக்கு வேண்டாம் அதையும் மீறி நீ முடிவு எடுக்கணுன்னு நினைத்தால்.இந்த வீட்டை விட்டு கிளம்பு அதுக்கப்புறம் உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அப்பா கோவத்துல வார்த்தையை விடாதீங்க எனக் கூற” நான் நிதானமாக தான் சொல்றேன் கண்டிப்பா இதுக்கு மேல அபிவோட பொண்ணு இந்த வீட்டு மருமகளா இருக்கவே முடியாது. முடிவு உன் கையில தான். உடனே ஹர்ஷினி ஆதிய பார்த்து தலையாட்டி விட்டு கிளம்ப போக ஆதி அவள் கையை பிடித்து” நீ எங்கேயும் போகக்கூடாது. நான் உன் கூட வரேன்”.
தங்களை எதிர்த்து தன் மகன் அவர்களுடன் செல்ல பார்க்க குணசேகரனை இது இன்னும் வெறியேற்ற ” நீ அவ கூட போறதா இருந்தா என் பொணத்த தாண்டி தான் போகணும். அவ கூட பேசி முயற்சி பண்ணக்கூடாது. இனி உனக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை இதையும் மீறி நீ போகணும்னு நினைத்தால் எங்க மூணு பேருக்கும் கொல்லி வச்சுட்டு போ” எனக் கூறி அவர் அறைக்கு சென்று விட்டார். போகும் தன் மனைவியும் மனைவி குடும்பத்தையும் தடுக்க முடியாமலும் தந்தையின் பேச்சை மீற முடியாமலும் அதே இடத்தில் சிலை போல் சமைந்தான் ஆதித்ய வர்மன் .